பொக்கச பூதங்களாய் காவல் காத்தே
நரை கூடி போகிறன நாட்கள்...!
அந்த மீட்டிங் ஹாலில் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். அனைவரும் இருக்க நேரத்தை தாழ்த்தாமல் பெருவுடையார் தன் ஸ்பீச்சை ஆரம்பித்தார்.
“இந்த மீட்டிங் எதுக்கு என்று உங்களுக்கே ஒரு ஐடியா இருக்கும். எஸ் மிருதன் டைரெக்ட் பண்ண ஒரு நிகழ்ச்சி ரொம்ப சக்சஸ் புல்லா போய் கிட்டு இருக்கு... அதுக்கான சின்ன ஒரு வெகுமதி தான் இந்த ஊட்டி டிரிப்...” என்று அவர் சொல்ல,
“அது எப்படி மாமா முடியும். அதை நான் நேத்திக்கே கேன்சல் பண்ணிட்டேன்... ஆக்சுவலி இந்த ஊட்டி ட்ரிப்பை ஏற்கனவே மிருதனுக்கு ஆபர் பண்ணேன். பட் அவன் போகல.. போக விருப்பம் காட்டல... அப்படி இருக்கும் பொழுது மறுபடி மறுபடி இந்த ஊட்டி ட்ரிப் அப்டேட் பண்றது பிறகு கேன்சல் பண்றது இதென்ன விளையாட்டா... இந்த மீட்டிங் ஊட்டி ட்ரிப் பத்தி பேசுறதுக்கு தான்னா நான் லேபிட் ஆயிக்கிறேன்...” என்றார் மகேந்திரன் கடுப்பாக.
“அதெப்படி மாப்பிள்ளை நீங்க லேபிட் ஆக முடியும். ஒரு முக்கியமான டெஷிஷன் எடுக்கும் போது கண்டிப்பா நீங்க இருந்து தான் ஆகணும்...” என்றார் பெருவுடையார்.
“நீங்க எனக்கு மதிப்பு குடுக்குறது நல்லாவே புரியுது மாமா. ஆனா மிருதன் என் பேச்சுக்கு மதிப்பு குடுக்காத பொழுது இங்க நான் இருந்து என்ன பிரயோசனம் சொல்லுங்க... இந்த பேச்சு வர கூடாதுன்னு தான் நான் நேத்திக்கே ஊட்டி ட்ரிப்பை கேன்சல் பண்ணிவிட்டேன்...” என்று வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றினார்.
அதை கண்டு கொண்டாலும் மிருதன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவனது தோரணையும் மாறவில்லை. எப்படி தெனாவட்டாக அமர்ந்து இருந்தானோ அப்படியே தான் அமர்ந்து இருந்தான்.
“என்ன மாப்பிள்ளை இப்படி சொல்றீங்க... உங்க பேச்சை என்னைக்கு என் பேரன் தட்டி இருக்கான் சொல்லுங்க...” என்று அவர் மிருதனுக்கு கொடி பிடிக்க,
“பின்ன இதென்ன கத்திரிக்கா வியாபாரமா மாமா... நினைச்ச உடனே எல்லாவற்றையும் மாத்தி மாத்தி செட்யூல் போடுறதுக்கு. ஏற்கனவே அந்த நிகழ்ச்சி சக்ஸஸ்க்கு தான் ஊட்டிக்கு ஏற்பாடு செய்து அதை அடுத்த வார எபிசோடா போடலாம்னு முடிவு பண்ணி இருந்தேன்.”
“அதோட அந்த நிகழ்ச்சில வேலை பார்த்த எல்லோருக்கும் ட்ரீட் குடுத்த மாதிரி இருக்கும்னு நினைச்சேன். ஆனா மிருதன் அது எல்லாத்தையும் மாத்தி போட்டுட்டான்... இப்போ ஊட்டிக்கு வெறுமென போறதுக்கு போகாமல் இருக்கலாம்னு தான் கேன்சல் பண்ணுனேன். இப்போ அதுக்கு ஒரு மீட்டிங்னு தூக்கிட்டு வந்தா என்ன பண்றது...” என்று மகேந்திரன் கேட்டார்.
“உங்க பக்கம் இது சரி... ஆனா மிருதன் ஏன் இப்படி பண்ணான்னு அவனுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கணும் இல்லையாங்க... சோ வெயிட் பண்ணுங்க. மிருதன் ஏதாவது ஒரு கால்க்குலேஷன் வச்சி இருப்பான்” என்று சம்பூர்ணவதி சொல்ல அதுக்கு பிறகு மகேந்திரன் வாயை திறக்கவில்லை. அவருடைய பேச்சு எப்பொழுதும் சம்பூர்ணவதிக்கு முன் தழைந்து போய் விடும். இன்றும் அப்படியே...!
பெருவுடையார் மிருதனை பார்த்து தலை அசைக்க,
“அப்போ ஏன் கேன்சல் பண்ணுனேன்னா இங்க இருந்து ஊட்டில போய் சூட் பண்ணா சஸ்ட் அது ஒரு எபிசோடா தான் இருக்குமே தவிர அதுல வேற எந்த என்ஜாய்மென்டும் இருக்காது... ஒரு ட்ரீட் மாதிரியும் இருக்காது... இன்னொன்னு காஸ்ட் வைஸ் அங்க ஷூட் பண்ணா ஹையா இருக்கும்...” என்று அவன் தன் வாதத்தை முன் வைக்க மகேந்திரனுக்கு சற்றே வேர்த்தது.
ஏனெனில் அவருடைய திட்டமே அது தான். மிருதனுக்கு கேட்ட பெயர் வாங்கி குடுத்து அனைவரின் முன்னாடியும் அவனை தலைகுனிய வைக்க தான் இந்த ஏற்பாடு.. ஆனால் அதை மிருதன் நடக்க விடாமல் செய்து விட்டானே...! இவர் பாதியில் இருந்து தான் இந்த நிர்வாகத்துக்கு அறிமுகம். ஆனால் மிருதன் அப்படி இல்லையே பிறந்ததில் இருந்து... இல்லை அம்மாவின் வயிற்றில் இருக்கும் பொழுதே இந்த நிர்வாகம் அத்தனையும் அறிமுகம் அல்லவா...!
அதனால் அவ்வளவு எளிதாக யாராலும் அசைக்க முடியாது. அதை தான் வாய் மொழியாலே அங்கு இருந்த அனைவருக்கும் மிருதன் உணர்த்தினான்.
“இங்க இந்த பழைய செட்டில் ஷூட் பண்ணா எப்பொழுதும் ஆகும் காஸ்ட் தான் ஆகும். அதே ஊட்டியில் போய் லொகேஷன் பார்த்து ஒரு நாள் முழுவதுக்கும் இன்ஸ்ட்டால் மென்டிலே போகும். அதோடு இன்னொரு நாள் ஷூட்டிங்க்கு தனியா செலவு ஆகும். சோ ஒரு நாளில் முடிவதோடு ரெண்ட் டபிள் ஆகும். அதோடு இங்க இருந்து ஊட்டிக்கு எடுத்துக்கொண்டு போகும் ட்ரவல்ஸ் செலவும் அதிகமாகும்.”
“இவ்வளவு அதிகம் ஆவதோடு யாராலும் என்ஜாய் மென்ட்டில் கவனத்தை வைக்க முடியாது. வேலை சரியாக வந்தாக வேண்டுமே என்று ஒரு வித டென்ஷனிலே இருக்க வேண்டும். சோ அதுக்கு பெட்டர் இங்கயே ஷூட்டிங் பண்ணிட்டு ரிலாக்ஸ்டா ஊட்டியாய நான்கு நாள் சுத்திட்டு வரலாம்.”
“நமக்கு இவ்வளவு தூரம் சம்பாரிச்சு குடுக்குற ஆர்ட்டிஸ்டுக்கு சின்ன ட்ரீட் இது தான். அதனால தான் நான் அப்போ கேன்சல் பண்ணிட்டு இப்போ ஓகே சொல்லி இருக்கேன்.”
“எப்படி பார்த்தாலும் நீங்க போட்ட பட்ஜெட்டுல பிப்டிக்கு பிப்டி நான் சேவ் பண்ணி குடுத்து இருக்கேன். சோ இதை யாராலும் கேன்சல் பண்ண முடியாது... இன்னைக்கு மத்தியம் ஊட்டி ட்ரிப் ஆரம்பிக்கிறது...” என்று அழுத்தம் திருத்தமாக மகேந்திரனை பார்த்து சொன்னான்.
அவனது நேர்த்தியான திட்டமிடல் ஒரு பக்கம் என்றாலும் அதில் இருக்கும் மேனஜ்மென்ட் அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட காஸ்ட் வைஸ் அவனது தந்திரம் எல்லோரையுமே பாராட்ட வைத்தது.
“புலிக்கு பிறந்தது பூனையாகுதுன்னு ஒவ்வொரு முறையும் நீங்க நிரூப்பிக்கிறீங்க மிஸ்டர் மிருதன்.. வாழ்த்துக்கள்... கண்டிப்பா இந்த மேனேஜ்மென்ட்க்கு உங்களை மாதிரி தலைமைத்துவமும், வழிகாட்டுதலும் வேண்டும்” என்று மனமார பாராட்டினார்கள் போர்ட் மெம்பர்ஸ்..
ஒரு பிசினெஸ் மேனுக்கு கவனம் லாபத்தில் மட்டுமே இருக்க கூடாது. அவன் செய்ய கூடிய செலவில் தான் அவனது முதல் கவனம் இருக்கணும். செலவை குறைக்க கற்றுக் கொண்டாலே தானாகவே ஒரு பிடிப்பு வந்துவிடும். லோ பட்ஜெட்... மோர் இன்கம்.. இது தான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
அந்த மந்திரத்தை தன் பேரனிடமும் மகனிடமும் பார்த்த பெருவுடையாருக்கு சம்பூர்ணவதிக்கும் பெருமையாக இருந்தது...!
அதே திட்டமிடல் தான்.. ஆனால் மகேந்திரன் சொல்வது படி செய்து இருந்தால் இரண்டு மடங்கு செலவு... அனைவருக்கும் மன உளைச்சல்... ஆனால் மிருந்தன் அந்த திட்டமிடலை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி போட்டு இரண்டு செலவை பாதி செலவாக்கியதோடு அனைவருக்கும் எந்த வித பரபரப்பையும் கொடுக்காமல் நிம்மதியாக ட்ரிப்பை என்ஜாய் செய்வார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
“அதோட இந்த ட்ரிப்பை பற்றிய சில கிளிப்ஸ் நம்ம பேஜ்ல போட்டு விட்டா அதுவே ஒரு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் அவர்களிடம் கிளப்பி விடும். சோ இதனால இன்னும் இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி கூடும்” என்று மேகேந்திரனை நக்கலாக பார்த்தான் மிருதன்.
அவன் சொல்வது அத்தனையும் சாத்தியப்படும் என்பதால் இந்த ஊட்டி ட்ரிப்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை. கடுகடு என்ற முகத்தோடு மகேந்திரன் விருட்டென்று வெளியே போய் விட போனவரின் முதுகை துளைத்துப் பார்த்தான் மிருதஞ்சயன்.
அவனின் தோளை ஒரு கரம் தட்டிக் கொடுக்க திரும்பி பார்த்தான் பெருவுடையார் தான்..
“இன்னைக்குன்னு இல்ல எப்பவுமே உன்னை நினைச்சி எனக்கு பெருமை தான் கண்ணா.. நீ சீக்கிரம் மேனேஜ்மென்டுக்கு வரனும்..” என்றார் ஆசையுடன்.
“அதுக்கு இன்னும் காலம் இருக்கு தாத்தா... எனக்கு இப்போ வரை டைரெக்ட் பண்ண தான் பிடிச்சி இருக்கு... பார்ப்போம்” என்றவனின் தலையை வாஞ்சையுடன் கலைத்து விட்டு சென்றார்.
கண்களாலே அவனை பாராட்டி அவனது கரத்தின் மீது தன் கரத்தை வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து விட்டு கிளம்பினார் சம்பூர்ணவதி...
அவர்களை தொடர்ந்து அனைவரும் கிளம்பிவிட மிருதன் மட்டும் அங்கேயே அமர்ந்து இருந்தான். இந்நேரம் அனைவருக்கும் இந்தநியூஸ் போய் இருக்கும்.. கிளம்ப ஆயத்தமாக இருப்பார்கள் எண்ணியவன் தளர்ந்து அமர்ந்து விட்டான்.
“எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணிட்டு அப்புறம் எதுக்குடா நேத்திக்கு அந்த குடி குடிச்ச...” என்றபடி அவனது குட்டி கூட்டம் வந்தது...!
“ப்ச்...” என்று அலுத்துக் கொண்டான் மிருதன்.
“ஆனா செம்ம மச்சி... நம்ம டீம் எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் தான்... இங்க இருந்தே ட்ரிப்பை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க” சுதிர் சொல்ல,
“ஆமாம்டா என்ன சொல்லு நம்ம டீம் நம்ம டீம் தான்... அப்புறம் நாம எதுல போறோம்.. அவங்களோடேவே இல்ல தனியா கார்லயா” என்று சக்தி திட்டம் போட ஆரம்பித்தான்.
“ஏதாவது பண்ணுங்க. பட எனக்கு எந்த சவுன்ஸ்ஸும் இருக்க கூடாது காடிட்...” என்று சொன்னவன் அப்படியே பின் பக்கம் இருக்கையில் சாய்ந்து படுத்து விட்டான்.
“நீ சொல்லு மிருதி... உன் ப்ளான் என்ன...? எங்க வீட்டுக்கு வரியா இல்ல நாங்க வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கவா?”
“நம்ம மூணு பேரு மட்டும் தான் கார்ல போறோம்..” என்று மிருதன் அவளை வெட்டி விட, முணுக்கென்று கண்கள் கலங்கி விட்டது மிருதிக்கு.
“ஓகே கைஸ்... அப்போ நான் கிளம்புறேன்...” என்று அந்த அறையை விட்டு போய் விட்டாள் மிருதி. அதை பார்த்த சுதிர்,
“ஏன்டா எப்போ பாரு அவளை வம்பிழுத்துக் கிட்டே இருக்க. பாவம்டா அவ...”
“பாவம்னா நீயே வச்சு அவளை சமாளி...” என்று விட்டு எழுந்து போய்விட்டான் மிருதன்.
“என்னடா இவன் இப்படி பண்றான்...” சக்தியிடம் மனம் குமுறினான் சுதிர்.
“இதுங்க மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்குங்கன்னு ஒண்ணும் புரியல மச்சி... இதுங்களை பார்க்க பார்க்க கடுப்பா வருது.. ஊட்டி ட்ரிப் நல்லா என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சேன். பாவிங்க போகும் போதே ஏழரையை கூட்டுதுங்க...” என்று நொந்தான் சக்தி.
“சரி விடு மச்சி... எப்படியும் ஒரே நேர்கோட்டுல தான் ரெண்டும் வந்து முட்டிக்கும். வா நாம போய் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிட்டு அப்படியே மிருதனை பிக்கப் பண்ணிக்க சொல்லலாம்” என்று இருவரும் பர்ச்சேஸ் பண்ண போனார்கள்.
காலை நேரத்திலே வீட்டுக்கு வந்த மிருதியை சுதா வியந்து போய் பார்த்தார்.
“என்ன ஒரு அதிசயம்... இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட..” என்று அவளிடம் காபியை கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டே, “இன்னைக்கு ஷூட் இல்லம்மா ஜஸ்ட் ஒரு மீட்டிங் மட்டும் தான். அதோட எங்க டீம்க்கு ஊட்டி ட்ரிப் அரேஞ் ஆகி இருக்கு...” என்றாள்.
“சோ நல்லா என்ஜாய் பண்ண போறன்னு சொல்லு... இரு நான் அப்பாக்கிட்ட சொல்றேன்..” என்று அவருக்கு போன் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்.
எதையும் தந்தைக்கிட்ட சொல்லாம இவரால இருக்கவே முடியாது போல... என்று சிரித்தவள் காபியை குடித்துவிட்டு கப்பை கழுவி வைத்தவள்,
“ம்மா கொஞ்சம் தூங்குறேன். டிஸ்டப் பண்ணாதீங்க...” என்று நேற்று தூங்காத தூக்கத்தை இன்று தூங்க ஆரம்பித்தாள்.
இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்தவள்,
“ம்மா பர்சேஸ் போறேன். வரீங்களா” கேட்டாள்.
“அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வேறேன்னு சொல்லி இருக்காங்கடா... நான் இல்லன்னா அவரு டென்ஷன் ஆயிடுவாரு. நீ மட்டும் போயிட்டு வா..” என்று சொல்லவும் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
அனைவரையும் ஸ்டுடியோவுக்கு வர சொல்லிவிட மிருதனின் மொத்த டீமும் இரண்டு ட்ரவல்ஸ் பஸ்ஸில் கிளம்பினார்கள்.
அவர்களை மேனேஜ் பண்ண டீம் லீடர்களை பரதன், சிமி, வசந்த் என மூவருடைய ஆசிஸ்ட்டேன்டுகளையும் ஏற்பாடு செய்த சுதிர், என்னென்ன எப்படி எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்பதை எல்லாம் அவர்களுக்கு செட்யூல் போட்டு கொடுத்து விட்டான் காலையிலேயே.
அதனபடியே அங்கு அனைத்தும் நடை பெற்றது...! அவர்களிடம் தகவல்களை மட்டும் வாங்கிக் கொண்டவன் சக்தியோடு பர்ச்சேசில் கவனமானான்.
அதோடு மூவருக்கும் அங்கத்து நிலவரத்தை அப்டேட் பண்ண சொல்லி இருந்தான் சக்தி. அதன் படி சக்தி. சுதிர், மற்றும் மிருதிக்கு நியூஸ் போய்க் கொண்டே இருந்தது...!
மாலை வாக்கில் மிருதன் ஊட்டிக்கு கிளம்பினான். அவனோடு சுதிர், சக்தி இருவரும் இருந்தார்கள். மூவர் மட்டுமே காரில் இருக்க சுதிர் சக்தியின் காலை சுரண்டினான்.
“சும்மா இருடா... இப்போ கேட்டா நம்மளையும் காரில் இருந்து இறக்கி விட்டுடுவான் சைக்கோ” என்று முணுமுணுத்தான் சக்தி.
“பாவம்டா மிருதி... எப்பொழுதும் ஒண்ணா இருந்துட்டு இன்னைக்கு போய் அவளை மட்டும் விட்டுட்டு போனா அவ மனசு என்ன பாடுபடும்...” சுதிர் புலம்ப,
“கொஞ்சம் புலம்பாம வாடா... காதுல கேட்டுச்சா அவ்வளவு தான்” என்று அவனை அடக்கியவன் மிருதிக்கு போன் போட்டான்.
அந்த பக்கம் போன் அனைத்து வைக்கப் பட்டு இருப்பதாக தகவல் வர சக்திக்கு மனசு கட்டலாய்(கஷ்ட்டமாய்) போனது.
“என்னடா போனை ஆப் பண்ணி வச்சு இருக்கா...? இப்போ என்ன பண்றது...” சக்தி சுதிரிடம் கேட்க,
“என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும். அவ ஜிபிஎஸ்ய் ட்ராக் பண்ணு”
“அது தான் பண்றேன்டா..” என்று இருவரும் அதில் தீவிரமாய் இருக்க போகும் பாதையை இருவரும் கவனிக்கவில்லை.
இங்கே ஷாப்பிங் பண்ண வந்த மிருதிக்கு எதுவுமே தோன்றவில்லை. அப்படியே ஒரு புட்கோட்டில் வெகு நேரம் அமர்ந்து விட்டாள். ஆர்டர் பண்ண எதையும் சாப்பிடாமல் எதையோ வெறித்துக் கொண்டு இருந்தாள். பெண்ணவளின் நெஞ்சில் இருந்த பாரத்துக்கு குறைவில்லாமல் அவளை சுற்றி இருந்த கூட்டம் நெருக்கி அடித்துக் கொண்டு இருந்தது..!
ப்ச்... என்று சலித்தவள்,
மாலுக்கு உள்ளே இருந்த தியேட்டரில் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டாள். ஏற்கனவே தூங்கிப் போனதால் தூக்கமும் வரவில்லை. தனிமையும் கிடைக்கவில்லை. ஓடிக்கொண்டு இருந்த படத்தில் சண்டை காட்சிகள் அதிகம் இருக்க தலைவலி தான் மிச்சம்..