Notifications
Clear all

அத்தியாயம் 4

 
Admin
(@ramya-devi)
Member Admin

இரக்கமற்று நீ நடத்தும் நாடகத்தில்

ஊமை குயிலாய் நான் பேச வழியின்றி...!

 

“பாடாத பாட்டெல்லாம்...” என்ற நிகழ்ச்சியில் அடுத்த மூன்று பேர் பாடி முடித்தார்கள். அடுத்து பாட வந்த நபரின் உடை கொஞ்சம் கூட கேமராவுக்கு பொருந்தாமல் போக, சுதிர் நெற்றியை தேய்த்தான். அவனது முகத்தில் இருந்த அசூசையை உணர்ந்த வசந்த்,

“சார்...” என்றான்.

“இந்த பெண்ணோட காஸ்ட்டியும் கொஞ்சம் கூட சரியே இல்லை... கேமராவுக்கு நல்லாவே இல்ல வசந்த்... இதை நீ முன்னாடியே செக் பண்ணலையா?” என்று கடிந்தான்.

“பார்த்தேன் சார்... ஆனா” இழுத்தான்.

“இப்போ ப்ரோக்ராம் நடுவுல மாத்த போனா மிருதன் கழுவி ஊத்துவான்... இப்படியே சூட் பண்ணி முடிச்சா எடிட் பாக்கும் போது கொன்னே போட்டுடுவான்...” என்று வசந்திடம் புலம்பினான்.

“இப்போ என்ன சார் பண்றது...?” என்று வசந்த் கேட்டு வைக்க, அவனை முறைத்து பார்த்தான் சுதிர்...

“சார்...” அவன் பம்ம, வேறு வழியின்றி மிருதனிடம் சென்று நின்றான் சுதிர்.

“என்னடா?” என்று திரும்பி பார்க்காமல் கேட்டான்,

“அடுத்து வர்ற பொண்ணோட காஸ்டியும் கேமராவுக்கு நல்லா இல்லடா.. அது தான்” என்று பாவமாய் பார்த்தான்.

“நான் என்னைக்கு சீக்கிரமா முடிக்கணும்னு நினைக்கிறானோ அன்னைக்கு தான்டா எல்லாரும் கழுத்தை அருப்பீங்க...” கத்தியவன்,

“ப்ரேக்...” என்று கர்ஜித்து விட்டு அவ்விடத்தை விட்டு போய் விட்டான்.

இந்த அளவுக்கு தப்பிச்சனே என்று எண்ணிக்கொண்டு வசந்தை பார்த்தான். அவன் தலையை ஆட்டிக்கொண்டு வேகமாய் அந்த பெண்ணிடம் போய் வேறு உடை மாற்றி வருமாறு கூறினான்.

அந்த பெண்ணும் கைவசம் மாற்று உடை வைத்து இருந்தாள். அவள் மட்டும் இல்லை. ஷூட்டிங் வரும் அத்தனை பேரிடமும் கைவசம் நான்கு உடைகள் இருக்கும்.

கேமராவுக்கு எது ஷூட்டபில் ஆகுமோ அதை உடனடியாக மாற்றிக் கொள்ள இலகுவாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.

அந்த பெண் உடை மாற்ற இருந்த இடைவேளையில் மிருதன் ப்ரேக் விடவும் அதில் அனைவரும் கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகிக்கொண்டார்கள். 

குளிர்ந்த நீரால் முகத்தை அடித்துக் கழுவி அழுந்த துடைத்துக் கொண்டாள் மிரு... நேற்றிலிருந்து வேலை வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கிறாள். இன்னும் கொஞ்சம் கொஞ்சம் கூட தூங்கவில்லை... வாரத்தில் ஒரு நாள் தான் ஷூட்டிங். ஆனால் அதற்கு முன்னும் பின்னும் பல வேலைகள் இருக்கும்.

அதோடு இல்லாமல் மிருதன் இயக்கம் எல்லா நிகழ்ச்சிக்கும் இவள் தான் அசிஸ்டென்ட்... இவளோடு சக்தி. இவர்கள் இருவருக்கும் தூக்கம் என்பது வாரத்தில் இரண்டு நாள் தான். அந்த நாளில் தான் இவர்கள் வீட்டுக்கே போக முடியும். மத்தபடி செட்டில் தான் இருப்பார்கள்.

கேமரா பின்னாடி நிற்பார்கள், மிரு பின்னாடி நிற்பார்கள், சவுண்ட் இஞ்சினியர்ஸ் அவங்களிடமும் கவனத்தை வைக்க வேண்டும், ஆர்டிஸ்ட் ஜட்ஜ், என எல்லா பக்கமும் இவர்கள் இருக்க வேண்டும். இவர்களோடு இவர்களின் பிஏவும் அலைய வேண்டும்...

“ஏடி...” என்று மிருவை அழைத்தாள் அந்த பெண்... யார் என்று பார்த்தாள் இவள்.

“ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க மிரு.. என் லைப் உங்க கையில தான் இருக்கு...” என்று அழுதவளை பார்க்க பாவமாய் இருந்தது...

“நான் முயற்சிக்கிறேன் மிஸ் அஞ்சு... நீங்க கவலை படாதீங்க...” என்றவள் தன் கையில் வைத்திருந்த லிஸ்ட்டை பார்த்தாள்.

அஞ்சு என்கிற பெயர் வரிசை பதினைந்தாவது இடத்தில் இருந்தது. இப்பொழுது தான் பாதிக்கு பாதி போய் இருந்தது... இனி இரண்டு பேர் பாடின பிறகு இரவு டின்னர் ப்ரேக். அது முடிந்த பிறகு எப்படியும் ஒரு மணி நேரம் கழித்து தான் மீண்டும் ஷூட் தொடங்கும்.

அதன் பிறகு வரிசையில் உள்ள அனைவைரும் பாடி முடித்து அஞ்சு டைம் வர எப்படியும் விடியற்காலை ஆகிவிடும்...

அதனால் லிஸ்ட்டில் இருந்த பெயர்களை மாற்றி போட்டாள். தன்னிடம் உள்ளதை மட்டும் இல்லாமல் சக்தியிடம் உள்ள லிஸ்ட்டையும் வாங்கி மாற்றிப் போட்டாள். ஆனால் மிருதன் கையில் உள்ளதை கவனிக்காமல் போனாளோ பெண்ணவள்...!

“அடுத்த ஆள்...” என்று மிருதன் கேமராவை பார்த்துக் கொண்டே சொல்ல, அஞ்சுவை கைகாட்டி போக சொன்னாள் மிரு.

சிங்கர்ஸிடமும் முன்கூட்டியே சொல்லிவிட்டாள். அதே போல ஆங்கர்ஸிடமும் சொல்லிவிட்டாள். அதன் படி,

“பாடாத பாட்டெல்லாம் ல அடுத்த பாடலை பாட இருக்கும் சிங்கர்ஸ் மிஸ் சஞ்சு... கம் ஆன்... மஞ்சு” என்று அழைக்க, மஞ்சு எழுந்து வந்தாள்.

வந்தவள் “ஆசை நதி மடை திறக்கும்

பாசை வந்து கதவடைக்கும்

காயாது மன் ஈரங்கள் தாளாது சுடு பாரங்கள்

காவிய காதலின் தேகங்களே ஊமையின் காதலை பேசுங்களே..

மலர்களும் சுடுகின்றதே...!” என்று பாதியில் இருந்து பட ஆரம்பித்து,

“இளம் பனி துளி விழும் நேரம்

இலைகளில் மகரந்த கோலம்...!” என்று முதல்வரி பாடினாள் ... அதை முழுதாக கூட பாடி இருக்க மாட்டாள். அதற்குள் “கட்” என்று கத்திவிட்டான் மிருதன்.. மிருதன் மிருகமாக மாறிய தருணம்.

அவனது திடீர் கோவத்தில் செட்டில் உள்ள அனைவருமே திகைத்துப் போனார்கள். மிருதன் ப்ரோக்ராம் நடந்துக்கொண்டு இருக்கும் பொழுது கத்தினான் என்றால் சொல்லவே வேண்டாம்... பெரிய பூகம்பத்துக்கு அறிகுறி என்று தெரியும்.

இப்ப யார் மாட்டுனாங்கன்னு தெரியலையே கண்களாலையே ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். வயதில் பெரிய ஜட்ஜசஸ் கூட வாயை திறக்கவில்லை... அந்த அளவுக்கு அவன் மீது பயமும் மரியாதையும் இருந்தது.

ஏற்கனவே நடுக்கத்தில் இருந்த அஞ்சு இப்பொழுது முழு கலவரத்தையும் பூசியபடி மிருதியை பார்த்தாள். மிரு அவளுக்கு கண்களாலேயே தைரியம் காட்டினாள்.

“உன்னோட டேர்ன் பிப்டீன் தானே...!” கடுமையாக கேட்டான் அஞ்சுவிடம்.

“ஆமா... இல்லங் சார்...” என்று தடுமாற,

“யார் உன்னை இந்த டைம்ல பாட சொன்னது...?”

“இல்ல சார் அது...” தனக்கு உதவி செய்த மிருவை காட்டிக் கொடுக்க மனம் வராமல் அவள் தடுமாற, ஏற்கனவே கடும் கோவத்தில் இருந்தவன், அவள் தடுமாற, அவளை அடிக்க கையை ஓங்கிவிட்டான்.

அவனது கோவத்தில் அந்த பெண் நடுநடுங்கிப் போக, ஆத்திரத்தில் கண்கள் சிவக்க “மிருதி...” அந்த செட்டே ஒரு குலுக்கள் குலுங்கி நின்றது..

தொண்டையில் நீர் வற்றி போய் உலர்ந்துப் போனது மிருவுக்கு.. ஆனாலும் வேறு வழியில்லாமல் அவனது எதிரில் வந்து நின்றாள் மிருதி.

“யார் பார்த்த வேலை இது...?” உறுமினான்.

“மிருதன் அது வந்து....” என்று அவள் தயக்கத்துடன் இழுக்க, அவளை கூர்ந்து பார்த்த படியே அவளின் கையில் இருந்த பேப்பரை பிடுங்கினான். அதில் அவள் பெயர் பட்டியல் மாற்றி இருந்ததை பார்த்தவனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது...!

ஆங்கர்ஸ் மற்றும் சக்தியிடம் உள்ள லிஸ்ட்டையும் வாங்கி பார்த்தவனுக்கு அபப்டி ஒரு கோவம் வந்தது.

“சோ நீ தான் இந்த வேலை பார்த்து இருக்க இல்லையா?” வார்த்தையை கடித்து துப்பினான். அதில் அவளது தேகம் மெல்ல நடுங்க ஆரம்பித்தது... சும்மா இருக்கும் பொழுதே அவனை நெருங்க முடியாது. இப்பொழுது சொல்லவே வேணாம்... நெருப்பு மாதிரி இருப்பவனை நெருங்கி எந்த சமாதானமும் செய்ய முடியாது தவித்துப் போனாள்.

“அது வந்து மிருதன்...” என்று சொல்ல வந்தவள் அவன் பார்த்த கொலை வெறியில் “நான்...”  என்று அவளது வாய் தந்தி அடிக்க ஆரம்பித்தது...!

“நீ செய்தியா இல்லையா? எனக்கு அது மட்டும் தான் வேணும்...” என்று உடும்பு பிடியாக நின்றான். அவள் தலைக்கவிழ்ந்து நின்றாள்.

அவன் அப்படியே கரத்தை கட்டிக்கொண்டு கொஞ்சமும் விலகாமல் நின்றான். அவனது அடம் தெரிந்து,

“சாரி மிருதன் நான் தான் இப்படி செய்தேன்...” என்று முடிக்கும் முன்பே அவளை ஓங்கி ஒரு அரை விட்டிருந்தான்.

அந்த அரையில் அவளின் காது சவ்வே கிழிந்து போனது போல இருந்தது... அவ்வளவு முரட்டு தனமாக அரைந்து இருந்தான்.

அதை யாருமே எதிர்பார்க்கவில்லை...! எல்லோருமே இருக்கையில் இருந்து எழுந்தே விட்டார்கள். சக்கிதியும் சுதிரும் அவர்களின் அருகில் வேகமாய் ஓடிவர, தன் கையில் இருந்த ஸ்க்ரிப்ட் பேப்பர்ஸ் மொத்தத்தையும் மிருவின் முகத்தில் வீசி எறிந்தவன்,

“இனி நீயே டேரக்ட் பண்ணிக்க...” என்று வெளியே போய் விட்டான்.

அவனது பின்னாடி போய் சமாதனம் செய்ய சுதிரும் வசந்தும் ஓடினார்கள். மிருதன் வெளியே போன உடன் மொத்த செட்டும் மிருவை நெஞ்ருங்கி அவர்களுக்கு தெரிந்த வரையில் ஆறுதல் சொல்ல இயல்பான ஒரு புன்னகையை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடினாள்.

அஞ்சு விழிகள் கலங்க “சாரி” சொல்ல,

“பரவாயில்லை அஞ்சு... நானும் முயற்சி பண்ணேன். பட் சாரி என்னால உனக்கு உதவ முடியல...” என்று வருந்தியவளை கட்டிக் கொண்டவள்,

“நான் சாரி சொன்னா நீ என்ன இப்படி பீல் பண்ற... என்னால தான் உனக்கு இப்படி ஆச்சு.. நானே அந்த கில்ட்டி பீல்ல இருக்கேன்” என்று சொன்னவளை பார்த்து சிரித்தவள்

“வரேன்...” என்று தன் அறையை நோக்கி போய் விட்டாள். அவளால் வெகு இயல்பாய் அவர்களின் முன்னாடி காட்டிக் கொண்டாலும் முதல் முறையாக மிருதன் தன்னை அடித்ததில் இருந்து சுலபமாய் வெளியே வர முடியவில்லை.

கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது. ஆற்ற முடியா சோகம் போல இருக்கையில் அமர்ந்து மேசை மீது கவிழ்ந்துக் கொண்டாள். அவளின் பின்னாடியே சக்தி வர,

கதவை திறக்கவே இல்லை இவள்.

“மிரு முதல்ல கதவை திற...” என்று சக்தி பேசிய பேச்சுக்கள் எல்லாம் காற்றில் தான் கலந்தது... மிரு கதவை திறக்கவே இல்லை... ஒரு பக்க கன்னம் அப்படியே தீயாய் எரிந்தது...! தொடக் கூட முடியவில்லை அந்த இடத்தை... கண்களில் நிற்காமல் தண்ணீர் வர அந்த சுடு கண்ணீர் பட்டு கன்னம் இன்னும் எரிந்தது...!

“இன்னும் என்னை எவ்வளவு தான் காயம் செய்வாய்.. உன் இரக்கம் நான் காணாத பொக்கசமோ(பொக்கிசம்)..” என்று இதயம் நேரம் காலம் தெரியாமல் கவிப் படைக்க, தன்னை தானே நொந்துக் கொண்டாள்.

அழுத சுவடு தெரியாமல் முகத்தை கழுவிக்கொண்டு கண்ணாடி முன்பு வந்து நின்றாள். ஒரு பக்க கன்னம் புஸ்சென்று வீங்கி இருந்தது. அவனது ஐவிரல் அப்படியே படிந்து இருக்க, பெருமூச்சு விட்டவள், அங்கு இருக்கும் மேக்கப் கிட்டில் இருந்து முகத்துக்கு கொஞ்சம் ஒப்பனை செய்தாள்.

மேக்கப்பில் இது நாள் வரை ஈடுபாடே இருந்ததே இல்லை... சுடிதார், இல்லை என்றால் காட்டன் சேர்ட் ஜீன்... தூக்கிப் போட்ட கொண்டை, அந்த கொண்டையில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும் சீனத்து கொண்டை ஊசி... அதில் முத்துக்கள் வேலை பாடு இருக்கும்... அழகாய் ஒரு இன்ச் அளவு தொங்கிக்கொண்டு இருக்கும்..

இதை தவிர ஒரு பொட்டு கூட தங்கம் இருக்காது... நகைகள் எதுவும் அணிய மாட்டாள். காதில் இருக்கோ இல்லையோ என்று தேடுகிற அளவுக்கு கடுகை விட சின்னதாய் ஒரு வைரம் பதித்த தோடு. அது மட்டும் தான் அவளது அன்றாட அலங்காரம். 

இன்று வேறு வழியின்றி போட்டுக் கொண்டவள், செட்டின் உள்ளே நுழைந்தாள். அனைவரும் சாப்பிட சென்று இருந்தார்கள். யாரும் இல்லை அந்த செட்டில். அவள் கதவை திறந்து வெளியே வந்தவுடன் சக்தி அவளின் முகத்தை ஆராய்ந்தான். அழுத சுவடை மறைக்க அவள் போட்டு இருந்த மேக்கப்பை பார்த்து மனம் வேதனைக் கொண்டான்.

அவளை சாப்பிட கூப்பிட்டான். அவள் வேண்டாம் என்று மறுத்துவிட்டு செட்டுக்கு வந்து விட்டாள். செட்டில் போட்டு இருந்த ஒரு இருக்கையில் கால்கள் துவள மனம் துவள அமர்ந்து விட்டாள்.

மிருதனின் கோவத்தை தாங்க முடியாமல் மனம் உடைந்தவளுக்கு அந்த தனிமை அழுகையை கொடுக்க அதை அடக்கியபடி அமர்ந்து இருந்தாள். எவ்வளவு நேரம் அபப்டியே இருந்தாளோ தெரியவில்லை. ஒவ்வொருவராய் உள்ளே வர ஆரம்பிக்க முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.

ஆறுதலாய் அவளை பார்க்க யாருடைய பார்வையையும் எதிர்நோக்கவில்லை. சக்தி கொண்டு வந்த ஸ்க்ரிப்ட் பேப்பரில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

சலசலவென்று பேசிக்கொண்டு இருந்தவர்கள், அழுத்தமான காலடி ஓசையில் கப் சிப் என்று அமைதியானார்கள். உள்ளே வந்த மிருதன் கண்களை ஓட்டி எல்லாவற்றையும் ஒரு முறை செக் செய்தவன், இருக்கையில் அமர்ந்து நிமிராமல் பேப்பரை படித்துக் கொண்டு இருந்தவளின் மீது ஒரு நொடி பார்வையை நிலைக்க விட்டவன்,

“எஸ்.. ரெடி” என்று கைக்காட்ட, விட்ட இடத்தில் இருந்து சூட்டிங் தொடங்கியது...!

“பாவை விழி துளி விழுந்து

பூவின் பனி துளி நனையும்...

தீயாகும் ஒரு தேன் சோலை...

போராடும் ஒரு பூ மாலை...

சூரியகாந்திகள் ஆடியதோ

சூரியனை அது மூடியதோ...

முகில் வந்து முகம் பொத்துமோ...” என்று அஞ்சுவின் குரல் கேட்க சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அஞ்சு தான் பாடிக் கொண்டு இருந்தாள் விட்ட இடத்தில் இருந்து.    

“இளம் பனி துளி விழும் நேரம்

இலைகளில் மகரந்த கோலம்...

துணை கிளி தேடி துடித்தபடி

தனி கிளி ஒன்று தவித்தபடி

சுடசுட நனைகிறதே...!” என்று பாடி முடித்தாள் மிக நேர்த்தியாக.

அனைவரும் கைத்தட்ட, ஜட்ஜஸ் கமென்ட் சொன்னார்கள். வேகமாய் மேடை இறங்கி கீழே வந்தவள் நேராக மிருதுவிடம் வந்து நின்றாள்.

“ரொம்ப தேங்க்ஸ் மிரு... சார் என்னை கிளம்ப சொல்லிட்டாரு... எல்லாம் உன்னால தான்...” என்று அவளை கட்டிப் பிடித்து நன்றி சொல்லி கிளம்பிவிட்டாள்.

அதை பார்த்துக் கொண்டு இருந்த மிருதன் அவள் தன்னை பார்ப்பாள் என்று நினைத்தான். ஆனால் அவனை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை மிருதி..  

அதில் பல்லைக் கடித்தவன், “உடம்பு முழுக்க திமிரு...” என்று கருவியவன் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : August 26, 2025 11:44 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top