Notifications
Clear all

அத்தியாயம் 39

 
Admin
(@ramya-devi)
Member Admin

வெறும் நீல நிறத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு அந்தி வானம் சிவந்துப் போய் இருந்ததை காண முடியாமல் போனது. அறைக்குள் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

அவளின் தனிமை அவளை பெரிதும் அச்சுறுத்தியது. யாராவது பேச்சு துணைக்கு ஆள் இருந்தால் கூட ஒரு மாதிரி இருந்து இருக்கும். ஆனால் ஒருவரும் இல்லாத இந்த வெறுமை அவளை மிகவும் சோர்வுற வைத்து கண்டதையும் எண்ண தூண்டியது.

விழிகளை மூடினாலே கெட்ட கெட்ட கனவு வர அவளால் சுத்தமாக ஒன்றுமே முடியவில்லை. கடவுளே என்று அவள் தவித்துக் கொண்டு இருந்த சமயம் கையில் உணவோடு அவளிடம் வந்தான் தயாகரன்.

அவன் வரவும் எழுந்து அமர்ந்துக் கொண்டாள். என்னவோ இந்த நேரம் அவனிடம் காயவும் அவளால் முடியவில்லை. அவனாவது சிறிது நேரம் உடன் இருக்கிறானே என்று ஆறுதல் வந்தது.

“சாப்பிடு” என்று உணவை அவளிடம் நீட்டினான். வாங்கிக் கொண்டவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“வேற என்ன வேணும்?”

“கொஞ்ச நேரம் இங்க இருக்கீங்களா?” தயக்கத்தை மீறி கேட்டு விட்டாள்.

ஒன்றும் சொல்லாமல் வெளியே போய் விட்டான். அவன் அப்படி போகவும் மளுக்கென்று கண்களில் நீர் நிறைந்து விட்டது.

“துணைக்கு கூட இருக்க மாட்டேன்னு போகிறாரே...” என்று வேதனை கொண்டாள். தான் கேட்ட எந்த கோரிக்கையும் அவனிடம் நிறைவேறாது என்று புரிந்துக் கொண்டவளுக்கு உணவு வேப்பங்காயாய் கசந்தது.

அப்படியே அருகில் இருந்த டீபாயில் வைத்து விட்டு மீண்டும் படுக்கப் பார்க்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கையில் உணவு தட்டுடன் தயாகரன் வந்தான்.

“ஓ.. உணவு எடுக்க போயிருந்தாரா?” கேட்டவள், தன் உணவு தட்டையும் எடுத்துக் கொண்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவளுக்கு எதிரில் அமர்ந்தது எதுவும் பேசாமல் உணவை உண்ண ஆரம்பித்தான். அவளது பார்வை அவள் பேச்சை கேளாமல் அவனின் மீது படிந்துக் கொண்டே இருந்தது தொடர்ந்து.

“மனுசனை ஒழுங்கா சாப்பிட விடுடி” பல்லைக் கடித்தான். அதில் சுதாரித்து தன் தட்டில் பார்வையை வைத்துக் கொண்டாள். எல்லாம் சிறிது நேரம் தான். பின் தன் பார்வையை அவன் மீது வைத்துக் கொண்டாள்.

அவளால் அவ்வளவு எளிதாக அவனின் மீது இருந்து பார்வையை விலக்கிக் கொள்ளவே முடியவில்லை. தன் போக்கில் தன் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து வெளியே விட்டுக் கொண்டாள்.

அவளின் பார்வை அவளை மிகவும் இம்சை பண்ண நிமிர்ந்து அவளை முறைத்தான். சட்டென்று நெஞ்சின் மீது இருந்த தாலியை எடுத்து அவன் கண் முன்னாடி காண்பித்தாள் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்.

“என்ன உரிமை இருக்குன்னு காமிக்கிறியாடி?” பல்லைக் கடித்தான்.

“அது தான் உங்களுக்கே தெரிஞ்சுதுல்ல அப்புறம் என்னவாம்.. சுத்தி முத்தி நீல வண்ணத்தை பார்த்து பார்த்து கண்கள் வலிக்கிறது. அது தான் கொஞ்சம் மாற்றமா இருக்கட்டுமேன்னு உங்களை பார்க்கிறேன். தவறா?” என்று கேட்டவளை ஏகத்துக்கும் முறைத்தவன்,

“சாப்பிட்டு சீக்கிரம் எந்திரி” என்று சொல்லிவிட்டு தன் உணவில் கவனம் வைத்தான்.

அவன் தட்டில் இருந்த மீனை லாவாகமாக சாப்பிடும் அழகை பார்த்தவளுக்கு மீன் சாப்பிடவே தெரியாது. திணறிப் போனாள். அவள் திணறுவதை பார்த்து, தானே அவளுக்கு எடுத்துக் குடுக்க,

“கல்லுக்குள் ஈரமோ?” என்றாள். தயாகரன் பதிலே பேசவில்லை.

அவன் கை பட்டு வந்த மீன் சுவை இன்னும் அதிகரித்தது போல தோன்றியது. பைத்தியம் முத்தி விட்டது என்று தன்னை தானே சிலாகித்தும் கொண்டாள்.

ஒருவழியாக சாப்பிட்டு மீண்டும் அவள் அறைக்குள் முடங்க போக,

“கொஞ்ச நேரம் வெளில வந்து நில்லு” என்றான்.

“மறுபடியும் வாமிட் வந்ததுன்னா?” தயக்கமாய் இழுத்தாள்.

“ஒன்னும் ஆகாது நீ வா” என்று அவளை இழுத்துக் கொண்டு மேல் தளத்துக்கு வந்தான். அங்கே அவனது சகாக்கள் இருவரும் ட்ரிங்க்ஸ் பண்ணிக் கொண்டு இருந்தார்கள். இவர்களை பார்த்து, “ஹேவ் இட்” என சொல்ல,

“கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்று சொல்லி விட்டு அவளை அழைத்துக் கொண்டு சற்று மறைவான இடமாக பார்த்து கடல் புறமாக நிற்க வைத்தவன் அவளின் பின்னோடு தானும் நின்றுக் கொண்டான்.

சுற்றிலும் மிதமான சத்தங்கள்.. பேரிரைச்சல் என்று இல்லை. வானத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். முற்றிலும் இரவு கவிழவில்லை. வெளிர் நிறமாக காட்சி அளித்தது. ஆங்காங்கே விண்மீன் கூட்டம் மின்னிக் கொண்டு இருக்க, அவனின் நெஞ்சோடு அப்படியே சாய்ந்துக் கொண்டாள் தயாழினி.

அவளை விலக்கவில்லை. நெஞ்சில் தாங்கி நின்று இருந்தான். இருவருக்குள்ளும் மௌனம் தான். பேச தோன்றா ஒரு நிலை.

கம்பியை பிடித்து இருந்தவனின் கைகளில் ஒன்று பெண்ணவளின் மெல்லிய இடையை அணைத்துக் கொண்டது. அவள் எதையும் மறுக்கவில்லை. அவனின் நெஞ்சோடு இன்னும் நெருக்கமாக நின்றுக் கொண்டாள்.

அவளின் இடையை வளைத்துப் பிடித்தவன் சற்றே குனிந்து அவளின் இடது பக்க வெற்று தோளில் முகத்தை பதித்து எதிரே இருந்த கடலை ஆழ்ந்துப் பார்த்தான்.

அவள் அவனை கொஞ்சமும் தடுக்கவே இல்லை. நேர்மாறாக அவனின் இன்னொரு கையையும் எடுத்து தன் இடையோடு சுற்றிக் கொண்டாள். கால்களை அகட்டி வைத்து நிலையாக நின்றுக் கொண்டவன் கைகளால் அவளை அவளின் விருப்பம் போல சுற்றிக் கொண்டான்.

பின்னந்தலையால் அவனின் நெஞ்சோடு முட்டி நின்றவள், தன் கன்னத்தை அவனின் கன்னத்தோடு உராய விட்டாள். அணல் லேசாக படர்ந்து இருந்த கன்னத்தில் அவளின் மென்மையான கன்னம் படவும் அவளுள் ஒரு சிலிர்ப்பு எழுந்தது.

இதற்க்கு முன்னாடி இப்படி அவனிடம் சிலிர்த்து நின்றது மிக மிக குறைவு. ஆனால் இன்றைக்கு அவனின் மெல்லிய ஸ்பரிசம் கூட அவளை வெகுவாக புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது.

கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டவள் தன் மனதில் தன் கணவனின் உருவத்தை உருவகிக்க முயல, அவனின் முழு முதல் தோற்றம் அவளை கொஞ்சமும் எமாற்றமால் அச்சு பிசகாமல் அப்படியே விரிய, கைகளால் அவனின் உருவ வெளியை தொட்டு இரசிக்கப் பார்க்க, அது கிட்டாமல் போக வாடிப் போனாள்.

அவளின் உள்ளத்து வேதனையை உணர்ந்தவன் போல, அவளின் கையை பிடித்து தன் கன்னத்தோடு வைத்து அழுத்திக் கொண்டான் தயாகரன். அவனது செயலில் திகைத்துப் போனாலும் அவளால் அவனின் கன்னத்தை விட்டு கையை எடுக்கவே முடியவில்லை.

கண்களை அழுந்த மூடிக் கொண்டவள் தன் கழுத்தில் முகம் சாய்ந்ந்து இருந்தவனின் முகத்தை அழுத்தமாக தன்னோடு சாய்த்துக் கொண்டாள்.

அவளின் இடையோடு இருந்த கையை அவளின் சேலைக்குள் விட்டு அவளின் வெற்று இடையை இறுக்கிப் பிடித்தவன் வயிற்றில் வந்து தன் ஆளுகையை காட்ட, கிறங்கிப் போனாள் முற்றிலுமாக.

“ப்ளீஸ்” என்று கேட்டவளின் கெஞ்சலை கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாய் அத்து மீறினான். அவனை தடுக்க அவள் நினைக்கவில்லை.

தன் தனிமைக்கு அவன் மருந்தாக வர அவள் முழுமையாக அவனை ஏற்றுக் கொண்டாள். கடற்காற்று சற்றே குளிர்ந்துப் போய் வீச, அவளின் தேகம் நடுங்கியது.

“குளிரும் போலையே” என்று அவன் சொல்ல, தலையை மட்டும் ஆட்டியவள் அவனை விட்டு நீங்கவில்லை.

“உள்ள போகலாமா?” கேட்டான். அவள் வேண்டாம் என்று தலையை ஆட்டினாள்.

“சரி இரு வரேன்” என்று விட்டு நண்பர்களிடம் சென்றான். திரும்பி வரும்பொழுது அவனின் கையில் இருந்ததை பார்த்து திகைத்துப் போனாள்.

“இந்த நேரத்துல இது தேவையா?” என்றாள்.

“கொஞ்சமா என்ஜாய் பண்ணலாம் தவறு இல்லை” என்றவன்,

“உனக்கு கொஞ்சம் வேணுமா?” கேட்டவனை முறைத்துப் பார்த்தவள் கடல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

தோளை குலுக்கி விட்டு தன் இடத்தில் நின்றுக் கொண்டாள். அவன் குடித்தால் அவளுக்கு ஒன்றும் இல்லை என்பது போல நின்றுக் கொண்டாள்.

அவளின் அலட்சியத்தை பார்த்து கிளாசோடு சேர்த்து அந்த மதுவை கடலுக்குள் வீசியடித்தான். பின் அவளை திருப்பி அதே வேகத்தோடு அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.

அவனது இதழ்களில் அவன் ஒரு மிடறு மட்டுமே அருந்திய மதுவின் சுவை அவளும் உணர தடுமாறிப் போனாள்.

“லைட்டா கசக்குதா?” என்று கேட்டுக் கொண்டே மேலும் அவளின் இதழ்களோடு தன் இதழ்களை பொருத்தி முத்தம் வைத்தான். அவளின் நாடு முதுகில் மின்னல் வெட்டிப் போக, அவனின் உயரத்துக்கு தன் முன் கால் விரல்களால் எம்பி நின்றாள்.

அதில் இன்னும் அதிக உரிமை கொண்டவனாய் அவளின் இடையை இறுக்கிப் பிடித்து லேசாக கசக்கவும் செய்ய, பெண்ணவள் ஏடாய் வளைந்துக் கொடுத்தாள்.

மெல்ல மெல்ல காற்றின் ஓங்காரம் அதிகமானது. கூடவே கடல் அலையின் சீற்றமும் அதிகமாக ஒரு பேரலை வந்து இருவரையும் நனைந்து விட்டு செல்ல, தொப்பலாக இருவரும் நனைந்துப் போனார்கள்.

கடல் சீற்றத்தில் சட்டென்று அவள் அவனிடம் இருந்து பிரிந்துக் கொள்ள பார்க்க,

“ரிலாக்ஸ்.. அலை தான்” என்றான் தன்மையாய்.

“உங்களுக்கு இப்படி கூட பேசவருமா?” கேட்டாள்.

“ப்ச்” அவன் சலித்துக் கொள்ள,

“இல்ல உங்க பரிமாணம் கண்டு உண்மையாவே வியப்பா இருக்கு. முதல் முதலா உங்களை பார்த்து அவ்வளவு பயம் வந்துச்சு. அரக்கனை விட மோசமா உங்களை நினைச்சேன். ஆனா இப்போ அந்த எண்ணம் எல்லாத்துக்கும் முரணாய் இருக்கீங்க” என்றவள் தானே வழிய வந்து அவனின் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டாள்.

“கீழ போய் புடவையை மாத்து.. ஈரமா இருக்கு” என்றான்.

“இல்ல வேண்டாம் இப்படியே கொஞ்ச நேரம் இருக்கலாம்” என்றவள் வானில் நிலவை தேடினாள். அவளின் தேடுதலை உணர்ந்து அவன் நிலாவை காட்டி குடுக்க, அதை பார்த்து நின்றவள் அவனின் இரு கையையும் தன் இடையோடு போட்டு பிடிக்க வைத்தாள்.

அதில் ஆனவனின் உணர்வுகள் சற்றே எழும்ப,

“வேணான்டி கீழ போகலாம்” என்றான். நேரம் பதினோரு மணிக்கு மேல ஆகி இருந்தது.

அவனாது சகாக்கள் குடித்து முடித்து கீழே உண்டு உறங்கி இருந்தார்கள். மேல் தளத்தில் இவர்கள் மட்டும் தான். அதோடு கூதல் காற்று பலமாக வீச, நனைந்து இருந்த ஆடையில் பெண்ணவள் நடுக்கம் கொண்டாள்.

தயாகரன் நனைந்து இருந்த தன் மேல் சட்டையை அவிழ்க்க, அவனின் வெற்று மார்பை பார்த்து இருந்தாள் அந்த சின்ன ஒளியில்.

அவளின் பார்வையை பார்த்து, தன் முறுக்கேறிய கையையும் விடைத்து நின்ற நெஞ்சையும் கட்டினான். அதை தொட்டுப் பார்க்க துடித்த விரல்களை அடக்கிக் கொண்டவள் சட்டென்று தன் இதழ்களை அவனின் விடைத்து நின்ற நெஞ்சில் பதிக்க அதற்கு மேல் முடியாமல் பெண்ணவளை சுழற்றி எடுத்தான் தயாகரன்.

தொடரும்..

Loading spinner

Quote
Topic starter Posted : August 26, 2025 11:15 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top