Notifications
Clear all

மின்சாரம் 36

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஆனால் அதை தாண்டி அவளை இப்படி ஒரு சூழலில் எடுத்துக் கொள்ள மனம் தடுத்தது. அவளிடம் அத்துமீறி இருக்கிறான் தான். அவளை முழுமையாக பார்த்து இருக்கிறான் தான். ஆனால் அவள் கேட்ட கோரிக்கை என்பது அவ்வளவு எளிது இல்லையே.. அவனை தாண்டி அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறதே. அவனோட அவள் வாழ்க்கை பிணைந்து இருந்தால் ஒருவேளை அவள் கேட்டதை செய்து இருப்பானோ என்னவோ..

ஆனால் அவன் தான் அவளுக்கு வேறு ஒரு பாதையை கை காண்பிக்கிறானே.. தாலியை கழட்டி குடு என்று கேட்ட பிறகு அவளை அவன் எப்படி எடுத்துக் கொள்வதாம்..

பொன்மாரியின் வளர்ப்பு அவனை மிகவும் தேக்கியது அந்த இடத்தில். அதனால் அவளை அந்த நிமிடம் தேற்ற மட்டுமே அவளை முத்தமிட்டான். கட்டி அணைத்தான். ஆனால் அதை தாண்டி அவள் கேட்டதை அவனால் செய்ய முடியவில்லை. இப்பொழுது என்று இல்லை எப்பொழுதுமே அவனால் செய்ய முடியாது.

“வெரி சாரிடி உன் கோரிக்கையை என்னால ஏற்றுக் முடியல.. என் மேல முழு நம்பிக்கை வை. உன்னை யாரோட நிழலும் படாம நான் காப்பாத்துவேன்” என்றான்.

“நான் சொல்றது உங்களுக்கு புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா? சத்தியமா நீங்க என்னை தொட்டா, அதை வச்சு உங்கக்கிட்ட வாழ்க்கையை பிச்சையா கேட்டு நிற்க மாட்டேன். ப்ளாக் மெயில் எல்லாம் பண்ண மாட்டேன். இது என்னோட உணர்வு.. ஒரு பெண்ணா உங்கக்கிட்ட கெஞ்சி கேட்கிற ஒரு விசயம்” என்றாள் வேதனையுடன்.

“ச்சீ இதுக்காக போய் இவன் கிட்ட இப்படி மானம் கெட்டு போய் கெஞ்சிக்கிட்டு இருக்கோமே” என்று அவள் பெரிதும் உள்ளுக்குள் தன்னை தானே அறுவெறுத்துப் போனாள்.

அது அவளின் முகத்திலும் நன்கு தெரிந்தது. அதை உணர்ந்தவனுக்கு எந்த காரணம் கொண்டும் அவளை தான் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வைராக்கியமாக இருந்தான். ஆனால் அவனது வைராக்கியமும் உடையும் தருணம் வெகு விரைவில் வந்து சேர்ந்தது.

தான் இவ்வளவு கேட்டும் கொஞ்சமும் அசையாமல் கல் போல இருந்தவனை கண்டு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது தயாழினிக்கு. நெஞ்சில் பலத்த அடி விழுந்தது போல துடித்துப் போனாள்.

இனி ஒரு காலும் இவனிடம் எதுக்காகவும் கெஞ்சிக்கொண்டு நிற்கக் கூடாது என்று தன்னை தானே திடப்படுத்திக் கொண்டாலும் எதிரிகளின் கையில் இவள் விலைமகளாக அல்லவா போகப் போகிறாள். அங்கு  என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

விலைமகளை விற்கும் ஆளாக அவளுடன் தயாகரன் வருகிறான். இது தான் இவர்களின் திட்டம். அதுவும் தயாகரன் சொன்ன ஆட்கள் எல்லாம் கடஞ்சி எடுத்த அலசி எடுத்த அயோக்கியர்கள். அவர்களின் கையில் தான்... நினைத்துப் பார்க்கவே அவளுக்கு உயிரே போய் விட்டது. ஆனால் அவள் இதை செய்து தான் ஆகணும்.

அவளின் அண்ணனை காப்பாற்ற வேண்டுமே.. அதுக்காக தானே இவ்வளவு ரிஸ்க்கும்.. பெருமூச்சு விட்டவளுக்கு கண்களில் இருந்து இரகசியமாய் கண்ணீர் வழிந்தது.

போதை மருந்து போட சொல்லி தன் எதிரில் இருந்தவனிடம் கையை நீட்டினாள். இன்றைக்கு ஒரு பொழுது தான் இவள் இங்கே.. நாளைக்கு இந்த ஊரை விட்டு கிளம்பியாக வேண்டும்..

போறது எந்த ஊர் என்று கூட தயாகரன் அவளுக்கு சொல்லவில்லை. இவள் கேட்டுக் கொள்ளவும் இல்லை. இனி அதை கேட்டு அவள் என்ன செய்யப் போகிறாள். சாவு எதிரில் நின்றுக் கொண்டு வா என இரு கையையும் விரித்து அழைக்கிறது.. இனி இவள் போய் தான் ஆகணும்.. தப்பிக்கவே முடியாதே..

தயாகரனிடம் கையை நீட்டியபடியே,

“என் குடும்பம் எப்போ வெளிநாடு போகப்போகுது..” என்று கேட்டாள்.

தயாகரன் பெருமூச்சு விட்டானே தவிர எதுவும் பேசவில்லை.

சட்டென்று அவனிடம் நீட்டிய கையை மடக்கிக் கொண்டவள்,

“நீங்க வாக்கு குடுத்து இருக்கீங்க என் குடும்பத்தை செட்டில் பண்றதா.. என் குடும்பத்தை செட்டில் பண்ணா தான் நான் உங்க ஆப்ரேஷனுக்கு ஒத்துக்குவேன்னு. இல்லன்னா இப்பவே  என் குடும்பத்தை கூட்டிட்டு வெளியே போயிடுவேன்.  அப்புறம் எங்க பொணம் கூட உங்களுக்கு கிடைக்காது” என்றாள்.

“ப்ச்.. என்னடி உன் பிரச்சனை? சும்மா நைய்யின்னுட்டு இருக்குற” எரிச்சல் ஆனான்.

“ப்ளீஸ்.. என் குடும்பத்தோட பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம்.. அவங்களை இங்க இருந்து எப்படியாவாது அனுப்பி விடுங்க” என்றாள்.

“இங்க என் பாதுகாப்புல என் தம்பிங்க பாதுகாப்புல இருந்தா தான் அவங்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது. எங்களை விடுத்தது வெளிநாடு போனா கூட அவங்களுக்கு ஆபத்து இன்னும் அதிகம் தான் ஆகும்டி.. சொன்னா புருஞ்சுக்கோ.. அவனுங்க நேஷனல் லெவல் இல்ல.. இன்டர்நேஷனல் லெவல் கிரிமினல்ஸ்.. சோ அமைதியா இரு” என்றான்.

“அப்போ என் குடும்பத்தை செட்டில் பண்ண மாட்டீங்களா?” வேதனையுடன் கேட்டவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன்,

“வெயிட் பண்ணு.. நாளைக்கு நல்ல ரிசல்ட் சொல்றேன்” என்றவன் அவளின் கையில் போதை ஊசியை ஏற்றி விட்டு வெளியே சென்று விட்டான்.

அடுத்த நாள் காலையில் அவளுக்கு ஏற்றிய போதையின் வீரியம் குறைந்து இருக்க, சுய நினைவுக்கு வந்தவள் தன்னை சுத்தம் செய்துக் கொண்டு குளித்து முடித்து சிவப்பு நிற புடவையில் வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரவும், தயாகரன் உள்ளே வரவும் சரியாக இருக்க, அவன் மீது மோதி நின்றாள்.

“சாரி” என்று விட்டு அவள் போக, அவளின் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவன், அப்பொழுது தான் குளித்து முடித்து மிகவும் புத்துணர்வாக இருந்தவளின் இடையை இறுக்கிப் பிடித்து, தன் வலிமைக்கு அவளை வளைத்துப் பிடித்தவன் அவளின் இதழ்களை மென்மையிலும் மென்மையாக சிறை செய்தான்.

அதை கொஞ்சமும் எதிர்பாராமல் திகைத்துப் போனவள்,

“என்ன ஆச்சு? ஏன் இப்படி திடிர்னு” மிரள, அவளுக்கு பதில் சொல்லாமல் அவளின் உயிரை இதழ் வழியாக தனக்குள் உறிஞ்சிக் கொண்டான். அதில் அவளுக்கு முதுகில் மின்னல் வெட்டிப் போக, தவித்துப் போனாள்.

கைகளும் அவளின் மீது வரைமுறை இன்றி பயணம் போக, தன் கைக்கொண்டு அவனது கையை தடுக்கப் பார்க்க, அவளின் கையை எடுத்து தன் தலையின் பிடரியில் கொடுத்து விட்டு அவளின் உடலில் மெல்ல மெல்ல ஆத்துமீறி பயணம் செய்ய ஆரம்பித்தான்.

இதற்கு இதழ்களை அவன் விடுவிக்கவே இல்லாமல் போக, பெரிதும் தவித்து தடுமாறிப் போனாள்.

அவனது மொத்த பாரமும் அவள் மேல் போட்டு முத்தமிட, அவள் இன்னும் பின்னுக்கு வளைந்துக் கொண்டுப் போனாள்.

அவன் முத்தமிடும் வேகம் இன்னும் அதிகரித்துக் கொண்டு போக, பெரிதும் துவண்டுப் போனாள். அப்படியே அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன், அவளை நிதானமாக படுக்கையில் கொண்டு விட்டு, அவள் மீது பரவி படர,

“ஐயோ என்ன பண்றீங்க? முதல்ல விலகுங்க” பதறிப் போனாள். அதுவும் அவளின் முந்தனை மீது அவன் முரட்டு கரத்தை வைத்து விலக்கப் பார்க்க,

“வேணாம் ப்ளீஸ்” என்றாள்.

“நேற்றைக்கு நீ தானேடி கேட்ட.. இப்போ வேணான்னு சொல்ற? வா எனக்கு செம்மையா மூடு வந்திடுச்சு...” என்று சொன்னபடியே அவளின் கழுத்தில் முகம் புதைத்தான் அழுத்தமாக. அதில் அவளுக்கு திக்கென்று இருந்தது.

“இல்ல இப்போ வேணாம்.. நான் இந்த ஒரு பொழுது மட்டும் தான் என் குடும்பத்தோட இருக்கப் போற கடைசி பொழுது. இதை என்னால இல்லக்க முடியாது... ப்ளீஸ்..” என்றாள்.

அவளின் கழுத்தில் இருந்து நிமிர்ந்து அவளை பார்த்தவன்,

“என்னடி மாத்தி மாத்தி பேசுற?” எரிச்சல் ஆனான்.

“ப்ளீஸ்... நீங்க தானே சொன்னீங்க.. இன்னைக்கு மத்தியம் கிளம்பணும்னு.. அப்போ இந்த காலை பொழுது மட்டும் தானே மிச்சம் இருக்கு. சோ ப்ளீஸ்.. நான் அவங்கக்கூட இருக்கேனே” கெஞ்சலாய் கேட்டவளின் மீது இருந்து எழுந்துக் கொண்டவன்,

“சரி போ” என்றான்.

“தேங்க்ஸ்” சொல்லி விட்டு கீழே ஓடினாள். இந்த ஒரு நேரம் மட்டும் தான் அவளுக்கு என்று உரிய நேரம். அதை அவளின் குடும்பத்தோடு செலவழிக்க எண்ணினாள். இனி இவர்களை எல்லாம் பார்க்க கூட முடியுமோ முடியாதோ.. எண்ணுகையிலே விழிகளில் கண்ணீர் முட்டியது.

தன் கண்ணீரையும் கவலையையும் தனக்குள் போட்டு புதைத்துக் கொண்டு, முகத்தை சிரித்த மாதிரி வைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

வந்தவளின் விழிகளில் அப்படி ஒரு ஆச்சர்யம். பின்ன இருக்காதா... வீடே ஏதோ விழாக்கோலம் பூண்ட மாதிரி அல்லவா இருக்கிறது.. அதுவும் அவளின் குடும்பத்து பெண்கள் பட்டு புடவைகளிலும், நகைகளிலும் மின்ன திகைத்துப் போனாள்.

பொன்மாரியை சொல்லவே வேண்டாம்.. அவர் பட்டு புடவையிலும் நகைகளிலும் அம்சமாக இருந்தபடி வீட்டில் வேலை செய்யும் ஆட்களை ஏவிக் கொண்டு இருந்தார். மற்ற ஆண்களும் பட்டு வேட்டி சட்டையில் இருக்க, புருவம் சுறுக்கினாள்.

 

“என்ன நடக்குது இங்க?” என்று அவள் கேட்கும் முன்பே,

“நீ இன்னும் கிளம்பலையா தயாழினி?” பொன்மாரியின் கண்டனமான குரல் கேட்க,

“எதுக்கு அத்தை கிளம்ப சொல்றீங்க? எனக்கு ஒன்னும் தெரியலையே” பாவமாக கேட்டாள்.

பொன்மாரி வாயை திறக்கும் முன்பே, கீழே இறங்கி வந்த தயாகரன்,

“அவளுக்கு சர்ப்ரைஸ் மா.. அவக்கிட்ட எதுவும் சொல்லாதீங்க..” என்றவன், கையோடு அவளை அழைத்துக் கொண்டு மேலே தங்களின் அறைக்குச் சென்றான்.

“இங்க என்ன நடக்குது? எதுக்காக எல்லோரும் கிளம்பி இருக்காங்க.. நீங்க எதுக்காக என்னை கிளம்ப கூட்டிட்டு வர்றீங்க.. ஒண்ணுமே புரியல” என்று அவள் படபடக்க,

“எல்லாத்தையும் நிதானமா தெரிஞ்சுக்கலாம்.. முதல்ல இந்த சேலையை கட்டு” என்று அவளின் கையில் ஒரு பட்டுப் புடவையை குடுத்தான் தயாகரன்.

“என்னால கட்ட முடியாது.. முதல்ல என்ன நிகழ்ச்சின்னு சொல்லுங்க. நாம இங்க இருந்து போற நேரத்துல இதெல்லாம் தேவையா?” என்று கடுப்படிதாள்.

“கண்டிப்பா இது தேவை தான்..” என்றவன் “சீக்கிரம் கட்டு” என்றபடியே அவளின் முன்பு தன் உடைகளை கலைக்க, திகைத்துப் போய் “அய்ய” என்று வேகமாய் சுவர் புறம் திரும்பிக் கொண்டவள்,

“நீங்க உடை மாத்திக்கிட்டு வெளியே போங்க.. நான் கட்டிட்டு வர்றேன்” என்றாள்.

“ஒரு ஆணியும் தேவையில்லை... நான் இங்கயே இருக்கேன்.. நீ கட்டு” என்றவன் தன் உடைகளை மொத்தமும் கலைத்தவன் வேட்டியை மட்டும் எடுத்து உடுத்திக் கொண்டு அவளின் பின்னோடு வந்து நின்றான்.

அவனின் உடல் உராய்வில் திகைத்துப் போனவள்,

“என்ன பண்றீங்க?” கேட்கும் பொழுதே அவனின் கை அவளின் உடையை கலைப்பதில் மும்மரமாக,

“இல்ல நானே கழட்டிக்கிறேன்” வாய் தந்தி அடித்தது.

“டூ லேட்” என்றவன் அவள் மறுக்க மறுக்க அவளின் உடைகளை கலைக்கப் பார்க்க,

“ப்ளீஸ்” என்று கெஞ்சி, அவனிடம் இருந்து விலகி வந்தவள், வேறு வழியில்லாது அவன் கண் பார்க்கவே அவனுக்கு எதிரில் அந்த புது பட்டு புடவையை கட்ட ஆரம்பித்தாள்.

முடிந்த மட்டும் தன் உடல் எங்கும் காட்சி ஆகாமல் புடவையை விரித்து வைத்து தன் உடைகளை மாற்றிக் கொண்டவளின் நாணமும் வெட்கமும் தயாகரனை சுண்டி இழுத்தது.

அவளின் பின்னோடு வந்து நின்று அவளின் இடையை இறுக்கிப் பிடித்தவனின் அவளின் வெற்று முதுகில் முத்தம் வைத்து முகத்தை புரட்டி எடுக்க, வெளியே அறைக்கதவு தட்டும் ஓசை கேட்டது.

வேறு வழியில்லாது அவசர அவசரமாக கிளம்பி அவனுடன் கீழே வந்தவளுக்கு அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் தெரித்தது.

Loading spinner

This topic was modified 1 month ago by Admin
Quote
Topic starter Posted : August 16, 2025 7:28 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top