“லுக் மை ஐஸ்” என்று சீற்றத்துடன் கர்ஜித்தான். அவனது கர்ஜனையில் தூக்கிவாரிப் போட வெடவெடத்துப் போய் அவனை கண்களில் நீர் நிரம்ப பார்த்தாள்.
கண்ணீர் பார்வையை தடுக்க, சட்டென்று அதை துடைத்து விட்டு அவனை பார்த்தாள். அவனின் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்.
“என் கண்ணுல பொய் இருக்கா?” என்று கேட்டான். அவனின் குரல் ஆளுமையிலும் அவனின் கண் பார்வையிலும் கொஞ்சம் கூட பொய் என்பதே இல்லாமல் போக. தானாகவே தலையை ஆட்டினாள் இல்லை என்று.
“உங்க அண்ணனை காப்பாத்த தான் இந்த சீக்ரெட் ஆப்ரேஷன்” என்றவன், “உங்க அண்ணன் சிக்கி இருக்குறது இண்டர்னாஷ்னல் கிரிமினல் கிட்ட... அவன் யாரு எப்படி இருப்பன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா அவனை நானும் உன் அண்ணனும் ரொம்ப கிட்டக்க வச்சு பார்த்து இருக்கோம்.. வெளி ஆளுங்கல்ல அவனை பார்த்தது நாங்க மட்டும் தான். அவனை நெருங்குறது அவ்வளவு ஈசி கிடையாது. ஒன்னு பொம்பளை பிசினெஸ் பண்ணனும், இல்லையா கஞ்சா விற்கணும். அதுவும் பல வருசமா.. அவனுக்கு நம்ம மேல சந்தகம்னு வந்துட்டா ஒரு நொடி கூட யோசிக்க மாட்டான். போட்டு தள்ளிக்கிட்டு போயிட்டே இருப்பான். அவனை ஏமாத்தி அவன் கிட்ட போறது எல்லாம் நடக்காத காரியம். நான் வட்டி தொழில் பண்றதே என் மேல தவறான அபிப்ராயம் மக்கள் மத்தியில க்ரியேட் பண்ண தான்... அதை செஞ்சா அவன் கிட்ட என்னால ஈசியா நெருங்க முடியும். ஏன்னா ஒரு கிரிமினலுக்கு இன்னொரு கிரிமினல் தான் தோஸ்த்” என்றவன்,
“அது போல உன் அண்ணனுங்க என் கிட்ட கடன் வாங்குனது, அவனுங்க கல்யாணம் பண்ணது எல்லாமே ஒரு செட்டப் தான்... அப்போ தானே உன் குடும்பத்தை தொக்கா தூக்கி என் இடத்துல வைக்க முடியும். வெளிப்பார்வைக்கு உங்களை நரக கொடுமை பண்ற மாதிரி இருக்கும். ஆனா உங்களுக்கு முழுமையா நான் பாதுகாப்பு குடுத்த மாதிரியும் இருக்கும்...” என்றான்.
“அப்போ என் அண்ணன் நிலைமை?” வேதனையுடன் கேட்டவளை கூர்ந்துப் பார்த்தவன்,
“அதுவும் எங்க செட்டப் தான். அவனுங்க உன் அண்ணனை தூக்கல.. அவனா அங்க சிக்கி இருக்கான்..” என்றான்.
“ஹாங்” என்று அவள் விழிக்க,
“எங்க இருந்தாலும் எங்க இலக்கு எல்லாமே எங்க இரை மேல மட்டும் தான் இருக்கும்.. அவன் அங்க சிறையில இருந்தாலும் எனக்கு வரவேண்டிய தகவல் அவன் கிட்ட இருந்து வந்துக்கிட்டு தான் இருக்கும்..” என்றவனை வியந்துப் போய் பார்த்தாள்.
“உன் அண்ணனை காப்பாற்ற தான் இந்த ஆப்ரேஷன். இதுல உன் உதவியும் தேவைப்படுது.. உன் அண்ணன் குடும்பத்தை நிர்மூலமாக்க அந்த இண்டர்னஷ்னால் கிரிமினல் திட்டம் தீட்டிட்டு இருக்கான். ஆனா அதுக்கு முன்னாடி உன் குடும்பத்தை தீர்த்துக் கட்ட உள்ளூர்லயே ஆள் இருக்குறதா நான் செட் செஞ்சி இருக்கேன். அதாவது அவனது வேலையை சுமூகமாக்கி இருக்கிறான் இந்த வட்டிகாரன்.. இந்த வட்டிக்காரன் தான் உன் குடும்பத்தோட எதிரின்னு அவனுக்கு கண்கட்டு வித்தை காட்டி இருக்கிறேன்” என்றான் தயாகரன். அவன் சொல்ல சொல்ல தயாழினிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
ஆக தன் குடும்பம் மொத்தமும் அவனது நிழலில் மிக மிக பாதுகாப்பாக இருக்கிறது என்று புரிந்துப் போனது. ஆனால் தன் நிலை என்ன? என்ற கேள்வி அவளின் முன்பு பூதாகரமாக எழுந்து நிற்க, தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
மரம் மாதிரி அப்படியே நின்று இருந்தாள். தயாகரனின் மீது இப்பொழுது முன்பை விட ஒரு மரியாதை வந்து இருந்தது. அதோட தன் தமையன்கள் மீது அளப்பரிய நேசம் பிறந்தது. அதை வெளிப்படுத்த கூட இயலாமல் ஆளுக்கொரு இடத்தில் கண்காணாத தேசத்தில் அல்லவா இருக்கிறார்கள்.
அவளின் கலங்கிய நிலையை கண்டு, இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான் தயாழினியை.
அவனிடம் இருந்து விலக தோன்றவில்லை. ஏனெனில் அவளுக்கு இந்த நொடி இந்த நேரம் அந்த அணைப்பு மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது.
“என்னை அவன் கிட்ட விக்க போறீங்களா?” குரலில் அவ்வளவு நடுக்கம் ஏற்பட்டது அவளுக்கு.
உள்ளத்தில் ஒரு பக்கம் பெரிய நிலநடுக்கமே வந்தது.
“அண்ணி நாங்க எல்லோரும் இருக்கோம் தானே...” என்று தயாகரனின் தம்பிகள் சொன்ன பொழுதும் அவளுக்கு மனமே ஆறவில்லை.
“அப்படி எல்லாம் உன்னை விட்டுட மாட்டேன்டி.. என்னை நம்பு” என்றான் தயாகரன்.
தயாகரனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவனின் கண்களில் இருந்த தீவிரம் அவளுக்குள் நச்சென்று உள்ளுக்குள் இறங்கியது. கூடவே இறங்கிய நில நடுக்கத்தை அவளால் கொஞ்சமும் விரட்ட முடியாமல் போனது.
ஆனால் அந்த நில நடுக்கத்தை ஓரம் கட்டி வைத்து விட்டான் தன் செயலால் அவளின் கணவன். திகைத்து விழி விரித்து அவனை பார்க்க, தயாகரன் கண்களை மூடி அவளின் இதழ்களில் தோய்ந்துப் போனான்.
அண்ணன் அண்ணியை நெருங்கவுமே தமையன்கள் இருவரும் கீழே இறங்கி விட்டார்கள்.
தன் இதழ் முத்தங்களால் அவளை திணறடித்து மயங்க செய்தவன் அவளை கொஞ்சமே கொஞ்சம் திசை திருப்பப் பார்த்தான். ஆனால் தன் மயக்கத்தில் இருந்து சற்றே முழித்துக் கொண்டவள், அவனை விட்டு விலகிக் கொண்டாள்.
“மீதியையும் சொல்லி முடிங்க” என்றாள் இரு கரங்களையும் கட்டிக் கொண்டு.. அவளின் தெளிவை பார்த்த தயாகரன், “ஆர் யூ சுயர்?” அவளிடம் கேட்டுக்கொண்ட பிறகே மீதி அனைத்தையும் சொன்னான். அவன் என்ன செய்ய போகிறான் முதற்கொண்டு அவன் சொல்ல, திகிலுடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டவளுக்கு தலையில் உச்சி முடிகள் எல்லாம் நட்டுக் கொண்டது பயத்தில்.
அதுவும் தன்னை வைத்து அவன் செய்யப் போகிற அனைத்தையும் சொல்ல, மயக்கமே வந்து விடும் போல இருந்தது. ஆனாலும் வெளியே எந்த சலனமும் இல்லாமல் அனைத்தையும் கேட்டவள், “அவ்வளவு தானா இல்ல இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா?” என்று கேட்டாள். இயல்பு குணம் திரும்பியது போல.. அதுவும் தன்னை வைத்து இவ்வளவு பெரிய ஆப்ரேஷனை செய்ய நினைக்கிறானே என்று உள்ளுக்குள் அவ்வளவு கடுப்பு வந்தது அவளுக்கு.
தன்னை முறைத்துப் பார்த்தவளை பதிலுக்கு தானும் முறைத்துப் பார்த்தவன்,
“இப்போதைக்கு இது மட்டும் தான்... இனி ஏதாவது நடந்தா சொல்றேன்” என்றவன் கீழே இறங்கிப் போக, தயாழினியும் அவனின் பின்னோடு போனாள்.
கடுப்பை தாண்டியும் அவன் பார்க்க மாட்டான் என்பதில் உறுதியாகி விழிகளில் நில்லாமல் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது. தயாகரன் சொன்ன விசயம் எல்லாம் அவ்வளவு சாதாரணமில்லையே.. அவளால் மிக எளிதாக சீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
வெறும் கடன் பிரச்சனை என்று மட்டும் தான் எண்ணி இருந்தாள். ஆனால் குளி வெட்ட போன போது பூதம் கிளம்பிய கதையாகி போக போக என்னென்னவோ கிளம்புகிறது.. இதை எல்லாம் கனவில் கூட எண்ணி பார்த்து இருந்ததில்லை பெண்ணவள்.
நெஞ்சை கசக்கிப் பிடித்த உணர்வு.. இந்த உணர்வுகளில் இருந்து வெளியே வர முயன்றாள். ஆனால் அவளால் அது முடியவே இல்லை. தயாகரன் சொன்ன விசயங்கள் எல்லாம் கணீரென்று இன்னும் அவளது காதில் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது.
அவன் சொன்னது ஒன்றும் மிகச்சாதாரன விசயம் இல்லையே... ஒவ்வொரு சொல்லும் அவளுள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.
இதெல்லாம் வெறும் கனவாக இருக்க கூடாதா என்று குமுறிப் போனாள். யாரிடமும் சொல்ல தான் முடியுமா? சொல்லாக்கூடாது என்று கட்டளை வேறு போட்டு இருக்கிறானே அவளது கணவன்.
கீழே வந்த பிறகு போதை மருந்தை கையில் வைத்துக் கொண்டு எந்த சலனமும் இல்லாமல் நின்றவனை பார்க்கையில் நெஞ்சை கவ்விப் பிடித்தது துக்கம்.
ஆனாலும் அவனிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தாள். அதை கேட்டவன் ஒரு கணம் செயல் இழந்து நின்றான்.
“எப்படியும் நான் சீரழியப்போறது உண்மை. ஆனா அதுக்கு முன்னாடி அந்த நிகழ்வு உங்களோட இருந்தா நான் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவேன்” என்றாள் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்த வேதனையை உள் இழுத்துக் கொண்டு.
ஆனால் அவளின் கோரிக்கையை கேட்டு இவன் தான் தடுமாறினான்.
“நீ அவசரப்படாத.. எப்படியும் உனக்கு எந்த சேதாரமும் இல்லாமல் நான் காப்பத்தி விடுவேன். உன் மேல வேற யாரும் கை வைக்க நான் விட மாட்டேன்டி. உன்னோட அனைத்தும் என்னை சேர்ந்தது” என்றான் உறுதியான குரலில்.
“ஆனா அதுக்கு நூறு சதவீதம் உத்திரவாதம் உங்களால குடுக்க முடியுமா?” வேதனையுடன் கேட்டவளுக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
“தாலி கட்டியதால உங்களை இதை செய்ய சொல்லல.. என்னை நீங்க உங்க பொண்டாட்டியா பார்க்க வேண்டாம்.. ஒரு பெண்ணா அவளோட உணர்வுகளுக்கு மரியாதை குடுப்பிங்கன்ற எண்ணத்துனால தான் இந்த கோரிக்கையை கேட்கிறேன். ப்ளீஸ்.. என்னை மொத்தமா எவனுங்களோ சிதைக்கிறதுக்கு முன்னாடி...” என்று மேலே சொல்ல முடியாமல் அவள் தடுமாற, வேகமாய் அவளை இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் அந்த கரடு முரடு காட்டான்.
அதை கேட்பதற்குள் அவள் எவ்வளவு வேதனை பட்டு உள்ளம் நொந்து போய் இருப்பாள் என்று உணர்ந்துக் கொண்டவன், அவளின் இதழ்களை ஆவேசமாக கவ்விக் கொண்டான். அவள் கேட்டதை கொடுக்க அத்தனை வேகம் பிறந்தது. அவளின் மென்மையான இதழ்களை கசக்கி எடுத்து தன் இதழ்களுக்குள் புதைத்துக் கொண்டவனுக்கு அவள் வேதனைகளை மொத்தமாக எடுத்து தூக்கி தூர எறிய அவ்வளவு வேகம் பிறந்தது.
ஆனால் அதை தாண்டி அவளை இப்படி ஒரு சூழலில் எடுத்துக் கொள்ள மனம் தடுத்தது. அவளிடம் அத்துமீறி இருக்கிறான் தான். அவளை முழுமையாக பார்த்து இருக்கிறான் தான். ஆனால் அவள் கேட்ட கோரிக்கை என்பது அவ்வளவு எளிது இல்லையே.. அவனை தாண்டி அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறதே. அவனோட அவாள் வாழ்க்கை பிணைந்து இருந்தால் ஒருவேளை அவள் கேட்டதை செய்து இருப்பானோ என்னவோ..
ஆனால் அவன் தான் அவளுக்கு வேறு ஒரு பாதையை கை காண்பிக்கிறானே.. தாலியை கழட்டி குடு என்று கேட்ட பிறகு அவளை அவன் எப்படி எடுத்துக் கொள்வதாம்..
பொன்மாரியின் வளர்ப்பு அவனை மிகவும் தேக்கியது அந்த இடத்தில். அதனால் அவளை அந்த நிமிடம் தேற்ற மட்டுமே அவளை முத்தமிட்டான். கட்டி அணைத்தான். ஆனால் அதை தாண்டி அவள் கேட்டதை அவனால் செய்ய முடியவில்லை. இப்பொழுது என்று இல்லை எப்பொழுதுமே அவனால் செய்ய முடியாது.
“வெரி சாரிடி உன் கோரிக்கையை என்னால ஏற்றுக் முடியல.. என் மேல முழு நம்பிக்கை வை. உன்னை யாரோட நிழலும் படாம நான் காப்பாத்துவேன்” என்றான்.
“நான் சொல்றது உங்களுக்கு புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா? சத்தியமா நீங்க என்னை தொட்டா, அதை வச்சு உங்கக்கிட்ட வாழ்க்கையை பிச்சையா கேட்டு நிற்க மாட்டேன். ப்ளாக் மெயில் எல்லாம் பண்ண மாட்டேன். இது என்னோட உணர்வு.. ஒருன் பெண்ணா உங்கக்கிட்ட கெஞ்சி கேட்கிற ஒரு விசயம்” என்றாள் வேதனையுடன்.
“ச்சீ இதுக்காக போய் இவன் கிட்ட இப்படி மானம் கெட்டு போய் கெஞ்சிக்கிட்டு இருக்கோமே” என்று அவள் பெரிதும் உள்ளுக்குள் தன்னை தானே அறுவெறுத்துப் போனாள்.
அது அவளின் முகத்திலும் நன்கு தெரிந்தது. அதை உணர்ந்தவனுக்கு எந்த காரணம் கொண்டும் அவளை தான் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வைராக்கியமாக இருந்தான். ஆனால் அவனது வைராக்கியமும் உடையும் தருணம் வெகு விரைவில் வந்து சேர்ந்தது.
தொடரும்..