எப்பொழுதுமே போதையிலே இருந்தாள் தயாழினி. அவளை அப்படி பார்க்கையில் குணாவுக்கும் பிரபாவுக்கும் மனம் கனத்துப் போனது.
“அண்ணா அண்ணி இல்லாம இந்த ஆப்ரேஷனை செய்ய முடியாதா?” ஆதங்கத்துடன் கேட்டவர்களை பெருமூச்சு விட்டுப் பார்த்தவன் முடியாது என்று தலையை அசைத்தான்.
“அண்ணி பாவம் அண்ணா.. ஒரு மணி நேரம் கூட போதை இல்லாம அவங்களை பார்க்க முடியல.. இதுக்கு எல்லாம் சீக்கிரமா ஒரு முடிவு கட்டுங்க” என்றார்கள்.
“நானும் அதுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், வெளியே வாயை திறக்கவில்லை.
மலரும் சந்தானமும் பெரிய மகளை காண முடியாமல் மாடிக்கு ஏறி வர, அவர்களை கீழேயே தடுத்து நிறுத்தி விட்டார்கள் அண்ணனும் தம்பியும்.
“இல்ல தம்பி ரெண்டு நாளா பெரியவ கீழே இறங்கி வரவே இல்ல. அது தான். சாப்பாடு எல்லாம் மாப்பிளையே எடுத்துட்டு போறாரு. அவளுக்கு என்ன ஆச்சோன்னு மனசு பதறுது” என்றவர்களின் அன்பு புரிந்த பொழுதும், மகளை இப்படி போதையின் பிடியில் வைத்து இருப்பது மட்டும் தெரிந்துப் போனால் இவர்களின் துக்கம் இன்னும் அதிகமாகும். அதை விட அண்ணனை பற்றி தவறாக நினைக்கக் கூடும். எனவே அவர்களை மேலே செல்ல விடாமல்,
“அண்ணன் மாடி அறைக்கு யாரையும் அனுமதிக்க மாட்டாரு. யார் வர்றதையும் அவர் விரும்பவும் மாட்டாரு.. கொஞ்சம் பொறுங்க. அண்ணியே உங்கக்கிட்ட பேசுவாங்க” என்று அவர்களை போக சொல்லிவர்கள் பெருமூச்சு விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“எங்க அக்காவ என்னடா பண்ணீங்க.. ஏன் அக்கா கீழே இறங்கிவரல.. உண்மையை சொல்லுங்க. அன்னைக்கு எங்களுக்கு போதை மருந்து எல்லாம் குடுத்து” என்று நடுக் கூடத்தில் இருந்து கத்திக் கொண்டு இருந்த பிறையை அலேக்காக தூக்கிக் கொண்டு மறைவான இடத்துக்கு போனவன்,
“எதுக்குடி இப்படி கத்துற? உனக்கு மட்டும் தான் சத்தம் போட்டு பேச தெரியுமா? நான் சத்தம் வர மாதிரி அடி பின்னவா?” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,
“உண்மையை சொல்லு. ஏன் அக்கா ரெண்டு நாளா கீழவே வரல. அவளுக்கு என்ன ஆச்சு? அவளை என்ன பண்ணீங்க?” கண்களில் நீர் தளும்ப கேட்டவளை கண்டு வாயை இறுக்கமாக மூடிக் கொண்டான் பிரபா.
இந்த பக்கம் குறிஞ்சியோ “எதுவா இருந்தாலும் எங்க அக்காவை விட்டுட்டுங்க... எனக்கு உங்க அண்ணனை பத்தி நல்லாவே தெரியும். இங்க இருந்த நாட்களில் எங்க அக்காவை எப்படி எல்லாம் கொடுமை படுத்தி இருக்காருன்னு நான் கண்கூடா பார்த்து இருக்கேன். அக்கா கழுத்துல ஒரு தாலியை கட்டிட்டா மட்டும் மாமா நல்லவரா மாறிட்டாருன்னு நான் நம்ப மாட்டேன்” என்றவளின் அறிவு கூர்மையில் பெருமூச்சு விட்ட குணா,
“நீயா எதையும் கற்பனை பண்ணிக்காதடி.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல” என்றான் அமைதியாக.
அவனது அமைதியில் உள்ளம் சுருக்கென்று குத்த,
“இல்ல நீங்க பொய் சொல்றீங்க. இல்லன்னா நான் இவ்வளவு நேரம் பேசுனதுக்கு கண்டிப்பா என் கன்னம் பழுத்து இருக்கும். நீங்க இப்படி அம அமைதியா பேசுறதே எனக்கு பயத்தை கொடுக்குது.. ப்ளீஸ் உண்மையை சொல்லுங்க.. எங்க அக்காவுக்கு என்ன ஆச்சு? ஏன் எங்களுக்கு அன்னைக்கு போதை மருந்து குடுத்தீங்க. அது மாதிரி இப்போ அவளுக்கும் போதை மருந்து குடுத்து இருக்கீங்களா? இல்ல ஆளையே காலி பண்ணிட்டீங்களா?” அவனின் சட்டையை பிடித்து உலுக்கியவளுக்கு விழிகளில் கண்ணீர் பெருகியது.
அவளின் கேள்வியில் கோவம் வந்தது என்றாலும்,
“இன்னும் கொல்ற அளவுக்கு போகல” என்றான்.
அழுத விழிகளுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு அவன் சொல்லிய சொற்களில் இன்னும் கண்ணீர் சுரந்தது.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? அவ ரொம்ப வருடங்களுக்கு நல்லா இருக்கணும். தயவு செஞ்சி என்னை அக்காவை பார்க்க விடுங்க. ஒரே ஒரு முறை அவ நல்லா இருக்கிறதை பார்த்துட்டா மறுபடியும் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்.. ப்ளீஸ்.. ஒரே ஒரு முறை மட்டும் பெர்மிஷன் குடுங்க” என்று கெஞ்சியவளை மனம் கனத்துப் போய் பார்த்தவன்,
“என் கையில எதுவும் இல்ல. அண்ணன் கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு சொல்றேன்” என்றவன் அவளின் கையில் இருந்த சட்டையை விடுவித்துக் கொண்டு தயாகரனை பார்க்க சென்றான். பிரபாகரனும் அதே விண்ணப்பத்துடன் வந்து இருந்தான்.
“அண்ணா அண்ணியை பார்க்கணும்னு அண்ணியோட குடும்பம் மொத்தமும் துடிச்சுக்கிட்டு இருக்காங்க.. அவங்களை பார்க்கலன்னா நிச்சயம் கலவரம் நடக்கும்.. ஏற்கனவே என் சட்டையை பிச்சி எடுத்தாச்சு.. கூடவே தம்பியோட கொத்து தலைமுடியும் பிச்சு எடுத்தாச்சு” என்றான் குணா.
“ஆமாண்ணா பொன்மாரி தான் கொஞ்சமும் கவலை படாமல் சுத்திட்டு இருக்கு. அதுக்கு மட்டும் கொஞ்சம் விசயம் கசிஞ்சாலும் நம்ம தலையை ஆஞ்சிபுடும்” என்றான் பிரபா.
இருவரின் கோரிக்கையையும் கேட்டவன் எதுவும் சொல்லாமல் அவனின் அறைக்குள் நுழைந்தான்.
“அண்ணியை இந்த ஆப்ரேஷன்ல இழுத்து விட இவருக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்ல போல பிரபா.. ஆனா அண்ணியை வைத்து தான் மூவ் பண்ணியாகணும்ன்ற நிலைமை.. நாள் நெருங்க நெருங்க அண்ணன் முகமே சரியில்லாமல் போயிட்டு இருக்கு..”
“ஆமாண்ணா ஆனா வேற வழியில்லாம பெரிய அண்ணன் இதை செய்யிறாரு. பாவம் உள்ளுக்குள்ளையே போராடிக்கிட்டு இருக்காரு” இருவரும் பேசிக் கொண்டார்கள்.
தன் அறையின் உள்ளே நுழைந்த தயாகரன் அங்கே முழு போதையில் தள்ளாடிக் கொண்டு இருந்தவளின் அருகில் போய் அமர்ந்தான். அந்த போதையிலும் அவனின் முகத்தில் கவிழ்ந்து இருந்த அமைதியை உணர்ந்தவள்,
விழிகளை நன்றாக மூடி திறந்து, தலையை ஒரு உலுக்கு உலுக்கி, “எ...ன்ன ஆ...ச்சு? என்ன...வோ மாதி...ரி இருக்...கீங்க? இல்ல...ன்னா நீ..ங்க இவ்..வளவு அமை...தியா இரு...க்க மாட்...டீங்...களே” வாய் குழறியது தயாழினி.
அவளை நிமிர்ந்துப் பார்த்தான். அவனது பார்வையில் இருந்த உணர்வுகளை அவளால் அவதானிக்க முடியவில்லை. ஆந்த அளவுக்கு போதை எக்கசக்கமாக இருந்தது.
ஒன்றுமே பேசாமல் அவளின் மடியில் தலையை வைத்து படுத்து விட்டான். எப்படியும் அவளின் போதை தெளிய நேரம் எடுக்கும். எனவே மிக அமைதியாக படுத்து விட்டான்.
தன் மடியில் படுத்து இருந்தவனை பிடித்து கீழே தள்ளி விட முயன்றாள். ஆனால் அவள் உட்கொண்டு இருந்த போதை அவளை வலுவிழக்க செய்து இருக்க அவனது பெரிய உருவத்தை அவளால் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை.
“அரக்கனா நீ.. இந்தா கணம் கனக்குற... கால் வலிக்கிதுடா எருமை எழுந்திரி” போதையிலே திக்கி திணறி தள்ளாடி அவனை திட்டிக் கொண்டு இருந்தாள்.
ஆனால் தயாகரன் எதையும் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. அவளின் மடியில் படுத்து அவளின் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டான். அவளின் வாசத்தை சுவாசித்தவனுக்கு தன் எண்ணங்களை நிலை நிறுத்திக் கொள்ள போராடினான்.
தன் பலவீனம் எது என்பதை அந்த கணம் நன்கு உணர்ந்துக் கொண்டான் தயாகரன். அவளை விட்டு கொஞ்சமும் அவன் நீங்கவில்லை.
அவளின் இடையை இரு கையாளும் இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவளின் வயிற்றில் மீசை முடி உரச புதைந்துக் கொண்டான். அவனை விலக்கப் போராடியவளுக்கு வலு இல்லாமல் போக, அவனின் தலை மீது தன் தலையை வைத்து கவிழ்ந்துக் கொண்டாள்.
அப்படியே தூங்கிப் போனார்கள் இருவரும். மாலை நேரம் வரை அப்படியே தூங்கினார்கள். தூக்கத்திலே இருந்தவர்களுக்கு வசதி படாமல் போக, விழிகளை திறக்காமலே அவளை நகர்த்தி தரையிலே படுக்க வைத்தவன், அவள் மீது தாவி படர்ந்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
இரவும் கவிழ்ந்தது. மெல்ல விழிகளை மலர்த்தினாள் தயாழினி. போதை முற்றிலும் இறங்கி இருந்தது. ஆனால் அவள் மீது ஏதோ கனமாக இருக்க, கீழே குனிந்து பார்த்தாள். அவளின் மீது மிக சொகுசாக தூங்கிக் கொண்டு இருந்தான் தயாகரன்.
அவனை பிரட்டி போட்டுட்டு குளியல் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வேறு புடவைக்கு மாறிய நேரம் விழிகளை திறந்தான் தயாகரன்.
“தெளிவா இருக்கியா?” என்று கேட்டான். அவள் தலைக்கு குளித்து இருந்ததை பார்த்து. ஆமாம் என்று தலையை அசைத்தாள்.
“அப்போ ஓகே.. கீழ ஒரு விசிட் போயிட்டு வந்துடலாம். ரெண்டு நாளா நீ கீழ போகாததுனால உன்னை ரொம்ப தேட்டிட்டாங்க உன் குடும்பம். அதோட எனக்கு இல்லாத பொல்லாத பெயர் வேற..” என்றவன் பிரெஷ் ஆகிட்டு வர, அவளோடு சேர்ந்து கீழே இறங்கினான்.
கூடத்தில் அமர்ந்து பூவை கட்டிக் கொண்டு இருந்த மலர் தன் பெரிய மகளை கண்டவுடன் “தயாழினி..” என்று வேகமாய் ஓடி வந்தார்.
அவரின் சத்தத்தை கேட்டு அவளின் அப்பாவும், தங்கைகளும் அவளிடம் ஓடி வந்தார்கள். இரு தங்கைகளும் அவளை கட்டிக் கொண்டார்கள். அனைவரின் கண்களும் கலங்கி இருந்தது.
பொன்மாரி யோசனையாக தன் பெரிய மகனை பார்த்தார். அனால் விவரமாக அவரின் பார்வையை கண்டு கொள்ளாமல்,
“நாங்க ஹனிமூன் போறோம்” என்றான் அறிவிப்பாய்.
“இது எப்ப?” என்று தயாழினி அதிர்ந்துப் போனாள்.
“என்னக்கா சொல்லவே இல்ல?” என்று தங்கைகளும்,
“என்ன தயாழினி திடுதிப்புன்னு சொல்றாரு மாப்பிள்ளை?” பெற்றவர்களும் கேட்க,
“எனக்கே இதை பத்தி ஒன்னும் தெரியாது.. பிறகு எப்படி உங்களுக்கு நான் சொல்ல” மனதுக்குள் எண்ணிக் கொண்டவள்,
“இப்ப தான் பேசி முடிவு பண்ணோம்மா.. அது கொஞ்சம் ப்ரைவசி வேணும்னு எதிர் பார்க்கிறாரு போல” என்று மேலோட்டமாக சொன்னாள். அதோடு இரண்டு நாள் கீழே இறங்காததற்கு காரணம் வேறு எதை காட்ட.. அதனால் இவளும் கணவனோடு ஒத்துப் பாடினாள்.
“அக்கா நீ மகிழ்ச்சியா தானே இருக்க?” குறிஞ்சி அவளின் முகத்தை கூர்ந்துப் பார்த்து கேட்க, உள்ளுக்குள் பதறிப் போனாள். அதுவும் அவளின் சிவந்து இருந்த கண்களை பார்த்து,
“ஏன் அக்கா உன் கண்ணு இவ்வளவு சிவந்துப் போய் இருக்கு?” சின்னவள் கேள்வி கேட்க, திணறிப் போனாள் தயாழினி என்ன பதில் சொல்வது என்று தெரியாது.
சாரி தோழமைகளே...
கொஞ்சம் உடம்பு சரியில்ல அதனால தான் கதை போட முடியல.
Take care of your health sis, get well soon sis