Notifications
Clear all

அத்தியாயம் 32

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

அவளின் இதழ்களின் சுவையில் இருந்து தன்னை நீக்கிக் கொள்ள முடியாமல் அவளுடன் தயாகரன் ஒன்றிக் கொண்டான். தன்னுடன் ஒட்டிக் கொண்டு இருப்பவனை அவளாலும் விலக்க முடியவில்லை.

ஏன் அவன் மீது இப்படி ஒரு மயக்கம் வந்தது என்று அவளுக்கு இப்பொழுது வரையிலுமே தெரியவில்லை. ஆனால் அவனை விட்டு அவளால் இருக்க முடியவில்லை.

ஒருவரை விட்டு ஒருவர் நீங்க முடியாமல் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டது போல சிக்கிக் கொண்டார்கள் ஒருவரில் ஒருவர்.

இடைவிடாத முத்தங்கள் அவர்களை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்சென்ற பொழுதும் தயாகரன் எல்லை மீறவில்லை. எல்லை மீறாமல் அவளிடம் என்னென்ன செய்துக் கொள்ள முடியுமோ அதெல்லாம் செய்துக் கொள்ள, அவனை அவள் கிஞ்சித்தும் மறுக்கவில்லை.

முழுமையாக அவனை தனக்குள் ஆதரித்தாள். விழிகளில் உணர்வுகளின் வீரியத்தில் கண்ணீர் வழிந்தது. அவளின் விழி நீரை தன் இதழ் கொண்டு துடைத்து விட்டவன் அவளின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டான்.

இடைஞ்சலாக இருந்த அவளின் மாராப்பையும் எடுத்து கீழே போட்டு விட்டு அவளின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டான். சிறு குழந்தையாய் அவனை ஆதரித்துக் கொண்டாள் தயாழினி.

இரவு பொழுதும் அவளுக்கு போதை மருந்தை கொடுத்தான். எந்த சலனமும் இல்லாமல் அவனிடம் கையை நீட்டினாள்.

இப்படியே தொடர்ந்து நாட்கள் நகர, பிறைநிலா கொஞ்ச நாளாக தன்னை வம்பிழுக்காமல் சென்ற பிரபாகரனை ஏளனமாக பார்த்து வைத்தாள். பார்த்து வைத்ததோடு அல்லாமல் நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் அவனை பேசவும் செய்தாள்.

அன்றைக்கு பொன்மாரியும் மலரும் ஏதோ வேலையாக வெளியே இருந்த தோட்டத்தில் இருக்க, இங்கே வீட்டின் நடு கூடத்தில் தன்னுடைய லேப்டாப்பில் பணி புரிந்துக் கொண்டு இருந்தான் பிரபா.

கூடவே கொறிக்க குடிக்க என பிறையை கொண்டு போய் குடுக்க சொல்லி விட்டு தான் பொன்மாரி வெளியே சென்றார். அதை கையில் எடுத்துக் கொண்டு வந்தவள்,

“இவனுங்களுக்கு எல்லாம் எப்படி தான் திங்கிற சோறு உள்ள இறங்குதோ தெரியல குறிஞ்சி. சில ஜென்மங்கள் எல்லாம் இந்த மண்ணுக்கு பாராம இருக்குதுங்க.. உலகத்துக்கு நல்லது செய்யிறவங்கல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு போயிடுறாங்க.. ஆனா இது மாதிரி அக்கிரமம் பண்றவங்களுக்கு எல்லாம் ஒரு கேடும் வர மாட்டிக்கிது.. இங்க இருக்கிறவங்க உயிரை துச்சமா இவனுங்க எடுத்துக்கிட்டு இருக்காணுங்க.. என்னைக்கு மரண அடி வாங்கப் போறாங்களோ.. ஆனா கண்டிப்பா வாங்குவானுங்க.. அதை நான் பார்க்காம போக மாட்டேன்” என்று குறிஞ்சியிடம் பிரபாகரனை சாடையாக திட்டியபடியே கொண்டு வந்து அவனுக்கு அருகில் இருந்த மேசை மீது நங்கென்று வைத்தாள்.

நிமிர்ந்து அவளை பார்த்து முறைத்தவன் எதுவும் பேசாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

“ஏன் குறிஞ்சி இப்படி முறைச்சுப் பார்த்தா நான் பயன்துடுவனா? இந்த மாதிரி சுண்டக்கா பயலுங்க எல்லாம் என்னை செஞ்சிட முடியும்” என்று மேலும் அவனை ஏளனமாக பேசினாள்.

குறிஞ்சி வெளியே எட்டிப் பார்த்து “பிறை வாயை மூடு” என்றாள் அதட்டலாக.

“அக்கா நீ சும்மா இரு.. நாம படுற கஷ்ட்டம் நமக்கு தானே தெரியும்.. சில ஜென்மங்களுக்கு எங்க அதெல்லாம் உறைக்கிது.. மத்தவங்களை சீண்டி விட்டு துன்பப்படுத்தி கொடுமை பண்ற ஜென்மங்களை இப்படியாவது பேசி மனசை ஆத்திக்கிறேன்..” என்றாள் பிறை.

“வாங்கி கட்டாம உள்ளே வா பிறை” என்று அக்கா அதட்ட,

“ஏன் என்னை அடக்க பார்க்கிற குறிஞ்சி.. என் கனவு எல்லாத்தையும் கலைச்சவனை சும்மா விட சொல்றியா? எனக்கு எவ்வளவு ஆசை இருந்தது தெரியுமா? ஆனா அத்தனையும் இவனால மண்ணோட மண்ணா போயிடுச்சு..” என்றவளின் வேதனையை புரிந்துக் கொண்ட குறிஞ்சி,

“அதுக்காக நீ இப்படி பேசுனா எல்லாம் சரியா போயிடுமா பிறை. உள்ள வா...” என்று அவளை கூப்பிட,

“நீ சும்மா இரு குறிஞ்சி. ஆனா என்னால சும்மா இருக்க முடியல... என் நெஞ்செல்லாம் எப்படி தெரியுமா எரியுது?  ஆனா இவனுங்க ரொம்ப சுகமா இருக்கானுங்க” என்றவளின் பேச்சில் பிரபாவுக்கு இருக்க இருக்க எரிச்சலும் கோவமும் அதிகமாக வந்துக் கொண்டே இருந்தது.

பிறையை அடக்க முடியாது தலையை இரு பக்கமும் ஆட்டிட்டு “இவளை எல்லாம் திருத்தவே முடியாது. வாங்கி கட்டுனா தான் இவ சுத்தப்படுவா.. நாம அடுப்பை கவனிப்போம்” என்று சமையல் அறைக்குள் தலையை விட்டுக் கொண்டாள் குறிஞ்சி.

அக்கம் பக்கம் பார்த்து விட்டு பிறை இன்னும் அவனை மோசமாக பேச, அவளை அலேக்காக தூக்கிக் கொண்டு மறைவான இடத்துக்கு கொண்டு சென்றவன், கோவத்திலும் கோவமாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.

“ஓரளவு தான்டி பொறுத்துப் போவேன்.. ஓயாம என்னை வம்பிழுத்துக்கிட்டு இருந்த இதை விட மோசமான விளைவை பார்ப்ப” என்று எச்சரித்தான் பிரபா.

ஈரமான இதழ்களை துடைத்துக் கொண்டவள்,

“இப்படி தான்டா உங்க வீரத்தை எல்லாம் பொம்பளைங்க கிட்ட காட்டுவீங்க.. இதை தவிர என்ன செஞ்சிட போறீங்க.. எவ்வளவு ஆசையோட இருந்தேன் தெரியுமா? இன்னும் ரெண்டு வருடம் இந்த ஊர்ல வேலை செஞ்சி அதுல வர்ற வருமானத்தை வச்சு அடுத்த வருடம் ஜப்பான்ல மேற்படிப்பு படிக்க நினைச்சேன். ஆனா மொத்தமா என் கனவை சிதைச்ச உன்னை சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்கதடா.. என்னைக்கா இருந்தாலும் உன் சாவு என் கையில தான்டா” என்றாள்.

“நீ என்னடி என்னை சாகடிக்கிறது. நான் இப்போ இந்த நிமிடமே உன்னை சாகடிக்கிறேன்” என்று அவளின் கழுத்தை பிடித்து சுவரில் தூக்கி நிறுத்தினான்.

அவனும் எவ்வளவு தான் பொறுத்துப் போவது. அந்த பக்கம் இந்த பக்கம் போகும் பொழுதும் வரும் பொழுதும் சாடை மாடையாக அவனை திட்டிக் கொண்டே இருந்தாள் பிறை.

அவளை அப்படியே தூக்கி சுவரில் நிறுத்தி விட்டான். பிறைக்கு தான் உயிர் போய்விட்டாது.

“விடுடா பொறுக்கி.. விடுடா” என்று கால்கள் துள்ள துடிக்க அவனிடம் மல்லுக்கு நின்றாள்.

“இப்ப கூட உன் திமிர் அடங்குதா பாருடி” பல்லைக் கடித்தான்.

“உன் உழைப்புல திண்ணனா திமிர் அடங்க... என் அப்பா அம்மா உழைப்புல சாப்பிட்ட திமிர்டா. என்னைக்கும் அடங்காது” தொண்டை வலித்தாலும் சலிக்காமல் அவள் வாயாட,

உன்னை எல்லாம் தூக்கி வீசுனா தான் வழிக்கு வருவடி” என்று அவளை தூக்கி எறியப்போக,

“இங்க என்ன நடக்குது?” தயாகரனின் குரல் கேட்க, வேகமாய் அவளிடம் இருந்து தன் கரங்களை எடுத்துக் கொண்டான் பிரபா.

“மாமா இவன் சுத்த மோசம்.. எப்போ பாரு என் கிட்ட முரட்டு தனமாகவே நடந்துக்குறான்.. சுவத்துல தூக்கி நிறுத்தி என் தொண்டையை புண்ணாக்கி வச்சு இருக்கான். இன்னும் கொஞ்ச நேரம் நீங்க வாரலன்னா என்னை இந்த சுவத்துல தூக்கிப் போட்டு மண்டையை உடைக்க வச்சு இருப்பான்” சரமாரியாக அவன் மீது புகார் வாசித்தவள்,

“அவரை கொஞ்சம் அடங்கி இருக்க சொல்லுங்க மாமா.. என் வழிக்கு வர வேணாம்னு சொல்லுங்க.. இல்லன்னா இவரை நான் சும்மா விட மாட்டேன்” என்று அவள் சொல்ல,

“ண்ணா அவளை வாயை மூடிட்டு சும்மா இருக்க சொல்லுங்க. இல்லன்னா கண்டம் பண்ணிடுவேன் வர்ற ஆத்திரத்துக்கு” என்று அவளை பார்த்துக் கொண்டே சொன்னவன் அண்ணன் முறைக்கவும் விருட்டென்று அவ்விடத்தை விட்டு சென்றான்.

“ம்ம் நீ கண்டம் பண்ற வரைக்கும் நான் சும்மா இருப்பேன் பாரு” என்று திட்டியவள் ஒரு பக்கத்துக்குப் போக, தயாகரன் இருவரையும் முறைத்துப் பார்த்து விட்டு,

“இதுங்க ரெண்டையும் அடக்கி வைக்கணும். இல்லன்னா இதுங்க வேற எதையாவது இழுத்து விட்டுடுங்க” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் அவ்விடத்தை விட்டு சென்றான். குணாவை தனியாக இவர்கள் இருவரையும் கண் காணிக்க சொன்னான்.  

“ஏன் அண்ணா?”

“ரெண்டும் பையரா இருந்தா சீக்கிரம் பத்திக்கும்டா. அது தான்” என்று சொன்னான்.

புரிந்துக் கொண்டவனாய் தலையை ஆட்டினான் குணா.

“நீயும் கொஞ்சம் கவனமா இரு குறிஞ்சிக்கிட்ட” என்றான் போகிற போக்கில்.

தலையை குனிந்துக் கொண்டான் அவன். கள்ளத்தனம் எதுவும் இருக்குமோ என்னவோ...

Loading spinner

Quote
Topic starter Posted : August 8, 2025 3:55 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top