Notifications
Clear all

மின்சாரம் 31

 
Admin
(@ramya-devi)
Member Admin

தயாகரன் முதன் முதலாக தன்னை பற்றி கூற ஆரம்பித்த சொற்கள் இன்னும் தயாழினியின் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவளால் அவ்வளவு எளிதாக அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஏதேதோ வேலை செய்தாலும் எண்ணம் யாவும் அதிலே தான் உழன்றுக் கொண்டு இருந்தது.

“என்னக்கா ஒரு மாதிரி இருக்க? உடம்பு எதுவும் சரியில்லையா?” குறிஞ்சி அவளின் கன்னத்தை தொட்டுப் பார்க்க,

“அதெல்லாம் நல்லா தான் இருக்கேன். உடம்பு கொஞ்சம் டையர்டா இருக்கு.. மத்தபடி வேற ஒன்னும் இல்ல குறிஞ்சி” என்றவளின் கைகள் கீரையை ஆய்ந்துக் கொண்டு இருந்தது.

“நாங்க வேலை பார்த்துக்குறோம்.. நீ வேணா ரெஸ்ட் எடுத்துக்கோக்கா” பிறை சொல்ல,

“இல்ல அந்த அளவுக்கு ஒன்னும் இல்ல.. அங்க தனியா இருக்கிறதை விட உங்க கூட இருந்தா பெட்டரா பீல் ஆகும்டி” என்று கீரையை சுரத்தையே இல்லாமல் ஆய்ந்துக் கொண்டு இருந்தாள்.

“நாங்க ஊருக்கு போகலாம்னு இருக்கோம்” என்று பொன்மாரி கூடத்தில் இருந்த பெரிய மகனிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

“ஏதே ஊருக்கா?” என்று விழி பிடிதுங்கிப் போனாள் தயாழினி. எதோ அவர் இருக்க போய் இவனுங்க மூணு பேரும் என் குடும்பத்தை ஒன்னும் செய்யாம இருக்காங்க. இவர் மட்டும் இல்லன்னா என் குடும்பத்தின் கதி.. நினைச்சுப் பார்க்கவே மனம் பதறிப்போனது.

கையில் இருந்த கீரையை அப்படியே போட்டு விட்டு கூடத்துக்கு ஓடி வந்தாள்.

“இப்ப ஊருக்கு என்ன அத்தை அவசரம். எங்களோட கொஞ்ச நாள் இருந்துட்டு போங்களேன்..” தயாகரன் வாயை திறக்கும் முன்பே இவள் அடித்துப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.

அவன் அவளை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தான். அவனது முறைப்பை சட்டை செய்யாமல்,

“இல்ல அத்தை.. நீங்க இருந்தா அப்பா அம்மாவுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அது தான் சொல்றேன்” என்றாள் மேலும்.

அவளின் திட்டத்தை உணர்ந்தவன் பல்லைக் கடித்தான்.

“போடா.. உன்கிட்ட நான் ஒருத்தி சிக்குனது போதாதா? என் மொத்த குடும்பத்தையும் சிக்க வைப்பானா? முடியாது.. அவங்களை பாதுகாக்கிறது என்னோட கடமை. அவங்களை எப்படி பாதுகாக்க  முடியுமோ அந்த வழியில நான் பாதுகாத்துக்குவேன்” முடிவெடுத்தவள் பொன்மாரியிடம் வேண்டி நின்றாள்.

“அப்போ நீ மட்டும் இங்க இரு மருமவளே.. நான் என்னோட அவங்களை எல்லோரையும் கூப்பிட்டுக்குறேன். சரியா?” என்றார் அவர்.

“ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா?” கடுப்படித்தவன்,

“யாரும் எங்கயும் போக வேண்டாம்.. எல்லாம் இன்னும் ஒரு வாரம் மட்டும் தான். அதுக்கு பிறகு எல்லாத்தையும் கிளியர் பண்ணி விடுறேன். அதுவரை வாயை மூடிக்கிட்டு இங்க இருங்க” கடுப்படித்து விட்டு வெளியே போய் விட்டான் தயாகரன்.

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த பேச்சு பேசிட்டு போறான்..” என்று பொன்மாரி கோவப்பட்டு,

“இந்தாருய்யா... எந்த நேரத்துல நீரு அவனை பெத்து போட்டீரும்.. வீட்டுக்கு கொஞ்சமாச்சும் அடங்குறானா? அம்மான்னு கொஞ்சமாச்சும் மதிக்கிறானா? என்ன புள்ளையை பெத்து வச்சு இருக்கீரும்” தன் கணவனிடம் சண்டைக்கு நின்றார்.

“மாரி நான் என்னடி பண்ணேன்.. என்னை கரிச்சு கொட்டுற.. உன் மவன் உன்னை மாதிரி தான்டி இருப்பான்..” என்று சிவலிங்கம் வாயை விட, அது போதாதா பொன்மாரிக்கு.. அடவு கட்ட ஆரம்பித்து விட்டார்..

“என்னய்யா என்னை சொல்றீரு... பெத்தது நீ தானே.. என்னவோ நான் குந்தி தேவி மாதிரி மந்திரத்துல மசக்கையாகி புள்ளை உண்டானது மாதிரி பேசுறீரு.. கல்யாணம் ஆன அன்னையில இருந்து ஒரு ராவு பகலு தூங்க விட்டீகளா? இல்ல கண்ணசர தான் விட்டீகளா? வாடி வாடின்னு கையை பிடிச்சு இழுத்துட்டு இப்ப என்னவோ அந்த தடிமாட்டை நான் மட்டும் தான் பெத்த மாதிரி பேசுறீரு..” என்று அவிழ்ந்த கூந்தலை கொண்டையாக்கி போட்டுக் கொண்டே கணவனிடம் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க,

தயாழினி தன் வேதனைகளை மறந்து சிரித்தாள். எல்லாம் இன்னும் ஒரு வாரம் மட்டும் தான் என்று அவளின் நெஞ்சம் அதிர துணுக்குற்றுப் போனாள்.

மற்ற இரு மகள்களின் கண் மறைவாக பெரிய மகளிடம் தனியாக மலர் கேட்டார்.

“பாப்பா அன்னைக்கு எங்களை சுட வந்த ஆள் யாருன்னு விசாரிச்சியா? மாப்பிள்ளை எதுவும் சொன்னாரா?” படபடப்புடன் விசாரித்தார்.

“அவருக்கும் அது யாருன்னு தெரியலம்மா.. ஆனா அவர் சொல்றாரு அவங்க குடும்பத்து எதிரி தான் யாராவது இதை செய்து இருப்பாங்கன்னு. அதனால அதை பற்றி கவலை பட வேண்டாம்னு சொன்னாரு. அதோட என்னோட முதல் கொழுந்தன் போலீஸ் தானே.. அதனால அவர் விசாரிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காரு. தெரிஞ்சா அது யாரு என்னன்னு நான் சொல்றேன் ம்மா. அதுவரு நீங்க இதை பத்தி பேசவேண்டாம்” என்று மழுப்பி விட்டாள்.

என்ன மிஞ்சி மிஞ்சி போனா இன்னும் ஒரு வாரம். அதுக்கு பிறகு நான் இந்த பூமியில இருப்பனா இல்லையான்னு தெரியல.. ஆனா அதுக்குள்ள தன் குடும்பத்தை பாதுகாப்பாக எங்காவது அனுப்பி விட எண்ணினாள்.

பெருமூச்சு விட்டாள். அன்றிலிருந்து தினமும் தொடர்ச்சியாக அவளுக்கு போதை மருந்து ஊசி போடப்பட்டது.

முதல் மூன்று நாளுக்கு பிறகு பகலிலும் போதை ஊசி ஏற்றப்பட ஆரம்பிக்க, கலங்கிய கண்களுடன் தனக்கு ஊசி போட்டுக் கொண்டு இருந்த தன் கணவனை விழி அகலாது பார்த்தாள்.

“எதுக்குடி இப்படி பார்த்து வைக்கிற?” கேட்டுக் கொண்டே அவளின் கையில் ஊசியை இறக்கினான்.

“இல்ல எனக்கு ஒரு உதவி வேணும்.. அது மட்டும் செய்து குடுக்குறீங்களா?” கெஞ்சலுடன் அவனிடம் கேட்டாள்.

“என்ன உதவி?”

“இந்த ஊர்ல இருந்தா எப்படியும் என் குடும்பத்துக்கு தொடர்ச்சியா பிரச்சனை வந்துக்கிட்டு தான் இருக்கும்.. அதுக்கு என் குடும்பத்தை எங்காவது வெளிநாட்டுல செட்டில் பண்ணி விடுறீங்களா?” என்றவளை முறைத்துப் பார்த்தவன்,

“இதென்ன அவ்வளவு சுலபமான வேலைன்னு நினைச்சியாடி?” பல்லைக் கடித்தான்.

“நான் இந்த நாட்டுக்காக என்னை இழக்க ரெடியா தானே இருக்கேன். அதுக்கு பதிலா இந்த நாடு என் குடும்பத்தை காப்பத்தட்டும். தப்பு இல்ல.. உங்க உயர் அதிகாரிங்க கிட்ட பேசுங்க.. என் குடும்பத்தை செட்டில் பண்ணா தான் இந்த ஆப்ரேஷனுக்கு ஒத்துக்குவேன். இல்லன்னா என் குடும்பத்தோட சேர்ந்து நானும் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்திடுவோம்” என்றாள்.

“என்னடி மிரட்டுறியா?”

“மிரட்டலாம் இல்ல.. என் உயிரையும் மானத்தையும் இந்த நாட்டுக்கு நான் குடுக்குறேன்ல. அதுக்கு பிரதி உபகாரமா இந்த நாடு எனக்கு என்ன தரப்போகுது. மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மெடல். அதுக் கூட ரொம்ப ரேர்.. எதிரிங்க கிட்ட மாட்டுனா என் பொணம் கூட என் வீட்டு ஆளுங்களுக்கு கிடைக்கம பண்ணிடுவானுங்க. என் வாழ்க்கையையே பணையம் வச்சு இருக்கேன். அதனால இந்த நாடு நான் கேட்கிற கோரிக்கையை நிறைவேற்றி  தான் ஆகணும்” என்றாள் பிடிவாதமாய்.

நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன் அவனை ஒரு பார்வை பார்த்தான். அவள் கொஞ்சமும் அசரவில்லை.

இருக்க இருக்க போதை ஏறியது அவளுக்கு. நிலையாக நிற்க முடியவில்லை தள்ளாடினாள்.

ஆனா பொழுதும் சமாளித்துக் கொண்டு நின்றவள்,

“கண்சிடர் பண்ணுங்க” என்றபடியே இதழ்களை கடித்து தன் தலைக்கு போதை ஏற விடாமல் எப்பொழுதும் போல தன்னை காயம் செய்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

அவளை தனியே அறையில் வைத்து கதவை பூட்டிவிட்டு வெளியே வந்தான்.

அவனது முகத்தில் இருந்த யோசனையை பார்த்து பிரபா நெற்றி சிறுக்கினான்.

“என்னண்ணா ஆச்சு?”

“நத்திங்” என்றவன் வெளியே போய் விட்டான். குணாவுக்கு போன் போட்டு பிரபா பேசி,

“அண்ணன் முகமே சரியில்லடா” என்று புலம்பினான்.

“நானும் கவனிச்சுட்டு தான்டா இருக்கேன். அண்ணா நல்ல முடிவு எடுத்தா நல்லா இருக்கும். வெயிட் பண்ணுவோம். சரிடா நான் டியூட்டில இருக்கேன். பிறகு பேசுறேன்” என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.

“ஏன் அண்ணா இன்னும் முழுசா எதையும் அண்ணி கிட்ட சொல்லல” கேள்வி இரு சகோதரர்கள் நெஞ்சிலும் எழுந்தது.

வெளியே போன தயாகரன் கொஞ்ச நேரத்திலே மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டான்.

“எங்கடா உன் பொண்டாட்டி.. வந்து கூட மாட உதவலாம் இல்ல” என்று மகனை ஆழம் பார்த்தார்.

“அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அவளை எதுக்கு தொந்தரவு பண்ற. உன்னால முடிஞ்சா செய் இல்லன்னா கடையில வாங்கி சாப்பிட்டுக்கலாம். தேவையில்லாம அவளை தொல்லை பண்ணாத” என்று விட்டு மாடிக்கு வந்தவன் அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான்.

“பரவாயில்லை மருமகளை நல்லா தான் பார்துக்குறான்” என்று எண்ணிக் கொண்டார் பொன்மாரி.

ஆனால் அவளை எதிரியிடம் அடமானம் வைத்தது அவருக்கு தெரியாதே.. மகன் தங்க கம்பி என்று அல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறார். என்னைக்கு மகனோட சுயரூபம் தெரியப் போகிறதோ தெரியவில்லை.

உள்ளே வந்த தயாகரன் அங்கே போதையை தனக்குள் இறங்க விடாமல் போராடிக் கொண்டே இருந்தாள் தயாழினி. அவளின் போராட்டத்தைப் பார்க்க முடியாமல் கபோர்டை திறந்து அங்கு அடுக்கி வைக்கப் பட்டு இருந்த மதுவை எடுத்து வாயில் சரித்துக் கொண்டான்.

கண்கள் பார்வையை மறைத்துக் கொண்டு இருக்க, விழிகளை பெரிதாக திறந்து திறந்து எதிரில் இருந்த கணவனை பார்த்தாள். அவனுக்கு அருகில் தட்டு தடுமாறி வந்தாள்.

“இந்த ட்ரிங்க்ஸ்ல அப்படி என்ன இருக்கு? எப்போ பாரு குடிச்சுக்கிட்டே இருக்கீங்க?” என்றவளின் பேச்சு குளறலாக வந்தது.

“என்ன இருந்தா உனக்கு என்னடி?” கேட்டவன் அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான். அவனது கழுத்தோடு தன் இரு கைகளையும் மாலையாக போட்டுக் கொண்டவள்,

“நானும் டேஸ்ட் பண்ணி பார்க்கிறேன்..” என்று அவனது கையில் இருந்த பாட்டிலை பிடுங்க வந்தாள்.

“ஏற்கனவே நீ போதையில தான்டி இருக்க.. அது போதாதா? இந்த போதையும் வேற வேணுமாக்கும்” என்றவனின் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டவள்,

“எதுக்காக என்னை உங்க மடியில உட்கார வச்கிக்கிட்டீங்க? அப்போ என்னை பிடிக்கும் தானே.. தாலியை கேட்க மாட்டீங்க தானே” போதையில் கூட தாலியை இறுக்கிப் பிடித்தவளை பெருமூச்சு விட்டுப் பார்த்தவன், அடுத்த நிமிடம் அவளின் இதழ்களை இறுக்கமாக கவ்விக் கொண்டான்.

அவனது செயலில் இன்னும் அவனுடன் ஒன்றியவள் அவனின் பிடரியை பிடித்து தன்னை கொடுத்து நின்றாள் தயாழினி.

Loading spinner

Quote
Topic starter Posted : August 7, 2025 10:39 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top