“என்ன ஆச்சுங்க?” என்று அவள் பதறிப் போக,
“ஒன்னும் இல்லை” என்று சொல்லும் பொழுதே அவனது குரல் கரகரப்பாய் ஒலித்தது.
தனக்காக அவன் வேதனை படுகிறான் என்று புரிந்துப் போனது அவளுக்கு. இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது மகராவுக்கு.
பஞ்சவனின் பின்னந்தலையை அழுந்தக் கோதி விட்டவள், அவனின் காதோரம் எதையோ சொன்னாள். பஞ்சவன் பட்டென்று அவள் மீது இருந்து தலையை மட்டும் தூக்கிப் பார்த்தவன் தலையை மட்டும் ஆட்டி உண்மையாவா என்று கேட்டான்.
“உண்மை மட்டும் தான்” என்று அவனது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு சொன்னாள்.
அவளை நம்ப முடியாமல் விழிகளை அவளது முகத்தில் நிலைக்க விட்டான். அவனை இழுத்து தன் கழுத்து வளைவில் புதைத்துக் கொண்டு அப்படியே அவனை கீழே சரித்து அவனது நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டவள்,
“அங்கேயே உங்களிடம் உண்மையை சொல்லி இருப்பேங்க. ஆனா என்னால எந்த குழப்பமும் வரக்கூடாதுன்னு தான் நான் சொல்லல... ஏற்கனவே நம்ம வீட்டுல இருக்கிறவங்களுக்கு என் மேல பெரிதாக எந்த அபிப்ராயமும் கிடையாது. இதுல குகனுக்கு பார்த்த பெண் என் தங்கை தான்னு நான் சொல்லி இருந்தா கண்டிப்பா இந்த சம்மந்தம் நின்னு இருக்கும். என்னால யார் வாழ்க்கையும் கெட்டுப் போகக்கூடாதுன்னு தான் நான் சொல்லல...” என்றவள் பஞ்சவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.
அவளது கண்களில் இருந்த கண்ணீரை கண்டு அவன் முறைக்க அவனது நெஞ்சில் ஏறிப் படுத்துக் கொண்டவள், அவனது கண்களை பார்த்துக் கொண்டே,
“என் அம்மா என்கிட்டே பேச வந்தாங்க...” என்றாள். அது தான் அவனுக்கு தெரியுமே... அவன் அசையவில்லை. தன்னவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டே அவளை விழி அகலாது பார்த்தான்.
“இத்தனை நாட்களா பார்க்க முடியாத பெண்ணை திடுதிப்பென்று பார்க்கும் பொழுது ஒரு சின்ன சிரிப்பு கூட அவங்களால என்னை பார்த்து சிரிக்க முடியலங்க... அப்போ நான் யாருங்க அவங்களுக்கு... அத்தனை பேரின் முன்னாடி தான் அவங்களால கேட்க முடியல.. அட்லீஸ்ட் எங்க அம்மா கேட்ட மாதிரி தனியா வந்து கூட என் நலனை கேட்கலைங்க... நல்லா இருக்கியான்னு கேட்குற சொல்லுக்கு கூட நான் அருகதை இல்லாதவளா போயிட்டேன் போல..” வேதனையுடன் சொன்னவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.
“வெளில நான் சிரிச்சு பேசுறதால, நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால எனக்கு எந்த வேதனையும் இல்லன்னு நினைச்சுட்டாங்க போலங்க... நான் ரொம்ப சொகுசா இருக்கேன். எனக்கு எந்த கவலையும் இல்லை. யாரை பத்தின அக்கறையும் இல்லன்னு நினைச்சுட்டாங்க போல” என்று சொன்னவளை என்ன சொல்லி சமாதனம் செய்வது என்று தெரியவில்லை.
“இவங்க தான் என் பிறந்த வீட்டுக்காரங்கன்னு உங்ககிட்ட என்னால பெருமையா அறிமுக செய்து வைக்க முடியலங்க.. அப்படி சொல்லி உங்களை அறிமுகம் செய்து வச்சேன்னு வைங்களேன் எங்க நான் மறுபடியும் அவங்கக்கிட்ட ஒட்டிக்க பார்க்கிறேன்னு நினைச்சுக்குவாங்க. அதோட உங்கக்கிட்ட ஒழுங்கா முகம் குடுத்தும் பேச மாட்டாங்க. அதை என்னால தாங்கிக்க முடியாது. உங்களை வேணும்னே அவமானப் படுத்துவாங்க” என்றவளை ஆழ்ந்த பார்வையுடன் உள் வாங்கிக்கொண்டான்.
“இந்த விசயத்தை எல்லாம் உங்கக்கிட்ட சொன்னேன்னு வச்சுக்கோங்க... நீங்க என்ன தெரியுமா பண்ணுவீங்க.. இந்த கல்யாணத்தை நிறுத்த பார்ப்பீங்க” என்றாள் அவனை அறிந்தவளாய். பஞ்சவனின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. தன்னை அறிந்து வைத்து இருக்கிறாளே என்று.
“இல்லன்னா மட்டும் இந்த கல்யாணத்தை நடத்துவேன்னு நினைக்கிறியா?” என்று கேட்டான் அமர்த்தலாய்.
“என்ன சொல்றீங்க பஞ்சவன்” சட்டென்று அவனது நெஞ்சில் இருந்து அதிர்ந்து எழுந்துவிட்டாள்.
எழுந்தவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன்,
“உறுதியா இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் மிஸ்ஸஸ் பஞ்சவன்” என்றான் அழுத்தமாய்.
“நோ நோ... நீங்க அப்படி பண்ணக்கூடாதுங்க அது தப்பு” என்று அவள் பதற,
“நான் அப்படி தான்டி பண்ணுவேன்... உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணு” என்றான் உறுதியாக.
அவனது கைப்பிடியில் இருந்து விலகப் பார்த்தவளை முறைத்தவன், இன்னும் அழுத்தமாக அவளை தன்னோடு பிணைத்துக் கொண்டான்.
“இதெல்லாம் அராஜகங்க.. அவ பாவம் இல்லையா? அவ கண்டுக்கிட்டு இருக்க கல்யாண கனவு எல்லாம் வீணாப் போகாதா? ப்ளீஸ் ங்க... எனக்காக இந்த விசயத்தை இப்படியே விட்டுடுங்களேன்”
“உனக்காக தான்டி இந்த விசயத்தை விட மாட்டேன்னு சொல்றேன்” என்றான்.
அவள் அதிர்ந்துப் பார்த்தாள். அவளின் பார்வையை தாங்கிக்கொண்டே,
“என் பொண்டாடியை அவங்க எப்படி தவிக்க விடலாம்... தனியா நீ எவ்வளவு பிரச்சனையை பேஸ் பண்ணி இருப்ப... மாசமா இருந்த நேரம் அம்மாவையும் புருசனையும் தேடும்னு சொல்லுவாங்க. வாய்க்கு ருசியா சாப்பிடனும்னு இருக்கும். ஆனா இதுல ஒன்னு கூட அவங்க செய்யலையே... ஏன் குழந்தை பிறந்த பிறகாவது வந்து ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போய் இருந்து இருக்கலாம். இப்படி அவங்க எதுவுமே செய்யலையே...”
“நீ இப்படி பல கட்டல்களை தாங்கி தானே வந்து இருக்க... அப்படி நீ பட்ட கட்டலுக்கு (கஷ்ட்டத்துக்கு) அவங்க பதில் சொல்ல வேணாமா? யாருக்கு பதில் சொல்லாட்டியும் எனக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்டி.. பதில் சொல்ல வைப்பேன்” என்று சொன்னவனை பயத்துடன் பார்த்தாள் மகரா.
“என்னை பார்த்து பயப்படுறதை முதல்ல நிறுத்துடி கடுப்பா வருது” எரிந்து விழுந்தான்.
அவனது கடுப்பில் இவளுக்கு ரோசம் வர,
“போங்களேன் எனக்கென்ன வந்தது... சொல்லல சொல்லலன்னு குதிக்க வேண்டியது. சொல்லிட்டா உடனே ரிவெஞ் எடுக்க போறேன்னு கிளம்ப வேண்டியது... அப்போ உங்கக்கிட்ட பகிர்ந்துக்கொள்ள வந்த என்னோட உணர்வுகளுக்கு என்ன மரியாதை” என்று வெடித்தாள் மகரா.
பஞ்சவன் அவளை பார்த்தான். அவனது பார்வையை தாங்கிக்கொள்ள முடியாமல் அவன் மீது இருந்து இவள் எழுந்துக் கொள்ளப் பார்த்தாள். அதற்கு விடாமல் அவளை பற்றிக் கொண்டவன் அவளை போலவே அவளை கீழே சரித்து அவள் மீது இவன் படர்ந்துக் கொண்டான்.
“இப்போ உன் உணர்வுகளுக்கு நான் என்ன மரியாதை செய்யாம போனேன்னு இந்த குதி குதிக்கிற..?” முறைத்தான்.
“இல்லையா பின்ன... என்கிட்ட உன்னால எதையும் பகிர்ந்துக்கொள்ள முடியாது. உன் வேதனையை சொல்லி என்கிட்ட ஆறுதலும் வாங்க முடியாதுன்னு அடக்கப்பட்ட கோவத்துடன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பெருசா பேசுனீங்களே இப்போ வரை எனக்கான ஆறுதல் உங்கக்கிட்ட இருந்து எதுவும் கிடைக்கல மிஸ்டர் பஞ்சவன்” என்றாள் அவள்.
அவளை முறைத்துப் பார்த்தான்.
“இப்படி முறைச்சி பார்த்தா என்ன பொருள்(அர்த்தம்)” என்று மேலும் முறைத்தாள்.
“நான் தான் உன்கிட்ட வந்து கேட்டனே தவிர நீயா என்னை மதிச்சு எதுவும் சொல்லலடி...” என்றான் அழுத்தமாய்.
“ஆமாம் என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கவே கூசிட்டு இருக்கிறவங்களை அத்தனை பேரின் மத்தியிலும் வச்சு இவங்க தான் என் பெத்தவங்க. இவங்களால தான் நான் இவ்வளவு வேதனை பட்டேன்னு உங்கக்கிட்ட சொல்ல சொல்றீங்களா?” என்று இவளும் திமிராய் கேட்டாள்.
“ஏன் ஒரேடியா கல்யாணம் முடிஞ்சு சொல்லேன்... இன்னும் திவ்யமா இருக்கும்” என்றான் கடுப்பாக.
“அந்த அளவுக்கு ஒன்னும் நான் உங்களை தள்ளி நிறுத்தி பழகல பஞ்சவன்” என்றாள் வெடுக்கென்று.
அவன் அசையாத பார்வை அவளை பார்த்தான்.
“என்ன பார்வை வேண்டி கிடக்கு.. உண்மையும் அது தான் மிஸ்டர் பஞ்சவன்... என்னைக்கு உங்களை நான் என்னை விட்டு தள்ளி நிறுத்தி இருக்கிறேன் உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க” என்றாள்.
அவள் பேச பேச அவனுள் சின்ன மலர்வு வெடித்துக் கொண்டே இருந்தது.
மகரா அதை கொஞ்சமும் உணராமல், “என் தடைகள் எல்லாம் கடந்து தான் உங்களை கைப்பிடித்தேன்... என் வேதனையை விட உங்க வேதனையை என்னுள் நிறைத்துக் கொண்டேன். என் வாழ்வில் நீங்க வந்த பிறகு என் தனிமை எல்லாம் கடந்து தயக்கத்தை எல்லாம் கடந்து உங்களை அதிகம் நாடினேன்.. அதை நீங்க உணர்ந்தீங்களா? இல்லையான்னு எனக்கு தெரியல...? ஆனா நான் உங்களை என்னுள் பாதியா தான் பார்க்கிறேன்.. அவங்கக்கிட்ட அதாவது என்னை பெத்தவங்க முன்னாடி கொஞ்சம் கூட கலங்காமல் அசையாம இருக்க காரணமே நீங்க மட்டும் தான்..”
“நீங்க மட்டும் என் வாழ்வில் வராம போய் இருந்தா நிமிர்வா தான் இருந்து இருப்பேன்... ஆனா உள்ளுக்குள்ள அவங்க உறவுக்காக கண்டிப்பா ஏங்கி இருப்பேன்..” என்று சொல்லும் பொழுதே அவளின் குரல் பிசிறியது.
அதை உணர்ந்து பஞ்சவனின் கைகள் அவளின் முதுகை வருடிவிட வர, பட்டென்று அதை தட்டி விட்டாள்.
“ஆனா இந்த நிமிடம் அவங்க உறவுக்காக கொஞ்சம் கூட ஏங்கல பஞ்சவன். ஏன்னா முழுக்க முழுக்க காரணம் நீங்க மட்டும் தான்.. நான் தேடுவதற்கு முன்பே எனக்கான எல்லாமுமாய் நீங்க இருக்கீங்க. இனிமேலும் நீங்க இருப்பீங்கன்ற நம்பிக்கை எனக்கு அடிமனம் வரை இருக்கு ங்க... அப்படி இருக்கும் பொழுது அவங்களை பற்றி பேசுவது கூட என்னை பொறுத்தவரை வீண் தான்..”
“ஆனா கண்டிப்பா இன்னைக்கு இரவு உங்க நெஞ்சுமேல படுத்துக்கிட்டு அவங்களை பற்றி சொல்லி இருப்பேன். அதற்குள் நீங்க அவசரப்பட்டுட்டீங்க... தட்ஸ் ஆள்.. மத்தபடி நான் உங்கக்கிட்ட மறைக்கணும்னு எந்த தாட்சும் எனக்கு இல்லை... அதோட நம்ம நேரத்தை தேவையில்லாததை பேசி வீண் பண்ண வேணான்னு தோணுனது..” என்று அவள் சொல்ல, அதை எல்லாம் அவன் காதிலே வாங்கிக்கொள்ளாமல்,
“உண்மையாவா?” என்று கேட்டான்.
“என்ன உண்மையா? புரியலங்க” என்று அவனது முகத்தை கூர்ந்துப் பார்த்தாள்.
“இல்ல முழுக்க முழுக்க காரணம் நான் மட்டும் தான் சொன்னீயே.. நீ தேடுவதற்கு முன்பே எனக்கான எல்லாமுமாய் நான் இருக்கிறதா சொன்னியே. இனிமேலும் நான் இருப்பேன்ற நம்பிக்கை உனக்கு அடிமனம் வரை இருக்குன்னு சொன்னியே அதை கேட்கிறேன்... சொல்லுடி உண்மையாவேவா” என்று கேட்டான். இந்த கேள்வியை கேட்கும் போதே அவனது கண்களில் அத்தனை மின்னல் மின்னியது.
“அதெல்லாம் கோல்டென் வேர்ட்ஸ். திருப்பி சொல்ல மாட்டேன்” என்று முறுக்கிக் கொண்டாள்.
“ப்ளீஸ்டி உண்மையை சொல்லு... ரொம்ப தவிக்க விடுறடி” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்து லேசாக கடித்து வைத்தான்.
“ஷ்... வலிக்கிதுங்க” என்று அவனது முடியை லேசாக பற்றி இழுத்தாள்.
“வன்முறையில இறங்குறடி” என்று முறைத்தான்.
“ஏன் நீங்க மட்டும் என்னவாம்... கடிச்சு வைக்கல” என்று முறைத்தாள் பதிலுக்கு.
“உண்மையாவா?” என்று மீண்டும் அதிலே வந்து நின்றான் பஞ்சவன். அவனை சீண்டி விட்டது போதும் என்று எண்ணியவள், அவனது பின்னந்தலையை அழுந்தக்கோதி விட்டவள், அவனின் காதோரம் “உண்மை மட்டும் தான் பஞ்சவா... எனக்கான எல்லாமுமாய் நீங்க இருக்கும் பொழுது எனக்கு வேற யார் வேணும்.. யாருமே வேணாம். துணைக்கு இரண்டு பிள்ளைங்க நமக்கு இருக்கு... மூணாவதா இன்னொரு வரவும் வாய்ப்பு இருக்குன்றப்ப வேற எந்த உறவும் எனக்கு வேணாம். உங்களுக்கு வேணா உங்க மாமனார் குடும்பத்தை கூப்பிட்டு வச்சு கொண்டாடுங்க” என்றாள். பஞ்சவன் பட்டென்று அவள் மீது இருந்து தலையை மட்டும் தூக்கிப் பார்த்தவன் அவளை முறைத்தான்.
“எனக்கு பின்னாடி பேசியது எல்லாம் தேவையில்லை... நீ சொன்னியே அந்த மூணாவது குழந்தை வர வாய்ப்பு இருக்குன்னு... உண்மையா வாய்ப்பு இருக்காடி” என்று தலையை மட்டும் ஆட்டி கேட்டான். என்று அவனது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு உண்மை தான் என்று சொன்னாள் மகரா.
அதன் பிறகு பஞ்சவனிடம் புயலின் வேகம் தான்... பாவம் மகரா...