“ப்ளீஸ் எல்லா உண்மையையும் சொல்லுங்க... எங்களை சுத்தி நடப்பது எதுவும் நல்லதாவே படல.. திடீர் திடீர்னு யார் யாரோ வராங்க.. எங்களை கொல்ல பார்க்கிறாங்க.. கொல்லட்டும்னு எங்களை விடாம காப்பாத்தி வைக்கிறீங்க.. ஆனா அதே சமயம் போதை பழக்கத்தை ஏற்படுத்தி துடிக்க வைக்கிறீங்க.. நீங்க எல்லாம் யாரு..? உங்க கூட நாங்க எந்த விதத்துல சம்மந்தப் பட்டு இருக்கோம்னு புரியல.. எதுவா இருந்தாலும் உடைச்சு சொல்லுங்க” என்ற தயாழினியை ஆழ்ந்தப் பார்வை பார்த்த தயாகரன்,
“நான் சொல்றேன்.. பட் நான் கட்டுன தாலியை கழட்டி குடுத்துட்டு, விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு குடுத்துட்டு என்னை விட்டு நிரந்தரமா போகணும்.. போயிடனும்.. அதுக்கு சம்மதமா?” டீல் பேசினான் கட்டிய மனைவியிடம்.
அவன் சொன்னதை கேட்டு விக்கித்துப் போனாள் பெண்ணவள். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“உங்களுக்கு கொஞ்சம் கூட பீலிங்சே இல்லையா? தாலியை போய் கழட்ட சொல்றீங்களே.. ஒரு பிச்சைக்காரன் கூட அவன் பொண்டாட்டி கழுத்துல இருக்குற மஞ்ச கயிறை கேட்க மாட்டான் தெரியுமா? ஆனா நீங்க...” என்றவளுக்கு வெடித்துக் கொண்டு விம்மல் வந்தது.
ஆனால் அவன் முன்னிலையில் அழக்கூடாது என்று வைராக்கியம் கொண்டவள் வார்த்தை என்னும் சாட்டையால் விளாசினாள். பிச்சைக்காரனோடு அவனை ஒப்பிட்டுப் பேசினள். ஆனால் தயாகரன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்,
“ஒருவேளை நான் பிச்சைக்காரனா இருந்து இருந்தா உன் கழுத்துல இருக்கிற தாலியை கேட்டு இருக்க மாட்டேனோ என்னவோ.. ஆனா நான் தற்சமயம் பிச்சை எடுக்கல.. சோ நான் பிச்சைக்காரனும் ஆக முடியாது” என்றான் நக்கலாக..
“சரியான சேடிஸ்ட்.. இழிவு நிலையில இருக்கிறவனுக்கு இருக்கிற துளி இரக்கக்குணம் கூட உங்கக்கிட்ட இல்ல” என்றாள்.
“அது தான் தெரியுதே.. பிறகு எதுக்கு தாலியை இருக்க பிடிச்சுக்கிட்டு இருக்க.. அவிழ்த்து குடுத்துடு” என்றான்.
“ஏன் இப்படி திரும்ப திரும்ப தாலியையே கேக்குறீங்க.. அதை விட்டுட்டு நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்க”
“நீ வாக்கு குடு.. நான் சொல்றேன்” என்ற உறுதியில் அவன் இருந்தான். அவனை கொஞ்சமும் அசைக்க முடியாது என்று புரிந்துக் கொண்டவளுக்கு நெஞ்சம் ஏகத்துக்கும் கலங்கிப் போனது.
“அப்படி என்ன இந்த தாலியில இருக்கு... கழட்ட சொல்லிட்டே இருக்கீங்க? எதுக்கு இவ்வளவு பிடிவாதம்” என்று உள்ளுக்குள் இருந்த தாலியை எடுத்து நெஞ்சுக்கு மேல போட்டு ஆத்திரத்தில் அவனிடம் வெடித்தாள்.
“நீ சொன்னியே அந்த சென்டிமென்ட் என்னை டச் பண்ண கூடாதுன்னு தான் இந்த தாலியை கேட்கிறேன்” என்றான் பிடிவாதமாய்.
அண்ணனின் பேச்சில் இரு தம்பிகளும் வெகுவாக அதிர்ந்துப் போனார்கள்.
“அண்ணா” என்று அழைக்க,
“இது என்னோட வாழ்க்கை.. நான் தான் தீர்மானிக்கணும்.. என் போக்கஸ் மிஸ் ஆவதை நான் என்னைக்கும் அலவ் பண்ண மாட்டேன்” என்று தம்பிகளை பார்த்து அழுத்தமாக சொன்னவன்,
தயாழினியின் புறம் திரும்பினான். அவனது உறுதியில் இவள் தான் நிலைக்குலைந்துப் போனாள்.
“தாலியை கழட்டுற அளவுக்கு அப்படி என்ன பண்றீங்க.. உங்க போக்கஸ் போறதுக்கு?” ஏக கடுப்புடன் கேட்டவளை முன்பை விட கூர்ந்துப் பார்த்த தயாகாரன்,
“ரா.. கேள்வி பட்டு இருக்கியா?” அவளிடம் கேட்டான்.
“ரான்னா தெலுங்குல வான்னு அர்த்தம்... அதுவா?” என்று கேட்டவளை கடுப்புடன் பார்த்தவன்,
“மரமண்டை...” என்று திட்டினான்.
“RAW ன்னா ரீசெர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்க்ஸ்னு அர்த்தம்” என்றான்.
“அப்படின்னா என்ன?” அவளுக்கு அதை பற்றிய அடிப்படை புரிதலே இல்லை.
“என்னடா இவ இப்படி இருக்கா? இவ்வளவு மரமண்டையா இருந்தா கிழிஞ்சிடும் பொழப்பு” என்று தம்பிகளிடம் கோவப்பட்டான். அவனது கோவத்தைப் பார்த்து,
“இல்ல நீங்க சொல்லுங்க.. நான் மேக்சிமம் புரிஞ்சுக்க ட்ரை பண்றேன்” உள்ளடங்கிப் போனது அவளின் குரல்.
“ம்கும் நல்லா புரிஞ்சுக்குவ...” கோவத்தில் சலித்துக் கொண்டவன்,
“நான் யார் தெரியுமா? தயாகரன் தி டாப் சீக்ரெட் இன்டெலிஜென்ட் ஏஜென்சி ப்ரம் RAW ...” என்றான்.
“இல்ல இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்..” என்றவளை கடுப்புடன் பார்த்தவன்,
“நான் இந்த நாட்டோட முக்கிய இரகசிய உளவாளி” என்று கோவத்தில் கத்தினான்.
“இந்த படத்துல எல்லாம் வருமே இரகசிய போலீஸ் மாதிரியா?” என்று கேட்டவளை அடிக்கத் தோன்றியது.
ஆனாலும் அவளின் அறியாமையை கண்டு பல்லைக் கடித்து தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவன்,
“நீ நியூஸ் எல்லாம் பார்க்க மாட்டியா?” கடுப்படித்தான்.
“இல்லையே” என்று அவள் சொல்ல,
“சரியான தத்தி” வாய்க்குள் அவளை திட்டி தீர்த்தான்.
“ப்ளீஸ்.. சொல்லுங்க.. நீங்க யாரு..?” கேட்டவளிடம் தன் பணியை பற்றி மேலோட்டமாக சொன்னான். அவன் சொல்ல சொல்ல இவளுக்கு நடுக்கம் கூடிக் கொண்டே போனது.
அதிர்ந்துப் போய் அவனை பார்த்தாள். எவ்வளவு பெரிய வேலை பார்க்கிறான். ஆனால் மிக சாதரணமா நாட்டுக்குள்ள உலாவுறாங்களே எப்படி? எப்படி இப்படி.. அவன் பணியின் வீரியம் இப்பொழுது முழுமையாக அவளுக்குப் புரிந்தது..
தயாகரன் சொல்ல சொல்ல “ஓ...!” என்று கேட்டுக் கொண்டவளுக்கு அவனது உயிர் என்றைக்கும் நிலையான பாதுகாப்பு உரியது இல்லை என்று மட்டும் புரிந்தது.
“அப்போ நீங்க ஒரு உளவாளின்னு இங்க இருக்க யாருக்கும் தெரியாதா? ஆனா நீங்க வட்டி பிசினெஸ் ல பண்ணிட்டு இருக்கீங்க” சந்தேகம் கேட்டாள்.
“ஆளாளுக்கு வெளியில தெரியிற மாதிரி ஒரு வேலையை செஞ்சுக்கிட்டு இருப்போம்.. எங்க வேலையே எதிரி நாட்டை கண் காணிக்கிறது மட்டும் தான். எந்த பக்கம் இருந்து ஆபத்து வரலாம்னு நாங்க முன் கூட்டியே கணிக்கணும். எங்களுக்கு தகவல் வந்தா மட்டும் தான் நாங்க அந்த பணிக்கு போவோம். மத்தபடி இயல்பான மக்கள் போல தான் இருப்போம். ஆனா எங்களுக்கு குடுக்குற வேலை ரெண்டு நாள்ல முடியலாம். ஒரு வாரத்துல முடியலாம். இல்லன்னா பல வருடம் கூட ஆகலாம்.. எல்லாமே தலைமறைவு வாழ்க்கை தான்.. இதுல இன்னொரு ஸ்பெஷல் விசயம் இருக்கு” என்று அவன் சொல்ல சொல்ல தயாழினிக்கு அவனது வேலையின் சுமை புரிந்தது. முக்கியத்துவமும் புரிந்தது.
“என்ன அது?” சற்று நடுக்கத்துடனே கேட்டாள்.
“பல சமயங்கள் எதிரி நாட்டை வேவு பார்க்கும் பொழுது அங்கேயே சிறைப்படவும் வாய்ப்பு இருக்கு.. இன்னொன்னு நம்ம நாட்டுலையும் சிறை பட வாய்ப்பு அதிகம் உண்டு. ஏன்னா எங்க அடையாளம் முழுக்க முழுக்க மறைமுகமாக தான் இருக்கும். அதனால சட்டுன்னு எங்களை அடையாளம் காண முடியாததுனால பல பேர் தீவிரவாதத்தை சேர்ந்தவங்கன்னு முத்திரை குத்தி கடுங்காவல் தண்டனையும் வாங்கி இருக்காங்க உள் நாட்டுலையே.. உயிரை விட்டு இருக்காங்க.. வாழ் நாள் முழுக்க கொடுமை படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு இறந்து போய் இருக்காங்க.. இதெல்லாம் கம்மி தான். சிலருடைய இறப்புகள் மிக மிக மர்மமாக இருக்கும். அவங்க உயிரோட இருக்காங்களா இல்லையான்னு கூட தெரியாது... ஆனாலும் நாங்க இந்த அமைப்புக்காக எங்க உயிரை குடுப்போம்” என்றான் குரலில் எந்த வித ஏற்ற இரக்கமும் இல்லாமல்.
“ஐயோ..” என்று இவள் தான் பதறிப் போனாள். கேட்கும் பொழுதே உடலும் மனமும் உதறியது. கண்களில் இருந்து கண்ணீர் சரமாரியாக இறங்கியது.
சுற்றி இருக்கும் எல்லை நாடுகளில் இவனை போல கண்காணிக்க ஆள் இல்லை என்றால் எத்தனையோ போரை ஒவ்வொரு நாடும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கும். கொஞ்சமும் சுதாரிக்க வழியே இல்லை. தங்களை நோக்கி ஆபத்து வரப்போகிராதை முன் கூட்டியே சொல்லி எதிரியின் எல்லையில் இருக்கும் படைகளை காலி செய்ய இவர்கள் உதவி இல்லை என்றால் உள்நாட்டில் மக்கள் இவ்வளவு அமைதியாக வாழவே முடியாது என்று புரிந்தது.
அரக்கனாய் அவனை பார்த்த தயாழினிக்கு இப்பொழுது அவன் கடவுளாய் தெரிகிறான். ஆனாலும் அவன் மீது கொண்ட நேசத்தால் அவன் பணியின் மீது அதித பயம் வந்தது. ஏன் அவான் மீதும் கூட அதிக பயம் வந்தது.
தயாகரன் இவ்வளவு பெரிய ரிஸ்க்கான வேலையில் இருப்பான் என்று கொஞ்சமும் எண்ணிப் பார்த்து இருக்கவில்லை அவள். இப்பொழுது அவள் கழுத்தில் போட்டு இருந்த தாலி கனத்தது போல இருந்தது. அந்த நிமிடம் அவள் ஒரு முடிவு எடுத்தாள்.
அவள் ஒன்றும் தியாகி இல்லையே.. அவனுக்காக வாழ்நாள் முளுவாதும் காத்துக் கொண்டு இருக்க.. அவான் கேட்ட கோரிக்கை படி,
“நிச்சியமா நீங்க கட்டுன தாலியை நான் திருப்பி குடுத்துடுறேன் சார்... என்னால உங்களுக்காக காத்துக்கிட்டு எல்லாம் இருக்க முடியாது.. அதுவும் நீங்க சொன்ன மாதிரி நீங்க உயிரோட இருக்கீங்களா இல்லையான்னு கூட தெரியாம வாழ்ற வாழ்க்கை எல்லாம் நரகம். எப்போ உங்க டெட்பாடி வரும்னு பார்த்துக்கிட்டு இருக்கிறது எல்லாம் என்னால முடியாது. நான் ரொம்ப சராசரியான மனுசி.. எனக்குன்னு சில கனவுகள் இருக்கு. காலையில ஒன்பது மணிக்கு போய் ஆறு மணிக்கு வீடு திரும்புற கணவன், இரண்டு பிள்ளைங்கன்னு அமைதியான வாழ்க்கை வாழ தான் நான் விரும்புறேன். அதனால தயவு செஞ்சி நீங்களே உங்க கையாள கட்டுன தாலியை கழட்டிடுங்க.. எனக்கு நோ அப்ஜெக்ஷன்...” என்றவளை திகைத்துப் போய் பார்த்தார்கள் குணாவும் பிரபாவும்.
தயாகரன் அப்பவும் அலட்டிக் கொள்ளாமல் தான் நின்றான். அவனை எதாலும் அசைக்க முடியாது அல்லவா? அவனுக்கு முதல் பயிற்சியே என்ன நடந்தாலும் மனதை திடமாக வைத்துக் கொள்வது தான்.
உடலும் மனமும் இரும்பு மாதிரி இருக்க வேண்டும். அது தான் இந்த வேலையின் முதல் தகுதியே. அதனால் தான் தயாழினியை பிடித்து கீழே தள்ளி விட்ட பொழுதும் வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை சாற்றிய போதும் கூட அசையாமல் இருந்ததற்கு காரணம்.
எப்படியாப்பட்ட சூழ்நிலையிலும் அவன் கொண்ட திடம் மட்டும் குறையவே கூடாது. மெல்ட் ஆகவே கூடாது அவன். அப்படி அவனது நிலை சற்றே தடுமாறினாலும் அவனது கவனம் சிதறிப் போகும். உளவாளிகள் கொஞ்சமே கொஞ்சம் கவனம் பிசகினாலும் ஒட்டு மொத்த நாட்டின் அமைதியும் குலைந்துப் போய் விடும்.. எனவே தான் அதிக விழிப்புடன் இருக்க வேண்டீயது மிக அவசியம் ஆகும். அதை தான் தயாகரனும் செய்துக் கொண்டு இருக்கிறான்.
“நீங்க ஒரு இந்திய உளவாளின்னு சொல்றீங்க.. ஆனா உங்க நடவடிக்கையும் செயலும் அந்த மாதிரி இல்லையே..” என்றாள்.
அவளை கூர்ந்து பார்த்தான்..
அவனது பார்வையில் “இல்ல உளவாளின்னா கரெக்ட்டா இருக்கணும். ஆனா நீங்க நாட்டுக்கு நல்லது பண்ற அதே சமயத்துல எங்களுக்கு போதை மருந்து குடுக்குறீங்களே இது தான் உங்க கொள்கையா? இது தான் நீங்க நாட்டை காக்கிற லட்ச்சனமா?” ஆதங்கத்துடன் கேட்டவளை கண்கள் சுருக்கிப் பார்த்தவன்,
“இந்த நாட்டுக்கு நல்லதுன்னா என் அம்மாவுக்கு கூட போதை மருந்தை குடுப்பேன்டி” என்றான். அவனது வார்த்தையில் தொக்கி இருந்தது எல்லாமே இந்த நாட்டின் மீது அவன் வைத்து இருந்த பற்று மட்டும் தான். அதை புரிந்துக் கொண்டவளுக்கு இன்னும் இடியாப்ப சிக்கல் அவிழவில்லையே என்று அவனிடமே கேட்டாள்.
Nice ud sis