Notifications
Clear all

அத்தியாயம் 27

 
Admin
(@ramya-devi)
Member Admin

நீரில் நனைந்துக் கொண்டு இருந்த தயாழினிக்கு போதையின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்குவது போல இருக்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வெளியே போகலாம் என்று எண்ணி நின்று இருந்து இருந்தாள்.

பின் சிறிது நேரத்திலே ஆசுவாசம் ஆகி துண்டை மட்டும் உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள். அவளின் கணவன் அவளோடு உள்ளே வராத பொழுதே அவன் இங்க இருக்க மாட்டான் என்று எண்ணிக் கொண்டாள். அதனாலே வெறும் துண்டுடன் வந்தாள். ஆனாலும் போதை மருந்தின் வீரியம் அவளை தடுமாற தான் செய்தது.

அவளின் எண்ணத்தின் படி அவன் இருக்கவில்லை அறையில். சேலை கட்டி முடித்து விட்டு அறையை விட்டு வெளியே வந்த நேரம் கீழே இருந்து எதோ சத்தம் கேட்க குறுங்கண் வழியாக எட்டிப் பார்த்தாள். சரியாக அவள் தாய் தந்தை இருந்த அறைக்கு நேராக தோட்டத்தில் ஏதோ சலப்பு கேட்க தடுமாற்றத்துடன் வேகமாய் ஓடி வந்தாள் அந்த இடத்துக்கு.

அங்கே ஒருவனை போட்டு வெளுத்துக் கொண்டு இருந்தான் குணாதரன். அருகே போட்டு இருந்த கல் மேடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தது இருந்தான் தயாகரன்.

பிரபாகரன் கோவத்துடன் அடி வாங்கிக் கொண்டு இருந்தவனை முறைத்துக் கொண்டு இருந்தான்.

நேத்து மாதிரி எங்க அப்பா அம்மாவை கொலை பண்ண வந்து இருக்கானோ என்று சரியாக யூகம் செய்தவள், அதை தன் கணவனிடம் கேட்கவும் செய்தாள் குழறிய பேச்சுடன்.

“ம்ம்” என்ற தயாகரன், “இவளுக்கு இன்னும் கொஞ்சம் போதையை ஏத்தி விட்டு இருக்கணும் போலையே” சொல்லிக் கொண்டே நாடியை நீவி விட்டுக் கொண்டான். ஆனால் அதை சட்டை செய்யாமல், குழறியபடியே

“எதுக்காக எங்க அப்பா அம்மாவை கொலை செய்யன்னும்.. அவங்க என்ன தீவிரவாதியா? இல்ல கொலையாளியா? யாருக்கு என்ன தீங்கு செஞ்சாங்க. எதுக்காக அவங்களை கொலை பண்ணனும்..” என்றவளுக்கு விழிகளில் கண்ணீர் நிரம்பியது.

“எனக்கு மட்டும் என்னடி தெரியும்.. நீங்களே பாரம்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். இதுல உங்களை கொல்ல ஆள் வேற வந்து இருக்கு.. முதல்ல எனக்கு ஒரு பதிலை சொல்லு.. நீங்க எல்லாம் தீவிரவாதி கும்பலை சேர்ந்தவங்களா? இல்ல மாபியாவா? உங்களோட சேர்ந்து எங்க உயிரும் போயிடும் போல இருக்கு.. என் தாலியை அறுக்குறடி” என்று அவளிடம் கேட்டுக் கொண்டே, தன் காலுக்கு கீழ் கிடந்த கயவனை எட்டி ஒரு மிதி மித்தான்.

“ஐயோ அடிக்காதீங்க சார்.. இதுக்கு மேல என்னால அடி வாங்க முடியாது” என்று கதறினான். அவனது கத்தலை சட்டை செய்யாமல்,

“சொல்லுடி.. நீங்க எல்லாம் யாரு? உங்களை எதுக்கு கொல்ல வரணும்?” தன் மனைவியிடம் கேட்டவன், பிறகு அவனே,

“எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.. நீங்க எல்லாம் தீவிர வாத கும்பலை சேர்ந்தவங்க தானே.. இது தெரியாம எங்க அம்மா வேற உன் கழுத்துல தாலி கட்ட சொல்லிட்டாங்க.. முதல்ல உன் கழுத்துல இருக்குற தாலியை கழட்டு” தயாழினியிடம் சொல்லிக் கொண்டே,

“இப்ப உண்மையை சொல்ல போறியா இல்லையாடா.. இல்ல உன்னை மிதிச்சே கொன்னுடுவேன்” நாக்கை கடித்து அவனை மேலும் ஒரு எத்து எத்தி கயவனை மிரட்டினான்.

“ஐயோ மிதிக்காதீங்க சார்.. நான் உண்மையை சொல்லிடுறேன்..” என்ற கயவன் தன் வாயை திறந்து உண்மையை சொல்ல ஆரம்பித்தான்.

“டேவிட்டும் தனாவும் தான் சார் என்னை இங்க அனுப்பி விட்டாங்க” என்றான்.

“யாருடா அந்த டேவிட்டும் தனாவும்? அவனுங்க எதுக்காக இவங்களை கொல்லனும்.. என்ன சம்மந்தம் இவங்க குடும்பத்துக்கும் அவனுங்களுக்கும்” என்று எல்லா விசயமும் தெரிந்துக் கொண்டே ஒன்றும் தெரியாதவனாய் கேட்டான் தயாகரன்.

“அது வந்து சார்...” என்று எச்சில் விழுங்கினான்.

அவனது தயக்கத்தை பார்த்த குணாதரன், “இப்ப சொல்றியா இல்ல இன்னும் நாலு மிதி சேர்த்து போடவாடா?” காலை தூக்கி அவனை எட்டி உதைத்தான்.

“ஐயோ அடிக்காதீங்க சார் நான் எல்லா உண்மையையும் சொல்லிடுறேன்” எனும் முன்பே ஒரு புதரின் பின்னால் இருந்து வந்த குண்டு அவனது நெற்றியை துளைத்து சிதறச் செய்ய, அதை பார்த்த தயாழினிக்கு மயக்கம் வர அப்படியே சரிந்தாள் தரையில்.

அவள் தரையில் சரியும் முன்பே தன் ஒற்றை கையில் தாங்கிக் கொண்டான் தயாகரன்.

“நாம ப்ளான் படி தான் எல்லாம் நடக்குது... அவன் இங்க தான் இருக்கான்.. ஆக்டிங்கை ஆரம்பிக்கணும்” என்று மிக மிக இரகசியமாக சொன்னவனின் பேச்சை கேட்ட தம்பிகள் இருவரும்,

“ஆமாண்ணா” என்றார்கள் வாயை கூட அசைக்காமல்.

சுதாரித்து, “அச்சோ யாருடா இப்படி பண்ணுனது...? இவனை வச்சு எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தேன். ஆனா இவனை இப்படி பொசுக்குன்னு சுட்டுட்டாங்களேடா.. இப்போ எப்படி நாம உண்மையை கண்டு பிடிக்கிறது...” என்று தயாகரன் சொல்ல,

“நமக்கு எதுக்குண்ணா உண்மை தெரியணும்.. நாம தான் இவங்களை விற்க போறமே” புரியாமல் கேட்பது போல பிரபாகரன் கேட்டான்.

“அது சரி தான்டா.. ஆனா இவங்களை விற்கிற வரை நாம இவங்களை பாதுகாத்து வச்சா தானே நல்ல விலைக்கு விற்க முடியும். அல்ப்ப ஆயுசுல போய் சேர்ந்தா என் காசுக்கு என்ன வழி..?” என்று தம்பியிடம் கேட்டவன்,

“எவ்வளவு பெரிய கொம்பனாலும் நான் பிடிச்சு காட்டுறேன். எனக்கே ஆட்டம் காட்டுறானுங்களா அவனுங்க?” என்று சத்தமாக கர்ஜித்தான் தயாகரன்.

“இவனை கொன்ன ஆளு இங்க தான் எங்கையாவது இருப்பான்.. தேடுங்கடா” என்று தம்பிகளை தேட சொன்னவன் பெண்ணவளை மட்டும் கீழே விடவில்லை.

“என்னடா எவனாவது சிக்குனானா இல்லையா?” கர்ஜித்தான்.

“இல்லண்ணா எல்லா இடமும் தேடி பார்த்துட்டோம் ஒருத்தனும் கிடைக்கல..” என்று புதர் பக்கம் சென்ற தம்பிகள் இருவரும் தேடி பார்த்து விட்டு அங்கு இருந்த ஒரு உருவத்தை கண்டும் அங்கு ஆள் இல்லாததை போல பாவித்து விட்டு திரும்பி அண்ணனிடமே இருவரும் வந்தார்கள்.

“நிக்கிறானாடா?” இதழ்களை கூட அசைக்காமல் காற்றுக்கு கூட கேட்காமல் கேட்டான் தயாகரன்.

“புதர் பக்கம் ண்ணா” என்று இருவரும் சொன்னார்கள் கொஞ்சமும் சத்தமில்லாமல்.

“என்னை பத்தி தெரியாம என்கிட்டே ரொம்ப மோதிட்டு இருக்காணுங்க.. நான் இந்த ஊர்ல எவ்வளவு பெரிய வட்டி பிசினெஸ் பண்ணிட்டு இருக்கேன்னு தெரியாம என்ன கிட்டயே வாலாட்டுறானுங்க.. எத்தனை பேரை தடையமே தெரியாமா கொன்னு புதைச்சு இருக்கேன்னு அவனுங்களுக்கு தெரியல.. டேய் குணா நம்ம இரையை எவனோ போட்டு தள்ள பாக்குறான்டா.. ஏற்கனவே இவ குடும்பத்துக்கு அழுத ஒரு கோடி ரூபாயை நானே எப்படி திருப்பி வாங்குறதுன்னு தெரியாம இருக்கேன். இதுல இவனுங்க வேற இவ குடும்பத்தை தீர்த்துக் கட்ட பார்க்கிறானுங்க.. சீக்கிரம் அது யாருன்னு கண்டு பிடிடா” என்று அந்த உருவத்துக்கு கேட்கும் அளவுக்கு ஆத்திரத்தில் கத்துவது போல தங்களின் ப்ளானை அவன் திட்டமிட்ட படியே சொன்னான்.

“இதுங்க அஞ்சுக்கும் ஏற்கனவே தெண்ட சோறு போட்டுட்டு இருக்கேன். இதுல இதுங்களை பாதுக்காக்குற வேலையை வேற செய்யனுமாக்கும். எங்க இருந்துடா இந்த தலைவலி பிடிச்ச குடும்பம் வந்தது. முதல்ல அவனுங்க இவளுங்களை போட்டு தள்ளுறதுக்குள்ள இவளுங்க மூணு பேரையும் விக்கணும். அதுக்கு பிறகு அந்த ரெண்டு பெருசுங்க கிட்ட உள்ள ஆர்கான்ஸ் எல்லாத்தையும் வித்துட்டு யாருக்கும் தெரியாம புதைக்கணும். அப்ப தான் என் பணம் என் கைக்கு வந்து சேரும். முதல்ல இவளுங்களை விற்க ஏற்பாடு பண்ணுடா குணா.. ஒருத்தியோட விலையே வெறும் அஞ்சு லட்ச்சத்துக்கு தான் கேக்குறானுங்க.. எப்படி கட்டுப்படி ஆகும். ஒரு இருபது லட்ச்சத்துக்கு கேட்டா தானே வித்து தொலைய முடியும்.. மூணு பேரையும் வித்தா ஒரு ஐம்பது அறுபது லட்ச்சமாவது தேறும்னு பார்க்கிறேன்.. விலையே படிய மாட்டிக்கிதுடா..” ஆத்திரத்தின் உச்சத்தில்  சொன்னான் தயாகரன்.

அந்த பக்கம் புதருக்கு பின்னாடி இருந்த ஒரு உருவம் அதை அச்சு பிசகாமல் அப்படியே கேட்டுக்கொண்டு இருந்தது.

“நீயெல்லாம் போலீஸ்னு வெளில சொல்லிக்காதடா.. கேவலாமா இருக்கு.. போலீஸ் டிப்பார்மேன்ட்ல இருந்து எதுக்குடா பிரயோஜனம்.. ஒரு பொம்பளை ப்ரோக்கராவது தெரிஞ்சு வச்சு இருக்கியா? எல்லாம் சோடை போனவனுன்களா இருக்காணுங்க.. நல்லா இண்டர்நேஷனல் லெவெல்ல ஒரு காண்டாக்ட் கூடவாடா உனக்கு தெரியாது.. அந்த ஷேக்கை மட்டும் நம்பி பிரயோஜனம் இல்ல.. அவன் அடி மாட்டு விலைக்கு கேக்குறான்..” குணாவை எரிச்சலுடன் பார்த்தான் தயாகரன்.

“அண்ணா எனக்கு தெரிஞ்சுது எல்லாம் லோக்கல் ஆளுங்க தான். நான் என்ன பண்ணட்டும்.. நான் என்ன முன்ன பின்ன இது மாதிரி வெளிநாட்டு  சப்ளை செஞ்சு இருக்கனா என்ன? இல்ல பார்த்தாவது இருக்கனா” என்று தலையை சொரிந்தவன், “ஆனா நான் ஒருத்தரை பத்தி கேள்வி பட்டு இருக்கேன். ஆனா அவரோட காண்டேக்ட் கிடைக்கிறது எல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது..” என்றான் தயக்கமாக.

“யாருடா அது.. நீ யாருன்னு மட்டும் சொல்லு.. நான் பார்த்துக்குறேன். எனக்கு பணம் வேணும். அதுக்காக எந்த எல்லைக்கு வேணாலும் போக நான் ரெடியா இருக்கேன்” என்றான் சத்தமாகவே.

அண்ணன் தம்பி மூணு பேரும் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த அந்த உருவம் கொஞ்சம் கூட அசையவில்லை.

“ச்சீ இவளை வேற கையில வச்சுக்கிட்டு இம்சை” என்று மயங்கி இருந்தவளை தொப்பென்று கீழே விட்டான். அவன் கீழே விட்டதை பார்த்துக் கொண்டு இருந்த உருவத்தின் இதழ்களில் குரூர புன்னகை ஒன்று வந்தது.

ஆனால் அந்த உருவம் அறியாத ஒரு விசயம். இருளின் போர்வையில் தன் ஒற்றை காலை சற்றே ஏந்தி வைத்து பெண்ணவளை கீழே அடிபட விடாமல் தயாகரன் தாங்கி கொண்டது தான்.

தயாகரன் எத்தனுக்கு எல்லாம் எத்தன் என்று அவன் அறியாமல் போய் விட்டான் போல...

“டேய் குணா நம்மக்கிட்ட இருக்க போதை ஊசியை இன்னொன்னு போட்டு விடுடா இவளுக்கு.. பாதியில எழுந்து வர்றா பாரு” என்றான்.

“ஆனா அண்ணா இதுக்கு மேல போட்டா இவ தாங்க மாட்டா ண்ணா” என்று மனதார தன் அண்ணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவள் இவள் என்று பேசினான் குணாதரன்.

“அப்படிங்கிற? ஆனா ஷேக் சொன்னான்டா இவளுக்கு போதை மருந்தை பழக்கப்படுத்தி விடுன்னு.. ஆனா நம்மக்கிட்ட இருக்க சரக்கு அந்த அளவுக்கு பவர் புல்லா இல்ல போலையே.. நல்ல சரக்கு எங்க இருந்துடா கிடைக்கும்? பிரபா உனக்கு எதுவும் தெரியுமாடா?”

“இல்லையேண்ணா”

“குணா உனக்குடா?”

“தெரியும் அண்ணா ஆனா அவங்க காசு ரொம்ப கேட்பாங்களே.. நானே ஸ்டேஷன்ல பல தில்லாலங்கடி வேலை பார்ப்பேன்.. ஆனா எனக்கே மாற்ற சரக்குல இருந்து ஒரு நாளும் நல்ல சரக்கு கிடைக்கல. எல்லாம் ஆவாத போவாதது தான் தள்ளி விடுறானுங்க” என்றான் பாவமாய்.

“எவ்வளவு காசு செலவு ஆனாலும் சரிடா. எனக்கு நல்லா பவரான சரக்கு வேணும்டா.. இவளுங்களை அதுக்கு பழக்கி விட்டா இன்னும் காசு கூட தரேன்னு அந்த ஷேக் பய சொல்லி இருக்கான்டா” என்றான்.

“அப்போ சரிண்ணா.. நான் ஜெயில்ல இருக்க ஒருத்தனை பார்த்து நாளைக்கு அதுக்கு ஏற்பாடு பண்றேன்” என்றான் குணா.

“சரிண்ணா இப்போ இந்த டெட்பாடியை என்ன பண்றது?” பிரபா கேட்டான்.

“எப்பொழுதும் போல என்ன பண்ணுவமோ அதையே பண்ணிடுடா” என்றான் தயாகரன்.

அந்த உருவம் அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் பேசுவதை ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டு இருந்தது. அந்த உருவத்தின் மனதில் பல திட்டங்கள் அணிவகுத்துக் கொண்டே இருந்தது.

“இனி இதுங்களை நாம கொல்ல வேண்டிய தேவையே இல்லை போலயே.. சரியான பேராசைக் காரன் கிட்ட தான் மாட்டி இருக்காங்க.. மொத்த குடும்பமும் இனி சின்னா பின்னமாகப் போவது உறுதி. என் கையில போகணும்னு நினைச்சேன். ஆனா யார் கையில செத்துப் போனா என்ன?” எக்களிப்புக் கொண்டது. பேராசைக் கொண்டது. பழிவெறிக் கொண்டது.

ஆனால் அந்த எக்களிப்பையும் பேராசையையும் பழிவெறியையும் நிர்மூலமாக்கவே அவதரித்து இருந்தான் இந்த தயாகரன் என்று தெரியாமல் அங்கிருந்து நைசாக நழுவியது.

அந்த உருவம் சத்தமில்லாமல் நகர்வதை விழிகள் சிவக்க கவனித்துக் கொண்டு தான் இருந்தான் தயாகரன். ஆனால் அதை காவு வாங்க இது நேரம் இல்லையே..

அவனது வேட்டையே வேறு ஆயிற்றே.. அதனால் இந்த சின்ன துண்டு மீனை விட்டு விட்டான். அந்த சின்ன மீனை வீசி கடலில் அட்டகாசம் செய்துக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய சுறாவை பிடிக்க இருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை.

 

கொஞ்சம் கொஞ்சம் டிவிஸ்ட்டை உடைச்சு விட்டு இருக்கேன்.. படித்து விட்டு கருத்துக்களை பகிந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே..

 

Loading spinner
Quote
Topic starter Posted : July 31, 2025 2:46 pm
(@gowri)
Reputable Member

இவங்க அண்ணன்கள் தான் யார் கிட்டையோ மாட்டி இருக்காங்க போலவே....

வட்டி வாங்கினது சொன்னது எல்லாம் சும்மா.....

அவன் தான் இவங்க குடும்பத்தை பழி வாங்க பார்க்கிறாங்க....

யார் அது?????

அவளை தள்ளி விட்டதும்.....சந்தோஷ படரான் அப்படினா....

அவர்களை நல்லா தெரிஞ்சவங்களா தான் இருக்கும்......

Loading spinner
ReplyQuote
Posted : July 31, 2025 4:58 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top