“என்ன ஓ...! இல்ல என்ன ஓன்னு கேட்டேன்..” என்று விழிகளை உருட்டி அவனை முறைத்தவள்,
“இந்த போட்டோவுக்கு என்ன பொருள்?” கேட்டாள். அவன் எதுவும் பேசாமல் அவளை விட்டு எழுந்துப் போக பார்க்க,
“நோ.. நீங்க போகக் கூடாது” என்று அவனின் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமரவைத்தவள்,
“எனக்கு பதில் தெரியனும்” என்றாள் மிக மிக அழுத்தமாக.
“சொல்ல முடியாதுடி” என்றான் அவளை விட அழுத்தமாக.
“சொல்ல மாட்டீங்களா?” என்று கேட்டவள், அருகில் பழம் வெட்ட வைத்து இருந்த கத்தியை சடனாக எடுத்து தன் கழுத்தில் வைத்தவள்,
“நீங்க மட்டும் உண்மையை சொல்லன்னா. இந்த கத்தியை வைத்து என் கழுத்தை நானே அருத்துக்குவேன்” என்று பயம் காட்டினாள்.
“அருத்துக்கோ போறது உன் உயிர் தானே” என்றான் தயாகரன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
அவனை எதைக் கொண்டும் அசைக்க முடியாது என்று உணர்ந்துக் கொண்டவள்,
“தாலியை கழட்டிடுவேன்” மிரட்டினாள்.
“ரொம்ப சந்தோஷம். எனக்கு ஒரு வேலை மிச்சம்” என்று அவளை விட்டு விலகிப் படுக்கையில் சரிந்து படுத்து விட்டான்.
“இங்க பாருங்க நான் செய்ய மாட்டேன்னு நினைக்காதீங்க.. உண்மையாவே தாலியை கழட்டிடுவேன்”
“நானும் அதை தான்டி சொல்றேன் கழட்டிடு.. அப்போ தான் உன்னை விக்கிறப்ப லேசா இருக்கிற குற்ற குறுகுறுப்பு கூட போயிடும்”
“ப்ச்” என்று சலித்தாள் அவன் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதை கண்டு,
“ஐ நீட் பிசிக்கல் நீட்ஸ்” என்றாள். அவனை மயக்கி அந்த போட்டோவுக்கு விளக்கம் பெற்று விட எண்ணியே அவனிடம் கேட்டாள். காலையில் அவனை பழிவாங்க அவனது தம்பிகளிடம் கேட்டாள். ஆனால் இப்பொழுது அவளுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று அவனிடம் கோரிக்கை வைத்தாள்.
திரும்பி அவளை முறைத்தான்.
“என்ன பார்க்குறீங்க.. நானும் எவ்வளவு நாள் தான் எந்த சுகத்தையும் அனுபவிக்காம இருக்கிறது. அதனால எனக்கு இப்போ அது வேணும்” என்றாள்.
“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. உன்னை வித்துடுறேன்.. அவனுங்க உன்னை கூட்டிட்டு போய் வித விதமா சுகம் குடுப்பானுங்க” என்றான் நக்கலாக.
“எனக்கு இப்போ இந்த நிமிடம் வேணும்” என்றாள் பிடிவாதமாய்.
“என்னால முடியாது..” உறுதியாக மறுத்தான்.
“அப்போ நான் வெளில போய்” என்று அவள் வெளியேப் போக பார்க்க, அவளின் கையை பிடித்து இழுத்தான் கோவமாக.
அவன் இழுத்ததில் அவன் மீதே வந்து விழுந்தவள், அவன் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டு, “ஷேல் வீ” என்று ஆரம்பித்தவளை கடுப்புடன் பார்த்தவன், “எனக்கு மூட் வர வை.. முதல்ல.. பிறகு ஆரம்பிக்கிறேன்” என்றான்.
“ஹாங்” என்று ஒரு கணம் தடுமாறினாள். அவளின் தடு மாற்றத்தில் இவனுக்கு முகையாக சின்ன சிரிப்பு வந்தது. அதை அவள் கண்டு கொண்டாள்.
“பிராடு” என்று முணகியவள், தன் சேலையை மட்டும் கலைந்து விட்டு அவனின் வெற்று மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.
“என்ன டெம்ப்ட் பண்றியாக்கும்?” நக்கலாக கேட்டான்.
“ஏன் நீங்க டெம்ப்ட் ஆகலையா என்ன?” இவளும் நக்கலாகவே பதில் குடுத்தாள். அதை கேட்டு முடிக்கும் முன்பே போதை அவளை முழுமையாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.
மிகவும் தடுமாறினாள். அவளின் தடுமாற்றத்தை எந்த வித சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் தயாகரன்.
இதழ்களை கடித்து தன் உணர்வுகளை திசை திருப்பப் பார்த்ததாள். ஆனால் அவளால் முடியவில்லை. கை நகங்களால் தன்னையே கீறி விடப்பார்க்க, அவளின் கையை இரண்டையும் நேற்றுப் போலவே கட்டி போட்டு விட்டான்.
“விடுங்க தயாகரன்.. என்னை விடுங்க.. எனக்கு இந்த போதை வேண்டாம்.. என்னை என்னவோ செய்யிது.. ப்ளீஸ் எனக்கு இந்த போதை வேண்டாம்.. இதுல இருந்து நான் வெளிய வரணும்” என்று கண்கள் சொருக சொன்னவளை பார்த்தவனுக்கு நெஞ்சு கனத்துப் போனது.
அவளை விட்டு விலகி இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டான். தயாகரன் கையை கட்டிப் போட்டதால் கால் விரல் நகங்களை கொண்டு கீறி காயம் செய்துக் கொண்டவளுக்கு இன்னும் போதை தலைக்கு ஏற கண்கள் எல்லாம் சிவந்துப் போனது.
மேற்கொண்டு கண்களில் இருந்து அடக்கி வைத்து இருந்த கண்ணீரும் ஆறாக பெருக,
“நீயும் எங்க அண்ணனும் எப்படிடா ஒரே போட்டோவில். அதுவும் தோள் மேல கைப்போட்டு.. நீ யாரு.. எங்க அண்ணன் எங்க..? உனக்கும் என் அண்ணனுக்கும் என்ன சம்மந்தம்? உனக்கு ஏற்கனவே எங்க அண்ணன் கூட பழக்கம் னா ஏன் எங்களை இப்படி சித்ரவதை பண்ற? உங்க ரெண்டு பேருக்கும் எதாவது முன் விரோதமா?” பாதி மயக்கத்தில் கேட்டவளை பார்த்தானே தவிர அவனது இதழ்கள் அழுத்தமாய்ப் பூட்டிக் கொண்டது.
நேற்று போலவே தன் மயக்கத்தை போதையை தெளிய வைக்க நாக்கை கடித்துக் கொண்டாள்.
நேற்றைக்கு அவனை தடுத்து திட்டி தீர்த்தவள், இன்றைக்கு அவளே வழுக்கட்டாயமாக அவனிடம் கையை நீட்டியதற்கு காரணம் அவன் தோளோடு தோள் சேர்ந்து நின்ற அண்ணனை கண்ட பிறகு தான்.
தயாகரன் மீது நேற்றைக்கு காலையில் இருந்த நம்பிக்கை இந்த நொடியில் மீண்டும் வந்தது. நேற்றைக்கு அவளை விலை பேசியது கூட ஏன் கண் துடைப்பாக இருக்கக் கூடாது என்று தோன்றியது.
எதோ காரணம் இருக்கப் போய் தான் தன்னை இந்த போதை மருந்துக்கு பழக்கப் படுத்துகிறான் என்று புரிந்தது.
ஆனால் இந்த போதையை அவள் கட்டுப்படுத்திக் கொண்டு தன்னை தன் சுயத்தை நிலை நிறுத்திக் கொள்ள அவள் முயன்றாள். அதில் அவளின் உடம்ம்பில் சில பல காயங்கள் ஏற்படுத்திக் கொண்டாள். அந்த காயங்களின் எரிச்சலிலும் வலியிலும் தன் சிந்தை மங்கப்படுவதை தடுத்து நிறுத்திக் கொண்டாள்.
அவளின் கையில் நேற்றைக்கு இருந்த காயத்தின் மீது இன்றைக்கும் நகங்களை வைத்து அழுத்திக் கீறிக் கொண்டு, பற்களால் இதழ்களை கடித்து காயம் செய்துக் கொண்டாள்.
அவள் தன்னை தானே வேதனை படுத்திக் கொள்வதை பார்துவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வேகமாய் எழுந்து அவளின் மோவாயை பற்றி தன் இதழ்களால் அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
மிக மென்மையாக முத்தமிட்டான். உயிரை உருக்கி எடுக்கும் அளவுக்கு அந்த மென்மை இருந்தது. அவனது முத்தத்தில் அவளுக்கு பின் முதுகில் மின்னல் வெட்டிப் போனது.
அந்த உணர்வுகளில் இருந்து வெளியே வர முயற்சித்து,
“விடுடா.. விடு என்னை” என்று அரற்றினாள்.
“நீ தானே பிசிக்கல் நீட்ஸ் கேட்ட..”
“ஆனா இப்போ வேண்டாம்” என்றாள் மிகத்தெளிவாக.
“ஏனாம்?” நக்கலாக கேட்டவன் அவளின் கையை அவிழ்த்து விட்டான்.
போதையின் அளவை விட அவள் நெஞ்சில் இருந்த காயங்களும், கேள்விகளும் அவளை போதைக்கு இழுத்துச் செல்ல விடாமல் பார்த்துக் கொண்டது.
அதனால் கொஞ்சம் தெளிவாகவே இருந்தாள். ஆனாலும் எப்பாவாவது இழுத்து சொறுகும் அந்த போதை உணர்வில் இருந்து முழுமையாக வெளிவர பார்த்தாள். அதற்குள் இவன் அவள் மீது முழுமையாக படர்ந்து விட்டான்.
“எனக்கு உன் பிசிக்கல் நீட்ஸ் வேண்டாம்” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ஆனா எனக்கு வேணுமே.. சும்மா இருந்தவனை நீ தானேடி உசுப்பி விட்ட. அதனால எனக்கு இப்பவே வேணும். அதுவும் புடவை எல்லாம் அவிழ்த்து போட்டு என்னை சீண்டி விட்டது நீ தானேடி” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.
“நோ முடியாது” என்று தளர்ந்துப் போன கையை வைத்து தன் மீது இருந்து அவனை தள்ளி விட பார்த்தாள். ம்ஹும் அவனை தள்ளி விடவே முடியவில்லை.
“ப்ளீஸ் என்னை விடு” என்று துடித்தவள் அவனின் தொடுகையில் அவளின் உள்ளம் மெழுகாய் கரைந்துப் போக தவியாய் தவித்துப் போனாள்.
ஒரு பக்கம் அவளுக்குள் செலுத்திய போதை, இன்னொரு பக்கம் அவள் கழுத்தில் தாலி கட்டிய கணவன் காட்டும் வேட்கையின் விளைவில் ஏற்படும் மயக்கம் என இரு மயக்கத்துக்கும் தன்னை ஆட்படாமல் தற்காத்துக் கொள்ள முயன்றாள்.
அவளின் முயற்சியை பார்த்தவன்,
“உன் உடைகளை கலைக்க போறேன்டி” என்று சொல்லிக் கொண்டே அவளின் மேல் உடையில் கை வைத்தான். அவளுக்கு விழிகளின் ஓரத்தில் நீர் கசிந்துக் கொண்டே இருந்தது.
“ப்ளீஸ் என்னை விடு” என்று கெஞ்சியவளை பெருமூச்சு விட்டுப் பார்த்தவன்,
“ஐ நீட்” என்று மட்டும் சொன்னவன் அவளிடம் கவிழ்ந்துக் கொள்ள உயிர் துடித்துப் போனாள் தயாழினி.
“வேணாம் ப்ளீஸ்” என்று கெஞ்சியபடியே தன் மீதிருந்து அவனை தள்ளி விடப் பார்த்தாள். ம்ஹும் அவனை தள்ளி விடவே முடியவில்லை. அவளை விட அவனது பலம் அதிகமாயிற்றே..
நிற்காமல் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அடித்து சாய்க்கும் மயக்கத்தை துரத்தி விட்டு, முழு பலத்தையும் ஒன்று திரட்டி தன் மீது கவிழ்ந்து இருப்பவனை தள்ளி விட்டாள். இரு கையை கொண்டு அவனின் இரு பக்க தோள்களையும் பிடித்து, அவனுக்கு கீழே சிக்கி இருந்த கால்களை சற்றே குறுக்கி கொண்டு வந்து அவனது வயிற்றில் வைத்து முழு பலத்தையும் பிரயோகப்படுத்தி எத்தி விட்டாள் அவனை.
அவளின் அந்த செயலில் சற்றே தடுமாறி அவளுக்கு அருகில் போய் விழுந்தான் தயாகரன்.
அவனால் அவளின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்கவே முடியவில்லை.
“பரவயில்லையே.. இந்த போதையிலும் செம்மையா சமாளிக்கிறியேடி” என்றவனை விட்டு வேகமாக எழுந்தவள் குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
தண்ணீரில் சொட்ட சொட்ட நனைந்து நின்றாள். அவளை நனைந்து ஓடிய நீரோடு அவளின் விழிகளில் இருந்த கண்ணீரும் சேர்ந்து ஓடியது.
குளியல் அறைக்குள் ஓடிப் போனவளை பார்த்து பெருமூச்சு விட்டவன் அந்த அறையை விட்டு நடுக் கூடத்தில் போய் அமர்ந்து விட்டான்.
அந்த இடமே மிக நிசப்தமாக இருந்தது. மாடி முழுக்க இவனுக்கு மட்டும் தான் என்பதால் யாரும் அங்கு இருக்கவில்லை. எல்லோரும் கீழே தான் இருந்தார்கள்.
வீட்டை சுற்றிலும் பாதுகாப்புக்கு அவனின் அடியாட்கள் நிறைந்து இருந்தார்கள். தயாழினியின் குடும்பம் இங்கு வந்து பிறகு இரண்டு கட்ட பாதுகாப்பு அமுல் படுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும் அந்த பாதுகாப்பையும் மீறி இன்றைக்கு தயாழினியின் பெற்றோர் இருந்த அறையை நோக்கி துப்பாக்கி குண்டு விரைந்து வந்தது.
அதை எதிர் பார்த்தவன் போல குறு நகையோடு அமர்ந்து இருந்தான் தயாகரன்.
எதே அண்ணன் கூட போட்டோ வா????
அப்ப இவ அண்ணன்கள் பணம் வாங்கினதும் சும்மாவா?????
ஏன் அவ அப்பா அம்மாவை போட்டு தள்ள பார்க்கறாங்க?????
இதில் இவ அப்பா பங்கு எவலோனு தெரியலையே??????
எதே அண்ணன் கூட போட்டோ வா????
அப்ப இவ அண்ணன்கள் பணம் வாங்கினதும் சும்மாவா?????
ஏன் அவ அப்பா அம்மாவை போட்டு தள்ள பார்க்கறாங்க?????
இதில் இவ அப்பா பங்கு எவலோனு தெரியலையே??????
அடேய் நீங்க அவ அப்பா வரை எல்லாம் யோசிக்க வேண்டாம்.. அவ அண்ணன் அளவு வரை யோசிங்க க்ளூ கிடைக்கும் 💞💞♥️ நன்றி டா