Notifications
Clear all

அத்தியாயம் 25

 
Admin
(@ramya-devi)
Member Admin

அண்ணனின் மனைவி இப்படி கேட்கவும் திகைத்து போய் பட்டென்று எழுந்து நின்றார்கள் இருக்கையில் இருந்து..

“அண்ணி” என்று அலறியே விட்டார்கள் இருவரும்.

“உங்க அண்ணா என்னை வச்சு லாபம் பார்ப்பது எனக்கு புடிக்கல. என் கன்னி தன்மையை விலை பேச அவரு யாரு? நான் அதை இழக்கணும். என்னால உங்க அண்ணன் நட்டப் படணும்” என்றவளின் விழிகளில் அவ்வளவு ஆவேசம் இருந்தது.

தயாகரன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவளை பார்த்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தானே தவிர கொஞ்சமும் அசையவில்லை.

“அண்ணா... அண்ணி இப்படி” என்று திகைத்துப் போய் அண்ணிடம் முறையிட,

“உங்கக்கிட்ட தானே கேட்கிறா முடியும்னா முடியும்னு சொல்லுங்க.. இல்லன்னா முடியாதுன்னு சொல்லுங்கடா.. என்னை எதுக்கு பார்க்குறீங்க” என்றான்.

“அண்ணா” என்று அதிர்ந்துப் போனார்கள் தம்பிகள் இருவரும்.

தயாகரனை முறைத்துப் பார்த்தவள், “சே எஸ் ஆர் நோ” அவனின் தம்பிகளையும் முறைத்துக் கொண்டே கேட்டாள்.. பதில் சொல்லாமல் இப்படி முழித்துக் கொண்டு இருப்பதில் கடுப்பு வந்தது அவளுக்கு.

“சாரி அண்ணி.. உங்களை எங்க அம்மாவுக்கு சமாமா தான் பார்க்கிறோம்” என்றனர் இருவரும்.

அதில் எரிச்சல் வர, “அப்படி ஒழுக்கமா வளர்ந்த மாதிரி உங்க மூஞ்சிங்களை பார்க்க தெரியலையே.. எப்படி பார்த்தாலும் கடைஞ்சி எடுத்த அயோக்கியனுங்க மாதிரி தான் தெரியுது” என்றவளை முறைத்துப் பார்த்தான் தயாகரன்.

“இப்ப எதுக்குடி இங்க வந்து சாமி ஆடிக்கிட்டு இருக்க? என்ன வேணும் உனக்கு?”

“என் கற்பு போகணும். அதுக்கு தான் சரியான ஆளா பார்த்து தேடிட்டு இருக்கேன்” என்றவளின் பேச்சில் தண்ணீரை குடித்துக் கொண்டு இருந்த பிரபாகரனுக்கு புரை ஏறியது.

குணாவோ அடக்கப்பட்ட புன்னகையுடன் எழுந்து அவ்விடம் விட்டு சென்று விட்டான்.

“இருடா எனக்கும் வேலை இருக்கு. நானும் வரேன்” என்று குணாவின் பின்னாடி பிரபாவும் ஓடி விட்டான்.

நடு கூடத்தில் இருவர் மட்டும் தனித்து நின்று இருந்தார்கள். அவன் அமர்ந்து இருந்தான். இவள் நின்று இருந்தாள்.

“ஆர் யூ சுயர்”

“யா ஹண்ட்ரட் பெர்சென்ட் சுயர்” என்றவளை நோக்கி எழுந்து வந்தவன்,

“அப்போ உள்ள வா” என்றான்.

“நீங்க அதுக்கு எல்லாம் ஒர்த் இல்ல.. நான் வேற பாட்னர் பார்த்துக்குறேன்” என்றாள்.

“என்ன செஞ்சாலும் உன் திமிர் மட்டும் குறையவே இல்லைடி” பல்லைக் கடித்தான்.

“நீங்க முதல்ல அடங்குறீங்களா? தாலி கட்டுன பொண்டாட்டியை பேரம் பேசி விலைக்கு விற்க பார்க்கல. அவளுக்கு போதை மருந்தை குடுத்து நரகத்துல தள்ளல.. அதை விட இது மோசம் இல்ல” என்றாள்.

“ஓ பதிலுக்கு பதிலா?” நக்கலாக கேட்டான்.

“ஏன் செய்ய மாட்டேன்னு நினைக்கிறீங்களா? இன்னைக்கு உங்க தம்பிங்க கிட்ட கேட்டேன். நாளைக்கு உங்க அடியாட்கள் கிட்ட கேட்பேன்” என்றாள் திமிராக.

“அப்புறம் உன் விருப்பம்” என்று இரு தோள்களையும் குலுக்கி விட்டு அவன் நகர,

“கொஞ்சம் கூட பயமே வரலையா? சப்போஸ் என் கற்பு போயிடுச்சுன்னா ஷேக் உங்க தலையை வாங்கிடுவான்” என்றாள்.

“அந்த அளவுக்கு அவனுக்கு தில் இருக்கா என்ன?” போனவன் திரும்பி நிதானமாக அவளை பார்த்து கேட்டான்.

“ஏன் அவன் பெரிய ஆளு தானே. அதனால தானே என்னை இவ்வளவு விலை குடுத்து வாங்குறான்” சந்தேகமாக கேட்டாள்.

அவளின் கேள்வியில் இவனுக்கு சிரிப்பு வர முயன்று தன்னை அடக்கிக் கொண்டு,

“நான் நினைச்சா அவனை ஒரே அடியில வீழ்த்தி விடுவேன்டி என் தக்காளி.. போ போய் மத்தியத்துக்கு எனக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு வை” என்றான்.

“நான் என்ன சமையல்காரியா? அதெல்லாம் சமைக்க முடியாது” என்று அவனின் அறைக்குள் நுழைந்துக் கொண்டு சட்டமாய் அவனது படுக்கையில் ஏறி படுத்துக் கொண்டாள்.

“சோம்பேறி” திட்டிவிட்டு அவன் போக, அவன் தலை மறையும் வரை அமைதியாக இருந்தவள், அவனது கார் எங்கோ வெளியில் போவதை பார்த்து விட்டு வேகமாக கதவை அழுத்தமாக சாற்றி தாழ் போட்டு விட்டு அவனது அறை முழுவதும் சோதனை போட ஆரம்பித்தாள்.

அவள் எதிர்பார்த்த மாதிரி ஒன்று கூட சிக்கவில்லை. ப்ச் என்ன இது.. என்று சலித்துப் போனவளை தேடி பொன்மாரி வர, அதன் பிறகு கீழே போய் விட்டாள்.

அக்காவிடம் காலையில் இருந்து பேச எதிர் பார்த்துக் கொண்டு இருந்த தங்கைகள் அவள் கீழே வரவும் தனியாக அவளை பார்த்து நேற்றைக்கு நடந்த சம்பவங்களை கண்ணீருடன் விவரித்தார்கள்.

“நான் பார்த்துக்குறேன்.. நீங்க அழாதீங்க” என்று அவர்களுக்கு தேறுதல் சொல்லியவளுக்கு தனக்கு தேறுதல் சொல்ல முடியாமல் போனது.

“உங்க நிலையில தான் நான் இருக்கேன். உண்மையை சொல்லப்போனா உங்க நிலையை விட இன்னும் மோசமான நிலையில தான் நான் இருக்கேன்” மனதுக்குள் சொல்லிக் கொண்டவள்,

“எல்லாத்துக்கும் விடியல்னு ஒண்ணு இருந்தே ஆகணும். அதுவரை நாம பொறுமையா தான் இருக்கணும். காத்திருப்போம்” என்றவள் மேலே வந்து தன் தேடுதல் வேட்டையை தொடங்கினாள்.

கீழே மத்திய சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருந்தார்கள் பிறையும் குறிஞ்சியும். எல்லோருக்கும் ஒழுங்காக பரிமாறியவர்கள் குணாவுக்கும் பிரபாகரனுக்கு மட்டும் ஒழுங்காக வைக்கவில்லை. ஏனோ தானோ என்று கடமைக்கு கூட பரிமாறாமல் தூக்கிப் போடுவது போல நாய்க்கு வைப்பது போல பிரபாவுக்கு வைத்தாள் பிறை.

குறிஞ்சி எதுக்கு வம்பு என்று ஒதுக்கமாகவே இருந்துக் கொள்ள எண்ணி குணாவுக்கு கடமைக்கு கொஞ்சம் கீழ இறங்கி பரிமாறினாள். ஆனால் பிறை அளவுக்கு இறங்கவில்லை.

தன் வெறுப்பை பரிமாறுதலில் காட்ட செய்தாள் குறிஞ்சி.

ஆனால் பிறை அப்படி இல்லை. வெறுப்போடு சேர்த்து மொத்த கோவத்தையும் ஆத்திரத்தையும் காட்ட, பிரபாகரன் அவளை நிமிர்ந்து முறைத்துப் பார்த்தான்.

“என்னடா பார்க்கிற? நான் இப்படி தான் பரிமாறுவேன். நாய்க்கு எப்படி பரிமாற்ற முடியுமோ அப்படி தான் உனக்கு பரிமாறுவேன். ஏன்னா நீயும் நாயும் ஒன்னு தான் என்னை பொறுத்தவரை” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னவளை நிமிர்ந்துப் பார்த்தவனின் கண்களில் அவ்வளவு கோவம் இருந்தது.

“ஏய்” என்று அவளின் காதில் ஊருமியவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அவனை தாண்டி போய் பொன்மாரிக்கு பரிமாறினாள்.

நாய் என்று சொன்ன பிறகு அந்த உணவை அவனால் சாப்பிட முடியுமா என்ன? அப்படியே வைத்து விட்டான்.

அவனின் ரோசத்தை இதழ் பிதுக்கி பார்த்தவள்,

“உங்களுக்கு மட்டும் தோல்ல உணர்வு இருக்குன்னு காட்டுறீங்களோ” நக்கலாக கேட்டவள் மீண்டும் அவனை தாண்டி போனவளை,

“ஏய் சும்மா சும்மா என்னை சீண்டி விட்டுட்டு இருந்த.. பிறகு நான் மனுசனா இருக்க மாட்டேன்டி” அடிக்குரலில் எச்சரித்தான்.

“இப்ப மட்டும் நீ என்ன மனுசனாவா இருக்க.. எப்படியும் உன் கிட்ட வாங்கி கட்ட தான் போறேன். அதுக்கு என் மனமாற உன்னை நாலு திட்டாவது திட்டிட்டு வாங்கிக்கிறேன். எனம்னசு ஆறும்ல” என்றவள்,

“இந்த நாய் சாப்பாட்டை கூட இவ்வளவு இரசிச்சு சாப்பிடுறியேடா அந்த அளவுக்கா காஞ்சி போய் கிடக்குற” ஏகத்துக்கும் நக்கல் செய்தவளின் பேச்சில் பல்லைக் கடித்தவன் சாப்பிடாமல் தட்டை தூக்கி அடித்து விட்டு, கையை உதறி விட்டு எழுந்து போய் விட்டான்.

இந்நேரம் அவள் பேசின பேச்சுக்கு அவளின் கன்னம் பழுத்து இருக்கும். ஆனால் அவள் மீது ஆத்திரத்தில் கையை வைத்து விட்டு பிறகு யார் அவனின் அண்ணிடம் வாங்கி கட்டுவது. எனவே அமைதியாக போய் விட்டான். ஆனாலும் கலவரம் செய்யாமல் போகவில்லையே.

அவளுக்கு சுத்தம் செய்யும் வேலையை கொடுத்து விட்டே அங்கிருந்து அகன்றான்.

“பொறுக்கி திமிரெடுத்து சுத்துறான்” என்று பல்லைக் கடித்தவள் அவன் வீசி சென்ற தட்டையும் உணவையும் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

சுற்றி இருந்த அனைவரும் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தங்களின் உணவில் கவனத்தை திருப்பினார்கள்.

பொன்மாரி எதையோ பேச வர, சட்டென்று அவரின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டார் அவரின் கணவன் சிவலிங்கம்.

நிமிர்ந்து அவரை பார்த்தார். சிவலிங்கம் கண்ணை காட்டி வேணாம் என்று சொல்ல, அமைதியாகி விட்டார்.

“நீ ஏன்டி அவன் கிட்ட வாயை குடுக்குற?” கேட்டுக் கொண்டே தங்கைக்கு உதவி செய்ய வந்தாள் குறிஞ்சி.

“அவனுக்கெல்லாம் இது பத்தாதுக்கா. இன்னும் அவனை வச்சு செய்யணும்” கறுவினாள்.

பெருமூச்சு விட்ட குறிஞ்சி நிமிர்ந்து குணாவை பார்த்தாள். அவனின் முகத்தில் இருந்த இறுக்கத்தில் அடி நெஞ்சு வரை பயம் வந்து ஒட்டிக் கொள்ள வேகமாய் அவனிடம் இருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.

அன்றிரவு தனக்கு போதை மருந்தை செலுத்த வந்தவனிடம் எந்த முரண்டும் பிடிக்காமல் தன் கையை நீட்டினாள் தயாழினி.

அவளிடம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருப்பதை பார்த்து, விழிகளை சுறுக்கியவன்,

“என்னடி நேத்தைக்கு அந்த ஆர்பாட்டம் பண்ணின.. இன்னைக்கு என்னவோ ரொம்ப அமைதியா காண்பிக்கிற.. இந்த போதை உனக்கு அவ்வளவு ரொம்ப பிடிச்சு போச்சா என்ன?” நக்கலுடன் கேட்டான்.

அவள் பதிலே பேசவில்லை. அதே போல அவள் நீட்டிய கையை மடக்கவும் இல்லை. அப்படியே நீட்டிக் கொண்டே நின்று இருந்தாள்.

“என்னடி ஆச்சு? சிலை போல நிக்கிற?” கேட்டவன் அவளின் கையில் போதை மருந்தை ஏற்றினான் கொஞ்சமும் தயங்காமல்.

“போட்டாச்சா?” என்று கேட்டவள் எதுவும் பேசாமல் கட்டிலில் போய் அமர்ந்து விட்டாள். அவளின் இந்த திடீர் செய்கையில் புருவம் சுறுக்கியவன்,

“உன் கிட்ட தான்டி கேட்டுட்டு இருக்கேன்.. என்ன ஆச்சு? ஏன் இப்படி மரம் மாதிரி இருக்க.. எப்பவும் கத்தி, அழுது ஆர்பாட்டம் செய்வியே.. இன்னைக்கு என்ன ஆச்சு?” என்றவனை ஆழ்ந்துப் பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் மின்னியது. ஆனால் கண்ணீர் அவளின் விழிகளை தாண்டி கீழே பயணிக்கவில்லை.

அவளின் புது விதமான செயல்களில் இன்னும் யோசனையானவன்,

“ஒரு வேலை இவன் கிட்ட கத்தி என்ன ஆகப் போகுதுன்னு விட்டுட்டியோ” நக்கலாக கேட்டான். ஆனால் அதற்கும் அவள் எந்த எதிர் விளைவையும் காட்டவில்லை.

“உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று நக்கலாக கேட்டுக் கொண்டே அவளுக்கு அருகில் அவளை இடித்தபடி படுக்கையில் வந்து அமர்ந்தவன் அவளின் நெற்றியில் கையை வைத்தான்.

“சூடு கூட இல்லையே” என்று கேலி பேசிய நேரமே வேகமாய் அவன் புறம் திரும்பி அவனின் இதழ்களை வெடுக்கென்று கவ்விக் கொண்டாள் தயாழினி.

அதை அவன் கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை. ஆனாலும் அவளை தடுக்கவில்லை. அவளின் இடுப்பில் கையை வைத்து அழுத்தமாக பற்றிக் கொண்டான்.

அவனின் முரட்டு இதழ்களில் இருந்து தன் இதழ்களை விடுவித்துக் கொண்டவள், தன் இடுப்பை பற்றி இருந்தவனின் கையை விலக்கி அந்த கையில் ஒரு புகைப்படத்தை எடுத்து வைத்தாள்.

அந்த புகைப்படத்தை பார்த்தவன், “ஓ...!” என்றான் எந்த அலட்டலும் இல்லாமல்.

Loading spinner
Quote
Topic starter Posted : July 30, 2025 1:49 pm
(@gowri)
Reputable Member

ஏதும் அவனோட ஃபோட்டோ தானா????

ஏகன் போல ஒரிஜினல் போட்டோவா????

Loading spinner
ReplyQuote
Posted : July 30, 2025 8:45 pm
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @gowri

ஏதும் அவனோட ஃபோட்டோ தானா????

ஏகன் போல ஒரிஜினல் போட்டோவா????

 

ஆமாம் மா ஆனா ஏகன் மாதிரி இல்ல

 

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 31, 2025 4:18 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top