அவனது அந்த செயலில் முதுகு தண்டில் ஆயிரம் மின்னல் மின்னிச் சென்றது.
“நோ... ப்ளீஸ் ங்க” என்று அவள் கெஞ்ச, பஞ்சவனின் விழிகளும் மோகத்தில் சிவந்துப் போனது.
“ஐ வான்ட் டீப் கிஸ்” என்று சொல்லி அவளின் கழுத்தை வளைத்துப் பிடித்தவன் அவளின் தோளில் இருந்து இதழ்களை அகற்றிக் கொண்டு அவளின் மென்மையான இதழ்களில் வன்மையாக முத்தம் வைக்க ஆரம்பித்தான்.
இன்று தான் இருவரும் முத்தம் பழகினார்கள். அதற்குள் அதிலிருந்து விடுபட முடியாமல் மாய வலைப்போல அதற்குள்ளே விழுந்து மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மகரா விடுபட எண்ணினாலும் பஞ்சவன் அவளை விடுவிக்க மனம் வராமல் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டே இருக்கிறான்.
தப்பிக்கும் மார்க்கம் தெரியாமல் பெண்ணவள் தடுமாறிக் கொண்டே இருக்கிறாள். இரு பிள்ளைகளும் சமத்தாய் அது அது அவர்களுடைய வேலையை பார்த்துக் கொள்ள இங்கே அப்பாவும் அம்மாவும் டீப் கிஸ்ஸில் இருந்தார்கள்.
கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் தன் செயலை நொந்துக் கொண்டு அறையின் உள்ளே வந்தாள் மகரா. இனி இது தொடரக் கூடாது என்று பஞ்சவனிடம் கண்டிப்பாக சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி இருந்தாள்.
ஆனால் பஞ்சவனோ அவளுக்கு பேசவே இடம் கொடுக்காமல் தன் முரட்டு முத்தத்தால் அவளை திணறடித்தான்...
ஆணவனுக்குள் காதல் முளைக்கும் வரை தான் பெண்ணவளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுப்பான். இப்பொழுது தான் பஞ்சவனுக்குள் காதல் கதகளி பட்டாபோட்டு அமர்ந்து விட்டாதே இனி எங்கிருந்து மகராவின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு அவன் மதிப்பளிப்பான்.
அதற்கு வாய்ப்புகளே இல்லை. இனி மகரா மொத்தமும் பஞ்சவனுக்கு தான். அதை அவளே மாற்ற எண்ணினாலும் அவன் விட மாட்டான்..
அதை அனைவரும் உணரும் நாள் வரும். ஏன் மகராவே அடி மனதில் இருந்து உணரும் நாள் வரும்...
--
முத்தம் பழகி பழகி மகராவுக்கு இதழ்கள் எல்லாம் எரிந்தது. ஆனால் பஞ்சவன் அவளை விடும் மார்க்கம் தான் தெரியவில்லை.
“ப்ளீஸ்...” என்று அவள் கொஞ்சிய கெஞ்சல்கள் எல்லாம் பஞ்சவனுக்கு பயந்து எங்குப் போய் ஒளிந்துக் கொண்டதோ தெரியவில்லை. அவளின் சத்தமெல்லாம் சந்தமில்லாமல் அடங்கிப் போனது. முத்தம் வெறும் முத்தமாக மட்டுமே இருந்தது... அதையே அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதில் அவன் அடுத்த கட்டத்துக்கு சென்றால்... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
ஒரு கட்டத்துக்கு மேல் அவளுக்கு மூச்சு முட்டிப் போக சட்டென்று அவனது தோளில் கையை வைத்து பின்னாடி தள்ளி விட்டாள்.
அவளின் நிலை புரிய அவனாகவே விலகினான். நெஞ்சில் கையை வைத்து அவள் மூச்சு வாங்கும் அழகை பார்த்து இரசித்தவன்.
“ரெண்டு நாளைக்கு ஊருக்கு போக வேண்டிய வேலை இருக்கு மகரா” என்று சொல்லி அவளின் படுக்கையில் மிக உரிமையாக தலைக்கு பின்னாடி கைக்கொடுத்து கால் நீட்டி நிமிர்ந்துப் படுத்தான்.
அவளுக்கு அவன் படுத்தது எல்லாம் கவனத்தில் பதியவில்லை. மாறாக அவனது முகத்தில் குடியிருந்த வேதனை தான் பதிந்தது.
“எதுவும் பிரச்சனையாங்க? இன்னைக்கு காலையில தான் வந்தோம்” என்று அவனது முகம் பார்த்து துயரத்துடன் கேட்டாள்.
“ம்ம்ம்” என்று மட்டும் சொன்னவன் அவளின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்து,
“உன் மடியில படுத்துக்கட்டுமாடி” என்று கேட்டான்.
அவள் திகைத்துப் போக,
“எதுவும் பண்ண மாட்டேன்” என்று அவளின் மடியில் வந்து படுத்துக் கொண்டான்.
படுத்தவன் அவளது கையை பற்றி தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு அண்ணாந்து அவளின் முகத்தைப் பார்த்தான்.
“பேசாம எதையும் கண்டுக்காம முன்னாடி இருந்த மாதிரி மும்பையிலையே இருந்து இருக்கலாம். அவங்களை எல்லாம் நான் தான் பார்க்க ஆசைப்பட்டு யுவன் மூலமா சென்னை முகவரி கொடுத்து இருந்தேன். ஆனா அவங்களுக்கு நான் ஏன் திரும்பி வந்தென்ற அளவுக்கு யோசிக்கிறாங்க மகரா” என்று வேதனைப் பட்டான்.
அவனது வேதனை அவளையும் தாக்க, அவனது நெஞ்சை நீவி விட்டாள்.. அவளால் செய்ய முடிந்தது இது மட்டும் தானே...
“ஒரு பக்கம் அப்பா சித்தப்பா நிலத்தை விக்கனும்னு சொல்லி அதுக்கு எல்லா ஏற்பாடும் செய்துட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் எங்கம்மா எனக்கு அவங்களோட இன்னொரு அண்ணன் மகளை கட்டி வைக்கக்கணும்னு பார்க்கிறாங்க... இதுக்கு இடையில என் மனம்...” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே,
அவனது துயரம் கண்டு மனம் வெதும்பிப் போனவள்,
“நான் ஒன்னு சொல்லவாங்க...” என்று அவள் ஆரம்பித்தாள்.
“உன் பங்குக்கு நீ என்ன சொல்ல போற மகரா?” என்று அவளை ஆழம் பார்த்தான். அவனது கேள்வியின் வீரியம் புரிய அவனை பார்க்காமல் பார்வையை திருப்பிக் கொண்டவள்,
“உங்களுக்கு நான் வேணாங்க... உங்க அம்மா சொன்ன பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாமே... நான் எப்பவும் போல உங்க பொண்ணுக்கு பால் குடுக்குறேன். இதுக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்றவளின் மடியில் இருந்து பட்டென்று எழுந்து விட்டான்.
அவன் அப்படி எழவும் விக்கித்துப் போனாள்.
“சோ நான் என் மகளோட பசிக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இல்லையா?” என்று அவளை அழுத்தமாக பார்த்தபடியே கேட்டான்.
“அய்யோ இல்லங்க நான் அப்படி சொல்லவரல..” என்று அவள் பதறிப் போனாள்.
“வேற என்ன மீனிங்கள மேடம் பேசுனீங்க” அடிக் குரலில் சீறினான்.
“என்னங்க” என்று பாவமாய் பார்த்தாள். அவனது முதல் கோவம் அவளை வருத்தியது.
“நானே நிம்மதி இல்லாம தான் உன் கிட்ட வந்தேன். ஆனா நீயும் ஏன்டி இப்படி பேசி என்னை கொல்ற” என்று தன் வேதனையை விழுங்கிக் கொண்டு அவன் கேட்க துடித்துப் போனாள்.
“அப்படி இல்லங்க... நான் அப்படி சொல்ல வரல... இரண்டு பிரச்சனையில ஏதாவது ஒன்றை தீர்க்கலாம் இல்லையா...? அதுல நீங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பீங்கல்ல.. அதுக்கு தான் சொன்னேன்” என்றாள்.
“ப்ச் மகரா...” என்று அவளின் இரு கன்னங்களையும் தன் உள்ளங்கைகளால் தாங்கியவன்,
“அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லடி... இதை விட அதிகமான பிரச்சனையை நான் சமாளிச்சு இருக்கேன்” என்றான்.
“ஆனா இப்போ உங்களால சமாளிக்க முடியலையேங்க... ஏன்னா உங்களை எதிர்த்து நிக்கிறது உங்க குடும்பம் ஆச்சே...” அவள் சொல்ல, கேட்டுக் கொண்டவன் தலையை அசைத்தான் ஆமாம் என்பதாய்.
“அதுக்கு தான் சொல்றேன்” என்று அவள் ஆரம்பிக்க,
“இப்படியே பேசிட்டு இருந்தா இப்பவே இங்கயே உன்னை தூக்கிப்போட்டு கண்டம் பண்ணிடுவேண்டி..” என்று அவன் உறும, திகைத்துப் போய் அவனை பார்த்தாள் மகரா.
“என்ன பார்வை பண்ண மாட்டேன்னு நினைக்காத... உன் மேல பைத்தியம் புடிச்சுப் போய் இருக்கேன். எப்போ மேல பாய்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா நீ இப்படியே பேசிட்டு இருந்தா அது எப்போ வேணாலும் நடக்கும்” என்று முறைத்தான்.
மகரா கப் சிப் ஆகிவிட்டாள். அதன் பிறகு எதுவும் பேசவில்லை. மீண்டும் அவள் மடியில் அவன் படுக்க அவனை தடுக்கவில்லை அவள்.
“உன்னை அடிமனம் வரை விரும்பி தான்டி கல்யாணம் பண்ணுனேன்” என்றான் பெருமூச்சு விட்டு. மகரா எந்த பதிலும் பேசவில்லை.
அவள் பேசவேண்டும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை.
“இந்த நெருக்கத்தை வேற யார்க்கிட்டயும் நான் உணர்ந்தது இல்லை மகரா... நீ தான் என் உலகம்னு இந்த ஒரு மாத காலமும் உணர்ந்துட்டே இருக்கிறேன்.. அசால்ட்டா தூக்கிப் போட்டுட்டு போக சொல்ற...” அவன் ஆதங்கபட்டான். மகராவின் கை அவனது சிகைகுள் நுழைந்தது. மெல்ல மெல்ல கோதி விட அந்த சுகத்தில் கண்களை மூடிக் கொண்டான்.
இருவரும் எதுவும் பேசவில்லை. பஞ்சவன் அவனது நேசத்தை சொல்லி விட்டான். அதை மகராவும் உணர்ந்துக் கொண்டாள் அதி நெஞ்சு வரை. அதனால் எந்த விலக்கமும் அங்கு பகிரப்படவே இல்லை.
இந்த புரிதல் தானே இருவரையும் கட்டிப்போட்டு வைத்து இருக்கிறது.. அதை உணர்ந்துக் கொண்டவர்கள் மற்றவருக்கு உறுதுணையாக இருக்க முடிவெடுத்துக் கொண்டார்கள் மனதினுள்.
அவள் அழுந்த கோதி குடுக்க குடுக்க பஞ்சவனுக்கு மகரா வேண்டும் போலவே தோன்றியது... ஆனால் இது சரியான சூழல் இல்லை என்று புரிய தன் உணர்வுகளை அடக்க வேகமாய் அவளின் பின்னங்கழுத்தை அழுந்தப் பிடித்து தன் முகத்துக்கு கீழே இழுத்துக் கொண்டவன் அவளின் இதழ்களில் வன்மையாக தன் இதழ்களை புதைத்துக் கொண்டான்.
அதை எதிர்பாராதவள் திகைக்க, அவளின் இதழ்களில் இருந்து தன் இதழ்களை சற்றே நகர்த்தி,
“முத்தம் குடுக்கும் போது கொஞ்சமாச்சும் மெல்ட் ஆகுடி” என்று சொல்லிவிட்டு அவளின் இதழ்களில் பஞ்சவன் முக்குளிக்க ஆரம்பித்தான். அவன் சொன்ன சொல்லில் இருக்கமாய் இருந்த உடல் கொஞ்ச கொஞ்சமாய் தளர, இதழ்களில் மெல்லிய புன்னகை. அதை அவளின் இதழ் விரிதலில் கண்டுக் கொண்டவன் இன்னும் அழுத்தி அவளுக்கு முத்தம் கொடுத்தான்.
ஒருவரில் ஒருவர் லயித்துப் போய் இருக்க சிறிது நேரத்திலே அதை பொறுக்க முடியாமல் பிள்ளைகள் இருவரும் நகர்ந்து அவர்களிடம் வர அங்கே ஒரு குடும்ப காவியம் உருவாகிப் போனது.
இரவு உணவு எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து உண்டுவிட்டு யுவன் குழந்தையோடு பஞ்சவனின் வீட்டுக்கு முன்னாடி போக பஞ்சவன் மட்டும் தரையை தேய்த்துக் கொண்டு அங்கேயே நின்றான்.
“குட்நைட்” என்றாள் மகரா.
“ம்ம்” என்று மட்டும் சொன்னானே தவிர பதிலுக்கு அவன் சொல்லவில்லை.
“விஷ் பண்ணா திரும்பி விஷ் பண்ணனும் பஞ்சவன் சார்” என்றாள்.
“ப்ச்... போடி” என்றவன், “அந்த வீட்டுக்கு கண்டிப்பா நான் போகனுமா?” என்று சிறுபிள்ளையாய் அவன் போக மறுக்க சிரிப்பு வந்தது அவளுக்கு.
“போய் தான் ஆகணும்..” என்று இவள் கதவில் சாய்ந்துக்கொண்டு அவனை பார்த்தாள். குழந்தை தூங்கி விட்டான். இனி தான் ப்ராஜெக்ட் ஒர்க் செய்ய ஆரம்பிப்பாள்.
“ப்ராஜெக்ட் ஒர்க் தானே பார்க்கப் போற.. நானும் வரவா?” கேட்டான்.
இதற்கு முன்னாடி ஊரில் இருந்தவரை இருவரும் ஒரே அறையில் தான் தங்கி இருந்தார்கள். அப்பொழுது எல்லாம் எதுவும் தோன்றவில்லை. ஆனால் இப்பொழுது இந்த தனிமை இருவரையும் வெகுவாக அல்லவா ஈர்த்துக் கொண்டு இருக்கிறது.
பஞ்சவன் இன்றிரவு இங்கே தங்கினால் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அடுத்தக் கட்டத்துக்கு சென்றுவிடும் என்று இருவருக்குமே தெரிந்து இருந்தது. அதனாலே பஞ்சவன் வீட்டை விட்டு வெளியே சென்றான்.
இவளும் அவனை அங்கேயே தங்க சொல்லவில்லை. இருவரின் மன உணர்வும் ஒன்று போலவே இருக்க இந்த தருணம் தங்களின் வாழ்க்கையை துவக்க எண்ணவில்லை.
எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல் ஒருவரை ஒருவர் நாடி தேடி உயிர் கரைந்து உயிராய் மற்றவரை எண்ணி ஒருவரில் ஒருவர் மூழ்க வேண்டும். அப்படி ஒரு தேடலை கூடலை தான் இருவரின் மனமும் எதிர்பார்த்தது.
இப்படி உணர்வுகளின் பிடியில் மோகத்தையும் காமத்தையும் அனுபவிக்க முடியாதே... அவனுக்கு அவளின் தேவை அதிகமாக இருக்கிறது தான். அதே போல அவளுக்கும் அவன் தேவை தான். ஆனாலும் அந்த தேவை தீர்க்க முடியாத காதலாகி ஒன்றாய் கசிந்து உள்ளம் உருகி முடிவில்லாத தேடலாக மாறிய பிறகு கூடி குலாவி வாழ்ந்திட ஆசை வந்தது.
“ம்ம்ம் வாங்க... கையையும் காலையும் நீட்டாம இருந்தா ஓகே தான்” என்றாள் இவள்.
“அப்போ என் லிப்ஸ் நீண்டா ஓகேயா?” விழிகளில் ஆசை மின்ன அவளின் ரத்தச் சிவப்பாகி இருந்த உதடுகளை பார்த்துக் கொண்டே கேட்டான்.
அவன் அப்படி கேட்கவும் முகம் சிவந்தவள்,
“இந்த லொள்ளுக்கு நீங்க தனியவே ஒர்க் பண்ணுங்க. நான் தனியா இந்த வீட்டுல ஒர்க் பண்ணிக்கிறேன்.. குட்நைட்” என்று சொல்லி கதவை சாற்றியவள் அந்த கதவின் மீதே சாய்ந்து நின்றாள். என்னவோ நெஞ்செல்லாம் ஒருவித இளமை துள்ளல்..
அவளுக்கு நன்றாக தெரியும் பஞ்சவன் அந்த இடத்தை விட்டு சென்று இருக்க மாட்டான் என்று. ஆனாலும் அவனை சீண்டி விட அவளுக்கு ஆசை வந்தது. அவன் மீது இருந்த ஆசை மெல்ல மெல்ல கூடிப் போக விழிகள் சிவந்ததுப் போனது.
விழிகளில் படிந்த சிவப்புடன் கதவை கொஞ்சமாய் திறந்துப் பார்த்தாள். பஞ்சவன் ஒரு கையை நிலைப் படியில் மேலே மடக்கி வைத்துக் கொண்டு ஒரு கையால் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு இருந்தான்.
கதவும் திறக்கும் சத்தத்தில் தலையை நிமிர்த்திப் பார்த்தவன் அவள் விழிகளில் இருந்த சிவப்பை கண்டு ஒரு கணம் நிதானித்தவன் மறுகணம் அவளை இடையோடு இழுத்து வாசற்படி என்று கூட பார்க்காமல் அவளின் இதழ்களை வன்மையாகக் கவ்விக் கொண்டான். அவனது போர்சில் அவள் வில்லாக பின்னால் வளைய அவனும் அவளோடு வளைந்தான்.
அவளின் கால்கள் அவனோடு ஒட்டி இருக்க இருவரின் தலைகளும் பாதி உடம்பும் மட்டும் அவள் வீட்டின் உள்ளே இருந்தது.