“ஓகே இதோட மீட்டிங் ஓவர்... லஞ்சுக்கு பிறகு மீண்டும் மீட் பண்ணலாம்..” என்று பஞ்சவன் சொல்ல எல்லோரும் எழுந்துக் கொண்டார்கள்.
போகும் பொழுது மற்ற கொலிக்ஸ் மகராவை தங்களுடன் அழைத்துக் கொண்டு செல்ல பஞ்சவன் பட்டென்று தன் கையை அவளிடம் இருந்து உருவிக் கொண்டான்.
அதில் மகராவின் மனம் அடிபட்டுப் போனது. அடிபட்ட பார்வை ஒன்றை அவன் மீது வீசினாள்.
அலுவகல விட்டும் வந்த மகரா நேராக மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அதற்குள் பஞ்சவன் வீட்டுக்கு வந்து இருந்தான். அவனது சத்தமும் மகளின் ஆஆ... ஊஊ என்கிற சத்தமும் வெளியே வரை கேட்டது.
ஒரு கணம் அவர்களை கடந்துப் போக முடியாமல் அவளது கால்கள் தேங்கியது. பின் இழுத்துக் கட்டி அவ்விடத்தை விட்டு விரைந்து தன் வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டாள்.
வேகமாய் குளித்து விட்டு வந்தவள் மகனை கவனித்து விளையாட விட்டவள் பஞ்சவனிடம் இருக்கும் மகளை கவனிக்க உள்ளம் பரபரத்தது. ஆனால் தானாக எப்படி போவது என்று அவள் தடுமாற, சரியாக அவளது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
ஒரு கணம் உள்ளம் பதறிப் போனது. அவளுக்கு நன்றாகவே தெரியும் வந்து இருப்பது யார் என்று. அதனாலே தான் இந்த படபடப்பு.
அதிகம் கண்ணாடி பார்க்காதவள் இப்பொழுது கண்ணாடியை தேடியது அவளது கண்கள். கண்ணாடி முன்னாடி வந்து ஒரு கணம் நின்றாள். நீண்ட முடியை அவிழ்த்து விட்டு நன்றாக ஏற்றி கொண்டை போட்டு இருந்தாள். காலையில் போட்ட காஜல் இன்னும் கொஞ்சம் அவளது கண்களில் மிச்சம் இருக்க அது அவளது கண்களை இன்னும் அழகாக்கிக் காட்டி இருந்தது. குளித்து வந்ததால் புத்துணர்வு இருந்தது. இரு புறமும் முடி கற்றைகள் வந்து விழுந்து இருந்தது.
கட்டி இருந்த காட்டன் புடவை அவளின் உடம்போடு ஓட்டிப் போய் அவளின் வனப்பை அதிக எடுத்துக் காட்டிக் கொண்டு இருந்தது. காலையில் அவனது இதழ் சுவையை அறிந்தவளுக்கு என்னவோ புதுவித உணர்வு தொக்கி நின்றது.
கடவுளே இந்த எண்ணத்தை வளரவிடதே... என்று மனம் வேண்டிக் கொண்டாலும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. என்னவோ புது கணவனை தேடும் மனைவியாக தன்னை உணர்ந்தாள். அது உண்மை தான் என்றாலும் அவளின் மனம் மனைவி என்கிற உரிமையை ஏற்க மறுத்துக்கொண்டு இருக்கிறதே என்ன செய்வது.
தன்னை நொடியில் நிலை நிறுத்திக் கொண்டவள் ஆழ்ந்த பெருமூச்சை விட்டுக் கொண்ட பிறகே கதவை திறந்தாள். அங்கே அவளை ஏமாற்றாமல் பஞ்சவனும் அவனின் மகளும் நின்று இருந்தார்கள்.
குழந்தைக்காக அவள் கையை நீட்டினாள். ஆனால் அவன் கொடுக்கவில்லை. மாறாக அழுத்தமாக அவளை பார்க்க அவனது பார்வையில் அவளுக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பல பறக்க ஆரம்பித்தது.
அவனுக்கு வழிவிட்டு அவள் தான் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது. அவள் வழி விடவும் அவளை உரசியபடி உள்ளே நுழைய மின்சாரம் தாக்கிய உணர்வு அவளுக்கு. அதே நிலை தான் பஞ்சவனுக்கும்.
என்னவோ திருட்டு மாங்காயை ருசி பார்க்கும் உணர்வு அவனுக்கு. தொட்டு தாலி கட்டிய மனைவி தான். ஆனாலும் இந்த உணர்வு அவனை வெகுவாக தாக்கியது. அது நன்றாகவும் இருக்க ஆழ்ந்து அனுபவித்தான்.
கூடத்தில் கீழே விரிப்பில் படுத்து இருந்த அன்புவிடம் இவனும் கீழே அமர, அவனது கையில் இருந்த மகளை வாங்கி கீழே குனிந்தாள்.
அவன் அப்பொழுதும் மகளை அவளிடம் கொடுக்க வில்லை. அவனது மடியில் இருந்து மகளை எடுக்க சங்கடப் பட்டவள்,
“பாப்பாவை குடுங்க” என்று கேட்டாள்.
“நீயே எடுத்துக்கோ” என்றான்.
அவன் அப்படி சொல்லவும் இவளுக்கு ஒரு மாதிர் ஆகி விட இதழ் கடித்தாள். பின் துணிந்து மகளை அள்ளிக் கொள்ள, அவளது முகம் அவனது முகத்துக்கு நேராக வந்து இருக்க பஞ்சவன் கொஞ்சமும் அசையாமல் இடது கையால் அவளின் முகத்தை மட்டும் சற்றே லேசாக திருப்பி தன் இதழ்களுக்கு நேராக அவளின் இதழ்களை கொண்டு வந்தவன் நறுக்கென்று அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
“ஹக்...” என்கிற மெல்லிய ஒலி அவளிடமிருந்து பிறந்தது. அவளின் பின்னந்தலையை அழுந்தப் பற்றியவன் தன் முகத்தோடு இன்னும் அவளின் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டான்.
இதழ்களோடு இதழ்கள் மோத மிக மெல்லிய ஒலி எழுந்தது அவ்விடம். அவனின் சூடான மூச்சுக் காற்று அவளின் முகத்தில் மோதியது. ஆண்மணம் அவனிடமிருந்து வர இவளின் மனம் அதை தனக்குள் கிரக்கித்துக் கொள்ள ஆரம்பித்தது.
அதை நடுக்கத்துடன் உள் வாங்கியவளுக்கு ஆணவனின் காய் அவளின் இடையில் பதிந்துப் போக விக்கித்துப் போனாள். அவளின் உடலில் ஒரு விறைப்புத் தன்மை வர அதை உணர்ந்தவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
அவனது இதழ்கள் முத்தமிடுவதை நிறுத்தி விட்டு தன்னை கேலி செய்வது போல சிரித்து வைத்ததில் லேசாக கோவம் வர அவனை விட்டு விலகப் பார்த்தாள்.
குழந்தையோடு அவள் எட்டிப் போகவும் அவளை விட மனம் இல்லாமல் அவளின் முந்தானையை பற்றி சுண்டி இழுத்தான் பஞ்சவன்.
அதை எதிர்பார்க்காதவள் அவனது மடியிலே பிள்ளையோடு வந்து விழுந்தாள். விழுந்தவளின் விழிகளை அசையாது பார்த்தவன் குனிந்து அவளின் இதழ்களை மறுபடியும் கவ்விக் கொண்டான்.
என்ன இது என்று அவள் மூச்சடைத்துப் போய் பார்க்க,
“ஐ வான்ட்” என்று அவளின் காதில் முனுமுனுத்து விட்டு வேகமாய் அவளின் இதழ்களை ஆழமாக கவ்விக் கொண்டான்.
‘என்ன இது இப்படி ஒரு வேகம்...’ என்று அவள் தடுமாறிப் போனாள்.
பஞ்சவன் ஆழ்ந்து இரசித்து முத்தமிட தோய்ந்துப் போனாள் மகரா... வாழ்நாளில் இப்படி ஒரு முத்தத்தை அவள் அனுபவித்ததே இல்லை. முத்தமிடும் கலையில் மன்னவன் தான் போல என்று எண்ணிக்கொண்டாள்.
இல்லை என்றால் அவளின் உயிரையே ஒட்டுமொத்தமாக வாய் வழியாக உறிஞ்சி எடுப்பானா இந்த பஞ்சவன்.. நாளைக்கு எல்லாம் முத்தமே இருக்காது கிடைக்காது என்பது போல முத்தமிட்டான்.
அமர்ந்து இருந்த பொசிஷன் ஒத்துளைக்காமல் போக, “ம்ம்ம்” என்று முணகினாள். அவளது முணகளில் அதை கண்டுக் கொண்டவன் பட்டென்று முழுமையாக அவளை தன் மடிக்கும் இழுத்துக் கொண்டான்.
இடையில் இருந்த பிள்ளையை வாங்கி அருகில் படுக்க வைத்தவன் மகராவை தன் மடிக்கு இழுத்துக் கொண்டான்.
“குழந்தையை கவனிக்கணும்” என்று மெல்லிய குரலில் அவள் முணக,
“முதல்ல பிள்ளைங்களோட அப்பனை கவனிடி” என்றவன் அவளை தன் வசம் இழுத்துக் கொண்டான். அவளின் இதழ்களில் இதழ் புதைத்தவன் கைகளை அவளின் மெல்லிய இடையில் வைத்தான்.
மீண்டும் அவள் நிமிர்ந்துக் கொள்ள, போன முறை போல சிரிக்காமல் அவளின் முதுகில் கை வைத்து மெல்ல நீவி விட்டவன், “ரிலாக்ஸ்” என்று சொல்லி முத்தத்தை தொடர்ந்தான்.
அதோடு அவனது கைகள் மெல்ல மெல்லா இடையை பற்றியது. இந்த முறை அவளது உடல் நிமிரவில்லை. மாறாக குழைந்துப் போனது. அதை உணர்ந்துக் கொண்ட பெண்ணவளுக்கு வெட்கமாய் போய் விட்டது. மன்னவனுக்கோ கொண்டாட்டமாய் போனது. அவளின் குழைவு கொடுத்த ஊக்கமோ என்னமோ மெல்ல மெல்ல கை இடையை விட்டு நகர்ந்து அவளின் அழகில் படிந்தது. விக்கித்துப் போனாள் மகரா.
அதிர்ந்து தன் முகத்தை அவனது முகத்தில் இருந்து எடுத்துக் கொண்டவள் திகைத்துப் போய் பஞ்சவனை பார்த்தாள்.
“ரிலாக்ஸ்டி” என்றவன் மீண்டும் அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டான்.
“ப்ளீஸ்” என்று அவள் மறுக,
“ஒன்னும் இல்லடி” என்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். பெண்ணவளின் வாசம் அவனை மயக்க தன் மயக்கம் தீர பெண்ணவளிடமே தஞ்சம் இருந்தான்.
“பேபியை கவனிக்கணும்” அவள் நினைவுப் படுத்த பெருமூச்சு விட்டவன் அவளது தோளில் இருந்து தலையை எடுத்துக் கொண்டான். அவளும் ரிலாக்ஸ் ஆக பிள்ளையை தூக்கப் போனாள்.
அந்த நேரம் அவளின் இடையோடு இரண்டு கைக்கொடுத்து பின்னிருந்த வாக்கிலே அவளை தன் மடியில் அம்ரவைத்துக் கொண்டவன் அவளின் வெற்று முதுகில் முகம் புதைத்துக் கொண்டான்.
என்னவோ மீளா புதைக்குழி போல் அவளை நோக்கியே அவனது மனம் நகர ஆரம்பித்தது. அதுவும் இதோ இப்பொழுது வண்டை இழுக்கும் பூவாய் பெண்ணவள் இருக்க அவளை விட்டு அவனால் விலகவே முடியவில்லை.
என்னவோ காந்தம் போல ஒரு ஈர்ப்பு அவளிடம் இருக்க அவளை விட மறுத்தவன் அவளிடமே ஒட்டிக் கொண்டான். அலுவலகத்தில் வைத்து அவளை முத்தமிட்டது வேறு அவனை இம்சித்துக் கொண்டே இருக்க அந்த சுவை வேண்டும் போலவே இருந்தது அவனுக்கு.
“பேபி” என்று அவள் ஆரம்பிக்க, முன்பை விட அதிகமாய் அவளின் முதுகில் முகம் புதைத்து லேசாக பற்கள் பட கடித்து வைத்தான். அவனது இந்த அதிரடியில் திகைத்தவள் விக்கித்துப் போனாள்.
“என்ன கடிக்கீறீங்க” என்று அவளே வாய் விட்டு கேட்டும் விட்டாள்.
“ம்ம் இடம் ஸ்லிப் ஆயிடுச்சு” என்று அவன் கரகரப்பான குரலில் சொல்ல அவள் திகைத்துப் போனாள்.
“ஏங்க” என்று அவனிடம் கேள்வி கேட்கப் போனவள் அறிவு வந்து தன் வாயை அழுந்த மூடிக் கொண்டாள். அதற்கும் அவன் எடாக்கூடமாக சொற்களை வீசினால் எங்கு போய் முகத்தை வைத்துக் கொள்வது என்று அமைதியாகிப் போனாள்.
“இவரு எந்த இடத்தை சொல்றாரு” என்று அவளின் மனம் அலைபாய்ந்துக் கொண்டே இருந்தது. ஆனாலும் வாய் விட்டு கேட்க நாணம் தடுக்க தவிப்புடன் அவனின் மடியில் அவனது கைப்பிடியில் அமர்ந்து இருந்தாள்.
காலையில் இருந்த இருப்பு என்ன இப்பொழுது இருவரும் ஒட்டி உரசிக்கொண்டு இருக்கு இருப்ப என்ன என்று அவளின் மனம் கேள்விக் கேட்க சட்டென்று நேற்றைக்கு ஊரில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வர உடலில் ஒருவித இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
வெட்கமும் நாணமும் போன இடம் தெரியவில்லை. “குழந்தையை கவனிக்கிறேன்” என்று சொல்லி பிள்ளையை தூக்கிக் கொண்டு அறைக்கு உள்ளே போய் விட்டாள். சடுதியில் அவள் நாணமும் வெட்கமும் ஓடிப் போய் விட அவளின் முகம் இறுகிப் போய் இருந்ததில் பஞ்சவனுக்கு கடுப்பாய் போனது.
இவ்வளவு தூரம் இறங்கி வந்தும் இவ இப்படி வீஞ்சிக்கிட்டே இருந்தா என்ன செய்வது என்று எண்ணியவனுக்கு சிறிது நேரம் முன்பு தன் கையில் நெகிழ்ந்து குழைந்து நின்றவளின் தேகும் முகமும் நினைவுக்கு வர தலையை அழுந்த கோதிக் கொண்டான்.
அன்புவை திரும்பிப் பார்த்தான். கைக்கால்களை ஆட்டிக் கொண்டு அவன் படுத்து இருப்பதை பார்த்து முகம் இள்கியவன் அவனை அள்ளி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு மகரா இருந்த அறைக்கு உள்ளே நுழைந்தான்.
அவனை அங்கு எதிர்பாராதவள் சட்டென்று மாராப்பை இழுத்து விட்டுக் கொண்டாள்.
அதை ஒரு பார்வை பார்த்தவன் அலட்டிக் கொள்ளாமல் படுக்கையில் மகனை படுக்க வைத்து விட்டு அவன் நகர,
“ஓ.. வீட்டுக்கு போகிறார் போல அது தான் மகனை இங்க விட்டுட்டு போறாரு” என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அவளின் கழுத்தில் சூடான மூச்கிக்காற்றுப் பட விக்கித்துப் போனாள். சடுதியில் அவளின் கண்கள் சிவந்துப் போனது.
விழிகளை அகற்றி பின்னாடி திரும்பிப் பார்த்தாள். அவளின் செக்கச்சிவந்த விழிகளை பார்த்துக் கொண்டே தன் இதழ்களை வன்மையாக அவளின் இரவிக்கை மறைக்காத தோளில் அழுத்தமாக பதித்தான்.
அவனது அந்த செயலில் முதுகு தண்டில் ஆயிரம் மின்னல் மின்னிச் சென்றது.
“நோ... ப்ளீஸ் ங்க” என்று அவள் கெஞ்ச, பஞ்சவனின் விழிகளும் மோகத்தில் சிவந்துப் போனது.
“ஐ வான்ட் டீப் கிஸ்” என்று சொல்லி அவளின் கழுத்தை வளைத்துப் பிடித்தவன் அவளின் தோளில் இருந்து இதழ்களை அகற்றிக் கொண்டு அவளின் மென்மையான இதழ்களில் வன்மையாக முத்தம் வைக்க ஆரம்பித்தான்.
இன்று தான் இருவரும் முத்தம் பழகினார்கள். அதற்குள் அதிலிருந்து விடுபட முடியாமல் மாய வலைப்போல அதற்குள்ளே விழுந்து மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மகரா விடுபட எண்ணினாலும் பஞ்சவன் அவளை விடுவிக்க மனம் வராமல் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டே இருக்கிறான்.