“நைட் கிளம்பி இருடி. ஒரு இடத்துக்கு போகணும்” என்றான்.
“எங்க ங்க?” கேட்டவள் அவனிடம் இருந்து விலகி, விலகி இருந்த முந்தானையை எடுத்து தோளில் போட்டுவிட்டு, அவனுக்கு குளிக்க துண்டை எடுத்துப் போட்டாள்.
“ஏன் மேடம் சொன்னா தான் வருவீங்களா?”
“அப்படி இல்ல” என்றவளுக்கு தன்னை கூட்டிட்டு போய் விலை பேசி விற்கப்போவது தெரியாமல் அவனிடம் சரி என்றாள் பெண்ணவள்.
அவளின் முன்னாடியே தன் உடைகளை எல்லாம் கலைந்தவன், துண்டை மட்டும் உடுத்திக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டு, அவளையும் அழைத்துக் கொண்டான்.
“நான் எதுக்கு?” என்று அவள் பின்வாங்க,
“முதுகு தேச்சி விடுடி” என்று இழுத்துக் கொண்டான்.
அதன் பிறகு அவளையும் நனைத்தே பிறகே வெளியே விட்டான்.
“இவரோட” என்று அலுத்துக் கொண்டவள், வேறு புடவைக்கு மாறினாள். அவன் உடுத்த உடைகளை எடுத்து வைத்த நேரம் அவனும் வெளியே வந்தான்.
அதன் பிறகு உடைமாற்றி இருவரும் கீழே வந்தார்கள். அவனுக்கு உணவு பரிமாறினாள். அதை பொன்மாரி ஆசையாக பார்த்து இரசித்தார்.
அன்றிரவு தயாழினியை கூட்டிக்கொண்டு சென்றான் தயாகரன்.
“இந்த நைட் நேரம் எங்க போறோம்?” என்று கேட்டாள். அவனின் தோள் வளைவில் சாய்ந்து இருந்தாள்.
“வேற எங்க உன்னை விற்க தான்” என்றான்.
“வாட்?” என்று அவனிடம் இருந்து எழுந்துக் கொண்டவளுக்கு ஏகத்துக்கும் அதிர்வு வந்தது. ஒற்றை நொடியில் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
“விளையாடாதீங்க ங்க” நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே சொல்ல,
“இந்த விசயத்துல போய் யாராவது விளையாடுவாங்களா? சுளையா ஐம்பது லட்சம்.. அதனால தான் உன்னை தொடல.. இல்லன்னா தொட்டு இருப்பேன்” என்றவனின் பேச்சில் இருந்த உறுதியில் உள்ளுக்குள்ளே சுக்கு நூறாக நொறுங்கிப் போனாள்.
அவன் சொன்னது மெய் தான் என்று புரிந்துக் கொண்டாள் அடுத்த சில மணித்துளிகளில்.
ஒரு ஷேக்கிடம் அவளை காட்டி பேரம் பேசிக் கொண்டு இருந்தான் தயாகரன்.
“ஐம்பது லட்ச்சதுக்கு ஒத்த பைசா கூட குறையக்கூடாது ஷேக்கு.. என் விரல் நுனி கூட படல.. நான் மட்டும் இல்ல வேற யார் நிழலும் கூட படாம காத்து வச்சு இருக்கேன். உன்னால முடியலன்னா சொல்லு.. நான் உன் அண்ணன் கிட்ட வித்துக்குறேன்” என்றவனை நிமிர்ந்துப் பார்த்தவளின் விழிகளில் நீர் திரண்டுப் போனது.
வெரித்துப் போய் அவனையே பார்த்து நின்று இருந்தாள். அவனோ இவள் பக்கம் கொஞ்சமும் திரும்பாமல் பேரம் பேசுவதிலே குறியாக இருந்தான்.
இங்கே ஒரு மனுசியை கல்லாக்கி சிலையாக்கி விட்டுட்டோம் என்று தெரிந்தும் பணத்திலே குறியாக இருந்தான் தயாகரன்.
அவனை உருத்து விழித்துப் பார்த்தாள் பெண்ணவள்.
“அட்வான்ஸா முதல்ல பத்து லட்ச்சத்தை வெட்டு.. எப்போ முழு பணம் குடுக்குறியோ அப்போ பொண்ணை உன் கிட்ட ஒப்படைக்கிறேன். அது வரை இவ என் கிட்டயே இருக்கட்டும்” என்றவன் அவளை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
காரை விட்டு இறங்கியவளிடம் “இப்பவாவது என்னை நம்புறியா நான் கடைஞ்சி அலசி எடுத்த பொறுக்கின்னு.. இல்ல இதுக்கு மேல சேம்பில் காட்டவா?” என்றவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே போனவளை இதழ்களில் கேலியுடன் பார்த்தவன்,
“என்ன அவசரம் மேடம்.. இருங்க. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆட்டம் காண்பிக்க வேண்டி இருக்கு” என்றவன் அவளின் பின்னாடியே வந்து அவளை அழைத்துக் கொண்டு அவள் பெற்றோர் இருந்த அறைக்கு கூட்டிச் சென்றான்.
“இவங்க பெரிய பொண்ணை வித்தது கூட தெரியாம எப்படி நிம்மதியா ரெண்டு பேரும் தூங்குறாங்க பத்தியா?” கேட்டுக் கொண்டே தன் பாக்கெட்டில் இருந்த தூக்க மாத்திரையின் பாட்டிலை எடுத்து அவளிடம் காட்டினான்.
அதை பார்த்தவளுக்கு நெஞ்சில் அப்படி ஒரு வலி எழுந்தது. இன்னும் என்னென்னல்லாம் செய்ய காத்து இருக்கிறானோ.. கண்ணீர் குபுக்கென்று வந்தது.
“என்ன மேடம் இதுக்கே இப்படி அழுதா எப்படி.. இன்னும் இருக்கே..” கேலி செய்தவன், “என்னோட வா” என்று அவளின் தங்கைகள் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே இருவரும் ஒவ்வொரு பக்கமாக தரையில் உருண்டுக் கொண்டு இருப்பதை பார்த்து திகைத்துப் போனவள்,
“என்ன ஆச்சு அவங்களுக்கு? ஏன் இப்படி இருக்காங்க.. ஐயோ என் தங்கச்சியை என்னடா பண்ணின?” அவனின் சட்டையை பிடித்து உலுக்கியவளின் கையை தன் சட்டையில் இருந்து எடுத்து விட்டவன்,
“போதை மருந்து ம்மா.. போதை மருந்து.. அதை தான் உன் தங்கச்சிங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு இருக்காங்க. அது தான் இப்படி மண் புழுவாட்டாம் தரையில புரண்டுக்கிட்டு இருக்காங்க..” என்றான்.
“அடப்பாவி... ஏன்டா அவங்களுக்கு இதை குடுத்த.. நீ எல்லாம் மனுசனாடா. உங்களை நம்பி தானே என் குடும்பத்தை விட்டேன். ஆனா இப்போ அவங்களை என்ன செஞ்சி வச்சு இருக்க... நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா.. அய்யய்யோ என் தங்கச்சிங்க..” என்று கண்ணீர் விட்டவளை இழுத்துக் கொண்டு மேலே போனவன்,
“ரொம்ப அலட்டிக்காதடி.. உனக்கும் சேர்த்து தான்” என்றவன் அவள் சுதாரிக்கும் முன்பே ஒரு ஊசியை எடுத்து அவளின் கையில் குத்தி இருந்தான்.
“இது என்ன தெரியுமா? போதை ஊசி.. இன்னும் கொஞ்ச நேரத்துல நீயும் உன் தங்கச்சிங்க மாதிரி தான் உருண்டுக்கிட்டு இருப்ப...” என்றான்.
“அடப்பாவி... அரக்கனாடா நீ.. அரக்கனுக்கு கூட கொஞ்சம் மனசுல ஈரம் இருக்கும். ஆனா உனக்கு அதுக்கூட இல்லடா..” காலையில் அவானை வாங்க போங்க என்ற வாய் இப்பொழுது சகட்டு மேனிக்கு வாடா போடா போட்டது.
“நீ எல்லாம் நல்ல அம்மாவுக்கே பொறந்து இருக்க மாட்டடா.. ஏதாவது தெரு பொறுக்கிக்கு தான் மகனா பொறந்து இருப்ப. அதனால தான் இப்படி எல்லாம் நடந்துக்குற” என்று அவனின் பிறப்பை பற்றி தவறாக பேசியவளின் முடியை பற்றி இழுத்தவன்,
“என்னடி சொன்ன?” என்று கர்ஜித்து அவளை அடிக்க வர,
“உண்மையை தான்டா சொன்னேன். என் குடும்பத்தை கூட்டிட்டு வந்து இப்படி அசிங்கம் பண்றியேடா.. பின்ன நீ எல்லாம் எப்படி நல்ல குடும்பத்துல பிறந்து இருப்ப” என்ற பொழுதே அவளுக்கு கண்களை சொருகிக் கொண்டு வந்தது.
முதல் முறை போதை மருந்தை எடுத்துக் கொள்ளவும் அவளுக்கு உடம்பு தூக்கிவாரிப் போட்டது. எங்கோ தான் தொலைந்துப் போவது போல ஒரு உணர்வு. காற்றில் பறப்பது போல தோன்றியது. கால்கள் நிலத்தில் ஊன்றியது போலவே இல்லை.
உடம்புக்குள் என்னென்னவோ செய்தது.. உடைகளெல்லாம் பாரமாய் இருப்பது போல இருந்தது.
“ஐயோ கடவுளே...” என்று அந்த உணர்வுகளில் இருந்து தன்னை மீட்டு எடுத்துக் கொள்ள தனக்கு தானே வலியை உருவாக்கிக்கொள்ள சிதறிய சிந்தனையை இறுக்கிக் கட்டிக் கொள்ள முயன்றவள், பற்களை கண்டு தன் இதழ்களை கட்டித்து தலையை ஆட்டி நடப்புக்கு வர முயன்றவளின் முயற்சிகளை எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன் அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
அந்த நேரம் அவனது போன் இசைக்க,
“ஹலோ” என்றான் எடுத்து.
“அண்ணிக்கு போதை மருந்து குடுத்துட்டீங்களா ண்ணா” சின்னவன் கேட்டான்.
“ம்ம்ம்” என்றான்.
“போன காரியம் என்ன ண்ணா ஆச்சு?” தயக்கமாய் கேட்டான் குணா.
இருவரும் ஒரே லைனில் தான் இருந்தார்கள்.
“சக்சஸ்” என்றான்.
“ஆனா இதெல்லாம் ரொம்ப ரிஸ்க் அண்ணா” என்றனர் இருவரும்.
நான் இருக்கிற நிலையில ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி எடுத்துக்கணும்னு தெரியாதாடா.. என்னவோ புதுசா ரிஸ்க் எடுக்கிற மாதிரி சொல்றீங்க.. என் வாழ்க்கை கத்தி மேல நடக்குறது தான்னு தெரியாதாடா?” கேட்டான்.
“ஆனா அண்ணி” என்று இருவரும் இழுக்க,
“அவ அண்ணி இல்ல.. அதை முதல்ல மறங்கடா” கடுப்படித்தான் தயாகரன்.
“ஆனா எங்களுக்கு அவங்க அண்ணி தான்” என்றனர் இருவரும் கோரஸாக.
“மிதி வாங்க போறீங்க ரெண்டு பேரும்..” பல்லைக் கடித்தவன்,
“உங்க ரெண்டு பேருக்கும் ஒரு வேலை குடுத்தனே... என்ன ஆச்சு?” விசாரித்தான்.
“டீட்டையில் நாளைக்கு வந்திடும் அண்ணா” என்றனர்.
“ஆமா குறிஞ்சிக்கும் பிறைகும் எவ்வளவு குடுத்தீங்க” என்று போதையின் அளவை கேட்டு தெரிந்துக் கொண்டான்.
“ம்ம் நாளைக்கும் இதே அளவு குடுங்க” என்றவன், எவ்வளவு நேரம் சுய நினைவுல இருந்தாங்க” என்று கேட்டுக் கொண்டவனின் விழிகள் தன் எதிரில் சுய நினைவுடன் இருக்க போராடிக் கொண்டு இருந்தவளின் மீது அழுத்தமாக பதிந்தது.
முக்கால் விசயங்கள் அவளின் காதிலும் விழுந்தது தான். ஆனாலும் எங்கோ சொறுகிக் கொண்டு போகும் உணர்வுகளையும் சிந்தனையையும் இழுத்து கட்டி வைக்க மிகவும் சிரமம் கொண்டாள்.
பற்களை கடித்து இதழ்களை புண்ணாக்கி உதிரமும் சொட்டியது. அது போதாது தன் நகங்களை வைத்து உள்ளங்கையில் கீறி வைத்துக் கொண்டாள். அதிலிருந்தும் உதிரம் வந்தது.
மெல்ல மெல்ல சொறுக வந்த விழிகளை கடினப்படுத்தி முழிக்க வைத்து முயன்றவள், எதிரில் குளியல் அரை தென்பட, வேகமாய் அதில் புகுந்துக் கொள்ளப் பார்த்தாள்.
அங்கே நீர் இருக்குமே.. ஷவருக்கு அடியில் நின்றால் இந்த போதை தெளியுமே என்று எண்ணி அங்குப் போக பார்க்க, அவளின் வழியை மறைத்துக் கொண்டு நின்றான் தயாகரன்.
“ப்ளீஸ் என்னை விடு.. எனக்கு இந்த போதை வேண்டாம்..” என்று அவனை தாண்டி போக பார்த்தவளை இடையோடு தூக்கி கட்டிலில் போட்டவன், தன் காதில் இருந்த போனை அணைத்து தூக்கிப் போட்டுவிட்டு அவளின் மீது பரவி படர்ந்தான்.
அவனின் இந்த செயலால் தயாழினிக்கு அவனை எதிர்த்து செயல் படவே முடியவில்லை. உடம்பு ரொம்ப பலவீனம் ஆகியது போல உணர்ந்தாள்.
தன் இதழ்களை விடாமல் கடித்து நிலை நிறுத்திக் கொள்ள பார்த்தவளின் முயற்சியை கண்டு பெருமூச்சு விட்டவன் அவளை கட்டிலோடு கட்டிப் போட்டு விட்டான்.
“ப்ளீஸ் என்னை அவிழ்த்து விடு.. எனக்கு இந்த போதை வேணாம்.. என்னையும் என் குடும்பத்தையும் விட்டுடு.. உன் கண்ணுலையே படாம எங்காவது போயிடுறோம்..” என்று விடாமல் கெஞ்சியவளை பார்த்துக் கொண்டே கால் மேல் கால் போட்டு அமர்ந்து விட்டான்.
தலையை தூக்கி அவனை பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.
“என்னை விட்டுடு தயாகரா.. ப்ளீஸ்.. உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்குறேன். நீ வேண்டாம்.. உன் தாலி வேண்டாம்.. என்னை விற்று விடாத.. என் குடும்பத்தை ஒன்றும் செஞ்சிடாதா.. அவங்களுக்கு என்னை தவிர வேறு எதுவும் தெரியாது. அவங்களுக்காக தான் நான் இருப்பதே” என்று கெஞ்சிக் கொண்டே இருந்தாள் நீண்ட நேரமாக.
நகங்காளால் தன் கையை குத்தி கிழித்தது போதாமல் கால் விரல்களில் உள்ள நகங்களை கொண்டு இன்னொரு காலை கிழித்துக் கொள்ள முற்பட்டவளின் முயற்சியை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
பற்களை குத்தி இதழ்களை மேலும் புண்ணாக்கிக் கொண்டவள், அதன் வழி தாங்காமல் தன் நாக்கை கடித்துக் கொள்ள பார்த்தாள்.
நாக்கும் அவளின் பற்கள் குத்தி காயம் ஆகிப் போக, எங்கே இப்படியே விட்டால் நாக்கை இரண்டாக கடித்து விடுவாளோ என்று எண்ணி அவளின் இதழ்களை தன் இதழ்களால் ஆவேசமாக கவ்விக் கொண்டான் தயாகரன்.
ஏன் தயா இவளோ ரிஸ்க்?????
யார் அந்த ஷேக்????
இவ அண்ணன்கள் தானோ????
இருக்காது.....தங்கச்சியை போய் எப்படி?????
ஏன் தயா இவளோ ரிஸ்க்?????
யார் அந்த ஷேக்????
இவ அண்ணன்கள் தானோ????
இருக்காது.....தங்கச்சியை போய் எப்படி?????
அவன் இருக்கிற நிலையில் கண்டிப்பா ரிஸ்க் எடுத்து தான் ஆகணும் டா♥️😚