Notifications
Clear all

அத்தியாயம் 24

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

தன் மீது பரவி படர்ந்தவனை தடுக்க முடியாமலும், தன் இதழ்களை கவ்வி சரசமாடும் அரக்கனை தள்ளி விட முடியாமலும் அவளின் இரண்டு கைகளும் கட்டி இருக்க விழிகளில் இருந்து கண்ணீர் நதியாக பெருகியது.

அப்படி இருந்தும் தலையை ஆட்டி அவனுக்கு ஒத்துழைக்காமல் செய்தவளின் முயற்சியை தடுத்தான். அவளின் பின் கழுத்தில் கைக் கொடுத்து தலையணைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவளின் இதழ்களோடு இதழ் சேர்த்து வன்மையாக முத்தம் கொடுத்தான்.

ஆனால் போக போக அந்த முத்தம் மிக இரசனையான முத்தமாக மாற்றிக் கொண்டவன், அவளிடம் இருந்து சற்றே நகர்ந்து அருகில் படுத்துக் கொண்டான். தலையை திருப்பி அவனை வேதனையுடன் பார்த்தவள்,

“என்னை இப்படி கொஞ்சம் கொஞ்சமா சித்தரவதை செய்யிறதுக்கு மொத்தமா என்னை கொன்னு போட்டுடலாம்” என்றாள் விரக்தியுடன்.

அவளை பார்த்தது போல ஒரு பக்கமாக திரும்பி படுத்தவன்,

“ரொம்ப அவசரப் படாத.. சீக்கிரம் அதையும் செய்வேன்” என்றான் தெனாவட்டாக.

“அந்த சாவு கூட நான் விரும்பிய நேரத்துல நடத்திக்க கூடாதா? எனக்கு இப்பவே சாகனும்” என்றாள் விழிகளில் கண்ணீர் ஒரு பக்கம் வழிந்துக் கொண்டே இருந்தது.

“சாக ரொம்ப தான் அவசரம்” என்று ஏளனம் செய்தவன்,

“இன்னுமா உனக்கு போதை ஏறல” நக்கலுடன் கேட்டான்.

“நான் ஒன்னும் அவ்வளவு பலவீனமானவ இல்ல.. என்னை என்னால மேனேஜ் பண்ண முடியும்” என்று வீறாப்புடன் சொன்னவளை விழிகள் சுருக்கிப் பார்த்தவன், பிறகு கேலியாக உதட்டை பிதுக்கி,

“நாளைக்கு இதை விட அதிக டோஸ் உள்ளதை குடுத்தா அப்பவும் இப்படி தான் முழு விழிப்போட இருப்பியாடி?” கேட்டான்.

“ஏன் சந்தேகம் வேறையா?” எரிந்து விழுந்தாள். அவளுக்கு அவளே ஏற்படுத்திக் கொண்ட காயங்களில் இருந்து உதிரம் லேசாகா கசிந்தது. அந்த காயங்கள் எல்லாம் எரிய ஆரம்பித்தது. ஆனால் அந்த எரிச்சல் மட்டும் தான் அவளை போதைக்கு செல்ல விடாமல் மிகவும் கட்டுப் படுத்தி வைத்து இருந்தது.

“சரி தூங்கு” என்றான்.

“என்ன ரொம்ப தான் அக்கறை.. என்னை தூங்கா வச்சுட்டு என் தலையில கல்லை தூக்கிப் போட போறீங்களா?”

“ம்கும்.. அதுக்கெதுக்கு உன்னை தூங்க வைக்கணும். நீ முழிச்சு இருக்கும் பொழுதே உன் தலையில தூக்கிப் போட்டு சோலியை முடிச்சுடுவேன்” என்றான் திமிராக.

அவன் செய்வானே.. ஏனெனில் அவன் எதையும் மறைத்து செய்வது இல்லையே.. இதை தான் செய்ய போறேன்னு சொல்லிட்டு தானே செய்வான். எண்ணியவள் அமைதியாக இருந்துக் கொண்டாள்.

அவளின் சுயம் சற்றே தொலையப் போவாது போல இருந்தது. மெல்ல போதையின் வீரியம் இருக்கத்தான் செய்தது. அதை கட்டுப் படுத்திக் கொண்டு அந்த போதையோடு போராடிக் கொண்டு இருந்தவளை விழி அகலாது பார்த்தான்.

“எதுக்கு இப்படி பார்த்து வைக்கிறீங்க?” எரிச்சலில் கத்தினாள்.

அவன் பதிலே பேசாமல் எழுந்து வெளியே போய் விட்டான்.

“கட்டை அவிழ்த்து விட்டு போக வேண்டியது தானே” கத்தினாள். அவளின் கத்தளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் வெளியே போய் விட்டான் தயாகரன்.

“படுபாவி.. என்னை கொஞ்சம் கொஞ்சமா கொன்னு எடுக்கிறானே” வாய் விட்டு அவனை திட்டி தீர்த்தாள்.

வெளியே வந்தவனை எதிர் நோக்கி அவனின் இரண்டு தம்பிகளும் வந்தார்கள்.

“என்னண்ணா ஆச்சு? அண்ணி எப்படி இருக்காங்க” பிரபாகரன் விசாரித்தான்.

“அண்ணின்னு சொல்லாதடா” பல்லைக் கடித்தான் தயா.

“உங்க தாலி அவங்க கழுத்துல இருக்கிறவரை எங்களுக்கு அவங்க அண்ணி தான்” என்றான் குணாவை போலவே.

“எப்படியோ கெட்டு போங்க” என்றவன், சோபாவில் அமர்ந்தான்.

“அண்ணி ஓகேயா அண்ணா?” இந்த முறை குணாவும் விசாரித்தான்.

“ரொம்ப போராடுறாடா” பெருமூச்சு விட்டவன்,

“குறிஞ்சியும் பிறையும் எவ்வளவு நேரம் தாக்கு பிடிச்சாங்க” என்று கேட்டான்.

“எங்க நான் ஊசியை ஏத்துண உடனே என்னை அடிச்சு, கண்டபடி திட்டி, என் சட்டையை கிழிச்சு மேடம் உடனே மயக்கத்துக்கு போயிட்டாங்க” என்றான் பிரபாகரன்.

“அப்போ குறிஞ்சி?” என்று குணாவை பார்த்தான்.

“அவ அதுக்கு மேல மோசம் அண்ணா.. என்னை வாய்க்கு வந்த படி திட்டிட்டு ஒரே அழுகை. கொஞ்ச நேரத்துலையே அவளோட கண்ரோல் போயிடுச்சு” என்றான் அவன்.

“அப்போ தயாழினி தான் நல்லா மேனேஜ் பண்றா போல?” என்றான் யோசனையாக.

“ஆமா அண்ணா..” என்றவர்கள், “எவ்வளவு நேரம் அண்ணா.. டைம் பார்த்தீங்களா?” இரு தம்பிகளும் கேட்டனர்.

இவன் நேரத்தை சொன்னான்.

“இட்ஸ் ரியலி டப் அண்ணா.. எப்படி அண்ணியால முடிஞ்சுது” வியப்புடன் கேட்டான் குணாதரன்.

“அவளுக்கு இயல்பாவே போராடுற  குணம் இருக்குடா” என்று தாடையை தடவியவன்,

“நாளையில இருந்து தயாழினியோட தங்கச்சிங்களுக்கு போதை மருந்தை குடுக்க வேண்டாம்.. ஆனா தூக்க மாத்திரை குடுத்துடுங்க.. இடையில எழுந்தா நமக்கு சேப் இல்ல” என்றான்.

“சரிங்கண்ணா” என்றவர்கள், “ஆனா அண்ணி பாவாம் ண்ணா” என்றார்கள்.

“அவ சொன்ன அதே டையலாக் தான். ஒரு குடும்பம் வாழனும்னா அந்த குடும்பத்தில் இருக்கிற யாராவது தன்னை மெழுகா மாத்திட்டு தான் ஆகணும்” என்றான் கடுமையாக.

அவனது கடுமையை உணர்ந்து இருவரும் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரத்தில் இயல்புக்கு வந்தவன்,

“பிரபா உன் கிட்ட குடுத்த வேலை என்ன ஆச்சு?” என்றான்.

“எல்லாமே பக்காவா இருக்கு ண்ணா.. நீங்க ஒரு டைம் பார்த்திடுங்க. ஆனா பயங்கர ஷாக் அண்ணா” என்றான்.

“ஏன் என்ன ஆச்சு?” புருவம் சுருக்கினான் தயாகரன்.

“நாம நினைச்ச படி ஐம்பது ஆயிரம் கோடி இல்லன்னா..”

“தென்”

“ஒண்ணரை லட்சம் கோடி” என்றான்.

“வாட்?” என்று குணா அதிர்ந்துப் போய் விட்டான்.

“என்னடா சொல்ற” குணா பிரபாவை பார்த்து கேட்டான்.

“நீயே பாரு” என்று தான் சேகரித்து வைத்து இருந்த தகவல்களை அவனிடம் நீட்டினான். அதை வாங்கிப் பார்த்த குணா தரன் மேலும் அதிர்ச்சி ஆனான்.

ஆனால் தயாகரன் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.

“என்னண்ணா இவ்வளவு பெரிய ஷாக்.. ஆனா நீங்க ரியாக்ட்டே பண்ணாம இருக்கீங்க?” வியப்புடன் கேட்டான் சின்னவன்.

“நான் எக்ஸ்பெக்ட் பண்ணது தான்..” என்றவன், இன்னொரு கணக்கை குடுத்து “இதையும் செக் பண்ணி சொல்லு” என்றான்.

“இது யாரோடது ண்ணா”

“இப்போ நீ கணக்கு பார்த்தியே மத்திய மந்திரியோட கணக்கு.. அந்த ஆளோட சின்ன வீட்டு கணக்கு இது.. எப்படியும் இதுல ஒரு லட்சம் கோடி வரும்” என்றான்.

“எப்படிண்ணா இப்படி கொள்ளை அடிச்சு இருக்காணுங்க? யாருக்குமே தெரியலையா?” மனமே ஆறவில்லை தம்பிங்களுக்கு.

“அதை விட்டுட்டு நீ இந்த வேலையை பாரு பிரபா..” கட்டளை போட்டவன்,

“குணா நீ நாளைக்கு ஒரு பஞ்சாயத்தை ஏற்பாடு பண்ணு” என்றான்.

“சரிண்ணா” இருவரும் அவரருக்கு குடுத்த வேலையை ஒரு முறை ஆலோசனை செய்து விட்டு அண்ணனுக்கு இரவு வணக்கத்தை சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள்.

அவர்கள் போன பிறகு எழுந்து உள்ளே வந்தவன் இன்னும் விழிப்போடு போதையில் சறுக்கி விடாமல் இருக்க போராடிக் கொண்டு இருந்தவளை ஒரு கணம் பார்த்து விட்டு அவளின் கைக் கட்டை அவிழ்த்து விட்டான்.

வேகமாக எழுந்துக் கொண்டவள் குளியல் அறைக்குள் ஓடினாள். நீருக்கு அடியில் நின்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டவளை வெளியே இருந்து பார்த்தான்.

போகும் அவசரத்தில் அவள் கதவை சாற்றக் கூட இல்லை. அது அவனுக்கு சாதகமாக போய் விட்டதோ என்னவோ ஒரு சில யோசனைக்கு பிறகு அவளின் பின்னோடு இவனும் அந்த குளியல் அறைக்குள் புகுந்து கதவை அடைத்தான்.

கதவு சாத்தப்படும் சத்தத்தில் திகைத்துப் போனவள் நிமிர்ந்துப் பார்க்க, அங்கே வெற்று மார்புடன் தயாகரன் நின்று இருந்தான்.

அவனை அங்கு எதிர் பாராதவள் கொஞ்சம் திடுக்கிட்டு தான் போனாள். ஆனால் அவன் தன்னை எதுவும் செய்ய மாட்டான் என்கிற நம்பிக்கை இருந்தது. ஏனெனில் அவளின் கற்புக்கு தான் கொஞ்ச நேரத்துக்கு முன்பு விலை பேசிட்டு வந்து இருக்கனே.. பிறகு எப்படி தன்னை தொடுவான்.. அதனால் கொஞ்சம் தைரியமாகவே நின்றாள்.

“என்னடி நான் உள்ள வரேன் உனக்கு பயமா இல்லையா? ரொம்ப தெனாவட்டா இருக்கிற மாதிரி இருக்க” கேட்டுக் கொண்டே அவளின் பின்னோடு ஷவருக்கு அடியில் வந்து நின்றான்.

“எப்படியும் என்னை எதுவும் செய்ய மாட்டீங்க.. அதோடு எனக்கு விளையும் பேசிட்டு வந்தாச்சு.. இனிமே என்னை தொட்டா அந்த ஷேக் உங்களை சும்மா விட மாட்டான். அதனால வந்த தெனாவட்டா இருக்கும்” என்றவள் தண்ணீரின் வேகத்தினால் நெற்றியில் வந்து விழுந்த முடிகளை இரு கையாளும் எடுத்து நீவி மேலே இழுத்து விட்டவள் முகத்தை நீரை நோக்கி நிமிர்த்தினாள்.

அந்த நேரம் அவளின் இடையின் இரு பக்கமும் அவனின் அழுத்தமான கரங்கள் படிய, அலட்டிக் கொள்ளவே இல்லை தயாழினி.

“ரொம்ப தெனாவட்டு வந்திடுச்சோ” கேட்டுக் கொண்டே அவளின் வெற்று தோளில் குனிந்து இதழ்களை புதைத்தான்.

தயாழினி கொஞ்சமும் அசையவே இல்லை. அப்படியே நின்றாள்.

“தைரியம் தான்டி” என்றவன் அவளை வளைத்துப் பிடித்து தன் புறம் திருப்பி பிடித்தவன் குனிந்து அவளின் இதழ்களை ஆவேசமாக கவ்விக் கொண்டான்.

அவனின் ஆவேச முத்தத்தில் திகைத்துப் போனவள் அவனுக்கு உடன் பட மறுக்க, அவளை கட்டுப் படுத்தி தன் முத்தங்களை தொடர்ந்தான். அவளின் உடல் பலவீனமாக இருக்க வேறு வழியில்லாது அவனுக்கு உடன்பட வேண்டி இருந்தது. அவனின் முரட்டு தேகத்தை தள்ளி விட அவளால் கொஞ்சமும் முடியவில்லை. அதனால் அடங்கிப் போனாள்.

“சேலை ரொம்ப ஈரமா இருக்கு.. கழட்டிடலாமா?” கேட்டவன் அவள் சம்மதம் கொடுக்கும் முன்பே அவளின் சேலையை முழுமையாக கழட்டி விட்டான்.

அதோடு இல்லாமல் அவளின் உடல் முழுக்க தன் இதழ்களையும் கரங்களையும் ஓட விட்டு அவளை வேறு சிந்தனைக்கு கொண்டுப் போக, அவள் அமைதியாக நின்றாலே தவிர, காலையில் அவனோடு இணைந்து இழைந்தது போல இழையவில்லை. அதை உணர்ந்துக் கொண்டவனுக்கு எதோ மிஸ் ஆவது போல இருந்தது தான். ஆனாலும் அவன் அலட்டிக் கொள்ளாமல் அவளோடு ஷவருக்கு அடியில் நின்று சின்னதாய் ஜலதரங்கம் செய்தான்.

அடுத்த நாள் காலையில் தயாகரன் தம்பிகள் இருவரிடமும்,

“ஷேல் வீ மேக் அ டேட்டிங்?” என்று கேட்க, பிரபாகரனும் குணாவும் அதிர்ந்து எழுந்தார்கள். அவர்களுக்கு அருகில் அமர்ந்து இருந்த தயாகரன் அலட்டிக் கொள்ளவே இல்லை. தலையை தூக்கி அவளை பார்த்தானே தவிர அவனிடம் வேறு எந்த ரியாக்ஷன்னும் இல்லை.

Loading spinner
Quote
Topic starter Posted : July 30, 2025 10:08 am
Sathiya reacted
(@sathiya)
New Member

Nice ud sis 

Loading spinner
ReplyQuote
Posted : July 30, 2025 11:21 am
(@gowri)
Reputable Member

இவனுங்க சென்ட்ரல் மினிஸ்டர் வரை பேசறாங்க....

சோ கண்டிப்பா பெரிய officers ஆ தான் இருப்பாங்க....

கடைசில யாழியா கேட்டா??????

Loading spinner
ReplyQuote
Posted : July 30, 2025 11:41 am
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @sathiya

Nice ud sis 

நன்றி மா ♥️

 

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 30, 2025 5:24 pm
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @gowri

இவனுங்க சென்ட்ரல் மினிஸ்டர் வரை பேசறாங்க....

சோ கண்டிப்பா பெரிய officers ஆ தான் இருப்பாங்க....

கடைசில யாழியா கேட்டா??????

 

ஆமாம் டா🙈😜

 

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 30, 2025 5:26 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top