Notifications
Clear all

அத்தியாயம் 21

 
Admin
(@ramya-devi)
Member Admin

தன் மீது சரிந்து நின்றவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டவன் அவளை திருப்பி நிற்க வைத்து அவளின் இதழ்களில் நீண்ட முத்தம் வைத்து தன்னை மீட்டுக் கொண்டவன்,

“குளிச்சுட்டு வாடி” என்று வெளியே போய் விட்டான். இவள் அவசர அவசரமாக குளித்து விட்டு வெளியே வந்தாள்.

எதற்காக அவ்வளவு அவசரமாக குளித்தோம் என்று தெரியாமலே குளித்து விட்டு, உலர்ந்த பாவாடையை நெஞ்சில் முடிந்து, துண்டை தோளில் போத்தியபடி வெளியே வந்தாள்.

அவளின் பார்வை அந்த அறையை அலசியது வேகமாக. அவளை ஏமாற்றாமல் அவளின் கணவன் கண்ணாடி முன்ப்பு நின்று அவனின் காயத்தை காட்டன் வைத்து துடைத்துக் கொண்டு இருந்தான்.

வேகமாய் அவனுக்கும் கண்ணடிக்கும் நடுவில் புகுந்து நின்றவள், அவனின் கையில் இருந்த காட்டனை வாங்கி இவள் துடைத்து விட ஆரம்பிக்க, தயாகரன் அவளின் இடுப்பை பற்றிக் கொண்டு, தன் வாயால் அவளின் தோளில் இருந்த துண்டை தூக்கி வீசினான்.

அரைகுறை ஆடையுடன் நின்று இருந்தவளை விழிகளால் புசிக்க ஆரம்பித்தான். அவனின் சூடான மூச்சுக் காற்று அவளின் வெற்று தோளில் படர்ந்து பரவ, லேசாக தகித்துப் போனாள்.

ஆனாலும் அதை அவள் கண்டுக் கொள்ளவே இல்லை. புது புது காட்டனை எடுத்து முழுமையாக அவனது காயங்களை சுத்தம் செய்தாள்.

“தண்ணி பட்டுடுச்சேங்க.. செப்டிக் எதுவும் ஆகுமா?” கவலையுடன் கேட்டாள்.

“அது தான் புல்லா துடைச்சு விட்டுட்டியே இனி ஒன்னும் ஆகாது” என்றவனின் விழிகளில் ஏகத்துக்கும் கிறக்கம் குடிக் கொண்டு இருந்தது.

“மருந்து எங்க இருக்கு?” என்று கேட்டவளுக்கு அவளின் பின்னாடி டிரேசிங் டேபிளில் இருந்த மருந்தை எடுத்துக் குடுத்தான்.

அவனது தலை முடியில் இருந்து வழிந்த தண்ணீர் அவளின் தோளில் விழுந்து மின்ன, தன் இதழ்க்கொண்டு அதை ருசிப்பார்க்க, பெண்னவளுக்குள் பெரும் பூகம்பம் எழுந்தது.

கால்களை நிலத்தில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டு நின்றவள் முயன்று தன் கவனத்தை மருந்து போடுவதில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

ஒரு சொட்டு நீரை ருசிப்பார்த்தவனின் இதழ்கள் மேலும் அவளின் கழுத்தில் ஊர, முகத்தை பக்கவாட்டில் திருப்பிக் கொண்டவளுக்கு பெரும் தடுமாற்றம் எழுந்தது.

“ப்ளீஸ்.. மருந்து போட விடுங்க” என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

“ம்ம்” என்றானே தவிர அவளின் மீது இருந்து தன் இதழ்களை எடுக்கவே இல்லை. குளித்து விட்டு வந்தவளின் வாசம் அவனை இன்னும் மயக்க, அவளை லேசாக பற்கள் பட கடித்து வைத்தான்.

அவனது பற்கள் அவளின் தேகத்தில் வன்முறை செய்ய, மருந்துப்போட முயன்றவளின் கைகள் உயர்ந்து அவனின் பிடரியை இறுக்கிப் பிடித்துக் கொண்டது.

வேணாமே... என்ற அவளின் முணகல்கள் எல்லாம் அவனின் செயல்களில் இன்னும் கூடிப்போனது. இருவருக்கும் ஒருவரை விட்டு ஒருவர் நீங்க முடியாத ஆழ்ந்த கிறக்கத்தில் திளைத்துப் போனார்கள்.

ஆவேசமாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான். அவசரமாய் அவளின் உடம்பில் தன் கைகளை ஓட்டிப் பார்த்தான். பரக்கா வெட்டியாக அவசரப்படுபவனின் வேகத்தில் முகம் சிவந்துப் போனாள்.

“ஐயோ ப்ளீஸ்” என்று அவள் அதிர,

“ஐ வான்ட்” என்றவன் அவளை கையில் தூக்கிக்கொண்டு படுக்கையில் கிடத்தியவன் அவாளின் மீது பரவி படர்ந்து தன் இதழ்க் கொண்டே அவளின் பாவடையை அவிழ்க்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

“காயமா இருக்கேங்க” என்று அவனுக்கு அவள் சம்மதம் குடுக்க, அவளின் மார்பில் முகம் புதைத்தவன், தன் முகத்தை அங்கு புரட்டி அவளின் வாசனையை தனக்குள் எடுத்துக் கொண்டவன்,

“முடியலடி.. ரொம்ப மோசமா என்னை தூண்டி விடுற” என்று பழியை அவள் மீது போட்டான்.

“ஆமா நான் தான் தூண்டி விடுறேன்.. நீங்க அப்படியே சும்மா தான் இருக்கீங்க பாருங்க” முறைத்தாள். முறைத்தவளின் கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்தவன்,

“வாய் பேசாதடி... இன்னும் மூடாகுது.. அப்புறம் நீ தான் வருத்தப்படுவ” சொன்னவன் அவளின் சிவந்துப் போன இதழ்களில் மீண்டும் முத்தம் இட,

“எரியுதுங்க” சிணுங்கினாள்.

“உன் இதழ்களை தொட்டா வர்ற ஸ்பார்க் எனக்கு இன்னும் இன்னும் வேணும்னு தோணுதே.. நான் என்ன பண்ண” கேட்டவன் மீண்டும் அவளின் இதழ்களில் மூழ்கிப் போனான்.

இருவருக்குள்ளும் மின்சார தாக்கம் அதிகமாகத் தோன்றியது. நடு முதுகில் பலகோடி மின்னல்கள் ஒருங்கே வந்து பாய்ந்தது போல இருக்க, அதை இன்னும் இருவரும் அதிகம் ஆக்கினார்கள்.

ஒருவரை ஒருவர் கட்டி தழுவி அவளை ஆராய முயன்ற நேரம் கதவு தட்டப் பட்டது.

அதில் கலைந்தவள் வேகமாய் அவனை தன் மீது இருந்து தள்ளி விட்டு, எழுந்து போக பார்க்க, அவளை பிடித்து இழுத்து மீண்டும் கட்டிலில் சரித்தவன்,

மிக மோசமாக அவளின் இதழ்களை கவ்வி தண்டனை கொடுத்தவன்,

“இன்னொரு முறை இப்படி தள்ளி விடாதடி.. அப்புறம் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்” மிரட்டினான்.

“அய்ய ரொம்ப தான்” என்றவள் நழுவிய பாவடையை தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு அவனது அறையில் இருந்த இன்னொரு அறைக்குள் சென்று புடவை மாற்ற ஆம்பித்தாள்.

அவளின் பின்னோடு போகும் மனதை கட்டுப் படுத்திக் கொண்டு கதவை திறந்தான். எதிரில் அவனது முதல் தம்பி நின்று இருந்தான். அவனது முகத்தில் தெரிந்த சீரியஸ்னசில் புருவம் நெரித்தான்.

“இரு சட்டை போட்டுட்டு வரேன்” என்று உள்ளே வந்தவன் அடுத்த நொடியே கைக்கு அகப்பட்ட துணியை எடுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பி விட்டான்.

புடவை கட்டிக் கொண்டு வெளியே வந்த தயாழினி தன் கணவனை தேட அவன் இருக்கவில்லை.

“கீழ போயிட்டாரா?” யோசனையுடன் கீழே வந்தவள், பொன்மாரியிடம் கேட்க,

“அவன் அப்பவே வெளில போயிட்டானே” என்றார். அவளின் முகத்தில் கவிழ்ந்த ஏமாற்றத்தை பார்த்த பொன்மாரி,

“வந்திடுவான் கவலை படாத” என்றார்.

“இல்ல அத்தை.. காயத்துக்கு மருந்து கூட போடல.. அதுக்குள்ள கிளம்பிட்டாரா அது தான்” என்று பெருமூச்சு விட்டாள்.

சட்டென்று பொன்மாரி தன் மருமகளை ஆழ்ந்துப் பார்த்தார்.

“அவனை புரிஞ்சுக்கிட்டியா?” வியப்புடன் கேட்டார்.

“முழுசா இல்ல அத்தை. ஆனா வெறுப்பு இல்லை” என்றாள்.

“அது போதும்.. போக போக அவனை புரிஞ்சுக்கலாம்.. இப்போ வா அவனுக்கு பிடிச்ச சமையலை சொல்லி குடுக்குறேன்.. நீயே செய் உன் புருசனுக்கு” என்று அடுப்படிக்கு கூட்டிக் கொண்டு போனார்.

அங்கே குறிஞ்சியும் மலரும் வேலை பார்த்துக் கொண்டு இருக்க, அவர்களோடு இவளும் இணைந்துக் கொண்டாள்.

பொன்மாரி தன் பெரிய மகனுக்கு பிடித்த வகைகளை எல்லாம் சொல்லி அதை செய்ய ஆரம்பிக்க, அவரின் கையில் இருந்ததை வாங்கிக் கொண்ட தயாழினி,

“நான் செய்யிறேன் அத்தை. நீங்க சொல்லி மட்டும் குடுங்க” என்று செய்ய ஆரம்பித்தாள்.

“வாட் ஹெப்பேன்?” என்று குணாவிடம் வண்டியை ஓட்டிக் கொண்டே அழுத்தமாக கேட்டான் தயாகரன்.

“அண்ணா நேற்றிரிவு நாம பிடிச்ச கஞ்சா எல்லாமே மிஸ்ஸிங். அதுக்கு பதிலா வெறும் ஓயிட் சுகர் பவுடர் தான் அண்ணா இருக்கு” என்றான் தலை குனிந்து.

“நாம் எக்ஸ்பெக்ட் பண்ணது தானே...” என்றவனின் குரலில் இருந்த அழுத்தம் குணாவுக்கு எதையோ புரிய வைக்க முனைய,

“அண்ணா” என்று அதிர்ந்தான்.

“ம்ம்.. அந்த கவர்ல ஜிபிஎஸ் பொருத்தி இருக்கு.. எப்படியும் இங்க வச்சு பிரிக்க மாட்டானுங்க. சோ அவனுங்க இடத்துக்கு போய் தான் அதை பங்கு போடுவானுங்க.. ஆல்ரெடி நான் அவனுங்க இருக்கிற இடத்தை சேஸ் பண்ணிட்டேன்” என்றான்.

“எப்படிண்ணா” என்று வியந்துப் போனான்.

“நாம சரக்கை அடிச்ச கேப்புல தான் இதை செஞ்சேன்.. எப்படியும் நம்ம கிட்ட இருந்து அவனுங்க எடுப்பானுங்கனு ஒரு திங்க் இருந்தது” என்ற தயாகரன்,

“அந்த மேட்டரை நான் பார்த்துக்குறேன். தயாழினிக்கு நேற்றைக்கு நம்ம வீட்டில் நடந்த நியூஸ் தெரிஞ்சு இருக்கு. இத்தனைக்கும் அவ ஹாஸ்ப்பிட்டல தான் இருந்துன் இருக்கா.. சோ அவ பெற்றவர்கள் மூலமா அவளுக்கு நியூஸ் போய் இருக்கு” என்றான்.

“என்ன ண்ணா சொல்றீங்க? அவங்களுக்கு எப்படி தெரியும்?” திகைத்துப் போனான்.

“ஐ திங்க் அவங்க ரெண்டு பேரும் தூங்கி இருக்க மாட்டாங்க. சோ ஈசியா கேட்ச் பண்ணிட்டாங்க” என்றான்.

“அண்ணிக்கு விசயம் தெரிஞ்சா, உடனே உங்களை கேள்வி கேட்டு இருப்பாங்களே.. எந்த கேள்வியும் கேட்கலையா அண்ணா?” பதறினான்.

“எப்படியோ சமாளிச்சுட்டேன். கொஞ்சமா அவளின் கவனத்தை திசை திருப்பி இருக்கேன்” என்று தம்பியிடம் வெளிப்படையாக சொன்னவன்,

“இரண்டு நாள் அந்த மயக்கதுலையே வச்சு இருக்க பாரிக்கிறேன்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். “ஆனா அவ எப்படியும் மீண்டும் ஆரம்பிப்பா” என்றான்.

“இப்ப என்னண்ணா பண்றது?

“அதை நான் பார்த்துக்குறேன். இன்னைக்கு நைட்ல இருந்து தயாழினி அப்பா அம்மாவுக்கு பால்ல தூக்க மாத்திரை கலந்து குடுக்க சொல்லிடு” என்றான்.

“சரிண்ணா” என்றவன், “நான் என் வீட்டுக்கு போகட்டுமா ண்ணா. குறிஞ்சியை என்ன பண்றது?” ஆலோசனை கேட்டான்.

“உன் மேல வெறுப்பு வந்ததா இல்லையா அவளுக்கு?”

“என் நிழல் விழற பக்கம் கூட அவ வர மாட்டிக்கிறா”

“குட்.. இன்னும் அவளை ஒதுங்கி போக வை. நான் தயாழினியை இன்னைக்கு விற்க ஏற்பாடு பண்றேன்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

“அண்ணா” என்று அதிர்ந்தான்.

“உன் அண்ணன் எவ்வளவு பொறுக்கின்னு அவளுக்கு காட்ட வேண்டாமா?” ஏளனமாக கேட்டான்.

“ஆனா அவங்களுக்கு தாலி கட்டி இருக்கீங்களே”

“அதுக்காக எல்லாம் விட முடியுமா என்ன? நான் என்ன நினைக்கிறானோ அதை எந்த வழிக்கு போனாலும் செய்து முடிப்பேன். என் இலக்கு ஒன்னே ஒன்னு தான். அதை தடுக்க எவ்வளவு தடை வந்தாலும் அடிச்சு தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்” தயாகரனின் குரலில் இருந்த அழுத்தத்தில் குணாவின் தலை தானாக

“சரிண்ணா” என்றான் உள்ளே போன குரலில்.

“ரொம்ப பீல் பண்ணாதடா.. உனக்கு கொஞ்சமும் செட் ஆகல. சரக்கை கேட்ச் பண்ணியாச்சாம்” தன் போனுக்கு வந்த மெசேஜை பார்த்து விட்டு தம்பியிடம் பகிர்ந்துக் கொண்டான்.

“அப்போ அடுத்த மூவ் அண்ணா”

“இன்னும் ஒரு வாரத்துல வெப்பென்ஸ் கை மாறுது..” என்றான்.

“எவ்வளவு ண்ணா”

“கிட்டத்தட்ட நம்ம இந்திய ரூபீஸ் படி ஐநூறு கோடி மதிப்புள்ள கன்ஸ்.. எல்லாமே மேடின் பாரின்ஸ். ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு ஊர்ல இருந்து இறங்குது. நியூ டைப். சோ இங்க அதுக்கான வேல்யூ இதை விட அதிகமா இருக்கும்”

“எப்படிண்ணா சால்வ் பண்றது?”

“இன்னும் ஒருவாரம் இருக்குள்ள அப்ப பார்த்துக்கலாம். நீ உன் கண்ட்ரோல்ல இருக்குற புகார்களை கொஞ்சம் சால்வ் பண்ணு.. மீதியை நான் பார்த்துக்குறேன்” என்றவன் தம்பியோடு சரக்கு பதுக்கி வைத்த இடத்துக்கு போனவன், அதில் கொஞ்சத்தை எடுத்து தனக்கு வைத்துக் கொண்டான்.

“இதுல கொஞ்சம் எடுத்து குறிஞ்சிக்கும் பிறைக்கும் பழகி விடு” என்றான்.

“சரிண்ணா” என்று வாங்கிக் கொண்டான்.

“அண்ணிக்கு மாண்ணா”

“ம்ம் அவளை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்” என்று கண்ணடித்தவனின் முகம் அதிக இறுக்கத்தில் இருந்தது.

தொடரும்...

இன்னைக்கு ஒரு யூடி தான் தோழமைகளே..

நாளைக்கு 2 யூடி போடுறேன்..

இன்னைக்கு ஆடிப்பூரம் வேலை கொஞ்சம் இருக்கு... ப்ளீஸ் அட்ஜஸ்க்கரோ

 

 

Loading spinner
Quote
Topic starter Posted : July 28, 2025 11:02 am
(@gowri)
Reputable Member

இவன் சரக்குனு சொன்னது ஐ திங்க், weapons.....

அதை தான் எப்படி use பண்ணனும்னு சொல்லி தர சொல்றான்....

நீங்க இப்படி சொன்னதும்.... அடேய் மோசக்கார அப்படினு திட்டணுமா தயாவை.....

Loading spinner
ReplyQuote
Posted : July 28, 2025 10:17 pm
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @gowri

இவன் சரக்குனு சொன்னது ஐ திங்க், weapons.....

அதை தான் எப்படி use பண்ணனும்னு சொல்லி தர சொல்றான்....

நீங்க இப்படி சொன்னதும்.... அடேய் மோசக்கார அப்படினு திட்டணுமா தயாவை.....

அடேய் நான் சொன்ன சரக்கு போதை மருந்து டா.. நீங்க தயாகரனை திட்டி தான் ஆகணும். அடுத்த யூடியை படிச்சு பாருங்க 😀 

அப்புறம் நீங்களே திட்டுவீங்க

 

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 29, 2025 11:33 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top