Notifications
Clear all

அத்தியாயம் 22

 
Admin
(@ramya-devi)
Member Admin

“குட்.. இன்னும் அவளை ஒதுங்கி போக வை. நான் தயாழினியை இன்னைக்கு விற்க ஏற்பாடு பண்றேன்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

“அண்ணா” என்று அதிர்ந்தான்.

“உன் அண்ணன் எவ்வளவு பொறுக்கின்னு அவளுக்கு காட்ட வேண்டாமா?” ஏளனமாக கேட்டான்.

“ஆனா அவங்களுக்கு தாலி கட்டி இருக்கீங்களே”

“அதுக்காக எல்லாம் விட முடியுமா என்ன? நான் என்ன நினைக்கிறானோ அதை எந்த வழிக்கு போனாலும் செய்து முடிப்பேன். என் இலக்கு ஒன்னே ஒன்னு தான். அதை தடுக்க எவ்வளவு தடை வந்தாலும் அடிச்சு தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்” தயாகரனின் குரலில் இருந்த அழுத்தத்தில் குணாவின் தலை தானாக

“சரிண்ணா” என்றான் உள்ளே போன குரலில்.

“ரொம்ப பீல் பண்ணாதடா.. உனக்கு கொஞ்சமும் செட் ஆகல. சரக்கை கேட்ச் பண்ணியாச்சாம்” தன் போனுக்கு வந்த மெசேஜை பார்த்து விட்டு தம்பியிடம் பகிர்ந்துக் கொண்டான்.

“அப்போ அடுத்த மூவ் அண்ணா”

“இன்னும் ஒரு வாரத்துல வெப்பென்ஸ் கை மாறுது..” என்றான்.

“எவ்வளவு ண்ணா”

“கிட்டத்தட்ட நம்ம இந்திய ரூபீஸ் படி ஐநூறு கோடி மதிப்புள்ள கன்ஸ்.. எல்லாமே மேடின் பாரின்ஸ். ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு ஊர்ல இருந்து இறங்குது. நியூ டைப். சோ இங்க அதுக்கான வேல்யூ இதை விட அதிகமா இருக்கும்”

“எப்படிண்ணா சால்வ் பண்றது?”

“இன்னும் ஒருவாரம் இருக்குள்ள அப்ப பார்த்துக்கலாம். நீ உன் கண்ட்ரோல்ல இருக்குற புகார்களை கொஞ்சம் சால்வ் பண்ணு.. மீதியை நான் பார்த்துக்குறேன்” என்றவன் தம்பியோடு சரக்கு பதுக்கி வைத்த இடத்துக்கு போனவன், அதில் கொஞ்சத்தை எடுத்து தனக்கு வைத்துக் கொண்டான்.

“இதுல கொஞ்சம் எடுத்து குறிஞ்சிக்கும் பிறைக்கும் பழகி விடு” என்றான்.

“சரிண்ணா” என்று வாங்கிக் கொண்டான்.

“அண்ணிக்கு மாண்ணா”

“ம்ம் அவளை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்” என்று கண்ணடித்தவனின் முகம் அதிக இறுக்கத்தில் இருந்தது.

அன்று உச்சி பொழுதுக்கு மேல் வீட்டுக்குள் நுழைந்தான் தயாகரன்.

“சாப்பிட வாடா” என்று பொன்மாரி அழைக்க,

“குளிச்சுட்டு வரேன்” என்றவன், “எங்க என் பொண்டாட்டி?” கேட்டான்.

“இங்க தான் இருக்கேங்க” என்று ஒரு அறையில் இருந்து வெளியே வந்தாள்.

“மேல வா” என்று விட்டு மாடி ஏறினான். கீழே விட்டு இருந்த முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு மேலே ஏறினாள்.

அறைக்குள் உள்ளே வந்த உடனே அவளை கதவுக்கு பின்னாடி இருந்து அணைத்தவன், அவளின் கழுத்தில் தன் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.

“அச்சோ” பதறிப்போனாள்.

“ஹேய் நான் தான்டி” என்று அவளிடம் இருந்து முகத்தை எடுத்து முறைத்தவன்,

“என் அறையில என்னை தவிர வேற யார் இருப்பா? என்னை தவிர உன்னை வேற யார் இப்படி அணைக்கப் போறா? எதுக்கு இப்படி பயப்படுற?” கேட்டான்.

“இல்ல இப்படி திடுதிப்பென்று கட்டி பிடிப்பீங்கன்னு எதிர் பார்க்கல.. அது தான்” என்றாள் முகம் சிவந்துப் போய்.

“இனி எதிர் பாராததெல்லாம் எதிர் பாருங்க மேடம்.. உன் புருசன் எல்லோரை காட்டிலும் ரொம்ப ரொம்ப வித்யாசமானவன்” என்றான்.

அவனது பேச்சின் உள் அர்த்தம் புரியாமல், “இனி கவனமா இருந்துக்குறேன்” என்றவளின் கழுத்தில் மீண்டும் முகம் புதைத்தவன்,

“என்னடி ஸ்மெல் இது.. ஆளை இப்படி தூக்குது” கேட்டுக் கொண்டே அவளின் கழுத்தில் இருந்து மெல்ல நழுவி அவளின் மார்புக்கு மேல் உடை மறக்காத இடத்தில் இதழ்களை அழுத்தமாக புதைத்தான்.

அவனது மீசை செய்யும் குறுகுறுப்பில் நெளிந்தவள்,

“குளிக்க போறேன்னு சொன்னீங்களே...?” அவனது கைப்பிடியில் இருந்தது வெளியே வர முயற்சித்தாள்.

“இப்படியே இருடி.. என்ன அவசரம்” என்றவன் அவளை இன்னும் நன்றாக திருப்பி குனிந்து அவளின் மார்புக்கு மேல் முகத்தை புதைத்தான்.

தானாகவே தயாழினியின் கைகள் அவனது பிடரியை இறுக்கிப் பிடித்தது.

“பசிக்கலையா?”

“பசிக்கிது தான்.. உன்னை விருந்தா தர்றியா? சாப்பிட்டுக்குறேன்”

“ப்ச் விளையாடாதீங்க.. நான் உண்மையான பசியை சொல்றேன்.. வயித்து பசியை சொன்னேன்”

“நான் உடல் பசியை சொன்னேன்டி.. அதுவும் உண்மையான பசி தான்” என்றவனின் கைகள் அவளின் வெற்று இடையை இறுக்கிப் பிடித்து இலையை போல கசக்கி எடுக்க, இவளுக்கு மிக மோசமாக உணர்வுகள் தூண்டிப் போனது.

“ப்ளீஸ்.. இந்த விளையாட்டு வேணாமே” என்றவளுக்கு குரலே வரவில்லை. அவளது இதழ்கள் தானாக அவனது கழுத்தில் பதிந்தது. அவளின் சூடான இதழ்களின் மென்மையை அவனது கழுத்தில் உணர்ந்தவன், தன் சட்டையை விலக்கி தன் மார்பை காட்டினான்.

“இங்க உன் இதழ்கள் படணும்டி” என்றவன் அவளை வளைத்து குனிய வைத்து தன் வலிமையான மார்பை காட்டினான்.

“முதல்ல சாப்பிடுங்க. அப்புறம் இதை தரேன்” என்று நழுவ பார்த்தவளை இறுக்கிப் பிடித்தவன்,

“நீ குடு அதுக்கு பிறகு சாப்பிட வரேன்” முரண்டு பண்ணினான்.

“என்ன அடம் இது” என்று கேட்டவள் குனிந்து அவனின் நெஞ்சில் முத்தம் வைக்க,

“இங்க இப்படி வேணாம்.. அங்க போய் குடு” என்று படுக்கையை காட்டியவன் தான் அணிந்து இருந்த சட்டையை ஒற்றை நொடியில் கலட்டி எரிந்து விட்டு படுக்கையில் போய் படுத்துக் கொண்டவன்,

அவளை வா என்று ஒற்றை கரத்தை நீட்டினான். இவளுக்கு பெரும் கூச்சம் வந்து நெட்டி தள்ளியது.

“வெறும் முத்தம் மட்டும் தான்..” என்று கரராக அவனிடம் சொல்ல,

“முதல்ல வாடி” என்று பக்கம் வந்தவளின் கையை பிடித்து இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன் கண்களால் கட்டளை இட்டான்.

இவளுக்கு வெட்கம் பிடுங்கி திங்க அவனின் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவளின் முகத்தை நிமிர்த்தி,

“ஆரம்பிடி.. உன் இதழ்களின் முத்த ஊர்வலத்தை என் நெஞ்சு ஏற்க ரொம்ப ஆசையா துடிச்சுக்கிட்டு இருக்கு” என்றவன் அவளை கண்ணோடு கண் நோக்கி சொல்ல,

மெல்ல தன் கூச்சத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவனின் நெஞ்சில் தன் இதழ்களை ஒற்றி எடுக்க, தயாகரன் கண்களை மூடிக் கொண்டான். அவன் கண்களை மூடி அனுபவிப்பதை பார்த்து உடல் சிலிர்த்தவள் அவனின் தேவை அறிந்து அவனின் நெஞ்சு முழுக்க தன் இதழ்களை ஒற்றி ஒற்றி எடுத்தாள்.

“இன்னும் கொஞ்சம் அழுத்தமா குடுடி” என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.

அந்த அழுத்தம் போதாது, “லேசா கடிடி” என்று அவளிடம் அதிகாரம் செய்தான்.

அவள் கடிக்கும் மெல்லிய கடி போதாது வன்முறை செய்ய சொல்லி கேட்டான். அவள் மிரண்டுப் போக,

“நான் உன்னை கடிச்சா மோசமாக போய் விடும் நிலைமை. அதனால தான் உன்னை பண்ண சொல்றேன்.. என் உணர்வுகளை காலையில தூண்டி விட்டது நீ தானேடி. அப்போ என் உணர்வுகளை குறைக்கிறதும் உன் பொறுப்பு தான். நான் வேற எதுவுமா பண்ண சொன்னேன்.. என் நெஞ்சுல கடிச்சு வைன்னு சொன்னேன். அது கூட செய்ய மாட்டியாடி” கேட்டவனின் உணர்வுகள் எல்லாம் உச்ச நிலையில் இருப்பதை உணர்ந்து,

அவனை இப்படி தவிக்க விட மனம் வாராமல்,

“என்னை வேணா எடுத்துக்கோங்க.. நோ அப்செக்ஷன்” என்றாள் நாணத்துடன். அவள் அப்படி சொல்லவும்,

“எனக்கு மட்டும் உன்னை விட்டு வைக்க ஆசையா என்ன? ஆனா அதுக்கான நேரம் இது இல்லையே.. ஒரு நேரம் வரும் அப்போ உன்னை முழுமையா எடுத்துக்குறேன்டி.. இப்போ என் கொதிப்பை அடக்கி வை” என்றவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான்.

அவனின் முடி அடர்ந்த மார்பில் முகம் புதைத்தவள் மெல்ல கடிக்க ஆரம்பிக்க, அவன் விழிகளை மீண்டும் மூடிக் கொண்டான்.

“இன்னும் வேகமா” என்று சொன்னவன் அவளை தனக்கு கீழ் கொண்டு வந்து அவளின் சேலையை லேசாக விலக்கி அவளின் வயிற்றில் தன் ஈர இதழ்களை புதைத்து மீசையால் குறுகுறுப்பு பூட்டியவன் அவள் எதிர்பாரா நேரம் நறுக்கென்று கடித்து வைத்தான்.

அதில் “அவுச்” என்று தயாழினி அலற,

“இது மாதிரி நச்சுன்னு கடிச்சு வைடி” என்றவன் மீண்டும் அவளை தனக்கு மேலே கொண்டு வந்தான்.

“அக்கபோரு பண்றீங்க” என்றவளின் சேலை அவன் மேலேயும் கீழேயும் அவளை புரட்டி எடுத்ததில் நலுங்கிப் போய் இருந்தது. அதை அவனின் விழிகள் கிறக்கத்துடன் பார்க்க,

வேகமாய் அவன் மீது இருந்து எழுந்துக் கொண்டவள் அவசரமாய் சேலையை சரி செய்ய முயல, அவளின் பின் முதுகோடு ஒட்டி அமர்ந்து சேலையை சரி செய்யும் அவளின் கை மீது தன் கையை வைத்து தடுத்தவன்,

“இப்படியே இருடி.. கண்ணால பார்த்தாவது இரசிச்கிக்குறேன்” என்று எதிரில் இருந்த கண்ணாடியை கைக்காட்ட, முகம் சிவந்துப் போனாள்.

“ப்ச்.. போங்க வெட்கமா இருக்கு” என்று முகத்தை மூடிக் கொண்டாள். அவளை லேசாக திருப்பி அவளின் கை மீது முத்தம் வைத்தவன், கைகளை விலக்கி விட்டவன் தன் கையில் அவளை சரித்து அப்படியே அவளின் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.

புதைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் முகத்தை அங்கும் இங்குமாக திருப்பி அவளை பாடாய் படுத்தி எடுத்தான் தயாகரன்.

“ப்ளீஸ்..” என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை. அவளின் இடையை இறுக்கிப் பிடித்தவனின் கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏற தவியாய் தவித்துப் போனாள்.

“நோ” என்றவளின் இதழ்களை தன் இதழ் கொண்டு அடைத்தவன் அவளிடம் கொஞ்சமே கொஞ்சம் எல்லை மீற ஆரம்பித்தான்.

தடையாய் இருந்த அவளின் சேலையை எடுத்து கீழே போட, ஊக்கு குத்தி இருந்தாள். தன் இதழ்களால் அவளின் சேப்ட்டி பின்னை கழட்ட, அவனை தடுக்கும் நிலையில் அவள் இல்லை. அவனின் தொடுகையில் கண்களை மூடிக் கொண்டாள்.

ஊக்கை தூக்கி தூரப் போட்டவன் அவளின் அழகை மறைத்துக் கொண்டு இருக்கும் சேலை மாராப்பை எடுத்து கீழே போட்டவன் தன் விழிகளால் அவளை அளவிட்டான்.

அவனை தடுக்க நினைத்த நாணம் எங்கோ ஓடி ஒளிந்துக் கொண்டது. விழிகளால் அளவிட்டால் மட்டும் போதுமா என்று கேட்ட மனதின் கேள்விக்கு தன் கைகளாலும் இதழ்களாலும் பதில் கொடுக்கப் போக அவனை தன் மீது இருந்து தள்ளி விட்டுட்டு அவனுக்கு முதுகு காட்டியவளை பின்னோடு அணைத்துக் கொண்டவன் அவளின் வெற்று முதுகில் சூடான முத்த ஊர்வலத்தை நடத்தினான் அவளின் கணவன்.

அவனின் கைப்பிடியில் கன்றிப் போனது அவளின் தேகம். அவனை தடுக்கப்பார்த்து முடியாமல் தன் மீது எல்லை மீறும் அவனின் இதழ்களையும் கைகளையும் கட்டுப்படுத்த முடியாமல் தன்னோடு அவனை இறுக்கமாக புதைத்துக் கொண்டாள்.

அவளின் கூச்சம் கண்டு தன்னை கட்டுக் கொண்டு வந்த பொழுதும் அவளின் மீது இருந்த மயக்கம் தெளியாமல் போக அவளின் இதழ்களை நறுக்கென்று கடித்து தன் உணர்வுகளை கட்டுக் கொண்டு வரப் பார்த்தான். இருவருக்கும் நீங்க முடியாத, நீக்க முடியாத மயக்கம் ஒருவர் மீது ஒருவருக்கு எழுந்தது.

காலையில் அவனை தூண்டி விட்டது தான் தானே அதனால் அவனது தொடுகைக்கு தன்னை கொடுத்து நின்றாள். மெல்ல மெல்ல அவளின் உடம்பில் தன் கைகளை ஓட்டி அவளை சோதனை செய்ய தொடங்கினான்.

“ப்ளீஸ்” என்றவளின் மெல்லிய முணகல் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவளை கொஞ்சமே கொஞ்சம் டார்ச்சர் செய்தவன்,

“நைட் கிளம்பி இருடி. ஒரு இடத்துக்கு போகணும்” என்றான்.

“எங்க ங்க?” கேட்டவள் அவனிடம் இருந்து விலகி, விலகி இருந்த முந்தானையை எடுத்து தோளில் போட்டுவிட்டு,  அவனுக்கு குளிக்க துண்டை எடுத்துப் போட்டாள்.

“ஏன் மேடம் சொன்னா தான் வருவீங்களா?”

“அப்படி இல்ல” என்றவளுக்கு தன்னை கூட்டிட்டு போய் விலை பேசி விற்கப்போவது தெரியாமல் அவனிடம் சரி என்றாள் பெண்ணவள்.

அவளின் முன்னாடியே தன் உடைகளை எல்லாம் கலைந்தவன், துண்டை மட்டும் உடுத்திக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டு, அவளையும் அழைத்துக் கொண்டான்.

“நான் எதுக்கு?” என்று அவள் பின்வாங்க,

“முதுகு தேச்சி விடுடி” என்று இழுத்துக் கொண்டான்.

அதன் பிறகு அவளையும் நனைத்தே பிறகே வெளியே விட்டான்.

“இவரோட” என்று அலுத்துக் கொண்டவள், வேறு புடவைக்கு மாறினாள். அவன் உடுத்த உடைகளை எடுத்து வைத்த நேரம் அவனும் வெளியே வந்தான்.

அதன் பிறகு உடைமாற்றி இருவரும் கீழே வந்தார்கள். அவனுக்கு உணவு பரிமாறினாள். அதை பொன்மாரி ஆசையாக பார்த்து இரசித்தார்.

அன்றிரவு தயாழினியை கூட்டிக்கொண்டு சென்றான் தயாகரன்.

“இந்த நைட் நேரம் எங்க போறோம்?” என்று கேட்டாள். அவனின் தோள் வளைவில் சாய்ந்து இருந்தாள்.

“வேற எங்க உன்னை விற்க தான்” என்றான்.

அதில் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது பெண்ணவளுக்கு.

 

Loading spinner
Quote
Topic starter Posted : July 29, 2025 10:13 am
(@gowri)
Reputable Member

இதில் வேற ஏதோ இருக்கு...

கண்டிப்பா அவன் அண்ணகளை வெளி கொண்டு வர பிளான் ஆ இருக்கும்.....

தயாவை ஏன் திட்டனும்?????

அவனே பாவம்

Loading spinner
ReplyQuote
Posted : July 29, 2025 5:14 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top