“அது எனக்கு தெரியதா? உன்கிட்ட சொல்றதை முதல்ல கேளுடி. அப்புறமா அட்வைஸ் பண்ணு” முறைத்தவன்,
“என்னென்ன நிகழ்ச்சி செய்யலாம்னு ஓவரளா ஒரு சாட் போடு முதல்ல. எல்லா நிகழ்ச்சியும் பெஸ்ட்டா இருக்கணும்” என்றான்.
“சரி” என்று தலையை ஆட்டியவள் வெளியேற போக, அவளுக்கு முன்னாடி எழுந்தவன் கதவை அழுந்த சாற்றி விட்டு அந்த கதவிலே அவளை சாய்த்தவன் அழுத்தமாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
தன் இதழ்களில் முத்தம் வைத்தவனை முறைத்துப் பார்த்தவள் அவனிடம் இருந்து விலக போராடினாள்.
“கொஞ்ச நேரம்டி” என்றவன் அவளை சட்டை செய்யாமல் அவளிடம் மூழ்க,
“நான் ஒரு ஹோமோ செ...ஸ் பெர்சென்” என்றாள் பல்லைக்கடித்து.
“அது ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும்” என்றவனை தன்னிடம் இருந்து தள்ளி விட்டவள்,
“கொன்னுடுவேன் இனி என் பக்கம் வந்தா. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லோரும். நீங்க இழுத்த இழுப்புக்கு வருவேன்னு நினைச்சீங்களா?” ஆவேசமாக கேட்டாள்.
அவளின் ஆவேசத்தை பார்த்து ஏளனமாக சிரித்தவன்,
“கோவப்படும் பொழுது ரொம்ப தான் சிவந்து போறடி” சிலாகித்தான்.
“நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க?” நெற்றிக்கண்ணை திறந்தாள்.
“ம்ம்ம் கோவம் படாதான்னு சொன்னேன்” என்றவன் அவளின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை எடுத்து வெளியே விட்டான்.
நேற்றைக்கு அவளின் கழுத்தில் அவனே அணிவித்தான் இந்த தாலியை.
“இனி இந்த தாலியை கழட்டுன... அவ்வளவு தான்” என்று எச்சரித்தான். அவனை கடுப்புடன் பார்த்தவள்,
“ஒவ்வொரு இரவும் இந்த தாலியை கழட்ட சொன்னது நீங்க.. அதோட உறவை அறுத்துக்கிட்டு போறதுக்கு முன்னாடி என் கழுத்துல இருந்து மொத்தமா தாலியை உருவி எடுத்தது நீங்க தான் மிஸ்டர் அகத்தியன். இப்போ வந்து இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்லையா?” கேட்டாள்.
“அந்த அசிங்கத்தை பார்த்தா உன்னை எப்படி பழி வாங்குறது?” ஒற்றை புருவத்தை ஏற்றி நக்கலாக கேட்டவனை பார்த்து இவளுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.
“நல்லா பழி வாங்கிக்கோங்க.. ஆனா நீங்க செய்யிறதை பார்த்தா என்னை பழி வாங்குற மாதிரி தெரியல” என்றாள்.
“என்னடி இப்படி சொல்லிட்ட.. ஆக்சுவலி உன்னை பயங்கரமா நான் பழி வாங்கிட்டு இருக்கேன்” என்றவனை புரியாமல் பார்த்தாள் தமிழ். அவளை இன்னும் நெருங்கி வந்தவன்,
“எப்படின்னு பார்க்குறியா? நீ தான் ஹோமோ செ...ஸ் பெர்சென் ஆச்சே. அப்படி பட்டவளுக்கு ஒரு ஆணோட தொடுகை எப்படி இருக்கும்... அருவெறுப்பா தானே இருக்கும்” என்று அவளிடமே கேட்க,
“மண்ணாங்கட்டி” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவள்,
“லுக் மிஸ்டர் அகத்தியன்” என்று அவனை எச்சரிக்க பார்க்க, அவனோ அவளை தான் ஆழ்ந்து பார்த்தான். அவனது பார்வையில் தடுமாறியவள்,
“எதுக்காக இப்போ இப்படி பார்க்குறீங்க? பொண்ணுங்களை நீங்க பார்த்ததே இல்லையா” படபடத்தாள். அதோடு அவன் கைப்பட்டு விலகிய சேலையை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டாள்.
அதில் உள்ளுக்குள் எரிச்சல் மூண்டது அவனுக்கு. “ரிலாக்ஸ். நானே என் கோவத்தை எல்லாம் ஓரம் கட்டிட்டு வந்து இருக்கேன். நீ சும்மா சும்மா என்னை உசுப்பேத்திட்டு இருந்தா மேல பாஞ்சிடுவேன்” பயம் காட்டினான்.
“என்ன பயமுறுத்துறீங்களா?”
“ஆமான்டி பயம் தான் காட்டுறேன். உன்னால என்னடி பண்ண முடியும்...?” எகத்தாளமாக கேட்டான்.
“ஏன் இதுக்கு முன்னாடி என்கிட்டே வாங்குனது மறந்து போயிடுச்சா? மறந்துடுச்சுன்னா சொல்லுங்க மறுபடியும் பாட்டிலை வச்சு கிழிக்கிறேன் முகத்தை” சீறினாள்.
“நீ இப்படி பேசுனதுக்கே என்கிட்ட வாங்குவடி” கறுவியவன்,
“என்கண்ணு முன்னாடி வந்துடாத.. வந்தா பிறகு நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை... என் பாட்டியாலா தான் உன்னை மீண்டும் சந்திச்சேன். அதனால நான் இந்த வீட்டை விட்டு போறவரை என் வழியில வந்திடாத. வந்தா உனக்கு தான் சேதாரம் அதிகம். ஏன்னா என்னால உன்னை வச்சுக்கிட்டு வேடிக்கை பார்க்க முடியாது. உன்னை நீ தான் என்கிட்டே இருந்து காப்பாத்திக்கணும்” என்றவன் வெளியே கிளம்பி விட்டான்.
தமிழ் தான் பைத்தியம் பிடிக்காத குறையாக நின்றாள்.
“இவர் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்காரு... என்னை ஹோமோன்னு முத்திரை குத்துராறு. அதே நேரம் இந்த பக்கம் உன்னை தொடாம இருக்க மாட்டேன்னு பயம் காட்டுறாரு... இதுல எதை நம்புறது... இந்த மனுசன் என்னை ஏன் இப்படி குழப்பி அடிக்கிறாரு...” என்னடா இதுன்னு ஆகிவிட்டது அவளுக்கு.
தலையை பிய்த்துக்கொள்ள வைத்தான் அகத்தியன்.
“இம்சை” என்று அவனை திட்டிக் கொண்டவள் கரஸ்பாண்டன் அறையை விட்டு வெளியே வந்தாள். அவளுக்கு எதிரில் பூவரசி நடந்து வந்துக் கொண்டு இருந்தார்.
அவரை பார்க்காமல் தலையை குனிந்துக் கொண்டு செல்ல,
“எல்லாத்துக்கும் முன்னாடி என்னை விட்டு குடுத்துடாத தமிழ்” என்று மட்டும் சொன்னவர் அவளை கடந்து போக தளர்ந்துப் போனாள்.
மத்திய நேரமும் அவள் சாப்பாடு எடுத்துக் கொண்டு வராததால் பூவரசி அவளுக்கான உணவை குடுத்து விட்டார்.
அதை எடுத்துக் கொண்டு பூவரசி இருக்கும் இடத்துக்கு விரைந்தாள்.
நேற்றைக்கே அங்கு இருந்த ஆசிரியர்களுக்கு அரசால் புரசலாக தமிழ் தான் பூவரசி மேடமோட மருமகள் என்று தெரிந்து விட்டு இருந்தது. நாச்சியார் தெரிய வைத்து இருந்தார்.
அதனால் தமிழின் மீது இன்னும் பொறாமை தான் வந்தது அங்கிருந்தவர்களுக்கு. அவர்களின் வாய்க்கு அவல் ஆகாமால் பூவரசியையும் விட்டுக் குடுக்காமல் அவரை தேடி போனாள்.
அவரின் தனிப்பட்ட அறையில் அமர்ந்து இருந்தார். அவருக்கு எதிரில் வந்து அமர்ந்தவள் அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவர் கொடுத்து விட்ட உணவை உண்டவள் பெயருக்கு என்று அவர் சாப்பிடும் வரை அமர்ந்து இருந்தாள்.
அந்த நேரம் எப்பொழுதும் அரட்டையில் தான் கழியும். அனால் இன்றைக்கு தான் மிகவும் அமைதியாக சென்றது. பூவரசியும் அதன் பிறகு அவளிடம் பேச முயற்சிக்கவில்லை.
பூவரசி விலகி இருப்பதை உணர்ந்த தமிழுக்கு கொஞ்சம் குற்ற உணர்வாய் போனது. மேசை மீது இருந்த அவரின் கை மீது தன் கையை வைத்தவள்,
“சாரி ஆன்டி... ஆனா எல்லோரும் என்னை ஏமாத்துற மாதிரி ஒரு பீல். எனக்கு அந்த நேரம் எப்படி பிகேவ் பண்றதுன்னு சத்தியாமா தெரியல... அவரோட அம்மாவா உங்களை நான் கற்பனை கூட பண்ணி இருக்கவில்லை. ஆனா என் கண் முன்னாடி அவரோட அம்மாவா நீங்க வந்து நின்னா என் நிலையை அந்த நேரத்துல கொஞ்சம் யோசிச்சு பாருங்க... உங்க மேல சத்தியமா எனக்கு கோவம் இல்ல. நீங்க அகத்தியனோட அம்மான்றதை மறச்சது தான் என் ஆதங்கம்”
“உயிரோட இருக்குற எல்லோருக்கும் வருகிற ஆதங்கம் தான் அது.. உன்னை தவறா நினைக்கலமா.. ஆனா நான் முன்னாடி சொன்னது தான். எங்க எல்லாரோட செயலுக்கும் ஒரு காரணம் இருக்கு. இனி நீ இந்த வீட்டை விட்டு போகக்கூடாது” என்றார் அழுத்தமாக.
பெருமூச்சு விட்டவள்,
“தாத்தாவும் பாட்டியுமே இவ்வளவு பிடிவாதமா இருக்குறதை பார்த்த பிறகு எனக்கும் இங்க இருக்குறது தான் சரின்னு படுது” என்றாள்.
“ம்ம்ம் குட்” என்றவர்,
“என்னோட கார்ல வந்திடு இனிமே” என்றார்.
“எங்க அப்பாவும் சித்தியும் என்னை கொல்ல திட்டம் போட்டு இருக்காங்களா ஆன்டி” என்று வேதனையுடன் கேட்டாள்.
அவளின் கையை இறுக்கப்பற்றிக் கொண்டு பெருமூச்சு விட்டார்.
“எனக்கு புரிஞ்சது ஆன்டி..” விரக்தியாக சிரித்தவள்,
“ஆனா உங்களுக்கு பாரமா இருக்குறானா?” வேதனையுடன் கேட்டாள்.
அதில் அவளை முறைத்துப் பார்த்தவர் “நீ எப்படி என்னை நினைக்கிறியோ எனக்கு தெரியாது. ஆனா நான் உன்னை என் மருமகளா தான் பார்க்கிறேன்.. ஒழுங்கா என்னை அத்தைன்னு கூப்பிடு” என்று அதட்டல் போட்டார்.
“அத்தை” என்றாள் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு.
“தமிழ்” என்றார் நெகிழ்ந்து போய்.
அவரின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டவள்,
“உங்க மகன் என் மீது சுமத்தின ...” என்று அவள் முடிக்கும் முன்பே,
“நான் உன்னை தவறா இப்பன்னு இல்ல எப்பவுமே நினைக்க மாட்டேன்.. உன் சித்தி எங்களுக்கும் அந்த போட்டோ வீடியோஸ் எல்லாத்தையும் அனுப்பி விட்டா. ஆனா எனக்கு தெரியும் என் மருமக தங்கம்னு. ஒரு நாள் அகத்தியனும் புரிஞ்சுக்குவான். இடைப்பட்ட நாள்ல எவ்வளவோ எடுத்து சொல்லியாச்சு அந்த மரமண்டைக்கு. ஆனா அவன் அவன் புடுச்ச முயலுக்கு மூனே காலுன்னு நிக்கிறான்... காலம் என்னைக்கும் ஒரே மாதிரியே சுத்தாதே... உன்னை புருஞ்சுக்கிற காலம் வரும்” என்றார்.
தமிழ் எதுவும் பேசவில்லை.
“அவன் ரொம்ப பிடிவாத குணம் நிறைந்தவன் தமிழ். அவனுக்கு பிடிச்சு தான் உன்னை கல்யாணம் பண்ணிணான்” என்றவரின் வார்த்தைகள் ஒப்புக்கு சொல்லப்படுகிறது என்று எண்ணியவள்,
“அந்த பேச்சு வேணாம் ஆன்டி.. ஏற்கனவே ரொம்ப புண்ணா போய் இருக்கு மனசு... மேற்கொண்டு மேற்கொண்டு அதையே பேசி இன்னும் ரணம் ஆக்கிக்க நான் தயார் இல்ல..” அழுத்தமாக சொன்னவள்,
“கையை குடுங்க முதல்ல... இந்த பள்ளிக்கூடத்துக்கு வைரவிழா வந்து இருக்கு.. அதை சிறப்பா கொண்டாடணும். உங்க மகன் என்கிட்ட என்னென்ன செயல்லாம்னு பட்டியல் போட சொன்னாரு. நாம ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி எது எது பெட்டரா இருக்கும்னு முடிவு பண்ணலாம் ஆன்டி” என்று பேச்சை மாற்றினாள்.
ஹ்ம்ம்.....இப்பவாது பூவை புறிஞ்சிகிட்டியே....
ஓகே ஓகே....
நீங்க என்ன சொல்லுங்க ரைட்டர்....அக அவன் பண்ணினதை திருத்திக்க தான் வந்து இருக்கான்....
அவன் நடத்தையிலே தெரியுது.....
இன்னும் அடங்களைய இந்த மரை கலண்ட தாமரை🤦🤦🤦🤦🤦