“வரதன் அண்ணாவை சமாதனம் செய்தீங்களா மாமா? எப்படி வீட்டுக்கு வர ஒத்துக்கிட்டாங்க” தென்றல் காற்றை அனுபவித்தபடி மொட்டை மாடியில் இருந்த கட்டை சுவரில் ஏறி அமர்ந்து இருந்த உத்தமனின் கால் இடுக்கில் நின்றபடி கேட்டாள் உமை.
அவளின் இடையை வளைத்தபடி அங்கு சில பல ஆராய்ச்சிகளை செய்துக் கொண்டு இருந்தபடியே,
“நான் எதுவும் பேசல... வீட்டுக்கு வாங்க வரதன்னு கூப்பிட்டேன். அவரும் வந்துட்டாரு.” என்றான்.
“உண்மையாவா...?”
“ம்ம்ம்... அவங்க விசயத்துல நான் எப்படி தலையிட முடியும். பேசி தீர்த்துக்க வேண்டியது அவங்க தானே... அதனால நான் எதுவும் பேசல. நான் எதுக்கு கூப்பிடுறேன்னு அவருக்கும் தெரிஞ்சி இருக்கும். அதனால தான் நானும் சசியும் சேர்ந்து ராஜியை கிளப்ப ஏற்பாடு பண்ணினோம்.” என்றான் பெருமூச்சு விட்டு.
“உங்க வாழ்க்கையில நான் வந்து ரொம்ப தொல்லைக் குடுத்துட்டனா மாமா” உமை சங்கடமாக கேட்டாள். ஏனெனில் அவளால் தானே இந்த பிரச்சனை எல்லாம். ஒரு வேளை சுவிஸ் போகாம இருந்து இருக்கலாம்...” என்றாள் பெருமூச்சுடன்.
“ப்ச்... மத்தவங்க கருத்துக்கு எப்போடி நீ தலையாட்ட ஆரம்பிச்ச...” என்று கோவம் கொண்டான்.
“இல்லங்க... அன்னைக்கு உங்க தங்கச்சியை கை நீட்டி அடிச்சுட்டேன்... அவங்களை நான் இன்னும் சமாதனப் படுத்தல... எனக்கு சமாதனப் படுத்தவும் தோணல...” என்றாள் சங்கடமாக.
“நான் உன்னை சமாதனம் செய்ய சொல்லி சொல்லவே இல்லையேடி...” என்றவன் அவளது முகத்தை நிமிர்த்தி தன் முகத்தை பார்க்க வைத்தவன்,
“உமை அவங்கவங்களுக்குன்னு ஒரு நியாயம் இருக்கும். அதோட ஒரு எல்லை கோடும் இருக்கு. அதை யார் தாண்டினாலும் கோவம் வர தான் செய்யும். ராஜி பேசுன பேச்சுக்கு நீ ரியாக்ட் பண்ணாம இருந்தா அவ பேச்சை நீ அங்கீகரிக்கிறன்ற அர்த்தம் ஆகிடும்டி. அதை உன் மனசே ஏத்துக்காது...”
“தாங்கவே முடியாத அளவுக்கு உன் பொறுமையையும் ஒழுக்கத்தையும் சீண்டி பார்க்குறாங்கன்னா பொங்குவதில் எந்த தவறும் இல்லை. அப்படியே உன் மேல தவறான பிம்பம் வந்தாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் இப்படி தான். என்னை உன்கிட்ட நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லன்னு அவர்களை தாண்டி போய்கிட்டே இருக்கணும் உமை.”
“இன்னைக்கு இந்த வார்த்தை சொன்னாங்கன்னா நாளைக்கு இன்னொரு விதமா உன்னை விமர்சனம் பண்ணுன்வாங்க... அதனால இது அலைகடல் மாதிரி அலை ஓயவே ஓயாது... உன் மேல எழும் விமர்சனங்களும் ஓயாது. ஒரு முறை நீ அவங்களுக்கு உன்னை நிரூபிக்க ஆரம்பிச்ச அப்படின்னா தொடர்ந்து நிருபிக்க சொல்லி உன் மனசு கிடந்து தவிச்கிக்கிட்டே இருக்கும்”
“அது தேவையில்லாத வேலை. என்னை பற்றிய பிம்பம் இது தான்னு நீயே ஒரு முடிவுக்கு வந்துட்ட அப்படின்னா உன்னோட அறிவு அவ்வளவு தான். அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது... அப்படின்னு கடந்து போயிடனும். அதோட உன் கருத்துகளை மாத்த எனக்கு நேரம் இல்லை. உன்னை தாண்டி எனக்கு நிறைய வேலை இருக்குன்னு நம்ம வேலையில சிறப்பா கவனத்தை வச்சிக்கிட்டு நம்ம பாதையில முன்னேறி போய்க்கிட்டே இருக்கணும் உமை” என்று உத்தமன் சொல்ல உமைக்கு நன்றாக புரிந்தது உத்தமன் சொன்னது.
“புரியுதா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்...” என்றாள் தெளிவான சிந்தையுடன்.
“அப்போ சரி..” என்று இரு கரத்தையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தவன், அவளை கரங்களில் அள்ளிக் கொண்டான்.
“அவுச்... என்ன பண்றீங்க...? விடுங்க மாமா” என்று அவனது கரங்களில் இருந்து வெளியே வர பார்க்க, “நோ...” என்று ஒற்றை சொல்லில் தன் மறுப்பைக் கொடுத்தவன் அவளது இதழ்களில் தன் இதழ்களை புதைத்து இனிமேல் நடக்கும் கூடலுக்கு அவன் வித்திட,
எந்த தங்கு தடையும் இல்லாமல் அந்த மொட்டை மாடியிலே முன்விளையாட்டுகள் எல்லாம் ஆரம்பம் ஆனது..!
இப்பொழுது எல்லாம் மதிலா தனியாக மாடிக்கு வருவதே இல்லை...! அப்படியே வந்தாலும் சசிதரனுடன் தான் வருவாள். அவளின் மனதில் இருந்த அத்தனை கசடுகளையும் சசிதரன் நீக்கி விட தனிமைக்கு அவளிடம் என்ன வேலை...
அவர்கள் மேலே வருவது இல்லை என்பதால் உத்தமன் தன் மனம் போல உமையை அங்கேயே கொண்டாட ஆரம்பித்தான். அவனது சேட்டையிலும் குருகுருப்பிலும் மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது...! ஆனாலும் இன்னும் வேண்டும் என்றே அவளது நெஞ்சம் தவிக்க அவளது தவிப்புகளை எல்லாம் போக்கி இன்னும் இன்னும் அவளை சோதித்தான்.
“படுத்துறீங்கங்க...” என்று அவனது மீசையை பிடித்து இழுத்தாள்.
“மாமா சொல்லுடி...” என்று அவளது கழுத்தில் கடித்து வைத்தான். அவனது சுகமான வதைப்பில் முகம் சிவந்தவள் “சொல்ல மாட்டேன் போங்க..” என்று முறுக்கிக் கொண்டாள்.
“உன்னை எப்படி மாமான்னு சொல்ல வைக்கன்னு எனக்கு தெரியும்டி... என்கிட்டயே சவாலா” என்று அவளின் நெஞ்சில் தன் முகத்தை வைத்துப் புரட்டி எடுக்க அவனின் பிடரியை பற்றி நெரித்துக் கொண்டாள் உமை.
“சேட்டை சேட்டை அத்தனையும் சேட்டை...” என்று அவனது புஜத்தில் இரண்டு அடிப் போட்டாள். ஏனெனில் அவன் அந்த அளவு வதைத்து எடுத்தான் அவளை.
அதுக்கெல்லாம் கொஞ்சமும் அசையவில்லை அவன்... அவளை கீழே சரித்து அவள் மீது படர்ந்தான். மாட்டேன் என்றவளின் மறுப்புகள் எல்லாம் அவனது முரட்டு இதழ்களில் தொலைந்து காணாமல் போக அவளின் காலில் இருந்த மெட்டியை அவனது கால் விரல்கள் வருடி விட்டு, அளந்து பார்த்து அப்படியே அவனது இரு விரல்களுக்கு இடையில் வைத்து கழட்டி விட சட்டென்று அவனை தள்ளி விட்டாள் தன் மீது இருந்து...
“இந்த இருட்டுல நான் எங்க இருந்து மெட்டியை தேடுவது..” என்று அவள் எழுந்து தேட ஆரம்பிக்க,
“என்னடி இது தொட்ட உடனே கழண்டு வந்திடுச்சு..” என்று ஒண்ணும் அறியாதவனாய் அவன் கேட்க,
“ப்ச்.. பண்றதும் பண்ணிட்டு கிண்டல் வேற பண்றீங்கலாக்கும்..” என்று அவனது நெஞ்சில் அடித்தவள் மெட்டியை தேட பார்க்க,
“இல்ல வேணா வேணான்னு சொல்லிட்டு நான் தொட்ட உடனே உருகுறியே.. அது தான் உனக்கே உன்னை உணர்த்தலாம்னு...” என்று அவன் சொல்ல அவனது வாயிலே பட்டென்று ஒரு அடியை வைத்தாள் உமை. உத்தமனின் தொடுகையில் உமையவளின் உடல் தானாக நெகிழ அவள் கால் விரலும் நெகிழ்ந்துப் போனது. அதனால் அணிந்து இருந்த மெட்டியை வெகு சுலபமாக உத்தமன் கால் விரலாலே கழட்டி எடுத்து விட்டான்...
அதை அவளுக்கே உணர்த்தவும் பொல்லாதவனின் சேட்டையில் அவனை மொத்தி எடுத்தாள். வெட்கம் தானாக வந்து அவளில் படிய அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டான் அவளை.
உத்தமன் உருவி எடுத்த வேகத்துக்கு அது எங்கு போய் விழுந்ததோ தெரியவில்லை. நாளுக்கு கடைக்கு போய் இன்னொரு மெட்டி வாங்க வேண்டும். இவருக்கு இதே வேலையா போச்சு... இன்னைக்கு மட்டும் தான் இருவருக்கும் தெரிந்தே மெட்டி தொலைந்து போனது.
இல்லையென்றால் மெட்டி கால் விரலை விட்டு நழுவியது கூட தெரியாது உமைக்கு. ஏதே போல உத்தமனுகும் அவனது கால் பட்டோ கைவிரல் பட்டோ அல்லது இதழ்கள் பட்டோ நழுவி உருண்டு ஓடும் மெட்டியை பற்றியே சிந்தையே இருக்காது...
அதனால் பல மெட்டிகள் காணமல் தான் போனது. வாரத்துக்கு ஒரு முறை புது மெட்டி வாங்க வேண்டிய நிலை.
ஒரு டப்பா நிறைய ஒற்றை மெட்டிகளின் ஆதிக்கம் இருக்கிறது. அதை கொண்டு போய் கடைகளில் போட மனசே வரவில்லை உமைக்கு.
பரவாயில்ல இது ஒரு தொகுப்பா இருக்கட்டும் என்று உத்தமன் சொல்லிவிட ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வடிவமைப்பில் வாங்கி வருவான். பல நேரம் உமையை கூட்டிக்கொண்டு போய் எடுப்பான். நேரம் இல்லை என்றால் அவனே வேலைக்கு போயிட்டு வரும் பொழுது வாங்கி வந்து விடுவான். பல நாள் வாங்கி போட்ட அன்றே கூட தொலைந்து போகும்.
உத்தமனின் வேகமும் முரட்டு தனமும் அப்படி. அவனது அந்த தொடுகையில் மெழுகாய் உருகி நிற்பாள் உமையவள். உருகிய தேகத்தோடு அவளின் உடலில் தாலியை தவிர வேறு எதையும் இருக்க விட மாட்டான்...! அதில் கூச்சம் கொண்டு தன்னை மறைக்க முயன்று அவனது அடாவடியில் தவித்துப் போவாள்.
மாடியில் வீசிய மாருதத்தில் அவளின் மடியில் முகம் புதைத்துக் கொண்டு அவளை சீண்டிக் கொண்டு இருந்தான்.
அவனை தள்ளி விட முயன்றும் முடியாமல் அவனது கரங்கள் தன்னில் அத்துமீறுவதை அங்கீகரித்தபடியே முகம் சிவந்து மன்னனவனின் தலையை தன் நெஞ்சோடு இறுக கட்டிக் கொண்டாள்.
அவளது உணர்வுகளை அதிகம் சீண்டி விட்டவன் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அப்படியே அவளை கரத்தில் அள்ளிக் கொண்டு அவனது அறைக்குள் நுழைந்தான்.
படுக்கையில் தொப்பென்று அவளை போட்டு அவளின் மீது கொஞ்சமும் தாமதம் இன்றி பரவி படர்ந்தவன் விளக்கை அனைக்கமால் அவளை அணைக்க, வெட்கத்தில் மிதந்தவள் போர்வைக்குள் சரண் புக, போர்வையை வீசி எறிந்தவன் அவளுக்கு அனைத்துமாக அவன் மாறிப் போனான்.
தன்னை விட்டு நீங்கிப் போன உடைகளை வெட்கத்துடன் பார்த்தவள் அவனை பார்க்காமல் விழிகளை மூடிக் கொள்ள மூடிய விழிகளில் தன் சூடான இதழ் முத்தத்தை பதித்தவன் அவளை விழிகளை திறக்க வைக்க எனென்ன செய்ய முடியுமோ அது அத்தனையும் செய்து வைத்தான்.
அவனது தொல்லை தாங்காமல் தானாகவே விழிகளை திறந்து அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். அவனது சீண்டல் வழிந்த விழிகளை எதிர் நோக்க முடியாமல் வேகமாய் அவன் பிரித்து விட்ட கூந்தலால் தன்னை மூடிக் கொள்ள பார்க்க அவளின் நீண்ட கூந்தலை அபப்டியே பற்றி இழுத்து தன்னக்குள் அவளை அடைத்துக் கொண்டான்.
போதும் போதும் என்கிற அளவுக்கு முத்தத்தால் அவளை கொண்டுப் போட்டான். நாளைக்கு உலகமே இல்லாதவனின் மன நிலையில் இருந்தான் உத்தமன்.
ட்ராவல் பண்ணிக்கொண்டு வந்த டையர்ட் இருந்தபோதும் அவளை விட மனமே வரவில்லை அவனுக்கு. எத்தனை முறை கூடி மகிழ்ந்தாலும் போதாமையால் நிரம்பி நின்றான் பெண்ணவளிடம். அடுத்து அடுத்து என்ற எண்ணம் அவனுள் வலுத்துக் கொண்டே இருக்க அதை அத்தனையும் அவளிடம் கொண்டு சேர்த்தான் உத்தமன்.
உத்தமனின் போதாமை உமையவளை நாணம் கொள்ள வைக்க அவ்வளவு அலுப்பு இருந்தாலும் அவனை ஏமாற்ற மனம் வராமல் அவனை கொண்டாடினாள் உமை.
எல்லாம் முடிந்தாலும் அவளை விடாமல் நீங்க விடாமல் தன்னுள் இறுக்கிக் கொண்டு தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். விடாத தேடலில் அவனது காதலே உச்ச பட்சமாக நிரம்பி இருக்க அவனை சுமப்பதும் அவனில் பாரமாக அவள் கிடப்பதும் என்றுமே திகட்டாததாய் இருவருக்கும் மாறிப் போனது.
இது எக்காலம் வந்தாலும் மாறாது இனிமையாக மெல்லிசையாய் அவர்களுக்குள் சந்தம் பாடிக் கொண்டே இருக்கும் பந்தம் அல்லவா...! அந்த பந்தத்தின் உயிர் நாடியே மெட்டி எனில் அங்கு என்றுமே மெட்டி மெல்லிசை மீட்டிக் கொண்டு சந்தம் பாடிக் கொண்டே தான் இருக்கும்.
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌
நன்றி மா ♥️