ஒரு வருடம் கழித்து...
பரபரப்பாக எல்லோரும் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். இன்றைக்கு வரதன் ராஜி பெண்ணுக்கு காது குத்து... அவர்களது குலதெய்வ கோவிலில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
நேற்று இரவே உமையின் குடும்பமும் மதிலாவின் குடும்பமும் உத்தமனின் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். இங்கிருந்தே சேர்ந்து போகலாம் என்று ஏற்பாடு... வெற்றிக்கு சமீபகாலத்தில் தான் திருமணம் ஆனது.. அவன் அவனது மாமியார் வீட்டில் இருந்ததால் காலையில் நேரடியாக கோயிலுக்கே வர சொல்லி சொல்லிவிட்டான் உத்தமன்.
அதன் படியே “அண்ணா அண்ணியை கூட்டிட்டு கோயிலுக்கு வந்திடு. நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம்...” என்று நான்கு மணிக்கே அண்ணனை எழுப்பி விசயத்தை சொல்லிக் கொண்டு இருந்தாள் உமை.
“சரிடா நாங்க வந்திடுறோம்...” என்றவனிடம் இருந்து வெற்றியின் மனைவி போனை வாங்கி “அண்ணி வர்றப்ப எதுவும் வேணுமா? வாங்கிட்டு வரவா? எல்லாத்தையும் மறக்காம எடுத்து வச்சுடீன்களா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் எதுவும் வேணாம் அண்ணி.. அங்க போனா தான் எதாவது மிஸ் பண்ணது தெரியும். அப்போ போய் வாங்கிக்கலாம்.. நீங்க பத்திரமா கிளம்பி வாங்க” என்றவளின் முதுகில் சூடான மூச்சுக் காற்றுப் பட திகைத்துப் போனாள்.
அதுவும் கட்டி இருந்த புடவையின் இடைவெளியில் கரத்தை உள்ளே விட்டு தன் இடுப்பை பிடித்துக் கொண்டு அழுத்தமாக பிசைந்து விட பக்கென்று ஆனது அவளுக்கு.
கிளம்புற நேரத்துல உத்தமன் படுத்த ஆரம்பித்தால் பிறகு எங்கிருந்து சரியான நேரத்துக்கு கோயிலுக்கு செல்வது.. தன் மீது ஆதிக்கம் செலுத்துபவனின் பிடியில் இருந்து நழுவ ஆரம்பித்தாள். அப்படி சுலபமாக அவள் தப்பித்து விட முடியுமா என்ன...?
விலகியவளை இழுத்துக் கொண்டு கட்டிலில் தள்ளியவன் வில்லன் போல சிரிக்க,
“படுத்தி எடுக்காம ஒழுங்கா நகர்ந்து போங்க மிஸ்டர் உத்தமன். போறது கோயிலுக்கு ஞாபகம் இருக்கட்டும்” என்று என்று எழப்போக,
“அதெல்லாம் தலைக்கு தண்ணி ஊத்திட்டு போனா ஆத்தா மன்னிச்சுடும்...” என்றான் கண்ணடித்து..
“அந்த ஆத்தா மன்னிச்சுடும்... ஆனா நீங்க பெத்த ஆத்தா மன்னிக்காது மிஸ்டர்” என்று சிரித்தாள்.
“ஏய் கடுப்பேத்தாதடி... அவளுக்கு எப்படி தான் மூக்கு வேர்க்குதோ தெரியல. உன் பக்கத்துல வந்தாலே அவ அழறா...” என்று மண்டையை பிடித்துக் கொண்டான்.
“அது மட்டுமா நீயா மனசு வச்சி என் கிட்டக்க வந்தா நீ பெத்த உத்தம புத்திரனுக்கு பொறுக்காது.. உடனே இந்த வீடே அதிர்ர மாதிரி கத்தி கூப்பாடு போடுறான்... இவுங்களுக்கு மத்தியில உன்னை தொட கூட முடியாம நான் தான்டி மாய்ந்து போறேன்” என்றான் கடுப்பாக.
அதில் கலகலவென்று சிரித்தவளின் செவ்விதழ்களை வன்மையாக கவ்விக் கொண்டவன்,
“கேலி பண்ணி சிரிச்சா உன்னை சும்மா விட மாட்டேன்னு உனக்கே நல்ல தெரியும். பிறகு எதுக்குடி இப்படி சிரிக்கிற” என்று மேலும் அவளிடம் மல்லுக் கட்டினான்.
“வயசானா இப்படி தான் அடிக்கடி கோவம் வருமாம் மிஸ்டர் உத்தமன். எதுக்கும் நாளைக்கு புல்பாடி செக் பண்ணிட்டு வந்துடலாம்” என்று உமையவள் மேலும் வம்பிழுக்க,
“அதென்னடி நாளைக்கு... நான் இப்பவே புல்பாடி செக்கப் பண்றேன்” என்று அவளது சேலையை உருவிப் போட்டவன் அதன் பிறகு செய்தது எல்லாம் அத்தனையும் அக்கப்போரு தான். பெண்ணவளின் சிணுங்கல்கள் எல்லாம் சிருங்காரமாய் மாற, தாம்பத்திய மோகனங்கள் இசை சேர்க்க உத்தமனின் வேகமும் கூடிப் போனது. மீண்டும் ஒரு குளியல் போட்டு வெளியே வருவதற்குள் மதிலாவும் ஈஸ்வரியும் ஆயிரம் முறை கதவை தட்டி இருப்பார்கள்.
தன் கவணவனை சமாளித்து புடவை கட்டி விட்டு வெளியே வருவதற்குள் உமையவளுக்கு போது போதும் என்று ஆகிப் போனது...!
“இவ்வளவு நேரம் என்ன தான் பண்ணுவ.. புடி உன் பிள்ளைகள் இரண்டு ஒரே அழுகை” என்று அவளது கையில் ஈஸ்வரி பேரனை கொடுத்தார். அதற்குள் மதிலாவும் உமையின் பெண் பிள்ளையை தூக்கிக் கொண்டு வந்து கொடுக்க உத்தமன் வாங்கிக் கொண்டான்.
அதன் பிறகு இருவருக்கும் மாற்றி மாற்றி பசியாற்றினாள். அது வரை உத்தமன் அவளருகில் இருந்தபடியே அவளுக்கு தேவையான உதவிகளை செய்தான். இப்பொழுது எப்பொழுதும் சரி அவன் அவனாக அவனில் இருந்தபடியே உமையவளை தாங்கிக் கொண்டு இருக்கிறான்.
எவ்விடத்திலும் அவளை விட்டுக் கொடுப்பதே இல்லை. தவிக்க விட்டதும் இல்லை... அவள் சொன்ன “வாழ்ந்து தான் காட்டலாமே..” என்று சொல்லுக்கு இன்னுமே வலுக்கூட்டி வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சுவிஸ் போனதிலிருந்தே உமைக்கு பிள்ளை பேரு தங்கிவிட அடுத்த ஒன்பது மாதத்தில் இரு பிள்ளைகளும் அடுத்தடுத்த நொடியில் பிறந்து விட்டன... ஒரு மாத காலம் அவளது தாய் வீட்டில் விட்டவன் அடுத்த மாதம் மனைவி பிள்ளைகளோடு மாமியாரையும் தூக்கிக் கொண்டு வந்து விட்டான் அவனது வீட்டுக்கு.
போதாதற்கு ஈஸ்வரியும் மதிலாவும் உமையை பார்த்துக் கொள்ள எல்லாமே சிறப்புடன் சென்றது. இதோ பிள்ளைகளுக்கு மூன்று மாதம் ஆகப் போகிறது..! ராஜியும் வாரம் வாரம் வந்து விடுவாள்.
சில நாட்கள் இங்கே தங்கிப் போவதும் உண்டு. வதரனும் வந்து விட இரு கை பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள அனைவரும் இருக்க உமைக்கு வேலையில்லை. அந்த வேலையை தன் பக்கம் திருப்பிக் கொண்டான் உத்தமன்.
“சரியான ஆளு தான் நீங்க..” என்று நொடித்துக் கொண்டே ஒன்னரை மாதம் பிறகு அவனது சேட்டையை அவளிடம் காட்ட ஆரம்பித்து விட்டான். பிறகு என்ன மறுபடியும் மெட்டி தொலைக்கும் வைபோகம் சிறப்பாக நடை பெற ஆரம்பித்தது.
ஈஸ்வரியும் ரூபாவதியும் தான் இரவெல்லாம் கண் விழித்து பிள்ளைகளை பார்த்துக் கொள்வார்கள். அதனால் காலையில் இருவரும் தூங்க போக பகல் பொழுதில் ராஜியும் மதிலாவும் உமையும் பிள்ளைகளை பார்த்துக் கொள்வார்கள்.
உத்தமன் இப்பொழுதும் வீட்டுக்கு செய்வதில் கணக்கே பார்க்க மாட்டான்... எவ்வளவுக்கு எவ்வளவு சம்பாதிக்கிரானோ அதே அளவுக்கு வீட்டின் தேவைகளையும் வீட்டில் இருப்பவர்களின் தேவையையும் நிறைவேற்றி வைத்து விடுவான்.
அதுவும் ராஜிக்கு செய்ய வேண்டிய சீர் வரிசையில் எந்த குறையும் வைக்கவே மாட்டான். அதில் சசிதரனை கூட அவன் எதிர் பார்க்க மாட்டான். ஆனால் சசிதரனும் ஓரளவு அவனால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அண்ணனிடம் தன் பங்கு பணத்தை கொடுத்து விடுவான்.
ராஜியின் மகளுக்கு காது குத்தலாம் என்று உத்தமனின் வீட்டுக்கு பேச வர, உமை கருவுற்ற செய்தி கேட்டு பிள்ளை பிறந்ததுக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டாள். அதன் பிறகு மூன்று மாதம் கழித்து தான் வைக்க வேண்டும் என்பதால் இதோ இப்பொழுது தான் வைத்தாள்.
அதோடு உமையின் அண்ணன் வெற்றியின் திருமணம் வேறு இருக்க முதல் முகூர்த்தத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுத்தவள் அடுத்த முகூர்த்தத்தில் தான் தன் பிள்ளைக்கு காது குத்து நிகழ்வை நடத்துகிறாள்.
ராஜியிடம் இவ்வளவு மாற்றம் வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. வரதனிடம் மன்னிப்பு கேட்க கூட அவளது குற்ற உணர்வு தடுக்க வரதன் விலகி போவதற்கு முன்பே ராஜி அவனை விட்டு விலகி போக ஆரம்பித்தாள்.
ஒரே அறையில் இருந்தாலும் நடுவில் இருந்த விலகல் இருவரையும் நெருங்க விடவில்லை. இருவருக்குள்ளும் ஒன்றும் சரியாகாமல் இருப்பதை, வாரம் தோறும் வீட்டுக்கு வந்தாலும் இருவரின் முகத்திலும் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லாததை பார்த்த உமைக்கு ராஜியிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் பேசினால் கேட்டுக் கொள்ளும் ரகமா என்று யோசித்தாள். ஆனால் அவளே கொஞ்சம் கொஞ்சமாக உமையவளிடம் பேச ஆரம்பிக்க அதன் பின்பு மனம் விட்டு அவளிடம் பேசி வரதனை விட்டு விலகாத என்று அறிவுரை கூறி அவர்களது வாழ்வில் வெளிச்சத்தை பரவ செய்துவிட்டாள்.
ஈஸ்வரி அவ்வப்பொழுது தடுமாறினாலும் தன்னை இழுத்து பிடித்துக் கொண்டு எல்லோருடனும் மகிழ்ந்து இருந்தார். ஒவ்வொருவராக கிளம்பி உத்தமன் ஏற்பாடு செய்து இருந்த ட்ரவல்ஸில் ஏறி அமர்ந்தார்கள்.
இரு பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை இரு பையிலும் வைத்து எடுத்துக் கொண்டார்கள் ரூபாவதியும் ஈஸ்வரியும். இருவருக்குள்ளும் ஒரு நட்பு மலர்ந்து இருந்தது. பிள்ளைகள் தூங்கி போன பிறகு கடந்த காலத்தில் நடந்ததை எல்லாம் இருவரும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்ள ஆரம்பிக்க நட்பு சொல்லாமலே மலர்ந்து இருந்தது.
அதோடு மதிலா அம்மாவும் அவர்களோடு சேர்ந்துக் கொள்ள நல்ல கம்பெனி கிடைத்த பெரியவர்களுக்கு சொல்லவும் வேண்டுமா? அவர்களின் ஞாபகங்களை எல்லாம் மலரும் நினைவுகளை எல்லாம் பேசி சிரித்துக் கொண்டார்கள்.
ஆண் சம்மந்திகள் எல்லாம் ஒரு இடத்தில் கூடிவிட, மதிலாவின் சகோதர சகோதரிகள் ஜெய்யிடம் கலகலத்துக் கொண்டு வர, மதிலாவும் சசிதரனும் ஒரு சீட்டில் அமர்ந்துக்கொள்ள, உத்தமனும் உமையும் கடைசி சீட்டில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் பயணம் பண்ண ஆரம்பித்தார்கள்.
அவனின் தோளோடு சாய்ந்துக் கொண்டவளின் நெஞ்சம் நேசத்தால் நிறைந்து போய் இருந்தது...! அவளின் தலையை தன் நெஞ்சில் தாங்கி இருந்தவனுக்கும் அதே நேசம் நிரம்பி தளும்பி இருந்தது.
இருவரின் மடியிலும் இரு பிள்ளைகள் அவர்களின் அழகான தாம்பத்தியத்துக்கு எடுத்துக் காட்டாக..!
திடிரென்று அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் முத்தம் வைக்க,
“என்னவாம்...?” என்றபடி அவனது நெஞ்சில் சட்டையை விலக்கி விட்டு வெற்று மார்பில் தன் இதழ்களை வைத்து பதில் முத்தம் கொடுத்தாள் உமையவள்.
“நேசம் அதிகமாகி வெளியே வர தெரியாம திக்குமுக்காடி போய் இருக்கு. அது தான் வாய் வழியா உன்கிட்ட இறக்குறேன்” என்று கண்சிமிட்டினான்.
“பார்த்து பார்த்து இங்கும் ஓவர்ப்லோல தான் போயிக்கிட்டு இருக்கு மிஸ்டர் உத்தமன்” என்று சிரித்தாள்.
“நீ இப்படி மிஸ்டர் உத்தமன் சொல்லும் போது... உன் உதட்டை கடிச்சி...” என்று அவன் ஆரம்பிக்க,
“அச்சோ மாமா தெரியாம சொல்லிட்டேன். ப்ளீஸ்.. கோயிலுக்கு போறோம். அதனால சேட்டை பண்ணாம ஒழுங்கா வாங்க சொல்லிட்டேன்” என்று மிரட்டலாக சொல்ல,
சொன்ன இதழ்களிலும் அவன் நச்சென்று முத்தம் வைக்க, உத்தமனிடம் இனிமேல் பேசவா முடியும். அவனது விருப்பம் போல தானே எப்பவும். இப்பவும் அதே போல அவனது விருப்பத்துக்கு விட்டு விட்டாள். இல்லை என்றாள் காயம் அவளுக்கு தானே...!
தாய்மாமன் உத்தமனின் மடியில் ராஜியின் மகளுக்கு காது குத்து சிறப்பாக நடந்து ஏறியது..! மொட்டை சசிதரனின் மடியில் வைத்து அடித்தார்கள். இருவரும் ஒன்று சேர்ந்து ஐந்து பவுனுக்கு நகைகள் வாங்கி அணிவித்தார்கள். அதோடு மொய் பணமும், சீர் தட்டும் அதிகம் வைக்க ராஜியின் மாமியாருக்கு பெருமை பிடிபடவில்லை.
விழுந்து விழுந்து கவனித்தார் இவர்களின் குடும்பத்தை. விழா இனிதாக சிறப்பாக நடை பெற்று முடிந்தது... அடுத்த நாள் வெற்றி தம்பதிகளை விருந்துக்கு அழைத்து இருந்தான் உத்தமன்.
அதனால் அப்படியே அனைவரையும் தங்களின் வீட்டிலே தங்க சொல்லிவிட்டான். ராஜியும் வரதனும் வீட்டுக்கு போயிட்டு பிறகு இரவு வரதாக சொல்ல அவளின் மாமியார் மாமனாரையும் தனியாக அழைப்பு விடுத்து விட்டு உத்தமனும் உமையும் கிளம்பினார்கள்.
--
இரவே அனைவரும் உத்தமனின் வீட்டில் கூடி விட ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். மூத்த ஆண்கள் ஒரு புறம் நாட்டு நடப்பை பேச, இன்னொரு புறம் மூத்த பெண்கள் சமையலுக்கு தேவையான பொருட்களை ஐந்துக் கொண்டு, உரித்துக் கொண்டும், அரிந்துக் கொண்டும் இருக்க, அடுப்படியில் நின்ற இளம் மருமகள்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் பேசி ஒருவரை ஒருவர் வாரி விட்டுக் கொண்டே சமைத்துக் கொண்டு இருந்தார்கள்.
குழந்தைகள் ஒரு புறம் துள்ளி குதிக்க கை பிள்ளைகள் தொட்டிலில் படுத்து ஆ ஊ என்று சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
இளம் ஆண்கள் கூட்டம் சீட்டு கட்டில் பிசியாகிவிட இரவு பொழுதே நீண்ட நெடிய பொழுதாக போனது. உணவு உண்டுவிட்டு பெரியவர்கள் எல்லோரும் பேர பிள்ளைகளோடு தூங்கப் போய் விட அவரவர் துணையோடு நடு கூடத்தில் மாநாடு போட்டுவிட்டார்கள்.
அதன் பிறகு அமளி துமளி தான்... நான்கு துணைகளும் அடித்த கொட்டத்துக்கு அளவே இல்லை. ஒருவரை ஒருவர் வாரி விட்டபடியே இருக்க, உத்தமன் யார் என்ன பார்க்கிறார்கள் என்றெல்லாம் கவலையே கொள்ளாமல் உமையவளின் மடியில் படுத்து விட்டான்.
“அது தானே என்னடா மச்சான் இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன்..” என்று வரதன் வார,
அப்படியே ஒவ்வொருவராய் கேலி கிண்டலில் சிரிக்க, ஜோடி ஜோடியாய் சீட்டு விளையாட ஆரம்பித்தார்கள். அதில் இன்னும் அங்கு சிரிப்பலை எழ எந்த போட்டி பொறாமையும் இல்லாமல் அனைவரும் மகிழ்ந்து இருந்தார்கள்.
பிறகு நேரம் போக போக உத்தமன் உமையை சொறிய ஆரம்பித்து விட்டான்.
“நேரம் போகுதுடி. அப்புறம் காலையில விட மாட்டேங்குறன்னு என்னை பென்ஞ் மேல நிக்க வைப்ப.. அதனால ஒழுங்கா இப்பவே கிளம்பு” என்று யாருக்கும் தெரியாமல் அவளது இடுப்பில் கில்லி வைத்தான்.
அத்தனை பேருக்கு முன்னாடியும் எப்படி எழுந்து அரைக்கு போவது என்று சங்கடப் பட்டவள் உத்தமனை பாவமாக பார்த்து வைத்தாள்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது... இப்பவே எனக்கு நீ வேணும்...” என்று சிறு பிள்ளையாய் அடம் பண்ண ஆரம்பித்து விட்டான்.
அதோடு அவளின் இடையில் சொறி சொறி என்று சொறிந்து வைத்து விட்டான். போதாதற்கு கிள்ளல் வேறு... அவனை சமாளிக்க முடியாமல் அவள் நெளிய ஆரம்பிக்க, அவள் நெளிய ஆரம்பித்த சிறிது நேரத்தில் மற்ற மூன்று பெண்களும் நெளிய ஆரம்பிக்க,
உமையவளுக்கு சிரிப்பு வந்து விட்டது...! வீட்டுக்கு வீடு வாசற்படி தான் என்று எண்ணியவள்...
“நான் போய் பால் காய்ச்சிட்டு வரேன்...” என்று கிளம்ப அவளை தொடர்ந்து மற்ற பெண்களும் முகம் சிவந்தபடி அடுப்படிக்கு ஓடினார்கள்.
வெற்றிக்கும் தனி அரை கொடுத்து இருக்க புது மாப்பிள்ளைக்குறிய காத்திருப்பு அவனிடத்தில்.
அனைவரின் கையிலும் பாலைக் கொடுத்தவள் தங்களுக்கு உரியதை எடுத்துக் கொண்டு தங்களின் அரைக்குள் நுழைந்தாள்.
வந்தவளை இடைவிடாது தன்னில் அடைக்காக்க,
“அலுக்கவே அலுக்காதாங்க...” என்று முகம் சிவந்தாள்.
“மாமா சொல்லுடி...” என்று கேட்டுக் வாங்கிக் கொண்டான்.
“அப்போ நீங்க தங்கம் சொல்லுங்க...” என்று அவளும் கேட்டு வாங்கிக் கொண்டாள்.
“சொன்னாலும் சொல்லாட்டியும் நீ என்னோட தங்கம் தான்டி...” என்று கொஞ்சி அவளை முத்தாடினான் உத்தமன் இரவு முழுவதும்...
உத்தமனின் காதல் மழையில் இரவு முழுவதும் நனைந்தவள் விடியும் வேளையில் அவனை விட்டு நீங்க இன்றும் விடாமல் அவளை படுத்தினான்.
“எப்போ பாரு இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தீங்க... ஒரு நாள் இல்ல ஒரு நாள் நைட்டு உங்க கூட தங்காம டிமிக்கி குடுக்க போறேன் பார்த்துக்கோங்க...” என்று நொடித்துக் கொண்டாள்.
“அதை அப்போ பார்த்துக்கலாம் இப்போ மாமனை பாருடி என் செல்லாக் குட்டி...” என்று அவளை விடாமல் சிறை எடுத்தான் உமையவளின் மனம் கொண்டவன். அவனது தேவையை தீர்த்து வைத்துவிட்டு குளிக்க உள்ளே ஓடினாள்.
குளித்து வெளியே வரும் பொழுது அடித்து போட்டது போல உத்தமன் நன்றாக தூங்க, அவனது நெற்றியில் முத்தம் கொடுத்தவள், பிள்ளைகளுக்கும் முத்தம் கொடுத்து விட்டு புடவை மாற்ற ஆரம்பித்தாள். கண்ணாடி முன்னாடி இருந்த வெள்ளி குங்கும சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து வைக்க அவளின் கரத்தை பின் புறம் இருந்து பற்றிய உத்தமன் தானே அவளுக்கு வைத்து விட்டு அவளின் குளிர்ந்த கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து அவளை சில்லிட வைத்து கண்ணடித்தான்.
“பிராடு தூங்கலையா நீங்க...?” கேட்டுக்கொண்டே அவனை கண்ணாடி வழியாக பார்த்தாள் மாதுளம் பூவின் சிவப்போடு...
“என் பொண்டாட்டி இவ்வளவு ப்ரெஷா வந்து முத்தம் குடுத்தா எங்க இருந்துடி தூங்குறது...” என்று சீண்டினான்.
“ஆங் போதும் போதும்... வேலை நிறைய இருக்கு ஆளை விடுங்க” என்றவளின் இடையை அழுத்திப் பிடித்தவன், அவளின் இதழ்களில் அழுத்தமாக முத்தம் வைத்த பிறகே அவளை விடுவித்தான்.
ஈரம் சொட்ட தலையில் துண்டை சுற்றியபடியே அடித்து பிடித்துக் கொண்டு கீழே வந்தாள் உமை.. அடுப்படிக்கு இன்னும் யாரும் வந்து இருக்கவில்லை. அப்படா என்று என்று அவள் வேலையை ஆரம்பிக்க அவளை தொடர்ந்து அனைவரும் வர வேலை பேச்சுக்களுக்கு இடையே நடக்க ஆரம்பித்தது.
மதிலா தான் முதலில் பார்த்தாள் உமையவளின் ஒரு காலில் மட்டும் மெட்டி இல்லாததை.
“இன்னைக்குமா மெட்டி தொலையும்? அதெப்படி உமை உனக்கு மட்டும் இப்படி தொலையுது...” என்று உமையிடம் கண்ணடித்த படியே கேட்டாள்.
முன்பு என்றால் வெட்கத்துடன் போய் விடுவாள். ஆனால் இப்பொழுதோ,
“ஆங் உனக்கு எப்படி நீ போட்டு இருக்கிற நைட்டியும் சேலையும் வாரத்துக்கு ஒரு முறை கிழியுதோ அது மாதிரி தான் இதுவும்...” பதில் சொன்னாள் அவளை விட கேலியுடன்.
“அது சரி மாத்தி மாத்தி கேலி பண்ணிக்கிட்டே இருங்க நீங்க...” என்று ராஜி இட்லி ஊத்தி வைத்தபடிசொல்ல,
“ஆமா இவங்க ரொம்ப யோக்கியம்... எங்களுக்காவது நான் போட்டு இருக்கிறது தான் டேமேஜ் ஆகுது. ஆனா அங்க அப்படியே ஆப்போசிட்...” என்று மதிலா களத்தில் இறங்க,
“ஆமா மதி நம்ம அண்ணா ஜெயின் பிஞ்சி போச்சு, அதோட அவர் சேர்ட்ல ஒரு பட்டன் கூட உருப்புடியா இருக்க மாட்டிக்கிதுன்னு பாவம் அவரு புலம்புறாரு...” என்று உமை கேலி செய்ய, வேகமாய் இருவரின் வாயையும் தன் கரத்தால் மூடினாள் ராஜி.
“தெரியாம உங்க கிட்ட வாயை குடுத்துட்டேன்... சப்பா ஆளை விடுங்க” என்று கெஞ்சினாள்.
“அது சரி வீட்டுக்கு வீடு வாசற்படி தானா...” என்று உமையின் அண்ணியும் களத்தில் இறங்க, ஒரே சிரிப்பலை தான் அவ்விடத்தில். அந்த சமயம் அந்த அறையை கடந்துப் போன உத்தமன் உமையை பார்த்து கண்ணடிக்க அந்தி வானம் தோற்றுப் போகும் அளவுக்கு சிவந்துப் போனாள் உமையவள். அதை பார்த்து மற்றவர்கள் கேலி பண்ணி சிரிக்க, அந்த சிரிப்பு சத்தத்தை கேட்ட அனைவருக்கும் சொல்லவும் வேண்டுமா என்ன அந்த இல்லறத்தின் நல்லுறவை பற்றி...
ராஜி மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வர அவளை கேட்க விடாமல் பற்றிக் கொண்டாள் உமையவள். மன்னிப்பு என்பதை விட மனம் திருந்துவது தானே உண்மையான நல்லுறவுக்கு வித்து. இங்கும் அதே நிகழ உறவுகளுக்குள் நேசமும் நட்பும் இழையோடியது... இதோ அதற்கு இன்றைய ஒரு நாளே நல்ல உதாரணம்..
எத்தனை பேர் இருந்தாலும் காலையில் காபி உத்தமனோடு தான் உமையவளுக்கு. இன்றும் அதே போல அவனுக்கு தேவையான ப்ரோட்டின் நிறைந்த பருப்பு வகைகளை எடுத்துக் கொண்டு இருவருக்குமான காபியோடு எப்பொழுதும் அமரும் மரத்தடிக்கு வந்தாள்.
அவளின் கரத்தில் இருந்ததை வாங்கி அருகில் வைத்தவன், அவளது காலை தன் மடியில் நீட்ட வைத்து மெல்ல மெல்ல காலை அழுத்தி விட்டான். அப்படியே நேற்று புதிதாய் வாங்கி இருந்த மெட்டியை இரு கால் விரல்களிலும் அணிவித்து மெல்ல முத்தமும் கொடுத்தான். அதில் தேகம் எங்கும் சிலிர்த்தவள் மனம் நிறைய தன்னவனை அருகில் இழுத்து நெற்றியில் அழுத்தமாக தன் மூச்சு முட்ட முத்தம் கொடுத்தாள். அதோடு அவனுக்கு ஒவ்வொரு பாதம் பருப்பாய் இவள் ஊட்டி விட்டாள்.
மகளின் நல்வாழ்வை கண்ணார கண்ட ரூபாவதிக்கும் ஆகமநாதனுக்கும் மனம் நிறைந்துப் போனது. மற்ற இணைகளுக்கு உத்தமனும் உமையவளும் வாழும் வாழ்க்கையை நல்ல உதாரணமாய் எடுத்துக் கொண்டார்கள்.
மெல்ல மெல்ல இசைத்த மெட்டியின் இசை மனம் மயக்கும் மெல்லிசையாகி உத்தமன் உமையவள் வாழ்க்கைக்கு நீக்கமற சந்தமாகியது...
மெல்லிசை மீட்டியது...
நாமும் இவர்களுடன் இப்படியே விடைபெறுவோம்... என்னோடு கைகோர்த்து வந்த அத்தனை தோழமைகளுக்கும் எனது நன்றிகள். நீங்க இல்லை என்றால் என்னால் இவ்வளவு விரைவாக கதையை முடிக்க முடிந்து இருக்காது நட்பூக்களே.. உங்கள் உருதுணைக்கும் கருத்துக்களுக்கும் எப்பொழுதும் என் மனம் கனிந்த நன்றிகள். அடுத்த கதைக்களுக்கும் உங்கள் துணை வேண்டும்...!
நாளையிலிருந்து உருக்கி கோரத்தாய் உன் உயிரில் கதையின் பதிவுகள் வரும்...!
நன்றி தோழமைகளே..!
Romba arumaiyana story sis, superrrrra irunthuchu, nalla feel good story sis👌👌👌👌👌👌👌👌
Nice story sis, ella family layum nadakura issues real ah write panni erukenga sis, hats off to you sis, niraya story write panna ennoda best wishes sis, keep rocking sis