அறை கதவை தட்டி தட்டி பார்த்தவள் அது திறக்காமல் போகவும் பயம் நெஞ்சை கவ்வியது தமிழுக்கு. “கடவுளே ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கிற.. உனக்கு எல்லாம் என் மேல இரக்கமே வராதா? அப்படி என்ன நான் பாவம் செஞ்சேன் என்னை போட்டு இந்த பாடு படுத்துற” வாய்க்குள் கடவுளை திட்டிக் கொண்டே கதவை ஒட்டியே நின்று இருந்தாள்.
வந்ததில் இருந்து அவள் செய்யும் செயலை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த அகத்தியனுக்கு ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது.
“ஏய் உன்னை கூப்பிட்டது நான்டி... கதவு ஒன்னும் இல்ல” என்று எரிச்சலில் கத்தினான். அதில் அவளுக்கு காது வலியே வந்துவிட்டது. அந்த அளவுக்கு கத்தினான்.
“இப்ப எதுக்கு கத்துறீங்க?” என்றவள் அவன் புறம் திரும்பினாள்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்த அகத்தியனா இவன் என்று மலைத்துப் போனாள். ஒட்ட நறுக்கிய தலைமுடி.. கிளீன் சேவ் என இருந்தவனை ஒருகணம் அவளையும் மீறி ஆழ்ந்து இரசித்தாள் தமிழ்.
அவளது விழி எடுக்காத பார்வையில் அவளின் முகத்துக்கு நேராக சொடக்கு போட்டு அவளது கவனத்தை கலைத்தான்.
அதில் சுயத்துக்கு வந்தவள் தான் என்ன காரியம் செய்துக் கொண்டு இருக்கிறோம் தனக்கு தானே குட்டிக் கொண்டவள்,
“எதுக்கு கூப்பிட்டீங்க?” மிடுக்காக கேட்டாள்.
“ஆங்... உன்கூட குடும்பம் நடத்த தான்” என்றான் எரிச்சலாக.
“அது தான் உங்களால முடியாதுள்ள” வாயை விட்டாள். அகத்தியனுக்கு அவளை ஓங்கி அறைய வேண்டும் போல தோன்றியது. ஆனால் பாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து சொன்னதில் தன்னை அடக்கிக் கொண்டவன் பார்வையாலே அவளை எரித்தான்.
“ஆமாம்டி ஒன்னும் முடியாம தான் கல்யாணம் ஆன ஒரு வாரமும் உன்னை வச்சு செஞ்சேன் பாரு” பல்லிடுக்கில் வார்த்தையைதுப்பினான்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது” என்று இவனை பார்க்காமல் எங்கோ பார்வையை வைத்துக் கொண்டு சொன்னாள். “என்கிட்டே வாங்கி கட்டிக்காம போக மாட்டன்னு சபதம் எடுத்துட்டு வந்து இருக்க... அப்போ அனுபவி” என்றவன் அவளை தூக்கி படுகையில் போட்டான்.
“மிஸ்டர் நீங்க ரொம்ப ஓவரா போறீங்க... முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கிட்ட இப்படி தான் பிகேவ் பண்ணுவீங்களா? எதுக்காக இப்படி முரட்டு தனமா நடந்துக்குறீங்க?” அவனை முறைத்துக்கொண்டே கட்டிலில் இருந்து எழ பார்த்தாள்.
“ஆமான்டி நீ முன்ன பின்ன பழகாதவள் தான்” என்று நக்கலாக அவன் சொல்ல, அவனது சொற்களில் இருந்த டபிள் மீனிங்கை அறிந்து முகம் சிவந்துப் போனவள்,
“இங்க பாருங்க” என்று அவனை அரட்டி வைக்க பார்த்தாள். அகத்தியனை அரட்ட முடியுமா? அது தெரியாமல் அவனிடம் அவள் வாயை விட அவளின் வாய் மீது தன் வாயை வைத்து அடைத்து விட்டான்.
அப்பொழுது தான் குளித்து விட்டு வந்து இருப்பான் போல.. அவன் மீது சோப்பின் மனம் வீசியது. அதுவும் அவன் நின்றிருந்த தோற்றம் அவளை கூசசெய்தது. வெறும் துண்டுடன் அவன் நின்றிருக்க கண்களை வேறு புறம் திருப்பிக் கொண்டவள் வாயை சகட்டு மேனிக்கு விட, அவன் அவளை தன் புறம் திருப்பி அவளின் இதழ்களோடு தன் இதழ்களை கோர்த்துக் கொண்டான்.
இவ்வளவு நாட்களாக கனவிலும் நனவிலும் அவனை இம்சை செய்த அவளின் இதழ்களை தனக்குள் கொய்துக் கொண்டான் அகத்தியன்.
அவளை பார்த்த நொடியில் இருந்து அவனை அதிகம் தூண்ட செய்தது அவனது உணர்வுகள். அதை அவளிடம் காட்ட வழியில்லாமல் இருந்தவனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை கைவிடாமல் பற்றிக் கொண்டான்.
“சண்டை தானே போட்டுக்கிட்டு இருந்தோம்” என்று தமிழ் மிரண்டு விழித்தாள் பாவம். இம்சை செய்யும் அவளது இதழ்களை தன் இதழ்களால் அடக்கி அவளிடம் அத்துமீறினான்.
அவனிடமிருந்து விடுபட எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாக போனது தான் மிச்சம். அவனிடம் இருந்து கொஞ்சம் கூட அவளால் அசையவே முடியவில்லை.
மூச்சு முட்டிப்போகும் நிலை.. ஒரு வழியாக அவனை தன்னிடம் இருந்து விலக்கியவள், நெஞ்சில் கையை வைத்து மூச்சு வாங்கினாள்.
“மனுசன் தானா நீங்க எல்லாம்... இப்படியா முரட்டு தனமா நடந்துக்குவீங்க. இன்னும் நீங்க கொஞ்சம் கூட மாறல” அவனை திட்டி தீர்த்தாள்.
அவள் தன்னை தள்ளி விட்டதில் முறைத்தவன், “அது தானே பார்த்தேன் என்னடா என் டச் உனக்கு பிடிச்சு போச்சான்னு.. நீ எல்லாம் திருந்தவே மாட்டடி... அப்படி என்ன இருக்கு இந்த ஹோமோ செ..ஸ்ல” கேட்டவனை கன்னம் கன்னமாக அறைய பார்த்தவள்,
“ச்சீ உங்களை பார்க்கவே அருவெறுப்பா இருக்கு...” முடிக்கும் முன்பே அவளை தூக்கி கட்டிலில் போட்டு இருந்தான் ஆவேசமாக.
பாட்டி வந்து கதவை தட்டினார்.
“ராசா.. வாய்யா பூசைக்கு நேரமாச்சு” நாச்சி வந்து அழைக்க கலங்கி போய் சிவந்த கண்களுடன் வெளியே வந்த தமிழின் கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டு இருந்தது.
அவளின் தாத்தா பாட்டியும் வந்து இருந்தார்கள். ஆனால் யாரையும் அவள் ஏறெடுத்து பார்க்கவில்லை. பூசை சிறப்பாக முடிந்தது.
அவள் கழுத்தில் இருந்த தாலியில் நாச்சி குங்குமம் வைக்க சிலையாக நின்று இருந்தாள் எந்த உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாமல்.
அகத்தியனின் விழிகள் அடிக்கடி அவளை தொட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் அவளுக்கு அருகில் செல்லவே இல்லை அவன். அவனது மனம் சற்றே சாந்தி அடைந்து இருந்தது. அதனால் அவளை காயம் செய்யாமல் விட்டு இருந்தான்.
பூசை நல்லபடியாக நடந்து முடிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கி உணவு வழங்கி அனுப்பி வைத்தவர்கள், தமிழும் கிளம்ப பார்க்க, அவளை யாரும் விடவே இல்லை.
“இனி இது உன் வீடு. இந்த வீட்டில் தான் நீ இருக்கணும்” என்று எல்லோரும் அவளை நெருக்கி பிடிக்க, உடைந்து போன மனதுடன் அகத்தியனின் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
ஆனால் அவனியாந்த அறைக்குள் அனுமதிக்கவேயில்லை.
“என் கூட அந்த மனுசன் இருந்தா பிறகு நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்” என்று அடமாக சொல்லி விட, அந்த கதவை எட்டி உடைத்தவன் வேறு அறையில் தன்கைக்கொண்டான்.
“கிழவி இதுக்கெல்லாம் காரணம் நீ மட்டும் தான்” என்று நாச்சியிடம் சத்தம் போட்டான். அவர் அதை எல்லாம் கொஞ்சமும் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.
“எப்படியோ ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கிறார்களே.. எனக்கு அது போதும்” என்று எண்ணிக் கொண்டார். பூவரசி அன்றிரவு தமிழிடம் பேசவர,
“உங்களை எவ்வளவு உயர்வா நினைச்சு இருந்தேன். ஆனா நீங்க இப்படி நடந்துக்குவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல மேடம்... ஐ டிஸ்சப்பாயின்மென்ட் வித் யூ... ப்ளீஸ் என் கிட்ட இனி பேசாதீங்க... நீங்க ரொம்ப சீப்பா நடந்துக்குடீங்க... உங்க மகனுக்கு தான் இப்பவும் பேவரா நீங்க நடந்துக்குறீங்க...” பூவரசியை பேசிவிட்டு உள்ளே போய் கதவை சாத்திக் கொண்டாள்.
விழிகளில் கண்ணீர் குளம் தேங்கியது. வரும் பொழுதே அவளின் தாத்தா பாட்டி அவளின் உடமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து இருந்தார்கள். அதை பார்த்து தமிழ் இன்னும் மனமுடைந்துப் போனாள்.
“அப்போ எல்லோரும் இதே முடிவில் தான் இருந்து இருக்காங்க. நான் தான் மரமண்டையா எதுவுமே தெரியாம இருந்து இருக்கேன். என்னை எல்லோரும் நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க” என்று இன்னும் மனம் உடைந்துப் போனாள்.
அடுத்த நாள் எதுவும் நிகழாதவளாய் எழுந்து குளித்து விட்டு பள்ளிக்கூடத்துக்கு கிளம்பி விட்டாள். பூவரசியை திரும்பி கூட பார்க்கவில்லை. இரவும் சாப்பிடவில்லை. இப்பொழுதும் எதுவும் சாப்பிடவில்லை.
வள்ளி அவளை சமாதனம் செய்ய வர,
“ப்ளீஸ் ம்மா... உங்க மேல நான் நிறைய மதிப்பு வச்சு இருக்கேன். அவருக்காக பேசி உங்க மரியாதையை கெடுத்துக்க வேணாம்” என்று சொல்லி விட்டு பேருந்தில் கிளம்பி விட்டாள்.
ஏனெனில் அவளின் ஸ்கூட்டி தான் தாத்தா வீட்டில் இருக்கிறதே. பேருந்தில் ஏறியதே இல்லை. எப்படியோ தட்டு தடுமாறி ஏறி விட்டாள். காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
கொஞ்சம் சிரமம் தான். ஆனால் அதை விட அவளது வாழ்வில் அதிக இடர் இருக்கிறதே.. அதை எண்ணும்பொழுது இதெல்லாம் இன்ருமேயில்லை என்று தான் தோன்றியது அவளுக்கு.
எப்படியோ ஒருவழியாக பள்ளிக்கூடம் வந்துவிட்டாள். வந்தவளுக்கு ஒரே ஆருதல் இது மட்டும் தானே. பிள்ளைகளின் முகம் பார்க்க அவளின் துன்பம் எல்லாம் பின்னுக்கு போய் விட்டது. அதுவும் அவளுக்கு ஆங்கிலம் மிகவும் பிடித்த பாடம். எனவே அதற்குள் மூழ்கி விட்டாள்.
இரண்டாம் பாட வேலையின் பொழுது அவளை கரஸ்பாண்டன் அழைப்பதாக பியூன் வந்து சொல்ல மாணவர்களை படிக்க சொல்லி விட்டு கரஸ் அறைக்கு சென்றாள்.
“குட் மார்னிங் சார்” என்று அங்கு பின் புறமாய் நின்றிருந்தவரை கண்டு வாழ்த்தினாள்.
“எஸ் குட் மார்னிங்” என்ற குரலில் அதிர்ந்துப் போனவள் அந்த ஆளை நன்றாக பார்த்தாள். அந்த உருவம் திரும்பியது. அவள் கண் காட்டும் காட்சியில் விதிர்விதிர்த்து தான் போனாள் தமிழ்.
“நீங்க இங்க எப்படி?” தடுமாறினாள்.
“என்னோட ஸ்கூல்ல நான் இல்லாம வேற யார்டி இருப்பா?” எகத்தாளமாக கேட்டான்.
இதில் கூட தான் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்று துடித்துப் போனவளுக்கு அடுத்து எங்க போவது என்று கூட தெரியவில்லை.
“எல்லாருமே என்னை சுத்தி சுத்தி ஏமாத்துறாங்க” தமிழின் மனம் நைந்துப் போனது.
“இங்கயும் ஏமாற்றமா...? இனி இங்க வந்தும் இந்த ஆள் மூஞ்சியை பார்க்கணுமா” உள்ளுக்குள் துடித்துப் போனாள்.
அவளின் மனம் மொத்தமாக விரக்தி நிலைக்கு சென்று விட்டது.
சட்டென்று வெளியேற பார்க்க,
“நான் உன்னை போக சொல்லி சொல்லவே இல்லையே...” திமிராக சொன்னவன் அவளுக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
பல்லைக்கடித்து அவனுக்கு எதிரில் வந்து நின்றாள். தலையே மூழ்கிடுச்சு இனி ஜான் போனா என்ன முழம் போனா என்ன என்ற நிலையில் இருந்தாள் தமிழ்.
“இந்த வருடத்தோட இந்த பள்ளியை நிறுவி எழுபத்தி ஐந்து வருடம் நிறைவடைய போகிறது. அதனால அதை கிராண்டா செலப்ரேட் பண்ணனும். சோ அதுக்கான எல்லா ஏற்பாடும் செய்யணும்” என்றான்.
“அதை ஏன் என்கிட்டே சொல்றீங்க? நான் வந்து ஒரு மாசம் கூட ஆகல. என்னை விட இங்க சீனியர் அதிகம் பேர் இருக்காங்க அவங்கக்கிட்ட சொல்லுங்க. உங்களுக்கு நல்லா ஒத்துழைப்பு குடுப்பாங்க” என்றாள்.
“அது எனக்கு தெரியதா? உன்கிட்ட சொல்றதை முதல்ல கேளுடி. அப்புறமா அட்வைஸ் பண்ணு” முறைத்தவன்,
“என்னென்ன நிகழ்ச்சி செய்யலாம்னு ஓவரளா ஒரு சாட் போடு முதல்ல. எல்லா நிகழ்ச்சியும் பெஸ்ட்டா இருக்கணும்” என்றான்.
“சரி” என்று தலையை ஆட்டியவள் வெளியேற போக, அவளுக்கு முன்னாடி எழுந்தவன் கதவை அழுந்த சாற்றி விட்டு அந்த கதவிலே அவளை சாய்த்தவன் அழுத்தமாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
Mmm.....game started again.... let's see what is Tamizh move.....
அக இஸ் பேக்🤩🤩🤩🤩
பார்த்தீங்களா ரைட்டர், எங்க அக....அவன் பண்ணின தப்பை நினைச்சி வருந்தி...இனி அப்படி இருக்க கூடாதுனு திரும்ப வந்து இருக்கான்....
ஆன உங்க தமிழ் இன்னும் அதை சொல்லியே அவனை அசிங்க படுத்தர?????
What is this????
பாவம் பூ....அவங்க கிட்ட சொன்னதே இவ பாட்டி தானே....
எப்படி அவங்க அவளை recover பண்ணாங்க....
ஆன ஈஸியா தூக்கி போட முடியுது இல்ல....
பூ என்ன சொல்ல வரங்க எப்படினு கூட கேட்காம இப்படியா அவமான படுத்தரது?????
This is unfair தமிழ்🤷🤷🤷🤷🤷
@anukanikumar yes ma.. paarppom thamil enna panraannu💖💖
அடேயப்பா எது அவனா திருந்தி வந்து இருக்கான் 😏 . இன்னும் எப்படி எல்லாம் அவளை வச்சு செய்யலாம்னு சந்தர்ப்பம் தேடி வந்துருக்கான் மேடம். அவன் சரியான பிராடு 😛
ஏங்க தமிழ் ஒரு அப்பாவி... அவளோட ஆதங்கத்தை கொட்ட கூட கூடாதா...
பூவரசி உண்மையை சொல்லாம அவளிடம் பழகி இருக்கலாம் தானே.. பூவரசியும் சொல்லாம விட்டது தவறு இல்லன்னு சொல்றீங்களா அம்மணி
நன்றி மா 😍
என்ன சொல்லுங்க, பூ பாவம் தான்🥺
எவளோ தூரம் அவளை அவ கூட்டில் இருந்து வெளி கொண்டு வந்து இருக்காங்க....
அவங்களும் ஒன்னும் அவன் கூட ஒட்டி ஓரவடலையே🤷🤷🤷🤷