“என்ன மலரு சொல்ற? துப்பாக்கியா? அதுவும் நம்ம இருந்த அறை பக்கம் எதுக்கு?” என்று அவரின் கையை பிடித்துக் கொண்டார் சந்தானம்.
“இன்னும் முழுசா முடிக்கலங்க” என்றவரின் குரல் கம்மியது.
அடைத்த தொண்டையை சரி செய்துக் கொண்டு,
“நம்மளை கொல்ல தான் யாரோ வந்து இருந்தாங்க.. ஆனா நம்மளை சுடுறதுக்குள்ள அவனை வளைச்சு பிடிச்சுட்டாரு கடைசி தம்பி பிரபாகரன்” என்றார்.
“என்ன சொல்ற?”
“ஆமாங்க.. அந்த தம்பி மட்டும் வரலன்னா இன்னைக்கு நீங்களும் நானும் பொணாமா தான் இருந்து இருப்போம்” என்றார்.
சந்தானத்துக்கு ஒரு கணம் உடம்பு ஆடிப் போனது.
“எனக்கு ஒண்ணுமே புரியல மலரு.. நாம யாருக்கு என்ன தீங்கு செய்தோம். எனக்கு தெரிஞ்சு நாம யாருக்கும் எதுவுமே பண்ணலையே... பிறகு நமக்கு எப்படி எதிரிங்க இருப்பாங்க.. அதுவும் இத்தனை நாள் இல்லாம இப்போ எப்படி திடிர்னு?” என்றார்.
“அதோட நம்மளை கூட்டிட்டு போய் இவங்க தான் கொடுமை படுத்தினாங்க. ஆனா இப்போ இவங்களே எதுக்காக நம்மை காப்பத்தணும்? நம்மக்கிட்ட எதுக்காக இப்படி நடிக்கணும்.. ஒரே குழப்பமா இருக்கு மலரு” என்றார்.
“எனக்கும் அதே குழப்பம் தான்ங்க. அதனால தான் சொல்றேன். நாம எங்கும் போக வேண்டாம்.. இங்கயே இருப்போம். என்ன நடக்குதுன்னு முதல்ல தெரிஞ்சுக்குவோம்” என்றார் யோசனையுடன்.
“அதுவும் சரி தான். ஆனா இந்த விசயம் நமக்கு தெரிஞ்ச மாதிரி யார்க்கிட்டயும் காட்டிக்க வேண்டாம்”
“ம்ம்ம்” என்று இருவரும் முடிவெடுத்துக் கொண்டவர்கள் அதன் பிறகு எல்லோரிடமும் சற்று எச்சரிக்கையாவே இருந்துக் கொண்டார்கள்.
பதினோரு மணி போல மருத்துவமனைக்கு சென்ற மூன்று மகள்களும் வந்து விட, அவர்களோடு பொன்மாரியும் வந்து விட்டார். அதன் பிறகு நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை.
தயகரனை எண்ணி தயாழினிக்கு உள்ளூர பயம் இருந்துக் கொண்டே இருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வளைய வந்தாள்.
இது வரை எதையுமே மறைக்கவில்லை பெரிய பெண்ணிடம். அதனால் தன் பெரிய மகளிடம் மட்டும் மிக இரகசியமாக நேற்று இரவு நடந்ததை பகிர்ந்துக் கொண்டார்.
“என்னம்மா சொல்றீங்க?” அதிர்ந்துப் போனாள் தயாழினி.
“எனக்கும் ஒன்னும் புரியலடா.. ரொம்ப குழப்பமா இருக்கு” என்றார் தவிப்பாக.
“உங்களுக்கு எதுவும் இல்ல தானே ம்மா” என்று அவரின் தேகத்தை பதற்றத்துடன் ஆராய்ந்துப் பார்த்தாள்.
“ஆண்டவன் புண்ணியத்துல எங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகல யாழி.. ஆனா பயமா இருக்கு. எதுவோ சரியில்ல” என்றார்.
“சரிம்மா என்கிட்டே சொல்லிட்டீங்கல்ல.. இனி நான் பார்த்துக்குறேன். நீங்க தங்கச்சிங்க கிட்ட எதுவும் சொல்லாதீங்க. ஏற்கனவே ரொம்ப நொடிச்சு போய் பயந்து போய் இருக்காங்க ரெண்டு பேரும். நீங்களும் இதை நினைச்சு கவலை படாதீங்க” என்றாள்.
“சரிடா” என்றார் மனமே இல்லாமல்.
தயாழினிக்கு தங்களை சுற்றி என்ன தான் நடக்குது என்று ஒன்றும் புரியவில்லை.
“ம்மா இனி இதப்பத்தி யார் கிட்டயும் பேசவேண்டாம். நீங்க நேற்று ராத்திரி எந்திரிக்கவே இல்லை சரியா?” என்று கேட்க, மலர் தலையை ஆட்டினார் சம்மதமாக.
ஆனால் அவரின் முகத்தில் இயல்பாக இருக்கும் உணர்வே தொலைந்துப் போய் இருந்ததை உணர்ந்தாள்.
அவளாலும் எதுவுமே செய்ய முடியவில்லை. என்ன எது என்று தெரிந்தால் கூட அவர்களை ஏதாவது சொல்லி தேற்றலாம். ஆனால் இங்கே என்ன நடக்குது என்று ஒன்றும் புரியாமல் என்ன ஆறுதல் தருவது..
“நாங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா. எங்களை எதுக்கு கொலை பண்ண வரணும்” யோசித்தவள், தன் அறைக்கு செல்ல,
“உன் பொருளை எல்லாம் தம்பி அறையில வச்சாச்சு மருமவளே.. இனி நீ அங்கேயே தங்கிக்க... நீ தங்கி இருந்த அறையில் உன் தங்கச்சிங்களை தங்க சொல்லிட்டேன்” பொன்மாரி சொல்ல, தலையை ஆட்டியவள், தயாகரனின் அறைக்குள் நுழைந்தாள். அங்கு அடுக்கி இருந்த தன் புடவையில் ஒன்றை எடுத்து கட்டிலில் வைத்து விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
குளிக்கும் பொழுதும் அவளுக்கு அதே யோசனை தான். எங்க அப்பா அம்மாவை எதுக்கு கொல்ல வரணும். நாங்க யாருக்கு என்ன செஞ்சோம். கடன் வாங்குனது தயாகரன் கிட்டா தான். இவங்க எங்களை கொலை பண்ண வந்தா கூட ஒரு நியாயம் இருக்கு. ஆனா இவங்க எதுக்கு எங்களை காப்பாற்றனும்..
அதுவும் சரியா பிரபாகரன் கேட்ச் பண்ணி இருக்காருன்னா அப்போ அப்பா அம்மாவை கொலை பண்ண போற விசயம் ஏற்கனவே இவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு. அப்படி இருந்தா தான் சரியா காப்பாற்ற முடிஞ்சு இருக்கும். இல்லன்னா அவ்வளவு சரியா கேட்ச் பண்ணி இருக்க முடியாது என்று சரியாக யூகித்தாள்.
ஆனா இப்படி கூட இருக்கலாம் இல்லையா? எங்களை கொலை பண்ணிட்டா நாங்க குடுக்க வேண்டிய காசை யாரு குடுப்பா.. அதனால கூட காப்பாற்றி இருக்கலாம். ஏன் இப்போ கூட அந்த தயாகரன் என்னை விற்கிறேன்னு தானே சொல்லிட்டு இருக்கான்.
இவனுங்களை எப்படி நம்புவது. ஆனா பொன்மாரி அத்தை என் மகனை நம்புன்னு சொல்றாங்களே.. தலையை போட்டு பிய்த்துக் கொள்ளாத நிலை தான் தயாழினிக்கு.
‘கடவுளே ஏதாவது க்ளு குடு.. என்னால முடியல.. நாங்க சிக்கி இருக்கிற இடம் சரியா தவறா? வழிகாட்டு கடவுளே..’ மனமுருக நீருக்கு அடியில் நின்றபடி இரு கையையும் நெஞ்சுக்கு நேராக வைத்து கும்பிட்டாள்.
கண்களில் நீர் ஆறாக ஓடியது. பிரபாகரன் மட்டும் அந்த நேரத்துக்கு சரியாக வரவில்லை என்றால் தன் அப்பா அம்மாவின் கதி என்ன ஆகி இருக்குமோ நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருந்தது அவளுக்கு.
“எல்லோரும் சாமி அறையில நின்னு தானே வேண்டுவாங்க. நீ என்னடி புதுசா குளியல் அறைக்குள்ள நின்னு வேண்டிட்டு இருக்க?” என்ற குரல் கேட்க, பதறிப் போனவள் கண்களை திறந்து சுற்றி முற்றி பார்க்க, வெற்று மார்புடன் தயாகரன் தான் குளியல் அறைக்குள் நின்று இருந்தான்.
அவனை அங்கு எதிர் பார்க்காதவள் திகைத்துப் போனாள். வேகமாய் தன்னை குனிந்துப் பார்க்க, வெறும் பாவாடையுடன் நீரில் நனைந்த படி நின்று இருந்தாள்.
“கடவுளே” என்று நொந்தவள் வேகமாய் துண்டை எடுத்து போர்த்த முனைய, அவளின் கையை பிடித்து தடுத்தவன்,
“மறைக்காதடி.. உடமை பட்டவன் தானே.. பார்த்தா தப்பு இல்ல” என்று சொன்னவன், தன் விழிகளால் அவளின் உடம்பை ஆராய்ந்துப் பார்த்தான். அவனது பார்வையில் கூசிப் போனவள்,
“ப்ளீஸ் என்னை விடுங்க” கெஞ்சினாள்.
“விடவா பிடிச்சு இருக்கேன்” கேட்டவன் அவளுடன் நீரில் நனைய வர,
“அடிபட்டு இருக்கு இப்ப போய் தண்ணியில நனைய வர்றீங்க.. டாக்டர் சொன்னது மறந்துப் போச்சா?” அவனை தடுத்துக் கொண்டே கேட்டாள்.
“இந்த சாதாரண தண்ணி என்னை என்னடி செய்யும்.. நீ முதல்ல என் கிட்டக்க வா.. உன்னை அணைச்சாலே போதும்... அந்த போதையில இந்த காயம் எதுவும் தெரியாது.. வா.. முதல் ராத்திரின்னு சொன்னேன்ல.. எனக்கு நீ பகல்ல வேணும்டி.. இப்போ இந்த நிமிடம் வேணும்” என்றவன் அவளை இழுத்து அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
அவனின் ஆவேச இதழ் முத்தத்தில் மிகவும் தவித்துப் போனாள்.
அவனின் நெஞ்சோடு நெஞ்சாக உரச மிகவும் பயந்துப் போனாள். அவனின் காயத்தில் உரசிவிடுவமோ என்று அவனின் அணைப்பில் இருந்தபடியே நகர்ந்து நின்றாள்.
அவளின் நெருக்கத்தை எதிர்பார்த்தவன், தன் நெஞ்சோடு அவள் நெருங்காமல் போக, அவளின் இடையை இழுத்து, தன் நெஞ்சோடு நெஞ்சாக சேர்த்து இறுக்கி நெருக்கியவன் அவளின் இதழ்களை முன்பை விட இன்னும் அதிகமாக கவ்விக் கொண்டான்.
அவனின் இதழ் சுவையில் அவளையும் அறியாமல் அவள் மயங்கிப் போனாள். அவளின் உடல் அவனுக்கு வாகாகக இசைந்துப் போக, தன்னை வெறுத்துப் போனாள்.
அவனிடம் இருந்து விடுபட அவள் போராட, அவளின் எதிர்ப்பை முறியடித்தவன், “கொஞ்ச நேரம் இப்படியே இருடி..” முணகியவன் மீண்டும் அவளின் இதழ்களில் மூழ்கிப் போனான்.
அவனது முரட்டு கரங்கள் அவளின் இரு பக்க இடையையும் இறுக்கிப் பிடித்து இருந்தன..
மூச்சு முட்ட முட்ட முத்தம் கொடுத்தான் அவளுக்கு. முத்தம் குடுத்தே தன்னை கொன்று விடுவான் போலையே.. என்று பயந்துப் போனவளுக்கு மூச்சு திணறல் வந்தது.
சட்டென்று அவளை விடுவித்தான். அதன் பிறகே மூச்சு வந்தது பெண்ணவளுக்கு. நீண்ட மூச்சை எடுத்து விட்டவள், நெஞ்சில் கையை வைத்து மேலும் பேரு மூச்சு வாங்கினாள்.
அப்பொழுது தான் அவளுக்கு ஒன்று உரைத்தது..
“ஹேய் நீங்க சரக்கு அடிச்சீங்க தானே.. ஆனா இப்போ சரக்கு ஸ்மெல் கொஞ்சம் கூட வரல.. என்னை ஏமாத்துறீங்களா?” பட்டென்று அவனின் தோளை பிடித்து உலுக்கினாள்.
“ரொம்ப தான் உனக்கு ஆசை.. கொய்யாக்கா இலை மென்னா சரக்கு ஸ்மெல் வரது மேடம்” என்றான் நக்கலாக.
“ஆனா நீங்க கொஞ்சம் கூட தடுமாறலையே”
“உன் புருசன் எவ்வளவு குடிச்சாலும் ஸ்டெடியா தான்டி இருப்பான்.. மாமன் இந்த விசயத்துல கில்லி” என்று மீசையை முறுக்க,
“வாய்ப்பே இல்ல.. நீங்க என்னவோ டபிள் கேம் விளையாடுறீங்க? ஆனா அது எனக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறீங்க” என்றாள் தீர்க்கமாய்.
“ஓ.. உன்னை பிரெஷ் பீசா விக்கிறேன்னு சொல்லிட்டு, இப்போ முதல் இரவு கொண்டாட போறதை சொல்றியா? ஒன்னும் பிரச்சனை இல்ல பாதிக்கு பாதி காசு வருதே அது போதும்” என்றவனை இரு கைகள் கட்டி அவனை கூர்ந்துப் பார்த்தவள்,
“நேத்திக்கு கொலை காரன் கிட்ட இருந்து பிரபாகரன் எங்க அப்பா அம்மாவை காப்பாத்தினார். அதுக்கு என்ன சொல்றீங்க?”
“அவன் ஒரு முட்டா பயன்னு அடிக்கடி நிரூப்பிக்கிறான். நானா இருந்தா உங்க அப்பா அம்மாவை கொலை பண்ண விட்டுட்டு உங்க அக்கா தங்கச்சி மூணு பேரையும் நல்ல ரேட்டுக்கு வித்து இருப்பேன்.. மூளை இல்லாதவன். சரியான அரவேக்காடு. தம்பியாவே இருந்தாலும் இந்த தயாகரன் மாதிரி யாராலும் வர முடியாது இல்லையா” என்றான் நக்கலாக.
“அப்படியா...? அப்போ சரி என்னை விற்க நானே ஓகே சொல்றேன்.. இன்னைக்கு நைட்டே என்னை வித்து காண்பிங்க.. அப்புறம் உங்களை நம்புறேன். நீங்க பக்கா அயோக்கியன்னு.. இல்லன்னா நீங்க டபிள் கேம் ஆடுற ஆள்னு ப்ரூப் ஆயிடும்” அவனுக்கே சவால் விட்டாள் தயாழினி.
“அதென்னடி இன்னைக்கே விற்கனும். ஏன் ரெண்டு நாள் கழிச்சு உன்னை வித்தா அழுகிப் போயிடுவியா?” என்று மேலும் நக்கல் பண்ணினான்.
“பேச்சை மாத்தாதீங்க ங்க... எனக்கு உண்மையை சொல்லுங்க.. எங்களை சுத்தி என்ன தான் நடந்துக்கிட்டு இருக்கு.. ஏன் எங்க அண்ணன்களை விட்டுட்டு எங்களை சிறை பிடிச்சீங்க.. எதுக்கு எங்க மூணு பேரையும் ஒண்ணா இருக்க விடாம தனி தனியா பிரிச்சு வச்சீங்க.. எதுக்காக என் கழுத்துல தாலி கட்டுனீங்க.. எதுக்காக என் அப்பா அம்மாவை கொலை பண்ண வந்தாங்க.. ப்ளீஸ் ங்க.. உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்.. எங்களை சுத்தி நடக்குற எதுவுமே எங்களுக்கு புரியல. உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சு இருக்கு.. ஆனா என்கிட்டே எதுவுமே சொல்ல மாட்டேங்குறீங்க” அவனின் தோளில் குத்தி தன் ஆற்றாமையை வெளிப்படுதியவள்,
“ப்ளீஸ் சொல்லுங்க தயாகரன்... எனக்கு மண்டையே வெடிச்சும் போல இருக்கு” என்றவளை விட்டு விலகியவன்,
“குளிச்சுட்டு வா” என்று அவன் வெளியே போக, அவனுக்கு முன்னாடி வந்து நின்றவள்,
“ஏன் என்கிட்டே இருந்து மறைக்கிறீங்க? நான் தெரிஞ்சுக்க கூடாதா?” கெஞ்சியவளை அழுத்தத்துடன் பார்த்தவன்,
“டையர்டா இருக்கு.. நான் போய் தூங்குறேன்” என்றான்.
“என்னை இப்போ இந்த நிமிடம் முழுசா குடுத்தா எல்லாத்தையும் சொல்லுவீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் மார்பில் முடிந்து இருந்த பாவாடையின் முடிச்சை அவிழ்க்க விளைந்தவளின் கையை இறுகப்பற்றியவன்,
“என்னடி பண்ற?” பல்லைக் கடித்தான்.
“உங்களுக்கு தான் என் உடம்பு மேல ரொம்ப ஆசையாச்சே.. அதை தந்தாலாவது உண்மையை சொல்லுவீங்க இல்லையா?” கேட்டவளை அழுத்தமாக பார்த்தவன், தலையின் அழுந்தக் கோதிக் கொண்டான்.
“உங்களுக்கு என்னை குடுக்க முழு சம்மதம். நீங்க என்னோட புருசன்.. நீங்க கட்டுன தாலி என் கழுத்துல இருக்கு. அதனால எனக்கு எந்த தயக்கமும் இல்ல..” என்று தன் மார்பில் முடிந்து இருந்த பாவடையை அவள் நழுவ விட்டாள்.