“நைட் எங்க போய் இருந்தீங்க? எப்படி இவ்வளவு காயம் வந்துச்சு” ஆஸ்யூசுவல் மனைவியாக கேள்வி கேட்டாள்.
“இங்க லிப் கிஸ் குடு சொல்றேன்” என்றான் அவன்.
“பொறுக்கி” என திட்டியவள், தன் தங்கையிடம் ஓடப்பார்க்க, அவளின் கையை பிடித்து படுக்கையில் தள்ளி விட்டவன் அவள் மீது படரப் பார்க்க,
“ஐயோ காயமா இருக்கு” அவள் அலற, அவளின் அலறலை கண்டுக் கொள்ளாமல் அவளின் இதழ்களை வன்மையாக சிறை செய்தான் அவளின் கணவன்.
“இவ்வளவு காயத்தை வச்சுக்கிட்டு இதெல்லாம் தேவையா?” என்றபடியே அவனிடம் இருந்து விலகினாள் தயாழினி.
“உன் வாயை எப்படி அடைக்கிறது?” என்றவன் கண்களை மூடி படுத்துக் கொண்டான்.
“ம்கும்” என்று நொடித்துக் கொண்டு வெளியே போனவள், வலித்த இதழ்களை துடைத்துக் கொண்டாள்.
“எதுக்கு தான் இப்படி கடிச்சு வைக்கிறாரோ” முணகிக்கொண்டவள், “ஹரிணி..” என்று அந்த பெண்ணின் முன்னாடி போய் நின்றாள்.
“சொல்லுங்க மேம்” என்றாள் பணிவாக.
“உன் சேர்வீஸ் என் புருசனுக்கு தேவையில்லை. அவருக்கு நான் மட்டுமே போதும். அதனால நான் என் தங்கச்சியை பார்க்க போற நேரத்துல உள்ள போய் உங்க சாரை பார்க்க வேண்டாம். யாரும் அவரை தொந்தரவு பண்ணவும் வேண்டாம். தூக்க மாத்திரை குடுத்து தூங்க வச்சு இருக்கேன்..” என்று விட்டு அவள் போக, ஹரிணி பெருமூச்சு விட்டாள்.
தயாகரன் மீது அவள் கொண்ட காதல் அவளுக்கு மட்டும் தானே தெரியும்.. எப்போ தயாகரன் கிட்ட வேலைக்கு வந்து சேர்ந்தாளோ அப்போதிருந்தே அவனின் மீது காதல் தான். அவனது ஆளுமையிலும் தோற்றத்திலும் கம்பீரத்திலும் மனதை இழந்து இருந்தாள்.
அதனால் எல்லோரையும் விட ஒரு படி மேலாக அவனிடம் நெருங்கி இருந்தாள். ஆனால் தயாகரன் ஒதுங்கி தான் இருப்பான். ஒதுக்கி தான் வைப்பான் அவளை. இதோ கொஞ்ச நேரத்துக்கு முன்பு தயாழினி வரவில்லை என்றாலும் தயாகரன் ஹரிணியை வெளியே அனுப்பி இருப்பான்.
அவனை பொறுத்தவரை ஒரு சொல்.. ஒரு வில்.. ஒரு பெண்.. என அதிலே நிற்பவன். செய்யும் தொழில் தவறு என்றாலும் பொன்மாரியின் வளர்ப்பு ஆயிற்றே. சோடை போய் விடுவானா என்ன..?
மனமார தான் தயாழினியின் கழுத்தில் தாலியை கட்டினான். ஆனால் இந்த பந்தம் தேவை தானா என்று யோசித்தான் அவன் இருக்கும் சூழ்நிலையை கருதி.
காலம் எல்லாத்தையும் மாற்றும் சக்தி வாய்ந்த கருவி என்று அவன் அறியவில்லை போல..
தங்கையை எழுந்து அமர்ந்து இருப்பதை பார்த்து ஓடிப் போய் அவளை கட்டிக் கொண்டாள் தயாழினி.
“பாப்பா இப்போ வலி எப்படி இருக்கு? ரொம்ப வலிக்குதா? டாக்டரை கூட்டிட்டு வரட்டுமா? சாப்பிட்டுட்டு மருந்து போட்டுக்கலாம்.. குடிக்க, சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?” என்று பரபரத்தவளை கட்டிக் கொண்ட தங்கை நெகிழ்ந்துப் போய் அவளின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
“எனக்கு எங்கும் வலிக்கல க்கா.. பெரிய மாமா எனக்கு வலியே தெரிய கூடாதுன்னு பெயின் கில்லர் குடுக்க சொல்லி இருக்காங்க. அதனால வலி இல்ல.. அதோட நர்ஸும் டாக்டரும் நல்லா கவனிச்சுக்குறாங்க.. இப்ப கூட காபியும் ஸ்நேக்ஸும் வந்தது. குடிச்சேன் க்கா” என்றாள்.
தங்கைக்கு ராஜ உபசரணை கிடைப்பதை பார்த்து மகிழ்ந்துப் போனாள்.
“சரிடி.. அப்போ நான் காலை சாப்பாடு வாங்கிட்டு வரேன்”
“ஏதும் வேணாம் க்கா.. கொஞ்ச நேரம் உன் மடியில படுதுக்கவா?” சோர்வுடன் கேட்டவளை பார்த்து பதறியவள்,
“இதெல்லாம் கேட்டுட்டா இருப்ப.. வா வந்து படுத்துக்க. உங்களுக்காக தான்டி நான் இருக்கேன்” என்று கட்டிலில் ஏறி அமர்ந்தவள் தங்கையை மடியில் சாய்த்து தட்டிக் குடுத்தாள்.
“கை வலி சரியா போயிடும்டி.. நீ கவலை படாத.. எதுக்கும் பீல் பண்ணாத. அக்கா உன் கூடவே நிழலா இருப்பேன் பாப்பா” என்ற அக்காவை நிமிர்ந்துப் பார்த்தவள்,
“என்னை உன் கூடவே வச்கிக்குறியா க்கா? எனக்கு அந்த பிரபாகரன் கிட்ட இருக்க பயமா இருக்கு” என்றாள். எதற்கும் பயப்படாத பெண். அவளையே இப்படி பயம் காட்டி வச்சு இருக்காங்களே என்று நெஞ்சம் கனத்துப் போனது பெரியவளுக்கு.
“எனக்கு கொஞ்ச நாள் அவகாசம் குடுடி. அதுக்குள்ள நான் எல்லாத்தையும் மாற்றி அமைக்கிறேன். இப்போ நானும் உன் நிலையில தான் இருக்கேன். உனக்கும் எனக்கும் பெரிய வித்யாசம் இல்லை. என் கழுத்துல தாலி இருக்கு. உன் கழுத்துல இல்ல. மத்தபடி அவங்க கிட்ட சிறை பட்டு தான் இருக்கேன்” என்று வேதனை கொண்டவள்,
தங்கையின் தலையை தடவி குடுத்து,
“நிச்சயம் இனி இப்படி நடக்காதுன்னு உனக்கு உறுதி குடுக்குறேன் பாப்பா.. கொஞ்ச நாள் தான். அதுக்குள்ள எப்படியாவது இவங்க கிட்ட இருந்து தப்பிச்சு உங்களை எல்லாம் கூட்டிட்டு யார் கண்ணுக்கும் தென்படாத இடத்துக்கு போயிடுறேன்” என்றாள் கமறலாக.
“அக்கா உன்னை வேதனை படுத்தல... உன்னால எப்போ முடியுமோ அப்போ எங்களை கூட்டிட்டு போயிடு அது போதும். அதுவரை இது போல எவ்வளவு வேணாலும் தாங்குவேன்.. ஆனா நீ மட்டும் உடைஞ்சி போயிடாத க்கா. உன்னை நம்பி தான் நாங்க எல்லோரும் இருக்கோம்” என்றவளின் அன்பில் கண்கள் கலங்கியவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தயாழினி.
இவர்கள் இருவருக்கும் உணவை எடுத்துக் கொண்டு குறிஞ்சி வந்தாள். அவளோடு பொன்மாரியும்.
வந்த குறிஞ்சி இரண்டு சகோதரிகளையும் கட்டிக் கொண்டு அழுதாள். நேற்றிலிருந்து சின்னவளுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு கலங்கிக் கொண்டே இருந்தாள். பெற்றவர்கள் வந்த பிறகு தான் தகவல் கேட்டு கொஞ்சம் தெளிந்தாள்.
ஆனாலும் கண்ணால் காணாமல் கலங்கி தான் போனாள். அதன் வெளிப்பாடு இப்படி கட்டிக் கொண்டு அழ, அவளை தேற்றி எடுத்தார்கள் மற்ற இருவரும்.
அவளின் கண்ணை துடைத்து விட்டு தேற்றினாள் தயாழினி.
“அக்கா தலை சீவி விடு..” என்று பிறை கேட்க, அவளுக்கு தலை சீவி விட்டவள், இரு தங்கைகளுக்கும் அவளே உணவும் ஊட்டி விட்டாள். குறிஞ்சி தன் அக்காவுக்கு உணவு ஊட்டி விட மூவரும் ஒன்றாய் ஒற்றுமையாய் இருப்பதை பார்த்துக் கொண்டே அந்த அறைக்குள் உள்ளே நுழைந்த பொன்மாரி,
“அட அட என் கண்ணே பட்டுடும் போலையே...! பொண்ணுங்களா.. அக்கா தங்கச்சின்னா இப்படி தான் இருக்கணும்” சொல்ல,
“வாங்க அத்தை” என்று தயாழினி படுக்கையில் இருந்து எழுந்து நின்றாள். அவளை தொடர்ந்து குறிஞ்சியும் எழுந்து நின்றாள்.
சின்ன பெண்களின் மரியாதையை மனதில் குறித்துக் கொண்ட பொன்மாரி,
“சும்மா சொல்லக்கூடாது மலர் அவளோட பொண்ணுங்களை நல்லா மரியாதை தெரிஞ்சு தான் வளர்த்து இருக்கா..” சொன்னவர்,
“எனக்கும் சாப்பிட குடுங்க” அவர்களோடு அவரும் அமர்ந்து விட்டார்.
இயல்பாக அவருக்கு பரிமாறிய மருகளை ஆழ்ந்துப் பார்த்து,
“என் மகன் இன்னும் சாப்பிடல” என்றார் பொத்தாம் பொதுவாய்.
பரிமாறிக் கொண்டு இருந்த தயாழினியின் கை ஒரு கணம் நின்றது.
“குறிஞ்சி அத்தைக்கு நீ பரிமாறு.. நான் அவரை சாப்பிட வச்சுட்டு வரேன்” என்று சொல்லி விட்டு பிரிக்கப்படாத இன்னொரு கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
“என் மருமக ரொம்ப ஷார்ப் இல்லடி பொண்ணுங்களா?” பொன்மாரி கேட்க, அவற்றோடு இயல்பாக பழக முடியாமல் இரு பெண்களும் தலையை மட்டும் ஆட்டினார்கள். பொன்மாரியை பற்றி எதுவும் தெரியாதே அவர்களுக்கு. அதனால் ஒதுக்கம் காட்டினார்கள் இருவரும்.
ஆனால் பொன்மாரி அப்படி இல்லை. பேசாத இரு பெண்களையும் தன் பேச்சில் இழுத்துக் கொண்டார். வேறு வழியில்லாது அவரின் பேச்சில் இருவரும் இணைந்துக் கொள்ள வேண்டி வந்தது.
இங்கே அறைக்கு உணவோடு வந்தவள் கண்களால் கணவனை எரித்தாள். பின்ன தயாகரனின் அருகில் ஹரிணி நின்றுக் கொண்டு இருந்தால் கோவம் வருமா வராதா?
“அவ்வளவு தூரம் சொல்லியும் எதுக்காக நீ உள்ள வந்த?” என்று ஹரிணியை திட்டியவள்,
“நீங்க எதுக்காக அவளை உள்ள கூப்பிட்டீங்க? ஏன் என்னை கூப்பிட வேண்டியது தானே.. நான் வரலன்னு சொன்னனா?” கணவனை முறைத்துப் பார்த்து திட்டியவள்,
“தயவு செஞ்சு வெளியே போ ஹரிணி.. எனக்கும் அவருக்கும் இடையில யார் வந்தாலும் எனக்கு கோவம் வரும்” முகத்தில் அடித்தபடி பேசிய மனைவியை ஆட்சேபித்து பார்த்தான் தயாகரன்.
“ஏய்...” என்று அவன் சத்தம் குடுக்க,
“நீங்க பேசாதீங்க... வாயை மூடுங்க.. அவளை பக்கத்துல வச்சு இருக்குறதுக்கு எதுக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க.. ஹரிணியையே கல்யாணம் செய்துக்க வேண்டியது தானே” சீறினாள்.
“வாயை மூடுடி” அதட்டினான்.
“அப்போ நீங்க இனி ஹரிணிக்கிட்ட பேசாதீங்க. உங்களுக்கு தான் தெரியுமே நான் உங்க மேல ரொம்ப பொசசிவ்னு. அப்படி இருந்தும் ஏன் இப்படி பண்றீங்க?” கணவனிடம் எகிறியவள்,
“ஹரிணி எனக்கு அவர் மேல ஓவர் பொசசிவ். நீங்க நட்பின் அடிப்படையில உதவி செய்யிறீங்க தான். ஆனா என்னால தான் அதை பார்க்க முடியல.. அதனால தான் உங்களை வருத்துறேன். என்னை மன்னிச்சுடுங்க.. நான் உங்களை அப்படி பேசக்கூடாது தான். ஆனா பேச வேண்டிய சூழல். என் கணவனை நீங்க அபகரிக்கிற மாதிரி எனக்கு தோணுது. அதனால தான் எங்க ரெண்டு பேருக்குள்ளையும் நீங்க உள்ள வர வேண்டாம்னு சொல்றேன். ஒரு பெண்ணா என்னோட உணர்வுகள் உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்றவளை வேதனையுடன் பார்த்த ஹரிணி,
“சாரி மேம்..” என்று சொல்லி, தயாகரனை ஒரு ஏக்கப் பார்வை பார்த்த படியே வெளியே சென்றாள்.
“ஏய் உன் மனசுல என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க.. கொஞ்சம் இடம் குடுத்தா ரொம்ப தான் ஆக்ட் பண்ணிட்டு இருக்க.. என்ன கொழுப்பா?” அடிக்குரலில் அதட்டினான் மனைவியை.
அவனின் மனைவியோ கொஞ்சம் அலட்டிக் கொள்ளாமல்,
“உங்க தாலி என் கழுத்துல இருக்கிற வரை நீங்க என் விருப்பம் தான் மிஸ்டர் தயாகரன். உங்களை ஆட்டிப் படைக்க அத்தனை உரிமையும் எனக்கு உண்டு.. இல்லன்னு சொல்லுங்க இப்பவே இந்த தாலியை கழட்டி குடுத்துட்டு போயிட்டே இருக்கேன்” என்றாள் திமிராக.
அவளை அடக்க முடியாத பார்வை பார்த்தவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
“என்னை ஒரு வார காலமா எவ்வளவு சீண்டுனீங்க.. அதுக்கெல்லாம் பதிலடி குடுக்க வேண்டாம்.. உங்க மேல எனக்கு எந்த உணர்வும் இல்ல. எந்த அன்பும் இல்ல.. ஆனா இந்த போலியான அன்பை உங்க மேல காட்டிட்டு தான் இருப்பேன். அதை நீங்க தாங்கிட்டு தான் ஆகனும்” என்றவளை கூர்ந்து பார்த்தவன்,
“அப்போ என்னை கணவனா நீ அங்கீகாரம் பண்ற அப்படி தானே”
“ஆமாம்” என்றாள் அலட்டலாக.
“அப்போ இன்னைக்கு நமக்கு முதல் இரவு. எல்லாத்துக்கும் தயாரா இரு. தப்பிக்கணும்னு நினைக்காத.. தொலைச்சு கட்டிடுவேன்” என்றான் சீறலாக.
அவன் சொன்னதில் அதி மனதில் பயம் பிடித்துக் கொண்டாலும் அன்றைக்கு மாதிரி மயக்கம் போட்டு விடலாம் என்று திட்டம் வகுத்துக் கொண்டாள் கேடி தயாழினி.
அவளின் திட்டம் அறியாதவனா தயாகரன். போலி மயக்கத்துக்கும் உண்மையான மயக்கத்துக்கும் வித்யாசம் தெரியாதவனா அவன்.
லைக் அண்ட் கமெண்ட்ஸ் சேர் பண்ணுங்க மக்களே..
உண்மையான possessiveness லா பொங்கிட்டு இப்ப பேச்சை பாரு யாழிக்கு 🤭🤭🤭🤭🤭
எனக்கே பச்சையா தெரியுது....அவனுக்கு எல்லாம் நல்லவே தெரியும்😂😂😂😂😂
போக போக, இவளுங்க மூணு பேரும் செம்ம கேடிகள்.....
இவங்கள் தான் பாவம்
உண்மையான possessiveness லா பொங்கிட்டு இப்ப பேச்சை பாரு யாழிக்கு 🤭🤭🤭🤭🤭
எனக்கே பச்சையா தெரியுது....அவனுக்கு எல்லாம் நல்லவே தெரியும்😂😂😂😂😂
போக போக, இவளுங்க மூணு பேரும் செம்ம கேடிகள்.....
இவங்கள் தான் பாவம்
ஹஹஹா... ஆனா வெளியே காட்டிக்க மாட்டோம்ல.. 🤣 🤣
மூன்று கரனும் பாவம் தான்.. வேற வழியில்ல கரும்பு மிசின் குள்ள மாட்டிய எபெக்ட் தான் 😆 😆
@ramya-devi பாவங்க ரைட்டர்.....
நீங்க ஆன்டி ஹீரோ அப்படினு சொல்லிட்டு...ஆன்டி ஹீரோயின் எழுதிட்டு இருக்கீங்க😂😂😂😂