“எழுந்து சாப்பிட வாங்க.. உங்களுக்கும் சேர்த்து தான் அத்தை சாப்பாடு எடுத்துட்டு வந்தாங்க” என்று தட்டில் இட்டிலியை எடுத்து வைத்தாள்.
தனக்கு பணிவிடை செய்பவளை விழி அகாலாது பார்த்தான் தயாகரன்.
“நாம ரெண்டு பேர் மட்டும் தானே இருக்கோம். இப்ப கூட உன் போலியான அன்பை காட்டணுமா என்ன?” நக்கலாக கேட்டான் அவளிடம்.
“ஹலோ சார்.. இந்த தாலி என் கழுத்துல இருக்கிற வரை என் போலியான அன்பு உங்களை தொடர்ந்துக் கிட்டே தான் இருக்கும். அது பக்கத்துல யார் இருக்கா இல்லைன்னு எல்லாம் பார்க்காது. எப்பொழுதுமே நடிப்பு மட்டும் தான். அதனால நீங்க அலட்டிக்காம எழுந்து உட்காருங்க” என்றவள் அவனுக்கு உணவை ஊட்டி விட வர,
சட்டென்று தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.
“ச்சை என்ன காரியம் பண்ற.. தங்கச்சிக்கு ஊட்டி விடுற நினைப்புலையே இருக்கியா? அந்த நினைப்பை விட்டு வெளியே வா.. இவன் உன்னோட எதிரி. இதை என்றைக்கும் மறந்துடாத” என்று மனதுக்கு குட்டு வைத்தவள்,
“சாப்பிடுங்க” என்றவள், எடுத்த உணவை மீண்டும் தட்டிலே போட்டு விட்டு கைக்கழுவச் சென்றாள்.
அவளின் செயல்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு அவள் ஊட்டி விட வந்து பிறகு கையை நகர்த்திக் கொண்டது எல்லாமே புரிந்து தான் இருந்தது.
எதையும் காட்டிக் கொள்ளாமல் உணவை எடுத்து வாயில் வைத்தவன்,
“ஆமா இதுல விசம் எதுவும் கலக்கலையே..?” அவளிடம் நக்கலாக கேட்டான்.
கைக்கழுவி விட்டு திரும்பியவள்,
“அந்த அளவுக்கு ஈன புத்தி இல்ல எனக்கு. அதுவும் சாப்பிடுற சாப்பாட்டுல விசத்தை கலக்குற அளவுக்கு என் வளர்ப்பு கேவலமா இல்ல” வெடுக்கென்று சொன்னவள் உப்பரிகையில் போய் நின்றுக் கொண்டாள். ஏனோ அவனுக்கு முன்னாடி அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.
அவன் உண்ட பிறகே உள்ளே வந்தவள், பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு திரும்ப,
ஹரிணி “மேம்..” என்று வந்து நின்றாள்.
“என்ன ஹரிணி?” இளக்கமே காட்டவில்லை தயாழினி.
“சார் போட வேண்டிய டேப்ளட்ஸ்” என்று ஒரு கவரை நீட்டினாள்.
“ம்ம்” என்று வாங்கியவள்,
“நீ வீட்டுக்கு போய் சாப்பிடு ஹரிணி. உனக்கு பதிலா வேற யாரையாவது இங்க இருக்க சொல்லு. அடியாட்களுக்கு பஞ்சமா என்ன? நீயும் தான் நேத்துல இருந்து இங்கே தான் இருக்க. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு” என்று நாசுக்காக அவளை வெளியே அனுப்பினாள்.
ஹரிணியும் தலையை ஆட்டி விட்டு கிளம்பி விட்டாள்.
போட வேண்டிய மாத்திரையை எடுத்து பிரித்து அவனிடம் கொடுத்தவள் நீரையும் சேர்த்து குடுத்தாள்.
அவளின் பணிவிடையை மெச்சிக் கொண்டே வாங்கி வாயில் போட்டான்.
“ஓகே.. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் என் தங்கச்சிக்கிட்ட போறேன்” என்று அவள் விலகிச் செல்ல,
“அப்போ ஹரிணியை உள்ளே கூப்பிடு.. தனியா இருக்க போர் அடிக்கிது.. அவ இருந்தா நாங்க பேசிட்டாவது இருப்போம்” என்று இரு கைகளையும் தூக்கி அவன் சோம்பல் முறிக்க, பத்திக் கொண்டு வந்தது.
“ஏதே..” என்று அவனை முறைத்தவள், வெளியே போகமால் தொப்பென்று அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். தயாகரன் மர்மமாக சிரித்துக் கொண்டான்.
“என்னையவே ஆட்டி வைக்கலாம்னு நினைக்கிறியாடி.. உன்னால இந்த பிறவிக்கு அதை செய்ய முடியாது. தயாகரன் எப்பவும் படிஞ்சு போற ஆள் இல்லடி. ஏறி மிதுச்சிட்டு போற ஆள். போக போக தெரிஞ்சுக்குவ” என்றவன் சிகரெட்டை எடுத்து வாயில் வைக்க, இவள் தான் பதறிப்போனாள்.
“ஹலோ ஹாஸ்பிட்டல்ல யாராவது சிகரெட் அடிப்பாங்களா? கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கா உங்களுக்கு” கடுகாய் பொரிந்தாள்.
“என்னடி வர வர வாய் ரொம்ப நீளுது.. கன்னத்துல சப்புன்னு ஒன்னு வச்சேன்னு வை.. தாங்க மாட்டடி... எதோ போனா போகுதேன்னு நீ செய்யிற கோமாளி தனத்தை எல்லாம் சகிச்சுக்கிட்டு போனா. என்ன என்னையவே அதிகாரம் செய்யிறியா? சாவடிச்சுடுவேன் பார்த்துக்க..” என்று உறுமினான். அவனது உறுமலில் பயம் வந்து விட, மௌனமாகி விட்டாள்.
“இருக்கிற இடம் தெரியாம இருந்து பழகு. உன்னை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்டி..” மேலும் சொன்னவன், நிதானமாக புகையை இழுத்து இரசித்து வெளியே விட்டான். அதில் இவளுக்கு தான் ஒவ்வாமை வந்தது.
“இந்த கடன்காரன் கிட்ட இருந்து என்னைக்கு தான் விடுதலை கிடைக்குமோ தெரியலயே..” புலம்பினாள்.
“ஆமா எப்ப உன்னை விக்கிறது..?” அவளிடமே அவளை விற்க தேதி கேட்டான்.
“ஹாங்” என்று அவள் திகைக்க,
“என்னடி உன் கழுத்துல தாலி காட்டுன உடனே எல்லாத்தையும் மறந்திடுவேன்னு நினைச்சியா? அப்படி எல்லாம் உன்னை விட எனக்கு எண்ணம் இல்ல. இப்பவும் நீ பிரெஷ் பீஸ் தானே. சோ லம்பா வர்ற அமவுண்ட்டை யார் விடுவா சொல்லு”
திக்கென்று வந்தது தயாழினிக்கு. அப்போ இவன் என்னை விற்று விடுவானா? விழிகளில் நீர் கோலம் பூத்தது. கலங்கிவளை ஏளனத்துடன் பார்த்தவன்,
“நீ அழுகுறதை பார்த்தா உன்னை விற்க மாட்டேன்னு நினைச்சு இருப்ப போலையே” மேலும் கேலி செய்தான்.
“உங்க அம்மா அதுக்கு விட மாட்டாங்க” என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
“ஆஹாங்..” ஏளனம் செய்தவன், “நினைப்பு தான் உனக்கு.. காசுக்கு முன்னாடி அம்மாவாது பொண்டாட்டியாவது.. காசு குடுத்தா என் அம்மாவை கூட விற்பேன். அதுவும் அது பேசுற பேச்சுக்கு சும்மா கூட குடுத்துடுவேன்” என்றான்.
அதில் விக்கித்துப் போனவளுக்கு மனம் பெரிதும் கலங்கிப் போனது. கலங்கிப் போனவளின் முகத்தை பார்த்து, “இந்த அறையை விட்டு முதல்ல வெளியே போ. உன் முகத்தை பார்த்தாலே எரிச்சலா வருது.. எப்போ பாரு அழுதுக்கிட்டு..” திட்டியவன்,
“வெளில ஒரு தடியன் இருப்பான் அவன் கிட்ட சரக்கை கொண்டு வர சொல்லு.. நேத்துல இருந்து தண்ணி அடிக்காம வாயெல்லாம் நமநமன்னு இருக்கு.. அதை ஊத்துனா தான் உடம்பு கின்னுன்னு இருக்கும்” என்றான் மேலும்.
அவன் அப்படி பேசவும் அரக்கன் கம்மிங் பேக் என்று உணர்ந்தவள், கலங்கிய கண்களோடு வெளியே போய் விட்டாள்.
அவள் போவதை பெருமூச்சு விட்டு பார்த்தவன் கண்களை மூடிக் கொண்டான்.
“சார் சரக்கு கேட்டீங்களாமே?” என்று அவன் முன்பு பணிவாக வித விதமான சரக்கு பாட்டில்களை அடுக்கி வைத்தான் ஒரு தடியன்.
“ம்ம்ம்” என்று மட்டும் உருமியவன்,
“யாரையும் உள்ள விடாத.. நீயும் வெளியே போய் நில்லு” என்று பாட்டிலை திறந்து மருத்துவமனையிலே சரக்கடிக்க ஆரம்பித்தான் தயாகரன்.
இங்கே தங்கையின் அறைக்குள் நுழைந்த மருமகளை பார்த்த பொன்மாரி,
“என்ன மருமவளே அதுக்குள்ள வந்துட்ட.. என்ற மவன் கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்க வேண்டியது தானே.. உன் தங்கச்சியோட வந்தப்ப கூட என்னையும் கொஞ்ச நேரத்துலையே போக சொல்லிட்டான். என் பிள்ளைக்கு நெஞ்சுல அடி பட்டு இருக்கு.. என்ன ஏதுன்னு கூட மாட இருந்து அவனை கவனிக்க வேண்டியது தானே” என்றார்.
“ம்கும் அவனுக்கு அடிபட்டது எல்லாம் ஒரு பொருட்டா என்ன? அரக்கன் உட்கார்ந்து சரக்கு அடிச்சுட்டு இருக்கான். அது தெரியாம இவங்க வேற.. அவனை விழுந்து விழுந்து கவனிக்கனுமாக்கும்” மனதுக்குள் கடுப்படித்தவள்,
வெளியே லேசாக சிரித்து, “இல்ல அத்தை அவர் தான் போக சொன்னாரு. பாப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு, குளிச்சுட்டு மத்தியம் சாப்பிட்டுட்டு சாப்பாடு எடுத்துட்டு வர சொன்னாரு” என்று பூசி முழுகினாள். தங்கைகள் இருக்கிறார்களே.. அவர்களுக்காவது தாங்கள் இணக்கமாக இருக்கிறோம் என காட்டிக் கொள்ள வேண்டுமே. இல்லை என்றால் அவர்களும் வேதனை படுவார்களே.. தான் தான் வேதனை அனுபவிக்க வேண்டும் என்று தலை எழுத்து. அவர்களுக்கும் ஏன் வேதனையை தரவேண்டும்..
“அதுவும் சரி தான்த்தா. அப்போ மருத்துவர் கிட்ட பேசிட்டு சொல்லு. எல்லோருமே கிளம்பலாம்” என்றார்.
தலையை ஆட்டியவள், மருத்துவரை பார்த்து சின்ன தங்கையை கூட்டிட்டு போகலாமா என்று அனுமதி கேட்டு, ஒருமுறை அவளை பரிசோதித்து விட்டு தயாகரனின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள் தயாழினி.
வீட்டில் இருந்த மலரும் சந்தானமும் அவர்களுக்கு தெரிந்த வரையில் சமைத்து தயாகரனின் தம்பிகளுக்கு உணவை பரிமாறினார்கள்.
குணாதரனும் பிரபாகரனும் எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு தங்களின் அறைக்குள் நுழைந்துக் கொண்டார்கள். அவர்கள் போன பிறகு தான் இவர்கள் இருவரும் உண்டார்கள்.
“இன்னும் எத்தனை நாள் இங்க இருக்கிறதுன்னு தெரியல மலரு.. மாப்பிள்ளையோட அம்மா கிட்ட ஏதாவது பேசி பார்க்கட்டுமா?” மனைவியிடம் ஆலோசனை கேட்டார்.
“இல்லங்க எதுலையும் அவசரப் பட வேண்டாம்.. முதல்ல நம்ம பெரிய மக வாழ்க்கை எப்படி இருக்குன்னு பார்க்கணும். எனக்கு என்னவோ பயமா இருக்கு. பெரிய புதைக்குழிக்குள்ள காலை விட்ட மாதிரி தோணுது” என்றார் மலர்.
“என்ன மலர் சொல்ற?” புருவம் சுறுக்கினார்.
“நேற்றைக்கு இரவு எனக்கு தூக்கம் கொஞ்சமும் வரலங்க. சின்ன மகளோட கை முறிஞ்சு போனதும். பெரிய மகளின் வாழ்க்கை திடுதிப்பென்று மாறிடுச்சேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ ஏதோ சத்தம் கேட்டது.. அரவம் இல்லாமல் எழுந்து பார்த்தேன்.. நம்ம அறை பக்கம் தான் சத்தம் கேட்டது. திக்குன்னு ஆயிடுச்சு.. மறைவாக இருந்து வெளியே எட்டிப் பார்த்தேன்.. அங்கே முகமூடி அணிஞ்ச ஒரு உருவம் நம்ம இருந்த அறை பக்கமா துப்பாகியை வச்சு குறி பார்த்துட்டு இருந்துச்சு..” என்றார்.
“என்ன மலரு சொல்ற? துப்பாக்கியா? அதுவும் நம்ம இருந்த அறை பக்கம் எதுக்கு?” என்று அவரின் கையை பிடித்துக் கொண்டார் சந்தானம்.
“இன்னும் முழுசா முடிக்கலங்க” என்றவரின் குரல் கம்மியது.
அடைத்த தொண்டையை சரி செய்துக் கொண்டு,
“நம்மளை கொல்ல தான் யாரோ வந்து இருந்தாங்க.. ஆனா நம்மளை சுடுறதுக்குள்ள அவனை வளைச்சு பிடிச்சுட்டாரு கடைசி தம்பி பிரபாகரன்” என்றார்.
ஓ...என்ன பா...இவங்க மகன்கள் செம்ம பெரிய கேடியா இருப்பாங்க போலவே.....
அவங்க கிட்ட இருந்து safe பண்ண தான் இந்த டிராமா எல்லாம் போலவே.....
அப்ப பணம் வாங்கினது கூட சும்மா சொன்னதா தான் இருக்கும்.....