“ம்கும் பெரிய தயாகரன் சார்...” நொடித்துக் கொண்டவள், வெளியே வந்து அமர்ந்தாள்.
அமர்ந்த சிறிது நொடியிலே ஒரு காட்சி கண் முன் வர திகைத்துப் போனவள் வேகமாக தன்னை அடைத்து வைத்து இருந்த அறைக்கு ஓடினாள்.
அங்கே தயாகரனை நெருங்கி நின்றுக் கொண்டு இருந்தாள் ஒரு பெண். நேற்று இரவு இவளை அறைக்குள் தள்ளி கதவை பூட்டிய பெண் தான் அவள்.
இருவரும் நெருக்கமாக நிற்பதை பார்த்து முறைத்தவள்,
“இங்க என்ன நடக்குது?” கடுப்புடன் கேள்வி கேட்டாள் தயாழினி.
“இல்ல மேடம் சாருக்கு அடி பட்டு இருக்கு.. அது தான் செக் பண்றேன்” என்றாள் அவள்.
“அதை பார்க்க நான் இருக்கேன். நீங்க பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லை. ப்ளீஸ் ஸ்டே அவே” கோவமாக சொன்னவள் இருவருக்கும் நடுவே புகுந்து நின்றாள்.
“உங்களுக்கு இதை பத்தி எல்லாம் எதுவும் தெரியாது.. நீங்க நகருங்க” அந்த பெண் சொல்ல,
“எனக்கு தெரியுதோ தெரியலையோ, ஆனா எங்க ரெண்டு பேருக்குள்ள நீங்க வர வேண்டாம்” கடுமையாக சொன்னவள்,
“வெளியே போங்க” என்றாள்.
“இல்ல மேடம்” என்று அவள் தயங்க, தயாகரனை முறைத்துப் பார்த்தாள் தயாழினி.
அவளின் பார்வையில் என்ன உணர்ந்தானோ, “நீ போ ஹரிணி. அவ பார்த்துக்குவா” என்றான்.
“ஓகே சார் டேக் கேர்” வெளியே போய் விட்டாள் அடுத்த நிமிடம்.
“எத்தனை நாள் இந்த கூத்து நடக்குது? இந்த பொண்ண தான் நீங்க டாவடிக்கிறீங்கன்னா என்னை எதுக்காக ஊர் மெச்ச கல்யாணம் பண்ணனும். உங்க அம்மா கிட்ட இந்த பொண்ணை தான் கல்யாணம் செய்ய போறேன்னு சொல்ல வேண்டியது தானே” அவளின் வாய் பேசிக் கொண்டே இருந்தாலும் அவளின் விழிகளும் கைகளும் அவனின் நெஞ்சில் அடி பட்டு இருந்த இடத்தை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தது.
“ரொம்ப பேசுன வாயை கிழிச்சுடுவேன்டி..” பல்லைக் கடித்தான்.
“கிழிப்பிங்க கிழிப்பீங்க.. ஏன்னா இளிச்ச வாய் நான் தானே.. யாரா இருந்தாலும் பரந்த நெஞ்சை விரித்து காட்டுவீங்க போல” என்றவள் அருகில் இருந்த காட்டன் கொண்டு அவனின் மார்பில் பட்டு இருந்த காயத்தை துடைத்து விட்டாள்.
“நீ துடைக்கவே வேணாம் போடி” என்று அவளின் படியில் இருந்து விலகிப் போனான்.
“ஏன் மறுபடியும் அவக்கிட்ட போகவா?” நக்கலுடன் கேட்டாள்.
“இப்ப நீ என்கிட்டே அடிவாங்கி சாக போற பார்த்துக்க” பல்லக் கடித்தவன் படுக்கையில் போய் அமர்ந்தான் காலை தொங்க போட்டு..
அவனுக்கு முன்பு மண்டி போட்டு அமர்ந்தவள், கையில் இருந்த காட்டன் வச்சு அவனின் காயங்களை துடைத்துக் கொண்டே,
“எப்படி ஆச்சு? ஏன் இவ்வளவு காயம் இருக்கு.. ஏதோ கத்தியில கிழிச்ச மாதிரி இருக்கு. டிடி போடுங்க.. டாக்டரை வர சொல்றேன்” என்று அவனின் காயத்துக்கு மேல் ஊதி விட்டவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
“என்னடி தங்கச்சிய பார்த்துட்டு வரேன்னு ஓடுன.. இப்ப என்னன்னா போன அடுத்த நிமிடமே என்கிட்டே ஓடி வந்துட்ட” நக்கலாக கேட்டான்.
தயாகரன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த உடனே அவன் கண்கள் சிவந்து இருப்பதை பார்த்து குடிச்சுட்டு வந்து இருக்கான் போல பொறுக்கி என்று தான் நினைத்தாள்.
இவன் எப்படியோ போகட்டும் ஆனா என் தங்கையை பார்க்க விடாம பண்ணிட்டானே என்று கோவம் வர, கோவத்தில் அவனை கண்ட படி பேசி அவனின் சட்டையை கிழித்தே விட்டு தங்கையை பார்க்க ஓடினாள்.
ஆனால் அங்கே தங்கையை பார்த்த பிறகு வெளியே வந்து அமர்ந்த பொழுது தான் அவளுக்கு பக்கென்று இருந்தது,
தயாகரனின் சட்டையை ஆவேசத்தில் கிழித்த பொழுது ஏற்பட்டு இருந்த காயங்கள் எல்லாம் அவளின் சிந்தையில் பதியவே இல்லை. ஆனால் அவள் ஆசுவாசமாக உட்கார்ந்த பொழுது தான் அது சிந்தனையில் உறைக்கவே செய்தது.
அடுத்த நிமிடம் அவனிடம் ஓடி வந்து இருந்தாள்.
எதுக்காக அவனுக்கு அடிபட்டா நாம இப்படி துடிக்கிறோம் என்று அவள் கொஞ்சம் கூட உணர்வே இல்லை. அதுவும் அந்த பெண்ணிடம் தன் நெஞ்சை காட்டிக் கொண்டு நின்ற கணவனின் செயலில் பத்திக் கொண்டு வந்தது.
அதனால் தான் வேகமாய் இருவருக்கும் நடுவில் வந்து நின்றாள் தயாழினி. எதுக்கு இந்த பொசசிவ் என்று கூட அவளுக்கு புரியவில்லை.
அதை அவனே வாய் விட்டு கேட்டான்.
“எப்பவும் எதிரி போல வில்லன் போல என்னை பார்ப்ப.. இன்னைக்கு என்ன என் மேல அக்கறை வச்சு கவனிக்கிற?” ஏளனமாகவே கேட்டான்.
“ம்கும் உங்க மேல அக்கறை வந்துட்டாலும்... ரொம்ப தான் நினைப்பு. என் தங்கச்சிக்கு நீங்க நல்ல ட்ரீட்மென்ட் குடுக்குறதுனால மட்டும் தான். தேவையில்லாம கனவு காணாதீங்க மிஸ்டர்” என்றவள் அவனின் சட்டையை கழட்டி விட்டாள். அவளுக்கு ஒத்துழைப்பு குடுத்தபடியே அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
“இப்படி பார்த்தாலும் அது தான் உண்மை...” என்றவள், “நான் டாக்டாரை வர சொல்றேன்” வெளியே போக,
“ஹரிணி இந்நேரம் வர சொல்லி சொல்லி இருப்பா.. நீ இங்க இரு” என்றான்.
“ம்ம்ம்” என்றவள், “காபி வேணுமா?” அவனிடம் கேட்டவள், பிறகு தானே, “சாரி நீங்க சரக்கு இல்ல அடிப்பீங்க. அது இங்க கிடைக்காது.. அதனால நான் எனக்கு மட்டும் சொல்லிக்கிறேன்” என்று அறையில் இருந்த போனில் ஹாஸ்பிட்டல் கேண்டீனுக்கு தொடர்பு கொண்டு பேசினாள்.
“இப்ப வாயை உடைக்க போறேன்டி” உறுமினான்.
“உண்மையை தானே சொன்னேன்.. எதோ இல்லாததை சொன்ன மாதிரி ரொம்ப தான் பண்றீங்க” வெடுக்கென்று சொன்னவள்,
குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள.
முகத்தை கழுவி வெளியே வந்தவள், மட்ட மல்லாக்க தலைக்கு அடியில் கையை குடுத்து படுத்து இருந்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அறையின் உள்ளே இருந்த உப்பரிகை பக்கம் சென்று நின்றாள்.
சிறிது நேரத்திலே காலிங் பெல் சத்தம் கேட்டது. போய் பார்த்தாள். கேன்டீன் ஆள் தான் நின்று இருந்தான். வாங்கிக்கொண்டு உள்ளே வந்தாள். அவனை பார்த்தாள். தயாகரன் அப்படியே தான் படுத்து இருந்தான்.
அவனுக்கு அருகில் போய் அமர்ந்தவள்,
“ரெண்டு பேருக்கும் தான் காபி சொல்லி இருக்கேன். எழுந்து உட்காருங்க” என்றாள்.
“எனக்கு சொல்லலன்னு சொன்ன”
“விட்டுட்டு சாப்பிட்டா எனக்கு தான் வயிறு வலிக்கும். அது தான்” என்றவள் அவனுக்கு ஒரு கப்பில் குடுத்தவள், தனக்கு ஒரு கப்பில் எடுத்துக் கொண்டாள்.
“குக்கீஸ் இருக்கு” என்றாள் தகவலாய். தயாகரன் எதுவும் சொல்லவில்லை.
“எடுத்து சாப்பிடுங்க.. நேத்தில இருந்து எதுவுமே சாப்பிடலையே” என்றாள்.
“இந்த அக்கறை எல்லாம் எங்க இருந்து புதுசா வந்துச்சு” கூர்மையாக அவளை பார்த்துக் கேட்டான். அது அவளுக்கே தெரியாது. பிறகு எங்கிருந்து அவள் சொல்ல,
“மறுபடியும் மறுபடியும் சொல்ல முடியாது. ஒரு வேலை உங்களை நல்லா பார்த்துக்கிட்டா என் தங்கச்சி ட்ரீட்மென்ட்டும் நல்லா நடக்கும்ன்ற எண்ணத்துனால தான் போதுமா?”
“நானாவது பரவாயில்லடி.. கொஞ்சம் தான் சுயநலமா இருக்கேன். ஆனா நீ ரொம்ப ரொம்ப சுயநலவாதியா இருக்கடி”
அதில் தலை குனிந்துக் கொண்டாலும்,
“எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்” என்றாள்.
“அப்போ உன் கழுத்துல தாலி கட்டுன நான் யாரு?” கோவத்துடன் கேட்டான்.
“அது...” என்று தடுமாறிப் போனாள்.
“இவ்வளவு நேரம் வாய் கிழிய பேசுனியே இப்போ பேசு...” என்றவன்,
“நான் என் காசை குடுத்து ஏமாந்து போனதுனால தான் உங்களை கொத்தா அள்ளினேன். என் காசு எனக்கு வேணும்னு. நான் மோசமானவன் தான். ஆனா நான் கூட வெளிப்படையா தான்டி இருந்தேன். இப்படி உன் அளவுக்கு பச்சையா நடிக்கிற அளவுக்கு நான் இல்லடி” என்று சாடினான். அதில் கண்கள் கலங்கியது தயாழினிக்கு.
அவனது காயத்தை உணர்ந்த அடுத்த நிமிடம் அவளையும் அறியாமல் பதறிப் போய் தான் ஓடி வந்தாள். ஆனால் அதை அவனிடம் காட்டிக்க எந்த அவசியமும் இல்லை என்று தனக்குள் போட்டு புதைத்து விட்டாள்.
ஏன் பதறினாள் என்று கூட அவளுக்கு இன்னும் புரியவில்லை.
“பின்ன நடிக்காம என்ன பண்ண சொல்றீங்க? என் உடம்பை விலை பேசி விற்க நினைக்கும் அயோக்கியனிடம் அன்பை காட்ட சொல்றீங்களா? அரக்கனை விட மிக மோசமா நடந்துக்கிட்ட உங்கக்கிட்ட நான் ஏன் அன்பு காட்டணும்?” ஆதங்கத்துடன் கேட்டாள்.
“ஓ...! அதனால நடிப்பியா?”
“ஆமாம் இப்ப மட்டும் இல்ல.. இனி வரும் எல்லா நாட்களும் உங்க கிட்ட அன்பா இருக்கிற மாதிரி நடிக்கத்தான் போறேன். உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க” என்றவள் தன் கப்பை எடுத்துக் கொண்டு உப்பரிகைக்கு போய் விட்டாள்.
அவள் போன பிறகு தயாகரனின் இதழ்களில் சின்ன புன்னகை ஒன்று மலர்ந்தது.
“அன்பா இருக்கிற மாதிரி உன்னால நடிக்க முடியுமாடி?” கேட்டவன், அவள் குடுத்த காபியை குடிக்க ஆரம்பித்தான்.
அடுத்த கொஞ்ச நேரத்திலே மருத்துவர் வந்து விட, தயாழினியும் சத்தம் கேட்டு உள்ளே வந்தாள்.
அவன் எழ ஹரிணி உதவி பண்ணிக் கொண்டு இருக்க, பார்த்தவளுக்கு பத்திக் கொண்டு வந்தது.
“நீங்க நகருங்க ஹரிணி. நான் பார்த்துக்குறேன்” என்று சொன்னவள், ஹரிணியை நகர்த்தி விட்டு தயாகரனுக்கு அருகில் வந்து நின்றவள், தன் முந்தானையை இடுப்பில் சொறுகிக் கொண்டு அவனின் தோளை பிடித்து எழ உதவி செய்தாள்.
அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.
“என்ன பார்வை வேண்டி கிடக்கு.. என்னை பிடிச்சு எழுந்திரிங்க.. அவளை உங்க பக்கத்துல கூட விட மாட்டேன். அவளை மட்டும் இல்ல வேற எந்த பெண்ணையும் உங்க பக்கத்துல கூட நெருங்க விட மாட்டேன். இது தான் உங்களுக்கு நான் குடுக்குற பனிஷ்மென்ட். உங்க தலை எழுத்து என் கூட மட்டும் தான்” என்றாள் யாருக்கும் கேட்கா வண்ணம்.
தயாகரன் எதுவும் பேசவில்லை. ஆனால் எழும் பொழுது அவளின் இடுப்பை வலிக்கும் அளவுக்கு இறுக்கிப் பிடித்தான்.
“ம்மா” என்று சன்னமாக அலறினாள்.
“என்னடி வலிக்கிறதா?” நக்கலாக கேட்டான்.
“உங்களை” என்று எதோ சொல்ல வந்தவள் வாயை மூடிக் கொண்டாள். ஏனெனில் முன்பை விட இன்னும் அதிகமாக இறுக்கிப் பிடித்தான் அவளின் இடுப்பை.
இன்னும் ஏதாவது சொல்லப் போய் இடுப்பை உடைத்து விட்டால் என்ன செய்வது என்று வாயை மூடிக் கொண்டாள்.
அவள் வாய் பேச்சில் காட்ட, இவனோ செயலில் காட்டினான். ரெண்டு பேருக்கும் பொருத்தமோ பொருத்தம்.
அவனின் காயத்தை ஆராய்ந்து மருந்துப் போட்டு விட்ட மருத்துவர், ஒரு டிடியையும் போட்டு விட்டார்.
“வாட்டர் படாம பார்த்துக்கோங்க மிஸ்டர் தயாகரன். மத்தபடி ஓகே தான். சீக்கிரம் ஆறிடும். க்ரீம் மட்டும் இரண்டு நேரமும் கிளீன் பண்ணிட்டு போடுங்க” அறிவுறுத்தி விட்டு கிளம்பினார்.
அவரிடம் ஓடிப் போய் தன் தங்கையை பற்றி கேட்டாள்.
அவர் திரும்பி தயாகரனை பார்த்தார். அவன் தலை அசைக்க,
“இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் மேடம்” என்றார்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றாள். சின்ன சிரிப்புடன் அவர் கிளம்ப,
“நைட் எங்க போய் இருந்தீங்க? எப்படி இவ்வளவு காயம் வந்துச்சு” ஆஸ்யூசுவல் மனைவியாக கேள்வி கேட்டாள்.
“இங்க லிப் கிஸ் குடு சொல்றேன்” என்றான் அவன்.
“பொறுக்கி” என திட்டியவள், தன் தங்கையிடம் ஓடப்பார்க்க, அவளின் கையை பிடித்து படுக்கையில் தள்ளி விட்டவன் அவள் மீது படரப் பார்க்க,
“ஐயோ காயமா இருக்கு” அவள் அலற, அவளின் அலறலை கண்டுக் கொள்ளாமல் அவளின் இதழ்களை வன்மையாக சிறை செய்தான் அவளின் கணவன்.
இவ எல்லாம் என்ன டிசைன்னே தெரியல🤷🤷🤷🤷🤷🤷
என்னமோ பண்ணுங்க ரெண்டு பேரும்.....