“அடி யாத்தே.. இந்த பொன்மாரி என்னா பேச்சு பேசுறா? நான் பாட்டுக்க கீழே தேங்கா துருவிக்கிட்டு இருந்தேன். என்னை கூப்பிட்டு வச்சு என்னத்தையோ பேசுனா. இப்ப நான் கதை கேட்க அலையிறேனாம்... எனக்கு தேவை தான்டி.. கூப்பிடும் போது யக்கா தொக்கான்னு கூப்பிட்டா.. இப்போ விரட்டி விடும் போது போடி வாடிங்கிறா.. இவ சங்காத்தமே இனி வச்சுக்கக் கூடாது.. ஏதோ கறி கஞ்சிக்கு ஆசை பட்டு வந்தா இவ இந்தா பேச்சு பேசுறாளே.. எய்யா சிவலிங்கம் நீ உன் பொண்டாடியை கொஞ்சம் கண்டிச்சு வைய்யா” புலம்பிக் கொண்டே முட்டியை பிடித்துக் கொண்டு மாடியை வீட்டு கீழே இறங்கினார் தேனு.
“எது நான் என் பொண்டாட்டியை கண்டிக்கிறதா?” திகைத்துப் போனார் அவர்.
“உன் கிட்ட சொல்லி நீ அதை கேட்டு உன் பொண்டாட்டியை கண்டிச்சு போட்டுட்டாலும்.. போயும் போயும் உன் கிட்ட போய் சொல்றேன் பாரு... நீ தான் சரியான பொண்டாட்டி தாசனாச்சே” என்று சிவலிங்கத்தை நொடித்துக் கொண்டே, “எனக்கு இது தேவை தான். இந்த முட்டி வலியை வச்சுக்கிட்டு கதை கேட்க போவனா... வாய் பார்க்கிற நாயை கல்ல கொண்டு அடின்னு சும்மாவா சொன்னாங்க” புலம்பி தள்ளினார் தேனு.
இங்கே அறைக்குள் புகுந்த பொன்மாரி தன் மருமகளை தேடினார்.
பொன்மாரி சொற்பொழிவு ஆற்றும் முன்பே அவளை விடுவித்து விட்டான் தயாகரன். தயாழினி தன் கணவன் அவிழ்த்துப் போட்ட புடவையை வாரிசுறுட்டிக் கொண்டு அவனது அறையில் இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்து புடவையை கட்ட ஆரம்பித்து விட்டாள்.
“ஆத்தா...” என்று அவளை அழைக்க,
“அத்தை.. இங்க இருக்கேன்” என்று குரல் கொடுத்தாள்.
“என்னத்தா பண்ற?” அவர் உள்ளே நுழைய, பட்டு புடவைக்கு மடிப்பு எடுக்க முடியாமல் அவள் தடுமாறிக் கொண்டு இருந்தாள்.
“இங்கன குடு ஆத்தா நான் கட்டி விடுறேன்” என்று அவளுக்கு அவரே புடவையை கட்டி விட்டார்.
அவரின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தாள் தயாழினி.
“என்ன கண்ணு அப்படி பார்க்கிற?” கேட்டுக் கொண்டே அவளின் தோளில் மடிப்பு எடுத்த முந்தியை வைத்து ஊக்கு குத்தினார்.
“நான் யாருன்னு தெரியுமா அத்தை?” நிதானமாக கேட்டாள்.
“உன் அண்ணனுங்க என் மகன் கிட்ட ஒரு கோடி பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டானுங்க. அதுக்கு பழிவாங்க உங்க குடும்பத்தை தூக்கிட்டானுங்க சரியா?” என்று கேட்டார்.
“தெரிஞ்சு இருந்தும் ஏன் அத்தை இந்த கல்யாணத்தை பண்ணி வச்சீங்க?”
“ஏன்னா என் மகனுக்கு உன்னை விட ஒரு தங்கமான பொண்ணு கிடைக்க மாட்டாளே. அதனால பிடுச்சு கட்டி வச்சுட்டேன்”
“எனக்கு உங்க மகனை சுத்தமா பிடிக்கல.. நீங்க என் வாழ்க்கையை வீணாக்கிட்டீங்க..” கண்கள் கலங்க சொன்னாள்.
அவளை பார்த்து பொருள் நிறைந்த சிரிப்பை சிரித்தவர்,
“இதே வார்த்தையை ஆறு மாசம் கழிச்சு சொல்லு.. அப்போ கண்டிப்பா உனக்கு நானே விடுதலை வாங்கி தருவேன்” என்றார்.
“ப்ளீஸ்... என்னால ஆறு மாசம் எல்லாம் உங்க மகனோட வாழ முடியாது.. அவர் சரியான பொறுக்கி.. உங்களுக்கு இன்னும் உங்க மகனை பத்தி முழுசா தெரியல.. அவர் நீங்க நினைக்கிறதை விட ரொம்ப ரொம்ப மோசமான ஆளு.. அவரை பத்தி முழுசா தெரிஞ்சா அவரை சுமந்த வயித்தை நீங்களே தீ வச்சு கருக்கிக்குவீங்க” என்றாள் அத்தனை ஆவேசமாக.
“நீ சொல்ற மாதிரி என் மகன் ரொம்ப மோசமானவனா இருந்தா என் வயித்தை மட்டும் இல்ல, என் மகனையும் தீ வச்சு எரிச்சுடுவேன்.. ஆனா நீ ஒரு ஆறு மாசம் பொறுமையா இரு. உன்னை விட எனக்கு என் மகனை பத்தி நல்லா தெரியும். அவன் நல்லவன்னு என் வாயல நான் சொல்ல மாட்டேன். ஆனா அதை நீயே உணர்ந்துக்கும் நாள் வரும். அது வரை உனக்கு எல்லா விதத்திலும் நான் பாதுகாப்பா இருப்பேன். என்னை நம்பி வா” என்று அவர் சொல்ல,
“அவரா நல்லவர்.. ம்ஹும்..” என்று பெருமூச்சு விட்டவள், “என் கதை விடுங்க.. அது எப்படியோ போகட்டும்.. விதி என்னை இழுத்துட்டு போற போக்குல நான் போறேன்.. ஆனா என் மத்த ரெண்டு தங்கச்சிங்களுக்கும் பாதுகாப்பு குடுங்க” என்றாள்.
“உனக்கு நான் சொன்னாலும் இப்ப எதுவும் புரியாது.. ஆனா நீயே ஒரு நாள் புரிஞ்சுக்குவ.. ஒரேடியா உங்களை என் வட்டத்துக்குள்ள கொண்டு வர முடியாது.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா என்னால செய்ய முடியும். அது வரை நீ பொறுமையா இரு..” என்றவர் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
“இங்க என்னடா மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்க.. ஏதோ வேலை இருக்குன்னு சொன்னியே.. அதை போய் செய்.. நானும் என் மருமவளும் போய் வந்தவங்களை கவனிக்கிறோம்” என்று அவளை கூட்டிக்கொண்டு கீழே போனவர்,
“யோவ் மனுசா நீ என்னைய்யா உன் பிள்ளைக்கு காவல் காத்துக்கிட்டு இருக்கியா வாய்யா கீழ...” என்று மேலே பார்த்து குரல் கொடுக்க அடுத்த செகேன்ட் ஓடி வந்தார் சிவலிங்கம்.
தயாகரன் கீழே போகும் தன் மனைவியை பார்த்தான். அவள் திரும்பி அவனை பார்க்கவே இல்லை.
அவர்கள் போன பிறகு குணாதரன் தன் அண்ணனை தேடி வந்தான்.
“என்னனா இப்படி ஆயிடுச்சு...” கவலையாக கேட்டான்.
“என்ன ஆனாலும் சரி.. முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன்டா..” உறுதியாக சொன்னவன்,
“கொக்கைன் எவ்வளவு இருக்கு?” விசாரித்தான். கைவசம் உள்ள அளவை குணா சொல்ல,
“எப்போ சரக்கு கை மாறுது” கேட்டான்.
“மேக்சிமம் நாளைக்கு நைட்” என்றான்.
“ம்ஹும்..” என்று மறுத்தவன், “மை கேஸ் இன்னைக்கு நைட் கை மாறும்.. நீ உன் போர்ஸ்சோடா ரெடியா இரு.. நமக்கு மொத்த சரக்கும் வேணும்” கட்டளை போட்டான்.
“ஓகேண்ணா” என்றவன், “சின்னவனுக்கு குடுத்த வேலை என்னாச்சுண்ணா” விசாரித்தான்.
“செக் பண்ண சொல்லி இருக்கேன்.. நாளைக்கு டீடையில் தெரிஞ்சிடும். அவசரம் காட்ட வேணாம்..” சொன்னவன்,
“குணா” என்றான்.
“ம்ம்.. இனி அடிக்காத” என்றான். குறிஞ்சியை தான் சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டவன்,
“சரிண்ணா..” என்றான். ஆனால் தயாழினி நிலை இப்போ என்ன என்று அவனுக்குள் கேள்வி எழ, “அண்ணி” என்று அவன் இழுத்தான்.
“தயாழினின்னு கூப்பிட்டு பழகு” என்றான் தயாகரன்.
“அவங்க அண்ணி தானேண்ணா”
“ப்ச்” சலித்தான்.
“இங்க இருக்கிற வரை, உங்க தாலி அவங்க கழுத்துல இருக்கிற வரை அவங்க எனக்கு அண்ணி தான்” என்றான் தலையை குனிந்துக் கொண்டு.
“என்னவோ பண்ணு” என்றவன், “சரி வா கீழ போகலாம்” என இருவரும் கீழே வந்து விருந்து நடக்கும் இடத்தை மேற்பார்வை இட ஆரம்பித்தார்கள்.
பிரபாகரன் எங்கு போனாலும் தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்த பிறையை கண்டு எரிச்சலுற்றவன்,
“என்னடி பிரச்சனை உனக்கு.. சும்மா என்னையவே முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருக்க.. ஏன் இதுக்கு முன்னாடி என்கிட்டே வாங்கி கட்டுனது எல்லாம் மறந்து போச்சா? ஒன்னு வச்சேன்னு வை.. செவுனி திரும்பிடும்” என்றான் கோவமாக.
“அய்ய... இப்ப யாரு உன்னை பார்த்தா? நீ என்ன பெரிய மன்மத டேஷா... எல்லா பொண்ணுங்களும் மயங்கி உன்னை பார்க்க.. கருவாடு கட்ட மாதிரி இருந்துக்கிட்டு உனக்கு ரொம்ப தான் நினைப்பு” எகிறினாள் அவனிடம்.
“யாருடி கருவாடு கட்ட... உடம்பு விறுவிறுன்னு இருக்கா.. அடி வெளுத்தேன்னு வை.. ஒரு மாசத்துக்கு எழுந்துக்க மாட்ட”
“ஆமாம் நீ அடிக்கிற வரை இந்தா ராசா நீ அடின்னு நான் முதுகை காண்பிச்சுட்டு இருப்பேனாக்கும். நினைப்பு தான்டா உனக்கு” வாயை விட,
அவளின் கையை பிடித்து பின்னால் முறுக்கியவன்,
“என்னடி வாய் ரொம்ப தான் நீளுது... நான் மன்மத டேஷா இல்லையான்னு நீ தான் நான் போற இடமெல்லாம் விளக்கு பிடிச்சியா?”
“கையை விடுடா பொறுக்கி.. எப்போ பாரு என்கிட்டையே உன் வீரத்தை காட்டுற.. முடிஞ்சா எங்க அண்ணனுங்க எங்க இருக்கிறானுங்கன்னு தேடி கண்டு பிடிச்சி அவனுங்களை கருவறு. அதை விட்டுட்டு என்கிட்டே மல்லுக்கு நிக்காத... நீ அடிச்சா நானும் பதிலுக்கு அடிப்பேன்” என்று சொல்லிக் கொண்டே தனக்கு முன்னால் நின்று இருந்தவனின் காலில் ஓங்கி ஒரு உதை விட்டாள் பிறை.
அதை எதிர் பார்க்காதவன் தடுமாறி அவள் மீது விழ, அவனது பாரத்தை தாங்க முடியாமல் இவள் கீழே விழுந்தாள். விழும் பொழுது அவளின் கையை பின்னால் பிடித்து முறுக்கியபடியே அவன் விழுந்து விட, பிறையின் கை எசக்கு பிசக்காக மடங்கி உடைந்துப் போனதில் வலி உயிர் போய் விட்டது.
மூட்டு நழுவியது போல, “ஐயோ அம்மா” என்று கதறி விட்டாள் அந்த அளவுக்கு வலி எடுத்தது உடைந்துப் போன கை.
அவளின் மீது விழுந்தவனின் கை அவளின் முதுக்கு பின் இருக்க, அவனாலும் அவள் மீது இருந்து எழ முடியவில்லை.
“ஷ் கத்தாதடி.. யாராவது வந்துட போறாங்க..” அதட்டினான்.
“டேய் தடியா.. கை உடைஞ்சி போயிடுச்சுடா பின்ன கத்தாம என்ன பண்ண சொல்ற... உன் வன்மத்தை எல்லாம் கொட்டிட்ட இல்ல.. ஐயோ கையை உடைச்சிட்டானே” என்று கத்தினாள்.
“ஏய் கத்ததாடி.. சொல்லிட்டு இருக்கேன்ல”
“அப்படி தான்டா கத்துவேன்.. உன்னால என்ன பண்ண முடியும்..” என்றவள்,
“அய்யோ அம்மா என் கையை உடைச்கிட்டானே... இந்த அரக்கன் கிட்ட இருந்து என்னை யாராவது வந்து காப்பாத்துங்களேன்.. ஐயோ அடிக்கிறானே” என்று மேலும் அவள் கத்த,
பட்டென்று அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான் பிரபாகரன்.
“ஹக்” என்று திகைத்துப் போனாள் பிறை. விக்கித்துப் போய் அசையாமல் அவள் இருக்க, அவளின் இதழ்களை தன் இதழ்களால் அடைத்து விட்டு, அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் போனதை உணர்ந்த பிறகு அவளிடம் இருந்து தன் முகத்தை நகர்த்திக் கொண்டவன்,
“இனி வாய் பேசுன.. இனி இப்படி தான் உன் வாயை அடைப்பேன் பார்த்துக்க.. பொண்ணுன்னா கொஞ்சமாச்சும் அடக்கமா இருடி” என்றவன் அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு கீழே வந்தவன் அவளுக்கு பின்னாடி இருக்கும் தன் கையை எடுத்துக் கொண்டு எழுந்து நின்றவன், கண்கள் கலங்க படுத்து இருந்தவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான்.
அதுவரை எண்ணெயில் போட்ட கடுகாய் வெடித்துக் கொண்டு இருந்தவள், ஒரு முத்தத்தில் அமைதியாகி விட்டவளை கண்டு பெருமூச்சு விட்டான். அவனிடம் அவள் முகத்தை காட்டவே இல்லை. திருப்பியே வைத்துக் கொண்டாள்.
கையில் உள்ள வலியை கூட பொறுத்துக் கொண்டு கொஞ்சமும் சத்தமில்லாமல் கண்கள் கலங்கியவளை காண சற்றே நெஞ்சம் கனத்துப் போனது அவனுக்கு.
பிரபா உனக்கும் காதல் வந்துட்டா????
தயா....ஏதோ பெருசா பண்ற....போதை பொருள் எல்லாம் சொல்றீங்க????
அப்ப நீங்க எல்லாம் நாக்காட்டிஸ்க் டிபார்ட்மெண்ட் ஆ இருப்பீங்கலா?????