Notifications
Clear all

அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

தயாகரனுக்கும் தயாழினிக்கும் இனிதாக திருமணம் நடந்து முடிந்தது. மேற்கொண்டு நடந்த சடங்குகளில் பெரும் கடுப்பு விளைந்தது இருவருக்கும். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க இருவருமே முயன்றார்கள்.

அங்காளி பங்காளி எல்லாம் கறிச்சோறு விருந்து கேட்க, அங்கேயே விருந்தும் தாடாபுடாளாக தயார் ஆனது. அந்த இடைவெளியில் தன் தங்கைகளை கூட்டிக் கொண்டு தனி அறைக்கு வந்தவள்,

“என்ன குறிஞ்சி இது நெற்றியில காயம்?” படபடப்புடன் கேட்டவளின் கைகளை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்ட தங்கைகள் அவளின் தோளில் சாய்ந்து கதற தொடங்கினார்கள்.

“என்னடி ஆச்சு? ஏன் இப்படி அழறீங்க?.. ஐயோ எனக்கு நெஞ்சை பிசையுதே.. சொல்லுங்க ம்மா.. என்ன தான் ஆச்சு உங்களுக்கு.. நீங்க பெங்களூர் போனீங்களா இல்லையா?” என்று விசாரித்தவளிடம் ஒன்று விடாமல் அத்தனையும் சொல்லி விட்டார்கள் சகோதரிகள் இருவரும். தலையில் இடி இறங்கியது போல ஆனது தயாழினிக்கு.

“என்னடி சொல்றீங்க?” வாயை இருக்கையாளும் பொத்திக் கொண்டாள். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. காலையில் விடிந்ததில் இருந்து இதோ இந்த நிமிடம் வரை அவளுக்கு பெரும் அதிர்ச்சியான சம்பவங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது..

“யார் செய்த சதி.. எந்த நொடியில் இந்த நிலை மாறும். ஏதுமறியா எங்களுக்கு ஏன் இந்த நிலை. யாரால் எங்களின் தலையெழுத்தை மாற்றி அமைக்க இயலும்” என்று நெஞ்சு விம்மியது.

“என்ன அக்கா தங்கை மூவரும் மாநாடு போட்டு பேசி முடிச்சாச்சா?” நக்கல் பண்ணிக் கொண்டு உள்ளே நுழைந்தான் தயாகரன்.

“இல்ல அது வந்து” என்று அவள் தடுமாறினாள்.

“என்ன இல்ல வந்து போயின்னு இழுத்துக் கிட்டு இருக்க” என்றவன்,

“போதும் நீ உன் தங்கச்சிக்கிட்ட பேசிட்டு இருந்தது.. முதல்ல என்னை வந்து கவனிடி. சாரி மச்சினிச்சிங்களா உங்களை இன்னொரு நேரம் வந்து பார்க்கிறேன். இப்போ இது என் மனைவிக்கான நேரம்” என்று அவளை கையோடு இழுத்துக் கொண்டு வந்து தன் அறைக்குள் விட்டவன்,

“கெட் ரெடி பார் பாஸ்ட் நைட்” என்றான்..

“ப்ச் நைட் இல்ல.. முதல் பகல்” என்று கூறி கொண்டு அவளின் முந்தானையை பற்றி இழுத்தான். அது அவனது கையோடே போக, பதறிப் போனாள்.

“ஏன் இப்படி பண்றீங்க.. ஒரு ஊரே இங்க தான் இருக்கு.. இப்ப போய் இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்களே... யாராவது நம்மளை தேடினா என்ன பண்றது.. விடுங்க முதல்ல” என்று அவனின் கையில் இருந்த முந்தானையை வாங்க முனைந்தாள். ஆனால் அவனோ அவளின் முந்தானையை குடுக்காமல் முழுவதுமாக சுழற்றி எடுத்தான்.

அதில் மொத்த புடவையும் அவனது கைக்குப் போய் விட்டது.

“அய்யோ விடுங்க” என்று அவள் ஒரு பக்கத்துக்கு தன் புடவையை இழுக்க, அவனோ விடாமல் தன் பக்கம் இழுக்க, அவனின் பலத்துக்கு முன்னாடி அவளால் நிறக் கூட முடியவில்லை. அவன் சுண்டி ஒரே ஒரு இழுவை தான். தயாழினி மொத்தமும் அவன் வெற்று மார்பில் போய் விழுந்தாள்.

விழுந்தவளை வளைத்துப் பிடித்தவன்,

“கல்யாணம் ஆனா இதுவும் சேர்த்துன்னு தெரியாதா மேடம்க்கு” நக்கல் பண்ணினான். அவனை முறைத்துப் பார்த்தவள்,

“என் கிட்ட என்ன சொன்னீங்க.. உன் தங்கச்சியை விடணும்னா உங்க விருப்பம் போல இருக்கணும்னு சொன்னீங்களா இல்லையா? ஆனா நீங்க செஞ்சுவச்ச காரியம் என்ன? இப்படி தான் வாக்கு தவறுவீங்களா?” ஆதங்கத்துடன் கேட்டாள்.

“என் விருப்பம் போல இருக்க சொன்னேன். ஆனா நீ இருந்தியாடி. இதோ இப்ப வரை என்கிட்டே முரண்டு பிடிச்சுக்கிட்டு தான் இருக்க” என்றவன் அவளின் வெற்று தோளில் தன் இதழ்களை புதைத்தான்.

அவனது மீசை முடி அவளின் தோளில் உரச, கடுப்பாய் வந்தது.

“முதல்ல இப்படி முத்தம் குடுக்கிறதை நிறுத்துங்க.. நான் வேணும்னா முதல்ல என் குடும்பத்தை விடுங்க.. அதென்ன அண்ணன் தம்பி மூணு பேரும் எங்களை பாகம் பிரிச்சு வச்ச மாதிரி பிரிச்சு வச்சுக்கிட்டு இருக்கீங்க” பொறுமினாள்.

“ஏன் அதுல உனக்கென்ன வந்துச்சு... ஒரே ஆளே உங்க மூணு பேரையும் வச்சுக்கிட்டா தான்டி தப்பு.. உனக்கு விருப்பம்னா சொல்லு.. உன்னோட சேர்த்து உன் தங்கச்சிங்க ரெண்டு பேரையும் நானே வச்சுக்குறேன். எனக்கு நோ ப்ராப்ளம்” தோளை குலுக்கினான்.

“ஓ.. உங்க ஒராளுக்கு நான் ஒருத்தி பத்தாதா.. என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் வேணுமாக்கும்.. இங்க வந்த நாள் முதல்லா வெறும் பூச்சாண்டி மட்டும் தான் காட்டிக்கிட்டு இருக்கீங்க.. பெர்மான்ஸ் ஒன்னத்தையும் காணோம். இதுல என் தங்கச்சிங்க வந்தா மட்டும் அப்படியே எல்லாம் நடந்திடும்.. எழுந்து நிக்கவே இங்க ஒருத்தனுக்கு வக்கு இல்லையாம் இதுல ஆயிரெத்தெட்டு பொண்டாட்டி கேட்குதாக்கும்” என்றவளின் இடை அவனது முரட்டு கரத்தால் நசுங்கிப் போனது.

“ம்ம்மா” என்று அலறினாள்.

“என்னடி வாய் ரொம்ப பேசுற? இவ்வளவு நாள் வாயை பொத்திட்டு இருந்த.. இப்ப யார் குடுத்த தைரியத்துல நீ இப்படி எல்லாம் ஆடிக்கிட்டு இருக்க” கண்கள் சுருக்கி அவளை முறைத்துப் பார்த்தான்.

“எல்லாம் உங்க அம்மா இருக்கிற தைரியம் தான். அதை விட இதோ என் கழுத்துல நீங்க கட்டுன இந்த தாலி குடுத்த தைரியம் தான்” என்றாள் அவன் கட்டுன தாலியை எடுத்து மேலே போட்டாள். அந்த தாலியோடு சேர்த்து அவளையும் முறைத்தவன்,

“இதை கழட்டி எரிய ஒரு நிமிடம் ஆகாதுடி” என்றான் கடுப்பாக.

“உண்மையான ஆம்பளையா இருந்தா எங்க அதை செஞ்சு பாருங்க” சவால் விட்டாள்.

“என்னடி செய்ய மாட்டேன்னு நினைச்சியா? நான் நினைச்சா இந்த நிமிடமே இந்த தாலியை கழட்டி வீசிட்டு போயிட்டே இருப்பேன். என்னை வேலி போட்டு கட்டி வைக்க எதாலும் முடியாது. எந்த கொம்பனாலும் முடியாது” என்றான் திமிராக.

அவனது திமிரில் இருக்கும் உண்மையை கண்டு கொஞ்சமே கொஞ்சம் பயம் வந்தாலும் பொன்மாரி வந்த பிறகு தன் தலை எழுத்து மாறிப் போனதை உணர்ந்துக் கொண்டவள்,

“எங்க உங்க அம்மா முன்னாடி என் கழுத்துல இருக்கிற தாலியை கழட்டுங்க பார்க்கிறேன். அப்போ ஒத்துக்குறேன் நீங்க ஆம்பளைன்னு” என்று அவனை மேலும் சீண்டி விட்டாள்.

அவளை ஏளனமாக பார்த்தவன்,

“கழட்ட மாட்டேன்னு நினைக்கிறியா? அதுக்கும் ஒரு நேரம் வரும். அப்போ கழட்டி காட்டுறேன்டி” என்று சொன்னவன் அவனை பித்தம் கொள்ள வைக்கும் அவளின் இதழ்களை வன்மையாக சிறை எடுத்தான்.

அவளின் இதழ்களை தீண்டும் பொழுது எல்லாம் தாக்கும் மின்சாரம் இதோ இப்பொழுதும் அவனை முழுமையாக தீண்டியது.

ஆழ்ந்து முழுமையாக அவளை முத்தம் இட்டான். பெண்ணவள் தன் எதிர்ப்பை காட்ட, ஆணவனோ அவளின் எதிர்ப்பை மிக சுலபமாக அடக்கியவன் இதழ்களில் முத்துக் குளித்தான்.

அவனது தொடுகையும் இதழ் முத்தமும் அவளை கொஞ்சமும் நெகிழவைக்கவே இல்லை. அவளின் தேகம் இறுகிப் போவதை உணர்ந்தவன், மென்மையான அவளின் இடையை இறுக்கிப் பிடித்து தன் கோவத்தை காட்டியவன், அவளின் மேல் உடைகளை கலைக்க பார்க்க,

வெளியே கதவு தட்டப்பட்டது.

“டேய் பெரியவனே...” என்று பொன்மாரியின் குரல் தான் கேட்டது.

“எப்படி தான் காக்காய்க்கு மூக்கு வேர்க்குமோ தெரியல” என்று முணுமுணுத்தவன்,

“கொஞ்சம் வேலையா இருக்கேன்.. வர லேட்டாகும் நீ போ” என்றான்.

“நீ வேலையை பாரு.. என் மருமவள எதுக்கு உள்ள வச்சு இருக்க. அவளை வெளியே அனுப்பு. நான் போறேன்” என்றார்.

“ஏதே அவளை வெளியே அனுப்பிட்டு வேலையை பார்க்கவா?” பல்லைக் கடித்தவன்,

“அவக்கூட தான் எனக்கு வேலையே” என்றான்.

“நீ இப்படி உங்கப்பன் மாதிரி நேரம் காலம் தெரியாம பாயுவன்னு தான்டா நான் வந்தேன். ஒழுங்கா மருமவள வெளியே அனுப்பி வை. இல்ல வந்த சொந்த பந்தம் முன்னாடி உன் மானத்தை வாங்கிப் புடுவேன் பார்த்துக்க” மிரட்டினார்.

“உன் மகனை திட்டுடி அதுக்கு எதுக்கு என்னை இழுக்குற...” சிவலிங்கம் அப்பாவியாய் கேட்டு வைத்தார்.

“பின்ன உம்மை இழுக்காம வேற யாரை இழுக்க சொல்ற.. எனக்கு வாய்ச்ச ஒரே அடிமை நீர் மட்டும் தான். நீர் தானே அவனை இப்படி அடங்காம பெத்துப் போட்டது” என்று கணவனிடம் எகிறினார்.

“அடியேய்.. என்னவோ  உனக்கு சம்மந்தமே இல்லாத மாதிரி பேசுற?”

“ம்கும்..” என்று நொடித்துக் கொண்ட பொன்மாரி,

“டேய் பெரியவனே.. கதவை திற. மருமவளை வெளியே விடு.. வந்த சொந்த பந்தங்க எல்லாம் மருமவளை பார்க்கணும்னு கேக்குறாங்க” என்று கதவை போட்டு உடைத்தார்.

“நீ என்ன வேணா பண்ணிக்க இப்போதைக்கு அவளை அனுப்ப மாட்டேன்” என்றான் பிடிவாதமாக.

“எனக்கென்ன போச்சு.. போறது உன் மானம் தான்” என்றவர்,

“யக்கா தேனு...” என்று கூக்குரல் போட்டார். தேனு என்னும் முதிய பெண் தன் மருமகள், மகள் என மூவரோடு மேலே வந்தார்.

“என்னடி எனக்கே மூட்டு வலின்னு இருக்கேன். இதுல நீ வேற மாடிப்படி ஏற வைக்கிற?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் அவர்.

“அட உனக்கு மூட்டு வலி தான் பெருசா போச்சா.. நான் சொல்ற கதையை கேளு.. எங்காயாவது இந்த கூத்து நடக்குமா? என் வேதனையை சொல்லி அழ எனக்கு உன்னை விட்டா வேற யாரு இருக்கா..” என்று முந்தானையை இழுத்து மூக்கை உரிய ஆரம்பித்தார்.

சிவலிங்கம் வாயை பொத்திக் கொண்டு ஆஆ வென்று தன் மனைவியை பார்த்தார். பொன்மாரியின் லீலைகள் எல்லாம் அத்துபடி தான் என்றாலும் அவர் வித விதமாக ஏதவாது செய்யும் பொழுது இப்படி தான் புதிதாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டு இருப்பார்.

“அப்படி என்னடி உனக்கு வேதனை. நீ தான் முத்து மாதிரி உருத்தான மூணு ஆம்பளை பிள்ளையை பெத்து போட்டு வச்சு இருக்கியே.. உனக்கு என்ன வேதனை வரப்போவுது..” என்று அவர் கேட்க,

“கிழவிக்கு குசும்பை பார்த்தியா.. எப்பவும் என் மகனுங்க மேலையே கண்ணா இருப்பா போல” மனதுக்குள் தேனுவை திட்டி தீர்த்த பொன்மாரி,

“முத்து மாதிரின்னு நீ தான் மெச்சிக்கணும். ஆனா என் பொழப்பு சிரிப்பா சிரிக்கிது.. காலையில கழுத்துல கட்டுன மஞ்சள் ஈரம் கூட உளறல... அந்த தாலியை கட்ட சொல்லி நானும் என் புருசனும் என் மவன் கையில கால்ல விழுந்து தாலியை கட்டுடான்னு கெஞ்சுனோம்.. அப்போ முறுக்கிக்கிட்டு போனான். நான் கட்ட மாட்டேன்னு. ஆனா இப்போ என் மருமவளை கொஞ்ச நேரம் கூட விடாம பகல் பொழுதுன்னு கூட பார்க்காம..” என்ற நேரமே பட்டென்று கதவு திறக்கப்பட்டது.

எதிரில் தயாகரன் தான் வேட்டி சட்டையில் மிடுக்காக நின்று இருந்தான்.

அவனது பார்வையில் இருந்த அனலை கண்டு,

“ஏன்டி தேனு நான் தான் கூப்பிட்டன்னா நீயும் உடனே கதை கேட்க வந்துடுவியா? பெரிய மனுசி மாதிரி நீ எப்போ தான் நடந்துக்க போற, உன் மகனுக்கு கல்யாணம் பண்ணி மருமவளையும் பார்த்துட்ட.. இன்னும் அடுத்த வீட்டு சங்கதி கேட்க ஏன்டி இப்படி பறவா பறக்குற... போ போயி கீழே கறி குழம்புக்கு மசாலா அரைக்கிற வேலையை பாரு.. வந்துட்டா இப்ப தான் அடுத்த வீட்டு கதையை கேட்க..” என்று தேனுவை திட்டி விட்டு, தன் கணவனை அம்போன்னு விட்டுட்டு,

“எம்மாடி மருமவளே..” என்று தன் மகனை இடித்து தள்ளி விட்டு அறைக்குள் நுழைந்துவிட்டார் பொன்மாரி.

Loading spinner
Quote
Topic starter Posted : July 22, 2025 6:40 pm
(@gowri)
Estimable Member

🤣🤣🤣🤣செம்ம மம்மி டா தயா உனக்கு😂😂😂

லிங்கம் தான் பாவமா இருக்கார்.....

அவனை சீண்டி விடற...இது உனக்கு நல்லதுக்கே இல்ல யாழி....

Loading spinner
ReplyQuote
Posted : July 22, 2025 11:16 pm
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @gowri

🤣🤣🤣🤣செம்ம மம்மி டா தயா உனக்கு😂😂😂

லிங்கம் தான் பாவமா இருக்கார்.....

அவனை சீண்டி விடற...இது உனக்கு நல்லதுக்கே இல்ல யாழி....

லிங்கம் ஒரு அப்பாவி..

பொன்மாரி 🤣 🤣 

யாழி பாவம் தான்.

 

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 23, 2025 11:06 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top