தன் கண்கள் காட்டிய காட்சியை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் தயாகரன். தூக்கம் சொக்கிக்கொண்டு வந்தது தயாழினிக்கு. ஆனால் கண்களை மூடாமல் மல்லுக் கட்டிக் கொண்டு, கொசுக்கடியிலும் மழையிலும், சின்ன சின்ன பூச்சிகளின் அரவத்திலும் இருந்தவளை அந்த மெல்லிய வெளிச்சத்தின் ஊடாக கவனித்துக் கொண்டு இருந்தான்.
அந்த நேரம் அவனின் போன் இசைத்தது.
காதில் வைத்தவன், “ம்ம்” என்றான்.
“நெத்தியில அடி பட்டு மயங்கிட்டா அண்ணா” என்றான் குணாதரன்.
“எவ்வளவு நேரம் மயக்கமா இருக்கான்னு பார்த்துக்க” என்று சொன்னவன், இன்னும் சில இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்தான்.
“அண்ணா இதெல்லாம் சரியா வருமா?” தயக்கத்துடன் கேட்டான்.
“போலீஸ் மாதிரி பேசுடா” வார்த்தையை கடித்து துப்பினான்.
“இல்லண்ணா” என்றவனின் சுருதி குறைந்துப் போனது.
“குணா” அழுத்தமாக அழைத்தான் தயாகரன்.
“சொல்லுங்க அண்ணா” மனதையும் உடலையும் அண்ணனுக்காக வளைத்து நின்றான். தயாகரன் சொன்ன விசயத்தை எல்லாம் பிசிறு தட்டாமல் அப்படியே மனதில் இருத்திக் கொண்டான்.
“கவனம் குணா.. நாளைக்கு நேர்ல வா.. கொஞ்சம் பேசணும்” எச்சரித்தவன் வைத்து விட்டான்.
அதிகாலை வரை உறங்காமல் விழிகள் இரண்டும் சிவந்து போய் இருந்தது தயாழினிக்கு. கொசுக்கடி, சின்ன சின்ன பூச்சிகளின் அச்சுறுத்தல், மழை, பனி, நெற்றிவலி, மனவலி என பலவற்றாலும் மனதளவில் பெரிய பாதிப்பை கொண்டு இருந்தாலும் தன் நிலையில் இருந்து நகராமல் உறுதியுடன் நின்று இருந்தவளை பார்த்த தயாகரன் விடியற்காலையில் அவளை வீட்டுக்குள் அழைத்தான்.
“உள்ள வா” என்றான்.
ஆனால் அவளால் சட்டென்று எழ முடியவில்லை. இரவு முழுவதும் குறுகியே அமர்ந்து இருந்ததால் கால்கள் எல்லாம் மறுத்துப் போய் விட்டு இருந்தன.. அசையவே முடியவில்லை.
உள்ளே வர சொல்லியும் வராமல் அப்படியே அமர்ந்து இருந்தவளை கண்ணுற்றுப் பார்த்தவன், சட்டென்று அவளை கைகளில் ஏந்திக் கொண்டான். அவன் அப்படி தூக்குவான் என்று எதிர்பாராத தயாழினி திகைத்துப் போனாள்.
விழிகள் அதிர்ந்து அவனது முகத்தை பார்க்க, அவனோ அவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஏதோ பிள்ளையை தூக்குவது போல தூக்கிக்கொண்டு சென்றான்.
அவளால் தடுக்க முடியவில்லை. தடுத்தாலும் கேட்பானா அவன். அதனால் அமைதியாக இருந்துக் கொண்டாள். அவளை படுக்கையில் கொண்டு வந்து போட்டுவிட்டு அவன் பாட்டுக்க வெளியே போய் விட்டான்.
தன் அறைக்கு செல்வான் என்று எண்ணி இருக்க, அவளை அவனின் அறையில் விட்டு சென்று இருந்தான். ‘இப்போ நான் எழுந்து என்னோட அறைக்கு போகணுமா?’ அலுப்பாக இருந்தது.
கண்களை சுழட்டிக் கொண்டு தூக்கம் வர, எதையும் நினைக்காமல் அப்படியே தூங்க ஆரம்பித்து விட்டாள். இரவு நெடுநேரம் வரை கண் மூடாததால் இந்த அதிகாலை பொழுதில் தூக்கம் அப்படி வந்தது.
தன் கவலைகளை எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு ஒத்தி வைத்தவள் அடித்து போட்டது போல அந்த தூக்கம் தூங்க ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட இந்த வீட்டுக்கு அவளை கடத்தி வந்த பிறகு அவளுக்கு தூக்கம் என்பதே இல்லாமல் தான் போனது. எந்த நேரம் என்ன நடக்குமோ என்று பயந்துக் கொண்டே இருந்தாள். அதோடு இந்த பொல்லாதவனிடம் இருந்து நேரம் கேட்ட நேரத்தில் வரும் அழைப்புகள், அவனது தொடுகைகள், அவன் ஏவும் வேலைகள் என எல்லாமே அவளை ஒரு சுழற்று சுழற்றி இருந்த காரணத்தால் உடலும் மனமும் அழுத்துப் போய் இருந்தது.
அதன் விளைவாகவே இந்த தூக்கம் அவளை ஆட்கொண்டது.
அவளை கட்டிலில் போட்டு விட்டு கீழே வந்தவன், அங்கு வேலைக்கு இருந்த பெண்களிடம் முன்பே அறிவுறுத்தி இருந்தாலும் இப்பொழுதும் மீண்டும் அறிவுறுத்தினான்.
“இங்க இந்த பொண்ணு இருக்கிற விசயம் மட்டும் பொன்மாரிக்கு தெரிஞ்சுடவே கூடாது.. அப்படி மீறி தெரிஞ்சுதுன்னா உங்க யாருடைய தலையும் உங்க உடம்புல இருக்காது” என்று எச்சரித்துவிட்டு தன்னுடைய தனிப்பட்ட இரகசிய அறையில் நுழைந்தான்.
அவன் நுழைந்த சிறிது நேரத்திலே அவனின் தம்பி குணாதரன் வந்து விட்டான். நீண்ட நேரம் எதை பற்றியோ பேசியவர்கள், சிறிது நேரத்தில் அதை பற்றி விவாதித்தார்கள்.
“அண்ணா இது ரொம்ப ரிஸ்க்” என்றான் தம்பி.
“ஐ நோ.. பட் இதை செஞ்சு தான் ஆகணும் குணா..” என்றவனின் குரலில் அளவுக்கு அதிகமாக உறுதி இருந்தது.
“சரி நீ டியூட்டிக்கு கிளம்பு.. அந்த அக்கவுன்ட் ட்ரான்செக்ஷேன் டீட்டையில பிரபாகரனுக்கு அனுப்பி விட்டு செக் பண்ண சொல்லு.. ஒரு ட்ரான்செக்ஷேன் கூட மிஸ் ஆகி இருக்க கூடாது. கேர்புல்லா செக் பண்ண சொல்லு. பொன்மாரி கிராமத்துல தானே இருக்கு. அதுக்கு இங்க நடக்குற எந்த விசயமும் தெரியக் கூடாது. பீ கேர்புல்” எச்சரித்தான்..
“சரிண்ணா” என்றவனிடம் மெல்லிய தடுமாற்றம்.
“சொன்னதை சரியா செய் குணா. இது எவ்வளவு பெரிய விசயம்னு உனக்கே நல்லா தெரியும். பெண் மேல உள்ள மோகத்துல கோட்டை விட்டுடாத” என்றான் அழுத்தமாய்.
“அண்ணா” என்றான் அதிர்ந்து.
“உனக்கு ஒன்னும் அவ்வளவு வயசு ஆகிடல.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்க தான் செய்யும்” என்றான் நக்கலாக. அண்ணன் தன்னை நக்கல் பண்ணவும்,
“எனக்கு என் கடமை தான் அண்ணா முக்கியம்” என்று சொல்லிவிட்டு அண்ணன் குடுத்த பொருள்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விட்டான்.
அவன் போன பிறகு மேசையில் இருக்கும் பொருள்களை ஒரு பார்வை பார்த்த தயாகரன் எல்லவாற்றையும் பத்திரமாக எடுத்து வைத்து விட்டு தயாழினி உறங்கும் அவனது அறைக்கு வந்தான்.
தூங்கிக் கொண்டு இருப்பவளை ஒரு பார்வை பார்த்தவன், சில வேலைகளை பார்க்க தொடங்கினான் தன் லேப்டாப்பில். பின் அதை எல்லாம் முடித்து விட்டு அவளின் அருகில் வந்து படுத்தவன், அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவளை முத்தமிடம் போதெல்லாம் தன்னை தாக்கும் மின்சார உணர்வுகளை எண்ணியவனுக்கு அவளின் இதழ்களின் முத்தம் இப்பொழுதே வேண்டும் என தோன்ற, எதையும் யோசிக்காமல் அவளின் மீது கவிழ்ந்து விட்டான்.
தூங்குகிறாளே என்றெல்லாம் இரக்கம் பார்க்காமல் அவளின் மீது பரவி படர்ந்தவன் அவனை பித்தம் கொள்ள வைக்கும் அவளின் இதழ்களை தனக்குள் எடுத்துக் கொண்டான்.
மிக மிருதுவாக இருந்த அவளின் இதழ்களை வன்மையாக கவ்விக் கொண்டவன் அவளின் இதழ்களை இடை விடாமல் சுவைக்க ஆரம்பித்தான். அவளின் இதழ்களில் இருந்த மயக்கம் அவனுக்கு அதிகமாகிக் கொண்டே போனது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு மூச்சை அடைக்கும் உணர்வு ஏற்பட்டது. அதின் விட தன்னை யாரோ அத்துமீறி தொடுவது போல இருக்க, மிகவும் கடினப்பட்டு விழிகளை திறந்தாள். எதிரில் தயாகரனின் முகம் தெரிந்தது.
அவனை தள்ளி விட முடியாத அளவுக்கு அவளின் பலம் இருக்க மீண்டும் தூக்கத்துக்கு சென்று விட்டாள். ஆனால் அவளின் உடல் அவனுக்கு பதில் கொடுத்தது. இறுக்கமான அவளின் உடல் நெகிழ்ந்துப் போனது. பெண்ணவளின் இதழ்கள் கூட தூக்கத்திலே அவனுக்கு வாகு செய்துக் கொடுக்க, தலையை தூக்கிப் பார்த்தான்.
அவளின் விழிகள் மூடி தான் இருந்தது. ஆனாலும் தூக்கத்திலே அவனுக்கு பதில் கொடுப்பதை பார்த்தவனுக்கு மின்சாரம் அதிக அளவு பாய்ந்தது. அதுவும் அவளே அவனுக்கு முத்தம் கொடுக்க அவனுக்குள் அதிக அளவு மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அந்த உணர்வை முழுமையாக அனுபவித்தவன் மீண்டும் மீண்டும் வேணும் என்று அவளின் இதழ்களிலே குடியிருக்க ஆரம்பித்தான்.
பெண்ணவளின் இதழ்களின் மயக்கத்திலே மூழ்கி இருந்தவனுக்கு அவளின் சரிவான கழுத்துப் பகுதி மோகத்தை கூட்ட, தன் முகத்தை அவளின் கழுத்தில் அழுத்தமாக புதைத்தான்.
அவனது மீசை முடி அவளின் கழுத்தை குத்தி கிழிக்க, தன் கழுத்தோடு அவனை இறுக்கிக் கொண்டாள் தயாழினி. அவளின் ஒத்துழைப்பில் முழுமையாக கிறங்கிப் போனவன் அவளின் மாராப்பை எடுத்து கீழே போட்டு விட்டு அவளின் வளமையான மார்பில் முகம் புதைத்துக் கொண்டான்.
அவளின் வாசம் அவனுக்கு இன்னும் மோகத்தை கொடுக்க, அவளின் இடையை இரண்டு பக்கத்தாலும் பிடித்து இருக்கியவன் அவளின் நெஞ்சிலே படுத்துக் கொண்டான்.
அடுத்த நிமிடமே அவனுக்கும் தூக்கம் சொக்க, அவளின் மீதே படுத்துக் கொண்டான் தாயின் மார்பில் தலை வைத்து தூங்கும் சிறுவனாய்.
இருவரும் அப்படி ஒரு தூக்கம். மெல்ல துயில் கலைந்தவள் தன் நெஞ்சில் பாரத்தை உணர, குனிந்துப் பார்த்தாள். தன் மார்பில் முகத்தை வைத்து படுத்து இருந்தான்.
கோவம் உச்சிக்கு ஏறியது. நேற்றைக்கு அவன் படுத்திய பாட்டை எண்ணி மனம் இறுகிப் போனது. நெற்றி காயம் இன்னும் வலித்தது. பச்சை இரணமாக காயாமல் அப்படியே இருந்தது. ஐயோ பாவம் என்று ஒரு வைத்தியம் கூட அவன் செய்து இருக்கவில்லை.
மனசாட்சி இல்லாமல் இருக்கும் அரக்கனை தன் மேல் தாங்கி இருப்பது உயிரோடு நெருப்பில் குதித்தது போல இருந்தது.
“ச்சீ” என்று அருவெறுத்துப் போனாள் தயாழினி. தன் மீதிருந்து அவனை தள்ளி விடப் பார்த்தாள். ஆனால் அவனை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை.
“பாவி என்னையும் என் குடும்பத்தையும் இப்படி சித்ரவதை செய்யிறானே.. இவன் எல்லாம் நல்லாவா இருப்பான்.. யார் யாருக்கோ கேடு வருகிறது.. இவனுக்கு ஒரு கேடு வர மாட்டேங்குதே..” புலம்பியவளின் இதழ்கள் வலி எடுக்க, தொட்டு தடவிப் பார்த்தாள்.
அவனின் பற்கள் படுத்திய பாட்டில் அவளின் இதழ்களில் காயம் ஏற்பட்டு இருந்தது. போதாதற்கு எரிச்சல் வேறு இருந்தது.
“ஐயோ தூங்குனா கூட விடாம கற்பழிப்பான் போலையே..” கடுப்படிக்க,
“ஆமான்டி உன்ன ரேப் பண்ணாம விட்டேன் பாரு... அது என் தப்பு தான்” என்றவன் அவளின் மேல் உடையை கலைக்க ஆரம்பிக்க, பதறிப் போனாள்.
“ஐயோ சார் தெரியாம சொல்லிட்டேன்.. இப்படி பண்ணாதீங்க.. ப்ளீஸ்” என்று அவனை நேற்று மாதிரியே குரங்கு கையில் பூமாலையாக்கினாள்.
ஜெல் வைத்து படிய வாரிய அவனின் தலை முடியை பிடித்து இழுத்து, அவனின் தோளில் அடித்து சிவக்க வைத்து, அவனின் முகத்தை பிராண்டி விட்டு என அவனை படாத பாடு படுத்தினாள் பெண்ணவள்.
அத்தனையையும் பொறுத்துக் கொண்டவன், ஒரே ஒரு லிப்லாக் தான். கப்சிப் என்று அமைதியாகி விட்டாள் தயாழினி.
“இன்னொரு முறை இப்படி புராண்டி வச்ச.. அடுத்த ஸ்டேப் ரேப் தான்டி” பல்லைக் கடித்து துப்பியவன், அவளின் மேல் இருந்து எழுந்துக் கொண்டான்.
அவனது மிரட்டலில் சுணங்கிப் போனவள் எழுந்து தன் அறைக்குள் போய் அடைந்துக் கொண்டாள். ஆனால் அடுத்த நாள் காலையில் அந்த பெரிய வீடே அதிர பொன்மாரி சத்தம் குடுத்துக் கொண்டு இருந்தார்.
அவரின் சத்தம் கேட்டு சலிப்புடன் வெளியே வந்தான் தயாகரன்.
“போச்சு தலைவலி வந்தாச்சு” முணகியவன், சத்தம் கேட்டு வெளியே வந்த தயாழினியை முறைத்துப் பார்த்தான். அவனது பார்வையில் திருட்டு முழி முழித்தாள் அவள்.
பொன்மாரி அவன் அப்பா வா இல்லைனா அம்மாவா????
தயா.....பொறுக்கி போல தெரியலையே.....அவன் வேற ஏதோ பிளான் லா இருக்கான் போலவே?????
அவ அண்ணன்கள் ஏதும் பெரிய கிரைம் பண்ணி இருக்காங்களா என்ன????
பொன்மாரி அவன் அப்பா வா இல்லைனா அம்மாவா????
தயா.....பொறுக்கி போல தெரியலையே.....அவன் வேற ஏதோ பிளான் லா இருக்கான் போலவே?????
அவ அண்ணன்கள் ஏதும் பெரிய கிரைம் பண்ணி இருக்காங்களா என்ன????
பொன்மாரி அம்மா
அவனோட கேரக்டர் இன்னும் முழுசா சொல்லல டா.. இனி தான் தெரிய வரும்.
அவ அண்ணன்களை பத்தி போக போக தெரியும் 🤩 😍