தலைவன் - பஞ்சவன்
தலைவி - மகரா
யுவன் சுடு தண்ணி வைக்க அடுப்படிக்கு ஓடினான். அதென்னவோ அந்த பிள்ளை மீது அவனுக்கு அப்படி ஒரு பாசம். இருக்காதா பின்ன உயிர் நண்பனின் பிள்ளையன்றோ அவள்.
பால் கலக்கி எடுத்துக் கொண்டு வந்தவன் பஞ்சவனிடம் கொடுக்க அதை பதம் பார்த்து பிள்ளைக்கு கொடுத்தான்.
பஞ்சவன் பிள்ளைக்கு பால் கொடுக்க “நான் போய் நமக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன்டா” என்று வெளியே போனான் யுவன்.
அவன் போனதுக்கு பிறகு கொண்டு வந்த தொட்டிலை செட் செய்தவன் அதில் விரிப்பு விரித்து விட்டு குழந்தையை படுக்க வைத்து லேசாக ஆட்டி விட்டான். கொஞ்ச நேரம் விழித்துக் கொண்டு இருந்தவள் தந்தையின் ஆலாபனையில் தூங்கிப்போனாள் குட்டி இளவரசி.
குழந்தை தூங்குவதை பார்த்து பெருமூச்சு விட்டவன் பிள்ளைக்கு தாய் பால் கிடைக்குமா என்று நெட்டில் சேர்ச் செய்து பார்த்தான்.
அதில் அவனது அப்பார்ட்மெண்டிலே லொகேஷன் காண்பிக்க எந்த வீடு என்று பார்த்தான்.
அவனுக்கு பக்கத்து பிளாட் தான்... இவன் டி, அந்த வீடு பி.
“பரவாயில்லையே...” என்று வியந்தவன் அதில் கொடுத்து இருந்த நம்பருக்கு போன் செய்தான் டீட்டையில் கேட்க.
“ஹலோ” அந்த பக்கம் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
“யாரு சொல்லுங்க” என்று மேலும் அந்த குரல் கேட்க,
“ஐ ஆம் பஞ்சவன்.. எனக்கு ஒரு பெண் குழந்தை. அம்மா இல்ல... சோ என் பேபிக்கு மதர் பீடிங் வேணும்” என்றான் தன் தயக்கத்தை உதறி.
“நோ ப்ராப்ளம்.. மார்னிங் ஒரு நேரம், ஈவினிங் ஒரு டைம் வந்து கலெக்ட் பண்ணிக்கோங்க. வரும் பொழுது கண்ணாடி பாட்டில் மஸ்ட். பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துட்டு வந்தா நான் அக்சப்ட் பண்ண மாட்டேன்” என்று காரராக சொன்னாள்.
அதில் பஞ்சவனுக்கு கொஞ்சம் சுர்ரென்று ஏறியது.. ஆனாலும் அவள் சொன்ன நல்லது புரிய “ஓகே... பட் இன்னைக்கு முடியாது.. நாளையில இருந்து வாங்கிட்டு வரேன்” என்றான்.
“நோ ப்ராப்ளம் என்கிட்டே அடிஷ்னலுக்கு வச்சு இருப்பேன். அதுல குடுக்குறேன்” என்றவள்,
“நீங்க எப்போ வருவீங்க?” என்று கேட்டாள்.
“நா... நான்” என்று ஒரு கணம் தடுமாறியவன்,
“இங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற வீடு தான்” என்றான்.
“ஓ...! அடுத்த பிள்டிங்கா” என்று கேட்டாள்.
“இல்ல உங்க பிளாட்டுக்கு பக்கத்துல இருக்கிற டி பிளாட்” என்றான்.
அதில் ஒரு கணம் அந்த பக்கம் மௌனம் நிலவியது.
“தட்ஸ் ஓகே...” என்றாள்.
“இப்போ தான் பேபி தூங்குனா. அவ எழுந்துக்க இன்னும் ஒன்னவர் ஆகும்... சோ நான் ஒரு ஹபனவர் கழிச்சு வரேன்” என்றான்.
“ம்ம்” என்று வைத்து விட்டாள். என்னவோ அந்த பெண்ணிடம் இயல்பாக பேச முடியவில்லை அவனால். இவ்வளவு அருகில் அவன் எதிர்பார்க்காதது ஒரு காரணமாக இருந்தாலும் ஏதோ ஒரு தடுப்பு இருக்கிறது என்று அப்பொழுதே உணர்ந்தான்.
பெருமூச்சு விட்டவன் தன் பிள்ளையை ஒரு பார்வை பார்த்தான். அவனது நீண்ட விரல்கள் அவளது தலையை மெல்ல கோதி விட்டது. “நீ தான் தங்கம் என்னோட ஆதாரமே...” என்று குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
அதற்குள் யுவன் வந்து விட இருவரும் உண்டு விட்டு எழ “பக்கத்து வீடு வரைக்கும் போயிட்டு வரேன்டா” என்று சொல்லி விட்டு இயல்பான தோற்றத்துடன் பக்கத்துக்கு வீட்டு கதவை தட்டினான்.
கொஞ்ச நேரம் கழித்தே கதவு திறக்கப்பட்டது. அதிலே அவனது முகத்தில் ஒரு ஒவ்வாமை எழுந்தது. ஆனால் தன் பிள்ளையின் ஆரோக்கியத்துக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான்.
படித்து விட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே.. நன்றி