பனி பொழியும் சுவிட்சர்லாந்தில் மிக பிரபலமான விடுதியில் முன் பதிவு செய்து இருந்தான் உத்தமன். நியூ கப்பில் என்பதால் கொஞ்சம் சிறப்பான ஏற்பாடும் செய்துக் கொடுத்தார்கள். அதே போல அதிக கெடுபிடிகளும் இல்லாமல் இருந்தது. இல்லை என்றால் அதுவே கொஞ்சம் சலிப்பையும் கொடுத்து இருக்கும் புதிய தம்பதியர்களுக்கு.
வந்த முதல் நாள் ஓய்விலே கழிந்தது. எடுத்து வந்த ஷால் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை உமைக்கு. உத்தமன் தான் கைவரிசை காட்டி இருப்பான் என்று அறிந்த்வளுக்கு நாணம் தான் வந்து தொலைந்தது.
அறையில் இருக்கிற வரை அவனை நீங்கவே விடவில்லை அவளை. போர்வைக்குள்ளே குடித்தனம் நடத்தினான். சோர்ந்து விழுந்தவளை தன்னில் தாங்கிக் கொண்டான் என்றாலும் அவனுக்கு வேண்டியதை அவளிடம் பெற்றுக் கொண்டான்.
“காரியவாதி ப்பா நீங்க...” என்று பொறுமினாள்.
“போடி... இது கூட இல்லன்னா ஹனிமூன் வந்தது எதுக்காம்..” என்று அவளை கொண்டாடி தீர்த்தான்.
“உண்மையாவே ஒரு மாதம் இங்க தானாங்க...” அவனை நம்பாமல் கேட்டாள்.
“ஏன் உனக்கு பிடிக்கலையாடி...?” முறைத்தான்.
“ப்ச்.. உடனே முறைக்காதீங்க... நான் அதுக்கு ஒண்ணும் கேட்கல.. பட்ஜெட் தாங்குமா...” என்றாள்.
“அதெல்லாம் தாங்கும் தாங்கும்... அதோட இங்க ஒரு சைட் விசிட் இருக்கு. அதை செக் பண்ணிட்டு நம்ம வேலையை பார்க்கலாம்” என்று கண்ணடித்தான்.
“அடப்பாவி அப்போ இது ஹனிமூன் ட்ரிப் இல்லையா?” முறைத்தாள்.
“ப்ச்... நண்பன் ஒருவன் போக வேண்டியது... அவன் கிட்ட இருந்து அடிச்சி பிடிச்சு இந்த ட்ரிப்பை வாங்கிட்டேன்” என்று கண்ணடித்தான்.
“அச்சோ.. பாவங்க அவங்க”
“ம்கும்... அவனுக்கு கல்யாணம் ஆகி பத்து வருசம் ஆயி போச்சு. இனி அவன் ட்ரிப் போனா என்ன போகலன்னா தான் என்ன... அதை விடுடி...” என்று அவளை தனக்குள் இழுத்துக் கொண்டான்.
“ஆனாலும் சரியான கேடிங்க நீங்க... ஒத்த பைசா செலவு இல்லாம அத்தனை பேரோட வயித்தெரிச்சலையும் கொட்டிக்கிட்டீங்க” சிரித்தாள்.
“பின்ன எதுக்கெடுத்தாலும் நொச்சு நொச்சுன்னுகிட்டே இருந்தா என்ன தான் பண்றது.. இவங்களுக்கு கல்யாணம் வச்சப்ப எல்லாம் கையோட ஹனிமூனுக்கு அனுப்பி வச்சேன்ல. அப்புறம் ஏன் என்னை மட்டும் வாழ விடாம எதுக்கு எடுத்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க. அது தான் காண்டாகுதுடி.” என்றான் சிடுசிடுப்பாக.
“சரி சரி அதை விடுங்க. டென்சன் ஆகாதீங்க.. ஆமா எனக்கு ஏதோ ட்ரெஸ் எடுத்துட்டு வந்தேன்னு சொன்னீங்களே எங்க காண்பிங்க...” என்று அவனது சிந்தனையை மாற்றினாள்.
அதன் பிறகு உத்தமனை கையில் பிடிக்க முடியுமா என்ன...? அவிழ்த்து விட்ட காளையாய் சீறிப் பாய்ந்தான். பெண்ணவளை சிறுக சிறுக சிதைத்து, அவளின் அகத்தை கொள்ளை கொய்து தனக்குள் சுருட்டிக் கொண்டான். அவனது அகச்சிறையிலும் கைச்சிறையிலும் விரும்பியே கட்டுண்டு இருந்தாள் உமையவள்.
நேரம் காலமின்றி அவர்களின் தாம்பத்தியம் செல்ல, கையேடு சில பல இடங்களுக்கு அழைத்துச் சென்றான். அந்த ஊரில் பிரபலமான ஒயினை குடித்து பார்க்க சொன்னான்.
முதலில் தயங்கியவள் பின் இதுவும் இங்கத்து ஒரு கலாச்சாரம் என்று ஒரு சிப் மட்டும் குடித்துப் பார்த்தாள். சிவப்பு நிறத்தில் இருந்ததை உடல் சிலிர்க்க கொஞ்சம் கூச்சத்தோடு பார்த்து கப்பென்று வாயில் சரித்துக் கொண்டாள்.
அவள் குடிக்கும் அழகை அவன் வீடியோவாகவும் படமாகவும் எடுத்துக் கொண்டான். அவள் முதலில் மறுத்தாலும் பிறகு இதெல்லாம் அழகான நிகழ்வுகள் மறுபடியும் வாழ்க்கையில் வருமா வராதா என்று தெரியாதே அதனால் முகத்தில் விரிந்த புன்னகையுடன் போஸ் கொடுத்தாள்.
அவள் அணிந்து இருந்த டெனிம் ஜீன்ஸும், போட்டு இருந்த பிங்க் கலர் சின்ன டீ-சேர்ட்டும் அவளுக்கு மிக அழகாய் இருந்தது... அதோடு ஓப்பனாய் விட்டு இருந்த ஜெர்க்கினும் உத்தமனை வெகுவாக ஈர்த்தது.
சில்வர் நிற பெரிய வளையமும் கண்ணுக்கு இழுத்து விட்டு இருந்த காஜலும் வகிட்டில் வைத்திருந்த குங்குமமும் அவளை இன்னும் இன்னும் தனித்துக் காட்டியது.
பிரபல கட்டிடங்களுக்கு முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்கள். சில இடங்களில் போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள். எடுத்த படங்களை அவ்வப்பொழுது வாட்சப் ஸ்டேட்டசில் போட அதை பார்த்து காண்டாகி போய் அம்மாவும் மகளும் புலம்பி தள்ளினார்கள்.
கணவனும் பிள்ளையும் கோவித்துக் கொண்டு போய் ஒரு வாரம் ஆன பொழுதும் ராஜி அம்மா வீட்டை விட்டு போகவில்லை. போய் சமாதனம் செய்வோம் என்கிற எண்ணமில்லாமல் தாயின் சீராட்டலில் திளைத்துக் கொண்டு இருந்தாள்.
அவ்வப்பொழுது உமையின் அறைக்குள் போய் அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருகளை எல்லாம் பார்த்து தன் தாயிடம் புகார் சொல்லிக் கொண்டு இருந்தாள். முக்கியமாக நகைகளை பார்க்கலாம் என்று உமையின் பீரோவை திறக்க அதுவோ திறக்க முடியாமல் இருக்க கண்டு அதற்குரிய சாவி எங்க இருக்கும் என்று அறையையே தலைகீழாக்கினாள். ஆனால் அது இருந்த இடம் தெரியவில்லை.
“உன் மருமக ரொம்ப விவரம் தான். நாம வந்து ஆராய்வோம்னே சாவியை எங்கயோ ஒளிச்சு வச்சு இருக்கா...” என்றாள் கடுப்புடன் ராஜி.
“இருக்குடி... அவ ரொம்ப விவரமா தான் இருக்கா... இப்பவே இப்படி இருந்தா போக போக நம்மளை எல்லாம் இந்த வீட்டுல இருக்க விட மாட்டா போல”
“ம்கும் அவ ஏற்கனவே நம்மளை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டா... நீ இப்போ தான் அவ நமக்கு இன்னும் கொஞ்ச நாள் கருணை காட்டுவன்னு சொல்லிக்கிட்டு இருக்க...” நொடித்துக் கொண்டவள், உமை வைத்திருந்த புடவைகளை எல்லாம் ஆராய்ந்தாள்.
“பாரு எவ்வளவு புடவை வச்சு இருக்கா... நீயும் தான் இருக்கியே வருசத்துக்கு ஒரு புடவை எனக்கு வாங்கி குடுக்குற...” பொறுமினாள்.
“அடி போடி உன் அண்ணன் குடுக்குற காசுல மிச்சம் புடிச்சி இதை வாங்குறதே பெருசு...”
“ம்கும்... உனக்கெல்லாம் புத்தியே இல்லம்மா இப்போ தான் ஆளு ஒருத்தி எக்ஸ்ட்ரா வந்து இருக்காள்ல... செலவு அதிகமாகுதுன்னு இன்னும் ஒரு பத்தாயிரம் எக்ஸ்ட்ரா வாங்க வேண்டியது தானே...” ஐடியா கொடுத்தாள்.
“ஆமாம்டி.. பாரேன் நானும் இதை யோசிக்கவே இல்லை.. அவளை வச்சே உத்தமன் கிட்ட இன்னும் ஒரு தொகையை கரந்துடுறேன்” என்றார் ஈஸ்வரி.
இதுங்க எல்லாம் திருந்தவே திருந்ததாது என்று எண்ணிய மதிலா முகம் நிறைந்த புன்னகையுடன் உமைக்கு போன் போட்டாள்.
தீரா காதலோடு உமையின் நெஞ்சில் புதைந்து இருந்தான் உத்தமன். கழுத்தில் முகம் புதைத்து அப்படியே சறுக்கிக்கொண்டு வந்து பெண்ணவளுக்கு கூச்சம் காட்டி சிரிப்பு மூட்டினான். அவனது சேட்டை தாங்காது அவனது பிடரியை பிடித்து வலிக்க செய்தவளின் ஊமை காயங்கள் எல்லாம் அவனை இன்னும் பித்து ஏற செய்தது. அவளில் முற்றும் முழுதுமாக தொலைந்து போக உமையின் போன் அடித்தது.
எட்டி அதை எடுக்க போகவும் அதை தடுத்தவன் அவளின் கரங்களில் தன் பின் பக்கத்து பிடரியை கொடுத்து நெரிக்க செய்தான். அவனது அழிச்சாட்டியத்தில் அவனது கன்னத்தை பிடித்து கடித்து வைத்தாள்.
“ஒரு போன் கூட பேச விட மாட்டிக்கிறீங்க ங்க..” கடுப்படித்தாள்.
“மாமா சொல்லுடி...” என்று அவளது இதழ்களை கடித்து வைத்தான் உத்தமன். அவனது முரட்டு தனத்தில் தொலைந்துப் போனவள் அதன் பிறகு எங்கே போனை எடுப்பது... அவனை கவனித்த பிறகே போனை எடுக்க விட்டான்.
அழைத்தது மதிலா என்று இருக்க புருவம் சுறுக்கியவள் அவளுக்கு அழைத்தாள்.
அந்த பக்கம் எடுத்த உடனே “ஹேய் உமை எப்படி இருக்க...?” சற்று பரிவாக கேட்டாள். அவ்வப்பொழுது அவளிடம் ஒரு இணக்கம் இருக்கும். ஆனால் இன்று அந்த இணக்கத்தையும் மீறி ஒரு நல்லிணக்கம் இருப்பதை உணர்ந்தவள் யோசைனையுடனே,
“நல்லா இருக்கேன் மதிலா. நீங்க எப்படி இருக்கீங்க... பையன் எப்படி இருக்கான்..” என்று கேட்டாள்.
“எனக்கென்ன நான் நல்லா இருக்கேன் உமை. பெரிய மாமா கிட்ட தேங்க்ஸ் சொன்னேன் சொல்லு. அதுக்கு தான் முக்கியமா கூப்பிட்டேன்” என்றாள்.
“எதுக்கு தேங்க்ஸ்...” என்றாள் குழப்பமாய்.
“அதுவா நானும் உங்க கொழுந்தனாரும் ஊட்டிக்கு ட்ரிப் போறோம். பெரிய மாமா தான் ஏற்பாடு பண்ணி குடுத்து இருக்காரு.. அதுக்கு தான்” என்றாள்.
“ட்ரிப் போறது எல்லாம் ஒகே தான். பட் உங்களுக்கும் சின்ன மாமாவுக்கும் எல்லா... சரி...” என்று அவள் சற்றே தடுமாற,
“அதுக்கு தான் பெரிய மாமாவுக்கு தேங்க்ஸ் சொன்னேன் உமையாள். இப்போ என்னால அதிகம் பேச முடியல.. நீ இங்க ஊருக்கு வா... எல்லாம் சொல்றேன்” என்றவள் வைத்து விட்டாள்.
அவர்களின் வாழ்க்கையில் உத்தமன் ஏதோ செய்து இருக்கிறார் என்று புரிய அவனை தேடினாள். அப்பொழுது தான் தலையை துவட்டிய படி குளியல் அறையை விட்டு வெளியே வந்துக் கொண்டு இருந்தான் உத்தமன்.
அவனை பார்க்கும் பொழுதே இன்னும் காதல் பெருகியது அவன் மீது. தங்களின் வாழ்க்கையை மட்டும் பார்க்காமல் தன்னோடு இருக்கும் மற்றவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து மகிழ்வுற வைப்பவனின் மீது அன்பும் காதலும் நேசமும் கட்டுக் கடங்காமல் பெருகியது..
தான் இன்னும் குளிக்காமல் இருப்பதை உணர்ந்தாலும் நழுவிய போர்வையை நெஞ்சோடு கட்டிக் கொண்டு உடை மாற்ற இருந்தவனின் கரத்தை பற்றி இழுத்து படுக்கயில் தள்ளினாள்.
“வொய்... இது என் பொண்டாட்டி தானா...? ஆச்சரியமாய் இருக்கே..” என்று சிலாகித்தவன் அவளது கவனிப்பில் உள்ளம் பொங்கிப் போனது விடாத தீராத ஆசையில்.
செக்கச்சிவந்துப் போனவளின் தேகத்தில் இன்னும் மோகம் பெருக அவளின் நிலையை கண்டு தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றும் முடியாமல் அவளின் பூந்தேகத்தில் மூழ்கினான்.
“கடைசி வரை என்ன விசயம்னு சொல்லவே இல்லையேடி..” என்று அவளை தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு அவளின் பாதி ஈரமான கூந்தலில் விரல் விட்டு நொண்டிக் கொண்டு இருந்தான் உத்தமன்.
“இல்ல மதிலா சசிதரன் வாழ்க்கையில இந்த சார் என்னவோ பண்ணி இருக்காரு போல... மதிலா ரொம்ப ஹேப்பியா ஊட்டி ட்ரிப் போறதை போன் பண்ணி சொன்னாங்க...” என்றாள்.
“ஓ...! அதனால தான் அம்மணி இந்த கவனிப்பு கவனித்தாங்களாக்கும்...” என்று அவளின் முகத்தில் தன் முகத்தை வைத்து தேய்த்தான். அவனது ஒரு நாள் கன்னத்து முடி உரசி எரிச்சலைக் கொடுத்து சிவந்தும் போனது பெண்ணவளின் கன்னம்.
அதை ரசித்துப் பார்த்தான் உத்தமன். “உங்க ரசனைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போயிக்கிட்டு இருக்குங்க...” என்று எறிந்த கன்னத்தை தேய்த்து விட்டாள். அவளது கரத்தை எடுத்து விட்டு தன் முரட்டு இதழ்களாலே தேய்த்து விட இன்னும் சிவந்துப் போனது உமையவளின் கன்னம்.
“அதெல்லாம் அவ்வளவு செக்கிரம் ஓயாதுடி... அலைகடல் மாதிரி உன்னை சுற்றி என் ஏக்கமும், காதலும், ரசனையும், மோதலும், தேடலும், மோகமும், காமமும், நேசமும், சீண்டலும் இருந்துக்கொண்டே தான் இருக்கும்” என்றவன் எல்லாவற்றையும் அவளை மறக்க செய்தவன் அவனை மட்டும் எண்ணும் படி செய்தான்...
தேட தேட தேகம் தீராத இரசனைக்கு வித்திட பெரும் காதலுடனும் மோகத்துடனும் எந்த இடையூறும் இல்லாமல் தன் நெஞ்சில் கொண்ட ஏக்கங்களுக்கு எல்லாம் செயல் வடிவம் கொடுத்து மென்மையான செந்தாழம் பூவில் செந்தீயை மூட்டினான் உத்தமன்... அவனது ஆசைகளுக்கும் ஏக்கங்களுக்கும் இவள் செயல் முற்றும் முழுதாக ஒத்துழைப்பு நல்க இனிய தாம்பத்தியம் நடந்தேறியது அங்கு.
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis 👌👌👌👌👌👌
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis 👌👌👌👌👌👌
நன்றி மா ♥️