பிள்ளையை டிவி பார்க்க விட்டுவிட்டு சசிதரன் எழுந்து அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தான். அப்பொழுதும் அவள் உணவை அவனுக்கு பரிமாறவில்லை. பெருமூச்சுடன்,
“சாப்பாடு போடு மதிலா...” என்றான். அவள் காதிலே வாங்காதவள் போல உண்டுக் கொண்டு இருந்தாள். அவன் மறுபடியும் கேட்டான். இந்த முறை உள்ளுக்குள் கொஞ்சம் பயம் வந்தது. இவன் தான் அதிகமாக கோவப்படுவானே. ஒரு வேலை அடித்து விட்டால் என்ன செய்வது என்று ஒரு பக்கம் இருந்தாலும் அவனுக்கு பரிமாறவில்லை.
அவளையே ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் தானே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். அவனது செய்கையை கண்டுக் கொள்ளமல் அவள் பாட்டுக்கு சாப்பிட்டு எழுந்தவள் பிள்ளையை தூக்கிக் கொண்டு மேலே சென்றுவிட்டாள்.
சாப்பிட்டு முடித்து விட்டு மேலே வந்தவன் கட்டிலை பார்க்க கட்டில் எப்பொழுதும் போல வெறுமையாக இருந்தது. முன்பு பிள்ளை விளையாண்ட பொருட்களை கூட எடுத்து வைத்திருந்தாள். ஒரு சுருக்கம் கூட இல்லாமல் இருந்தது விரிப்பு.
கொஞ்சம் தள்ளி எட்டிப் பார்க்க கட்டிலின் அந்த பக்கம் கீழே படுக்கையை விரித்து விட்டு அதில் பிள்ளையை போட்டு மதிலாவும் தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் சீரான மூச்சில் தூங்கி விட்டாளோ என்று ஒரு கணம் யோசித்தான்.
அதன் பிறகு கதவை சற்றி விட்டு மெல்ல பூனை நடை நடந்து அவளின் பின்னாடி போய் படுத்துக் கொண்டவன் அவளின் மீது கரத்தை போட்டுக் கொண்டான். அதுவரை மூச்சை அடக்கியபடி அவனது செயல்களை எல்லாம் கீழ் விழியால் இமையை லவலேசாக பிரித்து பார்த்துக் கொண்டு இருந்தவள் கணவன் அவள் அருகே வரவும் மூச்சு முட்டிப் போனது.
“என்ன இது எந்த நாளும் இல்லாத திருநாளா இன்னைக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காரு... இந்த மனுசனுக்கு என்ன தான் ஆச்சு..” என்று மனதுக்குள் புலம்பியவள் மூச்சை இன்னும் இழுத்துக் கொண்டாள்.
எங்கே அசைந்தால் என்றால் தன் மீது பாய்ந்து படர்ந்து விடுவானோ என்று பயந்துப் போனாள். படுக்கைக்கு மட்டும் நானா என்று அவளுள் ஒரு உணர்வு இழுத்து பிடித்து வைக்க அவளின் மனம் தன்னாலே முரண்டு பிடிக்க ஆரம்பித்தது..!
“நீ முழிச்சு இருக்கன்னு தெரியும்... சொல்லு ஊட்டிக்கு போகலாமா...?” என்று அவளின் காதோரம் கேட்டான். அவனது கேள்வியில் பட்டென்று சினம் போங்க, வேகமாய் அவனது கரத்தை தன் மீது இருந்து தட்டி விட்டவள் எழுந்து அமர்ந்தாள்.
“கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம எப்படி என்கிட்டே இந்த கேள்வியை கேக்குறீங்க... இல்ல கேட்க தான் எப்படி மனசு வந்தது... நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவேன்னு நினைச்சீங்களா. அவ்வளவு ஒண்ணும் இந்த மதிலா மட்டமா போயிடல...” என்று சொன்னவள் அவனை பார்த்து “என்ன உடம்பு சுகத்தை பிச்சையா போடுறீங்களா...?” என்று கேட்டே விட்டாள்.
அந்த கேள்வியில் கோவம் வர பட்டென்று அவளது கன்னத்தில் அறைந்தே விட்டான் சசிதரன். அவனிடமிருந்து இந்த அடியை எதிர்பாராதவள் கன்னத்தில் அப்படியே கை வைத்து பொத்திக் கொண்டு அடிபட்ட பார்வை பார்த்தாள் தன் கணவனை.
“அவ்வளவு தான்டி உனக்கு மரியாதை. சொல்லிட்டேன்...” என்று அவன் எச்சரிக்கை செய்தான் கடுமையுடன்.
“இவ்வளவு நாள் அடிக்க மட்டும் தான் செய்யல. இன்னைக்கு அந்த குறையும் இல்லாம பண்நீட்டிங்கல்ல. உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க... நீங்க வச்ச ஆளா நானு. இல்ல கேட்க ஆளு இல்லன்னு நினைச்சுக்கிட்டு இப்படி எல்லாம் பண்றீங்களா?” எகிறியவளை பார்க்க வேதனையாக தான் இருந்தது. ஆனால் அவள் பேசிய பேச்சை கேட்டு எப்படி எளிதாக கடந்து போவதாம். உடம்பு சுகத்துக்காகவா அவளை நாடினான்.
பெருமூச்சு விட்டவன்,
“இங்க பாரு மதிலா...” என்று அவன் பேச வர,
“ஓ... இப்போ தான் நான் மதிலான்னே உங்களுக்கு தெரியுதா?” கேள்வி கேட்டவளை சமாளிக்க முடியாமல் தடுமாறினான் அவன்.
“நான் என்ன சொல்ல வந்தாலும் இப்படி நீ எதிர் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா என்னால எதுவுமே சொல்ல முடியாது...” என்றான் பொறுமையாக.
“இனி நீங்க என்ன சொல்ல நான் என்ன கேக்குறது... இனி நமக்குள்ள ஒண்ணுமே இல்லை எல்லாமே முடிஞ்சி போச்சு.. ஆளை விடுங்க சாமி... உங்களை கல்யாணம் கட்டுனதுக்கு பாலும் கிணத்துல விழுந்து இருக்கலாம். என் வாழ்க்கையையே சீரளிச்சிட்டு உங்களால எப்படி இப்படி ஒண்ணுமே நடக்காதது மாதிரி இருக்க முடியுது..”
“என்னைக்காவது என் உணர்வுகளை புரிஞ்சி நடந்து இருக்கீங்களா...? உங்களுக்கு என்ன வேணுமோ அதை தான் சாதிச்சுக்குறீங்க இல்ல...” என்று குற்றம் சுமத்தியவளை ஆழ்ந்த பார்வை பார்த்தான் சசிதரன். அவனது பார்வையில் தடுமாறியவள்,
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன். உள்ளத்தை தானே சொல்றேன். அப்படி தான் சொல்லுவேன். இது மட்டும் இல்ல இதுக்கு மேலையும் சொல்லுவேன். என்ன அடிப்பீங்க.. நல்லா அடிச்சுக்கோங்க.. உங்க பாராமுகத்தையே தாங்கிக்கிட்டேன். இதை தாங்கிக்க மாட்டனா..” என்று கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன் சட்டென்று அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான்.
அவனது இந்த அதிரடியை கொஞ்சமும் எதிர்பார்க்காதவள் தடுமாறிப் போனாள்.
“விடுங்க.. விடுங்க... என்னை விடுங்கன்னு சொன்னேன். எனக்கு யாரும் வேணாம் எதுவும் வேணாம்... அதுவும் எனக்கு நீங்க வேணவே வேணாம்...” என்று அவனிடம் இருந்து திமிறினாள்.
“மதிலா ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளு. உன்னை ரொம்ப வேதனை படுத்திட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா நான் ஏன் அபப்டி பண்ணேன்னு நீ ஏன் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேங்குற...” என்று கேட்டவனின் பேச்சில் தன் முயற்சியை கை விட்டுவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“செய்யிறதையும் செஞ்சுட்டு அதுக்கு ஒரு காரணம் இருக்குன்னு பூசி மொழுக பார்க்குறீங்க இல்ல... எனக்கு எந்த காரணமும் வேணாம்... இப்ப என்ன உங்களுக்கு உங்க அம்மா சொன்ன படி இரண்டாவது பிள்ளை வேணும். அதுக்காக தானே இந்த மாதிரி எல்லாம் நாடகம் ஆடுறீங்க...” என்று அவனை விட்டு விலகி முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு கட்டிலில் போய் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டாள் மதிலா.
அவளிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர் பார்க்காதவன் முகம் கருத்துப் போனான். நீண்ட நேரமாகியும் அவன் வராமல் போக,
“ஓ...! என் உடையை அவிழ்க்க வெட்கமா இருக்கா நானே அவிழ்த்து போட்டர்றேன்...” என்று போட்டிருந்த உடையை அவிழ்க்க பார்க்க வேகமாய் அவளிடம் தாவி வந்து அவளின் இரு கரத்தையும் அழுந்தப் பற்றிக் கொண்டவன்,
“ஏன்டி சாகடிக்கிற...?” கண்கள் எல்லாம் கலங்கிப் போனது அவனுக்கு.
அவனது கண் கலங்களை கொஞ்சமும் பாதிக்காதவளாய் அவனை பார்த்தாள். அவளது நெஞ்சம் எதையும் ஆராய்ந்து பார்க்க தயங்குகிறது என்பதை உணர்ந்தவன், தன் மனதை திறக்க ஆரம்பித்தான் ஆதி அந்தமாக.
“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. கூட பிறந்த அண்ணனையே கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம கட்டுன பொண்டாட்டின்னு பார்க்கம என்னோட மறைமுகமா சேர்த்து வச்சு பேசினவர் தானே நீங்க... இப்ப மட்டும் எல்லாம் மறந்து போயிடனுமா நான்...” கேட்டவளின் ஆதங்கம் புரிய,
“என் அம்மாவும் ராஜியும் எப்படின்னு உனக்கு நான் சொன்னா புரியுமா மதிலா... அவங்க நாக்கு எவ்வளவு விசம்னு நீயே அனுபவத்துல பார்த்து இருப்பியே. அண்ணனோட மனைவி கொழுந்தனுக்கு பாதி அம்மா... ஆனா போன வாரம் என்ன ஆச்சு. என்னையும் அண்ணியையும் வச்சு தப்பா பேசல...” என்று கேட்டான்.
“ஆமா அதுக்கும் இப்போ நமக்கும் என்ன சம்மந்தம்...”
“இருக்கு... நீ என் அண்ணனுக்கு நல்ல மனசோட தான் சோறு போட்ட... ஆனா என் அம்மாவும் ராஜியும் உன்னை நோகடிக்கனும்னே உன்னையும் அண்ணனையும் வச்சி தப்பா பேசுனாங்க. அது உனக்கு தெரியாது. கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் அப்போ ஆகி இருந்தது உனக்கும் எனக்கும். அன்னைக்கு எதார்த்தமா எங்க அம்மாக்கிட்ட ஏதோ கேட்கலாம்னு வந்தேன். அப்போ தான் ராஜியும் அவங்களும் பேசுனதை கேட்டேன். அதுக்கு பிறகு தான் உன்னை அண்ணனுக்காக காத்திருந்து பரிமாற வேணான்னு சொன்னேன். நீ அப்பாவும் கேட்கல.”
“பாவம் காலையில இருந்து உழைச்சுட்டு வந்த மனுசனுக்கு சாப்பாடு கூட போட ஆளில்லன்னு புலம்பி நீ சாப்பாடு போட்ட... உன்னை அடக்கவும் எனக்கு தெரியல. அதே மாதிரி இந்த பிரச்சனை வேறு விதமா வெடிச்சி குடும்பத்துல குழப்பம் வந்திடாம இருக்க தான் உன்னையும் அண்ணனையும் வச்சி பேசுனேன். அதுவும் மறைமுகமா தான்”
“என்னால அப்படி எல்லாம் என் பொண்டாட்டியை பேசிட முடியாது மதிலா..” என்றான் அன்பாக.
“ஆஹா... என்ன ஒரு நடிப்பு... பொண்டாட்டியாம் பொண்டாட்டி” என்று நொடித்துக் கொண்டாள்.
“நடிப்பு இல்லடி. அண்ணி மாதிரி நீ எல்லோரையும் எதிர்த்து நின்னு இருந்தா நானும் போகுது போ.. இவ எல்லாத்தையும் சமாளிச்கிக்குவான்னு விட்டு இருப்பேன். ஆனா நீ உன் பிள்ளை கூட இருக்க கூட போராடிக்கிட்டு இருக்க. அவங்க என்ன சொன்னாலும் எதிர்த்து எதுவும் பேசாம தலையை தலையை ஆட்டிக்கிட்டு போயிடுற... அப்படி இருக்கவக் கிட்ட நான் என்னத்தை விளக்க முடியும் சொல்லு...” என்று கேட்டவனின் வாதம் சரியாக இருக்க அமைதியானாள்.
“அதெல்லாம் சரி ஒத்துக்குறேன்... ஆனால் உங்க அண்ணனுக்கு கல்யாணம் பேசும் போது ஏன் வேணான்னு சொன்னீங்க..” என்று கேட்டாள்.
“நான் எங்கடி வேணான்னு சொன்னேன். வயசு குறைவா உள்ள பிள்ளை தான் வேணான்னு சொன்னேன். ஏன்னா உனக்கும் எனக்கும் தான் அப்போப்போ முட்டிக்கும் இல்ல. அதனால மட்டும் தான் சொன்னேன். மத்தபடி அவனுக்கு ஒரு நல்லது நடக்க கூடாதுன்னு நான் நினைக்கல. அண்ணனுக்கு ஒரு நல்லது நடந்துடாதான்னு நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன்டி. என்னை போய் இப்படி நினைச்சிட்ட...” என்றான்.
“ம்கும்.... எல்லாத்தையும் மனசுல போட்டு வச்சுக்கிட்டே இருந்தா எனக்கு எப்படி தெரியும். சரி அதெல்லாம் விடுங்க அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். என்னை எதுக்கு இத்தனை நாள் தள்ளி வச்சீங்க. உங்க அருகாமைக்காக நான் எத்தனை நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா? வெறும் படுக்கையில கூடுறதுக்காக ஒண்ணும் உங்களை நான் எதிர்ப்பார்க்கால ஒண்ணா சேர்ந்து கோயில் போறதுக்கு, பிள்ளையோட சேட்டையை சொல்லி இரசிக்க, இப்படி எவ்வளவோ இருந்தது. ஆனா நீங்க உங்க பாராமுகத்துனால என்னை கொல்லாம கொன்னுட்டீங்க ங்க...” என்று கதறி அழுதாள். ஏனெனில் அவள் இழந்தது ஏராளம் ஆயிற்றே...
“என் கண்ணை பார்த்து சொல்லு உன்னை நான் விலக்கி வச்சேன்னு...”
“இல்லையா பின்ன.. கல்யாணம் ஆன ஒரு வருசத்துல எப்படி இருந்தீங்க... குழந்தை வந்ததுக்கு பிறகு எப்படி நடந்துக்கிட்டீங்கன்னு நல்லா யோசிச்சு பாருங்க... மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்னு கல்யாணம் ஆன ஒரு வருசத்துல தலையில தூக்கி வச்சு கொண்டாடுநீங்க. ஆனா அதுக்கு பிறகு... நான் இருக்கனா செத்தனான்னு கூட பார்க்கல..” என்று குமுறினாள்.
“அது அப்படி இல்லடி...” என்று அவன் தடுமாற,
“பரவாயில்ல என்ன காரணமா இருந்தாலும் எனக்கு சொல்லுங்க... ஆனா இனிமேல் உங்க பாராமுகத்தை தாங்கிக்கிட்டு என்னால வாழ முடியாது. என் கண்ணு முன்னாடி உமையும் உங்க அண்ணனும் வாழ்ற வாழ்க்கையை பார்த்து என் கண்ணே பட்டுடும் போல அந்த அளவுக்கு என் மனசு நொந்து போய் இருக்கு. எனக்கும் அவங்கள மாதிரி வாழணும்...” என்றவளின் ஏக்கத்தை உணர்ந்துக் கொண்டவன் வேகமாய் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் சசிதரன்.
“நீ சொல்றது ரொம்ப சரி தான்...” என்று பெருமூச்சு விட்டவன்,
“உனக்கு குழந்தை பிறந்த பிறகு உன்கிட்ட வராததுக்கு காரணம் உன் மீது வர்ற பால்வாசனை தான்..” என்றான்.
“ஹாங்...” என்று அதிர்ந்துப் போனவள் பட்டென்று அவனிடமிருந்து விலகி அவனை அதிர்ந்துப் போய் பார்த்தாள்.
“என்ன சொல்றீங்க நீங்க...?”
“ம்ம்... அது தான் உண்மை... உன்கிட்ட வர்ற பால் வாசனை எனக்கு சேரல மதிலா...”
“அதனால தான் பிள்ளையையும் வாரம் ஒரு முறை பார்க்க வந்துட்டு பிறகு போக போக மாசத்துக்கு ஒரு முறை வந்தீங்களா...?” என கேட்டாள்.
“ம்ம்ம்... உன் கிட்ட வந்தாலே எனக்கு உமட்டிக்கிட்டு வந்தது... என்ன கண்ரோல் பண்ணி பார்த்தாலும் வாமிட் வர ஆரம்பிச்சுடுச்சு... உன் தாய்மை எனக்கு புரியுது. இது தாய்மையோட ஆகச்சிறந்த மகத்துவம்னும் புரியுது. ஆனா என்னால என்ன முயற்சி செய்தும் உன் கிட்டக்க கூட வர முடியல. அதை விட இந்த விசயத்தை உன்கிட்ட சொல்ல மனசு வரல. ஏற்கனவே குழந்தை பெத்தா புருசனுக்கு பொண்டாட்டி மேல இருந்த அன்பு எல்லாம் போயிடும்னு சொல்லி வச்சு இருக்காங்க. அதுக்கு ஏத்த மாதிரி இந்த நேரத்துல உங்களுக்கு ஹார்மோன்ஸ் பேலன்ஸ் எல்லாம இயற்கையாவே சில சிடுசிடுப்பு இருக்கும்.”
“அதோட உடல் உபாதை வேற, இது போதாதுன்னு சின்ன பிள்ளை வேற படுத்தி எடுப்பான். இரவு தூக்கம் இருக்காது... அதெல்லாம் ஒண்ணா சேர்ந்து இன்னும் உங்களை ரொம்ப மோசமாக படுத்தும். அதுல என்னோட இந்த விசயமும் தெரிய வந்து உனக்கு இன்னும் நெஞ்சுக்குள்ள பாரம் ஏறிடும்னு தான் உன்கிட்ட இந்த விசயத்தை சொல்லவே இல்லை..”
“சொல்லாமலே கொஞ்சம் லேசா தவிர்த்து வர ஆரம்பிச்சேன். ஆனா ஒன்பது மாசம் கழிச்சு வந்தவுடனே தினமும் வாந்தி தான். அதை உன்கிட்ட இருந்து மறைக்கிரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். அதுவும் நீ சாப்பாடு பரிமாற வரும் பொழுது நிஜமா என்னால கண்ரொல்லே பண்ண முடியாது மதிலா.. போன் பேசுற மாதிரி இரண்டு வாய்லையே எழுந்து போயிடுவேன்.” என்றான் சங்கடமாக.
அவளுக்கு இந்த விசயம் எல்லாம் புதிது... இயல்பாகவே எல்லா பெண்களையும் விட இவளுக்கு அதிகாமவே சுரந்தது. அதில் எப்பொழுதும் உடை ஈரமாகி போகும். அதனால் அவளது அம்மா நான்கு உடை மட்டும் இந்த நேரத்துல பயன் படுத்து. மீதி எல்லாம் பயன் படுத்தத. பிறகு அந்த துணியில் பட்டால் அதுவும் வாடை வரும் என்று சொல்லி இருக்க மதிலாவும் அந்த நான்கு உடைகளை மட்டுமே மாற்றி மாற்றி போட்டுக் கொண்டாள் பீடிங் நாட்களில்.
சும்மாகவே அந்த துணியில் பால் வாடை அடிக்கும். இவளுக்கு பிள்ளை பசியாறிய உடனே அடுத்த கொஞ்ச நேரத்திலே மீண்டும் சுரந்து விடும். அப்படி இருக்கும் பொழுது இவள் பருத்தியால் ஆன வெள்ளை துணியை நன்கு மடித்து வைத்துக் கொள்வாள் அவளது நெஞ்சில்.
அப்படி இருந்தும் அதுவும் சில நேரங்களில் ஈரமாகிவிடும். இருக்கிற வேலைகளில் அந்த துணி மாற்றுவது இன்னும் கொடுமை. அதை அலசிப் போட்டு அதை அதிகம் மொரமொரப்பு ஆகமால் பார்த்து பக்குவமாய் எடுத்து வைக்க வேண்டும். யாருக்காவது தாய்ப்பாலை தானம் கொடுக்கலாம் என்று ஆன்லைனில் தேடித் பார்த்தாள்.
அதற்குள் ஈஸ்வரி அது இது என்று பெரிய அளப்பரையை கூட்டி விட்டார். அதனால் அந்த வழியும் அடைந்துப் போனது.
அப்படி அபரிவிதமாக சுரப்பதில் நிரந்தரமாக அவளுள் அந்த மணம் தேங்கி நின்றுப் போனது. அதனால் அவளை நெருங்கவே முடியாமல் சசி தரன் திண்டாடிப் போனான். அவன் பட்ட அவஸ்த்தையை சொல்ல சொல்ல மதிலாவுக்கு தான் பாவமாய் போனது.
“அது மட்டும் இல்ல... எங்க அம்மா சொன்னாங்கன்னு நீ ரெண்டு வருடம் பிள்ளைக்கு குடுத்த. அதனால சுத்தமா உன்னை நெருங்கவே முடியல... பிள்ளையை தூக்கி கொஞ்சலாம்னு பார்த்தா அவன் மேலையும் உன் வாசனை வீசுனத என்னால தாங்க முடியல மதிலா...”
“உனக்கு வருத்தம் நான் உன்னை ஒதுக்கி வச்சுட்டேன்னு தான். ஆனா என்னோட வேதனை உனக்கு புரியாது. பிள்ளை பெத்து ரணத்தோட வந்தவளை என் நெஞ்சு மேல போட்டு தாங்க முடியல. அவ முகம் பார்த்து பேச முடியல. பக்கத்துல போனாலே வாந்தி தான். என் தடுமாற்றம் உனக்கு தெரியாம மறைக்க நான் போராடுன போராட்டம் ரொம்ப அதிகம். ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவாயில்லை. இரண்டு வருடம் முழுதாக...” என்று பெருமூச்சு விடவனின் வேதனை அவளின் முகத்தில் அறைய பேச்சற்றுப் போனாள். விழிகள் எல்லாம் கலங்கிப் போனது.
சசிதரன் சொன்னது போல இந்த வாடை அவன் முகர்ந்து அதனால் அவனுக்கு ஒவ்வாமை யாகி வாந்தி எடுப்பது மட்டும் தெரிந்து இருந்தால் சத்தியமாக மதிலாவின் எண்ணம் அந்த கணம் எப்படி இருக்கும் என்று அவளுக்கே தெரியாது. ஏனெனில் ஹார்மோன்ஸ் சென்ஜசஸ். எப்படி வேணுமானாலும் இந்த உளவியல் ரீதியான சிக்கல் முடிந்து போய் இருக்கும்.
என்ன முடிவு வேண்டுமானாலும் எதுத்து இருப்பாள். அதோடு டைவர்ஸ் வரைக்கும் போய் இருந்தாலும் ஆச்சரியமில்லை. ஈஸ்வரி ஒருத்தர் போதும். ஒன்றும் இல்லாததை ஊதி ஊதியே பெரிதாக ஆக்கி சடை போட்டு பூ வச்சு விட்டு இருப்பார்.
“அது மட்டும் இல்ல மதிலா.. மகனுக்கு இரண்டு வயது முடிந்த பிறகு நீ பாலை நிப்பாட்ட பார்த்த... ஆனா அதுக்கு எவ்வளவு போராடுனன்னு என் கண்ணார நான் பார்த்தேன். சத்தியமா சொல்றேன் உங்கள போல பெண்கள் அளவுக்கு எல்லாம் எங்களுக்கு பொறுமையும் நிதானமும், எதையும் தாங்கும் வலிமையும் இல்லம்மா. வலிக்குது வலிக்குதுன்னு நீ புலம்பும் போதெல்லாம் எனக்குள்ள நான் செத்துப் போனேன்டி. காய்ச்சல் வந்து நீ துடிச்ச துடிப்பை பார்த்த பிறகு என்னால மூச்சுக் கூட விட முடியல... நான் இருந்தும் உனக்கு உதவ முடியாம இருக்கேன்னு நினைக்கும் பொழுது என்னை நானே வெட்டிப் போட வெறியே வந்தது...” என்றவனை தாவி வந்து கட்டிக் கொண்டாள் மதிலா கண்களில் பெருகிய கண்ணீரோடு...
“அதுவும் மல்லிகைப்பூவை வச்சி நெஞ்சுல கட்டிக்கிட்டு நீ காய்ச்சல்ல படுத்து இருந்தப்ப உன் பக்கத்துல நெருங்க முடியாம எத்தனை நாள் என்னை நானே காயம் செய்துக்கிட்டேன் தெரியுமா...? அதுவும் வலி தாங்க முடியாம ஊசிப் போட போன பாரு செத்துட்டேன்டி..”
“அதுக்கு மேல எங்க அம்மா ஊசி போட்ட அடுத்த பிள்ளைக்கு பால் இருக்காதுன்னு சொல்லி உன்னை போட விடாம சதி பண்ணி எவ்வளவு வேதனை உனக்கு குடுக்க முடியுமோ அந்த அளவுக்கு வேதனையை குடுத்தாங்க... நானும் எவ்வளவு சொல்லி பார்த்தேன். ஆனா அவனாக கேட்கவே இல்லை. உன்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போக சொல்லி உங்க அம்மாகிட்ட சொன்னேன். உங்க அம்மா அதுக்கு மேல. அடுத்த பிள்ளை பெக்குற உத்தேசம் இருக்கா இல்லையான்னு அவங்க ஒரு பாடு ஆடி தீர்த்துட்டங்க”
“இப்படி நீ வேதனை படும் போதெல்லாம் நான் சும்மாவே இருந்துட்டு நீ நல்லா ஆனதுக்கு பிறகு உன்கிட்ட நெருங்க என் மனசாட்சி இடம் குடுக்கலடி... எப்படி என் சுகத்துக்காக மட்டும் உன்னை நெருங்க முடியும் சொல்லு...” என்று கேட்டவனின் அன்பை இதை விடவா அளக்க ஒரு கருவி வேண்டும்...
அதற்கு மேல் சசிதரனை பேசவே விடவில்லை மதிலா. அவள் கொண்டு இருந்த அத்தனை தயக்கத்தையும் உடைத்து எறிந்தவள் சசிதரனின் இதழ்களை கவ்விக் கொண்டாள் கண்ணீருடன்.
அவளை தன்னில் தாங்கியவன் இவ்வளவு நாள் சேர்த்து வைத்திருந்த ஒட்டு மொத்த ஏக்கத்தையும் அவளுள் கொட்டினான்.
“உன் தேவை எனக்கு புரிந்து தான் இருந்தது. ஆனா எந்த விளக்கமும் குடுக்காம உன்னை தொடுவது என்னால முடியலடி...” என்று அவன் மேலும் சொல்ல
“போதுங்க இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம். என்னால தாங்க முடியல. இந்த சின்ன நெஞ்சுல நீங்க காற்றை அன்பை எல்லாம் நிறைச்சி வக்க முடியல...” என்று கதறியவள் அவனை வேணும் வேணாம் என்கிற அளவுக்கு கொண்டாடி தீர்த்தாள்.
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr 👌👌👌👌