சுவிஸில் குளிர் தாங்க முடியாமல் போர்வைக்குள்ளே குடும்பம் நடத்தினாள் உமை. உத்தமன் இதை தானே எதிர் பார்த்தான். மோசமான குளிரில் உயிரை உறைய வைக்கும் பனிசாரலில் கொண்டு வந்து தன்னை அவச்த்தைக்குள் ஆக்கும் கணவனை முடிந்த மட்டும் முறைத்தாள்.
உத்தமனுக்கு இதெல்லாம் உரைக்கவா போகிறது... அவன் அவனது வேலையை தொடர்ந்தான். தானாகவே அவனிடம் ஒன்ற வேண்டி இருந்தது உமைக்கு. அதில் இவளுக்கு கடுப்பு என்றால் அவனுக்கு ஒரே உல்லாசம் தான்.
“ப்பா... நல்லா ப்ளான் பண்ணி தான் கூட்டிட்டு வந்து இருக்கீங்கங்க... அச்சோ முடியலங்க..” என்று அவனது மார்பில் சுருண்டுக் கொண்டாள்.
“நான் எதுக்கு தங்கம் இருக்கேன்... நான் உன்னை கவனிச்சுக்குறேன்” என்று அவனது கவனிப்பு வேறு மாதிரி இருக்க அவனது முதுகிலே நான்கடி போட்டாள். அதை சிரிப்புடன் வாங்கிக் கொண்டவன் அறையில் இருந்த ஹீட்டரை அதிகப் படுத்தினான்.
அதன் பிறகே அவளின் குளிர் சற்று மட்டுப் பட்டது. பெரிய கண்ணாடி கதவை திறந்து வைத்தான். அதில் அவனை முறைத்துப் பார்த்தாள் உமை. சிரித்துவிட்டு மீண்டும் அந்த கதவை சாற்றி விட்டு அவளிடம் வந்து அமர்ந்தான்.
குடிக்க சூடான சூப்பை அவளிடம் நீட்டிவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஒற்றை இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டான். அவன் அப்படி அங்கு சென்றான் என்றால் இவளும் பின்னோடு போக வேண்டும்.
அவனை முறைத்த படியே அவனது மடியில் வந்து அமர்ந்துக் கொண்டே சூப் குடித்தாள். இருவரின் பார்வையும் எதிரில் உள்ள பனிமலைகளில் நிலைத்தது..
இதமாக குடித்து விட்டு நிமிர, உத்தமனின் கரங்கள் வாகாக உமையின் இடையில் பதிந்துக் கொண்டது.
“இதுக்கு தான் புடவை கட்ட சொன்னீங்களா?” என்று முறைத்தாள்.
“ப்ச்.. போடி இங்க வந்துதுக்கு பிறகு நீ புடவையே கட்டல... எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? உன்னை இந்த எழில் கோலத்துல பார்த்து...” என்று குமைந்தவன் அவளது கழுத்தில் தன் முகத்தை பதித்துக் கொண்டான்.
இடையில் இருந்த கரங்கள் அவளின் இடுப்பு சேலையின் உள்ளே நுழைந்துக் கொண்டன.. இறுக்கிப் பிடித்த கரத்தின் வன்மையில் மனம் மயங்கியவள் சற்றே திரும்பி அவனது முகத்தோடு முகம் வைத்து மெல்ல அவனின் மீசையை தன் பற்கள் கொண்டு இழுத்து விளையாட ஆரம்பித்தாள்.
“ப்ச்.. இதெல்லாம் வேணாம் முத்தம் கொடுடி...” என்றான் சிறு பிள்ளையாய்.
“ம்ஹும்.. மாட்டேன்..” என்றவள் மேலும் அதையே செய்ய,
“லொள்ளு பண்ணாதடி...” என்றவன் அவனே கொடுக்க வர, அவனையும் கொடுக்க விடாமல் இருவரின் இதழ்களுக்கு இடையிலும் கரத்தை வைத்து தடுத்து விட்டாள்.
“ப்ச் இப்போ என்ன தான்டி பிரச்சனை... ஏன் நைய்யி நைய்யின்னுட்டு இருக்க...” கடுப்படித்தான்.
“பின்ன நான் எப்போ கேள்வி கேட்டேன். ஆனா நீங்க இன்னும் ஒரு முறை கூட அதுக்கான பதிலை சொல்லமா என்னை டீல்ல விட்டுக்கிட்டே இருந்தா கோவம் வருமா வராதா..?” முறைத்தாள்.
அதில் இதழ்களில் குறுநகை எழ, அவளை தன்னோடு இன்னும் நெருக்கிக்கொண்டவன்,
“சரி சரி சொல்றேன்டி... டென்சன் ஆகாத...” என்று சொல்லிக்கொண்டே வந்தவன் அவள் அசந்த நேரமாக பார்த்து அவளின் இதழ்களை சிறை செய்துக் கொண்டான். மூச்சு முட்டிப் போனது உமைக்கு.. அவ்வளவு வன்மையாக கொடுத்தான். இடைவெளியே கொடுக்காமல் அவளை முத்தத்தாலே கொன்று போட உத்தேசம் போல உத்தமனுக்கு.
அவனது நெஞ்சிலே அடித்து தன்னை விடுவித்துக் கொண்டவள் ஆழமான மூச்சுகளை எடுத்து விட்டாள். அவள் படும் அவஸ்த்தையை மீசையை முறுக்கி ரசித்துப் பார்த்தான் உத்தமன். அதில் காண்டாக,
“போய்யா... இன்னும் கொஞ்ச நேரம் நீங்க இப்படியே பண்ணி இருந்தா கொலை கேஸ்ல உள்ள போய் இருந்து இருப்பீங்க...” அவனது நெஞ்சில் அடித்தாள்.
“அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டு போற ஐடியா இல்லடி...” என்று சிரித்தவன், தன் நெஞ்சோடு அவளை அனைத்துக் கொண்டு அவளின் கழுத்தில் முகம் புதித்டுக் கொண்டு அவளின் வயிற்றில் கரம் போட்டு இறுக்கியபடி,
“சசிதரன் கிட்ட பேசுனேன்டி..” என்றான்.
“இது எப்ப...?” என்று அவள் வியந்துப் போய் திரும்பி பார்த்தாள் அவனது கை வளைவுக்குள் இருந்த படியே.
“நாம இங்க கிளம்புறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடி...” என்றான்.
சசிதரன் அலுவகலத்தில் வேலை செய்துக் கொண்டு இருந்த நேரம் உங்களை பார்க்க யாரோ வந்து இருக்காங்க என்று சொல்லவும்,
“நம்மளை தேடி யாரு வரப் போறா...?” யோசனையுடனே வந்தான் வெளியே. அங்கே தன் அண்ணன் இருப்பதை பார்த்து ஒரு கணம் திகைத்தவன்,
“என்னண்ணா இவ்வளவு தூரம் என்னை தேடி வந்து இருக்க... வீட்டுல எல்லோரும் ஓகே தானே...” என்றான் படபடப்பாக.
“அதெல்லாம் நல்லா தான் இருக்காங்க.. சும்மா உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்... பதட்டப் படாத... ஒர்க் இருக்கா...?” என்று கேட்டான் உத்தமன்.
“இருக்கு அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்...” என்றவன் உள்ளே போய் பெர்மிஷன் போட்டுட்டு வெளியே வந்தான். இருவரும் அருகில் இருந்த ஒரு பார்க்கில் சென்று அமர்ந்தார்கள்.
ஒரு வேளை அன்னைக்கு வீட்டுல நடந்த கலாட்டவை பத்தி பேச வந்து இருப்பாரோ என்று யோசித்தபடியே உத்தமனின் அருகில் வந்து அமர்ந்தான் சசிதரன்.
உத்தமன் பேச வந்துவிட்டாலும் அவனால் இயல்பாக பேச்சை ஆரம்பிக்க முடியவில்லை. ஏனெனில் இது அவனுடைய பெர்சனல். இதில் தான் இந்த விதத்தில் தலையிடுவது என்று சற்றே தயங்கி தான் போனான்.
அவனது தயக்கத்தை பார்த்து,
“எதா இருந்தாலும் சொல்லுண்ணா... ஏன் இவ்வளவு யோசிக்கிற...” என்று சசி தரனே சொல்லிவிட ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன்,
“இந்த விசயத்தை நான் இதுக்கு முன்னாடி சொல்லி இருந்தா நிலைமை வேற, ஆனா இப்போ எனக்குன்னு ஒருத்தி வந்துட்டா.. நானும் குடும்ப வாழ்க்கையில என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஓரளவு புருஞ்சுக்கிட்டேன்” என்று உத்தமன் மொட்டையாக பேச,
சசி தரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதனால் தன் அண்ணனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு தான் பேசுவது ஒன்றும் புரியவில்லை என்பது நன்கு புரிய, நேரடியாக விசயத்துக்கு வந்தான்.
“உனக்கும் மதிலாவுக்கும் என்ன பிரச்சனை...?” என்று கேட்டான். அந்த கேள்வியில் ஒரு கணம் முகம் கருத்துப் போனது சசிக்கு.
“உன்னை வேதனை படுத்தணும்னோ இல்லை காயப்படுத்தாணும்னோ நான் இந்த கேள்வியை கேட்கல சசி... எல்லாருக்கும் காபியை கையில குடுக்குற பொண்ணு புருசனுக்கு மட்டும் கீழே வச்சிட்டு போறான்னா இதை எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியாம தான் உன் கிட்ட கேட்கிறேன். உங்களுக்கு கல்யாணம் ஆகி இன்னும் முழுசா ஐந்து வருடம் கூட முடியல. அதுக்குள்ள இந்த இடைவெளி ஏன்னு தான் கேட்கிறேன்” என்று அண்ணன் கேட்க கேட்க சசிதரனுக்கு முகம் வெளுத்துப் போனது.
“இந்த விசயத்துல நான் தலையிடுவது உனக்கு பிடிக்காம கூட இருக்கலாம். ஆனா உன்னை விட வயசுல பெரியவனா, குடும்ப பாரத்தை தாங்குறவனா, தாம்பத்தியம்னா என்னன்னு உன் அண்ணி மூலமா புரிஞ்சுக்கிட்டதுக்கு பிறகு நான் தலையிடலாம்னு நினைக்கிறேன்...” என்றவனை ஏறெடுத்துப் பார்த்தான் சசிதரன். அவன் தோள் மீது கை போட்டான் ஆறுதலாக.
இயல்பாகவே தொட்டு பேசுவது எல்லாம் கிடையாது. ஆண் பிள்ளைகளுக்கு பதினைந்து ஆனாலே கூட பிறந்த அண்ணன் தம்பி எல்லோரும் பங்காளின்னு சொல்லுவாங்க... சொத்தை அடிப்படையா வச்சு இந்த பழமொழி வந்தது.
அதோடு இயல்பாகவே அண்ணன் தம்பிகளுக்கு இடையில் ஒரு இடைவெளியும் வந்து விடுகிறது. அதுவும் திருமணம் என்று ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு இடைவெளி இங்கு உத்தமனுக்கும் சசிதரனுக்கும் இடையே விழுந்து இருந்தது.
எதுத்தாப்பில் வந்தால் கூட சின்ன தலையசைப்பு கூட இல்லாமல் தான் இதுநாள்வரை இருந்தார்கள் இருவரும். கேட்டா கேட்ட கேள்விக்கு பதில் வரும் அவ்வளவு தான். ஆனால் முதல் முறை தன் அண்ணன் தன்னை நாடி வந்து பேசியதோடு தன் மீது ஆறுதலாய் கைப் போட்டவனின் செயலில் சற்றே நெகிழ்ந்துப் போனான் சசிதரன்.
உத்தமனின் கரம் மீது தன் கரத்தை சில கணங்கள் வைத்தவன்,
“எனக்கும் புரியல ண்ணா எப்படி இந்த இடைவெளி எங்களுக்குள்ள விழுந்ததுன்னு... ஆனா இப்போ தீர்க்கவே முடியாத அளவுக்கு போயிடுச்சு. எங்க ரெண்டு பேருக்குள்ள பேச்சு வார்த்தையே இல்லாம போயிடுச்சு” என்றான் வேதனையாக.
“எல்லாத்தையும் மாத்தலாம் சசி... கொஞ்சம் சிரமம் தான். ஆனா இதை இப்படியே விட்டா இன்னும் இடைவெளி அதிகமாகும். அதோட இந்த இடைவெளிக்கு பழகிட்டோம்னா பிறகு துணையோட அருகாமை இல்லாமலே நம் மனசு வாழப் பழகிடும். பிரிவு நிரந்தரம் ஆகிடும் சசி... பிரிவு ஆரம்ப கட்டத்துல இருக்கும் பொழுதே மனசு விட்டு பேசிடு..” என்று அவன் எடுத்து சொல்ல,
“ரொம்ப தயக்கமா இருக்குண்ணா... இரவு பக்கத்துல கூட படுக்க மாட்டிக்கிறா... பிள்ளையை மட்டும் என்னோட சேர்த்து கட்டில்ல போட்டுட்டு அவ கீழ தான் தூங்குறா..” என்று வேதனையுடன் சொல்ல சட்டென்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டான் உத்தமன்.
எந்நேரமும் கூடல் கொள்ள வில்லை என்றாலும் மனைவி அருகில் படுத்து இருப்பதில் கூட சில ஆண்களுக்கு மனம் நிறைந்துப் போகும். அந்த மன நிறைவை கூட கொடுக்காமல் மதிலா இருக்க சசி தரனுக்கு இன்னும் வேதனையாகிப் போனது.
கடந்த காலங்களை எல்லாம் நினைவு கூர்ந்தவனுக்கு நெஞ்சில் யாரோ மலையை தூக்கி வைத்தது போல இருந்தது. இறக்கி வைக்க முடியாமல் இதுநாள் வரை அல்லாடியவன் மனசு விட்டு பேச ஆள் கிடைக்கவும் தன் மன குமுறல் எல்லாவற்றையும் தன் அண்ணனிடம் கொட்டினான்.
“ஆரம்பிக்கிறது கொஞ்சம் கடினமா தான் இருக்கும் சசி. ஆனா ஆரம்பிக்காம விட்டுட்ட அப்படின்னா வாழ்க்கை முழுக்க வேதனையா போயிடும்...” என்றவன்,
“ஊட்டிக்கு ரெண்டு டிக்கெட் போடுறேன்... ரெண்டு பேரும் போயிட்டு வாங்க... பிள்ளையை மதிலா அம்மா கிட்ட குடுத்துட்டு ஒரு எட்டு போயிட்டு வாங்க. எல்லாம் சரியா போகும். அதோட ஊட்டிக்கு போறதுக்கு முன்னாடியே இங்க வச்சே சில விசயங்கள் எல்லாம் பேசிடு. இந்த கசடுகளை எல்லாம் ஊட்டி வரை எடுத்துட்டு போகாத... அப்பா, அம்மா, ராசியையும் எங்காவது வெளியே போயிட்டு வர சொல்றேன். பேசிடுங்க” என்று ஆறுதல் சொன்னவன் சிறிது நேரம் தம்பியுடன் இருந்து மேலும் கொஞ்சம் பேசிவிட்டு, மத்தியம் சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு கிளம்பினான்.
அதை சொல்லவும் உமைக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
“மதிலாவுக்கு ரொம்ப சந்தோசம்ங்க. நீங்க இதை செய்துக் கொடுத்ததில்... அவங்க வாழ்க்கை சீர் பெற்று விட்டதுன்னு நினைக்கிறேன்...” என்று அவள் சொல்ல,
“விட்டா நல்லா கதை கேட்படி நீ... ஒழுங்கா எனக்கு தர வேண்டியதை குடு... இல்லன்னா பிறகு அவ்வளவு தான்” என்று அவளை மிரட்டி தனக்கு வேண்டியதை வாங்கிகொண்டான் உத்தமன்.
“அழிச்சாட்டியம் பண்றீங்கங்க...” என்று போர்வையை சரிய விடாமல் இழுத்து போர்த்திக் கொண்டாள். அவளுடன் அவனும் நெருங்கிக் கொண்டே,
“மாமா சொல்லுடி...” என்றான்.
“முடிஞ்சா என்னை சொல்ல வைங்க... அதை விட்டுட்டு எப்போ பாரு மாமா சொல்லு மாமா சொல்லுன்னுட்டு...” என்று அவனை உசுப்பேத்தி விட்டாள் உமை.
“ஓஹோ... என்கிட்டயே சவாலாடி... இரு உன்னை மாமா மாமான்னு புலம்ப விடல என் பேரு உத்தமன் இல்லடி...” என்று அவள் மீது சரிந்தவன் அதன் பிறகு அங்கு பெண்ணவளின் மாமா மாமா என்கிற முணகல்களும் கொலுசொலியின் இசையோடு அவள் அணிந்து இருந்த மெட்டியின் மெல்லிசையும் இணைந்து இசைத்தது...!
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌