வணக்கம் தோழமைகளே...
நேற்றைக்கு ஒரு குட்டி சர்ப்ரைஸ் னு சொல்லி இருந்தேன் இல்லையா...
அதற்கான அறிவிப்போடு வந்து இருக்கிறேன்... எழுத வந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களை தொட்டு விட்டேன். இதில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்து விட்டேன். ஆனால் மாறாமல் எனக்கு தொடர்ந்து ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த நட்புகள் தோழமைகளும் நீங்க மட்டும் தான். என் வாசக தோழமைகளுக்கு நான் இதுவரை எதுவும் செய்தது இல்லை. தனி சைட் வைத்தால் ஏதாவது செய்ய எண்ணி இருந்தேன். இதோ அதற்கான நேரம் வந்து விட்டது..
நான் எழுதும் ஒவ்வொரு கதைகளுக்கும் நீங்கள் உங்க கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.
அந்த அன்புக்கு என் தலை தாழ்ந்த வணக்கம் தோழமைகளே...
அந்த அன்புக்கு கைமாறாக நான் பரிசுகளை கொடுக்க நினைக்கிறேன்.
அதை “காதல் வீசும் முந்தானை சோலையே” கதையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
இந்த கதைக்கு அதிகமாக கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளும் முதல் மூன்று நபருக்கு பரிசாக என் புத்தகங்கள் வழங்கப்படும்.
புத்தகம் விரும்பாதவர்களுக்கு பணமாக பரிசுகள் வழங்கப்படும்.
சைட்டிலும் கருத்துகளை தெரிவிக்கவும். பேஸ்புக்லையும் உங்க கருத்துக்களை தெரிவிக்கலாம். தனி போஸ்ட்டாகவோ இல்லை மீம்ஸ் வீடியோஸ் கவிதை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களது முயற்சிக்கும் ஆதரவுக்கும் பரிசுகள் காத்துக் கொண்டு இருக்கிறது.
இது ஒவ்வொரு கதைக்கும் தொடரும் தோழமைகளே... உங்களது மேலான கருத்துக்களுக்கு என்னுடைய சின்ன பரிசு இது.
தொடர்ந்து கைக்கோர்த்து பயணிப்போம் தோழமைகளே...
வளர்க்க அன்பு நெறி
அன்புடன்
ரம்யா ராஜ்
Wow super writer🤩
Nice....yen antha pullaiya ipdi payamuruthareenga...ye yappa antha mudiya vettitu avakitta pesuda...