தமிழுக்கு தான் பிரம்மிப்பாய் போனது. “என்னடா இது பார்த்து கொஞ்ச நேரத்திலே எப்படி இவ்வளவு உரிமையா பேசுறாங்க...?” என்று விழி பிதுங்கிப் போனாள். அவள் பெரிதாக யாருடனும் பேசி பழகுவது இல்லை. ஆனால் இவர்கள் மூவரும் அவளின் வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்கி பேச வைத்து விட்டார்கள்.
அதுவும் சிவன் சொல்லவே வேண்டாம்... தமிழை கேலி செய்தே ஒரு வலி செய்தான். சக்தி அண்ணனோடு இணை சேர்ந்துக் கொண்டு அவளை வைத்து செய்தான்.
மூவரும் கலகலத்துக் கொண்டு இருப்பதை பார்த்த பூவரசி,
“அப்படியே மூணு பேரும் வெளிய போய் அரட்டை அடிங்க... அங்க சமையல் வேலை மந்தமா போயிட்டு இருக்கு. நைட்டு எல்லோரும் வருவதற்குள் ரெடி ஆகி இருக்கணும். மேற்பார்வை பாருங்க ஓடுங்க” என்று விரட்டி விட்டார்.
“இல்ல ஆன்டி நான் இங்க உங்களோட இருக்கேன். ஏதும் வேலை இருந்தா சொல்லுங்க” என்றாள்.
“இந்த ம்மா வேலை செய்யவே பிறப்பெடுத்த மாதிரி பேசுது பாரேன் அண்ணா” என்று நக்கல் பண்ணினான் சக்தி.
தமிழ் அவனை முறைத்தாள்.
“அப்படி தான் போலடா” என்று சிவன் சொல்ல,
“நீங்க ஒரு கல்லூரிக்கு கரஸ்பாண்டன்ட் சார். அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க” மிரட்டியவள், பூவரசியிடம் வந்து நின்றுக் கொண்டாள்.
“அப்போ நீங்க ரெண்டு பேரும் வெளியே போங்கடா” என்று சொன்னவர் தமிழை அழைத்துக் கொண்டு உள்ளே போக,
“முடியாது” என்று சக்தி தமிழின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான். அவர்களோடு சிவனும் வேக நடை எடுத்து வைத்து வெளியே போக பூவரசி மற்றும் வள்ளியின் இதழ்களில் சிரிப்பு முகிழ்த்தது.
“போதும் போதும்... இங்க வந்து வேலையை பாருங்க ரெண்டு பேரும்” நாச்சியார் சொல்ல அதன்பிறகு வேலை படுவேகமாக நடந்தது.
வெளியே வந்த மூவரும் ஒரே அரட்டை தான். அதே சமயம் சமையல் வேலையை தூரிதப்படுதினார்கள். பாதி ஊரையே இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இருந்தார்கள். வந்த அனைவருக்கும் பரிசுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இது எல்லாம் தமிழுக்கு புதிதாக இருந்தது. அவளின் பாட்டியும் வருவதாக சொல்லி இருந்தார். ஏனெனில் நாச்சியார் அவரை வருத்தி அழைத்து இருந்தார்.
போகும் பொழுது தாத்தா பாட்டியோடு போய் விடலாம் என்று எண்ணி இருந்தாள் தமிழ். அதனால் நேரம் ஆவதை பற்றி கவலை கொள்ளவில்லை.
அவளோடு சக ஆசிரியர்கள் வர ஆரம்பிக்க, சிவன் சக்தி இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு முன்னாடி வந்து அவர்களோடு அமர்ந்துக் கொண்டாள்.
தேவையில்லாமல் பூவரசி மேடமோடு ஒட்டி உறவாடி இவர்களின் வாய்க்கு அவள் ஆக வேண்டாம் என்று முடிவெடுத்தவள் ஓரமாய் போய் அமர்ந்துக் கொண்டாள்.
இங்கே பாட்டி, “எங்க போனா அந்த பொண்ணு” என்று சுற்றி முற்றி பார்த்தவர் அவள் இல்லாமல் போகவும்,
“தமிழு... தமிழு” என்று ஏலம் போட்டார் அவளை. இங்கே கூடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு பாட்டியின் குரல் கேட்க,
“இவங்க ஏன் என்னை கூப்பிடுறாங்க?” என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே,
உள்ளிருந்து வந்த சிவன், “தமிழு பாட்டி உன்னை கூப்பிடுறாங்க. இங்க வந்து என்ன பண்ற? உள்ள வா” என்று அவளை கை பிடித்து கூட்டிக்கொண்டு போக சுற்றி இருந்த ஆசிரியர்களின் பார்வை அவளை குத்தி கிழிப்பது போல இருந்தது. அவளால் நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.
மேலும் மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியது போலவே தோன்றியது.
“இதோ வந்திடுறேன்” என்று வாய்க்குள் முணகிக் கொண்டவள் சிவனின் கையில் இருந்து தன் கையை எடுத்துக் கொள்ள பார்க்க அவனோ அவளின் கையை விடவே இல்லை.
அவளை கொண்டு போய் பாட்டியிடம் விட்டவன், “நீ இங்கயே இரு. அங்க போகாத” என்று சொன்னான். அதை காதில் வாங்காதவளாய்,
“கூப்பிட்டீங்களா பாட்டி?” பாட்டியிடம் கேட்டாள்.
“ம்ம்ம்... வந்தவங்களுக்கு காபி, ஜூஸ் ஏதாவது குடுக்கலாம்ல. நீ பாட்டுக்க போய் உட்கார்ந்துட்ட...” என்று சொன்னவர்,
“அடியே சாந்தி.. இங்க வா” என்று வேலைக்கார பெண்ணை கூப்பிட்டு, “வந்தவங்களுக்கு கொறிக்க மிக்சர், முறுக்கு, தட்டை எல்லாத்தையும் எடுத்து தட்டுல வை. தமிழு போய் எல்லாருக்கும் குடு” என்று வேலை ஏவினார்.
கண்ணு முழி பிதுங்கியது பாட்டியின் அதிகாரத்தில். சரி என்று தலையை ஆட்டியவள் எல்லோருக்கும் முதலில் கொறிக்க குடுத்தவள், அதன் பிறகு காபியை எடுக்க உள்ளே வர, கூட வந்த சக ஆசிரியர்களும் உதவிக்கு வர,
நாச்சியாரோ, “தமிழு அதை பார்த்துக்குவா நீங்க போய் உட்காருங்க” என்று சொல்லி விட, வேலை செய்வது போல அப்படியே வீட்டையும் சுற்றி பார்க்க எழுந்த ஆசை முறிந்துப் போனதில் அந்த ஆசிரியர்கள் மீண்டும் அமர்ந்துக் கொண்டார்கள்.
ஆனால் தமிழின் மீது பொறாமை இன்னும் வலுத்தது. “ஏங்க கிட்ட இல்லாதது அவ கிட்ட மட்டும் அப்படி என்ன இருக்கு?” அவர்களுக்குள் முணுமுணுத்து கொண்டு இருந்தார்கள். தமிழ் அந்த வீட்டில் மிக சுதந்திரமாக வளைய வருவதை இவர்களால் ஏனோ தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு வருடமும் இந்த விழாவுக்கு வந்தாலும் கூடத்தோடு வந்து வணங்கி விட்டு எழுந்து சென்று விடுவார்கள். ஆனால் தமிழ் அப்படி இல்லையே.. அவளுக்கு கிடைத்த உரிமை அவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று அவள் மீது பொறாமை அதிகம் எழுந்தது.
அதுவும் அவர்கள் கண் பார்க்க பூவரசி தன் கழுத்தில் இருந்த சங்கிலியை கழட்டி அவளுக்கு போட்டு விட்டவர் கூடவே சின்ன முத்து மாலையும் அதோடு சேர்த்த வைர அட்டிகை ஒன்றையும் போட்டு விட திகைத்துப் போனார்கள் அவர்கள்.
அவர்களே திகைத்து போனால் தமிழின் நிலையோ அதற்கும் மேல்..
“ஆன்டி நீங்க என்ன பண்றீங்க? எதுக்கு இதெல்லாம் போட்டு விடுறீங்க. நான் பாடிக்கிட்ட எடுத்து வர சொல்றேன். ப்ளீஸ் இதெல்லாம் வேணாம்” என்று சொன்னவளை கண்டுக்கொள்ளாமல் இன்னும் ஒரு டாலர் வைத்த சங்கிலியை மாட்டி விட்டவர்,
“நீ போட்டு இருக்க குட்டி சிமிக்கியை கழட்டிட்டு இந்த தொட்டி மாத்திடு” என்று அவளின் கையில் முத்தும் வைரமும் வைத்த பூ போட்ட தோட்டை கொடுத்து விட்டு அவர் நகர,
“இதென்னடா வம்பா இருக்கு. இவங்க எல்லாம் ஏன் இப்படி பண்றாங்க.. முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கு போய் இதை எல்லாம் குடுக்கலாமா? நான் அபப்டியே எடுத்துக்கிட்டு போயிட்டா இவங்க என்ன பண்ணுவாங்களாம்..” என்று முணகியவள், கையில் இருந்த தோட்டை அணிந்துக் கொண்டாள்.
அவள் போட்டு இருந்த சிமிக்கையை எங்க வைப்பது என்று தெரியாமல் பூவரசியிடம் கொடுக்க வர,
“இந்தா சாவி... அங்க அந்த அறையில ஒரு அலமாரி இருக்கும் அதுல வச்சு பூட்டிட்டு வந்திடு” என்றார். தலையை ஆட்டியவள் அங்க போய் வச்சுட்டு வெளியே வர எதிரே வந்த ஆளை கவனிக்காமல் போய் இடித்துக் கொள்ள,
“ஸ்ஸ்...” என்று நெற்றியை நீவி விட்டுக் கொண்டாள். செம்ம இடி.. வலித்தது.
“யாரு இப்படி கண்மண் தெரியாமல் வராது” என்று கேட்டுக் கொண்டே நிமிர்ந்து பார்க்க ஒரு பெரிய உருவம், முகம் முழுக்க கரடி மாதிரி முடியடர்ந்து போய் இருந்தது. நெற்றியை மறைத்து இருந்தது தலையிலிருந்து தொங்கிய முடி. மீதம் இருந்த கொஞ்ச இடை வெளியிலும் பெரிய கூலிங் கிளாஸ் போட்டு மொத்தமாக மறைத்து இருந்தான்.
“எவன்டா இது கரடிக்கு அண்ணன் போல இருக்கிறான்” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவள்,
“நகர்ந்து நில்லுங்க சார்... இப்படி தான் வழியை மறைச்சுக்கிட்டு நிக்கிறதா? அடுத்தவங்க போகணும்னு சென்ஸ் இல்ல” கேட்டுக் கொண்டே அவனை விட்டு ஒதுங்கி போக பார்த்தாள். ஏனெனில் அவன் ஒரு நூல் அளவு கூட நகரவில்லை.
“இப்படியா மரம் மாதிரி நிக்கிறது.. இடியட்” வாய்க்குள் திட்டிக் கொண்டே அவனை கடந்துப் போனவளை தலையை திருப்பி ஒரு பார்வை பார்த்தது அந்த உருவம். அந்த உருவத்தின் கண்கள் நொடியில் சிவந்து போனது தெரியாமல் பாட்டியிடம் விரைந்தாள்.
“வேற எதுவும் வேலை இருக்கா பாட்டி?”
“ஆமா இந்தா இந்த காபியையும் ஸ்நேக்சையும் கொண்டு போய் இப்ப வந்த அந்த மலை மாட்டுக்கு குடுத்துட்டு வா” என்றார்.
அவர் சொல்லாமலே அந்த மலைமாடு யார் என்று அவளுக்கு புரிய சிரிப்பு வந்தது.
“அய்யோ பாட்டியது மலைமாடு இல்ல. அது காட்டு கரடி” தனக்குள் சொல்லிக் கொண்டவள், தட்டை எடுத்துக் கொண்டு அந்த அறைக்கு சென்றாள்.
“ஸ்நேக்ஸ் குடுத்துட்டு வர சொன்னாங்க” என்று உள்ளே நுழையும் பொழுதே சத்தம் குடுத்துக் கொண்டே நுழைந்தாள்.
அந்த கரடி என்ன நிலையில் இருக்கும் என்று தெரியாதே. அதனால் முன்னெச்சரிக்கையாக சத்தமிட்டுக் கொண்டே சென்றாள்.
வெற்று உடம்போடு கண்ணாடி முன்பு நின்று இருந்ததான் அவன். ஆனால் கண்ணில் இருந்து கண்ணாடியை அவன் அகற்றவில்லை.
“கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி இந்த மனுசனுக்கு இந்த கண்ணாடி போல” முணகிக் கொண்டவள் அங்கிருந்த மேசை மேல் தட்டை வைத்து விட்டு நகர அவளின் முந்தானை இழு பட்டது. அதில் பதறியவள் வேகமாய் திரும்பி பார்க்க, அவளின் சேலை முந்தானை அவனுக்கு அருகில் இருந்த மேசையின் ஆணியில் சிக்கி இருந்தது.
“ச்ச ஒரு மனுசனை அதுக்குள்ள தவறா நினைச்சுட்டமே” என்று எண்ணியவள் முந்தானையை ஆணியில் இருந்து அகற்றிக் கொண்டு வெளியேற போக,
“ஹவ் ஆர் யூ மிஸ்செஸ் அகத்தியன்” என்று கடினமான குரல் அவளது காதில் ஒலிக்க சட்டென்று அவனை திரும்பி பார்த்தாள்.
நிதானமாக கண்ணாடியை கழட்டியவன் கூர்மையான விழிகளால் அவளை அளந்தான். அவனது பார்வையில் விக்கித்துப் போனவளுக்கு மயக்கமே வருவது போல இருந்தது.
அவனது விழிகள் அவளுக்கு மிக பரிச்சையமானது ஆயிற்றே.. திருமணம் ஆனா பொழுதில் அவள் மிகவும் ஆசையாக இரசித்த விழிகள் ஆயிற்றே. அதன் பிறகு அவளை மிகவும் கலவரப்படுத்திய கண்களும் இதே கண்கள் தானே. எஸ் அந்த கண்களுக்கு உரியவன் அவளது கணவன் அகத்தியன் தான்.
அவனை இங்க கொஞ்சம் கூட எதிர் பார்க்காதவள் ரொம்பவே தடுமாறிப் போனாள். சுவரை பிடித்து நின்றவளுக்கு பேயறைந்த உணர்வு தான் வந்தது.
தன்னை கண்டு மிரண்டு முழிப்பவளை காண காண ஆத்திரம் சுழன்று எழ, அவளை ஒரே அடியில் நெருங்கியவன் அவளின் கழுத்தை இறுக்கமாக பற்றி அப்படியே சுவரோடு தூக்க அதிகமாக பயந்துப் போனாள் தமிழ்.
இந்த ஆரமிச்சுட்டான் அவன் வேலையை🤣🤣🤣🤣🤣🤣🤣
ஏங்க ரைட்டர், என்னங்க இது ?????
அகா வா இப்படி மாரிட்டான் 😳😳😳😳😳
தட் கிழவி, இப்படியா பச்சா ஓட்டரது பேரனை🤧🤧🤧🤧🤧🤧
என்ன இவளும் இவளோ டேமேஜ் பண்றா😤😤😤😤😤
பாவம் அவன்.....
யாரு அகத்தியன் பாவமா.. 🙄 🙄 . இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லடா.. பாவம்தமிழ். என்னோட முழு சப்போர்ட் அவளுக்கு தான். பின்ன காட்டு கரடி மாதிரி இருக்கிறவனை மன்மதன்னா சொல்ல முடியும். பாட்டிக்கே தெரிஞ்சு இருக்கு அவரோட பேரனைபத்தி 🤣 🤣
யாரு அகத்தியன் பாவமா.. 🙄 🙄 . இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லடா.. பாவம்தமிழ். என்னோட முழு சப்போர்ட் அவளுக்கு தான். பின்ன காட்டு கரடி மாதிரி இருக்கிறவனை மன்மதன்னா சொல்ல முடியும். பாட்டிக்கே தெரிஞ்சு இருக்கு அவரோட பேரனைபத்தி 🤣 🤣
இல்லையா பின்ன....
அவ பாவமா????
அவளை பத்தி தப்பா பேசின அவ சித்தியை கேட்க முடியல.....
இப்ப வரை அவளை எல்லாரும் தாங்க தான் செய்யறாங்க....
ஆன அகவா????
அவன் ஒன்னும் ரொம்ப நல்லவன் இல்ல தான்...
ஆன உங்க தமிழ் அவனுக்கு என்ன மாதிரி பேரு வாங்கி வந்துட்டு போனா????
அது சரியா???
இப்ப அவன் இருக்கற நிலைக்கு காரணம் அவ தான்....
இவளை இன்னும் எல்லாரும் pamper பண்ணிட்டு தானே இருக்காங்க...
யாருமே இல்லாத அக தான் பாவம்
இவ தான் ஒன்னு அந்த extreme... இல்லனா இந்த extreme....
ஆரம்பத்திலே கேட்டு இருக்கணும் அவனை...
அதை விட்டுட்டு😬😬😬😬😬
டேய் அவ வளர்ந்த விதம் அந்த மாதிரி. ஆனா அவளை பத்தி தெரிஞ்சுக்காம அவளை தவறா நினைச்சி அசிங்கப்படுத்தி விட்டான் தானே. அந்த வலி அவளுக்கு. அதனால் அவனை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அசிங்கப்படுத்தி விட்டாள் டா😜😍
சரி, இவ அவனை பத்தி என்ன தெரிஞ்சி வெச்சி இருந்தா முதலில்????
அப்ப இவனுக்கு எந்த வலியும் இல்லைனு சொல்றீங்களா ரைட்டர்????
விரும்பி கல்யாணம் பண்ண பெண்....அப்படி இல்லைனு அவனுக்கு ஏமாற்றம் இல்லையா???
அதை விட, அவன் இன்னும் அவளை தாமரை பெண்ணா தான் நினைச்சி இருக்கான்...
அவன் எப்படி தாய் மகளின் வாழ்க்கையை கெடுப்பாங்கனு யோசிப்பான்?????
இவங்க ஃபேமிலி பாலிடிக்ஸ் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே????
Oh அப்ப அவ வளர்ந்த விதம் தான் அப்படி அவனை அசிங்க படுத்த தூண்டியதா?????
சொல்லுங்க ரைட்டர் சொல்லுங்க😁😁😁😁😁
@gowri இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் அடுத்த அடுத்த பதிவுகளில் வரும் இப்பவே சொன்னா சஸ்பென்ஸ் பொயிடும் டா. பட் அவனை எப்படி தான் பழிவாங்குவது. அவளுக்கு தெரிஞ்ச வழி அதுதான் 🤣🤣