தமிழும் பூவரசியும் ஒன்றாக அதுவும் அவரின் காரிலே அவளை அழைத்து செல்வதை பார்த்து பள்ளிக்கூடத்தில் இருக்கும் அத்தனை ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் கண்கள் தெறிக்க பார்த்தார்கள்.
“வந்த உடனே புளியங்கொம்பா புடிச்சுட்டா பாரேன். எங்கிருந்து தான் வருவாளுங்களோ” என்று பொறமை பிடிச்சவர்கள் பேச,
“ஏன் இப்படி பேசுறீங்க.. அந்த பொண்ணு பூவசி மேடமோட சொந்தக்கார பொண்ணாம்” ஒருவர் பிரிந்து பேச,
“ம்கும் மேடம்க்கு சொந்ததுல பொண்ணு இல்லாததுனால தான் தூரத்துல எங்கையோ அவங்க மகனுக்கு கல்யாணம் செய்து வச்சாங்க. மறந்து போச்சா” என்றார் இன்னொருவர்.
“அதானே.. அப்போல்லாம் வராத சொந்தக்கார பொண்ணு இப்போ மட்டும் வந்து இருக்குன்னா. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு” வம்பு பேசும் ஆட்கள் அவர்களுக்குள் தமிழை வறுத்து எடுத்தார்கள்.
அதெல்லாம் தெரியாத தமிழ் பூவரசியோடு அமர்ந்து ஐஸ்க்ரீமை இரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
“இதுக்கு முன்னாடி உங்களை நான் எங்கையோ பார்த்து இருக்கேன் மேடம்” என்றாள் தமிழ்.
“ஸ்கூல்ல தான் மேடம்னு கூப்பிட சொன்னேன்.. இங்க இல்ல” என்றார் அவர்.
“இப்ப அதுவா முக்கியம்?” என்றாள் இவள்.
“அதுவும் முக்கியம்” என்றார் இவர் அழுத்தமாக.
“அப்ப்பாபா ரொம்ப தான் பிடிவாதம் பிடிக்கிறீங்க ஆன்டி நீங்க” அலுத்துக் கொண்டவள்,
“சொல்லுங்க நீங்க என்னை எங்கயும் பார்த்து இருக்கீங்களா?” கேட்டாள்.
“ம்ஹும் ஞாபகம் இல்ல” என்று உதட்டை பிதுக்கினார்.
“ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதோ என்னவோ ஆன்டி... எனிவே... நாம குட் பிரெண்ட்ஸ் ஓகே” என்றாள் இயல்பாக.
“யா அப்கோர்ஸ்” என்றார் பதிலுக்கு. பின் “தென் வாட் நெஸ்ட்?” அவளிடம் கேட்டார்.
“வேறென்ன வீட்டுக்கு போக வேண்டியது தான்” என்றாள்.
“ஹே போர் பண்ணாத.. ஷாப்பிங் போகலாமா?” அவளிடம் சிறு பிள்ளையாய் கேட்டார்.
“தாத்தாட்ட கேட்கணுமே?”
“நான் பேசிக்கிறேன்” என்றவர் உடனே தாத்தா பாட்டியிடம் அனுமதி கேட்டு அருகில் இருக்கும் மாலுக்கு கூட்டி சென்றார்.
“மூவி பார்க்கலாமா?” என்றார்.
“கார்ட்டூன் மூவி இருக்கா?” கேட்டாள்.
“ம்ம் புதுசா லான்ச் பண்ணி டப்பிங்க்ல இருக்கு... இல்லன்னா டைரெக்ட் லாங்குவேஜ்ல இருக்கு.. எதுல வேணாலும் பார்க்கலாம்” என்றார்.
“நம்ம ஆளுங்க அழகா டப்பிங் பண்ணி குடுத்து இருப்பாங்க. டப்பிங் மூவிக்கே போகலாம்” என்றாள்.
“கரெக்ட் சாய்ஸ்...” என்றவர் டிக்கெட் எடுத்துக் கொண்டு தமிழை கூட்டிக்கொண்டு சென்றார்.
போகும் பொழுதே கேரமல் பாப்கான், பேப்பர் பாப்கான் என வாங்கிக் கொண்டார்கள்.
டப்பிங்கில் வந்த படம் சிரிப்பை தூண்டும் விதமாக இருக்க கலகலத்து சிரித்தார்கள் இருவரும்.
இரண்டு மணி நேரம் பீல் ப்ரீ யாக உணர்ந்தார்கள்.
“நெஸ்ட் ஷாப்பிங்” என்று தமிழே சொல்ல,
“நல்ல மாற்றம்” என்றார் பூவரசி புன்னகையுடன்.
“சும்மா சும்மா கிண்டல் பண்ண கூடாது ஆன்டி” சிறு பிள்ளையாய் சிணுங்கினாள்.
“அதெப்படி முடியும்?” என்று அவர் அவளது காலை வாரிவிட, அவரின் தோளில் தொற்றிக் கொண்டாள் மழலையாய்.
“நீங்க சோ ஸ்வீட் ஆன்டி” என்று கொஞ்சியவள் ஏனோ அவரிடம் தன் தாயை உணர்ந்தாள். அதை உணர்ந்து சட்டென்று அமைதியாகி விட,
“என்னாச்சு தமிழ்?” அவளை ஆராய்ந்தார்.
“இல்ல நான் ரொம்ப உங்கக்கிட்ட உரிமை எடுத்துக்குற மாதிரி இருக்கு ஆன்டி. என்னவோ என் அம்மா மாதிரி உங்களை பீல் பண்ண வைக்கிறீங்க” என்றாள் எந்த ஒளிவு மறைவும் இல்லமால்.
பூவரசிக்கு கண்கள் கலங்கியதோ என்னவோ...
“நான் உன் அம்மா இல்லடா” என்றார் அவர்.
தமிழ் அழுத்தமாய் தலையை ஆட்டிக் கொண்டாள். அவளுக்கும் அம்மாவுக்கான ஏக்கம் உள்ளுக்குள் இருக்கிறது தானே.. என்ன ஒன்று அதை யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டாள்.
இன்று அவளையும் மீறி அது வந்துவிட தவித்து தான் போனாள்.
அவளின் தவிப்பை பார்த்த பூவரசி, அவளின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு,
“உன் அம்மா நான் இல்ல தான். ஆனா உனக்கு ஒரு அம்மாவா நான் எப்பவும் இருப்பேன் உன் கூட.. எந்த சூழ்நிலையிலும்” என்றார் அவர் மிக மிக அழுத்தமாக.
“ஆன்டி” என்று அவள் அதிர்ந்தாள். பூவரசியிடம் இருந்த உறுதியை கண்டு திகைத்து தான் போனாள். ஏனெனில் பூவரசியிடம் ஒரு எள்ளளவு கூட பொய்மை இல்லை. உனக்காக நான் அன்னையாக இருப்பேன் என்று அவர் வெறும் வாய் வார்த்தையாக சொல்லவில்லை. இருப்பேன் என்கிற உறுதி பாட்டை நன்றாகவே அவளுக்கு உணர்த்தினார்.
“எஸ் இது நான் உனக்கு குடுக்குற வாக்கு. அதே போல நீயும் எனக்கு ஒரு வாக்கு குடுக்கணும் தமிழ்” என்றார் தீர்க்கமாக.
உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், “என்ன ஆன்டி?” கேட்டாள்.
“நான் ஏது செய்தாலும் அது உன் நல்லதுக்கு தான். அதை நீ புருஞ்சுக்கணும்” என்றார்.
“புரியல ஆன்டி” என்றவளை நிதானமாக பார்த்தவர்,
“நான் எது செஞ்சாலும் நீ எனக்கு ஒத்துழைக்கனும் தமிழ். உன் சம்மந்தப்பட்ட முடிவுகளை நீ என் கையில ஒப்படைக்கணும்” என்றார்.
“ஆன்டி” என்று அதிர்ந்துப் போனாள். பூவரசியை திகைத்துப் போய் பார்த்தாள். பழகின கொஞ்ச நாள்லயே இதென்ன இப்படி ஒரு ஆளுமை குணத்தை காட்டுகிறார் என்று தோன்றியது.
“இப்போ நான் பேசுறது உன்னை காயப்படுத்தும். ஐ நோ. பட் உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னை மீறி நீ எதுவும் செய்ய மாட்டன்னு” சொன்னவர் புடவைகளை பார்க்க ஆரம்பிக்க, இவளுக்கு பெரும் குழப்பமாய் போனது.
“ஏன் இருந்திருந்த வாக்கில் இவங்க இப்படி எல்லாம் பேசுறாங்க... என் கூட பழகுறதுல எதுவும் உள்நோக்கம் இருக்குமா?” தலைக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. ஏனோ பூவசியோடு அவளால் ஒன்ற முடியவில்லை.
ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பதை போல காட்டிக் கொண்டாள். பூவரசி திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தார். அவளின் தடுமாற்றம் நன்றாகவே புரிந்தது.
ஆனாலும் அலட்டிக் கொள்ளவில்லை. அவளுக்கும் சேர்த்து அவர் புடவை எடுக்க,
“இது என்னோட கடமை தமிழ்... பிரிச்சு பார்க்காத” என்றார். அவரை மறுக்கவும் முடியவில்லை.
“நானும் எடுத்து தருவேன்” என்றாள்.
“தாராளமா” என்றார் எந்த வித பிகுவும் இல்லாமல். அவரின் நேர்த்தியை மனதில் கொண்டு அவரின் நிறத்துக்கு ஏற்றார் போல் அவள் புடவை எடுத்து குடுக்க மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.
இயல்பாக அவர் பேசி பழக இவளுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. பிறகு நேரம் ஆக ஆக அவளால் அவரோடு மிங்கிள் ஆவதை தடுக்கவே முடியவில்லை.
இருவரும் இன்னும் நெருங்கிப் போனார்கள். இரவு பத்து மணிக்கு தான் அவளை வீட்டில் இறக்கி விட்டார். அதுவும் வரும் பொழுதே அவளை உண்ண வைத்து தான் அழைத்து வந்திருந்தார்.
தாத்தா பாட்டியின் முகத்தில் ஒரு நிறைவு இருப்பதை உணர்ந்த தமிழுக்கும் நிம்மதியாக இருந்தது.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்தவாறே அவளை ஷாப்பிங், கோயில், குளம், மால், சினிமா என எல்லாவற்றுக்கும் அழைத்துக் கொண்டு போய் விடுவார் பூவரசி.
இருவரும் ஒன்றாய் கடலை சாப்பிட்டுக் கொண்டே ரோட்டோர சந்தையை சுற்றி வருவதே கொண்டாட்டமாக இருக்கும். தோழிகளோடு அரட்டை அடித்தபடி சுற்றி திறந்த காலத்தை மறுபடியும் அவளது கையில் ஒப்படைத்த பூவரசியின் மீது இன்னும் அழுத்தமான ஒரு பிடிப்பு வந்தது தமிழுக்கு.
பூவரசிக்கும் இளமை துள்ளும் பெண்னவளோடு சேர்ந்து ஊரை சுற்ற ஆசையாக ஆசையாக இருக்கும். தமிழின் கையை கோர்த்துக் கொண்டு வளம் வருவது இளமை காலங்களுக்கே போய் விட்ட உணர்வை கொடுத்தது அவருக்கு.
இருவருக்குள்ளும் நட்பு இறுகி போய் விட்டது. வாரத்தில் நான்கு நாட்கள் மாலை நேரம் இப்படி தான் கழியும். சனி ஞாயிறு விடுமுறை வேற மாதிரி கழியும். சனி ஞாயிறு என்றால் தமிழின் வீட்டுக்கு காலையிலே வந்து விடுவார் பூவரசி.
இருவரும் சேர்ந்து சமைத்து வயல் வெளிக்கு சென்று நாற்று நாடுகிறேன், களை பறிக்கிறேன் என்று இன்ஸ்ட்டாவில் போஸ்ட் போட்டு அலப்பறை செய்வார்கள்.
அந்த வாரம் இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று தமிழின் முன்பு வந்து கோவமாக அமர்ந்தார் பூவரசி.
அவரின் கோவம் நியாமானது தான். ஆனால் அவளால் இயலாதே..
“சாரி ஆன்டி.. ப்ளீஸ். என்னை கம்பெல் பண்ணாதீங்க” என்று தலையை குனிந்துக் கொண்டாள்.
“இன்னைக்கு பூஜை இருக்கு தமிழ். நீ வந்து தான் ஆகணும். அப்படியே என் வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும். அதனால நீ வர. வந்து தான் ஆகணும்” என்றார் பிடிவாதமாய்.
“நான் உங்க வீட்டுக்கு வரலன்னு சொல்லலையே ஆன்டி. வரேன் ஆனா இன்னைக்கு வேணாம்” என்றாள்.
“அது தான் ஏன்?”
“இன்னைக்கு வரலக்ஷ்மி பூஜை” என்றாள் தலையை குனிந்துக் கொண்டு.
“சோ”
“என் கழுத்துல தாலி இல்லை ஆன்டி. என்னால எப்படி அந்த பூ...ஜையில... கலந்துக்க முடியும்” கூறும் பொழுதே அவளுக்கு கண்கள் கலங்கி இருந்தது.
“அது தான் உன் பிரச்சனையா?” கேட்டார்.
“அது மட்டும் தான் பிரச்சனை” என்றாள் அழுத்தமாக.
“இதுக்காகவே நீ கண்டிப்பா வர” என்று சொன்னவர் அவள் எவ்வளவு சொல்லி பார்த்தும் கேட்காமல் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார். அதோடு மற்ற ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுத்து விட்டு சென்றார்.
எப்பொழுதும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொள்வார்கள் இந்த நிகழச்சியில். அதனால் எல்லோருமே வீட்டில் இருந்து மாற்று புடவை எடுத்துக் கொண்டு வந்து இருந்தார்கள். அங்கேயே மாற்றிக் கொண்டு ஆறு ஆறரை மணி போல கிளம்பி ஏழு மணிக்கு பூவரசியின் வீட்டுக்கு வந்தார்கள்.
அதற்குள் இங்கே பூவரசி வீட்டுக்கு வந்த தமிழை ஒரு அறையில் விட்டு,
“புது புடவை, உன் அளவுக்கு ரவிக்கை தச்சு பெட்ல எடுத்து வச்சு இருக்கேன். குயிக்க ரெடியாகி வா தமிழ் வேலை இருக்கு. நீ தான் எல்லாம் செய்யணும்” என்று விட்டு போய் விட்டார் பூவரசி.
பெருமூச்சு விட்டவள் வேறு வழியில்லாது குளியல் அறைக்குள் நுழைந்து தலைக்கு குளித்தவள் அவர் எடுத்து வைத்து இருந்த இளம் சிவப்பு வண்ண ஜார்ஜெட் புடவையை உடுத்திக் கொண்டாள்.
முடியை விரித்து விடாமல் நுனியில் கொண்டை போட்டு முடிந்துக் கொண்டவள் கண்களுக்கு மட்டும் மையை தீட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.
வந்தவளின் தலையில் நான்கு முழ மல்லிப்பூவை சூட்டி விட,
“இப்போ வேணாம் ஆன்டி... முடி காயல, காஞ்ச பிறகு தலை சீவி வச்சுக்குறேன்” என்றவள் கொஞ்சமாய் பூவை நறுக்கி கூந்தல் முடிச்சில் வைத்துக் கொண்டு, “என்னென்ன செய்யணும்.. எப்படி செய்யணும் ஆன்டி” என்று கேட்டு கேட்டு அவள் செய்ய, அவளையே விழிகள் எடுக்காது பார்த்தார் பூவரசி.
“என்ன ஆன்டி” என்று அவள் கேட்க,
“ஒன்னும் இல்ல தங்கம்” என்று அவளின் முகத்தை வழித்து நெட்டி முறித்தவர்,
“என் மாமியார வர சொல்றேன். அவங்க சொல்றபடி செய் மா” என்றார். தலையை ஆட்டினாள் அவள்.
தள்ளாத வயது என்றாலும் கிண்ணென்று வந்த பாட்டியை பார்த்து கொஞ்சம் மிரட்ச்சி தான் தமிழுக்கு. ஏனெனில் ஆனானப்பட்ட பூவரசயையே ஆட்டி படைப்பவர் ஆயிற்றே இந்த வேலுநாச்சியார். அதனால் உள்ளுக்குள் உதறல் எடுத்தது அவளுக்கு.
ஹே i got it....
இந்த பூவரசி தான் அக ஓட மம்மி....
வேலு, அவனோட பாட்டி.....
அது தான் பூவரசியை பார்த்தா எங்கோ பார்த்த மாதிரி இருக்கு....
டீச்சர்ஸ் பொறாமை பட காரணம், பூவரசி தான், அந்த ஸ்கூல் ஓனர்....
அவங்க அவ அம்மா இல்ல தான் மாமியார்...
சரியா ரைட்டர்😁😁😁😁
அடேய் ஒரு ட்விஸ்ட் உங்கக்கிட்ட வைக்க முடியுதா...
இப்படியா எல்லா பிட்டையும் சேர்த்து வச்சு உடைக்கிறது...
போங்க போங்க... 🙄 🙄
ஹஹஹா கரெக்ட் டா 😍 😘