“கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு நிக்கிற உங்கக்கிட்ட என்னத்தை சொல்லி என்னை நிரூபிக்க.. ஆனா என் மேல ஒரு தப்பும் இல்லை. அது ஒரு நாள் உங்களுக்கே கண்டிப்பா தெரியவரும். என் வாழ்க்கையை யார் கெடுக்குறாங்கன்னு எனக்கு தெரியல.. ஆனா நிச்சயம் காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்...” என்றாள் நிதான மனதோடு. எப்போ அவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை பரித்தானோ அப்பொழுதே அவன் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பிடித்தமும் முழுதாக அற்றுப் போனது.
முழு வாழ்க்கையும் வெறுத்துப் போனது அவளுக்கு.. கண்மூடி கண் திறக்கும் முன்பே அவளின் திருமண வாழ்க்கை முடிந்து போய் விட்டது. இதை தானே தாமரை எதிர்பார்த்தது. நினைத்தது நடந்து விட்ட மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை அவருக்கு.
இப்பொழுது தான் உண்ட உணவு செரித்தது போல இருந்தது தாமரைக்கு. தன் மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் இருக்க பெரும் பாடு பட்டுப் போனார்.
தமிழ் முழுதாக மாறிப்போனாள். யாரிடமும் பேசவில்லை. பாட்டி தாத்தா என் அவர்களிடமும் பேசவில்லை. செல்லப்பாவுக்கு தன் மகளின் நிலையை எண்ணி கவலை தான். ஆனாலும் தன் மனைவியை மீறி மகளிடம் செல்ல முடியவில்லை.
தமிழுக்கு ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை. எந்த காரணமும் இல்லாமல் தன்னை தவறாக சித்தரிக்க வேண்டும். என் வாழ்க்கையை இந்த அளவுக்கு எதற்கு சதி செய்யணும் என்று ஒன்றுமே புரியவில்லை.
ஆனால் அது யார் என்று தெரிந்தே ஆகவேண்டும் என்ற முனைப்பு இருந்தது அவளுக்கு. அவளின் காயங்கள் எல்லாம் ஆறும் முன்பே தன் தோழிகள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் அந்த மார்பிங் வீடியோஸ் எல்லாவற்றையும் யார் செய்து இருப்பார்கள் என்று கண்டு கொண்டவள் ஆவேசத்துடன் தாமரையின் முன்பு வந்து நின்றாள்.
அவள் வந்த வேகத்தை பார்த்தே உண்மையை கண்டு பிடித்து விட்டாள் என்று தெரிந்துக் கொண்டார் தாமரை. ஆனாலும் கொஞ்சம் கூட அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை.
முன்பை விட சோபாவில் இன்னும் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டார். அவருக்கு அருகில் தான் அவளின் அப்பாவும் அண்ணனும் அமர்ந்து இருந்தார்கள். சாமி அறையில் இருந்த பாட்டி இவள் வரும் வேகத்தை பார்த்து தாத்தாவை அழைக்க உள்ளே சென்றார் பதறிக் கொண்டு. ஏனெனில் அவ்வளவு ஆவேசமாக வந்த வந்தாள் தமிழ்.
தமிழ் அடங்கிப் போகும் ஒரே இடம் தாத்தா மட்டும் தானே. அதனால தன் கணவனை அழைத்து வர சென்றார் பாட்டி.
தாமரையின் திமிரை பார்த்துக் கொண்டு வந்த தமிழோ,
“ஏன் இப்படி என் வாழ்க்கைய கெடுத்தீங்க. நான் உங்க அக்கா பொண்ணு தானே.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம என் மேல தகாத பழியை போட்டு என் குடும்ப வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டீங்களே.. ஏன் இப்படி பண்ணீங்க? அப்படி என்ன உங்களுக்கு நான் பண்ணேன். உன் மகள் தானே நானு... பாசம் காட்டி இப்படி மோசம் பண்ண தான் என்னை இத்தனை வருடமா வளர்த்தீங்களா?” ஆக்ரோஷமாக கேட்டவளை ஏளனமாக பார்த்த தாமரை,
“பாசமா அதுவும் உன் மேலையா? நீயா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் காரணம் ஆக முடியுமா?” கேட்டார்.
அதில் உள்ளுக்குள் அடி வாங்கினாலும்,
“சரி பாசம் இல்ல... ஆனா ஒரு பொண்ணுங்குற முறையில யாவது நீங்க நடந்து இருக்கலாமே?” கட்டுக் கடங்காத கோவத்துடன் கேட்டாள்.
“நீ சொன்னியே அது தான் காரணம்...” என்றார் தோரணையாக.
அதற்குள் தாத்தா வந்து விட்டார்.
“புரியல” என்றாள்.
“தங்கம் என்னடா இது... ஏன் இப்படி இவ்வளவு கோவமா இருக்க?” அவளின் கையை வந்து பிடித்துக் கொண்டார்.
“கொஞ்ச நேரம் இருங்க தாத்தா” என்றவள், தாமரையின் புறம் திரும்பி,
“புரியல என்ன சொல்றீங்க?” கேட்டாள்.
“சொந்த அக்காவையே சொத்துக்காக என் புருசனை கல்யாணம் பண்ண வச்சேன், உன்னை அவ்வளவு சுலபமா விடுவேன்னு நினைச்சியா?” என்றார்.
விக்கித்துப் போனாள் தமிழ்.
“ரொம்ப அதிர்ச்சி ஆகாத... இங்க என்னை மீறி எதுவும் நடக்காது... உன்னை என் பிரெண்ட் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள” என்று அவரின் மாமனாரை ஒரு பார்வை பார்த்தார். பின் தமிழின் புறம் திரும்பி,
“இவரால தான் அந்த அகத்தியனை உனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டி வந்தது. அவன் எனக்கு அடங்கி இருப்பன்னு தோணல.. வந்த உடனே என்னையே அதிகாரம் பண்றான். அப்படி பட்டவனை உன் கூட வாழ விடுவேன்னு நீ எப்படி நினச்ச?” என்றார் படு ஏளனமாக.
“அதுக்காக இல்லாத பழியை எல்லாம் போடுவீங்களா? நீங்க என் மேல சுமத்தின பழி என்ன மாதிரின்னு தெரியுமா?” ஆத்திரத்தில் கேட்டாள்.
அவளின் ஆத்திரத்தை ரசித்து பார்த்த தாமரை, “தெரியாமலா உன் மேல அந்த பழியை போட்டேன்.. நல்லா ஆர அமர நிதானமா யோசிச்சு தான் இந்த பழியை உன் மேல போட்டேன்..” என்றார்.
“அது தான் ஏன்?” என்றாள்.
“ஏன்னா நீ நல்லா வாழக்கூடாதுன்னு தான்” என்றார் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“பாப்பா இங்க என்ன நடக்குது?” ஒன்றும் புரியாமல் தாத்தா தமிழிடம் கேட்டார்.
தமிழ் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சொல்ல அத்தனை பேரும் ஒரு கணம் ஆடி தான் போனார்கள். செல்லப்பாவுக்கு கூட தன் மகளின் நிலையை எண்ணி வருத்தம் எழுந்தது.
“ஒருத்தி இவ்வளவு வன்மம் கொண்டா இருப்பா” என்று பாட்டிக்கு திக்கென்று இருந்தது. ஒன்றும் அறியாத தமிழின் வாழ்க்கையை இப்படி கெடுத்து விட்டு வன்மத்தின் உச்சியில் இருப்பவளை பார்க்கப் பார்க்க பத்திக் கொண்டு வந்தது. ஆனால் அந்த கோவத்தை அப்படியே காட்டி இன்னும் தாமரையின் வெறுப்பை சம்பாதிக்க விருப்பம் இல்லாமல் தீர்க்கமாக ஒருமுடிவை எடுத்தார்.
இதுக்கு மேலும் தன் பேத்தியை இங்க விட்டு வச்சா நாளைக்கு அவ தலையில கல்லை தூக்கி கொண்டு போட்டாலும் போட்டு கொன்று போட்டு விடுவாள் இந்த ராட்ச்சசி. அதுக்கு முன்னாடி நாம சுதாரிச்கிக்கணும் என்று எண்ணினார்.
அவர் இப்படி எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே அவரின் கணவன் தன் மருமகளிடம் சண்டைக்கு போக, அவரின் கையை அழுத்தமாக பற்றி தடுத்தார் பாட்டி.
தன்னை தடுத்த மனைவியை உக்கிரமாக பார்த்தார் தாத்தா.
“என்னை தடுக்காத செல்லம்மா.. என் பேத்தி வாழ்க்கையை கெடுத்துட்டு இவ எவ்வளவு திமிரா உட்கார்ந்து இருக்கா பாரு. பார்க்க பார்க்க ஆத்திரமா வருது. அப்படியே இவளை கொன்னு போடனும் போல வெறியா வருது” என்றவரை நிதானமாக பார்த்த செல்லம்மா,
“இப்போ இவளை கொல்றதுனால நம்ம பேத்தியோட வாழ்க்கை சரியாகுமா என்ன?” வேதனையுடன் கேட்டவர்,
“இனிமேலும் நாம இங்க இருக்குறது சரியா இருக்காது.. முதல்ல மாப்பிள்ளை கிட்ட எல்லா விசயத்தையும் சொல்லலாம். அவரு கிட்ட நம்ம பேத்தியை ஒப்படைக்கிறது தான் நல்லது” என்றார். அதை கேட்ட தமிழுக்கு அவ்வளவு கோவம் வந்தது.
“பாட்டி நீங்க என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? மறுபடியும் அவனோடயா.. இனி செத்தாலும் அவன் முகத்துல கூட முழிக்க மாட்டேன்.. மனுசனா அவன் எல்லாம். அவனெல்லாம் வாழவே தகுதி இல்லாத ஜந்து” என்று வெறுப்புடன் சொன்னாள்.
“இங்க பாரு தங்கம் அப்படி எல்லாம் பேசக்கூடாது” பாட்டி அதட்ட,
“பாட்டி ப்ளீஸ்... இந்த விசயத்துல யாரும் தலையிடாதீங்க. நீங்க மூணாவது மனுசனா வெளில இருந்து பார்த்தீங்க.. ஆனா நான் அப்படி இல்லை அவனோட சேர்ந்து வாழ்ந்து இருக்கேன். அவனை பத்தி எனக்கு தான் நல்லா தெரியும்... அதனால தான் சொல்றேன் அவனோட எல்லாம் வாழவே முடியாது. அவன் ஒரு மிருகம்” என்றவள் தன் தந்தையை பார்த்தாள்.
அவள் பார்க்கும் பார்வையில் தலையை குனிந்துக் கொண்டார் செல்லப்பா..
“முதுகெலும்பே இல்லையா?” என்று ஏளனமாக எண்ணியவள் அண்ணனை பார்த்தாள். அவன் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல போனில் மூழ்கி இருந்தான்.
அது தானே.. தாமரையின் ரத்தம்னா இப்படி தானே இருக்கும் எண்ணியவள்,
“நான் இந்த வீட்டை விட்டு கிளம்புறேன்” என்றாள்.
“சோத்துக்கு என்ன பண்ணுவ?” நக்கலுடன் கேட்டார் தாமரை.
“பிச்சை எடுத்தாலும் எடுப்பேன். ஆனா சத்தியமா உங்கக்கிட்ட வந்து நிற்க மாட்டேன்” என்றவள் கிளம்பி விட்டாள் தன் செர்டிபிக்ட்சை மட்டும் எடுத்துக்கொண்டு.
அவளோடு தாத்தாவும் பாட்டியும் கிளம்பி விட்டார்கள். தங்களின் கிராமத்துக்கு அவளை அழைத்து சென்றார்கள். அங்கே இருந்த மிதமான காலநிலையும் அமைதியும் தோப்பும் துறவும் அவளுக்கு பெரும் அமைதியை கொடுத்தது. அவள் மனதில் இருந்த காயங்களுக்கு அந்த இயற்கை மருந்துப் போட்டது.
வயல் வேலையை மேற்பார்வை பார்த்த தாத்தா இலக்கின்றி எங்கோ வெறித்துக் கொண்டு இருந்த பேத்தியை மனம் கணக்க பார்த்தார்.
பாட்டிக்கும் ஒரே வேதனை தான். தன் ஒரே பேத்தியின் வாழ்க்கை இப்படி ஆரம்பிக்கும் பொழுதே முடிந்து விட்டதே என்று நொந்துப் போனார்.
அதுவும் தமிழ் இருக்கும் மனநிலையில் அவளை நெருங்கி ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை அவரால்.
தலையை வருடி விட்டாலே, “நான் நல்லா தான் இருக்கேன் பாட்டி. எனக்கு ஒன்னும் இல்லை” என்று சொல்லி விட்டு அவரை விட்டு எழுந்து தனியாக போய் அமர்ந்துக் கொள்வாள்.
இல்லை என்றால் போய் படுத்து விடுவாள். அப்படியும் இல்லை என்றால் வயலுக்கு போய் தனித்து அமர்ந்து விடுவாள். அவளை சோறு உண்ண வைப்பதற்குள் இருவரும் பாடாய் பட்டு போய் விடுவார்கள். இது தான் அவளது நிலை. எதிலிருந்தும் அவளால் வெளிவரவே முடியவில்லை. சொந்தங்களே அவளின் வாழ்க்கையை பந்தாடியது ஒரு பக்கம் என்றாலும் ஒவ்வொரு இரவும் தன் தாலியை அவிழ்த்து வைக்க சொல்லி சொன்ன கணவன் அதை நிரந்தரமாக அவிழ்த்து வைக்க தான் ஒத்திகை பார்த்து இருக்கிறான் என்று அறிந்தவளுக்கு அகத்தியனின் மீது அவ்வளவு வெறுப்பு எழுந்தது.
அதுவும் அபாண்டாமாய் தன் மீது பழிச்சொல் விழ அதை ஆராய்ந்து பார்க்க கூட தோன்றாமல் தன் ஒழுக்கத்தை அவனே மதிப்பீடு செய்து தண்டனையும் வழங்கிய செயலை அவளால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அகத்தியனால் ஏற்பட்ட காயங்கள் முற்றிலும் ஆறிப்போய் இருந்தது. இவளது நிலை இப்படி இருக்க அங்க அகத்தியனோ குடியும் கும்மாளமுமாக இருந்தான்.
இதுநாள் வரை மதுவின் பக்கமே போகாதவன் இப்பொழுது எல்லாம் அது இல்லாமல் அவனால் இருக்கவே முடியவில்லை. அதுவும் அவனது கன்னத்தில் இருந்த தழும்பு அவனை உள்ளுக்குள் கிழறி விட்டுக் கொண்டே இருக்க அகத்தியன் இன்னும் இன்னும் மிருகமாய் மாறிப்போனான்.
தொடரும்...
இனி தான் அவன் அப்படி மாறனுமா என்ன😬😬😬😬
அவன் already அப்படி தானே😤😤😤😤
@ramya-devi ஹுக்கும் நீங்க தான் அவனை மெச்சுக்கணும்😏😏😏😏😏
அவன் ஒரு வகை லூசுனா, இவளும் அவனுக்கு சலைச்சவ இல்ல🤦🤦🤦🤦🤦