“ஏன் செஞ்சா என்னை இப்படி கொடுமை படுத்துற?” வேதனையுடன் கேட்டவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான். வாசுகியும் பின்னோடு வர,“அதெல்லாம் ஒன்னும் வேணாம்... நான் பார்த்துக்குறேன் மா” என்று அவரை வெளியே நிற்க வைத்தவன் தான் மட்டும் உள்ளே நுழைந்தான்.
மருத்துவமனையின் அறையின் உள்ளே நுழைந்த சங்கவைக்கு கண்களெல்லாம் இருட்டிக் கொண்டு வந்தது.
“இந்த செஞ்சன் ஏன் தான் இப்படி இருக்காரோ? என் கண்ணு முன்னாடியே அவரோட உறுப்பை தானம் செய்ய தான் வேண்டுமா? என்னால அதை பார்க்க முடியுமா? என் நிலையை பற்றி கொஞ்சமும் இவரு யோசிக்க மாட்டேங்குறாரே..” வாய் விட்டு புலம்பியவளை ஸ்டேக்ஸரில் படுக்க சொல்ல, திகைத்துப் போனாள்.
“இல்ல எனக்கு ஒன்னும் இல்லைங்க சிஸ்டர்... என் ஹஸ்பெண்டு தான்” என்று சொல்ல வரும் முன்பே,
“நீங்கதானே மிசெஸ் செஞ்சன்” நர்ஸ் கேட்க, சங்கவை தலையை ஆட்டினாள்.
“அப்ப இது உங்களுக்கு தான்” என்றவர் அவளை அந்த ஸ்டெக்ஸரில் படுக்க வைத்து நகர்த்திக் கொண்டு போக, மிரண்டுப் போனாள்.
அவளின் கையை ஒரு வலிமையான கை திடமாக பற்றிக் கொள்ள மூடிய விழிகளை திறந்துப் பார்த்தாள் சங்கவை. செஞ்சடையன் தான் நின்று இருந்தான்.
“இங்க என்னங்க நடக்குது? என்னை ஏன் இதுல வச்சு கூட்டிட்டு போறாங்க.. எனக்கு பயமா இருக்குங்க” என்றவளின் கையை இன்னும் அழுத்தி பிடித்தவன்,
“ஒன்னும் இல்லடி... உனக்கு புல் பாடி செக்கப் தான் செய்ய கூட்டிட்டு போறாங்க.. வேற ஒன்னும் இல்லை.. நீ கவலை படாத” என்றவனை இன்னும் அதிர்ந்துப் போனாள்.
“அதுக்கு என்னங்க இப்போ அவசியம் வந்தது? நான் நல்ல தானே இருக்கேன்” என்றவளின் முகத்தோடு முகம் வைத்து அவளை நாடியவன்,
“இனியும் நல்லா இருக்கணும் இல்லையா? அதுக்கு தான்டி” என்றான்.
“ஹாங்...” என்று அவள் விழிக்க,
“இவ்வளவு நாள் உன்னை படுத்தியது போதும்னு உன் மாமியார் சொல்லிட்டாங்க. அதோட இழந்து போனதை பற்றி கவலை படாம, மேலும் மேலும் உன்னை போட்டு டார்ச்சர் பண்ணாம, மீதி இருக்குற காலத்துல உன்னை கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன்டி”
“அதோட முதல் படி தான் உன்னோட ஆரோக்கியம். எனக்கு நீ எந்த குறையும் இல்லாம இருக்கன்னு தெரிஞ்சிக்கணும். அப்போ தான் எந்த உறுத்தலும் இல்லாம உன் கூட என்னால குடும்பம் நடத்த முடியும் கண்ணம்மா.. இனிமே உன்னையும் வருத்தி என்னையும் வருத்த படுத்த மாட்டேன்..” என்று சொன்னவனை நம்ப முடியாமல் பார்த்தாள் சங்கவை.
“செஞ்சா” என்று அவள் அதிர்ந்து அழைக்க,
“எனக்காக நீ எவ்வளவோ இன்னல்களை அனுபவித்து இருக்க.. அதுக்கெல்லாம் என்னால என்ன செய்ய முடியும் சொல்லு... என் உடம்புல உயிர் இருக்கிறவரை உன்னை என் உயிருக்கும் மேலா பார்த்துக்குவேன் கண்ணம்மா” சொன்னவனை விழிகளில் நீர் நெகிழ பார்த்தாள்.
“இவ்வளவு நாள் உன் காதல்ல என்னை திணற வச்ச... இனி என் காதல்ல நீ திணறிப்போக போற பாரு... அய்யா சும்மாவே காதல் மன்னன். இப்போ சபதம் வேற போட்டு இருக்கேன்... சொல்லவும் வேண்டுமா” மீசையை முறுக்கியவன் அவன் சொன்னபடி அடுத்து வந்த நாட்கள் அத்தனையிலும் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.
அவளின் உடல் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று தெரிந்த பிறகே அவளை முழுமையாக நாடினான். அதோடு குழந்தைக்கும் அதன் பிறகே அவன் ஏற்பாடு செய்ய, தன் மீது அவன் காட்டும் ஒவ்வொரு நேசத்திலும் சுகமாக தொலைந்துப் போனாள் சங்கவை.
இருவரின் நெஞ்சமிடையே விரிந்த காதல் பல காலகட்டங்களை தாண்டி, பல சோதனைகளை தாண்டி மீண்டும் இருவரிடையே மிக அழகாக விரிந்து காதலுக்கு கர்வத்தை சேர்த்தது.
காதலன் எவ்வளவு காயம் கொடுத்தாலும் அத்தனையையும் ஏற்றுக் கொண்டு வாழ்வதோடு அவனையே தன் வாழ்க்கையாக ஏற்றுக் கொண்ட சங்கவையின் காதலில் அந்த காதலே வியந்து தான் போனது.
சங்கவைக்கு முழு மருத்துவ பரிசோதனையும் முடிந்த பிறகே வெளியே வந்த செஞ்சனை அடிக்க பாய்ந்தார் வாசுகி.
அவரிடம் நடந்ததை விளக்கமாக சொன்னாள் சங்கவை.
அதில் நம்ப முடியாமல் தன் மகனை பார்த்தார் அவர்.
“நம்பு ம்மா.. உன் மருமகளை என் கண்ணோட கண் மணி போல பார்த்துக்குறேன்... என்னால அவ பட்ட துயரத்தை எல்லாம் முழுமையா உணர்ந்துட்டேன். இனி அவளை எக்காரணத்தை கொண்டும் துயரப்படுத்த மாட்டேன். என் தேவதை ம்மா அவ...” என்று உருகியவனை உயிர் கசிந்து பார்த்தார் வாசுகி.
அவரும் இதை தானே அவனிடம் இருந்து எதிர் பார்த்தார். விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவர் இருவரையும் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
அன்றிரவே அவர் ஊருக்கு கிளம்ப, செஞ்சனும் சங்கவையும் வாடிப் போனார்கள்.
“அடேய் மக்கு பசங்களா... ஒழுங்கா ரெண்டு பேரும் ஒரு மாதம் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கிட்டு சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க... அடுத்த பேருந்துல ஓடி வந்திடுறேன்” என்று இருவரையும் ஆசீர்வாதம் செய்தவர் ஊருக்கு கிளம்பி விட்டார்.
அவரை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டுக்கு வந்தவர்களுக்கு ஏனோ புதிதாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது போல இருந்ந்தது. அத்தனை தயக்கம் பெண்ணவளிடம் தென்பட,
“குளிச்சுட்டு வரேன்டி” என்று அவன் குளியல் அறைக்குள் நுழைந்துக் கொள்ள, சங்கவைக்கு அதிகமாக பதற்றம் ஏற்பட்டது.
அடி வயிற்றிலும் முதுகு தண்டிலும் மின்னல் வெட்டிப் போக தவித்துப் போனாள்.
அவன் விரைவில் வந்து விட,
அவளை பார்த்துக் கொண்டே தன் மேனியில் இருந்த ஈரத்தை துடைத்த்தவன், அவளின் காதோரம் “சிவப்பு நிற புடவை... ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ்.. ப்ரீ ஹேர்... லிப்ஸ்டிக் நோ... மை வேண்டும்” என்று அவன் அவனது தேவையை சொல்ல தலையை குனிந்துக் கொண்டு உள்ளே ஓடி விட்டாள்.
அவனது கோரிக்கை படி குளித்து வெளியே வந்தவள் தன்னை அலங்கரிக்க ஆரம்பிக்க வெட்கம் பிடுங்கி தின்றது. கழுத்தில் அவன் கட்டிய தாலியை தவிர வேறு ஒன்றும் இல்லாமல் பார்த்துக் கொண்டவளுக்கு தன் கழுத்தில் மீசை உரசும் உணர்வு தோன்ற வேகமாய் கண்ணாடியை பார்த்தாள்.
அவளுக்கு பின்புறம் வெற்று மார்புடன் அவளை உரசியபடி அவளின் கழுத்தில் தன் மீசையால் கோலம் போட்டுக் கொண்டு யிருந்தான்.
“இன்னும் எதுவும் செய்யலையே” அவன் சொன்னதில் பாதி தான் செய்து இருந்தாள்.
“மீதியை நான் பார்த்துக்குறேன்டி” என்று அவளின் காதோடு முணகியவன், மீசையால் குத்தி கிழிக்க, தவித்துப் போனாள்.
“செஞ்சா” என்று அவள் உயிர் நெகிழ,
“கண்ணம்மா” என்று உயிர் கரைந்தான் செஞ்சன்... அவனது விருப்பபடி கட்டிய சிவப்பு வண்ண புடவை எப்பொழுது அவிழ்ந்தது என்று கூட இருவருக்கும் தெரியவில்லை. மிக மென்மையாக அவளை அவன் தேட,
“ஏனாம்.. இவ்வளவு மேன்மை” என்று அவனை சீண்டி விட்டாள்.
“தாங்க மாட்டடி”
“அது என்னோட கவலை மிஸ்டர் செஞ்சா... டைவேர்ஸ் பேப்பர்” என்று அவள் எதையோ ஆரம்பிக்க,
“அதை அப்பவே தீ வச்சு கொளுத்திட்டேன்டி... நீ இப்போ என்னை மட்டும் பாரு” என்று கோவத்துடன் சொன்னவன் நறுக்கென்று அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
அவனது வன்மையான இதழ் தீண்டலில் வலி ஏற்பட,
“மெதுவா..” என்று அவனுக்கு அணை போட பார்த்தாள். ம்ஹும்... காட்டாற்று வெள்ளத்துக்கு யார் அணை போடுவது.
தன் விருப்பம் போல பெண்ணவளை வளைத்துக் கொண்டான். அவளின் மார்பில் முகம் புதைத்து அவளை சீண்டி விட்டவன், தன்னை அவளுக்கு முழுமையாக உணர வைத்தான். கூடவே அவளின் உடம்பில் அவனது இதழ்கள் படாத இடம் என்று எதுவுமே இல்லை.
முழுமையாக அவளிடம் ஆத்துமீறினான் செஞ்சன். அவனது அதிரடியில் திகைத்துப் போனாலும் அவனுக்கான தேடலில் கரைந்து தான் போனாள்.
இருவரின் காதலிலும் தேடலிலும் கட்டிலே வெட்கம் கொண்டு கண் மூட பார்த்தது. பெண்ணவளின் காதலின் வீரியத்தை நன்கு உணர்ந்துக் கொண்ட செஞ்சடையன் அவளை தங்க தட்டில் வைத்து தாங்காத குறையாக தன் கையணைவிலே வைத்துக் கொண்டான் வருங் காலங்கள் அத்தனையிலும்.
இவர்களின் காதலை கண்டு அந்த காதலே உருகி கசிந்துப் போனது. நெஞ்சமிடையே விரிந்த காதல் என்றைக்கும் மலர தான் செய்யுமே அன்றி தவறிப் போகாது. அதற்கு சிறந்த உதாரணம் இதோ செஞ்சடையன் மற்றும் சங்கவையின் காதல் வாழ்க்கை தான்.
“அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை...
கொஞ்சம் தா.. கொஞ்சம் தா...
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்தில்...” பெண்ணவளை முழுமையாக தன் வசமாக்கிக் கொண்டான் செஞ்சன்.
அவளின் மிச்ச உடைக்கும் விடுதலை கொடுத்து தன் கைகளில் அவளை ஏந்திக் கொண்டவன்,
“ஆடை ஏன் உன் மேனி அழகை
அதிகம் செய்கின்றது..
நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும்
காணாத உறவில்..
கை தொட்டும்...
மெய் தொட்டும்
சாமத்தில் தூங்காத விழியும்
சந்திப்பில் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
ஆங்கத்தில் யார் தந்தது..
சந்தத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தது...” என பாடல் வரிகளை ஒலிக்க விட்டவன், பெண்ணவளை முழுமையாக தனக்குள் சுருட்டிக் கொண்டான்.
எந்த சுயநலமும் பாராத காதல் இறைவனையே விஞ்சி நிற்கும் வல்லமை கொண்டது. இங்கே இவர்களின் இருவரின் காதலையும் கண்டு காலமும் சரி இறைவனும் சரி சற்றே நெகிழ்ந்து போய் அவர்களுக்கு தீர்க்க ஆயுளை கொடுத்து மன மகிழ்ச்சியை வழங்கி நூறாண்டுக்கும் மேலாக வாழ ஆசி வழங்கியவர்கள் அவர்களின் மகிழ்ச்சிக்கு எந்த இடையூறும் செய்யாமல் கிளம்பி விட்டார்கள்.
இதோடு நாமும் இவர்களிடம் இருந்து விடை பெறுவோம்...!
நன்றி...!
வளமுடன் வாழ்க..!
நைஸ் ஸ்டோரி ❤️