மூவரின் முகத்திலும் இருந்த சிரிப்பை கண்ட பரவாசுக்கு பத்திக் கொண்டு வந்தது. அனைவரையும் முறைத்துப் பார்த்தான். அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதுவே இன்னும் அவனுக்கு கோவத்தை கிளப்ப, ஏதோ கோவமாக சொல்ல வந்தான் அவன்.
“அமைதியா வந்து வண்டியில ஏறுறியா? இல்ல வண்டியை உன் மேல விட்டு ஏத்தவா?” என்று ஒரே போடாக போட்டு விட்டு திமிராக அவனை பார்த்தான் செஞ்சன்.
செஞ்சன் செய்தாலும் செய்வான் என்று அறிந்ததால் வாயை மூடிக் கொண்டு வந்து பின்னால் அமர்ந்தான். ஆனாலும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று உள்ளுக்குள் பொறுமி போனான்.
அவனது பொறுமலை பார்த்து செஞ்சன் வாய் விட்டு சிரிக்க,
“என் நேரம் சிரிடா சிரி” என்று கடுப்படித்தான். அவனை மேலும் வம்பிழுத்துக் கொண்டு வந்த செஞ்சன் சங்கவை இறங்கும் இடம் வர அவளோடு சேர்ந்து தானும் இறங்கியவன்,
“நானும் இங்கயே இறங்கிக்கிறேன்...” என்று சொன்னவன், காரை அனைத்து சாவியை தூக்கி பின்னால் இருந்த பெண்ணிடம் போட்டவன்,
“புது லவ்வர்ஸ்.. உங்களுக்குள்ள ஆயிரத்தெட்டு விசயம் இருக்கும்... நடுவுல நாங்க எதுக்கு நந்தி மாதிரி.. சோ நாங்க கிளம்புறோம்.. என்ஜாய் கைய்ஸ்” என்று சொல்ல,
“மச்சான் இன்னும் ரெண்டு முறை என்ன கார்ல இருந்து தள்ளி விட்டாலும் விடு.. ஆனா இப்படி இவக்கிட்ட தனியா என்னை விட்டுட்டு போகாதடா... மச்சான்.. டேய்... மச்சான்... நான் உன் ஆருயிர் நண்பன் தானே..” என்றவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சங்கவையின் தோள் மீது கை போட்டுக்கொண்டு போனவனை, “டேய்... டேய்... மச்சான்... அடேய் செஞ்சா...” எவ்வளவு அழைத்து பார்த்தும் செஞ்சன் திரும்பவே இல்லை.
திரும்பி பார்க்க முனைந்த சங்கவையையும் விடவில்லை. இழுத்துக் கொண்டு போய் விட்டான். வேகமாய் கார் கதவை திறக்க பார்த்த பரவாசுவை முறைத்த அந்த பெண் அவனை அப்படியே பின் சீட்டில் தள்ளி அவனின் இதழ்களோடு தன் இதழ்களை புதைத்தாள்.
உயிரை தொடும் அந்த இதழ் முத்தத்தில் முழுமையாக கிறங்கிப் போனவன் அந்த பெண் தன் இதழ்களை மீட்டுக் கொள்ளவும் பரிதாபமாய் அவளை ஏறிட்டான்.
“முத்தம் குடுக்க மட்டும் நான் வேணும். ஆனா சார் கல்யாணம் செய்துக்க மாட்டீங்களோ?” கடுப்படித்தாள் அவள்.
“நிவி ப்ளீஸ் டி... இன்னும் உன் இதழ்களை தாயேன்...” முத்தத்துக்கு கெஞ்சிக்கொண்டு இருந்தவனை பார்த்து சிரிப்பு வரா,
“அப்போ தாலியை கட்டு” என்று மஞ்சள் கயிறை அவன் முகத்துக்கு நேராக நீட்டினாள்.
“ஏதே ஒரு முத்தத்துக்கு ஒரு தாலியா? போடி எனக்கு முத்தமே வேண்டாம்” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரும்பி அமர்ந்தான்.
“அப்போ முத்தம் வேண்டாமா?” அவனை சீண்டினாள்.
“வேணும்..” என்று இழுத்தான்.
“அப்போ இந்தா இந்த தாலிய புடி” என்றாள் நிவேதா.. பரவாசுவை நீண்ட நாட்களாக ஒருதலையாக காதலிக்கும் காதலி.
“நிவி” பாவமாக அவன் பார்க்க,
“இன்னும் எத்தனை நாள் தான்டா என்னை காக்க வைக்க போற... உன் மேல உயிரையே வச்சு இருக்கேன்.. என் காதல் உனக்கு புரியவே புரியாதாடா” வேதனை நிறைந்த கண்ணீருடன் கேட்டவளை பாவமாக பார்த்தவன்,
“தங்கச்சி இருக்காடி” என்றான் உள்ளடங்கிப் போன குரலில்.
“எனக்கு போடுற நகையை வச்சு உன் தங்கச்சி கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்துவோம்டா. என் மேல நம்பிக்கை இல்லையா?” ஆதங்கத்துடன் கேட்டவளை பெருமூச்சு விட்டு பார்த்தவன்,
“யோசிக்க கொஞ்ச நேரம் குடுடி... நான் யோசிச்சுட்டு நல்ல முடிவா சொல்றேன்” என்கிற அளவுக்கு இறங்கி வந்தவனை அணைத்து முத்தம் குடுத்தாள். அதில் நெகிழ்ந்து போனவன் இவளை பற்றி தன் தாயிடம் இன்றே பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
--
“நிலையம் போலையா? இங்க என்னோட இறங்குறீங்க?” வியப்பாய் செஞ்சனை பார்த்து கேட்டாள் சங்கவை.
“உன்னை டிராப் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்... ஏன் வரக்கூடாதா?” என்றவனை முறைத்தவள்,
“நம்புற மாதிரி சொல்லுங்க செஞ்சா..” என்றாள்.
“ஒரு சின்ன மீட் இருக்குடி..” என்றான் சிரிப்புடன்.
“அப்போ அந்த மீட் பெர்சென் நீங்க தானா?”ஆச்சரியமாக கேட்டாள்.
“எஸ் நம்ம வானொலி சார்பாக தான் இந்த மீட்” என்றான்.
“வாவ்...” என்றவள்,
“சொல்லவே இல்லையே...” போலி கோவம் கொண்டாள்.
“முன்னாடியே சொன்னா என்னடி சர்ப்ரைஸ்” கண் சிமிட்டியவன்,
“நாளைக்கு மருத்துவமனைக்கு போகணும்” என்றான். அதில் அவளது முகம் மாறிப்போக, அவளை அழுத்தமாக பார்த்தவன்,
“நீயும் கூட வா” என்றான்.
“முடியாது...” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“நீ வந்து தான்டி ஆகணும்” என்றவனை வேதனையுடன் பார்த்தவள், தன்னை சடுதியில் மீட்டுக் கொண்டு,
“கம்பெல் பண்ணாதீங்க செஞ்சன். அந்த உரிமையை நீங்க இழந்துட்டீங்க” நறுக்கென்று சொன்னாள்.
“உரிமையை இழந்துட்டானா?” போலியாய் அதிர்ந்தான் செஞ்சன். அதில் கோவம் வந்தது. ஆனாலும் அவனிடம் ஒரு பொழுதும் தன் கோவத்தை காட்டாதவள் முதல் முறையாக,
“எப்போ விவாகரத்து காகிதத்தில் கை எழுத்து கேட்டீங்களோ அப்பவே உங்க உரிமையை நீங்க இழந்துட்டீங்க மிஸ்டர் செஞ்சன். அத்தைக்காக தான் இவ்வளவு நாளும் அந்த வீட்டில் இருந்தேன். ஆனா இனி அந்த வீட்டுல என்னால ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத அளவுக்கு நீங்க என்னை படுத்தி எடுக்குறீங்க... அதனால நான் இன்னைக்கே வேலை முடிஞ்சு வந்து உங்க வீட்டை காலி பண்ணிடுறேன்” என்றாள். அவளது சொற்களில் கோவம் இல்லை தான். ஆனாலும் பெரிய மனத்தாங்கல் இருக்க தான் செய்தது.
“அடியேய் கிறுக்கி... அது உன் வீடுடி... காலி பண்றதுன்னா நீ என்னை தான் வீட்டை விட்டு துரத்தி அடிக்கணும். அதை விட்டுட்டு நீ போறேன்னு சொல்ற” என்று நக்கல் செய்தான்.
அவனது நக்கலில் பொசு பொசுவென்று வந்தது அவளுக்கு. அதை அப்படியே செஞ்சனிடம் காட்ட,
அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,
“என்னை வீட்டை விட்டு கூட போக சொல்ல மாட்டியா கண்ணம்மா.. ஒரு சின்ன வெறுப்பு கூட இல்லாம எப்படிடி என்னை காதலிக்க முடியுது உன்னால... அவ்வளவு பிடிக்குமா இந்த செஞ்சனை” என்று உயிர் உருக கேட்டான்.
அவனது கேள்வியில் அவள் மௌனம் சாதிக்க,
“ம்ம்ம். உன் லவ்வு கிடைக்க குடுத்து வச்சு இருக்கணும். ஆனா பாரேன் இந்த மரமண்டை செஞ்சனுக்கு உன் அன்பை பத்தி ஒண்ணுமே தெரிய மாட்டிக்கிது.. ச்சு ச்சு” அவனோடு சேர்த்து அவளையும் அவனே கேலி செய்துக்கொள்ள,
“இண்டெர்வியூ எடுக்க வந்தா இண்டெர்வியூ மட்டும் எடுங்க மிஸ்டர் செஞ்சா... தேவை இல்லாமல் என் பின்னாடி சுத்தாதீங்க... வேஸ்ட் ஆப் டைம்” என்றவள் அவளுடைய இடம் வர, அவனை விட்டு ஒதுங்கி போய் விட்டாள்.
“ஹலோ வாய்ஸ் ஆர்டிஸ்ட்..” கத்தி அழைத்தான். அதில் திகைத்துப் போனவள் வேகமாய் திரும்பி அவனை முறைத்தாள்.
“ஐ லவ் யூ” கத்தி சொல்ல அவளின் விழிகள் இரண்டும் அதிர்வில் இன்னும் பெரிதாய் விரிந்தது.
“என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க செஞ்சா” அதிர்வின் உச்சத்தில் அவனை பார்த்து கேட்டாள்.
“ஏன் நான் ப்ரப்போஸ் பண்றது உனக்கு தெரியலையா?” நக்கலாகவே கேட்டான்.
“உங்களை எல்லாம் அடக்கவே முடியாது... என்னவோ பண்ணுங்க நான் போறேன்” அவள் போக,
“மிஸ்ஸஸ் செஞ்சன்” அவளை நிறுத்தினான். ஆற்றாமையுடன் திரும்பி பார்த்தாள் சங்கவை.
“மேடம் ரொம்ப சூடா இருக்கீங்க.. ஒரு கோல்ட் காபி வாங்கி தர்றீங்களா?” என்று கேட்டவனை உண்மையாகவே முறைத்துப் பார்த்தாள். பின்ன முறைக்காம என்ன செய்ய,
“சூடா இருக்கிறது அவள். அப்போ அவளுக்கு தானே கோல்ட் காபி வாங்கி தரனும். அதை விட்டு அவனுக்கு வாங்கி தரணுமாம் அவள்.. மீண்டும் அவாள் திரும்பி நடக்க ஆரம்பிக்க,
“ஷார்ப் லேவேனோ கிளாக் மீட்டிங்க்கு வந்திடுடி” என்று விட்டு முகேஷை பார்க்க சென்றான்.
அதன் பிறகு பதினோரு மணிக்கு மீட்டிங் ஆரம்பம் ஆனது. செஞ்சன் தான் தொகுத்து எடுத்தான். அவன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில்களை வாங்கிக் கொண்டவன், பலரது திறமைகள் வெளியே வர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைய அவனால் சில பல முயற்சிகள் மேற்கொண்டான். எப்பொழுதும் வானொலி நிகழ்வுகள் வீடியோவாக வெளியிட மாட்டார்கள்.
ஆனால் இந்த முகநூல் புத்தகம் வந்த பிறகு அதிலும் வானொலி கலந்துரையாடல்கள் எல்லாம் பதிவிடுவது சர்வ சாதாரணமாய் போனது. தங்களின் வானொலி க்காக முகநூல் புத்தகத்தை ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக கொண்டு சென்றுக் கொண்டு இருந்தார்கள்.
இப்பொழுது லைவாக இந்த மீட்டிங்கை அரேஞ் செய்ய எல்லோருக்கும் ஒரு பதட்டம் இருந்தது. செஞ்சன் தன்னுடைய குழுக்கு அழைப்பு விடுத்தது லைட்டிங், மைக் என எல்லாவற்றையும் சரியாக ஆர்கனைஸ் பண்ணிக் கொண்டான்.
சந்திப்பில் ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கும் எப்படி அவர்கள் குராலை மாற்றுகிறார்கள் என்பதை துல்லியமாகவும் அதனால் வளர்ந்து வரும் வாய்ஸ் ஓவர் பண்ணுபவர்களுக்கும் மிகப்பெரும் பாடமாக அந்த சந்திப்பு அமைந்தது.
எல்லோரையும் போல தான் சங்கவையையும் அவன் கையாண்டான். அதிகப்படியான ஒரு பார்வை கூட இருக்கவில்லை. வேலை என்று வந்து விட்டால் அவன் கண்ணியம் என்ற வட்டத்துக்குள் நுழைந்து விடுவான். அவன் ஆசை பட்டு செய்யும் வேலை. அதற்கு தகுந்த மரியாதையை அவனும் கொடுப்பான்.
இங்கும் அதே போல தன் கடமையை ஆற்றினான். சங்கவையையும் அதே போல தான். அவன் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில் சொன்னாளே தவிர ஒரு பார்வை கூட அதிகபடியாக ஆவல் பார்க்கவில்லை. ஆனாலும் மனைவி மீது கண்ணிய பார்வையை தவிர வேறு எதுவும் விழாததை கண்ட மற்றவர்கள், தங்களுக்குள் இருவரது கண்ணியத்தையும் மெச்சி பாராட்ட வைத்தது.
இண்டெர்வியூ வைத்து முடித்த பிறகு எல்லோரும் சேர்ந்து சின்ன டீ ஸ்நேக்ஸ் பார்ட்டி தம்பதியர்களுக்கு வழங்கினார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு கணம் பார்த்துக் கொண்டார்கள்.
இதெல்லாம் நன்றாகத் தான் போனது. மாலை வீட்டுக்கு வந்த உடனே வாசுகியிடம் காலையில் செஞ்சன் சொன்னதை சொல்லி அவள் அழ, வரட்டும் அந்த தடிமாடுக்கு நாலடி போடுறேன். நீ அழாதாடா கண்ணா” என்று சமாதனம் செய்தார்.
செஞ்சன் அன்று இரவு மிகவும் தாமதமாக வந்தான். தன்னிடம் உள்ள சாவியை வைத்து வீட்டுக்குள் நுழைந்தான்.; அவனுக்காக மாமியார் மருமகள் இருவரும் காத்திருந்து காத்திருந்து பார்த்தவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் கூடத்திலே படுத்து விட்டார்கள்.
அதை வாஞ்சையாக பார்த்தவன், சத்தமில்லாமல் அறைக்குள் நுழைந்துக் கொண்டான். குளித்து முடித்தவன் அவர்களுடன் சேர்ந்தது இவனும் படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் கண் விளிக்கும் போது இருந்த செஞ்சனை கண்டு அதிர்ந்துப் போனாள் சங்கவை.
“எப்போ வந்தாருன்னே தெரியலையே... ரெண்டு நாளா சண்டை வேற போட்டுட்டு ஒழுங்காவே சாப்பிடல” கவலை கொண்டாள்.
அவளின் கவலையை போக்கும் வண்ணம் வாசுகியும் அவரை தொடர்ந்து செஞ்சனும் எழுந்துக் கொண்டான்.
எழுந்தவன் இருவரையும் அவசரப்படுத்தி மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றான். அங்கே போகவே கை கால்கள் எல்லாம் ஆட்டம் கண்டது சங்கவைக்கு.