மனைவியை அறைக்குள் தூக்கிட்டு வந்து படுகையில் பொத்தென்று போட்டவன், அதிக கோவத்துடன் அவளை பார்த்தான் செஞ்சன்.
அவனது கோவம் புரிந்தாலும் எதுவும் போசாமல் எழுந்து அமர்ந்தவள் அறையை விட்டு வெளியே போக பார்த்தாள். அவளின் முன்பு இடது கையை மட்டும் நீட்டி மறித்து நின்றான்.
அவள் அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. தலையை குனிந்து நின்றாள். அவன் கை நீட்டவும் தன் நடையை நிறுத்தி விட்டாள்.
“என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல? பெரிய டேஷா நீ..” அவனுக்கு கோவத்தில் அறிவு மழுங்கிப் போனது. பேசாதா பேச்செல்லாம் அவளை பேசினான்.
“நானும் பார்த்துட்டே இருக்கேன்... என்னவோ உன் மாமியாரோட சேர்ந்து நீ ரொம்ப தான் பான்னிக்கிட்டு இருக்க.. என்னை மனுசனவே பார்க்க மாட்டியாடி.. நானும் எவ்வளவு தான் பொறுத்துப் போறது...”
“அடப்பாவி நீ எங்கடா பொறுத்து போன?” அவனது மனசாட்சியே அவனை அதிர்ந்து போய் பார்த்தது.
சங்கவை வாயையே திறக்கவில்லை. அதை விட அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. அதில் இன்னும் கடுப்பனவான்,
“நிமிர்ந்து என்னை பாருடி” அதட்டினான்.
அவள் நிமிரவே இல்லை.. தலையை குனிந்தே இருந்தாள். அதில் இன்னும் எரிச்சல் ஆனவன்,
“இவ்வளவு தூரம் சொல்றேன் நிமிர்ந்து பார்க்க மாட்டியாடி” என்று திட்டியவன் தன் கைக்கொண்டு அவளின் மோவாயை பற்றி நிமிர்த்த, அவளின் விழிகள் கலங்கிப் போய் இருந்தது.
அதுவரை தாண்டி குதித்துக் கொண்டு இருந்த செஞ்சன் அவளின் ஒற்றை துளி கண்ணீரில் அப்படியே அடங்கிப் போனான்.
“என்ன கண்ணம்மா இது..” என்றபடியே அவளை இழுத்து தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டான். அவனது பிடியில் சிறிது நேரம் அடங்கியவள், தன்னை மீட்டுக் கொண்டு அவனது பிடியில் இருந்து வெளியே வர பார்க்க,
“இப்ப என்னடி அவசரம்? அப்படியே இரு” அதட்டி மீண்டும் அவனின் நெஞ்சில் அவளை சாய்த்துக் கொண்டான்.
“இல்ல வேண்டாம்” என்றவள் முயன்று அவனது பிடியில் இருந்து வெளியே வர செஞ்சனின் முகம் யோசனையில் சுருங்கியது. கூடவே ஏமாற்றமும் அவனது நெஞ்சை கவ்வியது. ஆனாலும் அவளை கட்டாயப்பட்டுத்தாமல் தன் கைகளை விலக்கிக் கொண்டான். அவன் விடவும் அவனை விட்டு முழுமையாக விலகிக் கொண்டவள்,
“நாளைக்கு முக்கியமான ஒர்க் இருக்கு... சோ நான் ரெஸ்ட் எடுக்கணும்” என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் வெளியே வந்தவள் பூட்டி இருந்த அரை கதவை திறந்து படுத்துக் கொண்டாள்.
“என்ன கண்ணா போன வேகத்துல திரும்பி வந்துட்ட..?” வாசுகிக்கு சப்பென்று ஆகி விட்டது. அறை புகுந்து மருமகளை மகன் தூக்கிக்கொண்டு போகவும் சரி இன்னைக்கு ஸ்பெஷல் நாளாக மாறும் இருவருக்கும் என்று எண்ணி இருந்தார். ஆனால் இவள் மிக அமைதியாக வந்து படுத்துக் கொண்டதை பார்த்து அவரின் எதிர்பார்ப்பு வீணாகிப் போனது.
“தூக்கம் வருது ம்மா அது தான் வந்துட்டேன்” என்றவள் கண்களை மூடி தூங்க ஆராம்பித்தாள்.
“இல்ல கண்ணா...” என்று அவர் எதோ சொல்ல வர, “நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கும்மா” என்று மட்டும் சொன்னவள் மீண்டும் விழிகளை மூடிக் கொண்டாள்.
மூடிய விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்ததை பார்த்து மனம் கணத்துப் போனாவர் தன் மகனை தேடிப் போனார்.
அங்கே அவனோ படுக்கையில் அமர்ந்து இரு கையாளும் தலையை அழுந்த பற்றிக் கொண்டு இருந்தான். அவனது அந்த தோற்றமே அவனுக்கு மனைவியால் பெரும் ஏமாற்றம் சூழ்ந்துள்ளது என்று நன்கு புரிந்துப் போனது.
இருவருக்குள்ளும் கரைக்காணா அளவு நேசம் கொட்டி கிடந்தும் இப்படி தனி தனியா இருக்கிறார்களே என்று மறுகிப் போனார். இவர்களை எப்படியாவது ஒன்று சேர்த்து வைத்த பிறகு தான் ஊருக்கு போகணும் என்ற முடிவுக்கே வந்து விட்டார்.
இப்பொழுதே தனி அறையில் தான் இருக்கிறார்கள் இருவரும். இந்த சூழ்நிலையை இப்படியே வளரவிட்டால் நிச்சயமாக இருவரும் முற்றிலுமாக ஒதுங்கி தனி தன்னியாகா போக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஏற்பட்டு விடும்... அதற்கு விட மனமில்லாமல் இருவரையும் சேர்த்து வைக்கும் திட்டத்தை தீட்ட ஆரம்பித்தார். ஆனால் இருவரும் கொஞ்சம் கூட மசியவில்லை.
தான் இழுத்த இழுப்புக்கு வருவாள் என்று எண்ணி இருந்தவனுக்கு அவளின் முகத்தின் இருந்த சிணுக்கம் அவனை மேற்கொண்டு அவளை நெருங்க விடாமல் செய்தது.
அவளிடம் இருந்து தன்னை பிரித்து வைப்பது போல அவனுக்கு தோன்ற மனம் வெந்துப் போனான். இவ்வளவு நாளும் அவன் தான் அவளை ஒதுக்கி வைத்தான். இன்றைக்கு அவள் அவனை ஏற்காமல் சின்னதாய் மிக சின்னதாய் ஒரே ஒரு சிணுக்கம் காட்டினாள். அதையே அவனால் தாங்க முடியவில்லை. தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
இங்கு கண்களை மூடி படுத்து இருந்தவளுக்கு விழியோரம் கண்ணீர் கசிந்தது. எல்லாம் மாறிப்போகும் என்று எண்ணி இருந்தாள் இத்தனை நாட்களாக. ஆனா எதுவும் மாறவில்லை. இவ்வளவு உடும்பு பிடியாக நின்று விவாகரத்து காகிதத்தில் கையெழுத்து வாங்குவான் என்று அவள் கொஞ்சமும் எண்ணி இருக்கவில்லை.
இதோ வாங்கி விட்டானே... சங்கவைக்கு மனம் மூங்கிலாய் விண்டுப் போனது. எவ்வளவு முயன்றும் அடக்க பார்த்தாள். அவளால் முடியவில்லை. திரும்பி வாசுகியை பார்த்தாள். அவர் நன்றாக தூங்குவதை பார்த்து எழுந்து வெளியே வந்து விட்டாள். அறைக்குள் என்னவோ மூச்சடைக்கும் ஒரு உணர்வு.
தான் முழுதாக தோற்று விட்டோம் என்று தோன்றியது.. திருமண வாழ்க்கை அவ்வளவு தானா? காதல் வாழ்க்கையும் அவ்வளவு தானா? ஏனோ செஞ்சனின் மீது இப்பொழுதும் கோவம் வரவில்லை. ஆனால் பெரிய மனக்குறை தோன்றியது.
அந்த விபத்து நடந்த நாளில் இருந்து இத்தனை நாட்களாக தன்னை அலைக்கழித்துக் கொண்டே இருப்பவனின் மீது சின்ன மனஸ்தாபம் வந்தது. முன்பு மாதிரி அவனிடம் காதல் கொள்ள முடியுமா என்று பயந்துப் போனாள்.
எதையும் எதிர்பார்க்காமல் காதலித்த காலங்கள் இன்று அவளை கேலி செய்தது போல இருந்தது. நான் சுயநலமா மாறிட்டனா? என் உணர்வுகள் மட்டும் தான் எனக்கு பெரிதா? அவரும் அவர் கொண்ட காதலின் ஆழமும் எனக்கு புரியவில்லையா? அதனால் தான் அவர் விவாகரத்து கேட்ட உடனே எனக்கு மனம் வேதனை கொண்டதோ...
அப்போ என் காதலின் தரம் என்ன... அவர் எப்படி இருந்தாலும் நான் காதலிக்கணும். அது தானே உண்மையான காதல். ஏன் அவரை காயாப்படுத்திட்டு வந்தேன்...
நான் காயப்படுத்தியதில் அவர் எவ்வளவு காயம் பட்டு போய் இருப்பார். கடவுளே நான் ஏன் அவரை பற்றி யோசிக்கவே இல்லை. எவ்வவளவு ஆசையாக தன்னை நெருங்கினார். தலையில் அடித்துக் கொண்டவள் வேகமாய் உப்பரிகையில் இருந்து அவனது அறைக்கு ஓடினாள்.
ஓடும் பொழுதே அவளின் சேலை காலில் தட்டுப் பட்டது. அதில் தடுமாறியவள் சுவரை பிடித்துக் கொண்டு நிலை நின்றுக் கொண்டவள் மறு நிமிடம் மீண்டும் தன் கணவனை தேடி ஓடினாள்.
வேகமாய் செஞ்சனின் அறைக்கு ஓடி வந்தவள் அங்கே தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தவனை கண்டு துடித்துப் போனவள், வேகமாய் அவனிடம் விரைந்தாள்.
“செஞ்சா...” என்று ஒரே ஒரு குரல் தான் குடுத்தாள். விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் இருந்த சிவப்பு நிறத்தை கண்டு உள்ளம் துடித்துப் போனாள்.
“சாரி செஞ்சா” என்று அவனுக்கு அருகில் வந்து நின்றவளை முறைத்துப் பார்த்தவன் தன் கைகளால் அவளின் இடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவளின் வயிற்றில் தன் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டான். அவனது முகத்தில் இருந்த கோவமும், விழிகளில் இருந்த சிவப்புமே அவளுக்கு அவனின் ஆற்றாமையை நன்கு உணர்த்தியது.
அவள் விலக்கி வைக்கவும் அதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. முதல் முதல் ஒதுக்கம்... காதலியின் மனைவியின் விலகல்... அவனை பெரிதும் காயப்படுத்தியது.
மூச்சுக்கு ஒரு கணம் தவித்து தான் போனான். ஏமாற்றம் வலி அவனுள் பெரிதாக இருந்தது. அதை உணர்ந்து மனைவி ஓடி வரவும் அந்த கோவத்தை அவளிடமே காட்டினான்.
அவனின் முகத்தில் இருந்த ஏமாற்றம் கண்டு துடித்துப் போனவள் அவனது கை பிடியில் நின்றாள். அவளின் இடையை இறுக்கிப் பிடித்தவன் தன் கோவத்தை காட்ட அவள் விலகவே இல்லை.
அவளின் வயிற்றில் முகம் புதைத்தவன் அவளை கடித்து வைக்க, தன் வயிறை உள் இழுத்துக் கொண்டாள். அதில் இன்னும் கோவம் கொண்டவன் தன் முகத்தோடு அவளின் வயிற்றை இன்னும் நெருக்கியவன் சற்றே ஆவேசமாக அவளின் வயிற்றை கடித்து வைத்தான்.
அவன் தரும் வலிகளை வாங்கிக் கொண்டவள் அவனின் தலையை தன் வயிறோடு அழுத்திக் கொண்டாள். அவளின் இணக்கம் கண்டு பட்டென்று அவளை விட்டு நகர்ந்துக் கொண்டான்.
அதை எதிர்பாராதவள் விக்கித்துப் போனாள்.
“சாரி செஞ்சா” அவனுக்கு முன்னாடி மண்டியிட்டு அமர்ந்து அவனின் முட்டியை இரு கையாளும் பற்றிக் கொண்டாள்.
அவன் அவளின் முகம் பார்க்கவே இல்லை.
அவனது மோவாயை பற்றி தன்னை பார்க்க வைத்தவள், விழிகள் கலங்க,
“சாரி செஞ்சா... எனக்கு எந்த இண்டேஷனும் இல்ல அந்த நேரம். ஆனா உங்களை பேஸ் பண்ண முடியாம தான்...” அவள் தடுமாறும் நேரமே, அவளின் கழுத்தை அழுந்த பற்றியவன் அவளின் முகம் நோக்கி குனிந்து அவளின் இதழ்களோடு இதழ் பொருத்தி தன் உயிர் நேசத்தை காதலை அவளுக்குள் கடத்தினான் செஞ்சன்.
தன்னால் அவள் அவ்வளவு காயம் கொண்டாலும் தன் காயத்திற்கு ஓடி வந்து மருந்து போடுவதை கண்டு அவனுக்கு உயிரும் உள்ளமும் ஒருங்கே நழுவியது அவள் பால்.
உயிரை உயிரால் இறுக்கி முடிந்துக் கொண்டவன் போல அவளை விட்டு அவன் இம்மியும் நகரவில்லை. அவள் மீது அப்படியே கவிழ்ந்தான். சங்கவை பின்னால் சரிந்து தரையில் படுக்க, அவளின் மீது தன் ஒட்டு மொத்த பாரத்தையும் போட்டு கவிழ்ந்தான். இதழ்கள் நான்கும் முத்த கவிதையை ஓயாமல் ஓதிக் கொண்டே இருக்க இருவருக்கும் மூச்சடைத்தது.
அவளின் இதழ்களை காயப்படுத்தியவன் சற்றே நகர்ந்து அவளின் சிவந்துப் போன முகத்தை பார்த்தான். ஏகத்துக்கும் வெட்கத்தில் சிவந்து இருந்தது. அவளின் இடையை இறுக்கிப் பிடித்தவன் அவளின் மார்பில் அழுத்தமாக முகம் புதைத்தான். அவளை காயப்படுத்தி விட்டு அவளிடமே ஆறுதல் தேடும் சிறுவனாய் அவன் நடந்துக் கொள்ளும் அழகில் எப்பொழுதும் போல காதலுடன் அவனை மன்னித்தவள் அவனை இழுத்து அனைத்துக் கொண்டாள்.
அவளின் அணைப்பில் தன்னை மறந்துப் போனவன் அவளின் உயிர் நேசத்திலும் காதலிலும் சுகமாய் தொலைந்துப் போனான். அவர்களை பார்த்து விவாகரத்து காகிதம் கேலியாக சிரித்தது.
இடையில் கண் விழித்துப் பார்த்த வாசுகி அருகில் மருமகள் இல்லாமல் போனதில் திடுக்கிட்டுப் போனவர் எழுந்து வெளியே வந்து பார்க்க மகனின் அறையில் வளையல்களின் ஒலியும் சிணுங்கும் கொலுசின் ஒலிகளும், கூடவே மருமகளின் மெல்லிய முணகள் ஒலியும் கேட்க வெட்கத்துடன் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டார் அவர். எப்படியோ தன் பிள்ளைகள் நன்றாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டார் மகிழ்ச்சியுடன்...
போடி பைத்தியக்காரி....எதையும் விட்டு கொடு மா....காதலுக்காக....
ஆன உன் தன்மானம், சுயமரியாதை அப்படினு இருக்கு இல்ல....அதை பத்தி என்ன நினைக்கிற????
அதையும் கொஞ்சம் consider பண்ணு மா
நைஸ் 😍
ur always create different story super

கலங்கமற்ற காதல் கலங்கி நிற்கும் காதலியே
கலங்க வைத்தவளே கலங்கியவனுக்கு கலக்கத்தை நீக்க கலங்கி நிற்கிறாள்
கலக்கம் கொண்ட காதல் தான் ஆனால்
களங்கம் அற்ற காதல்....