ஒவ்வொரு நாளும் ஒரொரு விதமாய் முகிலுக்கு சென்றது.. பழமலை இன்று வரையிலும் அவளை படுத்தாமல் இருந்ததே கிடையாது.. அதுவும் கிழவியோடு சேர்ந்து அவன் போடும் ஆட்டம் அப்பா சொல்லி மாளாது... கூடவே அவனது வாரிசும் சேர்ந்தால் சொல்லவும் வேணுமா.. இவர்களை கவனிக்கவே அவள் ஒரு பானை சோறை முழுங்க வேண்டி வரும். அந்த அளவு சேட்டை பிடித்த கும்பல் இது..
வருடம் ஒன்று என நான்கு வருடத்தில் நான்கு பிள்ளைகளை பெற்று எடுத்தாள் முகில்.. அவளை கண்டு பிரசவம் பாத்த மருத்துவருக்கு தான் பாவமாய் போகும். அதில் எல்லாம் பழமலை கஞ்சமே பட மாட்டான்.. அவனது டார்கெட் பத்து.. அதில் ஒன்று கூட குறைய கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டா சொல்லிவிட்டான்..
“அடேய் நீ பாட்டுக்கு பெத்து போட்டுட்டு போய்டுவ.. அதை யாருடா வளக்குறது.. நீயே அடங்கா பிடரி.. அது போல உனக்கு பொறந்தது எல்லாம் அப்படியே இருக்கு.. இதுக்கு மேல முகில படுத்துன நானே அரசாங்கத்துக்கிட்ட சொல்லி உனக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணிட சொல்லிடுவேன்” என்று பருவதம் மிரட்ட
“வாயில அடி வாயில அடி.. குழந்த வரமெல்லாம் மகேசன் குடுக்குற வரம் அதி போய் நாமளா நிறுத்தலாமா.. அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா.. ஆத்தா.. சாமி காரியம் தப்பா பேச கூடாது..” என்று கிழவன் போல பேசிவனின் பேச்சில் காண்டாகி போனார் பருவதம்.
“அடி கழுத எத எதோடடா முடிச்சி போடுற.. எரும மாடு.. முகிலு அவன் சொல்றான்னு இதுக்கு மேல பெத்துக்காத சொல்லிட்டேன். ஒழுங்கா இந்த வாரம் ஆஸ்பத்திரி போயிட்டு வரணும்.”
“சரிங்க அத்த..” என்று ஒத்துக்கொண்டவளை முறைத்து பார்த்தான்.
“ஏய் என்ன அப்படி இப்படின்னு ஏதாவது பண்ணிட்டு வந்த கொலை பண்ணிடுவேண்டி..” அத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் அவன் மிரட்ட
“அங்க என்னடா மிரட்டுற.. உன் விருப்பத்துக்கு தான் மூணு ஆம்பள புள்ள, ஒரு பொம்பள புள்ளன்னு நாலு புள்ளை ஆகி போய்டுச்சே இன்னும் என்னடா.. இதுக்கு மேல அவ உடம்பு தாங்காதுடா.. புள்ள பாவம்”
“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்..” பிகு பண்ணியவனை பாத்து கடுப்பான பருவதம் அருகில் இருந்த விளக்க மாத்தை தூக்கி விசுர அவனோ சற்றே நகர்ந்து அதிலிருந்து விளகிக்கொண்டவன்
“நீ என்ன சொன்னாலும் பரவால பத்து இல்லாட்டினாலும் அதுல பாதியாவது வேணும்.. அதனால இன்னொன்னை பெத்துக்கிட்டு உன் மருமவளுக்கு எதையாவது பண்ணிக்கோ..” என்றான் அசால்ட்டாய்..
“இப்படியே சொல்லி சொல்லி தாண்டா அஞ்சுல வந்து நிக்குற..”
“ப்ச் விடு ஆத்தா.. வீடு நிறைய புள்ளைங்க ஓடி ஆடி விளையாண்டா தான் வீடு கலகலன்னு இருக்கும்.. நாதன் சின்ன வயசுலயே விடுதில படுச்சதுனால நான் ஒண்டியா தான் வளர்ந்தேன்.. அது மாதிரி என் பிள்ளைங்க ஆகிட கூடாது. ஒன்னு இல்லாட்டியும் ஒன்னு ஒன்னு துணையா இருக்கணும்.. நாலு பேத்தோட பழகி வளர்ந்தா தான் நல்ல பழக்கம் எது கேட்ட பழக்கம் எதுன்னு அதுவே உணர்ந்து வளரும்.. ஒன்னு தப்பு செஞ்சா அது அடி வாங்கும் போது இன்னொன்னு அதுவாவே ஓ இது தப்பு போல இது செய்ய கூடாது.. செஞ்சா அம்மா அடிப்பா அப்படின்னு அதுவே உணரும்.. யாரும் உக்காந்து சொல்லி தரணும்னு அவசியம் இல்ல..” என்றவனின் எண்ணம் அங்கு இருந்தவர்களுக்கு புரிய ஓரளவு ஏற்றுக்கொண்டார்கள்.
முகிலும் கிழவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்..
நாதனுக்கு தம்பி பாசம்னா என்னன்னு தெரியாம போனதுனால தானே பழமலை இவ்வளவு கஷ்டப்பட்டான். அது தன் பிள்ளைகளுக்கு வந்துட கூடாது என்று தெளிவாய் இருந்தான். ரெண்டு இருந்தால் தேவைகள் குறைவாய் இருக்கும்.. அதுவே ஐந்து நான்கு இருந்தால் தேவைகள் அதிகரிக்கும் கூடவே பகிர்ந்து உண்ணும் பழக்கம் வரும் என்று உணர்ந்து அவன் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொண்டான்.
அன்று மத்தியம் எல்லோரையும் வயலுக்கு துரத்தி விட்டவன் முகிலை கோழி அடித்து குழம்பு வைக்க சொல்ல
“ஹைய்யோ ஆரம்பிச்சுட்டீங்களா..” தலையில் கைவைக்க
“ப்ச் செய்யிடி..” என்றவன் முருகேசை மாட்டை ஓட்டிக்கொண்டு போக சொல்லிவிட்டு சோலையை கோழியை சுத்தம் தர சொல்லிவிட்டு அவளையும் வயகாட்டுக்கு துரத்திவிட்டவன் பின் பக்கம் இருந்த தொட்டியில் செவலையை குளிக்க வைத்துக்கொண்டே முகில் அடுப்பு கூட்டி சமைக்கும் அழகாய் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அப்படி என்ன தான் இருக்குமோ அவக்கிட்ட. மாசத்துல ஒரு நாள் அவளை சமைக்க சொல்லி அவள் அருகில் இருந்து அவளை பார்த்துக்கொண்டே இருப்பான்.
அவனது பார்வையில் அவள் தான் தடுமாறி போவாள்.
“கிரகம் டா.. அவனவன் புது புது தினி நகை போட்டு ரசிப்பான். ஆனா என் புருஷன் மட்டும் சமைக்க சொல்லி பாக்குறான்..” முனகியபடி அம்மியில் மசாலா, தேங்காய் அரைத்துக்கொண்டு இருக்க
“அதுல தாண்டி கிக்கே இருக்கு.. உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா.. பல பேருக்கு பொண்டாட்டிய விட வேலைக்காரி...” மேற்கொண்டு சொல்ல வந்தவனை முறைத்து பார்த்தாள்.
“ப்ச் நாட்டுல நடக்குற உண்மைடி இது. பல பேருக்கு பொண்டாட்டிய ரசிக்கவே தெரியல. அந்த வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் தெரியுமா. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி சரியான துணை இல்லன்னா வாழ்க்கை நரகம். ஒவ்வொரு நொடியும் ரசிக்க பழகணும். அதுவும் உற்ற, கொண்ட துணையோட.” பிலாசபி பேசியவனை ரசனையுடன் பார்த்தாள்.
“ஆமா மாமா நல்ல துணை அமையிறது வரம்.. அப்படி அமைந்தும் பயன் படுத்திக்க தெரியலன்னா வாழ்க்கை இருவருக்குமே நரகம்.”
“பட் எனக்கு அப்படி இல்லடி.. எனக்கு விருப்பப்பட்டதை செஞ்சு குடுக்க நீ இருக்க.. நான் என்ன செஞ்சாலும் ரசிச்சு ஏத்துக்குற.. நீ மட்டும் என் வாழ்க்கையில வரமா இருந்து இருந்தா பழமலை இவ்வளவு சந்தோசமா இருந்து இருக்க மாட்டான். நன்றி டி பொண்டாட்டி..” அவளின் முகத்தோடு முகம் வைத்து கொஞ்ச
“எனக்கும் தான் மாமா.. நீ இல்லன்னா நான் ம்ஹும்...சொல்றதுக்கு எதுவுமே இல்ல.. என் மனசுல நிறைஞ்சி நின்னுட்ட உன்னோட அன்பால. உன் அன்பு என்னை பயித்தியமா ஆக்கிட்ட மாமா” அவனது தோளில் சாய்ந்தவள் கண்களை மூடிக்கொண்டாள்.
“ப்ச் கனவு காணாம அரை டி” என்று அவளை உலுக்க அவனை முறைத்து பார்த்தவள் “கொஞ்சம் கூட அனுபவிக்க விட்டுறாதீங்க..” அம்மியை இழுத்து அரைக்க அவனது விரல்கள் அவளது இடுப்பில் இருந்து நழுவிய புடவையின் உள்ளே நுழைந்து அவளது இடையை வருடி விட்டு அழுத்தி பிடிக்க ஜெர்க்கானாள்.
“மாமா இன்னும் சமைக்கல ஒழுங்கா விலகி போங்க..”
“நீ பாட்டுக்கு சமை நான் வேணான்னு சொன்னனா..” என்றபடியே அவளது ஜடையை எடுத்து முன்பக்கம் போட்டுவிட்டு அவளது வெற்று முதுகில் முகத்தை பதித்து அவளை சீண்ட அவனது பிடியிலிருந்து நழுவி வேகமாய் உள்ளே போக பார்க்க செவலை அவளின் வழியை மறைத்துக்கொண்டு நின்றான்.
“டேய் நீயும் அவரோட சேர்ந்துக்கிட்டு ரொம்ப பண்ற.. ஒழுங்கா வழிய விடு..” அவனது கொம்பை பிடித்து இழுத்து விட அவன் அசையவே இல்லை. அதற்குள் பழமலை அவளின் பின்னிருந்து அனைத்து தோளில் தூக்கிபோட்டுக்கொள்ள
“ப்ச் ரெண்டு பேரும் இருக்கீங்களே..” திட்டியபடி அவனது தோளில் இருந்தபடியே நழுவ பார்க்க
“அவளை நழுவ விடாமல் இறுக்கி பிடித்தவன் குளியல் அறைக்கு தூக்கிட்டு போனான்..
“மாமா மணி பன்னண்டு ஆயிடுச்சு.. நான் இன்னும் சமைக்கல ஒழுங்கா விடுங்க.. இப்படி தான் கல்யாணத்துக்கு முன்னாடி என் முன்னாடி மட்டும் சமைக்கணும்னு சொல்லி நானும் சமச்சிக்கிட்டு இருக்கும் போது குளியல் அறைக்கு தூக்கிட்டு வந்தீங்க.. என் போறாத காலம் சாந்தி வந்துட்டா அந்த நேரம் பாத்து.. இப்பவும் யாராவது வந்தாங்க அவ்வளவு தான் மானம் போய்டும். ஒழுங்கா விடுங்க.”
“யாரு வந்தா என்னடி என் பொண்டாட்டி என் உரிமை..” என்றவன்
“குளிக்க வைய்டி” என்று அவளிடம் மல்லுக்கு நின்று தான் நினைத்தை சாதித்துக்கொண்டான்.
குளித்து முடித்து இருவரும் வெளியே வந்து சமைத்து உண்டுவிட்டு அனைவருக்கும் உணவை எடுத்துக்கொண்டு வயலுக்கு சென்றார்கள்.
முகில் அனைவருக்கும் பரிமாற பழமலை அவளினருகில் அமர்ந்து அவள் அவனுக்கென்று பரிமாறிய கறியை சாப்பிட
“ஏண்டா பேராண்டி என் பேத்தி அங்க சோறு போடல..” அவனை ஆராய்ச்சியாய் பார்த்து பொன்னி கேட்டார்.
“இல்ல” என்றவன் மிருதுவாய் வெந்து இருந்த கறியை எடுத்து அவளுக்கு ஊட்டி விட அவளும் சாப்பிட்ட படி கொழுந்து பருவதம் தன் பிள்ளைகள் கிழவி என்று அனைவருக்கும் பரிமாறிக்கொண்டு இருந்தாள். கூடவே சோலை முருகேஷ் இவர்களுக்கும் தட்டில் போட்டு கொடுக்க அவர்கள் மற்ற வேலை காரர்களோடு அமர்ந்து சாப்பிட்டனர்.
“ஏண்டா போய் சொல்ற.. ஒரு கோழிய முழுசா சாப்பிட்டுட்டு வந்து கதை சொன்னா நான் நம்புவனா..”
“நீ நம்பு நம்பாட்டி போ..” என்றவன் தன் பொண்டாட்டிக்கு ஊட்டியபடி இருந்தான்.
“ம்ஹும் என் புருசனும் உசுரோட இருந்து இருந்தா எனக்கும் இப்படி ஊட்டி விட்டு இருந்து இருப்பாரு..”
“அதுக்கெதுக்கு உன் புருஷன்.. நானே ஊட்டி விடுறேன்” என்று முகில் கிழவிக்கு ஊட்டி விட அதை சாப்பிட்ட படி தன் பேரனுக்கு கொடுக்கு காண்பித்தார். அதில் காண்டான பழமலை முகிலை முறைத்து பார்த்தான்.
“எனக்கும் ஊட்டி விடுடி...” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டு கிழவிக்கு இவனும் கொடுக்கு காண்பித்தான்..
“ம்கும் சின்னதுங்க நாளும் போட்டாட்டம் இருக்குங்க.. ஆனா இதுங்க ரெண்டும் குடுக்குற அலப்பறை தாங்க முடியல.. ரெண்டுக்கும் கூறே கிடையாது” இருவரையும் முறைத்து பார்த்தார் கொழுந்து.
“என்ன எப்ப பாரு திட்டிக்கிட்டே இருக்கீங்க.. ஒழுங்கா சாப்பிடுறதுன்னா சாப்பிடுங்க.. இல்லயா போய் வரப்பு கட்டுங்க.. எப்போ பாரு அவங்களை வஞ்சிக்கிட்டே..”
“நீ தாண்டி அவங்களை கெடுக்குற..”
“ஆமா நீங்க ரொம்ப கண்டிங்க.. சாப்பிட்டு கை காஞ்சே போச்சி எழுந்து போய் கைய கழுவுங்க”
“ஏட்டி நான் இன்னும் சாப்பிடவே இல்ல..”
“தின்ன வரையிலும் போதும்.. கிளம்புங்க” தயவு தாத்ச்சன்யம் இன்றி அவரை துரத்த
“அத்த சும்மா இருங்க” என்றவள் தன் மாமனுக்கு சோறை அள்ளிவைத்து கரி குழம்பை ஊற்றினாள் முகில்.
அந்த நேரம் கிழவி தன் கொள்ளு பேரனின் இலையில் இருந்த ஈரலை எடுத்து சாப்பிட போக அதை பார்துக்கொண்டு இருந்த பழமலை
“சின்ன புள்ளைகிட்ட இருந்து திருடி சாப்பிடுறியே உனக்கு வெக்கமா இல்லையா..” கேட்டான்.
“இல்ல” என்று அசல்ட்டாய் சொல்லி உதட்டை பிதுக்கிவிட்டு சாப்பிட போக அவரின் கொள்ளு பேரனும் பேரனும் பாவமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“ம்ஹும் நமக்கு வாச்ச கிழவி அப்படி. ஒன்னும் முடியாதுடா மகனே.. இந்தா இதை சாப்பிடு” என்று அவனுக்கு வேறு ஒன்றை ஊட்டிவிட தன் கொள்ளு கிழவியையே முறைத்து பார்த்தான் அந்த சில் வண்டு..
அவர்கள் செய்யும் கூத்தை மன நிறைவுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் முகில்.
அந்த நேரம் நாதனுடைய குடும்பம் வர
“நைட்டுக்கு வர்றதா சொன்னான்.. இப்பவே வந்துட்டானா..” என்றபடி அனைவரும் அவர்களை வரவேற்க நாதனுடைய மகனை தூக்கிக்கொண்டான் பழமலை..
சாந்தியிடமிருந்து அவர்களது மகள் ‘சித்தி’ என்று தாவ அவளை கட்டி பிடித்து கொஞ்சினாள் முகில்.
“வா நாதா வா சாந்தி” இருவரையும் அமரவைத்து இருந்த சாப்பாட்டை பகிர்ந்து உண்டார்கள்.
நாதன் பழமலையின் பிள்ளைகளுக்கு உணவை ஊட்டியபடியே சாப்பிட்டான்.
சாந்தி முகிலின் கடைசி மகளை மடியில் போட்டுக்கொண்டு சாப்பிட, முகில் சாந்தியின் இரு பிள்ளைகளுக்கும் உணவை ஊட்டி விட்டாள்.
இளையதலை முறையினரின் அன்பை கண்டு நெகிழ்ந்த படியே மூத்த தலை முறையினர் உண்டார்கள்.
அன்றிரவு பிள்ளைகளை எல்லாம் வீட்டில் விட்டுட்டு இரு ஜோடிகள் மட்டும் வயலுக்கு சென்றார்கள். நாதனும் சாந்தியும் அங்கிருக்கும் குடிசைக்கு போக பழமலை அவளை தூக்கிக்கொண்டு சிலம்பு சுற்றும் இடத்துக்கு வந்தான்.
“உங்களுக்கு வேற வேலையே இல்ல மாமா..” என்றவள் விலக பார்க்க
எப்போதும் போல தன் சிலம்பாலே அவளை அருகே இழுத்துக்கொண்டு அவனது பாணியில் சிலம்பு போட்டி நடத்த அங்கே சிலம்பம் வேறு வகையாக வளர்ந்துக்கொண்டு இருந்தது..
அடுத்த நாள் விடுமுறை என்பதால் வீட்டின் பின் பக்கத்திலே பழமலை பிள்ளைகளுக்கு சிலம்பு சுத்த சொல்லி தர, நாதன் தன் மடி கணினியோடு இருந்தான் அங்கே மரத்தின் அடியில்.. முகிலும் சாந்தியும் பின் பக்கத்திலே கேலி பேசி சிரித்துக்கொண்டு விருந்து சமைக்க, பருவதமும் பொன்னி கிழவியும் ஊரு கதையை பொரணி பேசியபடி மருமகள் இருவருக்கும் உதவி செய்துக்கொண்டு இருக்க, கொழுந்து அந்த சூழ்நிலையை ரசித்த படி கட்டிலில் படுத்து இருந்தார்.
ஒன்று கூடி, உண்டு பட்டு வாழ்வது தானே வாழ்வு.. நான் என்பதில் இறைவன் என்றும் இருப்பது இல்ல. நாம் நாங்கள் என்பதிலே இறைவன் வாழ்கிறான்..
விட்டு கொடுத்து போனால் குறை என்று எதுவும் இல்லை.. மனம் ஒன்று பட்டால் குற்றம் என்பதும் இல்லாமல் போகும்.. அனைவருக்கும் மகிழ்வு உரிதாகுக.
சுற்றம் சூழ்ந்து வாழ்வோம்... அன்பு பெருகட்டும். வாழ்க வையகம்..
நன்றி..
அவனு(ளு)ள் நிறைந்து நின்றுவிட்டான்(ள்).
Aww...nice ending....🥰🥰🥰🥰🥰
பத்து எல்லாம் ரொம்ப ஓவர் டா ப்ரூட்டி பயலே🤣🤣🤣🤣