அத்தியாயம் 28

 
Admin
(@ramya-devi)
Member Admin

விடுதியில் இருந்து யாரும் வராமல் போக பழமலைக்கு கொண்டாட்டமாய் போனது..

அனைவரும் உறங்க போக பழமலை நாடு சாமத்தை எதிர் பாத்து காத்துக்கொண்டு இருந்தான். ஆனால் பருவதமும் கிழவியும் அவளிடம் இந்த ஒரு வருஷம் என்ன ஆச்சு என்ன நடந்ததுன்னு கேட்டுக்கொண்டு இருக்க கொழுந்தும் படுத்த படி தன் மருமகள் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டு இருக்க இவனுக்கு தான் காண்டாகி போனது..

கதை கேக்குற நேரமாயா இது.. அவனவன் மன்மதன் அம்பை சமாளிக்க முடியாமல் முட்டி மோதிக்கொண்டு இருக்க இப்போ தான் செத்து பொதஞ்சி போன விஷயத்தை இம்புட்டு ஆர்வமா கேட்டுக்கிட்டு இருக்குங்க..

இவ அதுக்கு மேல ஏதோ இப்ப தான் சுடசுட நடந்த சம்பவத்தை சொல்றது போல சொல்லிக்கிட்டு இருக்கா..

“ஏன் கடவுளே எனக்கு மட்டும் இப்படி.. முடியல... இதுங்க எல்லாத்தையும் வச்சுக்கிட்டு நான் என் வம்சத்தை விருத்தி பண்ண மாதிரி தான்.. எனக்கு முத எதிரி என் பொண்டாட்டி தான்.. அதுக்கு பொறவு என்ற குடும்பம்..” தலையில் அமர்ந்துவிட்டான் இப்போதைக்கு அவனது அருமை பத்தினி விஷயத்தை முடிக்க மாட்டாள் என்று.

ஓர விழியால் அவனது நடவடிக்கையை பார்த்துக்கொண்டு இருந்த முகிலுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வர, சிரித்தாள் அவ்வளவு தான்.. அவன் கையில் சிக்கி சின்னா பின்னமாக்கி விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான். அதனால் அவள் சிரிப்பை அடக்கியபடி தொடர்ந்து கதை சொல்லிக்கொண்டு இருந்தாள்.

“இங்க இருந்து போய் கொஞ்ச நாள் மட்டும் தான் அங்க இருந்தேன் மாமா.. புவனா அத்தையோட போக்கு பிடிக்கல.. அதை விட அவங்க மகனை என் அறைக்குள் வர சொல்லி ரொம்ப சங்கட படுத்திட்டாங்கா..”

“ஆத்தா என்ன சொல்ற..”

பெருமூச்சு விட்டவள் “ஆமா மாமா அவன் கொஞ்சம் ஓவரா போன மாதிரி இருந்தது.. அதான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.. உங்க கிட்டயும் முறைப்பா பேசிட்டன்னா அதான் எனக்கு அங்க வர கொஞ்சம் கஷ்டமா போய்டுச்சு” என்றாள்.

அவள் சொல்லி முடிக்கும் முன்பே “இதை முன்னவே சொல்லி இருந்து இருக்கலாமே ஆத்தா ஒரு கை பாத்து இருப்பனே. இப்பவும் ஒன்னும் கேட்டு போகல இப்பவே அந்த பயலை போலி போட்டர்றேன்..” என்று எழுந்து தன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போக, கிழவியும் பருவதமும் “எடு அந்த விளக்கமாத்த.. நல்லா நாலு இருக்கு இருக்கிட்டு வரோம்” என்று கூந்தலை அள்ளி முடிந்துக்கொண்டு வாரி சுருட்டி எழ

பழமலை அனைவரையும் பாவமாய் பார்த்தான்.. “அட பாவிங்களா.. முடுஞ்சு போன சீனுக்கு எதுக்குயா இப்படி குதிக்கிறீங்க” என்று மனதோடு புலம்ப

“அதுக்கு அவசியமே இல்ல மாமா. அத்தை பாட்டி உங்க பைய்யன் சிறப்பா அந்த சம்பவத்தை நடத்திட்டாரு..” என்று எட்டி அவனது கையில் இருந்த போனை பறித்து அவன் தனக்கு காட்டிய படத்தொகுப்பை அவர்களுக்கும் காட்டினாள்.

“அதானே என் பேராண்டியா கொக்கா..” முந்தானையை ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகியவர் தன் பேரனை பெருமையாக பார்த்தார்.

அதில் முகிலை சீன்டியவனை நன்கு போட்டு புரட்டிக்கொண்டு இருந்தான் பழமலை. அவனது தீரத்தை கண்டு பெருமையுடன் சிவகொழுந்து மீசையை முருக்க

“ம்கும் நாங்களும் தான் சேந்து புள்ளைய பெத்தோம்” என்று நொடித்துக்கொள்ள பொன்னி வெக்க பட்டு அந்த பக்கம் திரும்பிக்கொள்ள, அவரை அரியவகை உயிரினம் போல பார்த்து வைத்தான் பழமலை..

சிவா கொழுந்தோ காதலுடன் பருவதத்தை பார்த்தார்.

“ஹய்யோ காலம் போன கடைசியில ஒன்னு வெக்க படுத்து.. ஒன்னு காதல் பண்ணுது.. இன்னொன்னு இப்போ தான் உரிமை கொண்டாடுது.. கொடுமட சாமி..” புலம்பியவன் திரும்பி முகியை பார்க்க அவளது சிரிப்பை கண்டு காண்டாகி போனது..

“தனியா மாட்டுடி.. வச்சுக்குரேன்.. கிண்டல் பண்ணி சிரிக்கவா செய்யிற.. அவனவன் அவஸ்த்தை அவனவனுக்கு..” ம்ஹும் என்று பெருமூச்சு விட்டவன் அவளை கண்களிலே களவாடினான்.

அவனது பார்வை கண்டு சற்றே தடுமாறி போனாள்.

கண்களிலே அவனிடம் கெஞ்சினாள்.

“பார்வையை திருப்புங்க”

“முடியாது..” என்றவன் முன்பை விட சற்று வல்கராகவே அவளை பார்க்க முகம் சிவந்து போனது அவளுக்கு..

“கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா.. பெத்தவங்க முன்னாடி இப்படியா நடந்துக்குறது..” தலையில் கைவைத்து கீழ் பார்வையாய் அவனை முறைத்து பார்த்தாள்.

“போடி” என்றவன் தன் பார்வையை மாற்றிக்கொள்ளவே இல்லை.. அவனது பார்வை அவளுள் ஒரு கர்வத்தையே கொடுத்தது.. அதை ரசித்தும் கொண்டாள்.

அடுத்த நாள் மணமகளுக்கு எடுக்க வேண்டிய நகைகள் எடுக்க பட அவர்களோடு சுற்றி திரிந்தாள். பாதி நேரம் பழமலையின் கை வளைவில் தான் இருந்தாள்.

எவ்வளவு நாளைய ஆசை இது இருவருக்கும்.. பெற்றவர்களின் சம்மதத்தில் தடைகள் தாண்டி வந்த புதுவெள்ளம் போல மகிழ்வில் துள்ளி குதித்து சந்தோசத்தோடு ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு வளம் வந்தார்கள்.

“ஏட்டி உனக்கு எதாச்சும் வேணுமா..”

“எனக்கு வேணாம் மாமா.. எல்லாமே இருக்கு..” என்றவளை காதலுடன் பார்த்தவன்

“அதாவது வாங்கிக்க டி..”

“அப்போ கிழவிக்கும் அத்தைக்கும் வாங்கணும் பரவலையா..”

“வாங்குடி.. நானே அவங்களுக்கு வாங்கனும்னு நினைச்சேன்..” என்று சொல்ல “அப்போ ஓகே..” என்றவள் தயங்கினாள்.

“என்னடி..”

“இல்ல.. சாந்திக்கு..” என்று அவள் இழுக்க

“அவளுக்கும் எடுக்கணுமா..” அவளை ஆழ்ந்து பார்த்தவன்

“எடுக்கணும்னா எடுத்து குடுடி.. இதுக்கெக்துக்கு தயங்குற..” என்றவனை காதலுடன் பார்த்தவள் லேசாய் கண்சிமிட்டி உதட்டை குவித்து முத்தம் குடுக்க

“இதெல்லாம் செல்லாது.. எனக்கு வன்மையா வேணும்” என்று அவள் இதழ்களை பார்த்து சொல்ல

“ம்ம் தரேன்..” என்றவளின் முகம் அப்பட்டமாய் சிவந்து போய் இருந்தது.

“எனக்கு இன்னொன்னும் வேணும்” என்று சொன்னவனின் பேச்சில் இருந்த மோகதில் திகைத்தவள் என்ன என்பது போல பார்த்தாள்.

அவளின் காதோரம் சரிந்து “கறி சோத்தை என் முன்னாடி ஆக்கி நான் மட்டும் இருக்குற சமயம் நீயே எனக்கு இலையில பரிமாறி நான் சாப்பிட்டதுக்கு பொறவு வெத்தலை பாக்கு மடுச்சி குடுக்கணும்..”

“அவ்வளவு தானா..” என்று உள்ளுக்குள் போன குரலில் கேட்டவளை கண்டு “அதுக்கு மேல தான் இருக்கு விசயமே..” என்றான் அவளது கணிப்பை உண்மையாக்கி.

“என்ன” என்றாள் வெட்கம் நிறைந்த குரலில்..

“அது என்றவன் சுற்றிலும் கண்களை ஓட்டியவன் யாரும் தங்களை கவனிக்கவில்லை உறுதி படுத்திக்கொண்டு விட்டு

“நம்ம கிணத்துல நீயும் நானும் மட்டும் குளிக்கணும்... அதும் கல்யாணத்துக்கு முன்னாடி” என்று செக் வைக்க கலவரமானாள்..

அவனது பேச்சில் மூச்சை அடைத்த்துக்கொண்டு வந்தது..

“மாமா” தவிப்புடன் அவனை பார்க்க

“ம்ம்.. இந்த ட்ரீட் குடுக்குறேன்னு சொல்லு.. யாருக்கு வேணாலும் நகை எடுத்துக்கோ.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல”

“மாமா..”

“ப்ளீஸ் டி.. ரொம்ப காஞ்சு போய் கிடக்குறேன்.. உனக்கே தெரியும்ல நான் எப்புடின்னு.. நீ பாட்டுக்கு ஒரு வருஷம் பட்டுணி போட்டுட்டு போய்ட்ட.. என்னை அடக்க என்னால முடியாம நான் பட்ட அவஸ்த்தை எனக்கு தான் தெரியும்.. அதெல்லாம் நீ தான் சரி கட்டனும்..” என்றவனின் உணர்வு புரிய

“ம்ம்” என்றாள் வெட்கத்துடன்.

“அதோட இல்லாம..”

“இன்னும் என்னங்க” சினுங்கியவளின் வெட்கத்தில் மயங்கியவன்

“அது அன்னைக்கு குடுத்தியே அது போல அழுத்தமா ஒரு முத்தம் வேணும்..”

“எல்லாமே தரேன்.. ஆனா இதுக்கு மேல நீங்க வாயை திறக்க கூடாது” மிரட்டியவள் நகைகளை எடுக்க ஆரம்பித்தாள்.

கிழவிக்கு ரெட்டை வடை சங்களியோடு பத்து பவுனில் கழுத்தோடு போடும் அட்டிகையோடு கூடவே வைரத்தில் ஏழு கல் வைத்த மூக்குத்தி வாங்கி தர அதன் அழகில் மயங்கி தான் போனார் அவர்..

பருவதத்துக்கு ஆரத்தோடு வாங்கி வைர தோடு வாங்கி தந்தாள். அன்னத்துக்கு ரெண்டு பவுன் சங்கிலியும், சாந்திக்கு கல்யாண பரிசா செட் நகை இருபது பவுனில் வாங்கி தர அன்னமும் சாந்தியுமே இதை எதிர் பார்க்கவில்லை.

நாதன் நடப்பவற்றை அமைதியுன் பார்த்துக்கொண்டு இருந்தான்.. அவனுள் சில சுய அலசல்கள்.. என்ன இருந்தும் முகிலின் மனதில் தன்னால் கொஞ்சமும் இடம் பிடிக்கவில்லை என்று வருந்தினான்.. ஆனால் அவளுக்காக் பார்த்து தன் தம்பியின் வாழ்க்கையை முழுதும் அழித்துவிட்ட பாவியாகவே தன்னை உணர்ந்தான்.

அவன் ஏதோ வாழ்வில் முன்னேறிவிட்டான் என்றாலும் அதை இவ்வளவு காலம் மூடி மறைத்து வைத்து இருந்து பெரும் கஷ்ட பட்டு கூடவே தன் அடாத செயல்களை இன்னமும் பெற்றவர்களிடம் கூட சொல்லாத அவனது அன்பு அவனை கூனி குறுக செய்தது..

எல்லாருக்கும் எடுத்தவள் பழமலைக்கு ஒரு மோதிரமும் கொழுந்துக்கு ஒரு கழுத்து சங்கிலியும் எடுக்க அவளை காதோரம் சரிந்து “அவனுக்கு ஒன்னு எடுடி..” என்றவனை காதலுடன் பார்த்தவள்

நாதனுக்கு கை சங்கிலி எடுத்தாள்.. அதை அவளே போட்டு விட அவன் கூனி குறுகி போனான்..

“மன்னிச்சுடு பாப்பா..” சிறு வயதில் அவளை கூப்பிட்டதை போல கூப்பிட அவளுக்கு கண்கள் கலங்கி போனது.. சட்டென்று எழுந்த விம்மலோடு அவனது தோளில் சாய்ந்தாள். அவனது அந்த அழைப்பே அவனது மாற்றத்தை சொல்லிவிட முகிலுக்கு அதன் பிறகு சிறு உறுத்தல் கூட இல்லை அவன் மீது.. அவளை தங்கை பாசத்துடன் அனைத்த நாதன் பழமலையின் கைகளையும் பற்றிக்கொண்டான் பாசத்தோடு..

அவனது கை பற்றலில் நெகிழ்ந்தவன் இன்னொரு புறம் சாய்ந்துக்கொண்டான்.

அதை நெகிழ்வுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் கிழவியும் அவர்களது பெற்றவர்களும்.

சாந்திக்கும் கூட என்னவோ போல் ஆனது.. அங்கிருந்து பார்வையை திருப்பிக்கொண்டாள்.

அதன் பின் அனைவரும் வேலைகளை முடித்துக்கொண்டு முகிலின் வீட்டுக்கே வர அந்த இரவு இன்னும் சந்தோசமாய் நகர்ந்தது..

அன்னம் கூட அவர்களது ஒற்றுமையை கண்டு வாயடைத்து போனார். நாம தான் இவர்களை சரியா புருஞ்சுக்கள போல.. எண்ணியவர் இனிமே சரியா புருஞ்சுக்கிட்டா போச்சு எப்போதும் போல கெத்தாய் நினைத்தவர் அவர்களோடு அவரும் ஐக்கியமாக சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் போனது...

 

Loading spinner
Quote
Topic starter Posted : April 24, 2025 9:16 pm
(@gowri)
Estimable Member

பாரேன், இந்த நாதன் பைய கூட திருந்திட்டான்......

Loading spinner
ReplyQuote
Posted : April 27, 2025 8:52 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top