சங்கவை படும் வேதனையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை செஞ்சடையனால். அதனால் அவளின் முகத்தில் இருந்ந்து பார்வையை விலக்கிக் கொண்டான்.
வாசுகிக்கு எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்ளவே முடியவில்லை.
“எதுக்கு செஞ்சா விவாகரத்து குடுக்குற? உனக்கு மருமகளை பிடிக்கலையா? பிடிக்காம தான் இவ்வளவு நாளா அவளோட வலுக்கட்டாயமா குடும்பம் நடத்துனியா? இதுக்கு நீ அந்த பிள்ளையை கொன்னே போட்டு இருந்து இருக்கலாமே” அவனது சட்டையை பிடித்து கேள்வி கேட்டார்.
அவர் பேசிய கடைசி வரியில் உயிர் துடித்துப் போனவன்,
“அம்ம்மா” அலறினான்.
“என்ன வாய் சொல்லா சொல்லும் பொழுதே உனக்கு வலிக்கிறதா? ஆனா நீ இத்தனை வருடமா அதை தான் அவளுக்கு செஞ்சுட்டு இருக்கன்றதை மறந்துடாத”
“ப்ச் ம்மா” என்று தலையை அழுந்த கோதினான். அவனது முகத்தில் சொல்ல முடியாத துயரம் தெரிந்தது.
“வலிக்கிறதாசெஞ்சா? ஆனா உன் மனசு தான் கல்லா போயிடுச்சே... அப்புறம் எப்படி வலிக்கும். மத்தவங்களுக்கு தானே நீ வலியை குடுப்ப..” நக்கல் செய்தார்.
“அத்தை ப்ளீஸ்” என்று சங்கவை கெஞ்ச,
“ஆத்தா உன் புருசனை நான் ஒன்னும் திட்டல.. என் மனசு தாங்காம ஒரு வார்த்தை கேட்டேன்...” என்றவருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
“ஐயோ அத்தை” என்று அவரை கட்டிக் கொண்டாள் சங்கவை.
அவளது அணைப்பில் இருந்தவர், “இந்த மாதிரி பொண்ணை கோடியில இல்ல ஊர் உலகத்துல எங்க தேடுனாலும் கிடைக்க மாட்டா... உனக்கு ரொம்ப தலை கணம் டா.. எல்லோரும் உன் கட்டுபாட்டில் உன் விருப்பபடி தான் இருக்கணும், உன் சொல் பேச்சு தான் கேட்கணும்னு. ஆனா அது வாழ்க்கைக்கு ஒத்து வராது செஞ்சா... இந்த குணத்தை மாத்திக்க” முடிக்கும் முன்பே,
“சாரிம்மா என்னால மாத்திக்க முடியாது... நான் இப்படி தான். கல்யாணம் ஆகுற அன்றைக்கு நான் இவக்கிட்ட கண்டிஷன் போட்டு தான் கல்யாணத்தை செய்துக்கிட்டேன்... அவளை நீங்க தான் உங்க மேல சத்தியம் போட்டு ஒத்துக்க வச்சீங்க.. மறந்து போச்சா” என்று நக்கலாக கேட்டான்.
அன்றைக்கு கல்யாணம் நடந்தால் போதும் என்ற அவசரத்தில் தன் மீது சத்தியம் வாங்கிக் கொண்டார் சங்கவையிடம்.
“அதுக்குன்னு டைவர்ஸ் பேப்பர் குடுப்பியா?” கண்ணை விரித்து முறைத்தார் மகனை.
“எனக்கு மட்டும் டைவேர்ஸ் குடுக்கணும்னு ஆசையா என்ன...?” என்றான்.
“அப்புறம் எதுக்குடா இந்த பேப்பரை குடுத்த...?”
“அதுக்கு கீழ ஒன்னு இருக்கு... அதை படிச்சு பாருங்க... அதுக்கு ஒத்துலன்னா தான் டைவேர்ஸ்... அவளை விட்டு பிரிஞ்சி என்னால இருக்க முடியாது. ஆனா அவ மனசு கல்லு மனசு.. பாருங்க டைவேர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட பேனாவோடு நிக்கிறா” என்ற நேரமே வாசுகியிடம் இருந்து காகிதங்களை வாங்கி அதில் கைஎழுத்து போட்டே விட்டிருந்தாள்.
“சங்கவை எதுக்கு இப்போ நீ அவசரப்பட்டு கை எழுத்துப் போட்ட... நான் தான் பேசிட்டு இருக்கேன்ல” அவளை கண்டிக்க,
கை எழுத்து போட்டு நிமிர்ந்தவளின் விழிகளில் இருந்த ஈரத்துடன்,
“ஏன்னா நான் அவரை காதலிக்கிறேன் அத்தை... அவருக்கு ஒரு வலின்னா அது முதல்ல எனக்கு தான் வலிக்கும்” என்றாள்.
அதோடு, “போதும் அத்தை... இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்... நான் என் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று அறைக்குள் நுழைந்து தன் உடமைகளை எல்லாம் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.
“டேய் என்னடா அவ இப்படி சொல்லிட்டு போறா....?” என்ற தாய்க்கு செவி சாய்க்காமல் வேகமாய் தன் அறைக்குள் நுழைந்தவன் அங்கே துணிகளையும் புத்தாகங்களையும் அடுக்கிக் கொண்டு இருந்தவளை பார்த்தவன்,
“எப்படியும் டைவேர்ஸ் ஆக ஒரு வருடம் ஆகும்...” என்றான்.
“அது வரை உங்களை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்” வெடுக்கென்று சொன்னாள்.
“ஜீவனாம்சமா...” அவன் இழுக்க,
“எதையும் கேட்கமாட்டேன்” என்றாள் அவனது முகம் பார்க்காமல்.
“என்னோட உடல் தேவைக்கு..” அவன் கேட்டு முடிக்க விலுக்கென்று நிமிர்ந்துப் பார்த்தவள்,
“எங்க.... வே... போ...” வாய் திக்கியது. திக்கிய பேச்சை சரி செய்துக் கொண்டு,
“எங்க வேணாலும் போங்க... நான் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன்” என்றவளுக்கு உடைந்து சிதறியது உள்ளம். அதை கொஞ்சமும் வெளியே காட்டிக் கொள்ளாமல் உடைகளை அடுக்கிக் கொண்டு இருந்தாள்.
“மேடம் ஒன்னை மறந்துட்டீங்க” என்றான்.
“என்ன..” என்பது போல அவனை பார்த்தாள்.
“இது உங்க வீடு... நான் தான் உங்க வீட்டுக்கு குடி பெயர்ந்தேன். சோ வெளில போறதுன்னா நான் தான் போகணும்” என்றான் நக்கலாக.
அந்த சொற்களை கேட்டு மடித்துக் கொண்டு இருந்த துணியை ஒரு கணம் நிறுத்தியவள்,
“உங்களை வெளியே போக சொல்ல என்னால முடியாது. அதனால தான் நான் கிளம்புறேன்” என்றாள் அழுத்தமான காதலுடன்.
“ஏன்டி இந்த அளவுக்கு என்னை காதலிக்கிறியே... என்னை விட்டு பிரிஞ்சி உன்னால இருந்திட முடியுமா?” மேலும் நக்கலாகவே கேட்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவளிடம் இழையோ இழை என்று இழைந்தவன் இப்போ இப்படி நக்கல் பண்ணுகிறானே என்று குமைந்துப் போனாள்.
அவளிடம் லேசாக கோவம் தெரிந்தது.
“அதை தெரிஞ்சு வச்சுக்கிட்டு தானே நீங்க வேணும்னே என்னை அலைக்கழிக்கிறீங்க... பரவாயில்லை உங்க கண்டிஷனுக்கு என்னால இப்பன்னு இல்லை எப்பொழுதுமே அடி பணிய முடியாது. அதுக்கு பெட்டர் நான் டைவேர்ஸ் வாங்கிக்கிறேன்” என்றாள் நிதானமாக.
“அப்போ உன் முடிவுல மாற்றம் இல்லை” தீர்க்கமாக கேட்டான்.
“இல்லவே இல்லை...” என்று உறுதியாக சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“இந்த அளவுக்கு காதலிக்க அப்படி என்ன நான் செஞ்சுட்டேன்?” அவளிடமே நக்கலாக கேட்டான்.
“ஏதாவது செஞ்சா தான் காதல் வரும்னா அது பேரு காதல் இல்லைங்க.. காதலை பற்றி உங்களுக்கு தெரியாததா?” அவளும் நக்கலாகவே பதில் சொன்னாள்.
“இப்ப கடைசியா என்ன தான் சொல்ல வர்ற...?”
“டைவேர்ஸ்க்கு அப்ளை பண்ணிடுங்க” என்றாள் கொஞ்சமும் உணர்வுகள் இல்லாமல்.
“உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுடி”
“ஆனா உங்களை கூறு போட்டு..” முடிக்கும் முன்பே அறை கதவை பட்டென்று திறந்துக் கொண்டு உள்ளே வந்த வாசுகியை கண்டு அதுவும் அவர் அவ்வளவு ஆவேசத்துடன் வந்ததை பார்த்து திகைத்துப் போனார்கள் இணையர்கள்.
“அம்மா”
“அத்தை” என்று இருவருமே பதற, மகனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மருமகளின் முன்பு வந்து நின்றவர் விழிகளில் கண்ணீர் பெருக அதிக அளவு உணர்ச்சி வசப்பட்டு போய் இருந்தார். அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
திக்கியது... என்னவோ பேச வந்தார்... ஆனால் அவரால் ஒன்று கூட முடியவில்லை.
“அத்தை” என்று அவரின் கைகளை பற்றிக் கொள்ள வர, கையை தட்டி விட்டு, அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தார்.
செஞ்சனே அதை கொஞ்சமும் எதிர் பார்த்து இருக்கவில்லை. திகைத்துப் போனவன்,
“அம்மா” என்று அதட்டி, மனைவியை இழுத்து தன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டான்.
ஆனால் வாசுகி அவனின் கையில் இருந்து சங்கவையை பிரித்து தன் எதிரில் நிற்க வைத்தவர் அவளை விழிகள் கலங்க மனம் அதிர பார்த்து,
“அப்படி என்னடி நாங்க ரெண்டு பேரும் உனக்கு பண்ணிட்டோம்... உன் ஆர்கான்சை விற்று எங்களை காப்பாத்தி இருக்க.. சொந்த கார பயலுக கூட யாரும் இப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க கண்ணா” என்று அவர் உடைந்து அழ ஆரம்பிக்க,
இருவரும் திகைத்துப் போனார்கள்.
“மெடிக்கல் பைலை அதோட வச்சீங்களா?” செஞ்சனை முறைத்துப் பார்த்தாள்.
“உன்கிட்ட கை எழுத்து வாங்க வச்சு இருந்தேன்டி” என்றான் அவன் தவிப்பாக.
“மண்ணாங்கட்டி” அவனை திட்டியவள், “அத்தை” என்று வேகமாய் வாசுகியை தாங்கிக்கொள்ள வர,
அவளின் கையை மறுபடியும் தள்ளி விட்டார்.
“ம்மா” என்று செஞ்சா ஆட்சேபனை பண்ண,
“இவன் ஒருத்தன்” என்று அருகில் இருந்த காதல் அவனை பார்த்து முணகியது.
“மரியாதையா போயிடுடா..” என்று மகனிடம் வெட்டித்தார்.
“ம்மா” என்று அவன் தடுமாற,
“அவங்கவங்க எவ்வளவு சுயநலமா காதலிக்கிறாங்க தெரியுமா? ஆனா உன்னை மாதிரி யாராலையும் காதலிக்க முடியாது கண்ணா” என்று தரையில் அமர்ந்தார். அவரோடு அவளும் அமர்ந்து அவரை சமாதானம் செய்ய பார்க்க, வாசுகிக்கு மனதே ஆறவில்லை.
“எப்படி உன்னால இப்படி ஒரு காரியத்தை செய்ய முடிஞ்சுது கண்ணா?” ஆற்றாமையுடன் கேட்டார்.
ஏனெனில் இவளின் ஆர்கான்சை விற்று தான் தாய் மகன் இருவருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சங்கவையின் அப்பா குடுத்த பணமும் செஞ்சனின் தோழர்கள் குடுத்த பணமும் இருவரின் மருத்துவ செலவுக்கு ஒரு சுற்றுக்கு கூட வரவில்லை.
“பணம் கட்டினால் மருத்துவம் பார்க்கப்படும்” என்று அங்கிருக்கும் ஊழியர்கள் சொல்லி விட இவளுக்கு வேற வழியே தெரியவில்லை.
இவளே கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறாள். இவளிடம் செலவுக்கே ஆயிரமோ இரண்டாயிரமோ அவ்வளவு தான் இருக்கும். அதை வைத்து எப்படி இரண்டு உயிரை காப்பாற்றுவது.
செஞ்சன் என்றால் அவளுக்கு உயிர். அவனோட ஒரே ஒரு உற்ற உறவு அவனின் தாய் வாசுகி. இருவரையும் ஒரு சேர காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயம். ஒரு மருத்துவ செலவுக்கே விழிகள் பிதுங்கி வட்டிக்கு கடன் வாங்கி அது இது என்று அல்லு விடும். இதில் இரண்டு மருத்துவ செலவு என்றால் எப்படி சின்ன பெண் சமாளிப்பாள்.
வாசுகியின் சகோதரனுக்கு போன் போட்டு சொன்னாள்.
“இப்போதைக்கு என்னால வர முடியாது ம்மா.. நீயே பார்த்துக்க” என்று சொன்னவர் ஒரு வாரம் கழித்தே வந்து சேர்ந்தார். ஒரு வாரம் வரைக்கும் இருவருக்கும் மருத்துவம் பார்க்காமல் இருக்க முடியுமா? அதுவும் கோரமான விபத்து...
என்ன செய்வது... எதை விட்டு பணத்தை பிரட்டுவது என்று விழித்துக் கொண்டு இருந்த சமயம்,
“கிட்னி டோனர் கடைசி நேரத்துல கையை விரிச்சிட்டானே... இப்போ என்ன பண்றது. அவனை நம்பி ஆபரேஷனுக்கு வேற எல்லா ஏற்பாடும் பண்ணிட்டமோ... என் பிள்ளையை உயிரோட பார்க்க முடியாதா?” என்று ஒரு தாய் தன் இருபது வயது மகளுக்காக கலங்கிக்கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு ஒரு யோசனை வந்தது. அதன் பிறகு அவள் எதை பற்றியும் கொஞ்சமும் யோசிக்கவில்லை..
அவருக்கு முன்னாடி போய் நின்றவள்,
“என் கிட்னி மேட்ச் ஆகுதான்னு பார்க்குறீங்களா மேடம்? மேட்ச் ஆனா நான் டொனேட் பண்றேன்” கேட்டாள்.
“என்னமா சொல்ற? நீ உண்மையை தான் சொல்றியா?”
“ஆமாம் மேடம்.. ஆனா அதுக்கு பதிலா எனக்கு பணம் வேணும். இந்த மருத்துவமனையில என் கணவரும் அவருடைய அம்மாவுக்கும் விபத்து நடந்து ட்ரீட்மென்ட்ல இருக்க்காங்க. மேஜர் ஆபரேஷன் ரெண்டு பேருக்கும் பண்ணனும். அதுக்கு பணம் வேணும்” என்று அவள் கேட்க,
“பணத்தை பத்தி நீ கவலை படாதா.. எவ்வளவு ஆனாலும் நான் கட்டிடுறேன். ஆனா எனக்கு உன் கிட்னி” என்று அவர் கேட்க,
“நிச்சயமா குடுக்குறேன் மேடம்” என்றவள் அன்றைக்கே டெஸ்ட் எடுத்து மேட்ச் ஆக, அடுத்த நாள் ஆபரேஷன் வச்சுக்கலாம் என்று முடிவெடுக்கப் பட்டது.
அவளுக்கு அங்கே ஆபரேஷன் செஞ்சு கிட்னி எடுக்கும் நேரம் இங்கே தாய் மகன் இருவருக்கும் மேஜர் ஆபரேஷன் நடந்தது.
ஆபரேஷன் ஆகி மூன்று நாள் கூட படுக்கையில் இருக்கவில்லை சங்கவை. இருவரின் அறை முன்பு கிடையாக கிடந்தாள். அவ்வளவு சோர்வு. ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவளின் மொத்த வேண்டுதலும் செஞ்சனும் அவனின் தாய் வாசுகியின் மீது மட்டும் தான் இருந்தது.
சொன்னது போல அந்த பெண் இருவரின் மருத்துவ செலவையும் ஏற்றுக் கொண்டார். அதோடு கிட்னி குடுக்கும் பொழுது எழுந்த ஆவண சிக்கல்களை எல்லாம் அவரே பார்த்துக் கொண்டார். மருத்துவ நிர்வாகத்துக்கு பணத்தை குடுத்து சமாளித்து இருந்தார்.
சங்கவையின் இந்த தியாகம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள். ஆனால் அவளின் காதலனிடம் இருந்து மறைக்க முடியுமா? எல்லாவற்றையும் தோண்டி துறுவி பார்த்த பிறகு உண்மை உணர்ந்தவனுக்கு சங்கவையின் காதலில் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
Aiy நா முன்னாடியே நினைச்ச மாறி தான்....
சங்கு நீ கிரேட்♥️♥️♥️♥️♥️
ஊனாகி
உயிராகி
உன்னை காதல் செய்தவளுக்கு
உடலும் உறுப்பும் உயர்ந்ததல்லவே
உன் காதலுக்கு முன் .... என் உயிரே நீ என ஆகிட என்னுயிரை தந்து உன்னை காப்பேனே....
உள்ளத்தையே தந்தேன்
உயிரையும் தருவேன் உடலையும் தருவேன்.....
சங்கவை கிரேட் ❤️