இதுநாள் வரை மதுவின் பக்கமே போகாதவன் இப்பொழுது எல்லாம் அது இல்லாமல் அவனால் இருக்கவே முடியவில்லை. அதுவும் அவனது கன்னத்தில் இருந்த தழும்பு அவனை உள்ளுக்குள் கிழறி விட்டுக் கொண்டே இருக்க அகத்தியன் இன்னும் இன்னும் மிருகமாய் மாறிப்போனான்.
தமிழின் அடி அவனுக்கு நினைவு இல்லை. ஆனால் அவளாள் உண்டான காயம் அவனது ஆண் என்கிற கர்வத்தை இன்னும் இன்னும் சீண்டிக் கொண்டே இருந்தது. அதில் அவனது மனம் வெந்துப் போக, அதை அனைய விடாமல் இன்னும் எரிந்துப் போக வைத்தான் மதுவின் உதவியால்.
கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை கூர்ந்து பார்த்தான். அவனது முகம் வசீகரம் தான். ஆனால் அவனது கண்கள் தன் வசீகரத்தை பார்க்காமல் முகத்தில் இருந்த தையலை தான் பார்த்துக் கொண்டு இருந்தது.
அந்த வடுவை நீவி விட்டவன், “என் கையில மறுபடியும் சிக்குனா அன்னைக்கு தான்டி உனக்கு இறுதி நாள்.. என் மனசு எரியிற மாதிரி உன்னையும் எரிய வைப்பேன்” என்று மனதுக்குள் கருவிக் கொண்டான் அகத்தியன்.
“என் கண்ணுல சிக்காம தப்பிச்சு இருந்துக்கோ... இல்லன்னா உன்னை என்கிட்டே இருந்து எந்த கொம்பனாலும் காப்பாத்த முடியாது” உள்ளம் எரிதலழாய் எரிந்தது அகத்தியனுக்கு.
இவன் இப்படி இருக்க, தமிழோ எந்த பிடிப்புமில்லாமல் இருப்பதை பார்த்த தாத்தா பாட்டி இருவருக்கும் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. கிராமத்துக்கு வந்து இதோ இதோட ஆறுமாதம் முடிந்து போய் இருந்தது முழுதாக. இவளை இப்படி விட்டால் நடந்ததை எண்ணி எண்ணியே மடிந்து போய் விடுவாள் என்று பயந்து போனார்கள்.
ஆறு மாதமாக நடந்து முடிந்ததை விட்டு தமிழால் என்ன முயன்றும் அவ்வளவு எளிதாக வெளியே வர முடியவில்லை. தாயாய் இருக்க வேண்டிய சித்தியே தன் வாழ்க்கையை சதி செய்து போட்டது, மனைவியை எதிர்த்து கேட்காத தகப்பனின் கோழைத்தனம், அண்ணனின் மேம்போக்கு தன்மை, இது அத்தனையும் தூக்கி சாப்பிடுவது போல கட்டிய கணவன் அவள் மீது போட்ட பழிச்சொல்.
இவை அனைத்தும் அவளை சூறாவளி போல சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தது. அதை விட்டு அவளால் வெளியே வரவே முடியவில்லை. அதுவும் அகத்தியனின் கடுமையான கோவமும், அதை பெண் என்றும் பாராமல் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் என எல்லாம் அவளை அடித்து வீழ்த்தி இருந்தது.
“ஏதாவது செய்யுங்க.. தமிழை இப்படி பார்க்கவே முடியல.. நெஞ்செல்லாம் அடைச்சுக்குற மாதிரி வருது. ஒரே ஒரு பேத்தியின் வாழ்க்கை இப்படி நட்டாத்தில் போகும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. ராணி மாதிரி இருப்பான்னு தானே கல்யாணம் செய்து வைத்தோம். இப்படி பட்ட மரம் போல வாடி வதங்கி அவள் இருப்பதை பார்க்கவா கண்ணும் கருத்துமா பார்த்து பார்த்து அவளை வளர்த்தோம்” கலங்கி போய் சொன்ன செல்லம்மாவை வேதனையுடன் பார்த்த மருதகாளை,
“எனக்கும் அப்படி தான் செல்லம்மா இருக்கு. ஆனா என்ன செய்யிறது? பாப்பா எதுக்குமே அசைய மாட்டேங்குறாளே.. நான் என்ன செய்யட்டும். உன் அளவுக்கு எனக்கும் கவலை இருக்கு. ஆனா நானும் முடங்கி போயிட்டா என்ன பண்றதுன்னு தான் இந்த தள்ளாத வயதிலும் இரும்பா நிக்கிறேன்” என்றார்.
“அதுக்குன்னு அவளை அப்படியே விட்டுட முடியுமாங்க. நாம தான் ஏதாவது செய்யணும்” என்றார்.
“ம்ம் யோசிக்கலாம்” என்றார் பெருமூச்சு விட்டு.
“யோசிச்சா இப்படி யோசிச்சுக்கிட்டே இருக்க வேண்டியது தான். சீக்கிரம் விடிவு பிறக்காது” என்றவர் தூரத்தில் அமர்ந்து இருந்த பேத்தியை ஒரு பார்வை பார்த்தவர், “இந்த எண்ணுக்கு போன் போட்டு குடுங்க” என்றார்.
“யாறிது?” தாத்தா கேட்க,
“அதெதுக்கு உங்களுக்கு.. சொன்னதை மட்டும் செய்யிங்க” என்றவர் தாத்தா என்னை அழுத்தி அவரிடம் கொடுக்க, போனை வாங்கியவர் அந்த பக்கம் என்ன சொன்னாரோ தெரியவில்லை. முழுமையாக கால்மணி நேரம் பேசினார். அதை தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திலே பாட்டியின் வீட்டுக்கு முன்னாடி ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கினார் ஒரு பெண்மணி.
வீட்டின் முன்பு கார் வந்து நிற்கும் சத்தத்தில் தலையை திருப்பி பார்த்தாள் தமிழ். யாரோ புது ஆள் வருவதை பார்த்து எழுந்து அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அவள் போவதை பார்த்த பூவரசி அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அவரின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டார் செல்லம்மா.
“வாம்மா” என்று அவரை வரவேற்று அமரவைத்த பாட்டி, அவருக்கு குடிக்க குடுக்க, வாங்கி பருகியவர்,
“நான் என்ன செய்யணும் ம்மா சொல்லுங்க” என்றார்.
“என் பேத்தி இங்க்லீஷ் லிட்ரேச்சர் க்கு படிச்சு இருக்கா... ஒரு வேலை வேணும்” என்றார். அதை உள்ளுக்குள் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த தமிழுக்கு அய்யோ என்று வந்தது.
நான் இருக்குற நிலையில என்னால எப்படி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க முடியும் என்று நைந்துப் போனவள், பாட்டி என்று குரல் கொடுத்தாள்.
“உன் விசயமா தான் பேசிட்டு இருக்கேன் பாப்பா. கொஞ்சம் இரு” என்றார். பாட்டியின் குரல் சற்றே உயர்த்தி வரவும் அமைதியாகிவிடாள். இப்பொழுதும் தாத்தா பாட்டிக்கு அடங்கி போகும் பிள்ளை தானே அவள்.
குறுங்கண் ஓரம் நின்றுக் கொண்டாள்.
பாட்டியிடம் தெளிவாக மறுத்து விடவேண்டும் என்று எண்ணியவளை மூளை சலவை செய்து அடுத்த நாளே தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து அவளை இண்டர்நேஷனல் ஸ்கூலில் போய் தள்ளி விட்டு வந்தார்கள் ஆங்கில ஆசிரியர் வேலையில்.
விருப்பமே இல்லாமல் வேலைக்கு வந்தவளை பூவரசி பார்த்து புன்னகைத்தார்.
இவள் தயக்கமாக அவரை பார்த்து புன்னகைக்க, கையை நீட்டி வாழ்த்துக்கள் சொன்னவர் அவளுக்கு உடன் இருந்து எல்லாமே சொல்லிக் கொடுத்தார். அதில் அவரின் மீது மெலிதான இணக்கம் பிறந்தது.
அதன் பிறகு அவருடன் மெல்ல மெல்ல பழக தொடங்கினாள். அவள் அவருடன் பழகுவதை பார்த்து மற்ற அனைவரும் திகைத்துப் போனார்கள்.
அவளின் வயது ஒத்த ஆசிரியர்கள் அவளிடம் நட்பு பாராட்டிக் கொண்டார்கள். அதில் ஒருத்தி அவளிடம் வியந்து போய் கேட்டாள்.
“பூவரசி மேடம் யாருன்னு தெரியுமா? நீ பாட்டுக்க ரொம்ப அசால்ட்டா அவங்க கிட்ட பழகுற? அவங்களை விட்டு இனிமே கொஞ்சம் தள்ளி நின்னு பழகு. அது தான் உனக்கு நல்லது” என்று எச்சரித்தாள்.
தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏன் அப்படி சொல்றீங்க?” என்ற பொழுதே அவ்விடத்துக்கு பூவரசி வந்தார்..
அவர் வருவதை பார்த்த அந்த பெண் வாயை இறுக மூடிக்கொண்டு கிளம்பி விட்டாள். தமிழும் அதை அப்படியே விட்டுட்டு பூவரசியோடு சேர்ந்து மத்திய உணவை முடித்துக் கொண்டு வகுப்பறைக்கு கிளம்பினாள்.
போகும் அவளை பெருமூச்சு விட்டு பார்த்த பூவரசி பாட்டிக்கு போன் போட்டு கொஞ்ச நேரம் பேசினார். அதன் பிறகு அவரும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
ஆசிரியர் வேலை அவளுக்கு பிடித்து இருந்தது தான். ஆனால் அவளால் அதிக குரல் குடுத்து கத்த முடியவில்லை. தொண்டை எல்லாம் வலித்தது. ஏதோ ஒரு மணி நேரம்னா பரவாயில்லை. நாள் முழுக்க கத்தணும் என்றால் அவளால் எப்படி முடியும். யாரும் இல்லாத நேரம் வலித்த தொண்டையை கைகளால் நீவிக் கொண்டவளுக்கு அழுகையே வந்து விடும் போல ஆனது.
சில நேரம் வலியில் கண்ணீரும் வரதான் செய்தது. அவளின் அவஸ்த்தையை யாருக்கும் காட்டாமல் மறைத்துக் கொண்டாள். ஆனால் பூவரசி அவளின் வலியை தெரிந்துக் கொண்டு அவளுக்கு சில டிப்ஸ் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார்.
வியந்து போய் அவளை பார்த்தாள் தமிழ்.
“இதெல்லாம் பேசிக் தான்.. ஆனா பெயின் வராம இருக்காது. ஆசிரியர் வேலை கொஞ்சம் கடினம் தான். நல்ல சமுகத்தை உருவாக்கும் முயற்சியில நாம இருக்கிறோம். அதனால நம்ம விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி தள்ளிட்டு தான் இந்துல காலடி எடுத்து வைக்கணும் தமிழ்” என்றார்.
அவர் சொல்வதை கேட்டு தலை அசைத்துக் கொண்டாள்.
“சரி ஈவினிங் ப்ரீ தானே” கேட்டார்.
“ஆமாம் மேம்” என்றாள்.
“அப்போ ஐஸ்க்ரீம் சாப்பிட வெளில போகலாம்” என்றார்.
“மேம்” என்றாள் அவள் அதிர்வாக.
பின்ன அவருக்கு வயசு எப்படியும் ஐம்பது இருக்கும். அந்த வயசில் ஐஸ்க்ரீம் சாப்பிட ஆசை படுகிறாரே என்று அதிர்ந்து போனாள்.
“இங்க பாரு வயசு இந்த உடம்புக்கு தான். என் மனசு எப்பவும் இளமை தான்” என்று கண்ணடித்தார்.
“செம்ம போங்க” என்று சிரித்தாள் தமிழ். அவளின் சிரிப்பை பார்த்து இரசித்தவர்,
“நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்க தமிழ்” என்றார்.
அவளின் சிரிப்பு சற்றே சுறுங்க, அவளின் கையை பிடித்துக் கொண்டவர்,
“யாருக்காகவும் நம்ம மகிழ்ச்சியை விட்டு குடுக்கவே கூடாது தமிழ்.. உன் மகிழ்ச்சி உன் கையில தான் இருக்கு. ஜஸ்ட் என்ஜாய் திஸ் மொமன்ட்... நீ நினைச்சா கூட இந்த நிமிடம் திரும்பி வராது... அதனால கடந்து போனதை நினைச்சுட்டே இருக்காம உன்னை நீயே சியரப் பண்ணி வெளில வா... இந்த உலகம் ரொம்ப பெருசு.. உனக்காக இந்த பிரபஞ்சம் எதையாவது ஒளிச்சு வச்சு இருக்கும்... அதுக்கு நீ வேணும்.. சோ எல்லாத்துக்கும் ரெடியா இரு... முடங்கி போகும் மனதை தூக்கி போட்டுட்டு சிறகடிச்சு பற... இந்த வாழ்க்கை உன்னோடது... அதை யார் கையிலும் குடுக்காம உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்து பாரு” என்றார்.
பூவரசியின் சொற்கள் அத்தனையும் அழுத்தமாய் அவளின் நெஞ்சில் பதிந்துப் போனது. அதில் இருந்த வீரியம் அவளை சிலிர்க்க வைத்தது. நிமிர்ந்து தன் எதிரில் இருந்த பூவரசியை பார்த்தாள்.
“தேங்க்ஸ் பார் த அட்வைஸ்.. கரெக்ட் டைம் கரெக்ட் வேர்ட்ஸ்...” என்றாள் முக மலர்ச்சியுடன்.
“இப்போ ஓகே யா” கேட்டார்.
“ஹண்ட்ரட் பெர்சென்ட்” என்றவள், “எனக்கு ப்லாகரன்ட்.. உங்களுக்கு?”
“ஹனி நட் க்ரஞ்சு” என்றார் அவர்.
“அப்போ வகுப்பு முடிஞ்ச உடனே போகலாம்” என்றாள் மலர்ச்சியுடன்.
“ஓகே டன்” என்றவர் எழுந்து அவர் வகுப்புக்கு கிளம்ப, உள்ளே வந்த சக ஆசிரியர்கள் தமிழை வியந்து பார்த்தார்கள். அவர்களின் கண்களில் லேசாக பொறாமை தென்பட்டது.
அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. ஆனால் அவளிடமே சிலர் வந்து பேசி அவளின் சிந்தனையில் கல்லை எரிந்து விட்டு போனார்கள். ஆனால் அவள் கலங்கும் குட்டை இல்லையே...
“பூவரசி மேடம் யாரு கிட்டயும் பேச மாட்டாங்க.. ஆனா உன்கிட்ட மட்டும் எப்படி பேசுறாங்க?” என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் அவளிடம் கேட்க கடுப்பு தான் வந்தது தமிழுக்கு.
ஒத்த இரசனை இருந்தால் மட்டுமே நட்பு பலப்படும் என்பதை அறியாதவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் தலையை உருட்டி விட்டு எழுந்து வந்து விட்டாள் தமிழ்.
நட்புக்கு வயது வித்யாசம் தேவையில்லை. ஒன்று பட்ட இரசனை மட்டுமே போதுமானது என்பதை அவர்கள் அறியாமையிலே புரிந்துக் கொண்டவள் மாலையில் வகுப்பு முடிந்து பூவரசியோடு காரில் சென்றாள்.
அதை அந்த பள்ளிக்கூடமே கண்கள் தெறிக்க பார்த்தது. ஏனெனில் பூவரசியின் உயரம் அப்படி. அது தமிழுக்கு தான் தெரியாமல் போனது.
அதை அவளிடம் வெளிப்படுத்த அங்கு யாருக்கும் தைரியம் வரவில்லை.
தொடரும்...
Intha story kindle la Iruka sis?
ரைட்டர் ரெண்டு epi க்கும் 10 number இருக்கு பாருங்க