அத்தியாயம் 10

 
Admin
(@ramya-devi)
Member Admin

தன்னை ஒரு நூல் அளவு கூட அசையாமல் முற்றிலும் சிறை செய்தவனின் மீது கட்டுக் கடங்காமல் ஆத்திரமும் கோவமும் வந்தது.

தன் வாயை பொத்தி இருந்தவனின் கையை நறுக்கென்று கடித்து வைத்து விட்டாள் குழலி. அதில் ஸ்ஸ்ஸ்.. என்று சத்தம் எழுப்பி தன் கையை உதறிக் கொண்டவன், வலி குறையாமல் போகவும் அவளை விட அதிக ஆத்திரம் கொண்டவன் அவளின் இதழ்களை நறுக்கென்று கடித்து வைத்து அவளை பேசவே விடாமல் சிறை செய்ததோடு தன் கரத்தை கீழே இறக்கினான். அவனது கரம் அவளை தொடக்கூடாத இடத்தை எல்லாம் தொட்டு செல்ல கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல வழிந்தது.

அவளின் நெஞ்சில் மதிப்பு மிக்க இடத்தில் இருந்த ஏகப்பனின் மரியாதை அந்த நொடியில் சரசரவென்று இறங்கியது. அவளின் மனதில் தான் மிகவும் கீழ்த்தரமாக இறங்கி விட்டோம் என்பதை உணராமல் அவளை மிக கேவலமாக கையாண்டான் ஏகன்.

அவனது தொடுகையில் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது. ஆனால் அதை கூட மதிக்காமல் காமத்தில் திளைத்து இருக்கிறானே என்று வேதனை பட்டுப் போனாள். எல்லாம் சிறிது நேரம் தான். அவனது தலையை விர்ரென்று உரசி சென்ற புல்லட்டை பார்த்தவளுக்கு சப்தநாடியும் அடங்கிப் போனது.

அவளின் கண்ணீர் போன மாயம் தெரியவில்லை. ஏகனின் மீது இருந்த கடுப்பும் கோவமும் எங்கு போனது என்று தெரியவில்லை. தன் மீது மிக மோசமான நிலையில் இருக்கிறான் என்பதையும் மறந்துப் போனவளாய்,

“என்னங்க” என்று மிக மெதுவாக காற்றுக்கும் கேட்காத வண்ணம் அவள் அழைத்தாள்.

“மூச்...” என்று அவன் அதட்டினான்.

“இங்க என்ன நடக்குதுங்க” என்று மிக இரகசிய குரலில் அவனிடம் கேட்டாள். இப்பொழுது அவனது தொடுகை அவளுக்கு அருவெறுப்பாக்க தெரியவில்லை போல.

சற்று முன்பு வரை ஏகன் தன்னை மிக கேவலமாக கையாள்வது போலவே தோன்றியது பெண்ணவளுக்கு. பெண்ணை தொடக்கூடாத இடத்தை எல்லாம் தொட்டு உரசி, அவளின் விருப்பம் இல்லாமல் அவளை வளைப்பது என்ன ஆண் மகன் இவன்.. சரியான பொறுக்கி என்றே    தோன்றியது. ஆனால் அவனது நோக்கம் அவளிடம் தப்பாக நடப்பது அன்று என்பதை சீறி பாய்ந்து வரும் புல்லட்டுகள் உணர்த்தியது.

அந்த புல்லட்டுகளில் இருந்து தப்பிக்கவே அவளை உருட்டி தள்ளி இருளுக்கு கொண்டு சென்றான். அவள் கத்த வருவதை தடுப்பதற்கு தான் அவளின் இதழ்களை சிறையும் செய்தான்.

“என்னடி?” கடுப்புடன் அவளிடம் கேட்டவனின் பார்வையோ சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அவதானித்துக் கொண்டு இருந்ந்தது.

“என்ன நடக்குது ங்க இங்க ?”

“கன் ஷூட் நடக்குது”

“யார் மேல?”

“உன் மேல தான்” என்றான் அமைதியாக. அதில் விக்கித்துப் போனாள். அதன் பிறகு வேறு எதுவும் பேசவில்லை. அவளின் பெருத்த அமைதியை உணர்ந்த ஏகன்,

“பயமா இருக்கா?” கேட்டான்.

“பல நெருக்கமான உறவுகளின் கோர மரணத்தை மிக பக்கத்துல பார்த்து இருக்கேன்... மரணத்தை பற்றி பயமெல்லாம் இல்லை...” என்றாள் ஞானியாய். பெருமூச்சு விட்டான்.

“பிறகு ஏன் இந்த அமைதி...”

“இல்ல சொத்துக்காக இன்னும் எத்தனை உயிரை எடுப்பாங்கன்னு தோணுச்சு? அப்படி என்ன இந்த நிலையில்லாத சொத்து மேல மோகம்...” சொல்லும் பொழுதே அவளின் குரல் கமறியது.

ஏகனின் கை அவளின் தலையை தடவி கொடுத்தது.

“எதெல்லாம் நடக்கனும்னு இருக்கோ அதை எல்லாம் நம்மால மாற்ற முடியாது...” மிக மிக ரகசியமாக சொன்னவனின் தோளை உரசி சென்றது அடுத்த புல்லட்.

அதில் வலி எடுத்தது. தோளை உரசி சென்றதால் தோளை கிழித்துக் கொண்டு உதிரம் பீச்சி அடித்தது.

“ஐயோ...” என்று அவள் அலற போக, பட்டென்று அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான். அவள் சத்தம் போடாத வகையில். இந்த நேரம் அவனின் முத்தம் அவளுக்கு கசக்கவில்லை. அவளின் பெரிய விழிகள் இன்னும் பெரிதாக விரிந்தது.

 ஆனாலும் அவனது காயம் அவளுக்குள் பெரும் பதற்றத்தை கொடுத்தது. அவனது முதுகை இறுக்கமாக கட்டிக் கொண்டவளுக்கு அவன் காயத்தில் இவளுக்கு கண்கள் கலங்கியது.

அவளின் கண்ணீரை கண்டவன், மெல்ல தன் இதழ்களை மீட்டுக் கொண்டு,

“கத்தி தொலையாதடி.. இப்பவாவது வெறும் கையோட போச்சு... நீ சத்தம் போட்டு காட்டி குடுத்தா மொத்த உயிரையும் எடுத்துடுவானுங்க...” கிசுகிச்சுத்தான்.

தலையை மட்டும் ஆட்டியவளுக்கு விழிகளில் நீர் நிறைந்துப் போனது.

“ப்ச் அழாதடி..”

“என்னால தானே உங்களுக்கு இப்படி ஆனது”

“ப்ச் அதை விடுடி” என்றவன் அவளை இன்னும் இருளுக்குள் நகர்த்தி சென்றான். தரையில் அவளது முதுகு உரசி செல்கையில் சிறு சிறு கற்கள் உரசி அவளின் இரவிக்கை மறைக்காத வெற்று முதுகை கிழித்தது. ரவிக்கையோ கற்கள் உரசி மெல்ல மெல்ல கிழிய ஆரம்பித்தது. அவனது பாராத்தையும்  சேர்த்து தாங்கிக்கொண்டு நகர்வதால் அவளுக்கு பெறும் சோதனை ஏற்பட்டது.

ஆனாலும் அவனது கைகளில் இருந்து வழிந்த உதிரம் அவளை எல்லாவற்றையும் பொறுத்துப் போக சொன்னது. தனக்காக குண்டடி பட்டு இருப்பவனுக்காக இன்னும் எவ்வளவோ செய்ய  தோன்றியது அவளுக்கு.

“கையை அசைக்காதீங்க.. ப்ளட் ரொம்ப போகும்” முணுமுணுத்தாள்.

ஏகன் ம்ம்ம் என்று கூட மொழியவில்லை.

“கை ரொம்ப வலிக்கிறதா?” அவனின் நலனை கருத்தில் கொண்டாள்.

“ஏன் நீ வாங்கிக்க போறியா?” கடுப்புடன் கேட்டான். அவன் கடுப்படிக்கவும் இவளுக்கு ரோஷம் வர,

“வாங்க முடிஞ்சா கண்டிப்பா வாங்கிப்பேன். ஆனா வலியை எப்படி வாங்க” என்றவள், அவனிடம் இருந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளது முகம் திருப்புதலில் இவனுக்கு ஒரு மாதிரி ஆக,

“எதுக்குடி இப்போ முகத்தை திருப்புற?”

“ம்ம்ம் வேண்டுதல்”

“கன்னத்தை திருப்பிடுவேன்டி இப்படி எல்லாம் நடந்துக்கிட்டா”

“ம்ம்ம்.. திருப்புவீங்க திருப்புவீங்க...” என்ற நேரம் இவர்களுக்கு அருகில் மிக மிக நெருக்கமாக காலடி சத்தங்கள் கேட்க பயந்துப் போனவள், அவனின் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டவள் அவனது முதுகை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

அவளின் பயத்தை உணர்ந்தவன் தன்னை அவளுக்கு கொடுத்து விட்டு அடுத்து என்ன செய்வது என்பதை நோட்டமிட்டான்.

காலடி சத்தம் இன்னும் அதிகமாக கேட்க தன்னை பற்றி கவலை இல்லை ஏகனுக்கு. ஆனால் தன்னை நம்பி வந்தவளை காப்பாற்றியே ஆக வேண்டுமே என்று நெடுங்குழலியை தன்னோடு இறுக்கமாக அணைத்தவன், சடுதியில் அருகில் இருந்த புதரை நோக்கி உருண்டான். அவனது உருழலில் திகைத்துப் போனவள்  அவனோடு தன்னை புதைத்துக் கொண்டாள் நெருக்கமாக.

அவளது நெருக்கம் அவனை தடுமாற செய்தது.

“பயப்படாதடி... உன்னை காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு” என்றான்.

“உங்களை காப்பத்துறது என்னோட பொறுப்பு ங்க” என்றாள் வீரமாய். அவள் சொன்னதில் சிரிப்பு வந்தாலும் அவளின் கருணை அவனை அசைத்தது.

“சரிடி” என்றவன் புதரில் போய் அவளோடு விழுந்தான். அந்த சலசலப்பில் அனைவரின் கவனமும் அந்த புதரில் குவிய, பட் பட்டென்று வெடித்தது துப்பாக்கி குண்டுகள். கண்களை இறுக்கமாக மூடி உயிர் பயத்தில் நடுங்கிய நெஞ்சோடு அவனது மார்பில் புதைந்துப் போனாள். அவளின் காதுகளில் தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அதில் அலறப்போனவளின் இதழ்களை மீண்டும் அவனின் இதழ்கள் கவ்விப் பிடித்தது.

அந்த முத்தம் சுவையை கூட்டியதா? மோகத்தை கொடுத்ததா? எதுவும் இல்லை. அவளை கத்த விடமால் செய்யும் வித்தை மட்டுமே அது... மெல்ல மெல்ல குண்டுகளின் சத்தம் குறைய தன் நிலைக்கு வந்தவள்,

அப்பொழுது தான் ஒரு குண்டு கூட அவளின் மீது படாமல் போக  வேகமாய் ஏகனின் முதுகை கைகளால்  தொட்டு தடவி பார்க்க ஆரம்பிக்க, அவனின் வெற்று முதுகில் தவழ்ந்த அவளின் மிருதுவான கைகளின் ஆராய்ச்சியில் திகைத்தவன்,

“என்னடி பண்ற?” அடிக்குரலில் உறுமினான்.

“இல்ல என் மேல எந்த குண்டும் படல... ஆனா அவ்வளவு குண்டு வெடிச்சது. ஒரு வேலை அதுல ஏதாவது ஒரு குண்டு உங்க மேல பாய்ஞ்சி இருந்தா அது தான்” என்று மீண்டும் அவனது முதுகில் அவள் ஆராய்ச்சி செய்ய,

“கையை எடுடி” உறுமினான்.

“கொஞ்ச நேரம் சும்மா இருங்க ங்க...” என்றவள் மீண்டும் தன் ஆராய்ச்சியை தொடங்க,

இவன் பல்லைக் கடித்து இல்லாத பொறுமையை வரவழைத்து கொண்டு இருந்தான்.

அவளின் ஆராய்ச்சியில் எந்த குண்டும் அவனது முதுகை துளைக்கவில்லை என்பதை உணர்ந்து,

“முதுகுல எதுவும் இல்ல.. ஒருவேளை கால்ல எதுவும் இருக்காங்க?” என்று அவளின் கை அவனது காலுக்கு செல்ல பார்க்க,

“அடியேய்” என்றான் கடுப்பாக.

“ப்ச் சும்மா இருங்க” என்று அவள் மீண்டும் ஆராய்ச்சி செய்ய போக,

“எனக்கு எங்கும் குண்டு படலடி”

“அப்போ வெடிச்ச அவ்வளவு குண்டும் எங்க போச்சு?”

“பக்கத்துல இருக்க புதருக்கு போச்சு “ என்றான்.

“ஹாங்” என்று அவள் விழிக்க,

“நாம உருளும் போதே... பக்கத்துல இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அந்த பக்கம் இருந்த புதருல போட்டுட்டேன். அதனால அந்த சலசலப்புல நம்ம மேல இருந்த கவனம் போயிடுச்சு... அது தான் நாம இந்த பக்கம் சத்தமே இல்லாமல் வாந்துட்டோம்.. அதோட இங்க இப்படி ரொம்ப நேரமும் இருக்க முடியாது...” என்றவனை அவளை  தன் மீது ஏற்றிக் கொண்டவன், மெல்ல மெல்ல நகர்ந்து இருளின் முழு மறைவுக்கும் சென்றவன் தரையில் இருந்த ஒரு கதவை திறந்தான்.

குழலி வியந்து போய் பார்த்தாள்.

“என்னங்க இது?”

“பதுங்கு குழிடி.. ப்ளஸ் குட்டி வீடு” என்றவன் அவளை முதலில் அந்த குழிக்குள் அனுப்பினான். அவளை தொடர்ந்து அவனும் சென்றான்.

இருவரும் உள்ளே வந்த பிறகு தான் குழலிக்கு நிம்மதியாக இருந்தது.

“ஹப்பாடா எப்படியோ சேப் ஆகிட்டோம்” என்று அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“இப்ப மாட்ட மாட்டோம்.. ஆனா விடுஞ்சா கண்டிப்பா மாட்டுவோம்” என்றான்.

“என்ன சொல்றீங்க?” நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

“என்னோட இரத்தம் காட்டி குடுத்துடும்” என்றான்.

அப்பொழுது தான் அவனது கையில் இன்னும் உதிரம் வந்துக் கொண்டு இருப்பது நினைவுக்கு வந்தது அவளுக்கு. வேகமாய் தன் முந்தானையை கிழித்து அவனுக்கு கட்டுப் போட ஆரம்பித்தாள் குழலி.

அவளின் அக்கரையில் அவனது இறுக்கம் சற்றே தளர்ந்தது.

ஆனாலும் அவளுக்கு அவன் கையை காட்டவில்லை.

“ப்ச் சின்ன பிள்ள மாதிரி அடம் பண்ணாதீங்க ங்க.. இரத்தம் பாருங்க எவ்வளவு வருதுன்னு.. கையை காட்டுங்க” என்று அவனுடன் மல்லுக் கட்டி அவனின்  காயத்திருக்கு கட்டுப் போட்டாள் குழலி...

Loading spinner
Quote
Topic starter Posted : April 24, 2025 11:23 am
(@gowri)
Estimable Member

யாரு தான் டா அந்த வில்லன்....

கதை இங்கேயே இருக்கறது போல இருக்கு ரைட்டர்.....

பாஸ்ட் ஆன் பண்ணுங்க டா

Loading spinner
ReplyQuote
Posted : April 24, 2025 2:31 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top