அடுத்து வந்த நாட்கள் இருவரும் முகத்தை திருப்பிக்கொண்டு இருக்க கிழவி தான் இருவரையும் பாவம் போல பார்த்துக்கொண்டு இருந்தார்.
நாதன் லாங் லீவ் சொல்லிவிட்டு இருவரையும் நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தான்..
பழமலை வேலைக்கு சேரும் நாளும் வந்தது.. அன்று காலை அவன் பரபரப்புடன் இருக்க எல்லாருமே அவனை கேள்வியாக பார்த்தார்களே தவிர யாரும் என்ன என்று கேட்கவில்லை..
“ஏலேய் ராசா இங்க வாலே..” என்று கிழவி அவனை அழைத்து வெள்ளியில் இருந்த காப்பை கழட்டிவிட்டு தங்கத்தில் ஆனா காப்பை போட்டு அழகு பார்க்க பருவதம் நொடித்துக்கொண்டார்..
“ம்கும் வெட்டி பயலுக்கு வந்த பவுசை பாரு..” முனகி விட்டு அவர் செல்ல கொழுந்து அவன் அளப்பரையை பார்த்துக்கொண்டு இருந்தார்.
“போறது டுட்டோரில் காலேஜுக்கு இதுக்கெதுக்கு இவ்வளவு அலப்பறை” நாதன் அலட்ச்சியத்துடன் அவனை பார்த்துக்கொண்டு இருந்தான்.
பழமலை சட்டையை அயன் பண்ணி போட்டு மேலே டையையும் கட்ட
“படிக்க போறதுக்கு எதுக்குடா இவ்வளவு அலப்பறை..” பொறுத்து பொருத்து பார்த்த கொழுந்து அவனை கேக்க
“வாட் மிஸ்டர் கொழுந்து.. யூ நோ டாக்டர் ஆப் பிலாசபி இன் அக்ரிகல்ச்சர் பையோடெக்னாலாஜி ஸ்டடி.. மை க்ராண்ட்சன் இஸ் எ கிரேட் ஸ்டுடென்ட்... பண்ணி கை...” சொல்லி சிரிக்க கேட்டுக்கொண்டு இருந்த நாதனுக்கு நெஞ்சை அடித்துக்கொண்டு வந்தது.
நிஜமா என்பது போல அவனது தோற்றத்தையும் செயலையும் பார்த்தான்.. அவனால் நம்பவே முடியவில்லை.. இதெப்படி சாத்தியம்..
அவனால் வாய் விட்டும் கேக்க முடியாது. அதும் கொழுந்து முன்னாடி.. அவர் முன் கேட்டால் தன்னுடிய குட்டு வெளிப்பட்டு விடும்.. அதன் பின் இருக்கும் சூச்சமும் வெளிவரும் என்று அமைதியாய் இருந்தான்.. ஆனால் அவனது விழிகள் பழமலையை மட்டுமே சுத்தி வந்தது..
கிழவி சொன்னது எதுவும் புரியவில்லை கொழுந்துக்கு.
“ஆத்தா என்ன சொல்ற.. வெளங்குற மாதிரி சொல்லு..”
“அடேய் என் பேரன் விவசாயத்துல உசந்த படிப்பு படுச்சு இருக்காண்டா.. அதை தான் இங்கிலீஷ்ல சொன்னேன்.. கன்றி ப்ரூட்..”
பருவதத்துக்கும் இந்த விஷயம் புதிது.. “அத்தை என்ன சொல்ற..”
“ஆமாண்டி என் பேரன் இன்னைக்கு வேலைக்கு போறான்..” என்று சொல்ல அனைவருமே ஆச்சர்யமாய் பார்த்தார்கள்.
“அய்யா ஆத்தா என்ன சொல்லுது.. நீ எப்போ பள்ளிக்கூடத்துக்கு போன.. விளக்காமா சொல்லு யா..” சிவகொழுந்து கண்கள் ஆசையில் மின்னியது..
அவரின் முகத்தில் இருந்த சந்தோசத்தை கண்டு நாதனுக்கு மனம் எரிந்தது..
“அடேய் என் பேரன் ஊர் சுத்துறான்னு தானே நீ நினைச்சுக்கிட்டு இருந்த.. அவன் ஊரை சுத்தல டா.. பாதி நேரம் தானே காலேஜு.. அவன் அங்க போயிட்டு மீதி நேரம் நம்ம வயகாட்டுல தானே இருப்பான். அப்ப முழுசும் நம்ம மண்ணை ஆராய்ச்சி செஞ்சி என்ன விளையும்னு பார்ப்பான்.. நமக்கு மட்டும் இல்ல நம்ம ஊருக்கே சொல்லுவான்..
நீ கூட அவன் கிட்ட கேட்டு தானே ஒவ்வொரு பட்டத்துக்கும் விதை விதைப்ப.. நல்ல விளைச்சல் கூட குடுத்ததே.. ஒரு சமயம் மட்டும் ஒன்னும் வரலன்னு சொல்லி விதையை கூட இனி இவனையே வாங்க சொன்ன ஞாபகம் இருக்கா.. அப்போ இவன் கண்டு படுச்ச விதை நெல்ல உனக்கு குடுத்து விதைக்க சொன்னான். புதுவகையான நெல்லுன்னு அந்த நெல்லுக்கு அவ்வளவு மவுசு இருந்ததுன்னு நீ கூட சொன்னீல்ல.. நெல்லு மட்டும் இல்லாம தக்காளி, மஞ்சளு, முருங்க கா, வாழ மரம், தென்னங்கன்னு, மாங்கா மரம்னு அவ்வளவு மர கண்ணும் இவன் தானே கொண்டு வந்து தருவான் மறந்துட்டியா. பொறவு உன் சிநேகித புள்ளைகளுக்கு கூட நீ இவன் கிட்ட வாங்கி தர சொன்னியே.. அதெல்லாம் என் பேரனோட உழைப்புடா கொழுந்து.. அது மட்டும் இல்லாம இவனுக்குன்னு தனியா நர்சரி ஒன்னு வச்சு இருக்கான்.. இவனுடைய கண்டுபிடிப்பு பூரா அங்க இருந்து தான். அது நம்ம கம்மா பக்கத்துல நம்ம வயகாட்டோட சேத்து தான் இருக்கு. நீங்க அந்த பக்கம் எல்லாம் போகாததுனாளா உங்களுக்கு தெரியல.. அதிக நேரம் நானும் என் பேரனும் அங்கன தான் இருப்போம்.. அதுனால உங்களுக்கு நாங்க ஊர் சுத்துர மாதிரி இருக்கும்.. இவ்வளவு நாளும் இவன் உழைச்சுக்கிட்டு தான் இருந்தான்.” பெருமையுடன் சொல்ல தன் மகனை திரும்பி பார்த்தார்.
“அய்யா நிஜமாவா..”
“ஆமா ப்பா..”
“ஏங்கண்ணு அப்பா கிட்ட சொல்லல...”
“அது உங்களுக்கு திடீர் சந்தோஷம் குடுக்கலாம்னு தான் ப்பா..” என்றவனை ஆர தழுவி தன் மகிழ்வை காட்டியவர் அவனின் அயன் பண்ணி போட்ட சட்டையை நீவி விட்டு காலரை எடுத்து விட்டு டையை சுருக்கம் இல்லாமல் எடுத்துவிட்டவர்
“சந்தோஷம் யா.. உன்னை இப்படி பாக்க மாட்டமான்னு தான் அடுச்சுக்கிட்டு இருந்தேன்.. போதும் யா என் கட்டை வெந்துடும்..” என்றவரை இருக்க அணைத்தவன்
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க ப்பா..” என்று கண் கலங்கினான். தான் செய்த முட்டால் தனத்தை எண்ணி வருந்தினான்.
“ஏண்டா அப்புறம் இத்தனை நாள் வேலைக்கு போகல..” நாதனால் பொருக்க முடியாமல் கேக்க
“அவன் வேலைக்கு போகலன்னு நீ பாத்தியா.. நிதமும் அவன் பீல்ட் விசிட்க்கு போயிட்டு அங்க ஆலோசனை சொல்லிவிட்டு, நம்ம ஊருல இருக்குற பயலுவலுக்கு எல்லாம் மண்ணை பத்தி விளக்கம் சொல்லிவிட்டு, பொறவு நம்ம வயலுக்கு வந்து அங்கயும் வேலை பார்த்துட்டு, சாயங்கால நேரம் சிலம்பு சுத்திட்டு சிலம்புக்கு கூட என் பேரன் வகுப்பு எடுக்குறான்.. அது தெரியுமா.. உனக்கு..” என்று கிழவி கெத்தாய் சொல்ல நாதனின் முகம் கருத்து போனது.
முகில் நாதனை எள்ளலாய் ஒரு பார்வை பார்க்க நாதன் தலை குனிந்தான்.
திரும்பி அன்னத்தையும் சாந்தியையும் பார்த்தாள். அவர்களின் முகமும் கருத்து போனது..
சாந்தி சொன்ன அத்தனை அம்சத்தோடு இருந்த பழமலையை கண்டு ஏனோ மனம் அடித்துக்கொண்டது..
அனைவரும் அவனை விழுந்து விழுந்து கவனிக்க முகில் மெதுவாய் நகர்ந்து பின் பக்கம் சென்று நின்ருக்கொன்டாள்.
என்னவோ தான் தனித்து போனது போல ஒரு உணர்வு.. அவன் படித்து இருக்கிறான் என்று தெரியும். ஆனால் இந்த அளவு படித்து இருக்கிறான் என்று அவளுக்கு இப்போது தான் தெரியும்..
அவளுக்கு தான் அவன் அளவுக்கு தான் தகுதி இல்லை என்று புரிந்து ஒதுங்கி போக முடிவு செய்தாள். ஆனால் அவன் விடுவானா என்ன..
ஒரு கட்டத்தில் அவளை காணாமல் அவனது கண்கள் தேட, அவள் பின் பக்கம் இருப்பது தெரிய அங்கே சென்றான்.
“இங்க என்னடி பண்ற...” அதட்டலாய் ஒலித்தது அவனது குரல்..
“வேலை முடுஞ்சுடுச்சு சரி அதான் இங்க வந்து உக்காரலாம்னு வந்தேன்..” என்றவள் அவனிடமிருந்து மனதை மறைத்துக்கொண்டாள்.
“பாத்தா அப்படி தெரியலையே..”
“ம்ம்ம் பாத்தா எல்லாம் தெரியாது..” என்று புன்னகைத்தவளை ஆழ்ந்து பார்த்தான். அவனது பார்வையை கண்டு சட்டென்று சுதாரித்து
“ஆமா இப்படியேவா காலேஜ் போக போறீங்க..”
“ஆமா ஏண்டி..”
“ப்ச் முதல்ல இந்த தாடிய எடுங்க..” என்று சொன்னவளை
“நீயே வந்து எடுத்துவிடு..” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு குளியல் அறைக்கு செல்ல அவள் தான் ஜெர்க்காகி நின்றாள்.
“நான் எதுவுமே சொல்லல எல்லாத்தையும் மறந்துடுங்க.. இப்படியே போங்க.. நான் போறேன்.” என்றவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்
“என்னால எதையும் மறக்க முடியாது.. நீதானே சொன்ன நீயே வந்து எடு” என்றவன் கதவை தாளிட்டுவிட்டு அவளை இழுத்து தன் மீது போட்டவனை கலவரத்துடன் பார்த்தாள்.
“ப்ச் யாராவது வந்தா என்ன பண்றது.. போங்க நான் இந்த ஆட்டத்துக்கு வரல..”
“ஷ் யாரும் வர மாட்டாங்க.. கிழவி பாத்துக்கும்.. நீ வா” என்றவன் தான் அணிந்து இருந்த சட்டை பனியனை கலட்டி போட்டுவிட்டு வெற்று உடம்போடு நிக்க அவளுக்கு தான் படபடப்பாய் போனது..
“மாமா”
“ப்ச் செய்டி..” என்றவன் கதவிலே சாய்ந்து நிற்க அவள் நடுங்கிய கையேடு அவன் முகத்தில் க்ரீமை எடுத்து பூசி பிரஷ்ஷால் தேய்க்க தேய்க்க நுரை வர, மெல்ல அவன் மீது கீறல் விழாமல் பிளேடை மேலிருந்து கீழாக இழுக்க, சரியாய் அந்த நேரம் அவளது இடையில் அவனது கைகள் விளையாட
“என்ன மாமா இது...” என்றவளின் பேச்சு அவன் காதில் விழுந்தால் தானே..
அவளின் கழுத்தில் முகம் புடைத்து தன் முகத்தில் இருந்த நுரையை அவளின் கழுத்தில் தேய்த்து அவளை படுத்தி எடுத்தான்.
அவனது தொடுகை அவளுள் மோகத்தை விதைக்க கூடவே அவனுக்கு நேரம் ஆவது புரிய
“முதல் நாளே தாமதமாய் ஆகிட போவுது மாமா..”
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்..” என்றவன் அவளிடம் புதைந்து போய் அவளது வாசனையை நுகர ஆரம்பிக்க அவளுக்கு தான் பெரும் அவஸ்த்தையாய் போனது..
வெளியில் வேறு எல்லாரும் இருக்க இவனோ இங்கே இவளிடம் இளைந்துக்கொண்டு இருக்க இன்னும் இவன் சாப்பிடவில்லை வேறு..
வலுக்கட்டாயமாய் தன்னிடமிருந்து அவனை பிரித்து “இப்போ நல்ல பிள்ளையா கிளம்புங்க மாலை வந்து என்ன வேணாலும் பண்ணிக்கோங்க” என்று சொல்லி கெஞ்சி கூத்தாடி அவனை அனுப்பி வைத்தவள் தானும் குளித்து விட்டு வெளியே வந்து அவனுக்கு சாப்பாடு பரிமாறி அவனை கல்லூரிக்கு வழியனுப்பி வைத்தாள்.
போகும் போது அவனை நிறுத்தி கூலர்சை அவன் கண்களுக்கு அணிவித்து விட்டு திருஷ்ட்டி கழித்து அனுப்பி வைத்தார் பொன்னி..
தன்னுடைய வண்டியில் ராஜ தோரணையுடன் மிடுக்குடன் சென்றவனை கண்டு நாதனுக்கு மனம் உலைக்கலமாய் கொதித்தது..
அவன் சென்ற பிறகு கொழுந்து முகிலிடம் பேச வர அவரை கண்டுக்கொள்ளவே இல்லை.
சற்று பொறுத்து “ஆத்தா முகிலு..” அவளிடம் பேச வர
“வேணாம் மாமா இனிமே என்னை உங்க பையனுக்கு கட்டி வச்சா நல்லா இருக்காது.. உங்க பையனோட உயரத்துக்கு ஏத்தா போல பொண்ணு பாத்து கட்டி வைங்க.. நான் இன்னைக்கே பெருமாள் மாமா வீட்டுக்கு போறேன்” என்றவளை என்ன செய்வது என்று சிவக்கொழுந்துக்கு புரியவில்லை..
“ஆத்தா நான் அப்படி சொல்ல வரல”
“இல்ல மாமா நீங்க சொன்னது சரி தான்.. முன்ன அவருக்கு தகுதி இல்லன்னு சொன்னீங்க.. இப்போ எனக்கு தகுதி இல்ல.. அப்போ நான் விலகி போறது தானே நியாயம்.. உங்க பையனோட வாழ எனக்கு தகுதி கிடையாது.. உங்க பையனோட கல்யாணத்துக்கு என்னை கூப்பிடுங்க.. அதே போல நாதனுக்கும் சாந்திக்கும் கல்யாணம் செஞ்சு வைங்க.. என்னை காரணம் காட்டாதீங்க.. எனக்கு என் வாழ்க்கையை பாத்துக்க தெரியும்” என்றவள் போய்விட சிவகொழுந்து சமைந்து நின்றார்.
அட போங்கடா....இப்ப இவ ஆரமிக்கரா🤦🤦🤦🤦
ஆன அதுக்கு நம்ம ப்ரூட்டி விடனுமே 🤣🤣🤣🤣🤣