புடவையை தவிர இவக்கிட்ட வேற எதுவுமே இல்லையா... எண்ணியவன் வண்டியை எடுக்க இவள் பின்னாடி வந்து அமர்ந்துக் கொண்டாள்.
அவள் அமர வண்டியை மிதமான வேகத்தில் விட்டான். முதலில் அவளுக்கு உணவு வாங்கி கொடுத்தவன் அதன் பிறகே வீட்டில் சமைக்க பொருள்களை வாங்க கூட்டி சென்றான்.
அவள் தேவையான பொருள்களை எல்லாம் வாங்கிய பிறகு வீட்டிற்கு வந்தார்கள். கூடவே ஒரு பெண்மணியையும் வீட்டுக்கு வர சொல்லி சொல்லி இருந்தான். இவர்கள் வரவும் அவரும் வந்து சேர்ந்தார்.
“யாரு இவங்க?” கேட்டுக் கொண்டே பொருள்களை எல்லாம் உள்ளே வைத்தாள்.
“வீடு சுத்தமா இல்லன்னு சொன்னியே அதுக்கு தான் வர சொன்னேன்” என்றான்.
“ஆமா எதோ குப்பைக்குள்ள வீட்ட கொண்டு போய் வச்ச மாதிரி இருக்கு..” அவள் வாயை விட ஏகன் அவளை முறைத்துப் பார்த்தான்.
நெடுங்குழலி வாயை மூடிக் கொண்டாள். அதன் பிறகு அவரோடு சேர்ந்து அவளும் வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். ஏகன் எதிலும் கலந்துக் கொள்ளவில்லை. அவன் அவனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
இருவருமாக சேர்ந்து இரவு வரை வீட்டை சுத்தம் செய்தார்கள். குவிந்த குப்பை கூலங்களை எல்லாம் ஒன்றாக தோட்டத்தில் குவித்து தீ மூட்டி எரித்து விடவும் செய்தார்கள்.
அதை எல்லாம் மேலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஏகன். ஆனாலும் எதிலும் கலந்துக் கொள்ளவில்லை. எல்லா குப்பைகளையும் வெளியே கொட்டிவிட்டு நீர் இறைத்து மொத்த வீட்டையும் கழுவி சுத்தம் செய்த பொழுது அவளின் இடுப்பு அதிக வலி எடுத்தது.
இடுப்பை நீவி விட்டுக் கொண்டே மாப் போட்டு எடுத்தாள் மீதி இருந்த ஈரத்தையும். துடைத்து எடுக்கவும் வீடு சட்டென்று காய்ந்தது. அந்த பெண்மணி ஏகனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிளம்பி விட்டார். குழலி அடுப்படிக்கு சென்றாள்.
இப்பொழுது தான் பளிச்சென்று இருந்தது. ஒரு இடம் கூட அழுக்கோ தூசியோ இருக்கவில்லை. அதில் நிம்மதி கொண்டவள்,
ரொம்ப சிம்பிளாக ரவை கேசரியும் கொஞ்சம் சேமியா உப்புமாவும் தேங்காய் சட்னியும் செய்தாள். அவனை சாப்பிட கூப்பிடலாமா என்று யோசித்துக் கொண்டே மாடிக்கு வந்தாள்.
“காய்ந்து போன பன்னை தானே சாபிடுறாரு. இதை சாப்பிடட்டும்” என்று அவனது அறையின் கதவை தட்டினாள்.
“ம்ம்” என்று சத்தம் வந்தது.
“உணவு செய்து இருக்கேன். சாப்பிட வர்றீங்களா?” தயக்கமாக கேட்டாள்.
“அதெல்லாம் எதுவும் தேவையில்லை” என்றான் வெளியே வராமல்.
“ரொம்ப தான்” முணகியவள்,
“இல்ல கடைக்கு எல்லாம் கூட்டிட்டு போய் இருக்கீங்க. அதை விட வேலைக்கு ஆள் எல்லாம் கூட்டிட்டு வந்து உதவி செய்து இருக்கீங்க. அது தான் நானும் பதிலுக்கு உதவலாம் என்று” முடிக்கும் முன்பே,
“நோ நீட்” குரலை அழுத்தமாக உச்சரித்தான். அதிலே தெரிந்துப் போனது இவன் உண்ண வர மாட்டான் என்று.
பெருமூச்சு விட்டவள் கீழே வந்து தான் மட்டும் மேசையில் அமர்ந்து உண்ண தொடங்கினாள். ஆனாலும் அவனை விட்டுட்டு சாப்பிட மனமே இல்லை.
இரண்டு வாய் வைத்தவள், அதற்கு மேல் முடியாமல், ஒரு தட்டில் கொஞ்சமாய் கேசரி, சேமியா, குட்டி கிண்ணத்தில் சட்னி என எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றவள் அவனின் அறைக்கு முன்னாடி வைத்து விட்டு,
“உங்களை விட்டுட்டு சாப்பிட எனக்கு மனசு வரல... அதனால நான் சாப்பிடுறதுல கொஞ்சம் உங்களுக்கு கொண்டு வந்து இருக்கேன். அதை சாப்பிடுறதும் சாப்பிடாம வீண் செய்வதும் உங்க விருப்பம். என் கடமை நான் செய்து வைக்கிறது...” சொன்னவள் கீழே வந்து மீண்டும் உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.
அதன் பிறகே அவளுக்கு உள்ளுக்குள் உணவு இறங்கியது. உண்டு கொஞ்ச நேரம் கழித்து போய் பார்த்தாள். தட்டு வெளியே தான் இருந்தது. மனது சற்றே வலித்தது. ஆனாலும் தட்டை எடுத்து வரவில்லை. காலை வரை பார்ப்போம் எண்ணியவள் கொஞ்ச நேரம் போனில் மூழ்கி இருந்தாள்.
அவளுக்கு என்று சில கடமைகள் இருந்தன... அதை எல்லாம் இருந்த இடத்தியல் போனின் மூலமாக தான் மானிட்டர் செய்வாள். இங்கு வந்ததில் இருந்து அந்த வேலைகளை எல்லாம் செய்யவில்லை.
அதனால் இன்றைக்கு ஆரம்பித்து விட்டாள்.. சிறிது நேரம் எல்லா தகவல்களுக்கும் பதில் சொன்னவள், எந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் தகவல்களால அனுப்பிய போதே கண்களை அசத்தியது தூக்கம்.
வேலை அந்த அளவுக்கு பெண்டு கழட்டி இருந்தது. அப்படியே படுத்து விட்டாள். படுத்து கொஞ்ச நேரம் கூட ஆகி இருக்காது... ஏகன் வந்து நின்றான்.
கண்களெல்லாம் ஒரே எரிச்சல்... “இன்னைக்கு தான் இவ்வளவு வேலை பார்த்து இருக்கேனே... இன்னைக்கும் ட்ரைனிங் வேணுமா?” பாவமாக அவனை பார்த்து கேட்டாள்.
“என் கடமையில இருந்து நான் எப்பவும் நழுவ மாட்டேன்...” என்றவன் வெளியே போய் விட குழலிக்கு வேறு வழியிருக்க வில்லை.
கிளம்பி பைக்கில் ஏறி அமர்ந்தாள். பழக்கப்டாத வேலை செய்ததிலே அதிகம் ஓய்ந்து போய் இருந்தாள். ஆனால் இப்பொழுது அவன் மைதானத்தை பத்து வட்டம் சுத்து வர சொல்ல முதல் சுற்றுக்கே அசந்துப் போனாள்.
“இன்னைக்கு மட்டும் சுற்று இல்லாம ஒர்கவுட் மட்டும் பண்ணட்டுமா சார்?” என்றவளின் பேச்சை காதிலே வாங்கிக் கொள்ளாமல் அவன் பாட்டுக்க ஒர்கவுட் பண்ணவும் இவளுக்கு முகம் வாடி விட்டது.
“இப்படி பேசாமலே எல்லாத்தையும் சாதிச்கிக்குறாரு இவரு...” முணகியவள் வேறு வழியில்லாது சுற்றி வர ஆராம்பித்து விட்டாள்.
தூக்கம் சொக்கியது. ஓடும் பொழுதே தூக்கம் சொக்கியது. ஓடிக்கொண்டே தூக்கம் வந்து விட அப்படியே தூங்கிப் போனாள். தூங்கியதில் கால் தடுமாறி விட அப்படியே கீழே விழுந்து விட்டாள்.
விழுந்த உடன் எழுந்திரிக்காமல் இது தான் சாக்கு என்று அப்படியே படுத்துக் கொண்டாள். அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு கீழே விழுந்த உடன் அவள் எழுந்திரிக்காமல் போகவும் சிறிது நேரம் காத்திருந்தவன் அதன் பிறகு அவளிடம் விரைந்தான்.
“ஏய்..” என்று ஏவல் அழைப்பு தான்.
அவள் தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாளே.. எங்கிருந்து கூப்பிட்ட குரலுக்கு எழுவது.
மீண்டும் அவன் ஏய் என்றான். ம்ஹும்.. எழுந்திருக்கவே இல்லை.
“ப்ச்.. இது தான் சாக்குன்னு தூங்குறத பாரு..” திட்டியவன் நேற்று பானையில் அவள் பிடித்து வைத்திருந்த தண்ணீரை தூக்கி அப்படியே அவள் மீது கொட்டினான்.
திடிரென்று தண்ணீர் மேல படவும் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவள் எதிரே கோவமாக நின்று இருந்த ஏகனை கண்டு பயந்துப் போனவள்,
“சாரி சார்... தூங்கிட்டேன்” என்று பதறி அடித்துக் கொண்டு எழுந்தவள், ஓட ஆரம்பிக்க, ஏகன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு சுற்று முழுதாக கூட போய் இருக்க மாட்டாள். மீண்டும் கண்களை அசத்திக் கொண்டு வர, அது வரை வெளிச்சத்தில் ஓடிக் கொண்டு இருந்தவள் சற்றே அவன் கண் மறைவாக இருளோடு இருளாக ஓட ஆரம்பித்தவள், கொஞ்ச நேரம் கழித்து மரத்தோடு மரமாக மறைந்து நின்றவள் அதன் மீதே கண் சொக்கி தூங்க ஆரம்பித்து விட்டாள்.
அவளது ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு எரிச்சல் மண்டியது. “சரியான தூங்க மூஞ்சி...” திட்டியவன் இந்த முறை ஒரு பெரிய பானையில் நீரை கொண்டு வந்து மொத்தமாக ஊற்றினான் அவள் மீது.
இந்த முறை முன்பு போல பதரவேல்லாம் இல்லை. நிதானமாக கண் விழித்தவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் ஓட ஆரம்பித்தாள். அவள் ஓடுவதற்கு அவளின் நனைந்த சேலை ஒத்துழைக்காமல் போக திரும்பி அவனை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்தாள்.
அதில் கடுப்பானவன்,
“ஓடுடி” என்று பல்லைக் கடித்தான்.
“தண்ணிய மேல ஊத்திட்டு ஓடுன்னா எப்படி ஓடுறது... சேலை எல்லாம் உடம்போட ஒட்டிக்கிச்சு...” அப்பொழுது தான் அவளை உற்று பார்த்தான்.
அவள் உடம்பெல்லாம் ஈரம் சொட்டி நின்றது. கூடவே அவள் கட்டி இருந்த புடவை அவளின் மேனியை நன்றாக ஒட்டிக் கொண்டு விட, அவளின் வனப்புகள் எல்லாம் அப்பட்டமாய் தென்பட்டது.
அதில் அவனது பார்வை சற்றே அதிகமாக நிலைத்து நிற்க, பக்கென்று ஆனது அவளுக்கு. உடனடியாக திரும்பி நின்று தன் எழிலை மறைத்துக் கொண்டாள்.
அவனுக்கு அதில் சுல்லென்ற உணர்வு வந்ததோ என்னவோ..
“உத்து பார்க்கிற அளவுக்கு எல்லாம் நீ ஒர்த் இல்ல... ரொம்ப பண்ணாதடி” முறைத்தான்.
தன்னை அவன் அப்படி சொல்லவும்,
“ஆமா ஒர்த் இல்லாம தான் அப்படி திங்கிற மாதிரி பார்த்திங்களா?” இவளும் மல்லுக்கு நின்றாள்.
“ஆமா உன்னை அப்படியே தின்னுட்டாலும் பசி அடங்கிடும் பாரு. போடி வேலையை பார்த்துக்கிட்டு” நோஸ்கட் பண்ணினான்.
“இங்க பாருங்க சும்மா சும்மா என்னை சீண்டி விட்டுக்கிட்டே இருக்காதீங்க... நான் அழகு தான். ஏன் ஒத்துக்க மாட்டிகிறீங்க?”
“நீ அழகுன்னு நீயே தான் சொல்லிக்கணும்...” மேலும் அவளை கீழிறக்கி பேசினான். அதில் கோவம் கொண்டவள், அவனுக்கு நேருக்கு நேராக வந்து நின்றவள்,
“எங்க என்னை முழுசா பார்த்துட்டு சொல்லுங்க நான் அழகா இல்லையான்னு” அவள் பொருள் புரியாமல் சொல்லி வைக்க ஏகன் அவளை அழுத்தமாக பார்த்தான்.
இவளோ போய் அவன் கிட்ட wanted ஆ வாங்கி கட்ட போறா 🤭🤭🤭🤭🤭
ஆனாலும் ஏகா நீ ரொம்ப ஆபீசரா இருக்க டா....