“என்ன சொல்றனா? அப்படியே ஒன்னும் தெரியாதவ மாதிரி நடிக்காதடி. பொம்பளை பொருக்கி உன் அம்மாவ மாதிரி தானே நீயும் இருப்ப... ஆனா உங்க அம்மா ஒரு ஆம்பளையும் விட்டு வைக்க மாட்டா. நீ ஒரு பெண்ணை கூட விட்டு வைக்க மாட்ட... இருவருக்கும் அது மட்டும் தான் வித்யாசம்” என்றவன் சில விடியோக்களை அவளுக்கு காண்பிக்க அவளின் தலையில் இடி இறங்கியது. விழிகளில் அருவி வழிந்தது.
அதில் அத்தனையும் அவள் தான். அதுவும் மற்ற பெண்களோடு இவள் அதித நெருக்கமாக இருப்பது போல காட்சி இருந்தது.
“உன் மேல தப்பை வச்சுக்கிட்டு என்னை எல்லா பக்கமும் குறை சொல்லிட்டு திரியிறியா? நான் தொட்டாலே நீ ஏன் விலகி போனான்னு இத பார்த்த பிறகு தான்டி தெருஞ்சுக்கிட்டேன். உனக்கு ஆம்பளைங்களையே பிடிக்காதுன்னு... உன்னுடைய செ...சுவல் பாட்னர் எல்லாருமே லேடிஸ் மட்டும் தான் போல...” என்று ஏளனமாக இன்னும் அவன் என்னென்னவோ சொல்ல மயங்கி போய் அப்படியே விழுந்து விட்டாள்.
அவள் மீது சுமத்திய குற்றசாட்டை கேட்டு மெல்லிய மனம் கொண்டவளால் தாங்க முடியாமல் மயக்கமாகி விட்டாள். அவள் மயங்கியதை பொருட்படுத்தாமல் தன்னறைக்கு போய் எரிச்சலாக இருந்த மனதை மது போதையால் தீர்க்க பார்த்தான்.
இதுவரை அவனது வாழ்க்கையில் மதுவின் வாசம் வீசியதே இல்லை. முதல்முறை அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் அவனை வெகுவாக நிலைகுலைய வைத்தது. அதுவும் இன்றைக்கு ஏற்பட்ட அவமானம் அவனை கொள்ளாமல் கொன்றது.
அழகான பெண்ணை பார்த்து அவளை கல்யாணம் செய்து அவனது வாழ்க்கையே பறிபோய்விட்டது போல அவனுக்கு தோன்றியது... அதுவும் அவனின் அப்பாவும் அம்மாவும் இந்த பெண்ணை தான் கட்டணும் என்று உறுதியாக சொல்லி இருக்க தன் தலையில் அவளை திணித்து விட்டது போலவே தோன்றியது.
அதற்கு ஏற்றார் போல அவளின் குடும்பமும் அவளை பற்றிய செய்தியும் வர ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது. யாரிடம் கோவத்தை காட்டுவது என்று அவனுக்கு தெரியாமல் தன் கோவத்தை முழுக்க முழுக்க மது போதையில் காட்ட ஆரம்பித்தான்.
அவன் ஒரே ஒரு முறை மட்டும் தான் அந்த திருமணத்தில் தமிழை பார்த்தான். அனால் அதற்குள் அவனது பெற்றவர்கள் திருமணம் வரை கொண்டு சென்று விட்டார்கள். மூச்சு விடகூட அவனுக்கு நேரம் கொடுக்கவில்லை.
தாய் தந்தையின் மீது வெறுப்பு பொங்க தன் வீட்டுக்கு போகாமல் இங்கு இந்த வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துக் கொண்டான். பெற்றவர்களை பழிவாங்கும் நோக்குடன். அதில் அவனது பெற்றவர்களை பழி வாங்கிவிட்டது போல தோன்றியது.
கண்கள் சிவக்க மதுவை தன் வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டவனுக்கு தமிழின் மீது இருந்த கோவம் மட்டும் போகவில்லை. தன் கையாலே அவளை அடித்து கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அவ்வளவு கோவம் வந்தது. கையில் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவள் எதிரில் வந்து நின்றான்.
அவள் நன்றாக மயங்கி போய் இருப்பதை பார்த்து,
“என்னை அங்க அத்தனை பேர் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டு நீ இங்க சொகுசா தூங்குறியாடி..” ஆத்திரத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் அவள் தலையிலே மொத்த பாட்டிலையும் கவிழ்த்தான் அகத்தியன்.
உடலில் சில்லென்ற நீர் படவும் அதில் மயக்கம் தெளிந்து போனவள் கண்களை விழிக்க, இமைகளிலும் இமை முடிகளிலும் மதுவின் நீர் சொட்டி நின்று விழிகளுக்குள் மெலிதாய் ஊடுருவ, தமிழின் விழிகள் எல்லாம் எரிய ஆரம்பித்தது.
மூக்கில் மதுவின் நெடி வேறு ஏறியது. கூடவே அவள் இதழ்களை அசைக்க, அந்த அசைவின் இடைவெளியில் சில பல துளிகள் இதழ்களுக்குள் செல்ல தொண்டை வேறு எரிந்து கசந்துப் போனது.
“கடவுளே..” என்று அவள் தடுமாறிப் போனாள். அவளது தடுமாற்றத்தையும் முகம் கசங்கிப் போய் இருப்பதையும் பார்த்தவனுக்கு இன்னும் கோவம் வர அவள் மீது மீண்டும் இன்னொரு மது பாட்டிலை கவிழ்த்து விட்டான்.
அவளால் விழிகளை திறக்கவே முடியவில்லை. அளவுக்கு அதிகமாக கண்கள் எரிய ஆரம்பித்தது. என்ன நடக்குது என்று உணரும் முன்பே அவன் அடுத்தடுத்த தாக்குதல் கொடுக்க
“ஏன் இப்படி நடந்துக்குறீங்க? ச்சை... மனுசனா நீங்கல்லாம்... என் மேல இப்படி பழிப்போட உங்களுக்கு எப்படி மனசு வந்தது... நான் ஹோமோ செ...ஸ் பெர்சன்னு யாரு சொன்னது?” ஆவேசமாக அவனது சட்டையை கொத்தாக பற்றி கேட்டவள் கையால் விழிகளை நன்றாக துடைத்துக் கொண்டு எதிரில் இருந்தவனை உறுத்துப் பார்த்தாள். அவளது விழிகள் கோவைப்பழம் போல சிவந்து போய் இருந்தது. அவளின் மனமெல்லாம் வேதனையில் துடித்தது.
அவளது இந்த பேச்சில் இன்னும் கோவம் கொண்டவன்,
“ஆமாம்டி நான் மனுசன் இல்ல தான்.. ஆனா நீ உத்தமி மாதிரி சீன் போடுறதை முதல்ல நிப்பாட்டு. யாரு தான் ஒத்துக்குவா ஆமா நாங்க ஹோமோ செ...ஸ் பெர்சன்னு” நக்கல் பண்ணியவன்,
தன் தாலி அவளின் கழுத்தில் இருப்பதை பார்த்து பார்த்து அவனுக்கு நெஞ்சு எரிந்துப் போனது. அவளது நெஞ்சில் உறவாடிக் கொண்டு இருந்த தாலியை ஒரே இழுப்பில் இழுக்க அது வராமல் போனது.
தன் தாலியை அத்து எரிய துணிந்தவனை அதிர்ந்துப் போனவள்,
வேகமாய் அவனை தள்ளி விட்டாள் கீழே. அதை எதிர் பாராதவன் சுவரும் மோதி நிற்க, அவ்வளவு தான்.
அகத்தியனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோவம் வந்ததோ.. “ஏய்” என்றவன் அவளின் கழுத்தில் இருந்த தாலியை பறித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து அவளின் கழுத்தை அவன் அணிவித்த தாலி சங்கிலி அறுத்து கிழிக்க கிழிக்க தாலியை பிய்த்தான். ஆனால் அது அப்பொழுதும் அவளின் கழுத்தை அறுத்து உதிரம் சொட்ட வைத்ததே தவிர தாலி அவளின் கழுத்தை விட்டு வரவில்லை.
எப்படி வரும் இருபத்தி ஐந்து பவுனில் கெட்டியாக வைர முகப்பு வைத்து அல்லவா அணிந்து இருந்தாள். அது அவ்வளவு எளிதாக அறுந்து விடுமா என்ன..
அவனது முரட்டு இலுப்பை தாங்க முடியவில்லை தமிழால். அதோடு கழுத்து அறுபடும் நிலையில் இருக்க அவளால் கொஞ்சமும் நிதானத்தை இழுத்து நிறுத்த முடியவில்லை. வேகமாய் அவனை பின்னுக்கு தள்ளி விட்டாள்.
அவனுக்கும் மது போதை வேறு தலைக்கு ஏறி இருக்க என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவளை முரட்டு தனமாக காயம் செய்ய தொடங்கினான்.
தன்னை தள்ளி விட்டவளின் தலைமுடியை இறுக்கமாக பிடித்து, “என் வாழ்க்கையை கெடுத்துட்டு என்னையே கீழ தள்ளி விடுறியாடி? உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்..” ஆவேசமாக கேட்டவன் அவளை பிடித்து மிக வேகமாக கீழே தள்ளி விட்டான். அவன் தள்ளி விட்டதில் கட்டிலில் மோதி நெற்றியில் காயம் ஏற்பட்டு உதிரமும் கொட்ட தொடங்க,
“அம்மா” என்று தலையை பிடித்துக் கொண்டவள், பதிலுக்கு அவனை அடித்து காயம் செய்ய, இருவரும் கண்டபடிக்கு ஒருவரை ஒருவர் அடித்து காயம் செய்ய தொடங்கினார்கள்.
அகத்தியனிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள தமிழும் பதிலுக்கு அவனை தாக்க தொடங்கினாள் வேறு வழியில்லாது. ஏனெனில் அவன் ஏற்படுத்திய காயம் எல்லாம் மிக அதிகமாக இருந்தது.
வலி உயிர் போனது. கதவை திறந்துக் கொண்டு வெளியே போக பார்த்தவளை இழுத்து உள்ளே விட்டவன் கண்டபடிக்கு அவளை அடித்து காயம் செய்ய, பதிலுக்கு இவளும் பதலடி கொடுக்க அந்த அறையே களோபரம் ஆனது.
இவர்களின் இருவரின் சண்டை போடும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் பதறிக்கொண்டு அந்த அறைக்கு ஓடிவந்தார்கள்.
மிக மோசமாய் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை பார்த்து உயிர் குழையே நடுங்கிப் போனது அனைவருக்கும்.
அதும் தமிழின் நிலை பார்க்கவே நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. அகத்தியனுக்கு மது பொதியில் நிதானம் கொஞ்சமும் இருக்கவில்லை. என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.
தமிழை அளவுக்கு அதிகாமாக காயம் செய்து இருந்தான். அவளின் பெண்மையை அவன் அசிங்கப்படுத்த வில்லை. ஆனால் அடி உதை என்று ஒரு பெண்ணை வன்முறையாக அடித்து துவம்சம் செய்து விட்டான்.
இவளும் தன் கைக்கு எட்டிய பொருட்களை வைத்தது அவனை அடித்து இருந்தாள்.
இருவரும் இரத்த களறியாக இருக்க இருவரையும் பிடித்து தனித்தனியாக வைத்துக் கொண்டவர்கள், அகத்தியனின் பெற்றவர்களுக்கு போனை போட்டு வர செய்து நடு கூடத்தில் பஞ்சாயத்து கூட்டினார்கள். இதற்கு இடையில் இருவருக்கும் தனி தனியாக மருத்துவம் பார்க்கப்பட்டது.
அகத்தியனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மது போதை இறங்க ஆரம்பிக்க நெற்றியை பிடித்துக் கொண்டான். தலைவலி அதிகம் எடுத்தது. அது போதது என்று தமிழ் வேறு அடித்து இருக்க அந்த வலியும் சேர்ந்துக் கொண்டது.
ஒரு பெண்ணிடம் அடி வாங்கிய தன் நிலையை எண்ணி அதிக ஆத்திரம் எழுந்தது. அதுவும் அவன் பேர்ன் ஆப் கோல்ட் ஸ்பூன் வேற இல்லையா? அதனால் அவனது ஈகோ ரொம்பவும் அடிவாங்கி இருந்தது.
அவனது பெற்றவர்களும் வந்து பஞ்சாயத்து ஆரம்பம் ஆக,
“டேய் நீங்க யாருடா எனக்கு பஞ்சாயத்து பண்ண” மனதுக்குள் கறுவியவன், தன் எதிரில் அமர்ந்து இருந்த தமிழை வெறுப்புடன் பார்த்தான்.
அவளது கழுத்து அறுபட்ட இடத்தில் மருந்து வைத்து காட்டன் போட்டு இருந்தது. அதோடு அவளின் நெற்றியில் ப்ளாஸ்த்திரி, இதழ்கள் கிழிந்து போய் இருந்தது. முகத்தில் பல இடங்களில் அங்கும் இங்கும் கண்ணி போய் இருந்தது அவன் அடித்த அடியில். அங்கும் மருந்து, கை ப்ராக்ஷர், காலில் கட்டு என அவள் அமர்ந்து இருந்தாள்.
இவனோ கன்னத்தில் நான்கு தையல், மார்பில் அவள் கடித்து வைத்ததில் களிம்பு, கையில் பிராண்டி வைத்ததில் நக குறிகள், முட்டியில் கண்ணாடி கிழித்து மூன்று தையல், கால் பெருவிரலில் நகம் பெயர்ந்து கட்டு கட்டி என இருவரும் சமமான அளவில் காயங்களை வாங்கி இருந்தார்கள். ஆனாலும் ஆணவனின் காயங்களை விட பெண்ணவளின் காயங்கள் சற்றே ஆழமாக இருந்தது. ஏனெனில் அவனது தீரத்துக்கு முன்பு இவள் கொஞ்சம் கம்மி தானே.
அதனால் அவளுக்கு காயங்கள் கொஞ்சம் அதிகம் தான். அதுவும் அவளின் இடது கையை மடக்கி முதுக்குக்கு கொண்டு சென்று அவளின் முதுகில் அவன் ஒரு குத்து குத்தி இருக்க அவளுக்கு மூச்சே எடுக்க முடியாமல் போனது சில நொடிகள்.
அவன் அழுத்தி மடக்கி பிடித்ததிலே அவளது கை ப்ராக்ஷர் கண்டு போனது.
அவளின் மீது இருந்த பார்வையை விலக்கிக் கொண்டவன் அங்கு கூடயிருந்த எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவன்,
“இவ கூட என்னால இனி ஒரு கணம் கூட வாழ முடியாது... ஐ வான்ட் டைவேர்ஸ்” என்று சொன்னவன் யாரும் எதிர் பார்க்கும் முன்பே அவளின் கழுத்தில் இருந்த தாலியை அவளின் தலைவழியாக கழட்டி இருந்தான்.
விக்கித்துப் போனாள் தமிழ்.
“என்னவோ புதுசா கழட்டுற மாதிரி சீன் போடாத... தினமும் அவுத்து போடுறது தானே...” ஏளனமாக சொன்னவன்,
“இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. இதோட உனக்கும் எனக்கும் இருக்குற எல்லாமும் முடிஞ்சு போச்சு... டைவேர்ஸ் பேப்பர் வரும். ஒழுங்கா சைன் போட்டு குடுத்தா உன் மானம் வெளியே போகாது. நீ சைன் போட மறுத்தா உன் வீடியோ எல்லாம் வெளில விட்டுடுவேன்” என்று மிரட்டியவன் யாரையும் சட்டை செய்யாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
அவனது பெற்றவர்களோடு சேர்ந்து மற்றவர்கள் விக்கித்து நிற்க,
“கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு நிக்கிற உங்கக்கிட்ட என்னத்தை சொல்லி என்னை நிரூபிக்க.. ஆனா என் மேல ஒரு தப்பும் இல்லை. அது ஒரு நாள் உங்களுக்கே கண்டிப்பா தெரியவரும். என் வாழ்க்கையை யார் கெடுக்குறாங்கன்னு எனக்கு தெரியல.. ஆனா நிச்சயம் காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்...”
என்றாள் நிதான மனதோடு. எப்போ அவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை பரித்தானோ அப்பொழுதே அவன் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பிடித்தமும் முழுதாக அற்றுப் போனது தமிழுக்கு.
தொடரும்...
சிறப்பான சம்பவம் பண்ணி விட்டீங்க போல ரைட்டர்😬😬😬😬😬
இந்த வீடியோஸ் எல்லாம் மரை தான் அனுப்பி இருக்கணும் இல்லையா????
ஆன அக, உனக்கு என்னடா இவளோ அறிவே இல்லாம இருக்கு🤦🤦🤦🤦🤦
அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இருக்க தமிழ்🤷🤷🤷🤷🤷
பொது இடத்தில் அவனை இப்படி தான் நீ அசிங்க படுத்துவியா?????
இதுவே உனக்கு குழந்தை பிறக்க வைப்பிலை அப்படினு அவன் சொல்லி இருந்தா ?????
உனக்கு ஓகேவா இருக்குமா என்ன????
நீ டாக்டர் கிட்ட இப்படி ஓபன்னா சொன்னது தப்பு தான்....
நீங்க ரெண்டு பேரும் லூசுனு தெரிஞ்சி, ஈசியா அந்த மரை கிழவி நினைச்சத நடத்திக்கிச்சி.....
என்னமோ போங்க😤😤😤😤
ஏதோ என்னால முடிஞ்சது 🤣🤣 நான் ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சுட்டேன் டா..
தாமரை தான் காரணம்.. ஆனா இதுங்க இப்படி இருந்தா யார் வேண்டுமானாலும் குட்டையை குழப்ப முடியும் இல்லையா 🤭 இதுக்களா தெளிஞ்சா தான் உண்டு.
நன்றி மா 😍
ஏதோ என்னால முடிஞ்சது 🤣🤣 நான் ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சுட்டேன் டா..
தாமரை தான் காரணம்.. ஆனா இதுங்க இப்படி இருந்தா யார் வேண்டுமானாலும் குட்டையை குழப்ப முடியும் இல்லையா 🤭 இதுக்களா தெளிஞ்சா தான் உண்டு.
நன்றி மா 😍