விலகி போங்க மாமா..” அவனை தள்ளி விட அவனோ கொஞ்சமும் அசையாமல் அவளருகில் இன்னும் நெருங்க
“ப்ச் களனி தண்ணீர் வாட அடிக்குது நான் குளிக்கணும்..”
அவள் பேசுவது எதுவும் அவன் காதில் விழவில்லை.. அவனது உலகில் அவர்கள் இருவரும் மட்டுமே அதுவும் ஒரு ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான் பழமலை..
அவனது கவனம் தன் பேச்சில் இல்லை என்பது புரிய சட்டென்று அவனது புஜத்தில் ஒரு கிள்ளு கிள்ளினாள்..
அதில் சுய உணர்வு வர அவளை முறைத்து பார்த்தான்.
“எதுக்குடி இப்போ என்னை கிள்ளுன..”
“பின்ன தள்ளி போங்கன்னு சொல்றேன் மரம் மாதிரி நின்னுக்கிட்டு இருந்தா நான் வேற என்ன பண்றது..”
“அதுக்குன்னு நீ கில்லுவியா..”
“ப்ச் கத்தாதீங்க உங்க அத்தை வர போறாங்க..”
“அது நீ கில்லுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்..”
“ஹலோ எனக்கு ஒன்னும் பயம் இல்லை.. பாவம் உங்க கல்யாணம் என்னால நின்னுடுமேன்னு தான் சொன்னேன்..”
“பார்றா.. அவ்வளவு அக்கறை என் மேல..”
“ம்ம் ஆமா நீங்க என் அத்தை பையன் இல்லையா.. அதனால கொஞ்சமே கொஞ்சம் இருக்கு..”
“நீ ஏன் அதை இன்னும் டெவெலப் பண்ண கூடாது..” என்றவனை வியந்து பார்த்தாள்.
“என்னடி அப்படி பாக்குற..”
“இல்ல மழைக்கு கூட பள்ளிக்கூடம் போகாத நீங்க எப்படி இங்கிலீஷ் பேசுறீங்கன்னு..” இழுத்தவளை முறைத்து பார்த்தான்.
“என்னடி திமிரா..”
“ஆமாவா இல்லையான்னு மட்டும் சொல்லுங்க..”
“உனக்கு கொழுப்பு கூடி போச்சு.. முதல்ல உன்னை வீட்டை விட்டு துரத்தனும்.. ஆமா எப்போ உன் மாமன் காரன் வரான் கூட்டிட்டு போக” என்றவனை கூர்ந்து பார்த்தவள்
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே..”
“உன்னை பேச விடுறதே தப்புடி..” என்று அவளது இதழ் நோக்கி குனிய அவனது இதழ்களை தன் கரம் கொண்டு மூடியவள்
அவனை ஆழ்ந்து பார்த்து “என் இதழ்களை மூட உன் இதழ்களால தான் முடியும்.. ஆனா அது உன் காதலால மட்டும் தான் முடியும்.. என்னை ப்ளேம் பண்ண அதை பயன்படுத்தாதே” என்று நறுக்கென்று சொல்லியவள் அவனை விட்டு விலகி செல்ல ஒரு கணம் அவனது உலகம் அப்படியே நின்றது..
அவனது மனம் படக்கு படக்கு என்று அடித்துக்கொண்டது.. வேகமாய் அவளை பார்க்க அவளோ குளியல் அறையை நோக்கி சென்றாள்.
அவளின் பின்னோடு சென்று அவளை உலுக்கி என்னென்னவோ கேட்க தோன்றியது.. ஆனால் சூழ்நிலை அவனை எதையும் கேட்க விடாமல் செய்தது..
ஆனாலும் உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்வு பிறந்தது.. வேகமாய் கிழவியிடம் சென்றவன் அவரை கட்டி பிடித்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுக்க
“என்ன ஆச்சுடா..” என்று அனைவரையும் ஒரு பார்வை பார்க்க அதன் பின்னே பழமலைக்கு சுற்று இருப்பவர் கருத்தில் பட
“கிழவி உன் கிட்ட ஒன்னு சொல்லணும்..”
“என்னடா பத்தவாது பரிச்சையில பாஸ் பண்ணிட்டியா...” என்று அவனை புரிந்துக்கொண்டவராய் பேச்சை திசை திருப்ப
“கிழவி நீ என்ன எப்போ பாரு என் ஆத்தா மாதிரியே அந்த பத்தாவது பரிச்சியிலயே கண்ணு வச்சு இருக்குற.. கொன்னுடுவேன் இன்னொரு முறை என் பரிச்சைய பத்தி பேச்செடுத்தீன்னா...” அவரை திட்ட
“போடா பொசகெட்ட பயலே.. ஒரு பத்தாவது பாசு பண்ண துப்பு இல்ல.. பெருசா பேச வந்துட்ட..”
“கிழவி நீ என்ன ரொம்ப அசிங்க படுத்துற..”
“எலேய் நீ தாண்டா என்னை ரொம்ப அசிங்க படுத்துற.. வெளியில தலை காட்ட முடியல.. பத்தாவது பரிச்சைய பத்து முறை எழுதியும் இன்னும் பாஸ் பண்ணாமா இருக்குற.. அதெய் கேட்டு எல்லாரும் துக்கம் விசாரிச்சுட்டு போறாய்ங்க பரிச்சை முடிவு வரும் போதெல்லாம்.. அப்போ நான் போய் என் மூஞ்சிய எங்க போய் வச்சுக்குறது..” என்று அவரும் எகிற
அவரது பேச்சை கேட்டு பத்மநாதன் வாய் மூடிக்கொண்டு சிரிக்க சாந்தியும் சிரித்தாள்.
“ஏண்டா பழமலை இன்னுமாடா பத்தாவது படுச்கிக்கிட்டு இருக்குற..” என்று அன்னம் கேட்க அவனுக்கு பெரிய தலை இரக்கமாய் போய்விட்டது. நிமிர்ந்து கிழவியை முறைத்து பார்த்தான்..
உனக்கு பேச்சை மாற்ற வேற டாபிக்கே தெரியலையா கிழவி..” வன்மமாய் அவன் கருவ அவனது கோவத்தில் கிழவிக்கு குளிர் காய்ச்சளே வந்துவிட்டது..
“இல்லடா பேராண்டி ஒரு ஆர்வகோளாறுல..”
“நீ ஆணியே புடுங்க வேண்டாம்” முறைத்து பார்த்தான் எல்லாரையும்..
“நான் வயலுக்கு போறேன்..” என்று கிளம்பி விட
“சாப்பிட்டு போடா ராசா..” பாட்டி கெஞ்ச
“சோறை தூக்கிட்டு காட்டுக்கு வா..” பல்லை கடித்துவிட்டு அவன் போக
“அடேய் வெயில்ல என்னை அலைய வைக்காதடா..” அவரின் கெஞ்சல் எல்லாம் காற்றில் பறக்க விட்டவன் நடந்து வயலுக்கு சென்றான்..
மாற்று உடை எடுக்க வந்த முகில் அங்கு நடந்த கூத்தை பார்த்தவள் குளித்து தானும் கிழவியோடு வயலுக்கு சென்றாள்.
“ஏட்டி என்ன என் பேத்திக்கு போட்டியா வர்றவ.. நீ வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே.. நீ எதுக்கு இப்போ வயலுக்கு வர்ற.. என்ன என் பேரனை மயக்க பாக்குறியா..” என்று வயலுக்கு பாதி தூரம் வந்த பிறகு கேட்டவரின் தந்திரம் புரிய
“என் கிட்டே வா..” மனதுக்குள் சொல்லியவள்
“நான் திரும்பி போய் சாந்தியை அனுப்பி விடவா பாட்டி..” என்று கேட்க “ஆத்தி பழமலை என்னை ஆஞ்சு புடுவானே.. பூந்திய வயலுக்கு கூட்டிட்டு வந்தா.. எப்படி இப்போ இவளை சமாளிக்கிறது” நொடியில் யோசித்தவர்
“ஓ அப்போ நீ என் பேரனுக்கு சோத்து கூடையை தூக்க மாட்டியா.. அவ்வளவு பெரிய ஆளா நீ.. நீ போய் பூ.. ச்ச்சீ சாந்திய வர சொல்ற வரை என் பேரன் பட்டினியா கிடக்கணுமா..” அவரின் பேரனுக்கு சளைத்தவர் என்று அவர் நிருபிக்க அவரை ஒரு பார்வை பார்த்தவள்
“எனக்கு யாரையும் பட்டினி போட்டு பழக்கம் இல்ல.. நானே தூக்கிட்டு வரேன்..” என்றவள் அமைதியாக வர பொன்னி எங்கோ பார்ப்பது போல திரும்பி முகிலை பார்த்தார்..
அவள் ஒழுக்கமான சேலை கட்டும் தூக்கி போட்ட கொண்டையும் இடுப்பில் இருந்த சோத்து கூடையயை எந்த அருவருப்பும் இல்லாமல் சுமந்துக்கொண்டு வந்தவளின் தோற்றம் கண்டு மனம் நெகிழ்ந்தது அவருக்கு..
‘படுச்ச புள்ளன்னாலும் அமைதியா நடந்துக்குறடி தங்கம்.. எவ்வளவு பொறுமை உனக்கு.. நீயும் பழமலையும் ரொம்ப வருஷம் சேர்ந்து வாழனும் கண்ணுங்களா.. அதை பார்த்த பொறவு தான் நான் கண்ணை மூடனும்’ மனதுக்குள் சொன்னவரின் உணர்வு அவளுக்கும் எட்டியதோ என்னவோ
“கூப்டீங்களா பாட்டி..” அவளது அழைப்பில் சுதாரித்தவர் “நான் எதுக்கு உன்னை கூப்பிட போறேன்” வெளியே பகுமானம் காட்ட அவள் எதுவும் பேசவில்லை.. அதன் பிறகு அமைதியுடன் இருவரும் வந்தார்கள்..
“என்னடா இது எரிமலையும் பனிமலையும் சேர்ந்து வருது..” என்று பழமலை முழித்தான்.
அருகில் வந்த உடன் கிழவியை பார்த்து என்ன என்று கண்களிலே விசாரிக்க எனக்கும் தெரியாது என்று அவர் உதட்டை பிதுக்க பழமலை லேசாய் குழம்பி போனான்.
முகில் அவனுக்கு பரிமாற இலையை அறுக்க சென்றாள்.
“என்ன கிழவி..”
“எனக்கும் தெரியல டா ஒரு வேலை அந்த பூந்தி அன்னத்துக்கு பயந்துக்கிட்டு இங்க வந்து இருக்களோ எனவோ..”
“அப்படியா தான் இருக்கும்..” என்றவனிடம்
“என்னடா வீட்டுல யார் இருக்காங்கன்னு பார்க்க மாட்டியா.. நீ பாட்டுக்கு ஓடி வந்து குதிக்கிற.. விஷயம் வெளிய போச்சு அவ்வளவு தான். ஆமா என்ன சொல்ல வந்த”
முகில் சொன்னதை அப்படியே சொல்ல பொன்னியும் குழம்பி போனார்..
“என்ன ராசா சொல்ற முகிலு அப்படியே வா சொண்ணுச்சு..”
“ஆமா கிழவி என்னால நம்பவே முடியல..”
“இது ஆபத்தாச்சே கண்ணு” அவர் வெசன பட அப்போது தான் பழமலைக்கே புரிந்து போனது..
“இப்போ என்ன கிழவி செய்யிறது..”
“எனக்கும் ஒன்னும் புரியல டா..”
“ப்ச் எனக்கு மட்டும் ஏன் கிழவி இப்படியெல்லாம் நடக்குது..” கலங்கி போனான்.
“அவ காதலை சொன்னத கூட என்னால முழுசா அனுபவிக்க முடியல..” வேதனை பட்டான்.
“ராசா இவ்வளவு நாள் நீ எதுக்காக பாடு பட்டியோ அது தானாவே நடக்குது.. கடவுள் உன் பக்கம் தான் கண்ணு தையிரியமா இரு..” என்று தன் பேரனை தேற்ற ஒளிந்து நின்று அவர்களது பேச்சை கேட்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்ததற்கு ஒரு தெளிவு வந்தது..
அவனுக்கு சாப்பாடு பரிமாற அவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் சாப்பிட்டு எழுந்தான். அவளும் அவனை கவனித்து விட்டு தன் அத்தையோடு வயல் வேலை செய்ய போக பாட்டியும் பேரனும் ஓரே கட்டிலில் எதிரெதிர் புறம் படுத்துக்கொண்டு கீழே விழும் வேப்ப மர இலையை எண்ணிக்கொண்டு இருந்தார்கள்.
“கிழவி எதாவது யோசனை சொல்லு.. இப்படியே படுத்து இருக்குற..”
“அடேய் போடா உனக்கு யோசனை சொல்லி சொல்லியே என் மூளை சூடாகி போச்சு.. அதுக்கு முதல்ல நீ பெட்ரோல் போடு..” என்று அவனிடம் நேரம் பார்த்து காரியம் சாத்திக பார்க்க
“உன்னை இன்னும் கொல்லாம விட்டு இருக்கேன் பத்தியா அதுக்கே நீ யோசனை சொல்லணும்.. ஒழுங்கா யோசனை சொல்றியா இல்ல என்னோட அருவாக்கு பதில் சொல்றியா..” என்று முதுகு புறத்திலிருந்து கதிர் அறுக்கும் அருவாளை எடுத்து காட்ட
“அடேய் ஏண்டா இப்படி வயசானவள போட்டு படுத்துற..”
“ப்ச் சொல்லு கிழவி நிஜமா எனக்கு குழப்பமா இருக்கு.. எப்படி அவளை என்கிட்டே இருந்து தள்ளி வைக்கிறது...”
“புரியுது டா இரு கொஞ்சம் யோசிப்போம்” என்றவர் யோசனை பண்ண அதில் அவர் செய்த அளப்பரையை தான் அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை..
குப்புற படுத்து யோசித்தார்.. மல்லாக்க படுத்து யோசித்தார்.. அவனை கீழே தள்ளிவிட்டு யோசித்தார். அவனை கால் அமுக்க சொல்லி யோசித்தார்.. கை அழுத்த சொல்லி யோசித்தார். அவனை இளநீர் பறிச்சு போட்டு சீவி குடுக்க சொல்லி கால் மேல் கால் போட்டுக்கொண்டு யோசித்தார். பத்தாததுக்கு கடலை விளைந்த வயலில் இருந்து கடலையை பறித்துக்கொண்டு வர சொல்லியது மட்டும் இல்லாமல் அதை அவனையே உரித்து தருமாறு பணித்துவிட்டு யோசித்தார்.
கல்லை தூர தூக்கி போட்டு யோசித்தார். மண்ணை எண்ணிக்கொண்டு யோசித்தார். ஓடும் வாய்க்கால் தண்ணீரில் கால் நனைத்துக்கொண்டு யோசித்தார்.. ஆனால் கடைசி வரையும் எந்த யோசனையும் அவரிடமிருந்து வராமல் போனது தான் பழமலைக்கு பத்திக்கொண்டு வந்தது.. ‘அடுத்த திட்டம் போட எப்படி எல்லாம் யோசிக்குதுங்க இதுங்க’ என்று இருவரையும் முறைத்து பார்த்தவள் தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.
“இவ்வளவு அலப்பறை பண்ணுனியே.. ஏதாவது ஒரு யோசனை சொன்னியா.. உன்னை..” என்று அவரை போட்டு குமுற பார்க்க வேகமாய் எழுந்து தன் பையனின் பின் போய் நின்ருக்கொண்டார் பொன்னி..
“அங்க போய் நின்னுக்கிட்டு தப்பிக்கவா பாக்குற.. தனியா மாட்டு உன்னை கொல்லுறேன்” என்று வாயசைத்து அவரை எச்சரித்தவன் தன் தாய் தந்தையை ஒரு பார்வை பார்த்தான் அவர்கள் இருவரும் வேளையில் மும்மரமாய் இருந்தார்கள்.
முகிலை பார்த்தான். அவளும் மும்மரமாய் இருக்க யோசனையுடன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
“ச்ச்சே இதென்ன இம்சையா இருக்கு..” தன்னையே நொந்துக்கொண்டவன் வயல் வரப்பை சுற்றி திரிந்துக்கொண்டிருந்தான்.
முகில் நிமிர்ந்து அவனை பார்த்தாள். ஒரு இடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டு இருந்தவனின் நிலை புரிய
“இவனை என்ன தான் செய்யிறது..” இவளுக்கு பத்திக்கொண்டு வந்தது..
சிறிது நேரம் கழித்து அவனிடம் செல்ல அவனை காணவில்லை.. “எங்க போனான் அவன்” யோசனையுடன் சுற்றி திரிந்தவள் பழமலை தோட்டத்திலிருப்பது புரிய அவனிடம் விரைந்து போனாள்.
அவள் அவனிடம் வந்த சமயம் “ஆமா முன்ன இருந்ததுக்கு இப்போ நீ கொஞ்சம் மெலிஞ்சிட்ட” என்று அவன் சொல்ல யாரை சொல்றான் என்று சுற்றிலும் தேட ஒருவரும் இல்லை.. ஒருவேளை நம்மள தான் சொல்றானோ.. என்று அவனை இன்னும் நெருங்கி போனாள்.
“சும்மா சொல்ல கூடாது உன்னை பாத்து பாத்தே நான் மெர்சலாயிட்டேன்.. இன்னும் கொஞ்சம் கிட்ட வா” என்று பழமலை சொல்ல
“இதென்ன இவன் இப்படி சொல்லிக்கிட்டு இருக்குறான்..” என்று மேலும் முன்னேறி சென்றாள்.
அங்கே ஒரு பெண்ணுடன் சல்லாபத்தில் இருந்தான் பழமலை.. அதை கண்டவுடன் அருவேருத்து போய் அவ்வளவு கோவம் வந்தது.. அவளது அரவத்தில் திரும்பி பார்த்தவன்
“என்னடி.. உனக்கும் என்னோட இப்படி இருக்கணும்னு ஆசையா இருக்கா..” என்று தீ வார்த்தையை உமிழ
உடலெல்லாம் கூசி போனது அவளுக்கு.. கங்கை போல அவளது கண்கள் சொலிக்க அந்த பெண்ணை சுட்டி காட்டி
“இப்படி உன் கிட்ட தரம் கெட்டு போய் வருவேன்னு மட்டும் நினைச்சிடாத.. அதுக்கு ஆள் நான் கிடையாது.. இன்னும் கொஞ்ச காலம் தான் உன் வீட்டுல இருப்பேன்.. அதுக்கு பிறகு உன் மூஞ்சியை பார்க்கவே வாய்ப்பு இருக்காது.. அப்படி ஒரு நிலையும் வராது..” என்று சொல்லியவள் அவனை உருத்து பார்த்தாள்.
“ஆனா நீ என் கிட்ட பேசுன பேச்சுக்கு கண்டிப்பா நல்லா அனுபவிப்ப டா..”
“டான்னு சொன்னா பல்ல பேத்துடுவேண்டி..”
“உனக்கெல்லாம் என்னடா மரியாதை.. நீ சரியான பொம்பளை பொருக்கி.. ஒரு பொருக்கிக்கு இந்த அளவு மரியாதையே போதும்..” என்றவள் திரும்பி போக
“நீ என் கால்ல விழற நாள் வரும்டி..” என்று இவன் கொக்கரிக்க
“அதையும் பார்க்கலாம் டா.. அப்படி வந்தா கண்டிப்பா உன்னை கொல்லுவேன்” என்றாள் ஆத்திரமாக..
“பாக்கலாம்டி நீயா நானான்னு” சவால் விட அவனது சவாலை ஏற்றுக்கொண்டவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.
அங்கே நாதன் மற்றும் அன்னம் அவரது மகளும் வந்து இருக்க ‘எங்க போனாலும் இதுங்க வேற வால் புடுச்ச மாதிரி வந்துடுதுங்க..’ சலித்தவள் பருவதத்தோடு சேர்ந்து வேலை பார்த்தாள். அடுத்து என்ன என்று சற்று கடுப்பாகவே இருந்தது அவளுக்கு.. அவர்கள் இருவரும் இடையே என்ன நடந்தது என்று தெரியாமல் கிழவி அது அதுபாட்டுக்கு என்ஜாய் செய்துக்கொண்டு இருந்தது..
பாட்டி என்ஜாய் பண்ணிது.....
ஏன் அவளே நெருங்கி வரும் போது, விலக்க பார்க்காராங்க ரெண்டு பேரும்???
இப்ப நடந்துகிட்டது கூட, அவளை நெருங்க விடாம பன்ன தானோ என்னவோ...
ஆன ஏன்???
ப்ரூட்டிக்கு அவ மேல கொள்ள காதல் இருக்கு தான்.....
ஆன அதை அவ காட்டும் போது ஏன் விலகனும்???